07 February, 2013

சர்ச்சைகளை மீறி அசத்தும் விஸ்வரூபம்... கமல் நடிப்புக்கு ஒரு சபாஷ்...

 
விஸ்வரூபம் படத்தில், சர்ச்சைகளை கொஞ்சம் மறந்துவிட்டு பார்த்தால், கமலின் புதிய பரிமாணம் சினிமா ரசிகர்களை பிரமிக்க வைத்திருக்கிறது. 
 
ஒரு இயக்குநராக ஹேராமிலேயே தனது 'க்ளாஸ்'ஐ நிரூபித்துவிட்டவர் கமல். அவரது நடிப்புக்கு புதிதாக சான்றிதழ் தேவையில்லைதான். ஆனால் விஸ்வரூபத்தில் அந்த கதக் கலைஞராக வரும் முதல் 30 நிமிடங்களைப் பார்க்கும் எந்த சக கலைஞரும் கமலை நேசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அந்த அளவு மிக நுட்பமாக உணர்வுகளை வெளிப்படுத்தியிருப்பார் கமல். 
 
குறிப்பாக 'உன்னைக் காணாத..' பாடலின் வரிகளுக்கு, இசைக்கு கமல் தரும் பாவங்கள் இருக்கிறதே.. அந்த கதக் மாஸ்டரே எழுந்து நின்று கைத்தட்டிப் பாராட்டியதாக வந்த செய்திகளில் கொஞ்சமும் மிகையில்லை என்றுதான் சொல்ல வேண்டும். 
 
கமல்ஹாஸன் நடையை எத்தனையோ படங்களில், எத்தனையோ விதங்களில் பார்த்திருப்போம். ஆனால் அமெரிக்க வீதிகளில் ஒரு நடனப் பெண்ணின் நளினத்தோடு நடந்து செல்வார் பாருங்கள்... ஏபிசி என அத்தனை க்ளாஸ் ரசிகர்களின் அப்ளாஸ்களையும் அள்ளும் நடிப்பு அது. 
 
முதல் 30 நிமிடங்கள் ஒரு நாட்டியக் கலைஞனாகவே மாறிவிட்டார் கமல். போனை எடுக்க வரும்போது ஒரு நடை நடக்கிறார், சாலையில் ஓடும்போது, பேசும்போது காட்டும் முகபாவம், குரல், விரல்களால் முடியைக் கோதும்போது, கண்களில் நளினம் காட்டும்போது என மிக நுண்ணியமான விஷயங்களில் மிக மிக பிரயாசைப்பட்டு தனக்கு நிகர் ஒரு நடிகன் இல்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். 
 
அதே போல நாட்டியக் கலைஞன் என்ற மறைப்பிலிருந்து அவர் உண்மையிலேயே யார் என்பதை வெளிக்காட்டும் சூழல், அதை அவர் உணர்த்தும் விதம்... நடிப்புக்கு தனி இலக்கணமே சொல்கிறது. மென்மை நடிப்பு மட்டுமல்ல... மிரளவைக்கும் ஆக்ஷனிலும் தனது நடிப்பு உலகத் தரம் என்பதை அழுத்தமாக நிரூபித்திருக்கிறார் கமல். 
 
ஜேம்ஸ்பாண்ட், இங்கிலாந்து துப்பறியும் நிபுணர் போல... இந்திய சினிமாவுக்கு கமல் ஒரு உதாரண கேரக்டரை உருவாக்கியிருக்கிறார் என்றால் மிகையல்ல. 
 
இந்த விஸ்வரூபத்தில் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு வசூலில் முதலிடத்தைப் பிடித்திருப்பது கமல் எனும் அற்புதமான நடிகனே என்பது ரசிகர்களின், விமர்சகர்களின் ஒட்டுமொத்த தீர்ப்பு!

10 comments:

  1. சண்டே படம் பார்க்க போறேன். விமர்சனத்திற்கு நன்றி

    ReplyDelete
  2. ரசித்த விதம் மேலும் ரசிக்க வைத்தது...

    ReplyDelete
  3. படத்தை தியேட்டர்ல போய் பார்க்கனும்ன்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன்

    ReplyDelete
  4. அன்பின் சௌந்தர் - நல்லதொரு பட விமர்சனம் - அல்ல அல்ல - கமலின் நடிப்பினைப் பற்றிஅய் விமர்சனம் - அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  5. கமலின் அமெரிக்கதேச (பக்தி) விசுவசத்தின் வெளிப்பாடு இந்த படத்தின் கதைகருவின் உச்சம். இதற்காக இசுலாமியர்களின் உணர்வுகளை சோதனை செய்து பார்த்து இருக்கின்றார் என்பதுதான் உண்மை

    அமெரிக்கனாக இரு, அமெரிக்காவை நேசி’ என்று தன்னை அமெரிக்க அடிமையாக அடையாளப்படுத்தியிருக்கிறார்.

    ஆஸ்கர் விருதுக்காக எதையும் செய்ய துடிக்கும் தமிழ் நாயகன்
    ‘கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; அமெரிக்க சார்பு இஸ்லாமிய எதிர்ப்பு படம்தான், மாற்று கருத்து எழ யாருக்கும் வாய்ப்பு இல்லை

    தமிழக சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்த்து எமரா போவது நிச்சயம்

    அவ்வளவு அபத்தத்தை 90 கோடி செலவில் கொட்டி இறைத்துள்ளார். பாவம் அமெரிக்க முதலாளிகள் ஏமாந்து போவர்கள்

    ReplyDelete
    Replies
    1. hahaha ungala ellam ninaicha engalukku paavama irukku aiyoo aiyooo

      Delete
    2. இந்திய விமானத்தை கடத்திய தீவிரவாதிகளக்கு அடைக்கலம் வழங்கிய அப்கானிஸ்த மொள்ளமாரி தலிபான்களை பற்றியே படத்தில் காட்டபட்டுள்ளது.....தலிபான்கள் அமெரிக்காவை தாக்குவது போன்று காட்டுவதே நடைமுறைக்கு பொருந்தும் ...முஸ்லிம்களின் மனது புன்படுவதை போலவே அன்று பட்டுப்பாதை பாமின் புத்தர் சிலையை தலிபான்கள் உடைத்த போது புத்தமதத்தவர் மனதும் புண்பட்டு இருக்கும் ..அதனை எதிர்த்து ஒரு கருத்தும் கூறாத 24 அமைப்பு பிரதிநிதிகள் ...இன்னைக்கு மட்டும் இவ்ளோ டென்சன் ஆகுறாங்க ?????தயவு செய்து தலிபான்களை போராளிகள் என மட்டும் கூற வேண்டாம் ...தலிபான் ஆட்ச்சியின் போது மனித உரிமை என்பது அங்கு அதலபாதளத்தில் இருந்தது என்பது சொல்ல வேண்டியதில்லை...

      ஆனாலும் கமலக்கும் இது ஒரு பாடம்...பெரும்பான்மை மதத்தவரை அதிகமா அவர் படங்களில் விமர்சித்த போதும் ...அவர்கள் தான் இவ்விவகாரத்தில் துணை நின்றனர்

      Delete
  6. அந்த கதக் கலைஞனை நானும் வெகுவாய் ரசித்தேன் சார்

    ReplyDelete
  7. mind-blowing movie aboubt kamal sir acting no words only woowwwww kalakittinga kamal thnx to made a such a movie salute to kamal

    ReplyDelete
  8. Vimarsika padatha thiraipadam kidaiyathu. aana ithu konjam over (musslim)frds.
    unmaiya padama edutha. uruthutho.
    Oru silar than ya kevalama matthavangala pesuringa.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!