கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

18 September, 2012

யாரிடமும் சொல்லமுடியாத என் தவிப்பு...!
செய்வதாகச் செல்லி
குறையாக விட்ட
சீர்செனத்திக்காக
அழுதுவிட்டுப்போன தங்கை...!

ன்னும் எவ்வளவு காலம்
கொடுத்துக்கொண்டே இருப்பீர்கள்..?
அழுது வடியும் மனைவி...!

கனிடம் கேட்கலாமா வேண்டாமா
என் இயலாமையை அறிந்து
மனதுக்குள்ளே கலங்கும் அம்மா...

கொடுக்கவும் முடியாமல்
மறுக்கவும் முடியாமல்
தவிக்கும் என் தவிப்பை
யாரிடம் சொல்லி அழ...கவிதைகள்... வாழ்வின் பதிவுகள்...

18 comments:

 1. வலிகளுடன் சுமந்த அந்த படமும் , கவிதையும் மிக அற்புதம் வாழ்த்துக்கள் அண்ணே

  ReplyDelete
 2. கொடுக்க அன்பிருக்க தவிப்பும் ஏனோ ?

  ReplyDelete
 3. நடைமுறை வாழ்வின் உண்மைகள்...

  பிரியமானவர்களிடம் பகிர்ந்து கொண்டு விட்டால் (விட்டதால்) தவிப்பு குறைந்து விடும்...

  ReplyDelete
 4. கவிதைக்கு படம் இன்னும் வலு சேர்க்கிறது..

  ReplyDelete
 5. அப்பட்டமான உண்மை

  விழி பிதுங்கி ஒரு அண்ணன்

  ReplyDelete
 6. அழகான கவிதை சார்.....
  உண்மையில் பலருடைய உள்ளக்குமுறல்கள் இவ்வாறுதான்

  ReplyDelete
 7. கொடுக்கவும் முடியாமல்
  மறுக்கவும் முடியாமல்
  தவிக்கும் என் தவிப்பை
  யாரிடம் சொல்லி அழ...

  அருமையா உண்மையான வாரிகள் நண்பா

  ReplyDelete
 8. உங்கள் கவிதை வரிகள் அனைத்தும் அருமை நண்பரே...

  என் தளத்தில் காதலில் என் கால் தடம்
  http://yayathin.blogspot.in/2012/09/blog-post_17.html

  ReplyDelete
 9. நிச்சயமாக கவிதைகள் வாழ்வின் பதிவுகள்தான்
  குறிப்பாக இந்தக் கவிதை
  மனம் தொட்ட பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. இதுதானே வாழ்க்கை ஐயா?

  ReplyDelete
 11. அன்பின் சௌந்தர் - இயல்பான வாழ்க்கையில் தவிர்க்க இயலாத நிக்ழ்வுகள் இவை. நாம் இவைகளுடன் வாழப் பழகி விட்டோம். என்ன செய்வது .......சிந்தனை நன்று - கவிதை அருமை - படமும் அருமை - -நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 12. பொருளா ? தாராமா
  எனும் போது
  புலம்பல் நிச்சயம்

  ReplyDelete
 13. அதுவும் நடுத்தர வர்க்கத்திற்கு

  ReplyDelete
 14. அன்பின் சௌந்தர் - என் விகடனில் பிரசுரிக்கப் பட்டதற்கு பாராட்டுகள் நல்வாழ்த்துக்ள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 15. ungal kuraikal theera kadahulidam vendikkollkiren

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...