அப்பா : டேய்...உன் வயசுல ஐன்ஸ்டின் பஸ்ட் ரேங்க் வாங்குனாரு. நீயும் என் புள்ளைன்னி இருக்கியேடா...
மகன்: உங்க வயசுல ஹிட்லர் தற்கொல பண்ணிகிட்டாரு....நான் அதெல்லாம் சொல்லறனா...
*******************************************
"இங்கே ஆயிரம் ரூபாய்க்கு என்ன வாங்கினாலும் ஒரு வாட்ச் இலவசம்"னு ஒரு கடையில போர்டு போட்டிருந்தாங்க....
உடனே நான் அந்த கடையில ரூபாய்க்கு சில்லறை வாங்கிட்டு, இலவச வாட்ச் கொடுங்கன்னு கேட்டேன்,
அடிக்க வர்றாங்க...!!!
என்ன உலகம்டா இது!??!!
*******************************************
மகன்: அப்பா! எங்க காதலுக்கு தடை போடாதீங்க. எங்க காதல் தெய்வீகக் காதல்!
அப்பா: அது என்னடா தெய்வீகக் காதல்?
மகன்: என் பெயர் பரமசிவம். என் காதலி பெயர் பார்வதி. அதை வெச்சுத்தான்!
*******************************************
"சார், பேங்க் கொள்ளை பற்றி ஒரு துப்பு கிடைச்சிருக்கு, கொள்ளை அடிச்சவன் கம்ப்யூட்டர் நாலெட்ஜ் உள்ளவன். நீதி, நேர்மைக்கு கட்டுப்பட்டு நடக்கிறவன். "
"எப்படிச் சொல்றீங்க ? "
"ஒவ்வொரு அக்கவுண்ட்ல இருந்தும் ஆயிரம் ரூபா கரெக்டா எடுத்து அதை அக்கவுண்ட்ல கழிச்சு சரியா கணக்கு டாலி பண்ணிட்டு போயிருக்கான். "
*******************************************
உலகத்திற்கு "எடிசன்" வந்ததால் மின்சாரம் கிடைத்தது.
ஆனால்,
தமிழ்நாட்டிற்கு "எலக்சன்" வந்தால்தான் மின்சாரம் கிடைக்கும்!
*******************************************
அம்புட்டும் பேஸ்புக்கில் படித்து ரசித்து சிரித்தது...
தொகுத்து உங்களுக்காக...!
*******************************************
அம்புட்டும் பேஸ்புக்கில் படித்து ரசித்து சிரித்தது...
தொகுத்து உங்களுக்காக...!
சிரித்தேன்... ரசித்தேன்...
ReplyDeleteபடங்கள் வெகு சிறப்பு.
ReplyDeleteதேய்வீக காதல் ஜோக்தான் நச்
ReplyDeleteஅருமை.
ReplyDeleteஅருமை அய்யா அருமை
ReplyDeleteநல்ல தொகுப்பு, அதிலும் அந்த கடனுக்கு இலவசம் இருக்கே... :)
ReplyDeleteஅன்பின் சௌந்தர் - சிரித்து சிரித்து மகிழ்ந்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteநல்ல தொகுப்பு.... இலவசம் ஜோக் அருமை
ReplyDeleteசிரித்தேன்..
ReplyDelete