24 January, 2016

இப்படியாய் சில அனுபவங்கள்...!


வான் எழுதும் 
தண்ணீர் கவிதை மழை...

அவைகளை தன் இலைகளில் சுமந்து
நிதானமாய் வாசித்து வழியனுப்பி
மண்ணையும் மகிழ்விக்கும் 
மரங்கள்...!

நாமும் மரம்போலாவோம்
வாழ்வை மகிழ்வோடு எதிர்கொண்டு...

மகிழ்ச்சியை மற்றவரோடும்
பகிர்வோம்...!



ஆரவாரமாய் மழைப்பெய்து அடங்கியது
முகில் ஒழிந்து வானம் தெரிந்தது...

எல்லாம் ஓய்ந்தப்பின்
மறுநாள் சத்தமின்றி
எட்டிப்பார்த்தது காளான்...

பிரச்சனைகளை அப்போதே
நேருக்கு நோராய் சந்தியுங்கள்....
முடிந்தபிறகு எதற்கு 
தீர்வுகள்..!



சேற்றில் வேர்பதித்து
நீர்கிழித்து வெளியில் வந்தது 
தாமரை...

தடம் பதித்த தடாகத்தை
ஒட்டியும் ஒட்டாமல் இருந்தன 
இலைகள்..!

வளர்த்தவர்களிடத்தில்
ஏன் வேறுபாடுகள்...

ஒன்றியே வாழ்வோம்..!



வேற்றினத்து முட்‌டைகளை
அடைக்காத்து பொறிக்கும் 
அற்புதங்கள்..

கிடைத்ததை பகிர்ந்துண்ணும்
பெருங்குணம் கொண்டவை 
காக்கைகள்..!


இயன்ற‌வரை உதவிடுவோம்
இயலாதவர்களுக்கு...

வாழ்க்கை என்பது 
ஒருமுறைதானே..!

வாசித்தமைக்கு மிக்க நன்றி...!

22 January, 2016

மரணத்திலிருந்து தப்பிய மனோபாலா...! ஒரு உண்மை சம்பவம்

 

மூங்கில் ஒன்று புல்லாங்குழலானதுபோல், வயிறு குலுங்கச் சிரிக்கவைக்கும் வித்தகன் மனோபாலா. மனோபலம் கூடிய மனோபாலா, 13 வருடங்களுக்கு முன்பு செத்துப் பிழைத்தவர் என்றால், நம்ப முடிகிறதா?

''யப்பா... அந்த நாட்களை இப்ப நினைச்சாலும் கசப்பா இருக்கு தம்பி. வழக்கமா எல்லோருக்கும் நண்பர்களாலதான் சிகரெட் பழக்கம் வரும். வலியப்போய், அந்தப் பழக்கத்துக்கு அடிமையான ஆளு நானாத்தான் இருப்பேன். 17 வயசுல, காலேஜ் படிச்சிட்டிருந்தப்ப, முதன் முதலா சிகரெட் பிடிக்க ஆரம்பிச்சேன். 

அந்த டேஸ்ட்டும் ஸ்மெல்லும் ரொம்பவே பிடிச்சுப்போச்சு. ஆரம்பத்துல ஒரு நாளைக்கு ரெண்டு, மூணு சிகரெட் பிடிச்சிட்டிருந்த நான், நாளாக நாளாக அதிகமாப் புகைக்க ஆரம்பிச்சேன். சினிமாவுக்குள் என்ட்ரி ஆனப்ப, நான் ஒரு செயின் ஸ்மோக்கர். அப்பவே சுதாரிச்சிருந்தா, பெரிய பாதிப்புலேர்ந்து மீண்டு இருந்திருப்பேன்'' என்று மூச்சை இழுத்துவிட்டபடியே, பாதிப்பின் வீரியத்தைச் சொன்னார்.

''கை நடுக்கம் வர ஆரம்பிச்சது. எப்பவும் சோர்வா இருக்கும். அடிக்கடி உடம்புக்கு முடியாமப் போகும். சாப்பாடு எறங்காது. முகமெல்லாம் கறுத்துப்போச்சு. டாக்டர்கிட்ட போய் செக்-அப் பண்ணேன். அதிகமா சிகரெட் பிடிச்சதால், நுரையீரல் முழுக்க சிகரெட் புகை அடைஞ்சு இருக்குன்னு சொன்னார். டெஸ்ட் ரிசல்ட்லகூட, எலும்புகள் அரிச்சுப்போயிருக்கிறதா வந்துச்சு. 
'சிகரெட் பிடிச்சா இவ்வளவு பாதிப்பு வருமா டாக்டர்?’னு அப்பாவியாக் கேட்க, அதுக்கு டாக்டர், 'புகையோட இயல்பான பண்பே படிதல்தான். வீட்டு அடுக்களைக்குள் நுழைஞ்சிருக்கீங்களா? சுவர் முழுக்கப் புகை படிஞ்சு இருக்கும். அது மாதிரிதான் தம்பி நம்ம உடம்பும். நீங்க உள்ள இழுத்த புகை, உங்க உடம்பு முழுக்கப் படிஞ்சுகிடக்கு. அதனால் நுரையீரல், நரம்பு, எலும்பு எல்லாம் பாதிச்சிருக்கு. இன்னும் ஒரு பாக்கெட் சிகரெட் குடிச்சீங்க, நீங்க உயிரோட இருக்க மாட்டீங்க, அப்புறம் உங்க இஷ்டம்’னு சொல்லிட்டு எழுந்துபோய்ட்டார். நான் அப்படியே ஆடிப்போயிட்டேன்.

ஒரு நிமிஷம் என் மனைவி, குழந்தைகளை நினைச்சுப் பார்த்தேன்.

குடும்ப எதிர்காலத்தைவிட கருமம் பிடிச்ச இந்த சிகரெட் முக்கியமா? பலரது சிரிப்புக்குக் காரணமாயிட்டு, என் குடும்பத்தைச் சோகத்துல தள்ளலாமா?’ அப்படினு என் மனசாட்சி கேள்வி கேட்டுச்சு. ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆனேன். எக்கச்சக்கமா செலவு செஞ்சு, புது மனோபாலாவா வீட்டுக்குத் திரும்பினேன். 


அதுக்கு அப்புறம் சிகரெட் பக்கமே போகலை. எத்தனையோ படங்கள்ல சிகரெட் பிடிக்கிற மாதிரி நடிச்சேன். ஆனால், திரும்ப அந்த கெட்ட பழக்கத்துக்கு அடிமையாகலை. அந்த அளவுக்குக் கண்டிப்பா இருந்தேன். சிகரெட் பிடிச்சப்ப 42 கிலோவா இருந்த நான், இப்போ 62 கிலோ இருக்கேன். இப்ப என் உடம்பும் ரொம்ப நல்லா இருக்கு. சந்தோஷமா இருக்கேன்.'' - சிரித்தபடியே சொன்ன மனோபாலா, சிகரெட் பழக்கத்தில் இருந்து மீண்டுவருவருவதற்கான சீக்ரெட் டிப்ஸ்களையும் தந்தார். 


பெரும்பாலும், சாப்பாடு, டீ சாப்பிட்ட பிறகுதான் அதிகமா சிகரெட் அடிப்பாங்க. அந்த நினைப்பு வந்தால், உடனே திசை திருப்ப முயற்சி பண்ணுங்க. ஒரு டம்ளர் தண்ணி குடிங்க. எழுந்து ஒரு ரவுண்ட் நடந்துட்டு வாங்க.

சாப்பாடு சாப்பிட்டதும், சும்மா உட்கார்ந்து இருக்காமல், ஏதாவது ஒரு வேலையில் உங்க கவனத்தைச் செலுத்துங்க. கொஞ்ச நேரத்தில் சிகரெட் புகைக்கணும்கிற எண்ணம் போயிடும்.

சிலருக்கு சிகரெட் பிடித்தால்தான் டாய்லட் போக முடியும் என்ற நிலை இருக்கும், இதைக் காரணமாககொண்டே சிலர் சிகரெட் பிடிப்பார்கள். அவர்கள் முந்தைய நாள் இரவே நன்கு கனிந்த பூவன்பழம் மாதிரியான மலமிளக்கிகளை சாப்பிட்டுவிட்டுப் படுக்கலாம். மறுநாள் சிகரெட்டின் தேவை இருக்காது.

சிகரெட் தரும் பாதிப்புகளை உங்க வீட்டிலோ, தனி அறையிலோ கண்ணில் படும் இடத்தில் பெரிதாக எழுதிப் படங்களுடன் ஒட்டிவைக்கலாம்.

பெட்டிக் கடைப் பக்கம் தயவுசெஞ்சு போகாதீங்க.

உங்க கண் எதிர்ல ஒருத்தர் சிகரெட் பிடிக்கிறார்னா, அவர் நிக்கிற திசைக்கு எதிர்த் திசையில் நடக்க ஆரம்பிச்சிடுங்க.

'ரொம்ப நாளாச்சே... ஒண்ணே ஒண்ணு மட்டும் அடிப்போமே...’ அப்படிங்கிற வேலையே கூடாது. ஒண்ணு நூறாயிடும். ஜாக்கிரதை!

சிகரெட் பிடிக்கத் தூண்டும் நண்பர்களின் சகவாசத்தையே துண்டிச்சிருங்க.

சிகரெட் பிடிக்கத் தோணுச்சுன்னா, பச்சைக் காய்கறிகளைச் சாப்பிடுங்க. இது உடம்புக்கும் நல்லது. சிகரெட் பிடிக்கணும்கிற எண்ணத்தையும் மறக்க வெச்சிடும்.

தியானம், யோகா போன்ற நல்ல பழக்கங்கள்ல கவனத்தைத் திருப்புங்க. மனசை ஒருமுகப்படுத்தி, நீங்க எடுத்திருக்கும் நல்ல முடிவுக்கு பக்க பலமா இது இருக்கும்.

சிகரெட் பழக்கம், வாழ்க்கையைச் சீரழிச்சிடும் கண்ணுங்களா! விட்டுடுங்க!

விழிப்புணர்வு பதிவாக விகடனிலிருந்து...!

15 January, 2016

தாரை தப்பட்டை - சினிமா விமர்சனம்.. Tharai Thappattai review



சினிமா என்ற கனவுத்‌ தொழிற்சாலையில் பூத்துவிடும் அத்தனை மலர்களும் மனம் வீசுவதில்லை. கடந்த ஆண்டு 200-த் தாண்டி தமிழ் திரைப்படங்கள் வந்தாலும் ஒரு சிலப்படங்கள் தான் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்ற படமாக மாறியிருக்கிறது.... அப்படி இடம் பிடிக்கும் படத்தின் கதாபாத்திரங்களையும் அந்த இயக்குனரையும் நாம் பாராட்டாமல் இருப்பதில்லை. 

ஒரு சாதாரண கடைநிலை ரசிகனை  திருப்திப்படுத்தும் எந்த கதையானாலும் அதை கோபுரத்தில் வைக்கும் குணம் தமிழ் ரசிகர்களுக்கு கட்டாயம் உண்டு... அப்படி எதிர்பார்த்த அளவு இல்லை என்றால் அதை புறந்தள்ளிவிட்டு போகவும் துணியமாட்டார்கள்.


ஒரு இயக்குனர் மட்டுமே ஒரு படத்தின் உயிர் நாடி. அவர் அசைக்கிறபடி மட்டும் மற்றக்கலைஞர்கள் அ‌சைகிறார்கள்... ஒற்றை உத்தரவுக்கு கட்டுப்பட்டு அத்தனை கதாபாத்திரங்களும் அசைந்தால் அதுதான் ஒரு உயிரோட்டமான திரைப்படமாக ஏற்றுக்கொள்ளபடுகிறது... 

ஒரு படத்தின் தோல்வி என்பதை முழுக்க முழுக்க இயக்குனர் மட்டுமே ஏற்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து...  ஒரு இயக்குனர் வைத்துள்ள கதைக்கும் அந்த கதாபாத்திரத்திற்கும் அந்த இயக்குனர் மட்டுமே உயிர்கொடுக்க முடியும் மாறாக மற்றவர்கள் தன்னுடைய ஹீரோயிஷத்தை காட்ட நினைத்தால் அது உயிரற்ற கதையாக மாறிவிடுகிறது...


கோடம்பாக்கத்தில் கண்டிப்பான இயக்குனர் என்ற பெயர் எடுத்திருக்கும் இயக்குனர் யார் என்றால் அது பாலா தான்... எப்போதும் என்னால் உயிரோட்டாமன கதைகளை இந்த தமிழ் சினிமாவுக்கும் கொடுக்க முடியும் என்று மறுபடியும் ஒருமுறை நிறுபித்திருக்கிறார். எதார்த்தம், காதல், நகைச்சுவை, கொடுமை, பாசம், வலி, சோகம் என அத்தனையையும் ஒருசேர ஒற்றைக்கோட்டில் நிறுத்தும் திறமை பாலாவிடம் மட்டுமே உள்ளது... அந்தவகையில் தாரை தப்பட்டை என்ற ஒரு சிறப்பான படத்தை கொடுத்ததற்கு பாலா அவர்களுக்கு ஒரு சபாஷ்...


கதைக்குள்...!

தஞ்சாவூரில் “சன்னாசி தாரை தப்பட்டை குழு“ என்ற ஒரு தப்பாட்ட நடனக்குழுவை நடத்தி வருபவர் சன்னாசி என்ற சசிக்குமார்... தன்னுடைய தந்தையான சாமி புலவரிடம் (ஜி.எம்.குமார் ஐயா) அனைத்து வித்தையையும் கற்றுக்கொண்டு இந்த நடனக்குழுவை நடத்திவருகிறார்.

அதில் பிரதான நடனக் நாட்டியக்காரியாக சூறாவளி. (சூறாவளி கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார்) சிறந்த தாரை தப்பட்டை குழுவாக இருக்கும் இவர்கள் பல்வேறு நடன நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார்கள்...


சசிக்குமாரை உயிருக்கு உயிராக விரும்பும் வரலட்சுமி... அவருக்காக எதையும் செய்யும் துணிச்சல் மிக்கவராக இருக்கிறார்.. நடனக்குழுவில் அப்படிஒரு ஆட்டம்... இவரை ரசிக்கவே குவிகிறது ஆர்டர்கள்...

 
பெண்களை வைத்து விபச்சாரம், வாடகைத்தாய் என தவறான வழியில் பணம் சம்பாதிக்கும் கொடுர வில்லனான சுரேஷ்.. நான் அரசு ஊழியன் என்றும் கூறி. ரொம்ப நல்லவன் போல் நாடகமாடி  அனைவரையும் ஏமாற்றி வரலட்சுமியை மணந்துக்கொள்கிறார்...

வரலட்சுமி போனப்பிறகு நடன நிகழ்ச்சிகள் ஏதும் வராததால் வறுமையில் தள்ளப்படுகிறது சன்னாசி நடன குழு... வறுமையை போக்க  துக்க வீட்டில் ஆடும் அளவுக்கு இவர்கள் தள்ளப்படுகிறார்கள்...

அ‌ரசுவேலை  மாப்பிள்ளை.. இவளாவது நல்லாயிருக்கட்டும் என்றுதான் சசிக்குமார் தன்னுடைய காதலை மறைத்து இந்த திருமணத்தை நடத்திவைக்கிறார். ஆனால் வரலட்சுமியை தவறான வழியில் பயன்படுத்தப்படுகிறார் என்று சசிக்குமாருக்கு தெரியவரும்போது அவளை கொடுமைப்படுத்திய அனைவரையும் துவம்சம் செய்கிறார்...

வரலட்சுமி எவ்வாறு ஏமாற்றப்பட்டார் அவர் அனுபவிக்கும் கொடுமைகள் என்ன...? இறுதியில் என்னவாயிற்று என்று.... சோகமும், நெருடலும் மட்டுமே என்னுடைய படத்தின் கிளைமாக்ஸ் என்பதை மீண்டும் ஒருமுறை நிறுபித்து படத்தை நிறைவு செய்கிறார் பாலா...!


படம் முழுவதும் நடன கலைஞர்களின் வாழ்க்கை முறை அவர்களின் பேச்சுவழக்கு.... ஆடை அணிகலன்கள்... அவர்களுடைய துயரங்கள் அனைத்தையும் அழகாக நம் கண்முன்னே நிறுத்தியிருக்கிறார் பாலா...

சசிக்குமார் ஒரு தாரை தப்பட்டை நடன கலைஞனாகவே வாழ்ந்திருக்கிறார்... சன்னாசி கதாபாத்திரத்தில் மிகவும் சிரமப்பட்டு தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து  கதைக்கு வலுசேர்க்கிறது சசிக்குமாரின் நடிப்பு....


அனைத்துக்கும் சிகரம் வைத்தார்போல் சூறாவளி கதாபாத்திரத்தில் தன்னை நடிப்பின் சூறாவளி என்று நிறுபித்திருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்... அப்படி ஒரு நடிப்பு... மாமா என்று சசிக்குமாரை சுற்றிவரும்போதும்... நாட்டியக்காரியாக குட்டைப்பாவடை அணிந்து நடனம் ஆடும்போதும், காதலுக்காக எதையும் செய்ய துணியும்போதும்... குடித்துவிட்டு குமார் ஜயாவிடம் அலப்பரை செய்யும்போதும் இறுதி காட்சிகளில்... என அத்தனை இடத்திலும் நல்லதொரு ஸ்கோர்... சபாஷ் வரலட்சுமி... (போடா போடி படத்தை பார்த்து எதற்கு இதற்கு சினிமாவெல்லாம் என்று திட்டியிருந்தேன்...)

ஜி.எம்.குமார் ஜயா அவன் இவன் படத்திற்கு பிறகு இந்த படத்திலும் சிறப்பாக பயன்படுத்திருக்கிறார் பாலா. சாமி புலவன் என்ற கதாபாத்திரத்தில் நல்லதொரு நடிப்பு.. மேலும் படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களும் தங்களுக்காக பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்....


இசைசார்ந்த கதை என்பதால் இசைஞானி சரியான தேர்வு... இளையராஜா தன்னால் எப்போதும் எந்தகாலத்துக்கும் நின்று நிலைக்கமுடியும் என்று 1000-மாவது படத்திலும் நிறுபித்திருக்கிறார்.. பாடல்கள் பிண்ணனி என அத்தனையும் அற்புதம்...

வரலட்சுமி அடிக்கடி தண்ணியடிக்கும் காட்சிகளைத்தவிர குறைஎன்று கூற வேறுஎதுவும் தெரியவில்லை...


ஹீரோ ஹீரோயினை ஒன்று சேர்த்து படம்முடிக்கும் தமிழ் சினிமாவின் பார்முலாவுக்கு விதிவிலக்கு பாலா... எப்போதும் இவர் படத்தில் கடைசியில் சுபம் எதிர்பார்க்கமுடியாது.. இதிலும் அப்படித்தான்... சுபம் இல்லை என்றாலும் பாலாவின் முடிவுகள் அனைவரையும் கனத்த இயதத்துடன் ஏற்றுக்கொள்ள வைத்து விடுகிறது...

தாரை தப்பட்டை - அமர்க்களம்...

14 January, 2016

பிரியாணி மாஸ்டர் பொங்கல் செய்தா எப்படியிருக்கும்..!


பிரியாணி மாஸ்டர பொங்கல் செய்ய சொன்னது தப்பா போச்சு..

ஏம்பா? என்னாச்சு?

பொங்கல் பொங்கி முடிச்சவுடனே மூடிய வச்சி மூடி 
அதுமேல நெருப்போட அடுப்புகரியப் 
போட்டு 'தம்'முல வச்சிட்டாரு.!..
**************************************


"புரட்சி வெடிக்கப் போகுதுன்'னா 
தலைவருக்குப் புரிய மாட்டேங்குது! "

"என்ன பண்றார்? "

"ரெண்டு காதையும் பொத்திக்கிறார்! "

**************************************


ஆசிரியர்: உலகிற்கு முக்கியம் சூரியனா சந்திரனா?

மாணவன்: சந்திரந்தான் சார்!

ஆசிரியர்: எப்படி?

மாணவன்: சார் பகல்ல வெளிச்சம் இருக்கும்போதுதான் சூரியன் ஒளி கொடுக்குது. ஆனால் சந்திரன் ராத்திரில வெளிச்சம் இல்லாத போது ஒளி கொடுக்குதுல்ல

ஆசிரியர்: !!!!!!
**************************************


"இந்தக் கால பசங்க 24 மணி நேரமும் 
வாட்ஸ்அப்-ல அடிமையாயிட்டாங்க தலைவரே!":

"நான்லாம் அந்தக் காலத்துல லாக்அப்-லதான்
அடிமையா இருந்தேன்!"
**************************************


ஹொட்டல் முதலாளி: ஏன் சார், தினமும் பார்சல் வாங்கறீங்க… 
ஒருநாளாவது இங்கயே சாப்பிடலாமில்லே..?

நோயாளி : டாக்டர் என்னை ஹொட்டல்ல சாப்பிடக்கூடாதுனு சொல்லிருக்காரு. அதான்!
**************************************


நோயாளி: டாக்டர் என் வலது கை நல்லா வலிக்குது டாக்டர்

டாக்டர்: வயசாச்சில்ல, அதான் வலிக்குது.

நோயாளி: இடது கைக்கும் அதே வயசு தானே ஆகுது. 
அது மட்டும் ஏன் வலிக்க மாட்டேங்குது?
**************************************


ஆசிரியர்: ஒரு தேர்வு எழுதுவதற்கான 
காகிதம் தயாரிக்க பதினைந்து மரங்கள் அழிக்கப்படுகின்றன. 
அதனால் நீங்கள் செய்ய வேண்டியது...

மாணவன்: இனி நாங்கள் பரீட்சையே எழுத மாட்டோம் சார்.. 
நீங்க கவலைப் படாதீங்க.

**************************************


அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

11 January, 2016

பழமாகி பின் பூத்தவை...!

கல்லிலே கலை வண்ணம் கண்டார்.... கல்லில் மட்டும் அல்ல காய்கறிகளிலும்.. பழங்களில் கூட கலைநயம் காணலாம் என இந்த படைப்புகள் நிறுபிக்கிறது.... இதை உருவாக்கிய படைப்பாளிகளுக்கும் படைப்புளுக்கும் ஒரு சல்யூட்...
*******************

படங்கள் மற்றும்.. ஒருசில அறியத்தகவலுடன்...

தேன், மிக எளிதாக ஜீரணமடையும் ஒரு உணவுப்பொருள். ஏன் தெரியுமா? அது ஏற்கனவே தேனீக்களால் ஜீரணிக்கப்பட்டுவிட்டது.


நீங்கள் உங்கள் கைவிரல்களை 'நெட்டி' முறிக்கும்போது ஏற்ப்படும் சத்தத்திற்கு காரணம்...நம் உடம்பில் நைட்ரஜன் வாயுவில் உள்ள குமிழ்கள் உடைவதே.


ரத்த ஓட்டம் இல்லாத மனித உடலில் உள்ள ஒரே பாகம்...கண்விழித்திரை. அது நேரடியாக காற்றில் இருந்து ஆக்சிஜனை எடுத்துக்கொள்கிறது.


எறும்புகளின் கொடுக்கில் உள்ள அமிலம் என்ன?
பார்மிக் அமிலம்


நமது மூளை, ஒரு சிறந்த கணிப்போறியைவிட நுட்பமானது. அதில், சுமார் 100 மில்லியன் நரம்பு செல்கள் உள்ளன


ஒரு மனிதன் மரணமடையும்போது, முதலில் செயல் இழக்கும் உறுப்பு..அவனது காதுகள்.


ஒரு மனிதனின் விழித்திரைகள் 45 சதவிதம் அதிகமாக விரிவடைகின்றன...அவன் தனக்கு பிரியமானவற்றை காணும்பொழுது.


இந்த உலகின் மொத்த பெட்ரோல் உற்பத்தியில் 29 சதமும்,உலகின் மொத்த மின் உற்பத்தில் 33 சதமும் ஒரேயடியாக பயன்படுத்திக்கொள்ளும் நாடு.. அமெரிக்கா.


காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல.அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.


இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்

இந்தியாவில் முதல் நினைவு நாணயம் நேருஜிக்கு 1964ல் வெளியிடப்பட்டது.

ஆணும், பெண்ணும் உதடுகளில் முத்தமிடும்போது 278 வகையான பாக்ட்ரியாக்கள் பரிமாறிக்கொள்ளபடுகின்றன.

பால் கலக்காத தேநீர் பருகுவதால் உடல் எடை குறைவதாக ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 
அதிலும் பச்சைத் தேநீர் (கிரீன் டீ)

சூரியனுக்குள் எத்தனை பூமிகளை வைக்கலாம் தெரியுமா? 
10 லட்சம் பூமிகள்!

சூரியகாந்திச் செடிகளை வளருங்கள். உங்கள் வீட்டில் யாருக்கும் ஜலதோஷம் எட்டிப் பார்க்காது.
 
யானையின் வாழ்நாள் 80 வருடங்கள்.
ஆமையின் வாழ்நாள் 300 வருடங்கள்.
 

மனித உடலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை 
- 200 000
முதுகு தண்டுவடத்தின் சராசரி நீளம் 430 மில்லிமீட்டர்.


200 கோடி பேருக்கு ஒருவர் தான் 116 வயதைக் கடந்து வாழ்கிறார்கள்.


உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு சுவீட்சர்லாந்து.


உலகிலேயே வெப்பமான இடம் அசீசீயா (லிபியா).
.உலகிலேயே குளிந்த இடம் சைபீரியா (ரஷ்யா).


உலகில் மின்னல் தாக்கி அதிகம் இறக்கும் மக்கள் அமெரிக்கர்கள்.


நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை நித்திரை கொள்ள முடியும்.


உலகிலேயே மிகப் பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்.


ஒட்டகம் 1 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாக கண்டுபிடித்துவிடும்.


நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கக் கூடியது.


ஆந்தையால் ஓரே நேரத்தில் இரு கண்களாலும் இரு வேறு காட்சிகளைக் காண முடியும்.


பெண் சிலந்திப் பூச்சிகள், ஆண் சிலந்தியுடனான உறவுக்குப் பின் அதைக் கொன்று விடுகின்றன.


விமானம் பறக்கும் உயரத்தை அள்க்க உதவும் கருவியின் பெயர் ஆல்டி மீட்டர்.


மிருகங்களில் குறைந்த நேரம் தூங்கும் மிருகம் கழுதை. இது ஒரு நாளில் 30 நிமிடங்கள் மட்டுமே தூங்கும்.


இந்தியாவில் தமிழில் தான் 'பைபிள் ' முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.


சமம் என்பதற்கு அடையாளமான = என்ற குறியீடு
1557ம் ஆண்டு முதல் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ரசித்தமைக்கும் வாசித்தமைக்கும் மிக்க நன்றி..!