31 October, 2012

அடுத்து என்ன செய்ய போகிறார் விஜயகாந்த்...!


 

‌தேமுதிக வுக்குள் தற்போது வெள்ளம் தலைக்குமேல் சென்றுக்கொண்டிருக்கிறது....

இப்போதாவது கட்சியையும், கட்சி உறுப்பினர்களிடம் நடந்துக்கொள்ளும் அனுமுறையையும், தன்னுடைய நிலையையும் மாற்றிக்கொள்வாரா ‌விஜயகாந்த் அவர்கள்...

மற்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சரை பார்ப்பதால் என்ன ஆகிவிடப்போவதில்லை. தன் கட்சியின் மன்ற உறுப்பினர்கள் போய் தொகுதி பற்றி பேசினார்கள் என்றதும். தானும் தொகுதிப்பற்றி பேச அனுமதி கோறியிருக்கிறார். முறைப்படி பார்த்தால் இவர் அல்லவா முதலில் போயிருக்க வேண்டும்.

4 பேர் மட்டும்தானா  இன்னும் தேமுதிக கட்சிக்குள் அதிரடி காத்திருக்கிறதா..?

அடுத்த என்ன நடக்கபோகிறது பொருத்திருந்து பார்ப்போம்...

29 October, 2012

இது இரவில் அவளை தேடியதின் விளைவு...!


ராரின் ‌இமைகள மூடிக் கொண்ட 
ஒரு கருப்பு இரவில்...

திர்ப்புகளின் சுவர்தாண்டி
உன் தெருவுக்குள் குதித்த போது...

தெ ரு விளக்கின் வெளிச்சத்தில்
சாத்திக் கிடந்த வீட்டின் முன்
பூத்துக் குலுங்கின நீ போட்ட கோலம்.......
 
ன்னும் புன்னகையோடுதான் இருக்கிறது
நீ.... நிலவொளியில் காயவைத்த மல்லிகைச்சரம்
உன் வீட்டு கூரை மீது...

வீ ட்டு முற்றத்தில் துளசி செடியின் மீது
வெளிச்சத்தை உமிழ்ந்துக் கொண்டு இருந்தது
மின்மினிப் பூச்சிகள்...

டிக்கடி என்னை பயமுறுத்தி கொண்டிருந்தது
பனைமரத்தில் குடிக்கொண்டிருந்த
கோட்டான்கள்...

விடிய விடிய இவைகளை ரசித்த பின்
அனைத்திடமும் சொல்லி விட்டு வந்தேன்
 
ன்னை காணாத சோகத்தையும்
உனக்கான காதலையும்..

 நன்றி... (மீள் பதிவு)

26 October, 2012

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...!


வணக்கம் மக்களே... கொஞ்சம் இடைவேளைக்குபிறகு மீண்டும் வந்திருக்கிறேன். பதிவின் தலைப்பு அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கின்ற ஒரு தமிழ் திரைப்படத்தின் பெயர். படத்தின் தலைப்பு ‌உண்மையில் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த பதிவு அந்தப்படத்தைப்பற்றியது அல்ல.

பொதுவாக ஒரு காலத்தில் நம்முடைய நினைவுகளை ஞாபகப்படுத்திக்கொள்ள நாம் நம்முடைய மூளையையும், மனதையுமே நம்பியிருந்தோம். இதில் நிறைய தகவல்களை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாது என்பதால் தம்முடைய நினைவுகளை குறிப்புகளாக நோட்டுபுத்தகங்கள் அல்லது டைரிகளில் குறித்து வைத்திருந்தோம். 

கால மாற்றத்தால் தகவல்களை சேமித்துவைக்கும் பொக்கிஷங்களாக நமக்கு கிடைத்தவைகள் தான் கணினியும், கைபேசியும். கணினியின் பயன்பாடும் மற்றும் கைபேசியின் பயன்பாடும் வந்தப்பிறகு நிறைய தகவல்களை சேமித்து வைக்கும் அக்ஷய பாத்திரங்களாக இந்த இரண்டும் விளங்கி வருகிறது.

ஆனால் கணினியும் கைபேசியும் நம்மைவிட்ட சென்று விட்டால் என்னவாகும் உண்மையில் நம்முடைய வாழ்க்கையின் கொஞ்சப்பக்கங்கள் காணாமலே போய்விடும் என்பதுதான் உன்மை.


கடந்த வாரம் என்னுடைய கணினியின் செயல்பாடுகள் மிகவும் வேகம் குறைந்து காணப்பட்டது. அதன்பிறகு என்னுடைய சாப்டவேர் இன்ஜினியரை அழைத்து சோதித்தது போது கணினியின் ஹார்ட் டிஸ்க் (Hard Disk) போய் விட்டது என்று சொல்லிவிட்டார். கிட்டத்தட்ட 5 வருடங்களாக சேமித்த வைத்த விஷயங்கள் அலுவலக பயன்படு தகவல்கள், இன்னும் என்ன... என்ன தகவல்கள் என்று கூட சொல்ல முடியவில்லை அவ்வளவு தகவல்களும் கேள்விக்குறியாகிவிட்டது...

என்னுடைய கணினியில் C, D, E, F, G  என 5 பகுதியாக பிரிக்கபட்டு இருந்தது. தற்போது D  கோலனிலிருந்து மட்டும் கொஞ்சம் தகவல்களை மீட்டிருக்கிறேன் G முழுமையாக அழிந்து விட்டதாகவும்ஈ, மீதமிருக்கும் E, F  கோலன்களில் இருக்கும் தகவல்களை மீட்டெடுக்க என்னுடைய ஹார்ட் டிஸ்க் சென்னை பயனப்பட்டிருக்கிறது. அவைத் திரும்பியப் பிறகே என்னுடைய பழைய நினைவுகள் மீண்டும் திரும்பும். தற்போது புதிய 500 GP ஹார்ட் டிஸ்க் மாற்றியிருக்கிறேன் ஆனால் 1 GP  அளவுக்கூட இதில பழைய தகவல்கள் இல்லை.

10, 15 நாட்களுக்கு பிறகு என்னுடைய கணினி முதலில் இருந்து ஆரம்பித்திருக்கிறது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் நேற்று கண்விழித்து என்னுடைய கைபேசியை எடுத்து பார்த்தால் மற்றோர் அதிர்ச்சி  என்னுடைய SIM 2 TATA DOCOMO-வில் access error  (9042235550) என்று வந்தது என்னாச்சி என்று பார்த்தபோது. அதிலிருந்த அத்தனை தெலைபேசி ‌எண்கள் குறுந்தகவல்கள், என அத்தனை தகவல்களும் அழிந்துபோயிருக்கிறது. 


ஒரு காலத்தில் தெலைப்பேசி எண்களை பாக்கெட் டைரியில் குறித்து வைத்திருப்போம். சில எண்களை ஞாபகத்தில் வைத்திருப்போம். ஆனால் கைபேசி வந்தபிறகு ஒரு எண்னை கூட ஞாபத்தில் வைத்திருக்க வில்லை. அதிலிருந்த அத்தைனை எண்களும் போய் விட்டது. அதிக அதிகமான எண்கள் பதிவுலகத்தை சார்ந்தவர்களுடையது என்பதுதான் என் வேதனையை இன்னும் அதிகமாக்குகிறது. அவைகளை நான் எப்படி திரும்பப்பெறப்போகிறேன் என்று எனக்கே தெரியவில்லை.

என்னுடைய வாழ்க்கையில் இந்த இரண்டு சம்பவங்களும் புதியதாகவும் ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சியுட்டுவதாகவும் இருக்கிறது. என்னுடைய வாழ்க்கையின் சிலபக்கங்களை இழந்துவிட்டதுபோன்ற உணர்வே எனக்குள் மேலோங்கி நிற்கிறது. அதுவும் ஒரே சமயத்தில் இப்படி நடந்திருப்பது இன்னும் அதிர்ச்சியை அதிகப்படுத்துகிறது.

தாமஸ் அல்வா எடிசன் தன்னுடைய ஆய்வு கூடம் எரிந்தபோது வருத்தப்படாமல் அமைதியாக இருந்தாராம்  எரிந்த அந்த ஆய்வுகூடத்தில் எடிசனின் 14 ஆயிரம் ஆராய்ச்சி குறிப்புகள் இருந்ததாம். ஆனால் பழையவைகள் போகட்டும் இப்போது நான் புதியதாக சிந்திக்கப்போகிறேன் என்றாறாம் எடிசன் அவர்கள்.

அதேபோல்தான் நானும் தற்போது அமைதியுடன் என்னுடைய புதிய நினைவுகளுக்கு மாறிக்கொண்டிருக்கிறேன். கணினியில் இருந்து எவ்வளவு தகவல்கள் மீட்டெடுக்க முடியும் என்று இதுவரையில் தெரியவில்லை. கைபேசியில் இருந்து அழிந்துபோன எண்களை மீட்டெடுக்கவும் கொஞ்சம் நாள் ஆகலாம். அதுவரையில் கொஞ்சம் கடினம்தான்.

 இது நல்லதா அல்லது கெட்டதா என்று பகுத்துப்பார்க்க கூடிய மனநிலையில் இல்லை. இருந்தாலும் எல்லாம் நல்லதற்கே என்று எடுத்துக்கொண்டு பயணப்படுகிறேன்...

18 October, 2012

இவைகள் உண்மையில் சாத்தியமா..?


உன்னிடம் நான்
நிறையப் பேசவேண்டும்
ஒரே வார்த்தையில்...!

உன்னைப் பற்றி
அதிகமாய் கவிதை பாடவேண்டும்
ஒற்றை வரியில்...!

உனக்காக நான்
இந்த பூமியை வென்று விட வேண்டும்
ஒரே நெடிக்குள்..!

உன்னையே எனக்குள்
சேமித்து வைக்க வேண்டும்
ஒருதுளி உயிராய்..!

உன் நினைவுகள் விட்டு
விலகாமல் பயணிக்க வேண்டும்
ஒவ்வொறு அடி தூரத்திற்கும்...!

உன்னை என்னுள்
நான் முழுமையாய் சுமக்க வேண்டும்
ஒரு மயிலிறகாய்...!

நான் உன்னை பிரியாமல்
இந்த பூமியில் வாழ்ந்திட வேண்டும்
ஒரு யுகம் முடிய..!

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி...!

17 October, 2012

பிரதமர் பதவிக்கு ஜெயலலிதா, வேடிக்கை பார்க்கும் திமுக ,!

தமிழகத்தில் நாளுக்கு நாள் பல்வோறு பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. மின்வெட்டு என்ற பூதத்தை அடக்க என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று தெரிய வில்லை அறிவிப்புகளைத்தவிர. திமுக-வாக இருக்கட்டும் அல்லது அதிமுக-வாக இருக்கட்டும் தான் இருக்கும்போது எந்த வேலையும் செய்யாமல் ஆட்சி மாறியப்பிறகே இது கிழிக்கலாம் அதைக்கிழிக்கலாம் என்று வாய்சவிடால் விட்டுக்கொண்டிருக்கிறார்கள். கடந்த 25 ஆண்டுகளாக இதுதான் நடந்துக்கொண்டிருக்கிறது.
 
கோவை லோக்சபா தொகுதி அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய தமிழக நிதியமைச்சர், தங்களது கட்சித் தலைவி (அதாங்க அம்மா) பிரதமரானால் தான், இந்த இந்திய நாட்டை காப்பாற்ற முடியும் என, பேசியிருக்காராம்.
 
 
என்ன ஒரு வேடிக்கைப்பாருங்க அண்ணாவளைவு எடுத்தது எனக்கு தெரியாது என்று கூறிய ஜெயலலிதா அவர்கள், மின் வெட்டு குறி்த்து துரிதமான எந்த முடிவைவையும் எடுக்காத இவர் இங்கு தமிழகத்தையே காப்பாற்ற முடியாதவர், இந்தியாவை காப்பாற்ற போகிறாராம்; நல்ல வேடிக்கை. 
 
தினமும், 10 முதல் 14 மணி நேரத்திற்கும் மேல் மின் தட்டுப்பாடு உள்ளது. இங்கு சீரான மின்சாரத்தை கொடுத்து, தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லாமல், பிரதமர் பதவி மேல் ஆசைப்படுகின்றனர். தேர்தலில் சொன்ன வாக்குறுதியை மறந்து விட்டனர். மின்தடையால் போராட்டம், உண்ணாவிரதம், மறியல், மனிதச் சங்கிலி, பந்த் என, பொது மக்களும், தொழில் துறையினரும் அல்லாடிக் கொண்டிருக்க, ஆளும் கட்சியோ, பதவி பற்றி ஊர் ஊராக செயல் வீரர்கள் கூட்டம் நடத்துகிறது. 
 
கர்நாடகாவில் உற்பத்தியாகும் காவிரி நீர், கர்நாடகாவுக்கே சொந்தம் என்று, காங்கிரஸ் கட்சி மத்திய அமைச்சர் ஒருவர், தமிழகத்துக்கு தண்ணீர் தரும்படியான உத்தரவை நிறுத்தி வைக்கும்படி, பிரதமருக்கு கோரிக்கை விடுக்கிறார். ஆனால் தமிழகத்தை சார்ந்த காங்கிரஸ் அமைச்சர்களோ, 13 ஆண்டுகளாக, மத்திய அரசில் அமைச்சர் பதவி சுகம் அனுபவித்து வரும் தி.மு.க., அமைச்சர்களோ, வாயே திறக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 
 
 
மத்திய அரசில் பதவி சுகம் காணும், தி.மு.க., தன் ஆட்சிக் காலத்திலேயே, மின்சார பற்றாக்குறையை போக்க, எந்த விதமான முயற்சிகளையும் எடுக்காமல், தொழிற்சாலைகளுக்கு வார விடுமுறை, வீடுகளுக்கு மின்வெட்டு என்ற நிலை இருந்ததோடு, மின்வாரியத்திற்கும் கோடிக்கணக்கில் கடன் வைத்து விட்டனர். 
 
ஆனால் இன்று, மின்வெட்டு தொடர்பாக போராட்டம், மறியல், துண்டு பிரசுரம் கொடுத்து, நல்லவர்கள் போல வேஷம் போடுகின்றனர்.போர்க்கால அடிப்படையில் கவனம் செலுத்தி, சீரான மின்சாரத்தை வழங்க, தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுத்து, தமிழக மக்களை காப்பாற்ற, ஆளுங்கட்சி முன்வர வேண்டும்.

எதிர்கால கொள்கைகள், தெலைநோக்கு பார்வை என்ற அனுகுமுறையில்லாமல் வெறும் ஆட்சி அதிகாரத்தை மட்டுமே கொள்கையாக வைத்துக்கொண்டு செயல்படும் இந்த திராவிட கட்சிகளை நாம் என்னவென்று சொல்வதோ...?

15 October, 2012

பெண்களே..! நிறுத்திக்கொள்ளுங்கள் இதோடு...!


 
ந்த உலகில் வன்கொடுமை
இல்லை என்பார்கள்
இதுவரை காதலை அறியாதவர்கள்...!


தயத்தால் போர்தொடுத்து
மனங்களில் ரணங்கள் பட்டு
தோல்வியை வெளியில் சொல்லாதோர்

காதலில் கோடிபேர் இங்கு..!

ன்னும் எத்தனை நாளோ...!
காதல் என்ற பெருந்தீயில் விழுந்து
வடுக்களை மறைத்து வாழ்வது...



ட்டியிருந்து வஞ்சித்தது போதும்
மரணத்தில் மூழ்கி எழுகிறேன்
நான் ஒவ்வொறு நாளும்...!
 

ப்போது கூட...

சப்தம் இல்லாமலும்
கண்ணீர் இல்லாமலும்
நான் அழுதுக்கொண்டிருக்கிறேன்....!

  
ற்கள் தெரியாமலும்
உதடு அசையாமலும்
நீ  சிரித்துக்கொண்டிருப்பது போல்...!


12 October, 2012

பிறந்தவுடன் பேசிய குழந்தை.. SMS-ல் பரவும் ஒரு பரபரப்பு உண்மை கதை..!


ஒரு மருத்துவமனை :

அதிகாலை பிரசவ வார்டில் பிரசவ வலியால் துடிக்கிறாள் ஒரு பெண். சுற்றி மருத்துவர்களும், செவிலியர்களும் நிற்கிறார்கள். பிரசவ வலி அதிமாகிக்கொண்டே போகிறது. வெளியே அந்தப்பெண்ணின் கணவரும் உறவினர்களும் மிகவும் கவலையுடன் நின்றுக்கொண்டு இருக்கிறார்கள்.

அந்தப்பெண்ணின் கணவர் தன்னுடைய செல்போனை எடுத்து நண்பர்களை உதவிக்கு அழைக்க நினைத்து தன்னுடைய செல்போனை பார்க்கிறார். ஆனால் அது சார்ஜ் இல்லாமல் தன்னுடைய செயலை நிறுத்தியிருக்கிறது.

மருத்துவர்கள் மிகவும் குழப்பத்தில் இருக்கிறார்கள். அடுத்து என்ன செய்வது. என்று யோசித்து, ஆபரேஷன் தியேட்டரை ரெடி செய்யலாம என்று நினைக்கையில் அதுவும் சாத்தியமில்லாமல் போகிறது.

அந்த மருத்துவமனையில் ஒரு பதட்டம் தொற்றிக்கொள்கிறது. விடிவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. விடிந்தபிறகுதான் ஒரு முடிவுக்கு வரமுடியும் என்ற நிலையில் அந்து ஒரு வித பதட்டம் நீடிக்கிறது.

\

அந்த நேரத்தில்...

ஒரு பெரிய அலறலுடன் அந்த பெண்ணுக்கு சுகப்பிரசவத்திலே ஒரு அழகிய குழந்தைப் பிறக்கிறது.

பிறந்த குழந்தையை ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தனர். மருத்துவர்களும், செவிலியர்களும்...

அப்போது அந்த குழந்தை மெல்ல தன்னுடைய கண்களை திறந்து ஒரு மருத்துவரை பார்த்தது...

அவரும் ஆவலுடன் அந்த குழந்தையை  பார்த்தார்..

அப்போது அந்த குழந்தை மருத்துவரைப்பார்த்து... “இங்கு கரண்ட் இருக்கா...” என்று கேட்டது...

அதற்கு மருத்துவர் “இல்லை” என்று பதிலளித்தார்..

“அடக்கடவளே நான் மறுபடியும் தமிழ்நாட்டில் தான் பிறந்திருக்கேனா..”
என்று தன்னுடைய தலையில் அடித்துக்கொண்டது...

அதற்கு டாக்டர்... “கருவறையில் இருட்டு... கல்லரையில் இருட்டு இடைப்பட்ட நாட்களில் மட்டும் எதற்கு கரண்ட்” என்ற தத்துவத்தை சொல்லிக் கொண்டே நடையைக்கட்டினார்...

இது உண்மையா இல்லையா தெரியல... நாளைக்கு இப்படியும் நடக்கலாம்..
 
நன்றி..! வணக்கம்...!

10 October, 2012

ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் ஆசிரியர் நியமனத்திற்காக புதிய விதிமுறைகள்..


தமிழக அரசு பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கான புதிய வழிமுறையை பின்பற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் "வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. 
ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு நேர்முகத் தேர்வு அல்லது மீண்டும் போட்டித் தேர்வு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய முறையாக "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்துகிறது.

ஆசிரியர் தகுதி மறுதேர்வு வரும் 14-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசின் இந்த உத்தரவு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, இளநிலைப் பட்டம், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் "வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்படும். அதேபோல், இடைநிலை ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, ஆசிரியர் பட்டயப் படிப்பு, ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் "வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்படும்.

இடைநிலை ஆசிரியர் நியமனத்தைப் பொருத்தவரை உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கு நிலுவையில் இருக்கும் வரை, ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு மாநில அளவிலான பதிவு மூப்பு முறை பின்பற்றப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் 5,451 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், 18,922 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் நிரப்ப தமிழக அரசு முடிவு செய்தது.

அதனடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் மாநில பதிவு மூப்பின் அடிப்படையிலும், ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனமும் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்தத் தேர்வு வெறும் தகுதித் தேர்வு மட்டுமே. ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க புதிய நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதுதொடர்பாக அரசுக்குப் பரிந்துரைக்க உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி தலைமையிலான இந்தக் குழுவில் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் சுர்ஜித் கே.சௌத்ரி, பள்ளிக் கல்வி இயக்குநர் கே.தேவராஜன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

பல்வேறு மாநிலங்களில் பின்பற்றப்படும் ஆசிரியர் தேர்வு நடைமுறையை ஆராய்ந்த பிறகு இந்தக் குழு அரசுக்குப் பரிந்துரை அனுப்பியது.

அந்தப் பரிந்துரையை ஏற்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன் விவரம்:
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு அவர்கள் ஏற்கெனவே பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 100 மதிப்பெண் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக வழங்கப்படும்.

பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 15 மதிப்பெண்ணும், ஆசிரியர் பட்டயத் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 25 மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 60 மதிப்பெண்ணும் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக வழங்கப்படும்.
மொத்தம் 100 மதிப்பெண்ணுக்கு இவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் (உச்ச நீதிமன்ற வழக்கு முடியும்வரை ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும்). நன்றி : கல்வி தகவல்கள்

பட்டதாரி ஆசிரியர்களுக்கு...ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 10 மதிப்பெண்ணும், இளநிலைப் பட்டம், பி.எட். பட்டங்களில் பெற்ற மதிப்பெண்ணுக்கு தலா 15 மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 60 மதிப்பெண்ணும் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஜூலை 12-ல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வை 6.60 லட்சம் பேர் எழுதினர். இவர்களில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

இந்தத் தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கவும், 22 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கவும் அக்டோபர் 14-ம் தேதி ஆசிரியர் தகுதி மறுதேர்வு நடத்தப்படுகிறது.

இந்தத் தேர்வில் மொத்தம் 6.70 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.

வெயிட்டேஜ் மதிப்பெண் பகிர்வு எப்படி?
 
இடைநிலை ஆசிரியர்களுக்கான "வெயிட்டேஜ்' மதிப்பெண் (100):
 
 பிளஸ் 2 தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (15):
90 சதவீதத்துக்கு மேல் ..................- 15 மதிப்பெண்
80 முதல் 90 சதவீதம் வரை.............-12
70 முதல் 80 சதவீதம் வரை.............- 9
60 முதல் 70 சதவீதம் வரை.............- 6
50 முதல் 60 சதவீதம் வரை.............- 3
 
ஆசிரியர் பட்டயத் தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (25)
70 சதவீதத்துக்கு மேல்..................- 25 மதிப்பெண்
50 முதல் 70 சதவீதம் வரை............- 20
 
 ஆசிரியர் தகுதித் தேர்வு (60)
90 சதவீதத்துக்கும் மேல்................- 60 மதிப்பெண்
80 முதல் 90 சதவீதம் வரை............- 54
70 முதல் 80 சதவீதம் வரை............- 48
60 முதல் 70 சதவீதம் வரை............- 42
 
 பட்டதாரி ஆசிரியர்களுக்கான "வெயிட்டேஜ்' மதிப்பெண் (100):
 
 பிளஸ் 2 தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (10)
90 சதவீதத்துக்கு மேல்..................- 10 மதிப்பெண்
80 முதல் 90 சதவீதம் வரை............- 8
70 முதல் 80 சதவீதம் வரை............- 6
60 முதல் 70 சதவீதம் வரை............- 4
50 முதல் 60 சதவீதம் வரை............- 2
 
 இளநிலைப் பட்டப் படிப்பு (15)
70 சதவீதத்துக்கும் மேல்................- 15
50 முதல் 70 சதவீதம் வரை............- 12
50 சதவீதத்துக்கும் கீழே................- 10
 
 பி.எட். படிப்பு (15)
70 சதவீதத்துக்கும் மேல்................- 15
50 முதல் 70 சதவீதம் வரை............- 12
 
 ஆசிரியர் தகுதித் தேர்வு (60)
90 சதவீதத்துக்கும் மேல்................- 60 மதிப்பெண்
80 முதல் 90 சதவீதம் வரை............- 54
70 முதல் 80 சதவீதம் வரை............- 48
60 முதல் 70 சதவீதம் வரை............- 40 
இன்னும் என்னன்ன மாறுதல்கள் வரப்போகுதோ...

இந்தமுறைக்கும் யார்யார் வழக்கு தொடரப்போகுறார்களோ என்று தெரியவில்லை. ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதும் அனைத்து ஆசிரியர்களுக்கும் என்வாழ்த்துக்கள்...

விஜய் -யின் துப்பாக்கி பாடல்கள்... Thuppaki songs Free Download

No.TitleLink

1.Kutti Puli Kootam - Hariharan, Tippu, Narayana, Satyan, Ranina Reddy
Download

2.Antartica - Vijay Prakash,KrishDownload
3.Poi Varavaa - Hemachandran, ChinmayiDownload
4.Google Google - Vijay & AndreaDownload
5.Vennilave - Hariharan,Bombay JayashriDownload
6.Alaikaa Laikaa - Javed Ali, Sayanora Philip, SharmilaDownload
7.Alaikish On Mission - ThemeDownload


அனைத்து பாடல்களும் ஒரே லிங்கில்...

வழக்கம்போல் முதல் பாடல்  தப்பா குத்தாதே என்ற நல்ல குத்துப்பாடலாக வந்திருக்கிறது...
மீதிப்பாடல்கள் விரைவில்..

08 October, 2012

நாட்டில் கோயில்களைவிட கழிப்பறைகளே முக்கியமானவை



முதலில் உங்களிடம் ஒரு கேள்வி...?
எல்லா இடத்தையும் கோவில்களாக பாவிக்கலாம் ஆனால் எல்லா இடத்தையும் கழிவறையாக பாவிக்க முடியுமா..? 

நம் நாட்டில் நடந்துக்கொண்டிருப்பது இதுதான். மக்கள் அனைத்து இடத்தையும் கழிப்பறையாக பயன்படுத்தி வருகிறார்கள். நாட்டில் கோயில்கள் இருக்கும் அளவிற்கு கூட கழிவறைகள் இருப்பதில்லை. கிராம பகுதிகளில் 100 வீடுக்கு கணக்கு எடுத்தால் 1 அல்லது 2 வீடுகளுக்குதான் கழிவறை வசதியுள்ளது. இந்திய மக்களில் 70 சதவீதத்திற்கும் அதிமான மக்கள் போதிய சுகாதர வசதியில்லாமல் தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள்.

“கோயில்களைவிட கழிப்பறைகள்தான் நாட்டுக்கு அதிகம் தேவை” என்று கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மன்னிப்பு கேட்கக்கோரி பல்வேறு கட்சியினர் நேற்று முற்றுகையிட்டுள்ளனர். சுத்தம், சுகாதாரம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான பிரசாரத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது. திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதை தடுத்து கழிப்பறைகள் கட்டும் திட்டத்தை அரசு தயாரித்துள்ளது. 

இது தொடர்பாக மத்திய கிராமப்புற வளர்ச்சித் துறை ஜெய்ராம் ரமேஷ் அண்மையில் கூறுகையில், கோயில்களைவிட கழிப்பறைகள் முக்கியமானவை. போதுமான கழிப்பறைகள் அமைக்கப்படாதது வருத் தம் அளிக்கிறது. கோயில்களைவிட கழிப்பறைகள்தான் நாட்டுக்கு அதிகம் தேவை என்றார். இதற்கு பா.ஜ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

இந்த எதிப்பு அர்த்தமற்றது, முட்டாள்தனமானது.. நானும் பல்வேறு கோயில்களுக்கு சென்றிருக்கிறேன். அனேக கோயில்களில் சரியான சுகாதரவசதிகள் செய்துகொடுப்பதில்லை. மனிதர்கள் சுத்தமாக இருந்தால் தானே அவனுடைய பக்தியும் சுத்தமாக இருக்கும். நான் அறிந்ததில் திருப்பதி தேவஸ்தானம் மட்டுமே ஓரளவுக்கு போதிய கழிப்பறை வசதிகளை செய்துக்கொடுத்திருக்கிறது.

கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு போதிய வசதிகளை செய்துகொடுக்க வில்லை என்றால் எப்படி...? அந்த கோயிலின் சுற்றுப்புறத்தை பாருங்கள் அவ்வளவு படுகேவலமாக இருக்கும். கிராமப்பகுதிகள் என்று எடுத்துக்கொண்டால் கழிவறையாக சாலை ஓரங்கள் விவசாய நிலங்கள், காலிப்பகுதிகள் இவைகளே பயன்படுத்தப்படுகிறது. இவைகளினாலே சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருகிறது. பெருநகரங்கள் பற்றி நான் சொல்லதேவையே இல்லை...
 

கிராமங்கள் தோறும் கழிப்பறை வசதியை அரசு செய்துக்கொடுக்க மானியமாக ரூ. 5000 தருகிறார்கள் அது பயணாளிகளின் கைகளில் வெறும் 3500 அல்லது 4000 மட்டுமே சென்றடைகிறது. ஒரு கழிவறை கட்ட கிட்டதட்ட 10 முதல் 15 ஆயிரம் வரை செலவுபிடிக்கும் என்பதால் கிராமப்புறங்களில் கழிவறைகளை கட்ட மக்கள் ஆர்வம்காட்டுவதில்லை. 

இந்தியாவில் மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், பள்ளிகள், திரையரங்குகள், கடைத்தெருக்கள், சந்தைகள் என எங்கும் பொது கழிப்பறைகளை காணமுடிவதில்லை அப்படி இருந்தாலும் அவைகள் பயன்படுத்தும் நிலையில் இருப்பதில்லை. இந்த அவலம் மாறவேண்டும். தற்போதுகூட உச்சநீதிமன்றம் அனைத்து பள்ளிகளுக்கும் கட்டாயம் கழிவறை வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என அரசுக்கு உத்திரவிட்டது அனைவருக்கு ஞாபகம் இருக்கலாம்.

இந்நிலை மாறவேண்டும். என்னுடைய கருத்தும் இதுதான் ஒரு நாட்டுக்கு கோயில்கள் அவசியம் தான் அதைவிட கழிவறைகளே மிகமிக அவசியம். ஒவ்வொறு மக்களும் சுகாதாரத்துடன் ஆரோக்கியமாக இருந்துவிட்டாலே போதும் அதன் பிறகு பக்திக்கு வேலையிருக்காது.

06 October, 2012

இதில் உங்களுக்கு பிடித்த ஜோடி எது..? சும்மா டைம் பாஸ்

 ஜனங்க இப்படித்தாங்க போய் மாட்டிக்கிட்டு இருக்கு...


 ஏலே... ஐலசா...


 இப்படிக்கு... 
வித்தியாசமாய் யோசிப்போர் சங்கம்...


 குடிநீர் ஊர்வலம்... 
என்ன செய்யறது... இனி தண்ணீர் அடிப்பது மட்டுமல்ல தண்ணீர் எடுப்பதும் ஆண்கள் வேலைதான் போல...


 பெண்களுக்கு உதவி என்றால்..!



இந்த படைபோதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா..!


என்ன ஒரு வில்லத்தனம்....


 அம்மாடி... இன்னிக்கு அபராதம் கட்டதேவையில்லை...



 இந்த ஜோடியில் எந்த  ஜோடி
உங்களுக்கு பிடித்த ஜோடி...

02 October, 2012

ஒரு சாமானியனே போதும் காந்தி எதற்கு..


மகாத்மா காந்தியை பிரிட்டிஷ் நிருபர் ஒருவர் பேட்டி கண்டார். அவர் காந்திஜியை மட்டம் தட்ட விரும்பி அவரிடம் “இந்திய மக்களின் சார்பாக ஆங்கிலேயே அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த உங்கள் மக்கள் உங்களை மட்டும் தேர்ந்தெடுக்க என்ன காரணம்? உங்களைவிட சிறந்த அறிவாளி யாரும் அவர்களுக்கு கிடைக்கவில்லையா..?” என்று கிண்டலாக கேட்டார்.

இதைப்புரிந்து கொண்ட காந்திஜி மெல்ல புன்னகைத்தபடி “உங்களது ஆங்கிலேய அரசை சமாளிக்க மிகப்பெரிய அறிவாளி தேவையில்லை. என்னைப்போன்ற மிகச் சாமான்யனே போதும் என்று என் இந்திய மக்கள் நினைத்திருக்கலாம்...” என்றார்.

காந்திஜி அவர்களின் வாழ்க்கை, அவருடைய நாட்கள், அவருடைய  வார்த்தைகள் அத்தனையும் இன்று வாழும் தலைமுறைக்கு வேதங்கள். இன்று உலகம் இந்தியாபைப்பார்த்து... மிகப்பெரிய வெற்றியின் ரகசியத்தை, அமைதிக்கான வழியை, அனைவரையும் வெல்லக்கூடிய தந்திரத்தை, ஆத்ம சக்தியை கற்றுக்கொண்டுள்ளது அது அஹிம்சை.

கத்தியின்றி ரத்தமின்றி ஒரு யுத்தத்தை இந்த உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தவர் உத்தமர் காந்தி. அவருடைய கொள்கைகள்.. அவருடைய போராட்டங்கள், அவருடைய வழிமுறைகளை உலகம் பின்பற்றிக்கொண்டு வருகிறது.. அதை நாம் மறந்துக்கொண்டு வருகிறோம்...

உத்தமரின் இந்த அவதார நாளில் நாமும் அஹிம்சையை அரவணைப்போம். கத்தியின்றி ரத்தமின்றி இந்தியா வல்லரசாகட்டும்...

01 October, 2012

ஜெயலலிதாவும், விகடனின் வில்லங்கமும்...


வெள்ளிக்கிழமை மாலை அண்ணன் ரஹீம் கசாலி அவர்கள் போன் செய்து தெரியுமா தகவல்..? என்றார்... ஆஹா பதிவுலகில் யாரோ மறுபடியும் சண்டையை ஆரம்பிச்சிட்டங்கைய்யா என்று... என்ன தலைவரே பிரச்சனை என்றேன்... ஏன்னென்றால் பதிவர்கள்கிட்ட இருந்து போன் வந்தாலே  எங்கையோ வில்லங்கமான பதிவு ஒன்று வந்திருக்குன்னு அர்த்தம்.

அதன் பிறகு சொல்லுங்கன்னே.. இங்க 14 மணிநேரம் மின்தடையிருக்கு அதனால ‌நெட்பக்கம் போகலண்ணே என்றேன். அது ஒன்னுமில்லிங்க என்விகடனில் சென்னை  பகுதிக்கான 
வலையோசை-யில் உங்க போட்டோபோட்டு உங்களோட கவிதைவீதியை அறிமுகம் செய்திருக்காங்க என்றார்.. அதைச்சொல்லத்தான் போன் செய்தேன் என்றார்..  அப்படியா..! சரிண்ணே நான் பார்க்கிறேன் என்றேன்.

பிறகு இரவு எட்டுமணிக்கு பார்த்தேன். 
அதில் என்னைப்பற்றிய தகவல்களுடன், கவிதைவீதியில் இருந்து மூன்று பதிவுகளை பகிர்ந்திருந்தனர்.
 

அதில் ஒன்று சமீபத்தில் வீட்டின் சூ‌‌ழலை, ஒரு அண்ணனனின் இயலாமையை, வறுமையை, அவருடைய தவிப்பை மைப்படுத்தி எழுதிய
  என்ற கவிதையை முதலில் போட்டிருந்தார்கள்...!
 

அதன் பிறகு வெற்றி என்பது இறைவனிடம் மட்டுமே இல்லை அது ஒவ்வொருவருடைய நம்பிக்கையில் இருக்கிறது. சில சமயம் அந்த நம்பிக்கை கடவுளாகவும் இருக்கலாம் என்ற அடிப்படையில் ஜென் கதையை மையப்படுத்தி நான் வெளியிட்ட 
என்ற பதிவையும்,

 

இறுதியாக... கடந்த கோடைக்காலத்தில் ஏற்பட்ட தொடர் மின்தடையை மையப்படுத்தி நம்வாழ்க்கை மீண்டும் பின்நோக்கிச் செல்கிறது என்ற 
பாணியில் எழுதிய
 ஒரு கவிதையை பகிர்ந்திருந்தார்கள்..
 
அரசுக்கும்.. முதல்வருக்கும்... மின்சார வாரியத்துக்கும் நக்கல்செய்யும் கடிதம்போல் அமைந்த அந்தபதிவை தற்போது நிலவும் மின்தடையை ஞாபகப்படுத்துவது போல் பகிர்ந்துள்ளார்கள்.


வலையோசையில் என்னை அறிமுகப்படுத்தி, என்பதிவுகளையும் வெளியிட்ட விகடன் குழுவுக்கு என் நன்றிகள்.