தமிழகத்தில் நாளுக்கு நாள் பல்வோறு பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. மின்வெட்டு என்ற பூதத்தை அடக்க என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று தெரிய வில்லை அறிவிப்புகளைத்தவிர. திமுக-வாக இருக்கட்டும் அல்லது அதிமுக-வாக இருக்கட்டும் தான் இருக்கும்போது எந்த வேலையும் செய்யாமல் ஆட்சி மாறியப்பிறகே இது கிழிக்கலாம் அதைக்கிழிக்கலாம் என்று வாய்சவிடால் விட்டுக்கொண்டிருக்கிறார்கள். கடந்த 25 ஆண்டுகளாக இதுதான் நடந்துக்கொண்டிருக்கிறது.
கோவை லோக்சபா தொகுதி அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய தமிழக நிதியமைச்சர், தங்களது கட்சித் தலைவி (அதாங்க அம்மா) பிரதமரானால் தான், இந்த இந்திய நாட்டை காப்பாற்ற முடியும் என, பேசியிருக்காராம்.
என்ன ஒரு வேடிக்கைப்பாருங்க அண்ணாவளைவு எடுத்தது எனக்கு தெரியாது என்று கூறிய ஜெயலலிதா அவர்கள், மின் வெட்டு குறி்த்து துரிதமான எந்த முடிவைவையும் எடுக்காத இவர் இங்கு தமிழகத்தையே காப்பாற்ற முடியாதவர், இந்தியாவை காப்பாற்ற போகிறாராம்; நல்ல வேடிக்கை.
தினமும், 10 முதல் 14 மணி நேரத்திற்கும் மேல் மின் தட்டுப்பாடு உள்ளது. இங்கு சீரான மின்சாரத்தை கொடுத்து, தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லாமல், பிரதமர் பதவி மேல் ஆசைப்படுகின்றனர். தேர்தலில் சொன்ன வாக்குறுதியை மறந்து விட்டனர். மின்தடையால் போராட்டம், உண்ணாவிரதம், மறியல், மனிதச் சங்கிலி, பந்த் என, பொது மக்களும், தொழில் துறையினரும் அல்லாடிக் கொண்டிருக்க, ஆளும் கட்சியோ, பதவி பற்றி ஊர் ஊராக செயல் வீரர்கள் கூட்டம் நடத்துகிறது.
கர்நாடகாவில் உற்பத்தியாகும் காவிரி நீர், கர்நாடகாவுக்கே சொந்தம் என்று, காங்கிரஸ் கட்சி மத்திய அமைச்சர் ஒருவர், தமிழகத்துக்கு தண்ணீர் தரும்படியான உத்தரவை நிறுத்தி வைக்கும்படி, பிரதமருக்கு கோரிக்கை விடுக்கிறார். ஆனால் தமிழகத்தை சார்ந்த காங்கிரஸ் அமைச்சர்களோ, 13 ஆண்டுகளாக, மத்திய அரசில் அமைச்சர் பதவி சுகம் அனுபவித்து வரும் தி.மு.க., அமைச்சர்களோ, வாயே திறக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
மத்திய அரசில் பதவி சுகம் காணும், தி.மு.க., தன் ஆட்சிக் காலத்திலேயே, மின்சார பற்றாக்குறையை போக்க, எந்த விதமான முயற்சிகளையும் எடுக்காமல், தொழிற்சாலைகளுக்கு வார விடுமுறை, வீடுகளுக்கு மின்வெட்டு என்ற நிலை இருந்ததோடு, மின்வாரியத்திற்கும் கோடிக்கணக்கில் கடன் வைத்து விட்டனர்.
ஆனால் இன்று, மின்வெட்டு தொடர்பாக போராட்டம், மறியல், துண்டு பிரசுரம் கொடுத்து, நல்லவர்கள் போல வேஷம் போடுகின்றனர்.போர்க்கால அடிப்படையில் கவனம் செலுத்தி, சீரான மின்சாரத்தை வழங்க, தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுத்து, தமிழக மக்களை காப்பாற்ற, ஆளுங்கட்சி முன்வர வேண்டும்.
எதிர்கால கொள்கைகள், தெலைநோக்கு பார்வை என்ற அனுகுமுறையில்லாமல் வெறும் ஆட்சி அதிகாரத்தை மட்டுமே கொள்கையாக வைத்துக்கொண்டு செயல்படும் இந்த திராவிட கட்சிகளை நாம் என்னவென்று சொல்வதோ...?