இன்றைக்கு அனைத்து ஊடகங்களும் பவர்ஸ்டார் சீனிவாசனின் பேட்டியை ஒளிபரப்பவும், வெளியிடவும் ஆர்வம் காட்டிவருகின்றனர். ஆனந்த விகடன், டைம்பாஸ் தொடங்கி சன்டிவி, கலைஞர், ராஜ், உள்ளிட்ட பல சேனல்களிலும் பேட்டி கொடுப்பதில் பரபரப்பாக இருக்கிறார் பவர் ஸ்டார் சீனிவாசன். காமெடியாகவோ, சீரியசாவோ எந்த கேள்வி கேட்டாலும் புன்னகை மாறாமல் தனது பதிலை கூறி அனைவரையும் சிரிக்க வைத்துவிடுகிறார் சீனிவாசன்.
சூப்பர் ஸ்டார் கூட இன்றைக்கு எந்த சேனலுக்கும் பேட்டி கொடுப்பதில்லை. ஆனால் பண்டிகை தினங்களில் பவர்ஸ்டாரின் பேட்டி கண்டிப்பாக ஒளிபரப்பாகிறது. தவிர ரியாலிட்டி ஷோக்களில் சிறப்பு விருந்தினராகவும் அசத்துகிறார் பவர்ஸ்டார் சீனிவாசன்.
சூப்பர் குடும்பத்தில் கலக்கிய பவர்ஸ்டார்
சன் டிவியின் சூப்பர் குடும்பம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பவர்ஸ்டார் சீனிவாசன், போட்டியாளர்களுடன் கலக்கலாக நடனமாடினார். அதை பார்த்த நடுவர் கங்கை அமரன், தனக்கு இதுதான் வரும் தான் இப்படித்தான் நடனமாடுவேன் என்று கூச்சப்படாமல் நடனமாடுகிறார் சீனிவாசன் என்று பாராட்டினார்.
கமலுக்கு ஹாய் சொன்னேன்
கமலுடன் பேசியிருக்கிறீர்களா? என்று பவர்ஸ்டாரைப் பார்த்து தொகுப்பாளினி காயத்ரி ஜெயராம் கேள்வி கேட்டார் அதற்கு பதிலளித்த சீனிவாசன், கமலும் நானும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தோம். அவருக்கு நான் ஹாய் சொன்னேன் என்றார்.
ரோஜாவின் லக்கா கிக்கா
ஜீ டிவியின் லக்கா கிக்கா நிகழ்ச்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பங்கேற்ற சீனிவாசன் அந்த நிகழ்ச்சியில் நடிகை ரோஜா கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து வெற்றி பெற்றார். தான் ஜெயித்த பணத்தை நிகழ்ச்சியில் தோல்வியடைந்த நபர்களுக்கு பரிசாகக் கொடுத்தார் சீனிவாசன்.
தமிழ் பேசும் கதாநாயகிகள்
ராஜ் டிவியின் ‘தமிழ்பேசும் கதாநாயகிகள்' இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் பவர்ஸ்டார் சீனிவாசன். இதில் முக்கிய அம்சமே இறுதிச்சுற்றில் பங்கேற்ற 15 கதாநாயகிகளும் பவர்ஸ்டாருடன் குத்தாட்டம் போட்டனர்.
சங்கர் படத்தில நடிக்கிறேன்
சினிமாவிலும் சரி சின்னத்திரையிலும் சரி இப்போது பவர்ஸ்டார் ரொம்ப பிஸி. கண்ணா லட்டு தின்ன ஆசையா இதே பொங்கலுக்கு ரிலீசாகிவிட்டது. அடுத்து சங்கரின் ‘ஐ' படத்தில் நடிக்கிறார். இந்த பிஸியில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில் பிரபல சேனல்களில் எல்லாம் பவர்ஸ்டாரின் பேட்டி ஒளிபரப்பாகிறது என்பதுதான் ஹைலைட்.
இது மட்டும் இல்லாமல் பல்வேறு சேனல்களில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளிலும் பேட்டிகளிலும் கலந்துக்கொண்டு பவர்ஸ்டார் கலக்கிக்கொண்டிருக்கிறார்....
வளர்க பவர் ஸ்டார்.... வளர்க அவரது புகழ்....