31 December, 2013

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது...


இனிய பதிவுலக நண்பர்களுக்கும்...
வாசக பெருமக்களுக்கும்...
என் கனிவான 
புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.....

2014-ல் நீங்கள் எல்லா வளமும்
எல்லா புகழும் பெற்று
இன்று போல் என்று வாழ்க 
என வாழ்த்துகிறேன்... 

30 December, 2013

இப்படி சொன்னால் விரல்கள் கூட சிரிக்கும்



வெறுங்கையை வைத்துக்கொண்டு
நான் என்னதான் செய்ய..!

என்னிடம் எதுவும் இல்லை
உருப்படியாய் பயன்படுத்த..!

ஏதாவது என்னிடம் இருந்திருந்தால்
கண்டிப்பாய் முன்னேறியிருப்பேன்...!

நம்ம கையில ஒன்னுமில்லை
எல்லாம் அவன் கையில்...!

இப்படியாய்..
கையை பிசைந்துக்கொண்டிருந்தவனை
பார்த்து சிரித்தன விரல்கள்...!


*****************************



வயிற்றில் கவ்விய தன்குட்டியை
பவ்வியமாக பற்றிக்கொண்டிருக்கிறது குரங்கு...!

ஈன்றெடுத்த ஆறு குட்டிகளுக்கு
படுத்து பாலுட்டிக்கொண்டிருக்கிறது நாய் ஒன்று..!

தேடிபிடித்த சில புழுக்களை அலகால்
குஞ்சுகளுக்கு ஊட்டுகிறது குருவி..!

ஆனந்தாய் முட்டி முட்டி பால்குடிக்கிறது
தன் தாயிடம் பசுங்கன்று...!

இவைகளையெல்லாம் ஏக்கமாய்
பார்த்துக்கொண்டிருக்கிறது தெருவோர குழந்தை...!

*****************************
 தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...!

27 December, 2013

தமிழ் சினிமா 2013-ன் சிறந்த 10 படங்கள் / Top 10 Tamil Movies in 2013


2013-ல் தமிழ் சினிமா பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்திருக்கிறது.. இதில் சிலப்படங்கள் அதிக எதிர்பார்த்து ஆனால் சரியா ஓடாமல் இருந்தது சிலப்படங்கள் எதிர்பார்க்காமல் சக்கைப்போடு போட்டது...

வரிசைப்படுத்துதல் விரிவாக இல்லாமல் எளிமையாக படங்களை பெயர்களை மட்டும் தேர்வு செய்திருக்கிறேன்... இது என் பார்வையில் அவ்வளவுதான்..

2013-ல் கலக்கிய வசூலிலும்... எதிர்பார்ப்பிலும் சக்கைப்போடு போட்ட படங்களை சூப்பர் ஹிட் படங்களாக தெரிவு செய்துள்ளேன்.

சிறந்த10 சூப்பர் ஹிட் திரைப்படங்கள்...
-----------------------------------------
1. விஸ்வரூபம்
2. சிங்கம் 2
3. வருத்தப்படாத வாலிபர் சங்கம்
4. ராஜா ராணி
5. ஆரம்பம்
6. பாண்டிய நாடு
7. எதிர்நீச்சல்
8. சூது கவ்வும்
9. கண்ணா லட்டு தின்ன ஆசையா
10. தீயாவேலை செய்யனும் குமாரு



2013-ல் கதையில், வித்தியாசத்தில், சிறந்த இயக்கத்தில், சிறந்த நடிப்பில் என பல படங்கள் வந்தது.. அவைகள் சரியாக போகவில்லை என்றாலும்.. தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்டன.... அவைகளின் பட்டியல்....


2013-ல் வெளிவந்த தரமான படங்கள்
--------------------------------------

 

1. ஹரிதாஸ்
2. தங்க மீன்கள்
3. பரதேசி
4. மரியான்
5. ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
6. மூடர் கூடம்
7. சென்னையில் ஒரு நாள்
8. விடியும்முன்
9. இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
10. இவன்வேற மாதிரி

2013-ல் மிகுந்த எதிர்பார்ப்போது வந்து ஆனால் மக்களின் ரசனைக்கு ஒத்துவராத படங்கள் நிறைய இருந்தது... அதில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்து மொக்கையான படங்களை மொக்கை படங்கள் என வரிசைப்படுத்தியுள்ளேன்.

2013-ல் வெளிவந்து மொக்கையாகியப் படங்கள்
-----------------------------------------------

 

1. அழகுராஜா
2. தலைவா
3. இரண்டாம் உலகம்
4. நய்யாண்டி
5. அலெகஸ் பாண்டியன்
6. கடல்
7. ஆதிபகவான்
8. அன்னக்கொடி
9. சேட்டை
10.
வணக்கம் சென்னை



இந்த வரிசையில் ஏதாவது மாற்றம் செய்யலாமா?

26 December, 2013

இந்த குழந்தைகளுக்கு எதுவும் தெரியாதா...?



ங்கி வளர்ந்த
அழகிய சோலையை
அழித்து விட்டதாக கர்ஜித்தது
புயல்...!

விழுந்து விழுந்து
சிரித்துக் கொண்டிருக்கின்றன
மண்ணைத் தொட்ட
விதைகள்..!

************************************




ரெங்கும் உச்சத்தில் இருந்தது
சாதிக்கலவரம்...

வீதியெங்கும் ஓடித்தெளிகின்றன
ஆரறிவு மனிதனின் இரத்த ஆறுகள்...

எதையும் அறியாமல் விளையாடிக்கொண்டிருந்தன
இருசாதி குழந்தைகளும்..!

***********************************




நான் தடையேதும் சொல்லாமல்
ரசித்துக்கொண்டு இருந்தேன்...

ஒன்றும் அறியாத குழந்தை
என் கவிதை தாள்களை
கிழிக்கும் அழகை...!
************************************
என் முகநூலிலிருந்து...
வாசித்தமைக்கு மிக்க நன்றி..!!

24 December, 2013

இந்த சம்பவம் கூட எம்.ஜி.ஆர். வாழ்வில் நடந்ததுதான்..

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த சமயம் ,

ஒரு நாள் அலுவல்கள் முடிந்து வந்த அவர் இரவு 11 மணிக்கு ராமபுரத் தோட்டத்தில், நாயை உடன் அழைத்துக்கொண்டு தோட்டத்தில் சுற்றி வந்தார் . அப்போது தூங்கிக் கொண்டிருந்த வேலைக்காரரின் 5 வயது சிறுவனை எழுப்பி, அவனிடம்

" பள்ளிக்கூடம் போனயா ?"
" போனேன் "
" சாப்பிட்டாயா ?"
"ம்... சாப்பிட்டேன் "
"என்ன சாப்பிட்ட கண்ணா ?"
 
சிறுவன் தான் சாப்பிட்டதை எல்லாம் ஒப்புவிக்கிறான். சிறுவனுக்கு முத்தம் தந்துவிட்டு அவனை தூங்க சொல்கிறார் மக்கள் திலகம் .

தோட்டத்தை சுற்றி முடித்த பின் , தன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சமையல் காரர் மணியை எழுப்பி, " டேய் மணி , நீ இங்கு வேலை செய்ய வேண்டாம் . கிளம்பு " சமையல் காரர் காரணம் எதுவும் கேட்கவில்லை. கேட்டால் அடிவிழும். மணியும் அந்நேரத்தில் வெளியே கிளம்பிவிடுகிறார். அவருக்கு காரணம் எதுவும் புரியவில்லை. ஆனால் மணிக்கு தெரிந்திருந்தது, தலைவரின் கோபம் சற்று நிமிடத்திற்கு தான்.

தினமும் தலைவர் வெளியே கிளம்பும்போது, மணி நிற்பார். எம்.ஜி.ஆர் முகத்தை திருப்பி கொள்வார். இப்படியே மூன்று மாதங்கள் ஓடின

எம்.ஜி.ஆர் கண்டுகொண்டபாடில்லை. ஆனால் சம்பளம் மட்டும் அவர் வீட்டுக்கு சென்றுவிடும். ஒருநாள் ஆனது ஆகட்டும் என்று நேரே அவர் இடத்திற்கு சென்று தலைவர் காலில் விழுந்துவிட்டார் மணி. "அண்ணே நான் என்ன தப்பு செஞ்சேன்னு எனக்கே தெரில . என் மீது கோபம் ன்னா நாலு அடி கூட அடிச்சிருங்கண்ணே." என்றார்.

எம்.ஜி.ஆர் புன்னகையுடன், மணியிடம் "டேய் மணி, நான் உன்கிட்ட என்ன சொல்லியிருக்கேன், நான் சாப்பிடறது தான் வேலைக்காரர்களும் சாப்பிடனும் எந்த பாகுபாடும் இருக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன், ஆனா அந்த பையனுக்கு ஏன் நான் சாப்பிட்ட மீனை வைக்கல? "

மணிக்கு ஒன்று புரியல. எப்போ தலைவர் மீன் சாப்பிட்டார், நாம எப்போ அதை மறந்தோம் ன்னு எதுவும் நினைவில் இல்லை. இருந்தாலும் சமாளிப்பதற்கு "அண்ணே மன்னிச்சிடுங்கண்ணே. வேலை இருந்ததால அதை மட்டும் மறந்திருப்பேன், என்ன மீண்டும் இங்க வேலை செய்ய விடுங்கண்ணே" என்று கேட்டுக்கொண்டார்.
 
"சரி போய் வேலையை செய். திரும்பவும் இந்த மாதிரி தவறு இருக்க கூடாது" - தலைவர் உத்தரவிட்டுவிட்டார். மணிக்கு ஏக சந்தோஷம்

மணி மீண்டும் வேலைக்கு சேர்ந்த விதம் இன்னும் சுவாரஸ்யம். மணி வெளியே அனுப்பிவிட்டு, தன் உதவியாளரிடம் எம்.ஜி.ஆர், "அந்த சமையல்காரர் மணியை கோபத்துல வெளிய அனுப்பிட்டேன். அவனை தினமும் நம் தோட்டத்து கேட் அருகே நான் புறப்படும்போது நிற்க சொல்லு" என்று உத்தரவிடுகிறார்.

அதன்படி தான் மணியும் நின்றார். தலைவர் காரில் புறப்படும்போது, மணி எம்.ஜி.ஆரை பார்த்து வணங்குவார். உடனே தலைவர் சட்டென முகத்தை திருப்பிகொள்வார் அதான் கோபமாம். இப்படி மூன்று மாதங்கள் தன் கோப நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் புரட்சி தலைவர். அதன் பின் தான் மணியை வீட்டுக்கு வரச்சொல்லி வேலைக்குசேர்த்துள்ளார் தலைவர்

இது என்ன மாதிரியான சாமார்த்தியம், மனிதநேயம் என்றே கணிக்க முடியவில்லை. இவருக்கு பொன்மனச்செம்மல் என்ற பட்டத்தை வாரியார் ஒப்புக்கு தந்துவிடவில்லை என்பதை இந்த நிகழ்விலேயே அறியலாம் . (எம்.ஜி.ஆரின் வாழ்க்கை குறிப்புகளிலிருந்து)

***********************
அது எப்படி...
இன்று வரை நீ
ஏழைகளின் தலைவனாகவே
இருக்கிறாய்...
தலைவா...!

23 December, 2013

2013 -ல் கலக்கிய நான் ரசித்த 10 பாடல்கள்.. வீடியோ இணைப்பு

2013-ல் மக்களால் அதிகம் ரசிக்கப்பட்ட ஹிட் பாடல்கள்... நான் அறிந்த வரையில்...

விஸ்வரூபம்... உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே..
 

வருத்தப்படாத வாலிபர் சங்கம்... இந்த பொண்ணுங்களே...
 

பாண்டியநாடு... ஒத்தக்கடை.. ஒத்தக்கடை பையன்
 

சூது கவ்வும்... காசு... பணம்.. துட்டு.. மணி..மணி..
 


சிங்கம்-2... சிங்கம் டான்ஸ்
 

ஆரம்பம்... முடியாதுன்னு சொல்ல முடியாது...
 

கண்ணா லட்டு தின்ன ஆசையா.... க..ல..தி...ஆசையா

நேரம்... பிஸ்தா சமாய்கிறாயா
 

தலைவா... வாங்கண்ணா வணக்கம்ன்னா



பட்டத்து யானை... என்னஒரு என்ன ஒரு அழகியடா..

இவர் மனைவி எவ்வளவு நல்லவங்க பாருங்க



ஓர் ஊரில் பெரியவர் ஒருவர் வாழ்ந்தார். அவருக்கு நிறைய சீடர்கள். இவர்கள் அனைவரும் பெரியவர் மீது அன்பைப் பொழிந்தனர். அவருக்காக எதையும் செய்யத் தயாராக இருந்தனர். பெரியவரது உலக வாழ்க்கை நிறைவு பெறும் நேரம் வந்தது. அவரைத் தேடி வந்த கடவுளின் தூதர், "ஐயா! உங்களை அழைத்துப் போக வந்திருக்கிறேன்! என்றார். சீடர்கள் துடித்துப் போனாரகள்.

இன்னும் சிறிது காலம் அவரை இந்த உலகத்திலேயே இருக்க விடுங்களேன்! என்று கடவுளின் தூதரிடம் மன்றாடினர். இந்த உலகத்தில் அவர் வாழ வேண்டிய காலம் முடிந்து விட்டதே! என்றார் கடவுளின் தூதர். "வேறு வழி இல்லையா? என்று குரலில் சோகம் ததும்பக் கேட்டனர் சீடர்கள். ஒரே ஒரு வழிதான் உள்ளது! என்றார் தூதர். என்ன வழி? தயவு செய்து சொல்லுங்கள்! ஆர்வத்துடன் கேட்டனர் சீடர்கள்.

அவருக்காகக் கொஞ்சம் தியாகம் செய்ய நீங்கள் முன்வர வேண்டும்! என்றார் தூதர். உடனே பெரியவருக்காக எங்கள் உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறோம்! என்றனர் சீடர்கள். இதைக் கேட்ட தூதர், உயிர் வேண்டாம்,. உங்கள் வாழ்நாளில் ஆளுக்குக் கொஞ்சம் இவருக்குக் கொடுத்தால்... அதை இவரது ஆயுள் கணக்கில் வரவு வைத்து விடலாம்! என்றார்.

முதலில் ஒருவன் வந்தான். என் ஆயுளில் இரண்டு வருடத்தைத் தருகிறேன்! என்றான். இன்னொருவன், ஒரு வருடம் தருகிறேன்! என்றான். மூன்றாவதாக ஒருவன், ஒரு மாதம்! என்றான். எதையுமே செலவு செய்து பழக்கமில்லாத ஒருவன் எனது ஆயுளில் ஒரு நிமிட நேரத்தை இவருக்காகத் தருகிறேன்! என்றான்.

கடைசியாக வந்த ஒருவன் சொன்னான். இருபது வருடங்களை எடுத்துக் கொள்ளுங்கள்! இதைக் கேட்ட கடவுளின் தூதருக்கு ஆச்சர்யம். இது ரொம்ப அதிகம் இல்லையா? என்று கேட்டார். உடனே அந்த ஆசாமி சொன்னான். ""நான் சொன்ன இருபது வருடங்கள் என் மனைவியின் வயதிலிருந்து!”
+++++++++++++++++
 

21 December, 2013

ஜில்லா, வீரம் MP3 பாடல்கள்.... Jilla, Veeram Mp3 Songs Download Links


ஜில்லா பாடல்களை பதிவிரக்கம் செய்ய....
கீழே உள்ள லிங்‌கை கிளிக் செய்யவும்...!
Jilla Mp3 Songs

*************************

வீரம் படத்தின் பாடல்கள்...
Veeram Mp3 Songs

 Ival_Dhaana.mp3
- Sagar, Shreya Ghoshal

 Jing_Chakkan.mp3
- Pushpavanam Kuppusamy, Magizhini Manimaran

 Nallavannu_Solvaanga.mp3
- Devi Sri Prasad

 Thangame_Thangame.mp3
- Adnan Sami, Priyadarshini

 Veeram.mp3
- Anand, Koushik, Deepak, Jagadish

இந்த ஆண்டின் பிரம்மாண்ட Top 5 மொக்கைப் படங்கள்

2013 தமிழ் சினிமா உலகம் பல்வேறு நெளிவு சுளிவுகளை சந்தித்திருக்கிறது... கதையம்சமுள்ள பல்வேறு படங்கள் வந்தாலும் மக்கள் அதையெல்லாம் விரும்பாமல் பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்களையும், பெரிய இயக்குனர் இய்ககும் படத்திற்காகவும் காத்திருப்பார்கள்...

அப்படி பெரிய இயக்குனர்கள் இயக்கி அல்லது பெரிய மாஸ் ஹீரோக்கள் நடித்து படம் வெளிவரும்போது அவை சரியில்லையெனில் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் செமத்தையாக வாங்கிக்கட்டிக் கொள்கிறார்கள்...


எதிர்ப்பார்ப்பு இல்லாது வெளிவரும் படங்கள் சரியில்லை ‌என்றாலோ அல்லது சரியாக ஓடவில்லையென்றாலோ ரசிகர்களுக்கு கோவம் வருவதில்லை.. ஆனால் எதிர்பார்த்த படங்கள்.. அல்லது அதிக பில்டப் கொடுத்த படங்கள் சரியில்லையின்றால் கோவப்படவைத்து விடுகிறது...

அப்படி 2013-ல் அதிக எதிர்பார்ப்போடும் அதிக பில்டப் கொடுத்து வெளிவந்த நிறையப் படங்கள் வந்த வேகத்தில் நடையை கட்டியிருக்கிறது... அப்படி அதிகம் எதிர்பார்த்து ஊத்திக்கொண்ட (Top 5) ‌ஐந்துப் படங்களைத்தான் நான் இங்கு பதிவிட்டிருக்கிறேன்..

1. அழகுராஜா...


ஓவர் பில்டப் கொடுத்த படம்.. ராஜேஷ் படங்கள் என்றாலே சிறந்த காமெடிப்படங்கள் தான்... ஆனால் ஏன்னென்று தெரியவில்லை... இந்த படத்தில் அப்படி சொதப்பியிருக்கிறார்.... கார்த்தி-க்கு 2013 போராத காலம் போல செமத்தியாக வாங்கிக்கட்டிக்கொண்டார்...

அழகுராஜா படத்துக்கு ஒருத்தர் கூட நல்லதொரு விமர்சனம் எழுதவில்லை.. அந்த வகையில் 2013-ன் சிறந்த மொக்கைப்படம் என்ற பெருமையை  இந்த படம் தட்டிச்சென்றுவிட்டது.

2. தலைவா
முதலில் தலைப்பு பிரச்சனை.. அதன்பிறகு வெளியிடுவதில் பிரச்சனை... அப்படி இப்படி என ஏகப்பட்ட கெடுபிடிகளுடன் வெளிவந்தப்படம்... மற்றமொழிகளில் வெளியாகி அதன்பிறகுதான் தமிழில் வெளியானது..

மிகுந்த எதிர்பார்ப்புக்கு பிறகு படத்தை பார்த்தால் இதற்கா இவ்வளவு பிரச்சனை என்று சொல்லவைத்தது... படம் எங்கும் ஓடவில்லை என்றாலும் தியாட்டரை வாடகை எடுத்து 100 நாட்கள் ஓடவைத்துவிட்டார்கள்...

3. இரண்டாம் உலகம்
செல்வராகவன்... ஏதோ ஹாலிவுட் ரேஞ்சில் ஒரு புதுமையான படத்தை தரப்போகிறார் என்று காத்திருந்ததில் மொக்கை வாங்கியதுதான் மிச்சம்.. வித்தியாசமில்லாத கதை... புதுமையில்லாத காட்சி அமைப்பு... விறுவிறுப்பு இல்லாத காட்சி அமைப்பு இதெல்லாம் இந்தப்படத்தை சரியாக கொண்டுசேர்க்கவில்லை...

4. கடல்

மணிரத்தினம் என்ற பிரமாண்ட இயக்குனர் என்ற எதிர்பார்ப்பில் வந்த தடம்கூட தெரியால் ஓடிவிட்டபடம்..

5. நய்யாண்டி

ஏன்டா படத்துக்கு போனோம் என்று நினைத்து நினைத்து அழவைத்தப்படம்... தேசிய விருதுபெற்ற இயக்குனரும்... தேசிய விருதுபெற்ற நடிகரும் இணைகிறார்களே ஏதோ வித்தியாசமான படமாக இருக்கும் என்று போனால் கடி வாங்கிவந்ததுதான் மிச்சம்...

மெக்கை பட பட்டியலில் வராத அடுத்த 5 படங்கள்.. 

1. அலெக்ஸ் பாண்டியன்
2. ஆதிபகவான்
3. ஐந்து ஐந்து ஐந்து
4. சேட்டை
5. பட்டத்துயானை

இன்னும் நிறை படங்கள் அதிக எதிர்பார்ப்பில் வந்து தோல்வி அடைந்த படங்கள் இருந்தாலும் இவைகளே பிரதானமானவைகள்...

20 December, 2013

பிரியாணி சினிமா விமர்சனம் / briyani movie review

ஒரு சினிமா ரசிகனை கவர பல்வேறு வியூகங்களை அமைத்து செயல்படுகிறது. கதை, திரைக்கதை, இசை, வடிவமைப்பு, புதுமை என எதையாவது வித்தியாசப்படுத்தினால்தான் இந்த மண்ணில் அந்த சினிமா நிலைக்கமுடியும்... இன்று வரை அப்படிப்பட்ட சினிமாக்களைதான் மக்கள் கொண்டாடிவருகின்றனர்.. 

இப்படி ஏதாவது ஒரு வித்தியாசம் அல்லது புதுமை ஏதும் இல்லாத எத்தனையோ பெரிய பட்ஜெட் படங்கள் கூட குப்பைக்குச் சென்றிருக்கிறது. படம் எடுக்கும் அத்தனை இயக்குனர்களும் இதை மனதில் நிறுத்துவதுமட்டுமின்றி அதை செயலிலும் காட்டினால் நல்ல படைப்பாளியாக இங்கு வெற்றி கொடி நாட்டலாம்...

பிரியாணி....

ஒரு படத்தின் தலைப்பு அந்த படத்தின் கதை அல்லது கதாநாயகன் அல்லது கதாநாயகி பெயரிலோ அல்லது ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்தோ அல்லது கேட்டவுடன் கவரும் வகையிலோதான் அமைக்கப்படுகிறது... இந்தபடத்தின் தலைப்பு ரசிகர்களை கவரவே...!

படத்தின் கதை...

ஒரு செல்வந்தரின் மகளை காதலித்து அந்த சொத்தை அடைய நினைக்கிறது ஒரு கும்பல். அந்த செல்வந்தர் மறுக்கவே அவரை கொலைசெய்து அந்த சொத்துக்களை அடைய நினைக்கிறது...

இப்படி கொலைச்செய்யப்படும் செல்வந்தரின் கொலையில் அப்பாவிக்கள் இருவரும் மாட்டிக்கொள்கிறார்கள்... மாட்டிய இவர்கள் இந்த கொலையில் இருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் கதை...

கதை‌யொன்றும் புதிதில்லை.. அதலபழசுதான்.. ஆனால் திரைக்கதை சபாஷ் போடவைக்கிறது.. யூகிக்கமுடியாத காட்சி நகர்வு... விருவிருப்பான திரைக்கதை... என படத்தின் முடிவுவரை ஒரு ரசிகனை பொறுமையாக அமரவைத்ததில் கைதட்டல் வாங்கிறார்.. வெங்கட் பிரபு...

கதைப்படி கார்த்தியும் பிரேமும் நெருங்கிய நண்பர்கள்... இருவருக்கும் வேலை பெண்களை சுற்றிவருவதுதான்... ஒரு டிராக்டர் நிறுவனத்தில் சேல்ஸ் பிரிவில் வேலை செய்யும் இவர்கள் தங்கள் இடத்தில்  பிளேபாயாக வலம்வருகிறார்கள்...

 

கார்த்தியும் பிரேம்ஜியும் ஆம்பூரில் நடக்கும் நிறுவனத்தின் ஷோரூம் கிளை திறப்புவிழாவுக்கு வருகிறார்கள். அந்த நி‌கழ்வில் தன்னுடைய துடிப்பான நடவடிக்கையால் அந்த நிறுவனத்தை துவக்கிவைக்க வரும் நெம்பர் ஒன் செல்வந்தர் நாசருக்கு கார்த்திகை பிடித்துவிடுகிறது... (தன் பெண்ணை மணமுடிக்கலாம் என்று எண்ணும் அளவுக்கு)

இதற்கிடையில் ஆம்பூரில் இருந்து சென்னை கிளம்பு வழியில் ஆம்பூரில் பிரியாணி சாப்பிட்டே ஆகவேண்டும் என்று தேடி அலைந்து ஒரு கடையில் பிரியாணி சாப்பிடுகிறார்கள்... அங்கு பிரியாணி சாப்பிட வரும் மாண்டி தாக்கா-வின் (மாயா) அழகில் மயங்கி அவ‌ரை பின்தொடர்ந்து அவருக்கு உதவிசெய்து அவருடைய ரூமுக்கே சென்று குடித்து கும்மாளமடிக்கிறார்கள்...

விடிந்து தெளிந்து பார்த்தபின்தான் தெரிகிறது... அங்கு ஒரு கொலை நடந்திருப்பது.. அதுவும் கொலைசெய்யப்பட்டிருப்பது நாசர் தான்... இந்த கொலையில் கார்த்தியும் பிரேமும் தேவையில்லாமல் மாட்டிக்கொள்கிறார்கள்...

இந்த கொலையில் இருந்து எப்படி தன்னை காப்பாற்றிக்கொள்கிறார்.. இந்த கொலையில் உண்மையான பிண்ணனி என்ன... அவர்களை எப்படி கண்டுபிடிக்கிறார்... என்பதுதான் பிரியாணியின் மீதிக்கதை...

கார்த்தி....

கார்த்தி இந்த படத்தில் ப்ளேபாய் வேடம்... இதற்கு முன்னால் படங்களில் பார்த்தமாதிரியே இருக்கிறது. முதல்பாதில் பெண்களிடம் வழியும் இவர்... இடைவேளைக்குபிறகு ஓரளவுக்கு தன்னுடைய திறைமையை வெளிப்படுத்தியிருக்கிறார்...

சிறுவயதுமுதல் தற்போது வரை தான் செய்யும் தவறுகளுக்கு பிரேம்ஜியை மாட்டிவிடுவது இவருடைய வேலையாக இருக்கிறது... பெண்களை நம்பவைக்க இவர் செய்யும் சேட்டைகள் ‌கொஞ்சம் ரசிக்க வைத்து கொஞ்சம் முகம்சுழிக்க வைக்கிறது..

கார் சேசிங்... வில்லன்களை விரட்டுவது... தன்னுடைய அக்கா கடத்தப்படும்போது துடிப்பது.. தன்மீது விழுந்த கொலை பழியை தீர்க்க குற்றவாளிகளை கண்டுபிடிக்க முனைவது... சண்டைகாட்சிகள் என ஒரு சில இடங்களில் தன் திறமையை காட்டி அசத்துகிறார்... (ஆனால் பழைய படத்தின் சாயல் அங்கங்கு வருகிறது).

ஹன்சிகா மேத்வானி... ஒரு டிவி தொகுப்பாளர்.. நேரடிக்காட்சிகளை தொகுத்து வழங்குபவர்... கார்த்தியின் காதலி... இவருக்கு படத்தின் அதிக வேலையில்லை... கார்த்தியிடம் கோபித்துகொள்வது மீண்டும் இணைவது தான் இவருடைய வேலை...

பிரேம் ஜி... என்ன கொடுமை இது... படம் முழுக்க வந்தாலும் ஏதோ ஒருசில சீன்களில்தால் சிரிக்க வைக்கிறார்... அண்ணன் இயக்குனர் என்பதால் ஒட்டிக்கொண்டாரா.. என்னவோ தெரியவில்லை... தனக்கு ஒரு பெண்ணுகூட கிடைக்கமாட்டேங்குது என்று ஏங்கும்போதம் தனக்கு கிடைக்கும் பெண்களை கார்த்தி கவர்ந்துவிடுவதும்... கார்த்தி செயும் தவறுகளுக்கு தான் பலியாடாகுவதும் ரசிக்க வைக்கிறது...

நாசர்... ஒரு பெரிய செல்வந்தராக நடித்திருக்கிறார்... தனக்கு எந்த கதாப்பாத்திரம் கெர்டுத்தாலும் அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளும் திறன்மிகுந்த நடிகர்களில் இவரும் ஒருவர்... இவர்தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்...

ராம்கி.. நாசரின் மருமகன்... சபாஷ்... வில்லன்போல் ‌தெரிந்தாலும் வில்லனில்லாத கேரட்டர்... இப்படம் கண்டிப்பாக அவருக்கு நிறைய வாய்ப்புளை பெற்றுதரும் என்பதில் சந்தேகமில்லை.. நல்லதொரு நடிப்பு..  கார்த்தியுடன் வரும் ஒரு சண்டைகாட்சி நன்றாகவே வந்திருக்கிறது.

மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை உமா ரியாஸ்கான்... கடைசி அரைமணிநேர படத்தை தனதாக்கிவிட்டார்... வில்லி கேரட்டர்... கார்த்தியுடன் ஒரு சண்டைக்காட்சியில் அசத்தல்.. நல்லதொரு நடிப்பை கொடுத்திருக்கிறார்...

மேலும் படத்தில் கார்த்தியின் மாமாவாக சுப்பு பஞ்சு.. போலீஸ் ஆபிராக ஜெயபிரகாஷ், சிபிஐ-யாக சம்பத், என நிறைய நடிகர் பட்டாளம் படத்தில் இருக்கிறது...

யுவன்சங்கர் ராஜா இந்த படத்துக்கு இசை... அவ்வளவு ஒன்றும் பிரமாதம் இல்லை... ஓரளவுக்கு பரவாயில்லை.... 100-வது படம் என்ற பெருமையை தக்கவைக்க பாடலுக்கு அதிக சிரமப்பட்டிருக்கிறார்... பிண்ணனி இசை பராயில்லை... புரியும்படியான பாடல்கள் இல்லாதது தோய்வுதான்...

பாடல்கள் சுமார்... இரண்டு பாடல்கள் செம கிளாமர்... மாண்டி தாக்கா கவர்ச்சியில் கலக்கியிருக்கிறார்.. அரைமணிநேரம் மக்களை கவர்ச்சி வெள்ளத்தில் மூழ்கடிக்கிறார்... படம் முழுக்க தண்ணியடிக்கும் காட்சி நிறைந்திருக்கிறது.. இவைளை தவிர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

வெங்கட்பிரபு... புதுசாக ஏதோ சொல்லவந்து கொஞ்சம் சொதப்பி சில இடங்களில் இவரின் பழைய படங்களை ஞாபகப்படுத்தி பின் தன்னுடைய திறமையான திரைக்கதையினால் பிற்பாதியில் சபாஷ் பெறுகிறார்... ஒரு சில குறைகளை தவிர்த்து இன்னும் மெருகேற்றியிருந்தால் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக வந்திருக்கும்... 


படத்தை குழப்பத்தோடு முடிக்கிறார் என்று எழுந்தால் இன்னும் கொஞ்சுநேரம் உட்கார வைத்து குழப்பங்களை தீர்த்துவிடுகிறார்... இரண்டாது கிளைமேக்ஸ்போல...

நாசர் கொலை எப்படி நடக்கிறது.. உண்மையில் குற்றவாளி யார்... ராம்கி நல்லவரா கெட்டவரா... கார்த்தி-ஹன்சிகா காதல் என்னவாயிற்று போன்ற விஷயங்களை வெள்ளித்திரையில் காண்க...

பிரியாணி.... இன்னும் மசாலாவை சேர்த்திருக்கலாம்...!

நமது வாழ்க்கை விஜய் படம் மாதிரியா..?


டைம் என்பது சூப்பர் ஸ்டார் படம் மாதிரி ஓடிகிட்டே இருக்கும் ஆனா
வாழ்க்கை என்பது விஜய் படம் மாதிரி நாமதான் ஓட்டனும்...
 
********************************

 "எங்கப்பா அம்மா சொன்ன பேச்சை நான் சின்ன வயசிலிருந்தே கடைப்பிடிச்சுட்டு வரேன்!"

"அப்படியா..! சின்ன வயசுல என்ன சொன்னாங்க?"

"நீ உருப்படவே மாட்டேன்னாங்க!"

********************************

Mr.X. அவர் மனைவியுடன் காபி ஷாப் சென்று 2 கோப்பைகள் காபி வாங்கினார். 
Mr.X வேகவேகமாக அருந்தி முடித்தார்.

மனைவி: ஏன் இப்படி சுடச்சுட குடிக்கிறீங்க..!

Mr.X.: ஏனென்றால் சூடான காபி (hot coffee) 10 ரூபாய்,
குளிர் காபி (Cold coffee) 20 ரூபாய்!!!


********************************

 ஆசையே துன்பத்துக்குக்காரணம்னு 
இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்
 
எப்படி?

என் மனைவியை நான் ஆசைப்பட்டுத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

********************************


மேனேஜர்: "எங்க பேங்க்ல இண்ட்ரஸ்ட் இல்லாம லோன் கொடுக்கிறோம்".!...

கிராமத்தான்: "கொடுக்கறத கொஞ்சம் சந்தோஷமா கொடுக்கலாம்ல.. ஏன் இண்ட்ரஸ்ட் இல்லாம கொடுக்கிறீங்க"?

********************************


"அப்பா நாளையிலிருந்து நாம பணக்காரனா ஆகிடலாம்."

"எப்படி?"

"எங்க கணக்கு வாத்தியார்...பைசாவை ரூபாவா மாத்தறது எப்படின்னு சொல்லித்தரப் போறார்."

********************************


நம்ம டாக்டர் அபாய கட்டத்தை தாண்டிட்டாரு!

என்ன சொல்றே?

பேங்க் லோன் கட்ட இன்னிக்கு கடைசிநாள்.
என்னபண்றதுன்னு முழிச்சிகிட்டு இருந்தாரு. 
அதுக்குள்ள ஒரு பேஷண்ட் வந்துட்டாரு!

********************************
நகைச்சுவை துணுக்குகளையும்
படங்களையும் ரசித்தமைக்கு மிக்க நன்றி...!

18 December, 2013

என்றென்றும் புன்னகை


அனுபவம் என்பது கடுமையான ஆசிரியன்:
முதலில் சோதனை, பிறகு படிப்பினையை அது அளிக்கிறது...

++++++++++++++++++++

நம் பிரச்சனை என்னவென்றால் நேரம் கிடைக்கவில்லை என்பதல்ல.. வழி தெரியவில்லை என்பதுதான்.. ஒவ்வொரு நாளுக்கும் இருபத்தி நான்குமணி நேரம் உள்ளது.. நம்முடைய வேலை வழ்க்கைக்கான வழியை கண்டறிவதுதான்...
++++++++++++++++++++

நம்மைப்பற்றியும், நம்மிடமிருந்தும், மற்றவர்களின் எதிர்பார்ப்பின் அடிப்படையிலும் நாம் உருவாக்கப்படுகிறோம். நாம் உருவாக்கப் படுகிறது. அந்த எதிர்பார்ப்பை நோக்கி அல்லது நம்மைப் பற்றி மற்றவர்கள் நம்புவதன் பேரில் நாம் வாழ்க்கை நடத்துகிறோம். உண்மையில் பார்க்கப்போனால், நம்மைப்பற்றி நாம் நினைப்பதை விட மற்றவர்கள் நம்மைப்பற்றி நினைப்பது மிகவும் முக்கியமானதாகி விடுகிறது.

++++++++++++++++++++

சிரியுங்கள் உங்களோடு இந்த உலகமே சிரிக்கும்...
அழுங்கள் நீங்கள் மட்டும்தான் அழுது கொண்டிருப்பீர்கள்...!
++++++++++++++++++++

தவறுகளைக் கண்டுப்பிடிப்பதால் அதிலிருந்து வெகுமதி கிடைக்கும் என்று சிலர் கருதுகிறார்கள். ஒவ்வொரு சிரமத்திலும் நல்லதையே சிலர் காண்கிறார்கள்...
++++++++++++++++++++

ஒரு கணவர் மனைவியிடம் சொன்னார். ”பதினாறு ஆ‌‌‌‌ண்டுகளாக நாம் தம்பதியராக இருந்தும். ஒன்றில் கூட நாம் ஒத்துப் போக முடியவில்லை“ என்றார். மனைவி சொன்னார்: “ இது பதினேழாவது”
++++++++++++++++++++

கருத்துக்களை உள்ளே கொண்டுவந்து சிறந்த முறையில் உபசரியுங்கள்.. அவற்றில் ஏதாவதுதொன்று அரசனைப் போன்றாகிவிடும்.
++++++++++++++++++++

எவ்வளவு விரைவில் அந்த வேலையை நீங்கள் முடித்து விட்டீர்கள் என்பதை மக்கள் மறந்துவிடுவார்க்ள. ஆனால் எவ்வளவு நன்றாக அதை செய்தீர்கள் என்பதை நினைவில் வைத்திருப்பார்கள்.
++++++++++++++++++++

மற்றவர்களை வழி நடத்த நீங்கள் முற்படுவதற்கு முன்பு, உங்களை நீங்களே நிர்வாகிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
++++++++++++++++++++

நேர்மையான நபராக இருந்து, சரியான செயலைக் செய்யக் கூடியவராக நீங்கள் இருந்தால் உதவியும் உற்சாகமும் பல திசைகளிலிருந்தும் வந்து சேரும்...
++++++++++++++++++++

நாளை எவ்வளவு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ அந்த 
அளவுக்கு இன்றே செய்து முடிந்தால் நம் எதிர்காலம் நிச்சயமாக உறுதியாகிவிடுகிறது.
++++++++++++++++++++

வாழ்க்கையின் ஏணிப்படிகள் பல துண்டுகளால் ஆனது, நீங்கள் கீழே வழுக்கி விழும் பொழுது தான் அதை உணர்வீர்கள்
++++++++++++++++++++
 என் முகநூலிலிருந்து...
புன்னகையோடு ரசித்தமைக்கு நன்றி

17 December, 2013

கடவுள் எங்கு இருக்கிறார் தெரியுமா..?



இமய மலையில் ஜென் குரு ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரைக் காண ஒரு மடாலயத்தின் தலைவர் சென்றார். அப்போது அவரிடம் "நான் ஒரு புகழ் பெற்ற மடாலயம் ஒன்றை நடத்தி வருகிறேன்" என்று கூறினார். 

குருவும் தன் மௌனத்தை கலைக்காமல் அவர் கூறியதை கேட்டு தலை அசைத்தார்.  மேலும் அந்த தலைவர் குருவிடம் "என் மனம் தற்போது பெரும் குழப்பத்தில் உள்ளது. அதற்கான விடையை அறியவே உங்களைக் காண வந்தேன்" என்றும் கூறினான்.


குரு அதற்கு "என்ன குழப்பம்?" என்று கேட்டார். தலைவர் குருவிடம் "என் மடாலயம் மிகவும் அமைதியாக, பழைமை நிறைந்த புனிதமான இறை வழிபாட்டை மேற்கொண்டு வந்தது. இதனை அறிந்து உலகின் பல பகுதிகளிலிருந்தும், இளைஞர்கள் வந்து தங்கி, பாடத்தை கற்றுக் கொண்டு செல்வர். ஆனால் இப்போதோ, யாரும் வருவதில்லை. இதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. நீங்கள் தான் அதற்கான காரணத்தை சொல்ல வேண்டும்" என்று கூறினார்.


அவ்வாறு வருத்தத்துடன் சொல்லும் போது, அவர்து குரலில் வேதனை தெரிந்தது. அதன் பின் குரு தலைவரிடம், "இதற்கு அறியாமை தான் காரணம்" என்று சொன்னார். "அறியாமையா?" என்று கேட்டார் தலைவர்.

அதற்கு "ஆம், உங்கள் மத்தியில் தேவதூதர் ஒருவர் உள்ளார். அவரை நீங்கள் உணரவில்லை, அதனால் தான் இந்த குழப்பம்" என்று கூறி அனுப்பி வைத்தார்.

அவரும் யாராக இருக்க முடியும் என்று யோசித்துக் கொண்டே சென்றார். பின் தன் மடாலயத்தில் இருக்கும் சீடர்களிடம் நடந்ததை சொன்னார். அவர்களும் யாரோ ஒருவர் தான் இங்கு தேவதூதர் என்பதை நினைத்து, ஒருவரை ஒருவர் மிகவும் மரியாதையுடன் நடத்தினார்கள்.


பின் சிறிது மாதங்கள் கழித்து, அவரது மடாலயத்தில் கூட்டம் குவிந்தது. ஏனெனில் அவர்கள் இதுவரை எதையும் விரும்பி செய்யாமல், கடமைக்காக செய்ததால், யாரும் வரவில்லை. இப்போது அவர்கள் அனைவருக்கும் மரியாதைக் கொடுத்து, அனைத்தையும் மரியாதையோடு நடத்தினர்.

இவை அனைத்தையும் கண்டப் பிறகு தான் தலைவருக்கு, துறவி சொன்னது புரிந்தது. அப்போது தான் அவருக்கு தேவ தூதர் வேறு எங்கும் இல்லை, அவரவர் மனதில் தான் இருக்கிறார். அதை நாம் உணர்ந்து, நம்மைப் போல மற்றவரையும் நேசித்தால், இறைவனை உணர முடியும் என்பது நன்கு புரிகிறது.

16 December, 2013

இது ஒரு பேருந்து பயணத்தில் நிகழ்ந்தது...!



எனக்கான இன்றைய
பேருந்து பயணத்தில்
காதலாய் ஒரு கவிதையை 
தந்துவிட்டு செல்கிறாள் அவள்..

எனக்கு முன்
ஏதோ ஒரு நிறுத்தத்தில் ஏறி...
எனக்குப் பின் 
ஏதோ ஒரு நிறுத்தத்தில் இறங்குகின்றாள்...

அவள் ஏறிய இடமும்
இறங்கிய இடமும் தெரியாது
 இந்த பயணத்தில்...

ஜன்னலுக்கு வெளியே
ரசித்துக்கொண்டு வந்த அவளை
ரசித்துக்கொண்டிருந்தேன் நான்...!

ஒரு காதல் காவியத்தில்
தொலைந்துப்போன பக்கங்கள் போல
இறங்கிப்போகிறாள் அவள்...

ஐகூக் கவிதையில்
மூன்றாம் வரியை தவறவிட்ட
வாசகன்போல் தவிக்கிறேன் நான்...


சஞ்சலப்பட்ட மனதோடு
தற்போதைக்கு
இறங்கும் இடத்தை மறந்துவிட்டு
பயணிக்கிறேன் நான்...!



தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...!

14 December, 2013

இப்படிப்பட்ட குழந்தைங்க உங்க வீட்ல இருக்கா....!

குழந்தைகள் கொஞ்சும் போது நல்லாதான் இருக்கும்...
ஆனா நாம கொஞ்ச நேரம் இல்லன்னா அவ்வளவுதான்...
இந்த மாதிரியெல்லாம் உங்க வீட்டல செஞ்சியிருக்காங்களா..?










































 
 ரசித்தமைக்கு நன்றி...!