27 February, 2013

அம்மாடி...! காதலிச்சவங்க வாழ்க்கையில இப்படித்தான் நடக்குமோ..!

வில்லங்கம் வீராசாமியும், ஒரு பெண்ணும் குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டனர்.

ஒரு நாள் இரவில்..

“ஏங்க நம்மள‌ நம்ம வீட்டில உள்ளவங்க ஏத்துக்குவாங்களா..?”

“இந்த நேரத்தில் போய்... இந்த கதை தேவையா..? நேரத்தை ஏன்தான் இப்படி வீணடிக்கிறயோ..... !”

“என்னங்க இப்படி பெசறீங்க..!?”

“அதுக்கில்லை, நாம என்ன ஊர்ல உலகுத்துல செய்யாததையா செஞ்சிட்டோம். எல்லார் போலவும் காதலிச்சோம். வீட்டில் நம்ம காதலை ஏத்துக்கலை அதான், ஓடி வந்திட்டோம் நம்ம காதலை வீட்டில் ஏத்துக்கிட்டிருந்தா நாம ஏன் வீட்டைவிட்டு ஓடி வந்திருக்கப்போறோம் ”

“என்னதான் உங்களை நம்பி வந்திட்டாலும், என் ஞாபகம் எல்லாமே என் வீட்டில் உள்ளவங்க மேலதான் இருக்கு.....!”

“நீ சொல்றதும் சரிதான். யாருக்குதான் வீட்டு ஞாபகம் இல்லாமப் போகும்..?.. அதுவும் நீதான் வீட்டுக்கு மூத்தப் பொண்ணு ..... நீதான் தம்பி தங்கச்சிக்கு ஒரு உதாரணமா இருந்திருக்கனும்....? ஆனா நீயே .....இப்படி..”
 
 “இப்ப மட்டும் என்ன புத்தர் மாதிரி பேசறீங்க..!? அன்னிக்கு இந்த அறிவு எங்கே போச்சாம்.....? என்னை ஓடிவர சொன்னதே நிங்கதானே..! ”

“சரி....சரி...இப்போ நீ என்னை என்னதான் செய்யசொல்ற.....?”

“நம்ம குடும்பத்தில உள்ளவங்க, நம்மை சேர்த்துக்கனும் முடியுமா..? ”

“..ம்.. எல்லாம் குழந்தைப் பொறந்தா சரியாகிடும்”

“ஆமா இப்படி சொல்லியே ஆறு பிள்ளை பெத்தாச்சி.. இப்போ.. இன்னும் ஒண்ணா....???!!!” (பேஸ்புக்கில் படித்தது)

26 February, 2013

ரஜினியின் புதிய படம்.. கிளம்பும் புதிய சர்ச்சைகள்..


கேவி ஆனந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்நடிக்கும் புதிய படத்தை தாங்கள்தான் தயாரிக்கவிருப்பதாக ஈராஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் இது வதந்தி என கேவி ஆனந்த் மறுத்துள்ளார். 
 
ஈராஸ் இன்டர்நேஷனலுக்காக ஏற்கெனவே கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ராணா படம் தொடங்கப்பட்டது. ரஜினியின் உடல்நிலை காரணமாக படம் தள்ளி வைக்கப்பட்டது. ரஜினி உடல்நிலை குணமடைந்து வந்த பிறகு கோச்சடையான் தொடங்கப்பட்டது. வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் இந்தப் படம் கோடை ஸ்பெஷலாக வரவிருக்கிறது. 
 
இந்த நிலையில், கோச்சடையானுக்குப் பிறகு ரஜினி நடிக்கவிருக்கும் படம் குறித்து ஏராளமான செய்திகள் வந்தன. இந்தப் படத்தை கே வி ஆனந்த் இயக்குகிறார், ஏஜிஎஸ் தயாரிக்கிறது.. அட்வான்ஸ் கூட கொடுத்துவிட்டார்கள் என்று செய்திகள் வந்தன. 
 
ஆனால் இப்போது அந்தப் படத்தையும் ஈராஸ்தான் தயாரிக்கிறது என்ற தகவலை அந்த நிறுவனத்தின் தலைமை நிதி அலுவலர் கமல் ஜெயின் தெரிவித்துள்ளார். 
 
இந்தப் படம் குறித்து எகனாமிக் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், "ரஜினிகாந்தை வைத்து மூன்று படங்கள் தயாரிக்க ஒப்பந்தம் போட்டுள்ளோம். அதில் ராணாவும் கோச்சடையானும் தயாரிப்பில் உள்ளன. அடுத்த படத்தை கேவி ஆனந்த் இயக்குகிறார். பெயர், நடிகர்கள் எதுவும் இன்னும் முடிவு செய்யவில்லை. இது ரஜினியின் படம். எனவே ரூ 100 கோடிக்கு மேல் பட்ஜெட் இருக்கும்," என்று கூறியுள்ளார். 
 
கேவி ஆனந்த் ரஜினியுடன் சிவாஜியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். 'மாற்றானுக்குப் பிறகு ரஜினிக்காக கதை உருவாக்கும் பணியில் தீவிரமாக உள்ளார் கேவி ஆனந்த். கோச்சடையான் வெளியாகும் முன்பே இந்த புதிய பட அறிவிப்பு வரக்கூடும்,' என்கிறார்கள். 
 
மறுக்கும் கேவி ஆனந்த் ஆனால் இந்த செய்தி குறித்து ட்விட்டரில், மறுப்பு தெரிவித்துள்ளார் கேவி ஆனந்த். "என்னுடைய ‘மாற்றான்' போய் கையெழுத்திட்டிருந்தால்தான் இது சாத்தியம். இப்போது கதையை உருவாக்குவதில்தான் தீவிரமாக உள்ளேன். மற்றபடி இப்போதைக்கு எல்லாமே வதந்திதான்," என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

25 February, 2013

இதற்கு நீங்களே ஒரு முடிவு சொல்லுங்க...!


குறும்பு செய்த இரு மாணவர்களிடம் ஆசிரியர்,

''உங்கள் பேரை இருநூறு முறை எழுதிக் கொண்டு வாருங்கள்.''என்றார்.

ஒருவன் சொன்னான்,

''ஐயா,இருவருக்கும் ஒரே அளவு தண்டனை தராமல் எனக்கு மட்டும் அதிகம் தருகிறீர்களே?''

"இருவருக்கும் ஒரே தண்டனை தானே கொடுத்திருக்கிறேன்" என்று ஆசிரியர் அவனிடம் கேட்டார்.

அவன் சொன்னான்,

''இல்லை ஐயா,அவன் பெயர் ரவி.என் பெயரோ,வேங்கட சுப்ரமணிய கோபால கிருஷ்ணன்.'' (பேஸ்புக்கில் படித்தது)

23 February, 2013

இந்த காயகல்பத்தை சாப்பிடுங்க... அப்புறம் பாருங்க...!


கடும்பகல் சுக்கு என்பது பகல் உணவில் சுக்கு சேர்ப்பது ஆகும்... தேர்ந்த மாவு சுக்கு என்பது எல்லா ஊர்களிலும் கிடைக்கும். பூச்சி அரிப்பு, சொத்தை, இல்லாத சுக்கு அரைகிலோ வாங்கி வெயிலில் உலர்த்தி மேல் தோலை சீவி- நன்றாக இடித்து பொடி செய்து சலித்து 1 பாட்டிலில் வைத்துக்கொள்ளவும்.

பகலுணவில் 1-பிடி சாதத்துடன் 1-ஸ்பூன் மேற்படி சுக்குப் பொடியைக் கலந்து பிசைந்து சாப்பிடலாம். ஒரு மண்டலம் வீதம் சாப்பிட எடுத்துக் கொள்ளவும். இவ்வாறு தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். 


சுக்கு போலவே கடுக்காயும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். இதனை 1-கிலோ வாங்கி உள்ளிருக்கும் கொட்டையை நீக்கிப் பின் உலர்த்தி பொடி செய்து கலந்து கலந்து வைத்துக்கொள்ளவும்.

மாரை நேரத்தில் அரை டீஸ்பூன் எடுத்து பசும் பாலுடன் அல்லது தேனுடன் கலந்து சாப்பிட்டு வர உடல் நோய் அணுகாமல் கல்பம் போல் இறுகும். நாள்தோறும் சாப்பிட்ட பிறகு இரண்டு நெல்லிக்காய்களை தின்று வாருங்கள். அத்துடன் தினம் ஒரு முறை ஒரு சிட்டிகை கடுக்காய் பொடியையும் சேர்த்து சாப்பிட்டு வர எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். 

கேழ்வரகு மாவுடன் எள்ளும் சிறிது வெள்ளமும் சேர்த்து இடித்து அடை செய்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாகும்.

காயகல்பம் சிறுநீரக கோளாறுகளை நீக்குகிறது. சருமங்களில் ஏற்படும் சுருக்கங்கள், சொறி, சிரங்கு உள்பட அனைத்து விதமான தோல் வியாதிகளையும் போக்கி, சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கிறது.

தோல் வியாதிகளை குணப்படுத்தும் மூலிகை மருந்துகளில் காயகல்பத்தின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இது ரத்த சுத்திகரிப்பிற்கு பெரிதும் உதவுகிறது. அதனால், பருக்கள், கொப்புளங்கள் போன்றவை வராமல் தடுக்கிறது.

தலைமுடி உதிர்வதை தடுத்து, அதன் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் செல்களைத் தூண்டுகிறது. எப்போதும் இளமையுடன் இருக்கச் செய்கிறது. பொடுகு, பேன் தொல்லைகளைப்போக்குகிறது. இந்தியாவில் பொதுவாக காயகல்பம் அடங்கிய மூலிகைப் பொடிகளையே தலைக்குத் தேய்த்து இயற்கையான அழகுடன் ஜொலிக்கின்றனர்.

காயகல்பம் காய்ச்சல் உண்டாகாதவாறு தடுக்கிறது. காயங்கள், வீக்கம் போன்றவற்றால், உண்டாகும் வலிகளைப்போக்கி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கண் பார்வைத்திறனை அதிகரிக்கிறது. கண்எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், கண் சிவத்தல் போன்றகண் சம்பந்தமான குறைபாடுகளை போக்குகிறது.

ரத்தத்தில் உள்ள குளுக்கோசின் அளவைக் கட்டுப்படுத்தி சர்க்கரை நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலை தந்து, ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
(நன்றி ஹெல்த் நியூஸ்)

22 February, 2013

’என் ரசிகர்களுக்கு நான் தலைவன் அல்ல” - விஜய் பேட்டி!


ஏ.ஆர்.முருகதாஸ் இயகத்தில் விஜய், காஜல் அகர்வால் நடித்த துப்பாக்கி திரைப்படம் சில தினங்களுக்கு முன் தனது 100-வது நாளை வெற்றிகரமாக கடந்தது. துப்பாக்கி படக்குழுவினர் ஒருவர்க்கொருவர் தங்கது நன்றியை தெரிவித்துக்கொண்டதோடு, ரசிகர்களும் இந்த வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

இயக்குனர் விஜய்யுடன் - நடிகர் விஜய் இணையும் அடுத்த படம் ’தலைவா’. ‘விஜய் அரசியலில் இறங்குவதற்கான முதற்கட்ட ஏற்பாடு தான் இந்த படம் என்றும், சில தினங்களில் நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கான முயற்சி என்றும் பலவாறு பேசப்பட்டு வரும் நிலையில் துப்பாக்கி படத்தின் வெற்றி பற்றியும், தலைவா திரைப்படம் பற்றியும் விஜய் பேட்டியளித்திருக்கிறார். 


ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேடியில் விஜய் “ துப்பாக்கி 100 நாட்களை கடந்து மாபெரும் வெற்ற்பெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. தயாரிப்பு தரப்பின் ரிப்போர்ட்படி 3-வது வரமே எதிர்பார்த்த வசூல் வந்துவிட்டது. 

இந்த மாபெரும் வெற்றிக்கு என் ரசிகர்களுக்கும், முருகதாஸுக்கும், படக்குழுவிற்கும் நான் நன்றி சொல்லியாக வேண்டும். ஆனால் துப்பாக்கி படத்தின் இந்த மாபெரும் வெற்றி என் மீதான எதிர்பார்ப்பையும், பொறுப்புகளையும் அதிகமாக்கிவிட்டது.

இயக்குனர் விஜய்யுடன் இணைந்திருக்கும் ‘தலைவா’ அரசியல் சம்மந்தப்பட்ட படம் என்று தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. 


எனக்கு என் ரசிகர்கள் தான் தலைவர்களே தவிர அவர்களுக்கு நான் தலைவன் அல்ல. ‘தலைவா’ தலைப்பு பொதுவானது என்பதை படத்தைப் பார்த்ததும் நீங்களே புரிந்துகொள்வீகள். எனக்கும் - இயக்குனர் விஜய்க்கும் இது ஒரு புதுமையான கதைக்களம்.

நிரவ்ஷா படப்பிடிப்பில் ஒரு புது உத்வேகத்தை ஏற்படுத்தியிருக்கிறார். என் திரையுலக வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனைகள் அறிமுக இயக்குனர்களின் படங்கள் தான். 


படத்தின் கதையமைப்பு தான் இயக்குனரின் மீது நம்பிக்கை ஏற்படுத்துகிறது. அந்த விதத்தில் தான் அடுத்து நடிக்கவிருக்கும் ‘ஜில்லா’ திரைப்படத்தில் இயக்குனர் நேசனுடன் இணைகிறேன்” என்று கூறியுள்ளார்.

21 February, 2013

இதை நம்புவதா கூடாதா...? ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட டாப்-20 புகைப்படங்கள்!

ஃபோட்டோஷாப் என்ற வார்த்த அதிகமான இளைஞர்களுக்கு பிடித்தமான வார்த்தை என்று கூறலாம். அதிலும் ஃபோட்டோஷாப் செய்து ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்யப்படும் புகைப்படங்களுக்கு எப்போதுமே ஒரு தனி வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. எளிதாக ஃபோட்டோஷாப் செய்ய உதவும் அப்ளிக்கேஷன் பற்றிய தகவல்களை நாம் நிறைய வழங்கியிருக்கிறோம். அந்த அடிப்படையில் வாசகர்கள் கண்டு ரசிக்க, ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

படம் - 1

 படம் - 2

 படம் - 3

படம் - 4

படம் - 5

படம் - 6

படம் - 7

படம் - 8

படம் - 9

 படம் - 10

 படம் - 11

படம் - 12

படம் - 13

படம் - 14

படம் - 15

 
 படம் - 17

படம் - 18

படம் - 19

 படம் - 20

நன்றி மக்களே...!

20 February, 2013

கணவன் மனைவிக்குள் இருப்பது மட்டும் காதல் இல்லை ... குஷ்பு-வின் அடுத்த பரபரப்பு...!

காதலர்கள் ‘காதலர் தினம்’ கொண்டாடி முடித்துள்ள நிலையில், காதல் வாழ்வில் அவசியமனது என்றும், காதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்றும் குஷ்பு தெரிவித்துள்ளார். நடிகை குஷ்பு இயக்குனர் சுந்தர்.சி-யை காதலித்து மணந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் கூறியதாவது, கணவன் மனைவிக்குள் இருப்பது மட்டும் காதல் இல்லை. வாழ்வின் பல தருணங்களில் காதல் முக்கியமானது. காதல் என்பது அன்பு. நான் என் அண்ணன்கள் மேல் வைத்திருக்கும் அன்பு. என் புகுந்த வீட்டில் எனக்கு கொடுக்கும் அன்பு. நான் என் குழந்தைகள் மேல் வைத்திருக்கும் அளவுக்கு அதிகமான அன்பு என அனைத்தும் காதல் என்ற வார்த்தையில் அடக்கம்.

நானும் என் கணவரும் பல தடைகளை தாண்டியே காதல் திருமணம் செய்துகொண்டோம். முதலில் எங்கள் காதலுக்கு இருவீட்டாருமே எதிர்ப்பு தெரிவித்தார்கள். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால் எதிர்ப்பு இருந்தது. 
 
நாங்கள் காதலிக்க தொடங்கும் நேரத்தில் சுந்தர்.சி-யின் முதல் படம் கூட வெளியாகவில்லை. நான் நகரத்தில் வளர்ந்தவள். அவர் கிராமத்தில் இருந்து வந்தவர் என எங்களுக்கு பல வேறுபாடுகள் இருந்தது. இருந்தாலும் வீட்டில் பேசி புரியவைத்து சம்மதம் வாங்கினோம்.

சொந்த வீடு வாங்கியதும் உன்னை திருமணம் செய்துகொள்கிறேன் என்று சுந்தர்.சி வாக்களித்தார். பிறகு ஆறு வருடங்களாக காதலித்து திருமணம் செய்துகொண்டோம். இவ்வாறு தன் காதல் அனுபவத்தை பகிர்ந்துகொண்டார் குஷ்பு.

19 February, 2013

காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆண்டால் இந்தியா திவாலா... ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..!

 
நடப்பு நிதியாண்டின், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான, மூன்றாவது காலாண்டில், மத்திய அரசின் பொதுக் கடன், 40.48 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. "டூ மெனி குக்ஸ் ஸ்பாயில் தி பிராத்' என்ற ஆங்கிலப் பழமொழிக்கேற்ப, உலகப் பொருளாதார விற்பன்னர்கள் எனக் கூறிக் கொள்ளும், நிதியமைச்சரும், பிரதமரும், இந்திய தேசத்தை வெளிநாட்டவர்களுக்கு, அடகு வைக்க முயன்று வருகின்றனர். 
 
இவர்களோடு, இந்தியாவில் உள்ள நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களில் உள்ள இயற்கை வளங்களை, இங்குள்ள அரசியல் தலைவர்கள், "ஆட்டையைப்' போட்டு, இந்தியாவை கடன்கார நாடாக்கி, "கடன் பட்டார் நெஞ்சம் போல் இந்தியர்களை கலங்க' வைத்து வருகின்றனர். 
 
ஆதர்ஷ் ஊழலில், 1 லட்சம் கோடி; காமன்வெல்த்தில், 1.50 லட்சம் கோடி; "2ஜி'யில், 1.76 லட்சம் கோடி; நிலக்கரியில், 4 லட்சம் கோடி; எஸ்.பாண்டில், 10 லட்சம் கோடி; டெலிகாம் ஊழலில், 15 லட்சம் கோடி, ஹெலிகாப்டர் வாங்கியதில், 360 கோடி ஊழல் என, மெகா ஊழல்களோடு, இன்னும் வெளிவராத உலகப் புகழ் ஊழல்கள் மூலம், இந்தியாவின் இயற்கை வளங்களில் இவர்கள் திருடியது, 50 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும். அதனால் தான், இந்தியாவின் வெளிநாட்டு கடன், 40 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது. சரி, இந்தியாவின் இயற்கை வளங்களைச் சுரண்டியவர்கள், அதை எங்கே முதலீடு செய்துள்ளனர்...? 
 
 
 
இதோ...

பல பல தீவுகளையே, விலைக்கு வாங்கியதோடு உலகில் உள்ள, 30க்கும் மேற்பட்ட நாடுகளில், தங்களிடம் உள்ள பல லட்சம் கோடி பணத்தை தி.மு.க., தலைவர்கள் முதலீடு செய்து விட்டனர்.

காங்., தலைவர்களின், பல லட்சம் கோடியால், சுவிஸ் வங்கி, வீங்கித் தவிக்கிறது. கொள்ளையடிக்கப்பட்ட, பல லட்சம் கோடி இந்தியப் பணத்தால், "இத்தாலி' என்ற நாடே பெருத்த பெரும் பணக்கார நாடாக,"சீர்' பெற்று வருகிறது.

மேலும், ஐந்து வல்லரசு நாடுகளிடம் மட்டுமே இந்தியா பெற்றிருந்த வெளிநாட்டுக் கடன், வெறும், 5 லட்சம் கோடி ரூபாய் கடனை மட்டுமே வைத்து விட்டு, 2004ல் தன் பதவியை விட்டுச் சென்றார் வாஜ்பாய்.

ஆனால், தொடர்ந்து கடந்த, ஒன்பது ஆண்டுகளாக, தி.மு.க., ஆதரவோடு ஆண்டு வரும் மத்திய காங்கிரஸ் ஆட்சி, 2004ல் இருந்த, 5 லட்சம் கோடி கடனை, இன்று அதாவது, 2013ல், 40 லட்சம் கோடி கடனாக, எட்டு மடங்காக உயர்த்தி, இந்தியர்களை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது.

அதே நேரம், காங்கிரஸ் தலைவர்கள், தி.மு.க., தலைவர்கள் என, எல்லாருடைய சொத்துக்கள், 10 மடங்குகளுக்கு மேல் உயர்ந்து, பல லட்சம் கோடியாக எகிறியுள்ளதை, 125 கோடி ஏமாளி இந்தியர்கள் நன்கறிவர்.

இதே காங்., கூட்டணியின் ஊழல் ஆட்சி தொடர்ந்தால், இந்தியாவின் பொதுக் கடன், 100 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்து, இந்தியா திவாலாகி விடும் என்பதில் ஐயமில்லை.

இந்நிலை ஏற்படாமல் இருக்க, காங்கிரஸ் கூட்டணிக்கு, வரும் லோக்சபா தேர்தலில் தக்க பாடம் புகட்டி, தமிழகத்தில் உள்ள, 40க்கும் சைபர் என்ற படுதோல்வியைத் தர, 5.15 கோடி தமிழக வாக்காளப் பெருமக்கள் உறுதி பூண்டுள்ளனர்.

கடன் வாங்கித் தின்றவன் கடைத்தேற மாட்டான்...!
 
கடிதம் நன்றி : டாக்டர் ரா.அசோகன், சென்னை

18 February, 2013

16 February, 2013

ஜெயலலிதா மற்றும் விஜயகாந்தை சந்திக்கிறார் வடிவேலு

சினிமாவுலகில் உச்சத்தில் இருந்த வடிவேலுக்கு தேர்தல் சூறாவளி பெரும் பாதிப்பை தந்தது. தற்போது கொஞ்சக்கொஞ்சமாய் வெளிவந்திருக்கும் வடிவேலு தன்னுடைய மகளின் திருமணத்தை முன்னிருத்தி அனைத்து கட்சியினருடனும் சுமூகமாக செல்ல தீர்மானித்திருக்கிறார்.

அதனால் மகளின் திருமணத்துக்கு அரசியல் பேதமின்றி ஜெயலலிதா உள்பட அனைவருக்குமே அழைப்பிதழ் வைக்க நடிகர் வடிவேலு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நடிகர் வடிவேலு அவர்களின் மூத்த மகளுக்கு வரும் ஏப்ரல் 7-ம் தேதி மண்மனம் மாராத மதுரையில் திருமணம் நடக்கிறது. திருமண வேலைகளில் மும்முரமாக உள்ளார் வடிவேலு. 
மகள் திருமணத்துக்கு அழைப்பிதழ் அச்சடிக்கும் பணி இப்போது நடந்து வருகிறது. வடிவேலு இப்போது அரசியல் பற்றி பேசுவதில்லை என்றாலும், அவர் சார்ந்திருக்கும் திமுக தலைவர்களை அழைத்தால் மீண்டும் தேவையற்ற சர்ச்சைகள் வரும். எனவே அழைப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தாராம். 

இறுதியாய் திமுக மட்டும் இல்லாது அதிமுக சார்ந்த பிரபலங்களுக்கும் மற்றும் அனைத்து அரசியல் தலைவர்களுக்குமே அழைப்பிதழ் தருவதென முடிவு செய்துள்ளாராம். திருமணம் முடிந்த பிறகு பல புதுப்பட ஷூட்டிங்கை தொடங்கப் போகிறாராம் வடிவேலு.

அதுசரி அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து பத்திரிக்கை கொடுக்க நினைக்கும் வடிவேலு மதுரையை சார்ந்தவரும் தே.மு.தி.க. வின் தலைவருமான கேப்டன் விஜயகாந்தை சந்தித்து பத்திரிக்கை வைப்பாரா என்பதுதான் தற்போதைய கேள்வி.

இப்படி கூடவா நடக்கும்...


அலைகளில் கால் நனைத்து 
நடக்கும் ஒவ்வொறு நாளிலும்
உனக்கான போட்டியில் அலைகளோடு
நான் தோற்றுப்போகிறேன்...

கரையோரம் ஈரமடைந்த மணலில்
தெளிவாய் எழுதிவைக்கிறேன்
உன் பெயரையும் 
அதன் அரு‌கே
என் பெயரையும்...

கோவமாய் ஓடி வரும் அலை
அழித்துவிட்டுச் செல்கிறது
என் பெயரை...

அணைத்துவிட்டுச் செல்கிறது
உன் பெயரை...

வாசித்தமைக்கு மிக்க நன்றி..!

15 February, 2013

சவால்களை சந்திக்க மன உறுதி வேண்டும் - ஜெயலலிதா அவர்கள் சொன்ன குட்டிக்கதை

சென்னையில் தனது 65-வது பிறந்தநாளை முன்னிட்டு 65 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை நடத்தி வைத்து முதலமைச்சர் ஜெயலலிதா பேசுகையில் இரு குட்டிக்கதைகள் கூறினார்.

’’பழிப்புக்கு இடமில்லாத வாழ்க்கையை இல்லறம் என்கிறார் திருவள்ளுவர். இப்படிப்பட்ட இல்வாழ்க்கை அமைய வேண்டும் என்றால், அன்பும், அறமும், அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை. அப்பொழுது தான் வாழ்க்கை இன்பமும், மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்ததாக இருக்கும்.

ஓர் ஏழைச் சிறுவன் வீடு வீடாக சென்று துணிகளை விற்று, அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் கல்வி பயின்று வந்தான். ஒரு நாள் அவனுக்கு கடும் பசி. அவன் கையில் ஐம்பது காசு மட்டுமே இருந்தது. இந்தக் காசை வைத்து எதையாவது வாங்கிச் சாப்பிடலாம் என்று நினைத்து ஒரு வீட்டின் கதவைத் தட்டினான்.

“யார்?” என்று கேட்டவாறே, ஒரு இளம்பெண் கதவைத் திறந்து அந்தச் சிறுவனைப் பார்த்து “என்ன வேண்டும்?” என்று கேட்டாள்.

அந்தப் பெண்ணிடம் சாப்பாடு கேட்க மனமில்லாத அந்தச் சிறுவன், “குடிக்க தண்ணீர் கிடைக்குமா?” என்று கேட்டான்.

அந்தச் சிறுவனை ஏற, இறங்கப் பார்த்த அந்தப் பெண், அவன் கடும் பசியில் இருப்பதை உணர்ந்தாள். பின்னர், ஒரு டம்ளர் பாலை கொண்டு வந்து அந்தச் சிறுவனிடம் கொடுத்தாள்.

அந்தப் பாலை குடித்து முடித்த சிறுவன், “நான் எவ்வளவு காசு கொடுக்க வேண்டும்?” என்று அந்தப் பெண்ணிடம் கேட்டான்.

அதற்கு அந்தப் பெண், “நீ எதையும் தர வேண்டாம். ஒருத்தருக்கு ஒரு பொருளை அன்பாகக் கொடுக்கும் போது காசு வாங்கக் கூடாது என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்கள்” என்று கனிவுடன் கூறினாள்.

அதற்கு அந்தச் சிறுவன், “என் அடி மனதிலிருந்து தங்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினான்.

அழகாக இருந்த அந்த இளம்பெண் திடீரென நோய்வாய்பட்டாள். அந்த ஊரில் அவளுக்கு சிகிச்சை அளிக்க முடியாததால் நகரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அந்தப் பெண்ணை அனுமதித்தனர். புகழ் பெற்ற மருத்துவ நிபுணர் வரவழைக்கப்பட்டார்.

அந்த மருத்துவர், அந்தப் பெண்ணின் விவரங்களையும் அந்தப் பெண்ணுக்கு வந்துள்ள நோயினையும் படித்து தெரிந்து கொண்டார். உடனடியாக தன்னுடைய அறைக்குச் சென்று விட்டார். அந்தப் பெண்ணுக்கு உயர் தர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அந்தப் பெண் குணமடைந்தாள். மருத்துவ சிகிச்சைக்கான பில்லை கொண்டு வரும்படி மருத்துவமனையின் கணக்கரிடம் மருத்துவர் தெரிவித்தார். அவ்வாறே பில்லும் வந்தது. அந்த பில்லில் எதையோ எழுதி, பில்லை அந்தப் பெண்ணிடம் அனுப்பிவிட்டார் மருத்துவர்.

அந்த பில்லின் உறையைப் பார்த்ததுமே அந்தப் பெண்ணுக்கு நடுக்கம் வந்துவிட்டது. மருத்துவச் செலவு எவ்வளவு இருக்குமோ என்ற பயத்துடன் உரையை பிரித்தாள் அந்தப் பெண்.

அந்த பில்லில், “ஒரு டம்ளர் பாலுக்கு ஈடாக இந்தப் பில்லுக்கு முழுக் கட்டணமும் செலுத்தப்பட்டுவிட்டது” என்று எழுதப்பட்டிருந்தது. இது வாழ்வில் நிகழ்ந்த உண்மை நிகழ்வு ஆகும்.

இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துவது, அன்பின் சக்தியை, அன்பின் வலிமையை என்பதை நீங்கள் எல்லாம் புரிந்து கொள்ள வேண்டும். இது போன்ற பிரதிபலன் எதிர்பார்க்காத அன்பினை, மணமக்களாகிய நீங்கள் உங்கள் மனைவியிடம், உங்கள் கணவரிடம், உங்கள் பெற்றோர்களிடம், உங்கள் உற்றார் உறவினர்களிடம் செலுத்தினால், உங்கள் வாழ்வில் நிச்சயம் அமைதியும், ஆனந்தமும் நிலவும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது மட்டுமல்ல. எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் நாம் செய்கிற நல்ல காரியம், என்றாவது ஒரு நாள் நமக்கு நன்மையைத் தரும் என்பதையும் நீங்கள் உணர வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடையே மட்டுமல்லாமல், அனைவரிடத்திலும் அன்பு காட்ட வேண்டும்.

அன்பு செலுத்துவதால், துன்பம் வராது என்று சொல்ல முடியாது. இன்பம், துன்பம் இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை. ஆனால் அந்த துன்பங்களை எதிர்கொள்ளக் கூடிய, மன வலிமை; சவால்களை சமாளிக்கக் கூடிய மன உறுதி உங்களிடம் இருக்க வேண்டும்.’’

13 February, 2013

இந்த கடிதத்திற்கு ஜெயலலிதா அவர்கள் என்ன பதில்சொல்லபோகிறார்கள்...!.!

தமிகத்தில் சில வருடங்களாக மின்பிரச்சனை மிகுந்த வேதனையை கொடுத்து வருகிறது. தற்போதுவரும் கோடையில், இன்னும் மின்வெட்டு அதிகமாகும் சூழ்நிலையில், கவர்னர் உரையில் மின்பற்றாக்குறை தீர, புதிய திட்டங்கள் பற்றிய அறிவிப்பு இல்லாமல் போனது, கவலை தருகிறது.

நிலக்கரி கிடைப்பதும் அரிதாகி போனது. நிலக்கரி மூலம் மின் உற்பத்தியாகும் நெய்வேலியும், அணுசக்தி மூலம் மின்உற்பத்தி செய்யும் கல்பாக்கமும், கூடங்குளமும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாலும், பல மாநிலங்களுக்கு, மின் பகிர்மானம் செய்யப்படுவதாலும், தமிழகத்தின் பயன்பாட்டுத் தளம், மிக மிகக் குறைவே. 
எனவே, தமிழகம் தன்னிறைவு பெறுவதற்கான மின்சாரத் தேடலை புனல், அலை, காற்று, சூரியன் மூலம் நிகழ்த்தலாம். அதற்கான ஏதுக்கள் அதிகம் கொண்டது தமிழகம். சரியான திட்டமிடல் இருந்தால், மின் உற்பத்தி அபரிமிதமாகும்; ஆதாயமும் அதிகமாகும்.

தமிழகத்தில் சில மாவட்டங்கள் நீங்கலாக, பிற அனைத்திலும் சிறு, பெரு நீர் வீழ்ச்சிகள் அதிகம் உண்டு. தடுப்பணை கட்டி தேக்கி வைத்தால், மின்சாரமும் கிட்டும்; விவசாயத்திற்கான நீரும் கிடைக்கும். பெருவாரியான நீர் நிலைகள், வீணாக ஓடி, கடலோடு கலக்கும் நிலைதான் உள்ளது. 

மேட்டூர் போன்ற சமவெளிகளிலும், பாபநாசம், கோதையாறு போன்ற மலைகளிலும் நீரைத் தேக்கி, மின்சார உற்பத்தி செய்து வருபவர் நாம் என்பதை. மறக்கலாகாது. ஆண்டின் அத்தனை நாளும், காற்று வீசும் முப்பந்தல், கயத்தாறு, கோவை பகுதிகளை, சரிவர பயன்படுத்தினால், காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரம் அபரிமிதமாகும்.

கணவாய் இருக்கும் பகுதிகளில், காற்று அதிவேகத்தில் வீசும். முப்பந்தலும், கோவையும் இத்தன்மைகள் கொண்டவை. ஆனால், உற்பத்தியாகும் மின்சாரத்தை. தேக்கி வைப்பதற்கான கட்டுமானங்கள் அதிகம் இல்லாததால், காற்றாடிகள், பல நாட்கள் சுழலாமலேயே நிறுத்தப்படுகின்றன. தேக்கி வைப்பதற்கான வசதிகள் அரசால் அவசரகதியில் மேற்கொள்ளப்பட்டு, பகிர்மானம் செய்யும் இணைப்பு வசதிகளும் பெருக்கப்பட்டால், மின்பற்றாக்குறையை இல்லாமல் ஆக்கலாம்.

கோவையில், காற்றாலைகள் அதிகமாக நிறுவப்பட்டு சேமிக்கும் திறன் கொண்டவையானால், கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற தொழில் நகரங்கள் மின்சாரத்தால் தன்னிறைவு பெறும். சூரிய சக்தி பெற, தமிழகத்தில் அதிக இடமுண்டு. குஜராத் பார்முலாவை தமிழகம் பின்பற்றலாம். 
 
கதிரவன் அதிகமாக ஒளி பாய்ச்சும் வட ஆற்காடு, தென் ஆற்காடு, வேலூர், ராமநாதபுரம் மாவட்டங்களை தேர்வு செய்யலாம். சூரிய சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் கலன்களை நிறுவி, சேமிக்கத் துவங்கினால், ஆண்டின் பெரும்பாலான நாட்களில் சூரிய சக்தி பெறலாம். 

உற்பத்தியாகும் இடங்களை சுற்றி, தொழிற்சாலைகளும் பெருக, வேலைவாய்ப்பும் பெருகும். சிறிய தேவைகளுக்கு அரசே மானியம் கொடுக்க முன் வந்தால், வீடுதோறும் சூரிய சக்தியை பெறுவதற்கான உற்பத்தியை பெருக்க முடியும். 
சாலையோர மின்கம்பங்களில், சூரியசக்தி பெறும் கருவிகளை பொருத்தினால், அபரிமிதமான மின்சாரம் மிச்சமாகும்.தமிழகத்தின், ஒரு பகுதி கடலால் சூழப்பட்டது. 

மேற்கத்திய நாடுகளில் கடல் அலையிலிருந்து, மின்சாரம் தயாரிக்கும் நுணுக்கம் உள்ளது. அதை அறிந்து செயல்படுத்தினால், ஒவ்வொரு நாளும் கடல் அலைக்கும் பஞ்சமிருக்காது. அதிலிருந்து நாம் பெறும் மின்சாரத்திற்கும் பஞ்சம் வராது.

நன்றி : முனைவர், எஸ்.ஸ்ரீகுமார், அணுசக்தி நகரியம், கல்பாக்கம்.