நிலைக்கண்ணாடி முன்பு
நின்றுக் கொண்டு
எனக்குள் ரசித்துக்கொண்டிருக்கிறேன்
உன்னை...!
என்னை மறந்து உறங்கினாலும்
விழித்துக்கொண்டிருக்கிறது
எனக்குள் உன் நினைவு...!
*****************************
அம்மா அம்மா என்று அழைக்கும்
மழலைகள் போல்...
உன்னை பொழிப்பெயர்க்கும்
என் முயற்சிகளையும்...
உன்னை காட்சிப்படுத்தும்
என் கற்பனைகளையையும்....
கவிதை என்று சொல்லிவிட்டுப்போகிறது
இந்த உலகம்....!
*****************************
எழுதி எழுதி பார்த்தாலும்
தீர்ந்துப்போகாத காதலை
எனக்குள் விதைத்து விட்டாய்...!
தழுவித் தழுவித் தீர்த்தாலும்
தீர்ந்தப்பாடில்லை
எனக்குள் ஊடுருவும் இன்பத்தை..!
தற்போதைக்கு உனக்குள்ளும் எனக்குள்ளும்
புன்முறுவலோடு உறங்கட்டும்
நம் காதல்...!
*****************************
உன்னை கலக்காத
என் கவிதைகளுக்கு
உயிர் இருப்பதில்லை...
உன்னை கலக்காமல்
கவிதை எழுத
இன்னும் கற்றுக்கொள்ளவில்லை...
உனக்கும் எனக்கும்
உயிராக இருந்து தவித்துக்கொண்டிருக்கிறது
என் கவிதைகள்...!
*****************************
உன் கண் பார்வை கிடைத்ததிலிருந்து
கர்வப்பட்டு கொள்கின்றன என் ஆண்மை...!
உன் மூச்சுக்காற்று என்னை உரசியதிலிருந்து
எனக்குள் உயிர்பித்துக் கொள்கிறான் பாரதி...!
என்னை சுற்றி வலைத்திருந்த தடைகளை நீக்கி
இந்த உலகைவிட்டு பறக்க
சிறகு கொடுத்துவிட்டுப்போகிறது
உன் காதல்...!
#பரவசக்_கவிதைகள்
என் முகநூலிலிருந்து
முகநூல் கவிதைகளில் காதல் வழிகிறது! அருமை! நன்றி!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅருமையாக காதல் ததும்பும் கவிதை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிதைலாம் தூள்
ReplyDeleteபரவசம் வழிகின்றது
ReplyDeleteஅருமை
ReplyDelete//உன் கண் பார்வை கிடைத்ததிலிருந்து
ReplyDeleteகர்வப்பட்டு கொள்கின்றன என் ஆண்மை...!
உன் மூச்சுக்காற்று என்னை உரசியதிலிருந்து
எனக்குள் உயிர்பித்துக் கொள்கிறான் பாரதி...!
///// அருமை அருமை.... கவிதை எழுத எத்தனிக்கும் அனைவருக்குள்ளும் அவனே மூச்சுக் காற்றாய் இருக்கிறான்... அருமையான கவிதை வாழ்த்துக்கள்...
//உன் கண் பார்வை கிடைத்ததிலிருந்து
ReplyDeleteகர்வப்பட்டு கொள்கின்றன என் ஆண்மை...!
உன் மூச்சுக்காற்று என்னை உரசியதிலிருந்து
எனக்குள் உயிர்பித்துக் கொள்கிறான் பாரதி...!
///// அருமை அருமை.... கவிதை எழுத எத்தனிக்கும் அனைவருக்குள்ளும் அவனே மூச்சுக் காற்றாய் இருக்கிறான்... அருமையான கவிதை வாழ்த்துக்கள்...
Nice... ! collection
ReplyDelete#உன்னை கலக்காத
ReplyDeleteஎன் கவிதைகளுக்கு
உயிர் இருப்பதில்லை...#
கலக்கல் கவிதை என்பது இதுதான் !
த.ம 2