06 November, 2013

இப்படிக்கூட பரவசப்படலாம்....!




நிலைக்கண்ணாடி முன்பு
நின்றுக் கொண்டு
எனக்குள் ரசித்துக்கொண்டிருக்கிறேன்
உன்னை...!
 

என்னை மறந்து உறங்கினாலும்
விழித்துக்கொண்டிருக்கிறது
எனக்குள் உன் நினைவு...!


*****************************
 
அம்மா அம்மா என்று அழைக்கும்
மழலைகள் போல்...

உன்னை பொழிப்பெயர்க்கும்
என் முயற்சிகளையும்...

உன்னை காட்சிப்படுத்தும்
என் கற்பனைகளையையும்....

கவிதை என்று சொல்லிவிட்டுப்போகிறது
இந்த உலகம்....!

 
*****************************

எழுதி எழுதி பார்த்தாலும்
தீர்ந்துப்போகாத காதலை
எனக்குள் விதைத்து விட்டாய்...!


தழுவித் தழுவித் தீர்த்தாலும்
தீர்ந்தப்பாடில்லை
எனக்குள் ஊடுருவும் இன்பத்தை..!

தற்போதைக்கு உனக்குள்ளும் எனக்குள்ளும்
புன்முறுவலோடு உறங்கட்டும்
நம் காதல்...!



*****************************

உன்னை கலக்காத
என் கவிதைகளுக்கு
உயிர் இருப்பதில்லை...

உன்னை கலக்காமல்
கவிதை எழுத
இன்னும் கற்றுக்கொள்ளவில்லை...

உனக்கும் எனக்கும்
உயிராக இருந்து தவித்துக்கொண்டிருக்கிறது
என் கவிதைகள்...!


*****************************


உன் கண் பார்வை கிடைத்ததிலிருந்து
கர்வப்பட்டு கொள்கின்றன என் ஆண்மை...!

உன் மூச்சுக்காற்று என்னை உரசியதிலிருந்து
எனக்குள் உயிர்பித்துக் கொள்கிறான் பாரதி...!

என்னை சுற்றி வலைத்திருந்த தடைகளை நீக்கி
இந்த உலகைவிட்டு பறக்க
சிறகு கொடுத்துவிட்டுப்போகிறது
உன் காதல்...!
 

#பரவசக்_கவிதைகள்  

என் முகநூலிலிருந்து

*****************************

9 comments:

  1. முகநூல் கவிதைகளில் காதல் வழிகிறது! அருமை! நன்றி!

    ReplyDelete
  2. வணக்கம்
    அருமையாக காதல் ததும்பும் கவிதை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. கவிதைலாம் தூள்

    ReplyDelete
  4. //உன் கண் பார்வை கிடைத்ததிலிருந்து
    கர்வப்பட்டு கொள்கின்றன என் ஆண்மை...!

    உன் மூச்சுக்காற்று என்னை உரசியதிலிருந்து
    எனக்குள் உயிர்பித்துக் கொள்கிறான் பாரதி...!
    ///// அருமை அருமை.... கவிதை எழுத எத்தனிக்கும் அனைவருக்குள்ளும் அவனே மூச்சுக் காற்றாய் இருக்கிறான்... அருமையான கவிதை வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. //உன் கண் பார்வை கிடைத்ததிலிருந்து
    கர்வப்பட்டு கொள்கின்றன என் ஆண்மை...!

    உன் மூச்சுக்காற்று என்னை உரசியதிலிருந்து
    எனக்குள் உயிர்பித்துக் கொள்கிறான் பாரதி...!
    ///// அருமை அருமை.... கவிதை எழுத எத்தனிக்கும் அனைவருக்குள்ளும் அவனே மூச்சுக் காற்றாய் இருக்கிறான்... அருமையான கவிதை வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. #உன்னை கலக்காத
    என் கவிதைகளுக்கு
    உயிர் இருப்பதில்லை...#
    கலக்கல் கவிதை என்பது இதுதான் !
    த.ம 2

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!