30 April, 2011

வியர்வைகளால் முத்துக்கள் செய்பவனே....




வியர்வைகளால் 
முத்துக்கள் செய்பவனே....

நீ விதைத்த 
வியார்வைகள் தான்...
கல்லாய் கிடந்த 
இந்த பூமிப்பந்து
கர்ப்பம் தரித்து 
உயிர்பிடித்திருக்கிறது...!

நீ... 
உடல் முழுவதும் சகதிகள் பூசி
இந்த உலகத்தை 
மிளிர செய்தவன்...

நீ... 
அழுக்காகி அழுக்காகியே
அர்த்தப்பட்டவன்... 

நீ 
உயர்த்திய தோளில்
உயர்ந்திருக்கிறது 
சமுதாயம்...

நீ 
உயர்த்திய கரங்களில்
பூத்திருக்கிறது 
மறுமலர்ச்சி.... 

ன் வியர்வை 
நாற்றம்...
அது உன் நாட்டை 
மணக்கச்செய்யும்
மகரந்தத்துகள்கள்...

ன் கரங்களில் ஏற்படும் 
வடுக்கள்...
அது தேசத்தை 
அறிமுகப்படுத்த வாய்க்கும்
அடையாளங்கள்....

நீ 
ஏர்பிடித்திருக்காவிட்டால்
என் பூமித்தாய்க்கு 
பட்டாடை ஏது...

நீ பாறைகளை 
உடைத்திருக்காவிட்டால்
இந்த பூமிச்சக்கரத்தின் 
அச்சுக்கள்
ஆயுள் இழந்திருக்கும்...!

தெரியுமா உனக்கு
நீ ஓய்வெடுக்க 
ஒதுங்கினால்
ஓட்டத்தை நிறுத்திக் கொள்ளும்
இந்த உலகம்... 

ன் பார்வையில்
தாயும் நீயும் ஒன்று  தான்

தாய் 
ரத்தத்தை பாலாக்குகிறாள்...
நீ.. அதை 
வியர்வையாக்குகிறாய்...

ழைப்புக்கு 
ஓய்வு கொடுத்து விட்டு...
விடியலை கண்டுவிடமுடியாது
எந்த ஒரு தேசமும்..
எந்த ஒரு மனிதனும்...

ன் இனிய 
வியர்வையாளனே..!
உன் நெற்றியில் பிரகாசிக்கும்
ஒவ்வோறு 
வியர்வைத்துளிக்கும்
சாமரம் வீசும் என் கவிதை....

ண்பர்களே....
வியர்வைகள் சிந்துவோம்
பிறகு ஏன் கண்ணீர்....

 உலக தமி்ழர்கள் அனைவருக்கும் 
என் மே தின நல்வாழ்த்துக்கள்...!
மே தின கவிதை

29 April, 2011

உலக கோப்பை இறுதி போட்டியில் 'மேட்ச் பிக்சிங் - பரபரப்பு புகார்...



இலங்கை கிரிக்கெட் அணியில் 1992ம் ஆண்டில் இருந்தே மேட்ச் பிக்சிங் நடந்து வருவதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஹசன் திலகரத்னே பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஏன் 4 வீரர்கள் திடீரென மாற்றப்பட்டனர். மேட்ச் பிக்ஸிங்கை நாம் இப்போது நிறுத்தாவிட்டால், பாகிஸ்தான் கதி தான் இலங்கைக்கும் ஏற்படும்.

 மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டு வருவோரின் பெயர் விவரங்களை விரைவிலேயே வெளியிடுவேன். இந்த மோடி இன்று, நேற்று தொடங்கவில்லை. நீண்டகாலமாகவே உள்ள பிரச்சனை இது. 1992ம் ஆண்டிலிருந்து இந்த பிக்ஸிங் நடக்கிறது என்பதை உறுதியாகவே சொல்வேன்.

நடந்து முடிந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டி பிக்ஸ் செய்யப்பட்டது என்று நான் சொல்லவில்லை. ஆனால், அந்தப் போட்டியில் 4 வீரர்களை ஏன் கடைசி நேரத்தில் மாற்றினார்கள் என்று மக்கள் கேள்வி கேட்கிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள், பதில் சொல்லித் தான் ஆக வேண்டும். மென்டிசை ஏன் மாற்றினார்கள்?, ரன்னே எடுக்காத கபுகேந்திராவை ஏன் சேர்த்தார்கள்?.

மேட்ச் பிக்சிங் இந்த நாட்டின் கிரிக்கெட்டில் சகஜமாகிவிட்டது என்கிறேன். இது இப்போது கேன்சர் மாதிரி பரவிக் கொண்டிருக்கிறது. இதை வெளியில் சொல்ல பலர், பலமுறை முயன்றனர். ஆனால், அவர்களுக்கும் பணம் தந்து வாயை அடைத்துவிட்டனர்.

எனது இந்தப் பேட்டியை அந்த மேட்ச் பிக்ஸிங் கும்பலும் படிக்கும். அவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். விரைவிலேயே, உங்கள் பெயர் விவரங்களையும் வெளியில் சொல்வேன். (தட்ஸ் தமிழ்)

இந்த மோசடியை இப்போதாவது, பொறுப்பில் உள்ளவர்கள் தலையிட்டு அடுத்த சில ஆண்டுகளிலாவது முறியடிக்க வேண்டும். ஊழலும், அரசியலும் நிறைந்த இலங்கை கிரிக்கெட் வாரியம் இதைச் செய்யத் தவறினால், பாகிஸ்தான் அணிக்கு ஏற்பட்ட நிலைமை தான் இலங்கைக்கும் ஏற்படும் என்றார் ஹசன் திலகரத்னே.

2003ம் ஆண்டிலிருந்து 2004ம் ஆண்டு வரை 10 மேட்ச்களுக்கு இவர் கேப்டனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணி நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கும் என்று பொருத்திருந்து பார்ப்போம்..

28 April, 2011

நீயெல்லாம் ஒரு பெண்ணா....?




தையாவது இழந்து 
எதையாவது கொடு என்றாள்....
நேரத்தை வீணடித்து 
நேர்த்தியாய் ஒரு  கவிதை தந்தேன்...!

*******************************************


வள் சிரித்தால்..
அதற்குபின் மறைந்துக்கிடக்கும்
என் மரணத்தைப்பற்றி கவலைப்படமாமல் 
நானும் சிரித்தேன்..!

*******************************************


நீ போட்ட கோலத்தை விட
அழகாய் பதிந்து போயிருக்கிறது
பக்கத்தில் உன் பாதங்கள்..

*******************************************


யமில்லை..
வலிக்குப் பயந்திருந்தால்
நான் காதலிக்க அல்லவா 
பயந்திருக்க வேண்டும்...!

*******************************************

கவிதைகுறித்த தங்கள் கருத்தை பதிவுச் செய்யுங்கள்...


27 April, 2011

ஆர் யு ரிலாக்சிங் ?



 

ஒரு நாள் மாலை கடற்கரையில் சர்தார்ஜி ஓய்வெடுத்துக்கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற ஒருவர் சர்தார்ஜியை பார்த்து ஆர் யு ரிலாக்சிங் ? (Are you relaxing ?) என்று கேட்டார்.

உடனே சர்தார்ஜி நோ ஐ‘ம் மகேந்தர் சிங் (No, i’m mahendhar Singh) என்றார்.

பிறகு சிறிது நேரம் கழித்து அந்த வழியாக சென்ற மற்றொருவர் சர்தார்ஜியை பார்த்து ஆர் யு ரிலாக்சிங் ? என்றார்.

கடுப்பான சர்தார்ஜி நோ ஐ‘ம் மகேந்தர் சிங் என்றார் மீண்டும் .

பிறகு இடத்தை மாற்ற முடிவு செய்த சர்தர்ஜி நடக்க ஆரம்பித்தார்.
அப்போது அங்கே அமர்ந்திருந்த ஒருவரை பார்த்த சர்தார்ஜி அவரிடம் சென்று ஆர் யு ரிலாக்சிங் ? என்று கேட்டார்.

உடனே அவர் யெஸ் என்றார்.

உடனே சதார்ஜி அவர் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டு சொன்னார், '' உன்னை எல்லோரும் அங்கே தேடிக்கிட்டு இருக்காங்க,
நீ என்னடான்னா இங்க உட்காந்துகிட்டு இருக்கே ! “ என்றார்.

******************************************

சர்தார் 1: நம்ம ரெண்டு பேரும் பில்டிங்க்கு பாம் வைக்க கார்ல போறோம்

சர்தார் 2: போற வழியிலே பாம் வெடிச்சுட்டா??

சர்தார் 1: கவலைப்படாதே!! என்கிட்ட இன்னொரு பாம் இருக்கு!!


யாராவது வந்து ஓட்டு போடாம போராங்கலான்னு பாரு தல...


26 April, 2011

இலங்கை அரசை இனி என்ன செய்ய போகிறது ஐ.நா., - அதிர்ச்சி ரிப்போர்ட்



விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி தமிழர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இலங்கையில் தனிநாடு கேட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுத போராட்டம் நடத்தி வந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தை இலங்கை ராணுவம் கடந்த 2009ம் ஆண்டு இரும்புக்கரம் கொண்டு நசுக்கியது. அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றது. 
 
இறுதிக்கட்டமாக நடைபெற்ற போரில் இலங்கை ராணுவம் அத்துமீறி செயல்பட்டதாக பரவலான குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்த ஐக்கிய நாடுகள் சபை 3 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இந்தோனேசியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் மார்சுகி தலைமையில் அமைக்கப்பட்ட இந்தக்குழுவின் அறிக்கை நேற்று நியூயார்க்கில் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கை ராணுவம் போர் குற்றம் புரிந்ததற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருக்கின்றன. விடுதலைப்புலிகள் தரப்பிலும் போர்க்குற்றம் புரிந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. சுமார் 3 லட்சம் அப்பாவி தமிழர்களை விடுதலைப்புலிகள் கேடயமாக பயன்படுத்தியுள்ளனர். தப்ப முயற்சித்தவர்களை சுட்டுக் கொன்றுள்ளனர். 
 
கடைசி கட்ட போரில் இலங்கை ராணுவத்தால் 40 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். மருத்துவமனைகள், ஐநா முகாம்கள் மற்றும் செஞ்சிலுவை சங்க முகாம்களும் இலங்கை ராணுவத்தின் குண்டுவீச்சுக்கு தப்பவில்லை. போர்க் கைதிகளை இலங்கை ராணுவம் கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளது. வீராங்கனைகள் பலாத்காரம் செய்யப்பட்டனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கைகள் சரி இனி என்ன நடவடிக்கைகள் எடுக்கப் பேர்கிறது ஐ.நா., கண்ணுக்கு தெரிந்த ஒரு நிகழ்ச்சிக்கு இந்த விசாரணை ஏன் என்று தெரியவில்லை. சரி விசாரணை முடிந்தும் சர்வதேச நீதிமன்றத்தின் முன் ராஜபக்சேவை நிறுத்த ‌ ஐ.நா., நடவடிக்கை எடுக்க யோசிப்பது ஏன்என்று தெரியவில்லை. தமிழர்ளுக்கு எதிராக இவ்வளவு பெரிய நயவஞ்சக செயலை செய்த ராஜபக்சேவை தண்டிக்க வேண்டும் என்பதே உலக தமிழர்களின் ஒட்டு மொத்த வேண்டுகோள்.

சில பூக்கள் காயம் செய்யும்....



சில பூக்கள்
காயம் செய்யும்...

ரோஜாவை கிள்ளியபோது
குத்திய முள்...

ல்லிகை பறித்த போது
கிழித்த கம்பி...

ப்போதும் என்னை
உதாசினம் படுத்தும்
அவள்....

ம்...
சில பூக்கள்

காயம் செய்யும்...


கவிதை குறித்த தங்கள் கருத்தை சொல்லுங்கள்..

25 April, 2011

இயக்குனர் பாலா கொலை செய்தது யாரை..?


தமி்ழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வளர்ந்துவிட்டவர் இயக்குனர் பாலா. இயக்குனர் பாலும‌கேந்திராவிடம் உதவியாளராக இருந்து பின்பு தனியாக படங்களை இயக்க ஆரம்பித்தார். இதுவரை இவர் இயக்கிய படங்கள். சேது (1999),  நந்தா (2001), பிதாமகன் (2003), நான்கடவுள் (2009) ஆகிய படங்கள். பாலா படம் என்றாலே கண்டிப்பாக தேசிய விருது வாங்கிவிடும் என்ற நம்பிக்கையை தமிழ் திரைஉலகில் வளர்த்து விட்டவர். அவருக்கும் அவருடைய படங்களுக்கும் தமிழ் திரைஉலகம் என்றும் சிகப்பு கம்பளம் விரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

பாலாவின் முதல் படம் சேதுவில் விக்ரம், அபிதா ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்தனர். அந்தப்படத்தின் கதைப்படி இறுதிகாட்சிகளில்  நாயகி இறந்து விடவது போலவும், நாயகன் விக்ரம் மனநலம் பாதிக்கப்பட்டவராக  மாறிவிடுகிறார். டி.ஆர்.க்கு பிறகு இது போன்று சோகமான முடிவை இவருடைய படம் கொடுத்ததால் பார்ப்பவர்களை கலங்கவைத்தார். இருந்தும் சபாஷ் வாங்கினார்.

இவரது இயக்கத்தில் வந்த அடுத்தப்படம் நந்தா இந்தப்படமும் தமி‌ழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டபடம். இலங்கை அகதிகளை மையப்படுத்தி எடுத்தப்படம். இந்தப்படத்தில் நாயகனாக சூர்யாவும், இலங்கை அகதியாக நாயகி லைலாவும் நடித்தனர். இந்தப்படத்திலும் இயக்குனர் படத்தின் இறுதிமுடிவை சோகமாகவே முடித்திருந்தார். நாயகன் சூர்யா இறந்துவிடுகிறார்.

பாலாவின் அடுத்தப்படம் பிதாமகன். தனித்தனியாக தன்படங்களில் நடித்த விக்ரம், சூர்யாவை இந்தப்படத்தில் ஒன்றாக நடிக்க வைத்தார். கதைப்படி விக்ரம் இடுகாட்டு பணியாளர் போன்று வசனம் இல்லாமல் நடித்தார். விக்ரம் கலகல பேர்வழியாக வந்து கலக்கினார். இறுதி காட்சிகளில் நாயகன் சூர்யா கொலையுண்டு போவது போலவும், விக்ரம் வில்லனை அகோரமாக கொல்வது போலவும் வைத்து இறுதிகாட்சிகளில் அனைவரையும் கண்கலங்க வைத்துவிட்டார்.

அடுத்தப்படம் நான் கடவுள் இதில் நாயகன் நாயகி யார்த்தப்பாத்திரத்தில் நடிக்க வைத்து அசத்தினார். படம் ஒரு அகோரி யான ஆர்யதவை சுற்றி படம் நகர்ந்தது. இறுதிகாட்சிகளில் நாகியை கொன்று நிஜமான அகோரியாக மாறி விட கண்ணீரோடு திரையரங்கம் வணக்கம் போட்டது..

பொதுவாக தமிழ் சினிமாவில் நாயகனோ அல்லது நாயகியோ இறப்பது போன்று படம் முடிந்தால் தமிழ் ரசிகர்கள் அந்த படத்தை விரும்புவது இல்லை. ஆனால் அதற்கு விதிவிலக்கு பாலா படங்கள். இவர் படங்கள் சோகமான முடிவு ‌ என்றாலும் வசூலிலும், பாராட்டுக்களிலும், விருதுகளிலும் குறையிருப்பதில்லை.

இதற்கிடையில் தற்போது வெளியாக உள்ள அவன்-இவன் படமும் தமிழகத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் விஷால் மற்றும் ஆர்யா தன்னுடைய இமேஜை துறந்து இந்த படத்தை நடித்து கொடுத்து ஒரு இயக்குனர் படமாக தந்துள்ளனர். பொதுவாக பாலா இறுதிகாட்சிகளில் இரு நாயகர்களில் ஒருவரை கொன்று விடுவது வழக்கம் அந்த வழக்கப்படி இப்படத்தில் இருநாயகன்களில் அல்லது நாயகிகளில் யாரை கொலைசெய்யப்போகிறார் என்று தெரியவில்லை.

நாயகன் இறந்துப்போவது கதையை வலிமைபடுத்துவதாக இருந்தாலும் அவர் அவருடைய ரசிகர்கள் மனதில் நிச்சயம் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தும். (எம்.ஜி.ஆர் இறந்துவிடுவது போன்று ஒரு படமும் இல்லை என்று நினைக்கிறேன்).

பாலாவின் படங்கள் நிச்சயம் தேசிய விருதுக்குரியப்படம் அந்த வரிசையில் அவன் இவன் படம் பல்வேறு விருதுகளை வாங்கி வெற்றியடைய வாழ்த்துகிறேன்..

படப்பிடிப்பு முடிந்து விட்டது. கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் தயாரிப்பாக உருவாகியுள்ள அவன் இவனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிடப் போவதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகின.

இப்போது அந்த செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாப்பிள்ளை, எங்கேயும் காதல் ஆகிய படங்களுக்குப் பிறகு, பாலாவின் அவன் இவன் வெளியாகும் எனத் தெரிகிறது.

23 April, 2011

ஒரு சர்வதேச எச்சரிக்கை... எங்களை பிரிக்க முடியாது...





நான் எல்லோரிடத்திலும்
சினேகம் பாராட்டி
அன்போடு கலந்த ‌பொழுதில்
என்னோடு அன்பு காட்டியும்...


நெஞ்சில் நஞ்சுக் கலந்து
கண்களில் தீ வளர்த்து...
சினம் கொண்டு
எதிரியை சொல்லால் சுட்ட பொழுதில்
என்னோடு மேனிச் சிவந்தும்....
 
ள்ளி படிப்பு முடிந்தப்பின்
மூன்றாம் பிறையாய் மீசை முகம் காட்ட
கல்லூரி சாலைகளில் கால் பதித்து
நான் காலங்களை தின்ற போது
சகத்தோழனாய் என் மீது கைப்போட்டும்...


சான்றிதழ்களை சுமந்துக் கொண்டு
வேலை கேட்டு ஏறிய படிகளில்
வெறுமையாய் திரும்ப
எதிர் கால கனவுகளில் தலைத் தாழ்கையில்
எனக்கு நம்பிக்கை அளித்துக் கொண்டும்...


வேலையில்லாதவர் தேவையில்லாதவர்
என நாடே புறம் தள்ள...
மாநகர பூங்காக்களில்
‌புள்வெளிகளில் படுத்துக்கிடக்கும் போது
என் அருகில் படுத்துக் கிடந்தும்...


காதல் நோய் பிடித்து
வானுக்கும் பூமிக்கும் பறந்து திரிந்து
பூக்கள் கூட்டத்தில் முகாமிட்டு
கவிதை சோலையில் கால் நீட்டி சாய்து கிடக்கும் போது
என் மடியில் தலை வைத்துச் சாய்ந்தும்...


யுளில் ஒரு நாளை கூட்டிக் ‌கொள்ள
அடிவயிறு வலியெடுக்க
அங்கமெல்லம் குலுங்க
ஆனந்தமாய் சிரித்த பொழுதில்
என்னோடு சிரித்துக் கொண்டும்...
 
ராரின் செய்கை எண்ணி
உற்றாரின் வஞ்சகத்தாலும்..
நட்பாளரின் துரோகத்தாலும்.
நொந்து நொடிந்து கண்ணீர் கசிந்து நிற்கையில்
என்னோடு விசுப்பிக் கொண்டும்...


தூரப்பயணங்களில்
நொடிகலெல்லாம் மணிகளாகும் போது
இடமிருப்போரும் வலமிருப்போரும்
அன்னியராய் அமைதி காக்கையில்
என் அருகில் அமர்ந்துக் கொண்டு ஆதரவு கொடுத்தும்...
 

புதுமையை கூறி வியக்க வைத்தும்...
கடமை கூறி நடக்க வைத்தும்...
காட்சி கூறி பயம் படுத்தியும்...
காவியம் கூறி கலங்க வைத்தும் ...
என்னை மனிதனாய் மாற்ற முயற்சித்திருக்கிறது..


விதைச் சொல்லியும்
கதைச் சொல்லியும்...
காதல் சொல்லியும்
காலத்தை சொல்லியும் ...
விதவிதமாய் ஆடைகள் அணிந்து
என்னை பரவசப்படுத்திக் கொண்டும்...


முடி நரைத்து.. மூளை நரைத்து..
நாடிகளும் நரம்புகளும் இற்றுப்போன பிறகும்
மரணப்படுக்கையில் படுத்துக் கொண்டு
என் வாயில் ஊற்றிய பால் வழியும் வரைக்கும்...
என்ன்னோடு ஊன்று கோலாய் இருந்தும்...


ன்னோடு
எப்பொழுதும் ஒன்றென

கலந்துக்கிடக்கிறது...
 
புத்தகங்கள்....



இன்று சர்வதேச புத்தகதினம்.....
உங்கள் கருத்துக்காக காத்துகிடக்கிறது இந்த கவிதை.....
(இது ஒரு மீள் பதிவு)

21 April, 2011

ரஜினி பட பூஜை ஒரு வாரம் தள்ளிப் போனது... ராணா செய்தி..



ராணா படத்துக்காக பிரமாண்டமான செட்கள் அமைக்கப்பட்டு வருகின்றன ஏவிஎம் ஸ்டுடியோவில். இன்னும் இறுதிக் கட்டப் பணிகளை முடிக்கவில்லை என்பதால் இன்று நடக்கவிருந்த பட பூஜை தள்ளிப் போய்விட்டதாக கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் ஏப்ரல் 20-ம் தேதி இந்தப் படத்தின் பூஜை எளிமையாக ஏவி எம் பிள்ளையார் கோயிலில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து படத்தின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான வி4 ரியாஸிடம் விசாரித்தபோது, 'அநேகமாக இந்த மாத இறுதியில் படத்தின் பூஜை இருக்கும். ஸ்கிரிப்ட் மற்றும் படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகளில் சூப்பர் ஸ்டாரும் இயக்குநரும் பிஸியாக உள்ளனர்" என்றார்.

இந்தப் படத்தில் நடிக்கும் ஏழு நாயகிகள் யார் யார் என்பது இன்னமும் அறிவிக்கப்படவில்லை. தீபிகா படுகோன் மட்டுமே இதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளார்.

இவருக்கு இந்தப் படத்துக்காக சண்டைப் பயிற்சி, சமஸ்கிருதப் பயிற்சி போன்றவற்றை கற்பித்து வருகிறார்கள்.

பூஜை போட்ட கையோடு, ரஜினி - தீபிகா டூயட் மட்டும்தான் எடுக்கப்பட உள்ளதால், மற்ற நடிகர் நடிகை தேர்வு குறித்து பின்னர் சொல்லிக் கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளாராம் சூப்பர் ஸ்டார்.

இன்னிக்கு அம்புட்டுதாங்க...

20 April, 2011

இப்படியெல்லாம் SMS வருதுங்க....



செல்லமே என் கல்லறையின் மீதும்
உன் பெயரை எழுதிவை
நினைப்பதற்காக அல்ல...
 

நான் இறந்தப்பின்னும்
உன்னை சுமப்பதற்காக...


-ஒரு அம்மாவின் கவிதை-
**********************************************************

நீ வாழும் போது
எத்தனைபேரை சிரிக்க வைக்கிறாயோ
அவர்கள்தான்
நீ இறந்தபிறகு 

உனக்காக கண்ணீர் சிந்துவார்கள்...

**********************************************************

ழகு இருந்தால் வருவேன் என்றது
காதல்...!

ணம் இருந்தால் வருவேன் என்றது
சொந்தம்...!

 துவும் ‌வேண்டாம் நான் வருவேன் என்றது
நட்பு...!


**********************************************************

னம் திறந்து பேசு
ஆனால் மனதில் பட்டதெல்லாம் பேசாதே

சிலர் 
புரிந்துக்கொள்வார்கள்....
சிலர் 

பிரிந்துச்செல்வார்கள்...

**********************************************************
 இந்த கவிதைகள்/தத்துவங்கள் என் கைபேசியில் 
குறுந்தகவல்களாக வந்தவைகள்...
இவைகள் யாருக்கு சொந்தமென்று எனக்கு தெரியாது...

தீயில் குளித்தாலும் 

சாம்பல்தட்டி எழும் பீனிக்ஸ் போன்று 
என்றும் உயிர் வாழ்பவைகள் இவைகள்...

ரசியுங்கள் அனைத்தையும்...

19 April, 2011

உறங்கும் உண்மைகள்....


“வணக்கம் டாக்டர்!”

“வாங்கம்மா.. என்ன விஷயம்?”

உறங்கும்போது உளறுகிறவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?”

”குழந்தைகள் உறங்கும்போது பேசறது, உளர்றது சகஜம்தான்.. பெரும்பாலான குழந்தைகளுக்கு இந்தப் பழக்கம் காலப்போக்கிலே தானாகவே சரியாயிடும்..!”

“எதனாலே டாக்டர் இப்படி?”

“சில பேர் தூக்கத்துலே கெட்ட கனவு கண்டு பயந்து போய் பிதற்றுவது உண்டு.. சில பேர் அன்றைக்கு நடந்த நிகழ்ச்சிக‌ள் சிலதை மனசுலே நினைச்சுக்கிட்டே தூங்குவாங்க.. அது தொடர்பாவே ஏதாவது கனவு கண்டு உளர்றதும் உண்டு. இதுக்காக ஒண்ணும் கவலைப்பட வேண்டியதில்லை!”

“அப்படிங்களா?”

“சிலப்பேர் நல்லா தூங்கிக்கிட்டிருக்கறப்போ திடீர்ன்னு பயந்து போய் முழிச்சிக்குவாங்க.. சிலபேர் தூக்கத்துலேயே எழுந்திரிச்சி நடக்க ஆரம்பிச்சுடுவாங்க..  இப்படி ஏதாவது இருந்தா டாக்டர் கிட்டே போகலாம்...”

“சரிங்க டாக்டர்..!”

“உங்க பிரச்சனை என்னங்கறதை இன்னும் சொல்லவே இல்லையே!”

“என் வீட்டிக்காரர் தூக்கத்துலே உளர்றார்.... என்னென்னமோ பேர்லாம் சொல்றார்.. சரியா புரியலே!”

“சரி.. அவர் உளர்றதை நிறுத்தணும்.. அதுக்கு மருந்து வேணும்.. அவ்வளவுதானே!”

“இல்லே டாக்டர்... அவரு சொல்ற பேரு என்னங்கறது எனக்குத் தெரியணும்.. அதனாலே அவர் கொஞ்சம் தெளிவா உளர்றதுக்கு ஏதாவது மருந்து வேணும் அவ்வளவுதான்..!” (நன்றி: வாரம் ஒரு தகவல்)



தூக்கம் மனிதனுக்கு கிடைத்த மிகப் பெரிய வரபிரசாதம். உடல் நலத்தை பேணுவதற்கும், அதே உடல் நலம் சீர்கெடுவதற்கும் தூக்கம் காரணமாகிறது. மனித வாழ்வில் தூக்கம் குறைந்தது 6 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரம் வரை தூக்கம் அவசியமாகிறது. தூங்கும் சூழ்நிலையானது மிகவும் அமைதியகவும் இருக்க வேண்டும். தூக்கம் நன்றாக இருந்துவிட்டால் பகல் பொழுது நமக்கு சொர்கமாக இருக்கும். இரவில் தூக்கம் சரியில்லை என்றால் பகல் நமக்கு வேதனைதான்.

முதுகெலும்பு தரையில் படிம்படி படுத்துறங்கும் ஒரே விலங்கினம் மனிதன்தான். தூக்கத்திற்காக நாம் மது, தூக்க மாத்திரை போன்றவை  பயன்படுத்துவதால் உடலின் நீர்ச்சத்துகளை உறிஞ்சி விடுவதால்  தூக்கம் தொடர்பான நோய்கள் அதிகரிக்கின்றன. எனவே இவற்றை  தவிர்க்க வேண்டியது அவசியம். இயல்பான தூக்கம்தான் மனிதனின் ஆயுளை அதிகரிக்கும்...

தூக்கத்தை வரவழைக்க சில டிப்ஸ்:

காபி, டீ, சாக்லெட், குளிர்பானங்கள் போன்ற வற்றை சுத்தமாகத் தவிர்த்து விடுங்கள். இவற்றிலுள்ள வேதிப்பொருட்கள், மெலட்டோனின் ஹார்மோனை கட்டுப்படுத்துகின்றன.

எந்தக் காரணம் கொண்டும் இரவு 8 மணிக்கு மேல் கம்ப்யூட்டரின் முன் உட்காராதீர்கள். 8 மணிக்கு கம்ப்யூட்டர் முன்பிருந்து எழுந்தால் தான் 10.30 மணிக்கு ஆழ்ந்து தூங்கமுடியும். குறைந்த வெளிச்சத்தில் தூங்குங்கள். தூக்க மாத்திரைகளை பயன்படுத்துவதை முழுவதுமாகத் தவிர்த்துவிடுங்கள்.

தூங்கும் முன் செல்போனை ஆஃப் செய்யும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். இல்லையெனில் யாராவது போன் செய்வார்களோ என்று உங்கள் ஆழ்மனம் நினைத்துக்கொண்டே இருக்கும். படுப்பதற்கு இரண்டரை மணிநேரம் முன் இரவு உணவை முடித்துவிடுங்கள் (தீவிர சர்க்கரை நோயாளிகளுக்கு இது பொருந்தாது). இரவில் அரைவயிறு சாப்பிடுங்கள். காலையில் அதிகமாக சாப்பிடலாம்.

சிலருக்கு பால் குடித்துவிட்டு தூங்கினால் நன்கு தூக்கம் வரும். உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்வது தூக்கத்துக்கு அருமருந்து. ஆனால், படுக்கச் செல்லும் 4 மணி நேரத்துக்கு முன்பே உடற்பயிற்சியை முடித்துக்கொள்ள வேண்டும்.  
ஏதோ எனக்கு தெரிந்ததை சொல்லிட்டேன்...
நீங்க ஏதாவது சொல்லிட்டுப் போங்க...

18 April, 2011

எனது முதலிரவு அனுபவங்கள்...


கோடி அணுக்களில் 
ஒற்றை அணுவை  உள்வாங்கி
பத்து மாதங்கள் உயிவளர்த்து மெய்வளர்த்து 
இந்த பூமிப்பந்தில் வந்து விழுந்து...

என் விழிகள் அறிந்திருக்க 
சாத்தியமில்லாத
நான் முதல்முதலாய் காற்று சுவாசித்த
ஒரு முதல் இரவு...

மிழின் அகரமும் ழகரமும் படிக்க
பள்ளியில் சேர்த்த பிறகு
பிரம்போடு வந்த ஆத்மாக்களை நினைத்து
உதரலோடு நடுங்கிய 
ஒரு முதலிரவு... 

வேடந்தாங்கல்... மகாபலிபுரம்...
சுற்றுலா செல்ல பெயர்கொடுத்துவிட்டு
பயம்கலந்த எதிர்பார்ப்பில்
என் கற்பனை குதிரைகள் 
பலமுறை சிறகடிக்க
 விடியாமல் நீண்டது 
ஒரு முதல்இரவு...

ரு பனிகால சந்திப்பில்...
சுற்றியிருக்கும் உலகத்தை
தன் தோள்மீது எனை அமர்த்திக்காட்டிய
என் தந்தை இறந்துப்போக
அவரில்லாது அழுகையோடு க‌ழிந்த
ஒரு முதல் இரவு..

னக்குள் வாலிபம் உருவெடுக்க
ஒரு முடியாத வசந்த காலத்தில்
கன்னியவள் முகம்பார்த்து
காதல் வந்து தொற்றிக்கொள்ள...


இறந்தும் இறவாமலும் உயிர்வா‌ழ்ந்த 
என் இமைகள் மூடாது இம்சித்த
ஒரு முதல் இரவு...

ன முதலிரவுகள்
என்னை உணரவைத்தவைகள்..

னி என்று வருமோ...
மஞ்சத்தில் புரண்டு
மலர்களோடு குழைந்து
என் ஜென்மம் பூரணமடைய
ஒரு முதல்இரவு... 

சும்மா ஒரு கருத்துச் சொல்லுங்க....

12 April, 2011

நீ ஒருத்தி மட்டும்தான் அப்படிபட்டவள்...

விழிகளில்
பார்வை மட்டும் தானே
உனக்குள் மட்டும் எப்படி

ஒரு காதல் கல்லுரி...

யிரம் வாசகங்களை
மௌனத்தாலே உதிர்த்து விட்டு சென்றவ‌ளே
அதன் விளக்கங்கள் தெரியாமல்
மீண்டும் உன் வருகைக்காக...!

புன்னகை மலர்களை
எங்‌கே தொலைத்தாய்
உன் இதழ்கள் மலரவே மறுக்கிறது...!

மெளனத்தா‌லே கொல்பவள்
உலகில் நீ ஒருத்தி மட்டும் தான்....!
 
தடுதிறந்து
மெளனம் கலைத்து
என் உயிரைதிருப்பிக்கொடு
வாழ்ந்துவிட்டுபோகிறேன்
உன் நினைவுகளோடு...

தங்கள் கருத்துக்காக காத்திருக்கிறது இந்த கவிதை...


09 April, 2011

இப்பவே கண்ணைகட்டுதே.. வேயில் காலத்தில் என்னவாகுமோ..

அன்பார்ந்த வசகபெருமக்களே... பதிவுலக நன்பர்களே... வசந்த காலமான பனிக்காலத்திற்கு விடை கொடுத்துவிட்டு, அடுத்து வரும் கோடை காலத்திற்கு வரவேற்பு கொடுக்கும் காலம் வந்துவிட்டது. வெயிலின் தாக்கமும், வெப்பமும் இனி நம்மை பயமுறுத்தும்.

கோடையும், உஷ்ணமும் பிரிக்க முடியாதது. அதனால் கோடையில் அதிக சூடு உடலைத் தாக்குகிறது. அப்போது, `பாடி டெம்பரேச்சர் ரெகுலேஷன்' எனப்படும் உடல் உஷ்ணத்தில் சமச்சீரற்ற தன்மை உருவாகிறது. கோடை காலத்தில் மிகுந்த சுகாதாரதன்மையுடன் உணவுகளை சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் நோய்கள் போட்டிபோட்டிக் கொண்டு நம்மை தாக்கும்.

கோடைகாலத்தில் சிறுவர்கள் நீச்சல் குளங்களில் விளையாடுவதை சுகமான அனுபவமாக கருதுவார்கள். அந்த தண்ணீர் சுகாதாரமற்றதாக இருந்தால் காதுகளில் தொற்று, கண்களில் எரிச்சல், சரும நோய் போன்றவை தோன்றும். உடலில் இருக்கும் காயத்தில் அந்த அழுக்கு நீர் படும்போது டைபாய்ட், எலி ஜுரம் போன்ற நோய்கள்கூட ஏற்படக்கூடும். 
கோடை வெயிலில் `அல்ட்ரா வயலட் கதிர்கள்' தாக்கம் மிக அதிகமாக இருக்கும். ஓசோன் மண்டலம் அதன் தாக்குதல் தன்மையை தடுக்கும். இப்போது ஓசோன் மண்டலத்தில் ஓட்டை விழும் பாதிப்பு இருப்பதால், கதிர்களின் தாக்குதல் அதிகமாக இருக்கிறது. வெள்ளை நிற சருமம் கொண்ட வெளிநாட்டினர் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டு சரும நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள்.

இந்தியர்களின் சருமம் அனே கமாக கறுப்பு நிறத்தில் இருப்பதால், இந்த கதிர்களின் தாக்குதலில் இருந்து பெருமளவு தப்பிக்க முடிகிறது. ஆயினும் கோடை வெயில் சருமத்தை பாதிக்காத அளவிற்கு பார்த்துக் கொள்ள வேண்டும். உஷ்ணம் நிறைந்திருக்கும் இந்த காலகட்டத்தில் காட்டன் ஆடைகளை அணிவது நல்லது.

செயற்கைஆடைகளை தவிர்க்க வேண்டும். அடர்த்தியான நிறத்திலான ஆடைகள் அணிந்தால் அவை உஷ்ணத்தை உடலுக்குள் ஈர்க்கும். அதனால் உடல் பாதிக்கும். இள நிறம் உஷ்ணத்தை நிராகரிக்கும். அதனால் இளநிற ஆடைகளையே அணிய வேண்டும். கோடையில் சூடுகட்டி உடலில் உருவாகும். எல்லா வயதினருக்கும் இது உருவாகும் என்றாலும் சர்க்கரை நோயாளிகளை அதிக தொந்தரவிற்கு உள்ளாக்கும்.

கோடை காலத்தில் பெரும்பாலானவர்கள் சிறுநீரகக்கல் நோயால் பாதிக்கப்படுகிறார்கள். உடல் உஷ்ணமாகும்போது உடலில் இருக்கும் தண்ணீரின் அளவு குறையும். ஆனால் வியர்வை அதிகமாக வெளியேறிக்கொண்டே இருக்கும். அதன் தொடர்ச்சியாக உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். சிறுநீர் வெளியேறுவது குறைந்துகொண்டே போகும். அப்போது உடலில் ஏற்படும் வேதிவினை மாற்றங்களால் சிறுநீரக கல் தோன்றுகிறது. தண்ணீர், எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்றவற்றை அதிகம் பருகலாம். தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்றவைகளையும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்றாக வெளியேறும். கல் உருவாகாது. ( நன்றி பல்வேறு நூல்கள்)

கோடை காலத்தில் வியர்வை அதிகமாவதால் அதை ஈடுகட்டும் விதத்தில் பருகும் தண்ணீர் பொருட்களின் அளவை அதிகரிக்கவேண்டும். ஒருவருக்கு காய்ச்சல் ஏற்படும்போது அவர் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையின் அளவு அதிகரிக்கும். அப்போது உட்கொள்ள வேண்டிய தண்ணீரின் அளவினை அதிகரிக்க வேண்டும். கூடவே உடல் உஷ்ணத்தை தவிர்க்கவும் தண்ணீர் அதிகம் தேவைப்படும். கோடை காலத்திலும், காய்ச்சல் ஏற்படும் காலத்திலும் அதிகமான அளவு தண்ணீரை உட்கொள்ள வேண்டும்.

கோடை காலத்தில் பெரும்பாலானவர்கள் தங்கள் வழக்கமான இடத்தில் இருந்து சுற்றுலாவாகவோ, உறவினர்களைப் பார்க்கவோ இன்னொரு இடத்திற்கு செல்கிறார்கள். அப்போது வெளி உணவுகளை அவர்கள் சாப்பிடும் நிலை ஏற்படுகிறது. சுகாதாரமற்ற உணவுகளை சாப்பிடுவதால் காலரா, டைபாய்ட், புட் பாய்சன் போன்ற பாதிப்புகள் ஏற்படும். 


தேர்தல் முடிந்து ஆட்சி ஆரம்பிக்கிறதோ இல்லையோ  கோடை ஆரம்பி விடும், கோடை விடுமுறையை சிறந்த வழியில் கழிக்க பழகிக்கொள்ளுங்கள். குழந்தைகள் கோடை விடுமுறை என்பதால் அதிக ஆட்ட் இருக்கும் அவர்களை ஏதாவது ஒரு ஆக்க பூர்வமான செயல்களில் ஈடுபட வழிக்கோளுங்கள்.
 

08 April, 2011

மாப்பிள்ளை - திரைவிமர்சனம்


சன் பிக்சர் கலாநிதி மாறன் சார்பாக தனுஷ் நடிக்க சுராஜ் இயக்கியிருக்கும் படம் தான் மாப்பிள்ளை. கதை பற்றி சொல்லத் தேவையில்லை பழைய ரஜினி நடித்த  மாப்பிள்ளையின் கதைதான் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றார்போல் கொஞ்சம் மாற்றி  படம் பார்க்க வந்தவர்களை சிரிக்கவைத்து அனுப்பியிருக்கிறார் சுராஜ்.

சென்னையில் அக்கா வீட்டில் ஒரு நல்ல பக்திமானாக இருக்கும் தனுஷ் (சரவணன்), அந்த பகுதியில் நமீதா ரசிகர் மன்ற தலைவராக இருக்கும் விவேக் (சின்னா) -கிற்கு காதலில் உதவ நாயகி ஹன்சிகாவை சந்திக்க,  ஹன்சிகா தனுஷின் நல்ல குணத்தைப் பார்த்து காதலில் விழ இவர் வெறுக்க அவர்  காதலிக்க இறுதியாய் நாயகியின் அம்மாவான கோடீஸ்வரி ராஜேஸ்வரியம்மாவிடம் (மனீஷா கொய்ராலா)  பெண் கேட்க செல்கிறார் தனுஷ். மாப்பிள்ளை நல்ல குணமுடையவர் என தெரிந்து திருமணத்திற்கு சம்மதிக்கிறார். திருமண ஏற்பாடுகள் நடைபெறும் வேளையில் மாப்பிள்ளை தனுஷ் கும்பக்கோணத்தில் மிகபெரிய முரட்டிபயல் என தெரியவர மாப்பிள்ளையை மாற்றி திருமண ஏற்பாடு நடக்கிறது. அதை முறியடித்து தனுஷ் திருமணம் செய்துக் கொள்கிறார் பின் வீட்டோட மாப்பிள்ளையாக வலம் வருகிறார்.

இருவருக்கும் முதல் இரவு நடக்க விடாமல் தடை செய்யும் மனீஷா அவர்களை பிரிக்க திட்ட மிடுகிறார்.  இதற்கிடையில் தனுஸை சொந்த கிராமத்திற்கு அழைக்க வரும் அப்பா அம்மாவை அவமானம் படுத்திவிட, மேலும் தனுஷின் தங்கை மனீஷாவின் ம‌கனை காதலிக்க அந்த திருமணத்தையும் நடத்த திட்டம் தீட்டி அனைவரையும் கிராத்திற்கு வரவழைக்கும் தனுஷ் பின்பு வில்லன்களின் சூழ்ச்சியில் சிக்கி அவமானம் படுகிறார் தனுஷ். 
இறுதியில் தன் தங்கைக்கு திருமணத்தை நடத்தினாரா? ராஜேஸ்வரி தனுசை மாப்பிள்ளையாக ஏற்றுக் கொண்டாரா என் இறுதிகாட்சிகளில் நகைச்சுவையுடன் சொல்லிருக்கும் படமே மாப்பிள்ளை.

இனி விஷயத்துக்கு வர்றேன்...

தனுஷ் ஆரம்பத்தில் பக்திமான் போன்று மிக அமைதியான கேரக்டரில் வந்து விவேக்குடன் கலந்து எல்லாரையும் சிரிக்க வைக்கிறார். அதன் பின்பு கும்பகோணத்தில் கலக்கல் இளைஞனாக வந்து ஊர் முழுக்க கலாட்டா தகராறு செய்யும் போது தனுஷ் அமர்களப்படுத்துகிறார். அதிகமான சண்டைக்காட்சிகள் இணைக்க அதிக அளவு கதை இல்லாததால் யாதர்த்தமான இவரின் காட்சி அமைப்புகள் நகர்கிறது.


கோடீஸ்வரி ராஜேஸ்வரியாக வரும் மனீஷா கொய்ராலா ஆரம்பத்தில் வில்லத்தனம் காட்டி தன் பெண்ணுக்கு அன்பு அம்மாவாக நடித்திருக்கிறார்.  மாப்பிள்ளை தனுசுடன் போட்டி ‌போடும் போதும் தன்னுடைய பணக்காரத்திமிரை காட்டும் போதும் ஏதோ ஓரளவுக்கு ஸ்கோர் பண்ணியிருக்கிறார். ஆனால் இவரின் நடிப்பு அந்த பாத்திரத்திற்கு பொருத்தமாக இல்லை.

படம் துவக்கம் காமெடி எக்ஸ்பிரசாக ‌ஜெட் வேகத்தில் புறப்படுகிறது. நமீதா ரசிகர் மன்றம் நடத்தும் விவேக், சத்யன், பாலாஜி கூட்டணி கா‌மெடியில் பிச்சியெடுக்கிறார்கள். நாயகியை காதலிக்க தனுஷிடம் ஐடியா கேட்டு பின்பு அதில் மாட்டிக் கொண்டு அவர்கள் படும் அவஸ்தை மற்றும் இந்த நால்வரின் வசனங்கள் ஹேர் ஸ்டைல் ஒரு கலக்கு கலக்குகிறது. அதன்பிறகு தனுசுக்கு உதவ பணக்காரர் வேஷம் கட்டும் போதும் விவேக்கின் காமெடி படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது.
 
நாயகி  ஹன்சிகா அதிக வேலை இல்லை. இவர் பதிவுலகில் டாப்ஸி இடத்தை பிடிக்க முயற்சிப்பார் என்று தெரிகிறது.

வில்லன் ஆஷீஸ் வித்யார்த் அதிக வேலையில்லை தனுசின் அப்பாவாக பட்டிமன்ற ராஜா இவர் சினிமா அப்பாவாக வந்துப் போகிறார். மணிசர்மாவின் இசையில் பாடல்கள் செல்லும்படி இருக்கிறது. என்னோட ராசி நல்ல ராசி என்ற பாடலை ரீமிக்ஸ் செய்திருக்கிறார். சிட்டிபாபு, மதன்பாப், மனோபாலா மனீஷா கொய்ராலாவை உடன் வந்து தன் பங்கிக்கு காமெடி செய்திருக்கிறார்கள்

இறுதிக்கட்ட காட்சிகள் பரபரப்பாக ஆரம்பித்து நகைச்சுவையுடன் முடிகிறது. படம் முழுக்க வசனங்கள் பஞ்ச் டயலாக் போன்றே வளம் வருகிறது.. விவேக்கின் டயலாக் மிக  மிக சூப்பர். கோடை வெயிலுக்கு இதமான ஒரு நகைச்சுவை கதை‌யை எடுத்துக்கொண்டு தன் பாணியில் சொல்லி ஜெயித்திருக்கிறார். சுராஜ்.

சன் பிக்சரின் மற்றும்மொறு மாசாலா படம் இந்த மாப்பிள்ளை.

07 April, 2011

புரியாததை புரியவைக்கும் புதிர்...



பூக்களுக்கு 
உணவாவதில்லை
உள்ளிருக்கும் வண்டுகள்...

ள்ளிருக்கும் வண்டுகளுக்காக
தேன் சிந்துவதில்லை
உதிர்ந்துப்போன பூக்கள்...

புரிந்தும் புரியாமலும்
நீளுகின்ற வாழ்க்கையின் நியதி
இதுவே..



இதிலிருந்து நீங்கள் புரிந்துக்கொண்டது என்ன...

06 April, 2011

இந்திய அணிக்கு ஒபாமா விருந்தா?..


கிரிக்கெட்டுக்கு சற்றும் சம்பந்தமில்லாத அமெரிக்காவிலிருந்தும் இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து வந்துள்ளது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் சார்பில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் டிமோதி ரோமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதனால் இந்திய கிரிக்கெட் அணியை அதிபர் ஒபாமா நேரில் அழைத்து பாராட்டி விருந்தளித்துக் கெளரவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவை நேற்று ரோமர் சந்தித்தார். அப்போது ஒபாமாவின் சார்பில் இந்திய கிரிக்கெட் அணியை, குறிப்பாக நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர், கேப்டன் டோணி ஆகியோரைப் பாராட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

சச்சின் குறித்து ரோமர் கூறுகையில், கடந்த 21 ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடிவரும் சச்சின், தனது வாழ்நாள் கனவை நனவாக்கியிருப்பது விசேஷமானது. அதேபோல எந்தவிதமான பிசிரும் இல்லாமல், மிகவும் துல்லியமாகவும், சிறப்பாகவும் முடிவெடுக்கும் கேப்டன் டோணியின் தலைமைத்துவம் பாராட்டுக்குரியது.

கிரிக்கெட் ராஜாக்களின் இந்த சாதனையை நாங்கள் பாராட்டுகிறோம். இந்தியா கேட் பகுதியில் நடந்த கொண்டாட்டத்தில் நானே கலந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன். ஆனால் அப்பகுதியில் நிலவிய போக்குவரத்து நெரிசலைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி நான் போக வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டேன்.

இந்தியா, பாகிஸ்தான் இடையிலான உறவுகள் மேம்பட இந்த கிரிக்கெட் உறவுகள் பயன்படலாம் என்று நம்புகிறேன். பிரகாசமான தொடக்கத்தை என்னால் காண முடிகிறது. உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியை மிகச் சிறப்பாக நடத்த இந்திய பாதுகாப்புப் படையினரும் பெரும் பங்காற்றியுள்ளனர். அதையும் நான் பாராட்டுகிறேன் என்றார் ரோமர்.

இந்தியாவுடன் முன்பை விட அதிக அளவிலான நெருக்கத்தை தற்போது அமெரிக்கா கடைப்பிடிக்கிறது. ஒபாமாவின் நிர்வாகத்தில் இந்திய அமெரிக்கர்கள் நிறையப் பேர் இடம் பிடித்துள்ளனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒபாமா வாழ்த்து தெரிவித்திருப்பது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

எனவே இந்தியா மற்றும் இந்தியர்களுடன் மேலும் நெருக்கத்தை வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் டோணி தலைமையிலான இந்திய அணியினரை வாஷிங்டனுக்கு நேரில் அழைத்து ஒபாமா விருந்தளித்துக் கெளரவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

05 April, 2011

இப்படியெல்லாம் அவளின் இம்சைகள்...




உன் பிரிவு
நான் வாழ்வதற்கு சாத்தியமே...
நான் செல்லும் இடங்களிலெல்லாம்
உன் நினைவுகள் இருப்பதால்...

***************************************************

ஒவ்வொறு
ரயில் பயணத்திலும் தொடர்கிறது...
மறந்து விட்டுப்போன
உன் கைகுட்டையின்
ஞாபகங்கள்...
மற்றும் 
உன் நினைவுகளை சுமந்திருக்கும்
அந்த இருக்கை...

***************************************************


உனைக் காணாமல்
திரும்பும் போதெல்லாம்
எனக்கு தெரியாமலே மரணப்படுகிறது
என் மனது...

உன் நினைவுகள் தவிர்த்து
‌அத்தனையையும் சலவைச் செய்கிறது மூளை...

***************************************************



நம் சந்திப்பின் ஞாபகங்களை
மிச்சப்படுத்திக் கொண்டிருக்கி‌றேன்...
நீ வருவதாய் சொல்லி
ஏமாற்றிவிட்ட நிமிடங்களின்
வலியைப் போக்கிக்கொள்ள...


***************************************************

படங்கள் : ஓவியர் இளையராஜா
அவருடைய இணைய முகவரி.
http://www.elayarajaartgallery.com

***************************************************
தங்கள் வருகைக்கான தடயங்களை 
இங்கே விட்டச் செல்லுங்கள்
தங்களின் கருத்துக்காக காத்திருக்கிறேன்...

04 April, 2011

சிங்கத்தின் வம்சமே சீற்றம்கொள்..




ஓ.. இளைஞனே...
இன்னும் எத்தனை காலம்
புழுக்களுக்கு ஆசைப்பட்டு
தூண்டியலில் மடியப்போகிறாய்..!

சிற்றின்பத்தில் சிக்குண்டு
எலிகளின் பொறிகளிலா 
உன் காலத்தை கடத்தப்போகிறாய்..!

சிங்கத்தின் வம்சம் நீ
பிறகு ஏன்
நரிகளுடன் நட்புறவு...!

லமரத்தின் விருட்சம் நீ
பிறகு ஏன் அரளிகளுடன்
ஆலாபனை..

டிஓடி களைத்தவனே
வட்டத்திற்குள் ஓடியது போதும்
வெளியில் வா இங்கோ கோணங்கள் பலஉண்டு..

திரிகளாகவே இன்னும் எத்தனைக்காலம் கருகிக்கொண்டிருக்கப்போகிறாய்..
மாறுதலுக்காக இன்றுமுதல்
தூண்டுகோல்களை கொளுத்துங்கள்...

ண்பனே...
உலகமே உனக்காகத்தான்
அதில் எல்லைகள் பிரிக்க 
உனக்கு அதிகாரம் இல்லை...

வேலிகளிட்டா 
விருந்தோம்பலை வளர்க்கப் போகிறாய்..!

காற்று வழிப்போ 
உன் காலம் தென்றலாய் கிடக்கும்
நாற்று வழிப்போ 
உன் காலம் வசந்தமாய் கிடக்கும்..
 
ம்பிக்கையோடு புறப்படு
நாளைகள் எல்லாம் நமக்கே...