நிசப்தமான வேளைகளில்
வெயிற்கால மூங்கில்கள் போல்..
என்னை கேட்காமலே பற்றிக் கொள்கிறது
அவளின் நினைவுகள்...!
***********************************************************
ஒவ்வொறு முறையும்
சகுனம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்..!
காதல் என்பது
அனைத்துக்கும் அப்பாற்பட்டது என்று அறியாமல்...!
***********************************************************
புரிதலின் இடைவெளியில்
நீயும் நானும்
பயணித்துக் கொண்டிருக்கிறோம்..!
இன்னும் பூப்பெய்தாமல் இருக்கிறது
உன்னை தரிசிக்காத
என் கவிதைகள்...!
***********************************************************
கைகளில் நடுக்கம்
மனதில் ஒரு தயக்கம்
கண்களில் ஒரு கலக்கம்
காதலிக்கு
ஒரு கடிதம் எழுத
இவ்வளவு வேதனையா..?
ஏங்க காதலிக்கிறது
இவ்வளவு கடினமாக இருக்குது..
***********************************************************
இன்னும் எத்தனை நாட்களுக்கு
என்னை ஏமாற்றப் போகிறாய்...
உன் உதடுகள் சொல்ல மறுத்தாலும்
எனக்கான உன் காதலை
முன்பாக சொல்லிவிடுகிறது
உன் கண்கள்...!
***********************************************************
காற்று இல்லாமல் சுவாசிக்க
பழகிக்கொண்டேன்...!
காதல் இல்லாமல் சுவாசிக்க
எப்போது பழகப்போகிறேனோ..!
***********************************************************
நண்பர்களுக்கு வணக்கம்...!
இந்த தினத்தை மகிழ்ச்சியை காதலில் இருந்து விலக்கி
அன்பு கொண்ட எல்லோரிமும் பகிர்ந்துக் கொள்வோம்.