23 March, 2013

இப்படிக்கு... உட்கார்ந்து யோசிப்போர் சங்கம்...


"ஹலோ, டாக்டர் நான் உங்களப் பார்க்க வரணும். 
நீங்க எப்ப ஃப்ரீ''

"எப்ப வந்தாலும் ஃப்ரீ கிடையாது. 
ஃபீஸ் வாங்குவேன்''
------------------------------------

தலைவர்: யோவ்! இங்கே வாய்யா! ஒரு பேச்சுக்கு "இசட் ப்ளஸ்' பாதுகாப்பு கேட்டேன். ஜன்னல் கம்பிக்கு அந்தப் பக்கம் பாரு. எத்தனை போலீஸ் நிக்குறாங்கன்னு!

தொண்டன்: நாசமாப் போச்சு. தலைவரே! நேத்து ராத்திரியிலேயிருந்து நாம ஜெயிலுக்குள்ளே இருக்கோம். அது ஜன்னல் கம்பி இல்லே, ஜெயில் கம்பி. அவங்கள்லாம் போலீஸ் இல்ல. ஜெயிலருங்க தலைவரே!

தலைவர்: ?...?...?
-------------------------------------------

வழுக்கைத் தலை ஆசாமி: எனக்கு இப்படி முடி கொட்டினதுக்கும் எனக்கிருக்கிற குடிப்பழக்கத்துக்கும் சம்பந்தம் உண்டா டாக்டர்?

டாக்டர்: சேச்சே! குடி குடியைத்தான் கெடுக்கும். முடியை ஏன் கெடுக்கப்போகுது!

-------------------------------------------

"31 நாட்கள்" கொண்ட மாதங்களைத்தான் உனக்கு ரொம்ப பிடிக்குமா? ஏன்டா?''

"மாதம் 30 நாளும் குடிக்கமாட்டேன்னு" என் பொண்டாட்டிக்கு சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கிறேன்''

-------------------------------------------

"விளையாட்டுக்குக் கூட இதுவரை நான் பொய் சொன்னதேயில்லே!''

"விளையாடறதுக்கு உனக்கு இன்னிக்கு நான்தான் கிடைச்சேனா?''

-----------------
படங்களும் நகைச்சுவைகளும்
தொகுத்தவை.....

5 comments:

  1. இப்பல்லாம் நிறைய நகைச்சுவை போட்டு கலக்கறிங்க.. எல்லாமே சிரிக்கும்படி இருந்தது.!

    ReplyDelete
  2. இரசித்துப் பார்த்துப் படித்தேன்...

    ReplyDelete
  3. சிரித்தேன்..... ரசித்தேன்

    ReplyDelete
  4. அன்பின் சௌந்தர் - படங்களும் நகைச்சுவைகளும் நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!