26 January, 2013

விஸ்வரூபம் என்ன அவ்வளவு பெரிய தவறா..?

இன்றைய காலக்கட்டத்தில் உணவுப் பொருள் பற்றாக்குறை மிக அதிக அளவில் இருக்கிறது. விளைநிலங்கள் குறைந்துவரும் இத்தருணத்தில் இதுபோன்ற வீரியமான பெரிய அளவிளான காய்கறிகளை விளைவித்தால் நன்றாகத்தான் இருக்கும் போல....

எப்படியிருக்கு பாருங்கள் காய்கறிகளின் விஸ்வரூபம் .!









இது போன்று விஸ்வரூபமாக இருக்கும் காய்கறிகளை நான் தவறு என்று சொல்லமாட்டேன். அப்போது நீங்கள்...?
*********************************************
ரைட்டு...

பேச்சுபேச்சாத்தான் இருக்கனும்...
என்ன நான் சொல்றது...!

சிங்கம் -2 வில் பவர்ஸ்டார்... மற்றும் அஜித்தின் புதுப்பட தலைப்பு...!

ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் சிங்கம் 2 திரைப்படத்தில் பவர்ஸ்டார் சீனிவாசன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சூர்யா, அனுஷ்கா நடித்து ஹிட்டான சிங்கம் படத்தின் இரண்டாம் பாகம் ‘சிங்கம்-2′ என்ற பெயரில் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்திலும் சூர்யா-அனுஷ்கா ஜோடி சேருகின்றனர். 
 
நகைச்சுவைக்கு முதல் படத்தில் நடித்த விவேக், அதே கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் சந்தானம் ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் பவர்ஸ்டார் சீனிவாசன் புதிதாக இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. 
 
இது குறித்து இயக்குனர் ஹரி கூறும் போது, விவேக்கும், சந்தானமும் முன்னணி காமெடியர்களாக உள்ளனர். இருவரும் சிங்கம்-2 படத்தில் நடிக்கிறார்கள். இப்போது லட்டு புகழ் ஸ்ரீனிவாசனையும் சேர்க்க முடிவு செய்துள்ளோம் என்றார். ஏற்கனவே இதன் முதல் பாகத்தில் விவேக் ஏட்டு ஏழுமலை என்ற கேரக்டரில் நடித்து இருந்தார். ‘சிங்கம்-2′ விலும் அதே வேடத்தில் நடிக்கிறார். 
 
சந்தானம் மற்றும் பவர் ஸ்டார் காமெடிகளுக்காக ஸ்பெஷல் டிஸ்கஷன் நடப்பதால் படத்தில் இன்னொரு சிறப்பான அம்சமாக இருக்கும் என்றார். சிங்கம் 2ல் மூன்று காமெடியர்கள் நடிப்பதால் காமெடி காட்சிகள் களை கட்டும் என எதிர் பார்க்கப்படுகிறது. 
 
மூவருக்கும் தனித் தனியாக காமெடி சீன்கள் உருவாக்கப்பட்டு உள்ளதாக இயக்குநர் ஹரி கூறினார். லட்டு தின்ன ஆசையா? பட ரிலீசுக்குப் பின்னர் பவர் ஸ்டாருக்கு ரசிகர்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது என்பதால் ஏராளமான இயக்குநர்கள் அவரை புக் செய்ய போட்டி போட்டு வருகின்றனர் என்று கூறப்படுகிறது.
**********************
அஜீத் 'பில்லா-2'க்கு பிறகு விஷ்ணுவர்த்தன் இயக்கும் படத்தில் பிசியாகி உள்ளார். இப்படத்துக்கு வலை என பெயரிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பகுதி படப்பிடிப்பு மும்பையில் நடக்கிறது.

சமீபத்தில் இப்படத்துக்காக சண்டை காட்சியொன்றில் நடித்தபோது விபத்து ஏற்பட்டு அஜீத் படுகாயம் அடைந்தார். இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அஜீத் தீவிர சிகிச்சை பெற்றார். தற்போது அவர் பூரண குணமாகியுள்ளார்.

இதையடுத்து மீண்டும் படத்தில் நடிக்க தயாராகிறார். இதற்காக சில தினங்களாக கடும் உடற்பயிற்சி செய்து உடம்பை மெருகேற்றி வருகிறார். இளம் பயிற்சியாளர் சிவா பயிற்சி அளித்து வருகிறார். பெரும் பகுதி நேரத்தை அஜீத் உடற்பயிற்சி கூடத்திலேயே கழிக்கிறார். தற்போது உருண்டு திரண்ட உடல்வாகுடன் கம்பீரமான தோற்றத்துக்கு மாறியுள்ளார். அடுத்த படத்தில் ஆக்சன் காட்சிகளில் நடிக்க தயாராகிறார்.

21 January, 2013

கர்த்தர் குழப்பத்தில் இருக்கிறார்.....!

 
முதிர்ச்சிப்பெற்ற முரண்பாடுகளின்
தொகுப்புதான் காதலோ....
 

ன்னை மறக்க நீயும்
உன்னை நினைக்க நானும்
ஜெபித்துக் கொண்டிருக்கிறோம்....

ம்மில் யார் ஜெபத்தை ஆசீர்வதிப்பதென்று
திண்டாடிக் கொண்டிருக்கிறார்
கர்த்தர்...



தங்களின் கருத்துக்கு காத்திருக்கிறது இந்த கவிதை..
மீள் பதிவு

15 January, 2013

திமுக தலைவர் பதவியும்... பவர் ஸ்டாரை வாழ்த்தி கவிதையும்...!

இன்று இணையத்தில் அப்படியே உலவும் போது இரண்டு கார்டூன்கள் என்னை கவர்ந்தது... அந்தப்படங்களுடன் இன்றைய பதிவை முடித்துக்கொள்கிறேன்.
 *********************************
 
திமுக தலைவர் பதவிக்கான போட்டியும் அதை அடைவதற்காக சண்டைகளும் தொடர்ந்துக்கொண்டு இருக்கிறது... அதை மையப்படுத்திய அழகிய கார்டூன்...

***********************************
பவர்ஸ்டார் மதுரை ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்... அதில் உள்ள ‌கவிதையை படித்துப்பாருங்க... நல்லாத்தான் யோசிக்கிறாங்கப்பா...!

*****************************
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

14 January, 2013

பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளை ஆக்கரமித்துள்ள பவர்ஸ்டார்...

இன்றைக்கு அனைத்து ஊடகங்களும் பவர்ஸ்டார் சீனிவாசனின் பேட்டியை ஒளிபரப்பவும், வெளியிடவும் ஆர்வம் காட்டிவருகின்றனர். ஆனந்த விகடன், டைம்பாஸ் தொடங்கி சன்டிவி, கலைஞர், ராஜ், உள்ளிட்ட பல சேனல்களிலும் பேட்டி கொடுப்பதில் பரபரப்பாக இருக்கிறார் பவர் ஸ்டார் சீனிவாசன். காமெடியாகவோ, சீரியசாவோ எந்த கேள்வி கேட்டாலும் புன்னகை மாறாமல் தனது பதிலை கூறி அனைவரையும் சிரிக்க வைத்துவிடுகிறார் சீனிவாசன். 

சூப்பர் ஸ்டார் கூட இன்றைக்கு எந்த சேனலுக்கும் பேட்டி கொடுப்பதில்லை. ஆனால் பண்டிகை தினங்களில் பவர்ஸ்டாரின் பேட்டி கண்டிப்பாக ஒளிபரப்பாகிறது. தவிர ரியாலிட்டி ஷோக்களில் சிறப்பு விருந்தினராகவும் அசத்துகிறார் பவர்ஸ்டார் சீனிவாசன். 
சூப்பர் குடும்பத்தில் கலக்கிய பவர்ஸ்டார் 

சன் டிவியின் சூப்பர் குடும்பம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பவர்ஸ்டார் சீனிவாசன், போட்டியாளர்களுடன் கலக்கலாக நடனமாடினார். அதை பார்த்த நடுவர் கங்கை அமரன், தனக்கு இதுதான் வரும் தான் இப்படித்தான் நடனமாடுவேன் என்று கூச்சப்படாமல் நடனமாடுகிறார் சீனிவாசன் என்று பாராட்டினார். 
கமலுக்கு ஹாய் சொன்னேன் 

கமலுடன் பேசியிருக்கிறீர்களா? என்று பவர்ஸ்டாரைப் பார்த்து தொகுப்பாளினி காயத்ரி ஜெயராம் கேள்வி கேட்டார் அதற்கு பதிலளித்த சீனிவாசன், கமலும் நானும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தோம். அவருக்கு நான் ஹாய் சொன்னேன் என்றார். 
ரோஜாவின் லக்கா கிக்கா

ஜீ டிவியின் லக்கா கிக்கா நிகழ்ச்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பங்கேற்ற சீனிவாசன் அந்த நிகழ்ச்சியில் நடிகை ரோஜா கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து வெற்றி பெற்றார். தான் ஜெயித்த பணத்தை நிகழ்ச்சியில் தோல்வியடைந்த நபர்களுக்கு பரிசாகக் கொடுத்தார் சீனிவாசன். 
தமிழ் பேசும் கதாநாயகிகள் 

ராஜ் டிவியின் ‘தமிழ்பேசும் கதாநாயகிகள்' இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் பவர்ஸ்டார் சீனிவாசன். இதில் முக்கிய அம்சமே இறுதிச்சுற்றில் பங்கேற்ற 15 கதாநாயகிகளும் பவர்ஸ்டாருடன் குத்தாட்டம் போட்டனர். 
சங்கர் படத்தில நடிக்கிறேன் 

சினிமாவிலும் சரி சின்னத்திரையிலும் சரி இப்போது பவர்ஸ்டார் ரொம்ப பிஸி. கண்ணா லட்டு தின்ன ஆசையா இதே பொங்கலுக்கு ரிலீசாகிவிட்டது. அடுத்து சங்கரின் ‘ஐ' படத்தில் நடிக்கிறார். இந்த பிஸியில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில் பிரபல சேனல்களில் எல்லாம் பவர்ஸ்டாரின் பேட்டி ஒளிபரப்பாகிறது என்பதுதான் ஹைலைட்.

இது மட்டும் இல்லாமல் பல்வேறு சேனல்களில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளிலும் பேட்டிகளிலும் கலந்துக்கொண்டு பவர்ஸ்டார் கலக்கிக்கொண்டிருக்கிறார்....

வளர்க பவர் ஸ்டார்.... வளர்க அவரது புகழ்....

12 January, 2013

அரசியல்வாதிகள் தான் காரணம்! கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்! - அஜித்தின் அதிரடி!


மத்திய அரசின் திரையுலகின் மீதான சேவை வரியை எதிர்த்து பல திரையுலகைச் சார்ந்த நடிகர், நடிகைகள், தயரிப்பாளர்கள் ஆகியோர் உண்ணாவிரதம் இருந்து மத்திய அரசையே மிரள வைத்தனர். தமிழகத்திலும் ரஜினி, விஜய் உட்பட பல நடிகர் நடிகைகள் கலந்துகொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் நடிகர்கள் கமல், அஜித் உட்பட பலர் கலந்துகொள்ளவில்லை.


உண்ணாவிரதப்போராட்டத்தில் கலந்துகொண்டு தனது கண்டத்தை தெரிவிக்காவிட்டாலும் நடிகர் அஜித்குமார், மத்திய அரசின் சேவை வரி மீதான தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

இணையதளம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் அஜித் “ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் திருந்தினால் தான் இதற்கெல்லாம் தீர்வு கிடைக்கும். அவர்களாக முன்வந்து தங்களிடமிருக்கும் ஊழல் செய்த கருப்பு பணத்தை தங்கள் பையிலிருந்து எடுத்து கொடுத்தால் தான் இந்தியா வளரும். தேவையில்லாமல் எதற்கும் வரி போட வேண்டிய அவசியமும் இருக்காது.


இது மட்டும் நடந்துவிட்டால் உலகின் பணக்கார முதல் பத்து நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும். இவர்களிடமிருந்து இந்த நாட்டை ‘கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்’. இதே நிலை தொடர்ந்தால் வின்ஸ்டன் சர்ச்சில் கூறியது போல எதிர்காலத்தில் நீருக்கும், காற்றிற்கும் கூட வரி விதிக்க வேண்டிய கட்டாயம் வரலாம்” என்று கூறினாராம். நீருக்கு ஏற்கனவே வரி வசூலிக்கப்பட்டு வருவதால், அடுத்தது காற்று தான்.

08 January, 2013

விஸ்வரூபம் படம் ரிலீஸ் இல்லை.. பயத்தில் பின்வாங்கும் கமல்...


பெரும் பரபரப்பைக் கிளப்பிக் கொண்டிருந்த விஸ்வரூபம் படம் இந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவில்லை. இந்தப் படத்தை டிடிஎச்சில் வெளியிடுவதும் ரத்து செய்யப்பட்டுவிட்டது. வரும் ஜனவரி 25-ம் தேதி தியேட்டர்களில் நேரடியாக வெளியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவும் இறுதியானதா என்பதை கமல் உறுதி செய்யவில்லை. 

விஸ்வரூபம் படத்தை கமல் எழுதி இயக்கியுள்ளார். பிவிபி நிறுவனம்தான் இந்தப் படத்தை முதலில் தயாரித்தது. ஆனால் ரூ 50 கோடி வரை செலவழித்தவர்கள், ஏறிக் கொண்டே போன பட்ஜெட்டைப் பார்த்து, பின்வாங்கிவிட்டனர். கமலே தயாரிப்பையும் ஏற்றார். 

தியேட்டர்களில் பிரத்தியேகமாகப் பார்க்கும் வகையில் ஆரோ 3 டி ஒலி நுட்பத்தைப் பயன்படுத்தினார். கடைசியில் ரூ 95 கோடி வரை இந்தப் படத்துக்கு பட்ஜெட் எகிறிவிட்டது என்றார் கமல். இந்தத் தொகையை எடுக்க முடியுமா என்ற சந்தேகம் வந்துவிட்டதால் படத்தை டிடிஎச் மூலம் வீடுகளில் முதலில் வெளியிடுவது, அடுத்த நாள் தியேட்டர்களில் வெளியிடுவது என்ற முடிவுக்கு வந்தார் கமல். 

இதனை அவர் வெளியிட்ட உடன் தமிழ் திரையுலகில் பெரும் சர்ச்சை எழுந்தது. கமல் முடிவை திரையரங்க உரிமையாளர்கள் ஏற்கவில்லை. அவரது எந்தப் படத்தையும் திரையிட மாட்டோம் என அறிவித்துவிட்டனர். இன்னொரு பக்கம் கமல் மும்முரமாக டிடிஎச் முயற்சியில் இறங்கினார். ஏர்டெல், டாடா, ரிலையன்ஸ், சன், வீடியோகான், டிஷ் ஆகிய 6 டிடிஎச் நிறுவனங்கள் இதில் கமலுடன் கைகோர்த்தன. 

ஒரு இணைப்புக்கு ரூ 1000 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. எனவே கமலுக்கு பெரும் லாபம் கிட்டும் என்று எதிர்ப்பார்த்தனர். ஆனால் நடந்ததே வேறு. கமல் எதிர்ப்பார்த்த மாதிரி டிடிஎச்சில் முன்பதிவு நடக்கவில்லை. சில ஆயிரம் பேர்தான் ஒவ்வொரு டிடிஎச்சிலும் கட்டணம் செலுத்தி பதிவு செய்தனர், கடைசி நாளான நேற்றுவரை. 

இன்னொரு பக்கம் 45 திரையரங்குகள் மட்டுமே இந்தப் படத்தைத் திரையிட முன்வந்தனர். இந்த நிலையில் கார்ப்பொரேட் தமிழ் சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் முக்கிய நிர்வாகியின் முயற்சியில், திரையரங்க உரிமையாளர்களுக்கும் கமலுக்கும் இடையில் சமரசப் பேச்சு நேற்று நடந்தது. விடிய விடிய நடந்த இந்த பேச்சில் விஸ்வரூபம் படம் எந்த அளவு சிக்கலில் உள்ளது என்பது குறித்து விவாதித்தனர். 

கடைசியில் இந்தப் படத்தை டிடிஎச்சில் வெளியிடுவதிலிருந்து கமல் பின்வாங்கியதாகத் தெரிகிறது. அதே நேரம் படத்தை திட்டமிட்டபடி ஜனவரி 11-ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதிலும் சிக்கல் எழுந்தது. காரணம் அன்றைய தினம் வெளியாகும் அலெக்ஸ் பாண்டியனுக்கு அதிகபட்ச அரங்குகள் ஒதுக்கப்பட்டுவிட்டன. 

இந்த நிலையில் கமல் படத்துக்கு தரமான அரங்குகள் கிடைக்காது என்பதாலும், படத்தை யார் வெளியிடுவது என்பதில் எழுந்த சிக்கல் காரணமாகவும், இப்போதைக்கு படத்தை ஜனவரி 25-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளதாக தெரிகிறது. அபிராமி ராமநாதன் அல்லது ஸ்டுடியோ கிரீன் இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடக் கூடும் என்று கடைசி நேர தகவல்கள் தெரிவிக்கின்றன.

07 January, 2013

என்னை கலங்க வைத்த பட்டாம்பூச்சி....


பூக்களை பறிக்கும் 
பொழுதுகளிலெல்லாம்
முட்களோடு வதைப்படாமல்
திரும்பியதில்லை என் கைகள்...!


ய்வைத்தேடி கயிற்றுக்கட்டிலில்
தலைச்சாயும்போதெல்லாம்
உறுத்திக்கொண்டே இருக்கும்
இன்றைய நாளைய தேவைகள்...!


றுதல் சொல்ல 
ஆளில்லாத பலதருணங்களில்
என் சோகத்தையும் சேர்த்து

பாடிவிட்டுப்போகிறது சில கருங்குயில்கள்...!

 ண்ணமிகு கோலத்துடன்
வானவில் வந்தவுடன் பதறித்தான்போகிறேன்
ஒழுகும் குடிசை என்னுடையது...!


காலங்களும் தருணங்களும்
எனக்கு இப்படியாய் இருக்க...
தற்போது புதியதாய் ஒரு வேதனை
என்னை சூழ்கிறது...!


நேற்று ஒரு பயணத்தின்போது 
என் முகத்தில் பட்டுத்தெறித்து சிதறிய 
ஒரு பட்டாம்பூச்சிக்காக...!

 
வாசித்த அனைவருக்கும் நன்றி...!

06 January, 2013

இன்று நித்தியானந்தா பிறந்த நாள்... விரட்டும் போலீஸ் மற்றும் கோயில் நிர்வாகம்..

இன்று (06.01.2013) பிறந்த நாள் காணும் நித்தியானந்தா எப்போதும்போல் திருவண்ணாமலையில் பந்தா காட்ட நினைத்தார். இன்று காலை அண்ணாமலையால் கோவிலுக்குள் பக்தர்களுடன் வந்து வணங்கிவிட்டு, பின்னர் தன்னுடைய உருவ சிலையை கோயில் மாட வீதியில் வலம் வரவழைப்பதற்கான ஏற்பாடுகளை ஏற்பாடு செய்திருந்தார்.

இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், கோயில் நிர்வாகம் கோவிலுக்குள் ஐந்து பேரை மட்டுமே அனுமதிப்போம். கோயிலுக்குள் கூட்டம் போடுவதோ, பேசுவதோ இருந்தால் வழக்குப் பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தது. இதனால் கோவிலுக்குள் வருவதை தவிர்த்துவிட்டார் நித்தியானந்தா.

தொடர்ந்து மாட வீதியில் வலம் வருவதற்கு போலீசாரிடம் அனுமதி வாங்க வேண்டும். ஆனால் நித்தியானந்தா அனுமதி வாங்காததால், கோயிலுக்கு எதிரே அவரது சார்பில் போடப்பட்டிருந்த பந்தலை போலீசார் பிரித்து போட்டனர். இதனால் அதிர்ச்சியான நித்தியானந்தா அனைத்து நிகழ்ச்சிகளையும் தனது ஆசிரமத்துக்கு மாற்றிக்கொண்டார்.