முடிந்தும் முடியாது போன
நேற்றைய சண்டைக்காக
நேற்றைய சண்டைக்காக
கொஞ்ச நேரம்...!
புரிந்தும் புரியாத சண்டையின்
சமாதானத்திற்காக
கொஞ்ச நேரம்...!
சுற்றும் உலகைநிறுத்தி
சுவைக்கும் சந்தோசத்திற்காக
கொஞ்ச நேரம்...!
சூரியன் மறைந்து நேரம்செல்ல
பிரிவின் வலிக்காக
கொஞ்ச நேரம்...!
அருகில் இல்லாத அந்திகளில்
நினைவின் அலைகளில்
கொஞ்ச நேரம்...!
நினைவின் அலைகளில்
கொஞ்ச நேரம்...!
தினம் தினம்
இப்படியாகத்தான் கழிகிறது
நம் காதல் பொழுதுகள்...
நம் காதல் பொழுதுகள்...
கொஞ்சுவதற்கு இவ்வளவு நேரமா...? (ஓஹோ... ரகசியம்)
ReplyDeleteஅழகான கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteகொஞ்ச நேரம்?எல்லாநேரமும் கொஞ்சும் நேரம்?!
ReplyDeleteநன்று
இப்படி கொஞ்சிய கொஞ்ச நேரங்கள்போக மீதி நேரங்கள்தான் கவிதைகளாய் வந்திருக்கின்றனவோ?
ReplyDeleteஇப்படி கொஞ்சுறது வீட்டுகார அம்மாக்கு தெரியுமா ???
ReplyDeleteஅதற்க்குபின்தான் வாழ்கையின் சந்தோசம் ஆரம்பம்
ReplyDeleteநடக்கட்டும்! நடக்கட்டும்!
ReplyDeleteகாதல் பொழுதுகள் இப்படித்தான் கழிகின்றனவோ...! ரகசியம் தெரிந்து கொண்டேன். ம்... ஆவட்டும்...!
ReplyDeleteஅருமையான அழகான நாட்குறிப்பு
ReplyDeleteநீண்டநாட்களுக்கு பிறகு வருகின்றேன் எப்படி இருக்கீங்க பாஸ்?
அன்பின் சௌந்தர் - நேரம் களிப்புடன் கழிவது நம் கையில் இல்லை - இருப்பினும் மகிழ்ச்சி தான் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஅழகான வரிகள்.
ReplyDelete