30 March, 2013

அரசியல்வாதிகள் சினிமாகாரர்களை எதிர்ப்பது ஏன் - அஜித்குமார் சாடல்...


அரசியல்வாதிகள் சினிமாக்களை எதிர்ப்பது ஆதாயத்துக்காகவே.. இதுபோன்ற போராட்டங்களுக்கு ஊடகங்களும் முக்கியத்துவம் அளிக்கின்றன, என்று கூறியுள்ளார் நடிகர் அஜீத். மேலும் ஃபேஸ்புக்கில் அவதூறு கருத்துக்கள் எழுதுவது பொறுப்பற்ற செயல் என்றும் அவர் கூறியுள்ளார்.

தனது ஒரு படம் முடிந்ததும் மீடியாக்களைச் சந்திப்பது அஜீத் வழக்கம். அதாவது முக்கியமான சில தினசரி மற்றும் பத்திரிகைகளை. இப்போது அஜீத்தின் வலை படம் கிட்டத்தட்ட க்ளைமாக்ஸை நெருங்கிவிட்டது. இந்த நிலையில் அஜீத் பேச ஆரம்பித்துள்ளார்.
சமீபத்தில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியிலிருந்து...

வலை படத்தில் நடித்த போது சில விபத்துக்களை எதிர்கொண்டேன். காரணம் டூப் போடாமல் நடித்ததுதான். இதை நான் மட்டுமே செய்யவில்லை. எனக்கு முன்பும்கூட சிலர் செய்துள்ளனர். அதற்காக டூப் நடிகர்களை குறை சொல்லவில்லை. அவர்களும் மிக முக்கியம்தான்.

தயாரிப்பாளர்களோ, இயக்குனர்களோ ஆபத்தான காட்சிகளில் எங்களை நடிக்க வைக்க விரும்புவதில்லை. நாங்களாகவே விரும் செய்கிறோம், விபத்தையும் எதிர்நோக்குகிறோம்.

நான் மரணத்தையே பார்த்து வந்த பின், விபத்து நடக்க வேண்டும் என்று விதி இருந்தால் அதை யாரும் தடுக்க முடியாது.

எனது படங்களில் புது முகங்களுக்கு நான் வாய்ப்பு கொடுப்பதாகப் பேசுவது சரியல்ல. வாய்ப்பைக் கொடுப்பது கடவுள்தான்.

வில்லன்கள் பிரச்சினை

இப்போதெல்லாம் வில்லனாக யாரையும் காட்ட முடிவதில்லை. வில்லன் எந்த சாதியையோ, மதத்தையோ சார்ந்தவராக இருப்பதுபோல் காட்டினால் சண்டைக்கு வருகிறார்கள். வக்கீல், டாக்டர் போன்ற கேரக்டர்களைக் கூட வில்லன்களாக காட்ட முடியவில்லை.

புதுப் புது கட்சிகள் தோன்றுவதே இதற்கோல்லாம் காரணம். அரசியல் ஆதாயத்துக்காகவே எதிர்க்கின்றனர். இதுபோன்ற போராட்டங்களுக்கு ஊடகங்களும் முக்கியத்துவம் அளிக்கின்றன.

அடிப்படையில் தேசத்தில் ஒழுக்கம் குறைந்துவிட்டது. நல்ல தலைவர்கள் வேண்டும் என்கிறோம். அது போல் மக்களுக்கும் நல்ல ஒழுக்கம் வேண்டும். தலைவர்களிடம் எதிர்ப்பார்க்கும் ஒழுக்கத்தை மக்களும் கடைப்பிடிக்க வேண்டும்.

ரசிகர்கள் ஃபேஸ்புக்கில் அவதூறு கருத்துக்கள் வெளியிடுவது பொறுப்பான செயல் அல்ல. நல்ல விதமாக வளர்க்கப்பட்ட குடிமக்கள் இது போன்ற கருத்துக்களை போடமாட்டார்கள்," என்றார் அஜீத் குமார்.

யாருக்கு தெரியும் கலைஞரின் வேதனை..! இனியும் அவரை காயப்படுத்தாதீர்..!


இலங்கைப்பிரச்சனை அனைத்திலும் நாம் முன்நிற்க வேண்டும் என்ற ஆசையும் அதே சமயம் காங்கிரஸ் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படகூடாது என்ற ஆதங்கமும் தன் மனதில்போட்டு இரண்டுக்கும் தன்னை மையப்படுத்தி சமநிலையில் இருந்த கலைஞரை தற்போது காலம் தடுமாற வைத்துவிட்டது.

இலங்கை தமிழர் பிரச்னையில், தான் எடுத்து வைத்த கோரிக்கைகளை மன்மோகன்சிங்கும், சோனியாவும் கண்டு கொள்ளவில்லையே என்ற மனவேதனையில், கனத்த இதயத்துடன், பொங்கி வரும் கண்ணீரை அடக்கி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, விலக்கிக் கொண்டிருக்கிறார், கருணாநிதி.

தி.மு.க., அமைச்சர்களின் ராஜினாமா கடிதங்களை, முன் போல் ஏமாற்றம் ஏதும் தராமல், உண்மையிலேயே, பிரதமரிடம் சேர்ப்பித்திருக்கிறார். இப்படிப்பட்ட, "தியாக' உள்ளம் கொண்ட தி.மு.க., தலைவரை, "கபட வேடதாரி' என்றும், "கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்யும் போலி பக்தன்' என்றும், "நடிகர்' என்றும், தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள், "கமென்ட்' அடிப்பது, மிகவும் வருத்தம் அளிக்கிறது.

ஆங்கிலம், இந்தி மொழி பேசத் தெரியாத தன் மகன் அழகிரியை, மத்திய அமைச்சராக்கி, மாபாதகம் செய்து விட்டோமே என்று, எத்தனை இரவுகளில், கண்ணீர் வடித்திருப்பார் கருணாநிதி என்பது யாருக்குத் தெரியும்?

ஊழல் செய்தாலும், தன்னைப் போல், அதிலிருந்து தப்பிக்க தெரியாத ஒரு பெண்ணை, பெற்று தொலைத்து விட்டோமே என்று, கனிமொழி மீது, கருணாநிதி அடைந்திருக்கும் வேதனையை வெளியே சொல்ல முடியாது; அது யாருக்கு தெரியும்?

ஸ்டாலினை, தி.மு.க., தலைவராக அறிவித்திருப்பதை, தமிழக மக்கள் புறக்கணித்து விட்டால், தன் மகனின் எதிர்காலம் சூனியமாகிப் போய் விடுமே என்ற கவலை வேறு, கருணாநிதியை வாட்டுகிறது; இந்தக் கவலை யாருக்கு புரியும்?

லட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்கள், தன் போர் நிறுத்தப் பேச்சை கேட்டு, மாண்டு போயினரே என்று, நித்தமும் ரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பார் அவர்; இது யாருக்கு தெரியும்?

குறிப்பாக, இது, ஜெ.,வுக்கோ, சோனியாவுக்கோ தெரியுமா? "இலங்கை மீது, பொருளாதாரத் தடை விதிக்க மாட்டோம்; தனி ஈழத்தையும் ஆதரிக்க மாட்டோம்' என்கிறார் ராகுல். தனக்கும் அதில் உடன்பாடு உண்டு என்றாலும், அதை வெளியே சொல்ல முடியாமல், அவர் அடையும் வேதனை, யாருக்கு புரியும்?


காங்கிரசைப் பகைத்தால், தி.மு.க., ஜெயிக்காது என்ற உண்மையும், கருணாநிதிக்குப் புரிந்து விட்டது. இதனால், அவருக்கு ஏற்படும் மன உளைச்சல் தான், யாருக்கு தெரியும்?

இப்போது, "தியாகராஜப் பெருமானே... என்னைக் காப்பாற்றுங்கள்' என்று திருவாரூருக்கு சென்று, இரங்கல் பா பாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது யாருக்கும் தெரிய வேண்டாம்... தெரிந்தால், அவருடைய, "ஆத்திக இமேஜுக்கு' களங்கம் ஏற்பட்டு விடும்; பாவம் விட்டு விடுங்கள்! (கடிதத்தில் நண்பர்...)

29 March, 2013

பார்த்துட்டு... படிச்சிட்டு... சிரிச்சிட்டு போங்க...!



நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....

இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா????????? ,
 
****************************************

 
 அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?

மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.

****************************************

 
 பேய் இருக்குன்னா நம்புற நீங்க, கடவுள் இருக்காருன்னா ஏன் நம்ப மாட்டேங்குறீங்க???

என் மனைவிகிட்டேயிருந்து என்னை காப்பாத்த யாரும் இல்லையே...

****************************************

 
 ரசத்துல நான் புளியே போட மறந்துட்டேன்... எப்படி அப்படியே சாப்பிடறீங்க ?

நீ சமையல் பண்ண ஆரம்பிச்சபோதே எனக்கு வயித்துல புளியைக் கரைக்க ஆரம்பிச்சிடிச்சு

****************************************

 
 கணவன் : பக்கத்து வீட்டு மாமியோட நீ காரணமில்லாம சண்டை போடறதா எல்லாரும் புகார் சொல்றாங்க?

மனைவி : நான் என்ன பண்றது, அவங்க அசப்புல உங்க அம்மா மாதிரியே இருக்காங்களே.

****************************************


டாக்டர்.. . என் கணவருக்கு தினமும் ஸ்கூட்டர் ஓட்டற மாதிரி கனவு வருது.. .

இதுக்குப் போய் வருத்தப்படுவாங்களா ?

ஸ்கூட்டரை ஸ்டார்ட் பண்றேன்னு தினமும் ராத்திரி என்னை இல்லே உதைக்கிறாரு.
****************************************


(தொகுத்தவைகள்)
பார்த்துட்டு... படிச்சிட்டு... சிரிச்சிட்டு போக வந்த உங்களுக்கு நன்றி...!

சென்னையில் ஒரு நாள், கேடி பில்லா கில்லாடி ரங்கா - ஒரு சிறப்பு முன்னோட்டம்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஹிதேந்திரா என்ற இளைஞனின் இதயத்தை எடுத்து வேறொருவருக்கு பொருத்திய உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து மலையாளத்தில் டிராஃபிக் என்ற படத்தை எடுத்தனர். இதயம் இருப்பது ஓரிடம். அதனை பொருத்த வேண்டிய நபர் இருப்பது வேறிடம். குறிப்பிட்ட காலஇடைவெளியில் இதயத்தை உரிய மருத்துவ பாதுகாப்புடன் சேர்த்தாக வேண்டும். நெரிசல்மிக்க சாலைவழியாக மட்டுமே போக முடியும். இதயத்தை குறிப்பிட்ட நேரத்தில் எடுத்துச் சென்று இதயம் தேவைப்படுகிற நோயாளிக்கு பொருத்தினார்களா இல்லையா என்பதை விறுவிறுப்பாக காட்டியிருந்தார்கள்.

டிராஃபிக்கை தமிழில் எடுக்க விருப்பப்படுகிறேன் என்று கமல் சொன்ன பிறகு டிராஃபிக் பற்றி தமிழில் அதிகம் பேச ஆரம்பித்தனர். மலையாளத்தில் இந்தப் படத்தை தயாரித்த லிஸ்டின் ஸ்டீபனுடன் இணைந்து ராதிகா தமிழில் சென்னையில் ஒரு நாள் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். ஆனால் இயக்குனர் வேறு. தமிழில் இயக்கியிருப்பவர் ஷஹீத் காதர்.

மலையாளத்தில் குஞ்சாகா போபன் நடித்த மருத்துவர் கதாபாத்திரத்தில் பிரசன்னாவும், கார் ஓட்டும் போலீசாக நடித்த சீனிவாசனின் பாத்திரத்தில் சேரனும், அனூப் மேனனின் போலீஸ் கமிஷனர் வேடத்தில் சரத்குமாரும், ரகுமான் நடித்த வேடத்தில் பிரகாஷ்ராஜும் நடித்துள்ளனர்.

அஜயன் பாலா, பாபி சஞ்சய் திரைக்கதை எழுதியுள்ளனர். சரத்குமாரின் கதாபாத்திரத்தை டெவலப் செய்ய கேட்டுக் கொண்டதால் டிராஃபிக் இயக்குனர் சென்னையில் ஒரு நாள் படத்தை இயக்குவதிலிருந்து விலகியதாக ஒரு பேச்சு உள்ளது.
 
88*******************************88


முதல் படம் பசங்க அளவுக்கு வம்சமோ, மெரினாவோ போகவில்லை. பாண்டிராஜ் காரணத்தை ஆராய்ந்திருப்பார். காமெடியை கொஞ்சம் தூக்கலாக வைக்கலாம் என்ற முடிவில் அவர் இயக்கியிருக்கிற படம்தான் கேடி பில்லா கில்லாடி ரங்கா.

பசங்க படத்தில் அறிமுகப்படுத்திய விமலும், மொpனாவில் அறிமுகம் செய்த சிவ கார்த்திகேயனும் ஹீரோக்கள். விமலுக்கு ஜோடி பிந்து மாதவி, சிவ கார்த்திகேயனுக்கு ரெஜினா.

திருச்சி பொன்மலை பின்னணியில் படம் உருவாகியிருக்கிறது. பொன்மலை ரயில் நிலையமும் ரயிலும் ஒரு கதாபாத்திரமாகவே வருகிறதாம். படம் தாமதமானதற்கு இந்த ரயில் நிலைய காட்சிகளே காரணம் என்றும் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.

முதல்முறையாக யுவன் ஷங்கர் ராஜாவை பயன்படுத்தியிருக்கிறார். மொத்தம் ஐந்து பாடல்கள். இதில் ஒரு பாடலை சிம்பு பாடியிருக்கிறார். பாண்டிராஜின் பசங்க தயாரிப்பு நிறுவனமும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதனும் இணைந்து தயாரித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் படத்தை வெளியிடுகிறது.

படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

28 March, 2013

தமிழீழக் கோரிக்கை - ஜெயலலிதாவின் கனவு பலிக்குமா..?


எமது தனித் தமிழீழக் கோரிக்கையை வென்றெடுக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை. விரைவில் இந்தக் கோரிக்கை நிறைவேறும் என்று அடித்துக் கூறினார் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா. 
 
தமிழகத்தில் மாணவர்கள் தொடர்ச்சியாக நடத்திவரும் ஈழ ஆதரவுப் போராட்டம் தொடர்பிலான சிறப்புக் கவனவீர்ப்பு விவாதம் தமிழக சட்டச் சபையில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்றது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே முதல்வர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது: இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற ஈவு இரக்கமற்ற மனிதநேயமற்ற செயல்களை, இனப்படுகொலையை கண்டித்து இங்குள்ள மாணவ மாணவியர் போரட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்களின் போராட்டம் ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக உள்ளது. மாணவ மாணவியரின் ஒட்டுமொத்தப் போராட்டம் அரசியல் கலப்பற்றதாக, இலங்கைத்தமிழர் நலனை மாத்திரமே நோக்கமாகக் கொண்டுள்ளது. 
 
இந்த உணர்வு பூர்வமான போராட்டங்கள், கவனவீர்ப்புகள் தமிழகத்தில் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற போதும், இலங்கை அரசு தமிழர்களைத் தொடர்ந்தும் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தி வருகின்றது. 
 
சொந்த நாட்டிலேயே இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இது மட்டுமல்லாமல் ஈழத் தமிழர்கள் வசிக்கின்ற பகுதிகளில் சிங்களவர்களை இலங்கை அரசு குடியமர்த்தி வருகின்றது.

தமிழர் வழிபாட்டுத் தலங்கள் அகற்றப்படுகின்றன. மொத்தத்தில் இலங்கையில் அரசு ஓர் இனவெறி தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றது. இவற்றையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய மத்திய அரசு, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு தமிழ்நாட்டு அரசன் கோரிக்கைக்கு சற்றும் மதிப்பளிக்காமல் பாராமுகமாக இருந்து வருகின்றது. இது எமக்கு மிகுந்த வருத்தத்தையளிக்கின்றது. 
 
இந்தச் சூழ்நிலையில் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை இந்திய மத்திய அரசுக்கு மீண்டும் எடுத்துரைக்கும் வகையில் தனித் தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்மொழிகின்றேன் என்றார். இதனையடுத்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. 
 
எமது கோரிக்கைகளை வென்றெடுக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று தெரிவித்த முதல்வர் செல்வி ஜெயலலிதா, ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதால் தமிழக மாணவர்கள் போராட்டங்களைக் கைவிட்டுப் படிப்புக்குத் திரும்ப வேண்டும் மேலும் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இதே சட்ட சபையில், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அந்தத் தீர்மானத்தை இன்னமும் மத்திய அரசு நடைமுறைப்படுத்தவில்லை.

இதற்காக நாம் தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காமல் இருக்க முடியாது. சென்னையில் இடம்பெறும் ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் யாரும் பங்கெடுக்கக்கூடாது என்று பிரதமருக்கு நேற்று (நேற்று முன்தினம்) வலியுறுத்தியிருந்தேன். இதைப் போலத்தான் இந்தத் தீர்மானங்கள் வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார். 
 
அவர் தனது உரையில் 2009 ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த தி.மு.க அரசு தமிழர்களை காக்கத் தவறிவிட்டதாகவும் கூறினார். உடனடியாக எதிர்ப்பு வெளியட்ட தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். இதனால் சபாநாயகரின் உத்தரவின் பிரகாரம் தி.மு.க சட்ட உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

27 March, 2013

மயானத்தில் ஒர் இரவு... உங்கள் அனுபவம் எப்படி...?





ஒருநாள் புத்தர் தன் சீடர்களை அழைத்துக் கொண்டு பயணம் ‌சென்று கொண்டிருந்தார். மாலைவேளை போய், இரவு வந்துவிட்டது. அனைவரும் உறங்கலாம் என்று முடிவெடுத்தனர்...

அப்போது புத்தர் தன் சீடர்களிடம், “யாரோனும் நாம் உறங்குவதற்கு தகுதியான இடம் இருக்கிறதா என்று பார்த்து வாருங்கள்!“ என்று கூறி சில சீடர்களை அனுப்பினார்.

அவர்கள் சிறிது தூரம் சென்றனர். அங்கே ஒரு மயானம் இருந்தது. அதைத் தாண்டி சிறிது தூரம் சென்றனர். அங்கே ஒரு ஊர் இருந்தது. அந்த ஊரில் இரவில் தங்கலாம் என்று சீடர்கள் நினைத்தனர்.

அவர்கள் புத்தரிடம் திரும்பி வந்தனர். தாங்கள் வழியில் கண்ட மயானத்தைப்பற்றியும், அதற்கு அப்பால் ஒரு ஊர் இருப்பதையும் கூறினர்.

உடனே புத்தர் “நாம் இன்று இரவு உறங்குவதற்கு ஏற்ற இடம் அந்த மயானம் தான்!“ என்று கூறி, சீடர்களை மயானத்திற்கு அழைத்துச் சென்றார்.

சீடர்களுக்கோ உள்ளூற உதறல் எடுக்க ஆரம்பித்தது. மயானத்தில் எப்படி இரவு தங்க முடியும்? பேய்களும் ஆவிகளும் உலவுகிற இடமல்லவா அது. என்ன செய்வது? குரு தங்களை மயானத்தில் தங்கிக் கொள்ளலாம் என்று கூறிவிட்டாரே.

மறுக்க முடியாமல் அவர்கள் அனைவரும் அன்றிரவு மயானத்திலே தங்கினர். சீடர்கள் யாருமே இரவில் உறங்கவில்லை. ஒரு வழியாக மறுநாள் பொழுது விடிந்தது.

அவர்கள் எல்லோரும் முதல் வேளையாக புத்தரிடம் சென்று, “குருவே! சற்று தொலைவில் அழகான ஊர் இருக்க, எங்கள் எல்லோரையும் இந்த மயானத்தில் தங்கும்படிக் கூறினீர்களே, எதற்காக?“ என்று கேட்டனர்.

அதற்கு புத்தர், “எல்லோரும் இரவு நன்றாக உறங்கினீர்களா?“ என்று திரும்பிக் கேட்டார்.

“ஒரு நொடியும் நாங்கள் கண் மூடவில்லை“ என்று பதில் கூறினர்.

அதைக்கேட்ட புத்தரும், “அதற்காகத்தான் உங்களை இரவில் இங்கே தங்கும்படிக் கூறினேன்“ என்று கூறிவிட்டு நடையைத் தொடர்ந்தார்.

எந்நேரமும் விழித்திருத்தலே ஜென். அமைதியான, பாதுகாப்பான சூழலில் ஒருவன் இறந்த காலத்தில் ஆழ்ந்து விடுகிறான்: அல்லது எதிர்காலத்தில் மிதக்கிறான்: நிகழ்காலத்தில் வாழ மறந்துவிடுகிறான். 

அதனால் எப்போதும் மனதில் பயம் கொண்டு நிகழ்காலத்தில் விழிப்போடு இருப்போம்.

26 March, 2013

கோடையைவிட்டு தள்ளிபோன டாப் 5 தமிழ்படங்கள்...

பொதுவாக கோடை விடுமுறையில்தான் பிரபல ஹீரோக்களின் பெரிய பட்ஜெட் படங்களைப் போட்டுத் தாக்குவார்கள் கோடம்பாக்கத்தினர். ரஜினி, கமலுக்கு இது பொருந்தாது. காரணம் அவர்களின் படங்கள் எப்போது வந்தாலும் கோடை விடுமுறை எஃபெக்ட்தான்! 
 
அஜீத், விஜய், சூர்யா போன்றவர்களின் படங்களுக்கு இந்த கோடை விடுமுறை மிகப் பெரிய வசூல் வாய்ப்பு. ஆனால் இந்த ஆண்டு, கோடையில் அப்படி ஒரு பெரிய படம் கூட வெளியாகாத சூழல் உள்ளது. காரணம் ஒன்று, ஐபிஎல். இன்னொன்று படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் முடியாமல் இழுத்துக் கொண்டிருப்பது. 
 
இப்படங்கள் இந்த ஆண்டில் கலக்ககூடிய படங்களாக இருந்தாலும் தற்போது இல்லாமல் தள்ளிப்போகிறது என்ற வருத்தம் ரசிகர்களிடத்தில் இருக்கிறது.
 

கோச்சடையான் 
இந்த ஆண்டு கோடை விடுமுறை ட்ரீட்டாக ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்தது சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சைடையான் படத்தை. இந்தப் படம் இந்திய சினிமாவுக்கே புதிய அனுபவம். 3 டி மட்டுமல்ல, மோஷன் கேப்சரிங் எனும் புதிய தொழில்நுட்பத்தில் இந்தப் படம் எப்படி இருக்கும் என்பதைக் காண ஆவலாக இருக்கிறார்கள். ஏப்ரல் 14-ம் தேதி வரும் என எதிர்ப்பார்த்தனர். ஆனால் இப்போது ஜூலை இறுதிக்கு தள்ளிப் போய்விட்டது.
சிங்கம் 2 
சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம், விவேக் நடித்துள்ள படம் சிங்கம் 2. ஹரி இயக்கியுள்ள இந்தப் படம் ஏப்ரல் 14-ல் வெளியாகும் என்றார்கள். ஆனால் இன்னும் படப்பிடிப்பு முடியவில்லை. எனவே ஜூனுக்கு தள்ளிப் போய்விட்டதாகக் கூறுகிறார்கள்.
 
வலை 
வலை என்ற தற்காலிக தலைப்புடன் தயாராகிவரும் அஜீத் படமும் இந்த சம்மருக்குத்தான் வெளியாகும் என்று சொல்லி வந்தார்கள். ஆனால் இன்னும் படப்பிடிப்பு முடியவில்லை. படம் ஜூனிலாவது வெளியாகுமா என்று தெரியவில்லை.

தலைவா 
துப்பாக்கியின் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியைத் தக்கவைக்க, மீண்டும் அதே மாதிரி கெட்டப்புடன், விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தலைவா படத்தை மேயில் வெளியிடத் திட்டமிட்டனர். ஆனால் ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பு இன்னும் நடந்து வருகிறது. எனவே ஜூலை அல்லது ஆகஸ்டுக்குப் போய்விட்டது படம்.
ஐ 
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ஐ படம் கிட்டத்தட்ட 100 கோடி பட்ஜெட். சம்மரில் வந்தால்தான் இந்தப் படத்தின் பட்ஜெட்டை வசூலிக்க முடியும் என்ற நிலை. ஆனால் 55 சதவீதம்தான் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது என ஷங்கர் சொல்லியிருக்கிறார். ஒருவேளை அடுத்த சம்மருக்கு இலக்கு வைத்திருக்கிறார்களோ என்னமோ...!

24 March, 2013

கழுதைகளுக்குத்தான் புகையிலை பிடிக்குமா...?


அரசவைக் கவிஞர் பீர்பாலுக்கு புகையிலை போடும் பழக்கம் இருந்தது. அதை அமைச்சர் ஒருவர் அறவே வெறுத்தார்.

ஒரு சமயம் அக்பர் நமது அமைச்சர்களுடனும், பீர்பாலுடனும் உலாவச் ‌சென்றார்.
 
அப்போது வழியில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு கழுதை ஒரு புகையிலைச் செடியைப் பார்த்தவுடன் முகத்தை திருப்பிக் கொண்டு அப்பால் சென்றது.
 
குறிப்பிட்ட அமைச்சர் அதனை பீர்பாலுக்கு சுட்டிக்காட்டி, அந்த கழுதையைப் பாருங்கள், அதுகூட புகையிலைச் செடியையே வெறுக்கிறது என்று கேலி பேசினார்.

பீர்பாலோ அடக்கமான குரலில் உண்மைதான் அமைச்சரே! கழுதைகளுக்கு எப்போதுமே புகையிலையைக் கண்டால் பிடிப்பதில்லைதான் என்றார்.

23 March, 2013

வடிவேலு நடிக்கும் புதிய படம்... இதையாவது நம்பலாமா..?


கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் நிறுவனம் ஒரே நேரத்தில் ஆறு புதிய படங்களை அறிவித்துள்ளது. வடிவேலு நடிக்கும் தெனாலிராமன் படமும் இதில் அடங்கும்.

தமிழ் சினிமாவில் முக்கிய தயாரிப்பு நிறுவனமாகத் திகழ்கிறது ஏஜிஎஸ். இந்த நிறுவனம் தொடர்ந்து பல வெற்றிப் படங்களைத் தயாரித்து வந்தது. ஆனால் மாற்றான் படத்தின் சறுக்கல் காரணமாக, சில மாதங்கள் புதிய படம் அறிவிக்கவில்லை.

இப்போது ஒரே நேரத்தில் ஆறு புதிய படங்களை அறிவித்துள்ளார் ஏஜிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ அர்ச்சனா கல்பாத்தி. தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து அவர் வெளியிட்டிருப்பதாவது:

கஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும் :

வடிவேலு நடிக்க, யுவராஜ் இயக்கும் படத்துக்கு கஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு டி இமான் இசையமைக்கிறார்.

சந்துரு இயக்கத்தில் முழுநீள காமெடி படமாக உருவாகிறது சரஸ்வதி சபதம். ஜெய், விடிவி கணேஷ், மனோபாலா நடிக்கின்றனர்.

அடுத்து ஜெயம் ராஜா - ஜெயம் ரவியுடன் மீண்டும் கூட்டணி சேர்கிறோம்.

அதர்வா முரளி நடிக்கும் ஒரு விறுவிறுப்பான படமும் தயாராகிறது. புதுமுக இயக்குநர் யுவராஜ் இயக்குகிறார்.

ஆறாவதாக, ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுடன் இணைந்து ஒரு புதிய படம் செய்கிறோம். இதில் ஹீரோ கார்த்திக் கவுதம்.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல ஒரு பெரிய பட்ஜெட் படமும் தயாராகிறது. அதன் விவரம் இப்போது சொல்வதற்கில்லை," என்று தெரிவித்துள்ளார்.

இப்படிக்கு... உட்கார்ந்து யோசிப்போர் சங்கம்...


"ஹலோ, டாக்டர் நான் உங்களப் பார்க்க வரணும். 
நீங்க எப்ப ஃப்ரீ''

"எப்ப வந்தாலும் ஃப்ரீ கிடையாது. 
ஃபீஸ் வாங்குவேன்''
------------------------------------

தலைவர்: யோவ்! இங்கே வாய்யா! ஒரு பேச்சுக்கு "இசட் ப்ளஸ்' பாதுகாப்பு கேட்டேன். ஜன்னல் கம்பிக்கு அந்தப் பக்கம் பாரு. எத்தனை போலீஸ் நிக்குறாங்கன்னு!

தொண்டன்: நாசமாப் போச்சு. தலைவரே! நேத்து ராத்திரியிலேயிருந்து நாம ஜெயிலுக்குள்ளே இருக்கோம். அது ஜன்னல் கம்பி இல்லே, ஜெயில் கம்பி. அவங்கள்லாம் போலீஸ் இல்ல. ஜெயிலருங்க தலைவரே!

தலைவர்: ?...?...?
-------------------------------------------

வழுக்கைத் தலை ஆசாமி: எனக்கு இப்படி முடி கொட்டினதுக்கும் எனக்கிருக்கிற குடிப்பழக்கத்துக்கும் சம்பந்தம் உண்டா டாக்டர்?

டாக்டர்: சேச்சே! குடி குடியைத்தான் கெடுக்கும். முடியை ஏன் கெடுக்கப்போகுது!

-------------------------------------------

"31 நாட்கள்" கொண்ட மாதங்களைத்தான் உனக்கு ரொம்ப பிடிக்குமா? ஏன்டா?''

"மாதம் 30 நாளும் குடிக்கமாட்டேன்னு" என் பொண்டாட்டிக்கு சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கிறேன்''

-------------------------------------------

"விளையாட்டுக்குக் கூட இதுவரை நான் பொய் சொன்னதேயில்லே!''

"விளையாடறதுக்கு உனக்கு இன்னிக்கு நான்தான் கிடைச்சேனா?''

-----------------
படங்களும் நகைச்சுவைகளும்
தொகுத்தவை.....

22 March, 2013

வெரி வெரி குட்... "மை லார்ட்"

 
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு, சமீபத்தில், பணிநிறைவு பெற்றிருக்கிறார். அவர், நீதியரசராக பதவியில் இருந்த காலத்தில், 93 ஆயிரம் வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளது, குறிப்பிடத்தக்க பெரும் சாதனை. அதுமட்டுமல்ல, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து, நீதிமன்றத்தில், நீதிபதியை, "மை லார்ட்' என்று கூறும் வழக்கம் இருந்து வருகிறது. 
 
அந்நிலையை மாற்றி, நீதிபதியான தன்னை, "சார்' என்று எளிமையாக அழைக்கும் வழக்கத்தை ஏற்படுத்தியவர் இவர். கோவில்களில், பெண் தெய்வங்கள் இருக்க, பெண்களும் பூஜை செய்யலாம் என்று தீர்ப்பு வழங்கியது, இவரது புரட்சிகரமான தீர்ப்பு. 
 
அரசு உணவு தயாரித்து வழங்கும், அங்கன்வாடி ஊழியர்கள் நியமனத்தில், ஒதுக்கீடு வழங்கி, சமத்துவம் நிலவ தீர்ப்பு வழங்கியவரும் இவர் தான். இடுகாட்டை சமரசம் காணும் இடமாக, சமத்துவம் உலவும் இடமாக மாற்றியவரும் இவர் தான். இப்படி, எத்தனையோ சாதனைகள். 
 
நீதிபதியாக பதவியேற்ற போதும், பணிநிறைவு பெற்ற போதும், தன் சொத்து பட்டியலை தவறாமல் சமர்ப்பித்த நேர்மையான நீதிபதி இவர். அரசு அளித்த காரை, பணி நிறைவு நாளன்றே, தலைமை நீதிபதியிடம் ஒப்படைத்து விட்ட இவரை, வீட்டுக்கு போக தன் காரில் வர அழைத்ததைக் கூட ஏற்காமல், ஏற்கனவே வாங்கி வைத்திருந்த ரயில் சீசன் டிக்கெட்டுடன், சாதாரண மனிதர் போல, வேட்டி சட்டை அணிந்து பயணித்தது, வியப்பில் ஆழ்த்துகிறது. 
 
ஆனால், நீதியரசராக இருந்து தீர்ப்புகள் வழங்கியவர், மீண்டும், அங்கே மூத்த வழக்கறிஞராக பணிபுரிய இருப்பதாக அறியும் போது சற்று நெருடுகிறது.

அவர், இளம் வழக்கறிஞர்களுக்கு, தன் அனுபவங்களைக் கூறி, வழிகாட்டுபவராக இருப்பதே வரவேற்கத்தக்கது. மீண்டும் வழக்கறிஞர் உடை அணிந்து, நீதிபதியிடம் நியாயம் வழங்க வாதாட வேண்டுமா என்பது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும். 
 
ஐம்பது ஆண்டுகளுக்கு முன், நீதிபதியாக இருந்த வீராசாமி தற்போது கர்நாடகா, சிக்கிம் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த, பி.டி.தினகரன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக, கே.ஜி.பாலகிருஷ்ணன் (இப்போது டில்லி மனித உரிமை கமிஷன் தலைவர்) இவர்கள் மீது, வருமானத்துக்கு மேல் சொத்து சேர்த்துள்ளதாக வழக்குகள் இருக்கும் சமயத்தில், சந்துரு போன்ற நேர்மையான நீதிபதிகளும் இருக்கின்றனர் என்பது வியப்பைத் தருகிறது. அரசு அளிக்கும் எந்த பதவியையும், ஏற்கப் போவதில்லை என்ற அவரது அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
 
இவர்களே உண்மையான பாரத ரத்னாக்கள்...! வாழ்க இவர் பல்லாண்டு...!

21 March, 2013

அட இதுக்குக்கூடவா வரி கட்டணும்...! தெரிஞ்சிக்கங்க மக்களே...!



நாம் பெறும் அன்பளிப்புக்களுக்கு வரி செலுத்த வேண்டும் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

ஆம், புதிதாக வந்திருக்கும் வருமான வரி சட்டம் யு/எஸ் 52 (2)ன் படி, நமது வருமானத்தைத் தவிர்த்து வேறு வழிகள் மூலமாக வரும் வருமானங்களுக்கும் நாம் வரி கட்ட வேண்டும். இந்த புதிய வருமான வரி சட்டத்தின்படி ரூ.50,000க்கு அதிகமாக பொருளாகவோ அல்லது ரொக்கமாகவோ அன்பளிப்பாகப் பெற்றால் அந்த அன்பளிப்பிற்கு வரி செலுத்த வேண்டும்.

அது அசையா சொத்தாகவோ அல்லது அசையும் சொத்தாகவோ இருக்கலாம். ஆனால் அதன் மதிப்பு ரூ.50,000க்கு அதிகமாக இருந்தால் புதிய சட்டத்தின் படி அதற்கு வரி செலுத்த வேண்டும்.

வரி செலுத்துவதிலிருந்து விதிவிலக்கு பெறும் அன்பளிப்புகள்:

1. திருமணத்தின் போது பெறும் அன்பளிப்புகள்
2. உயில் மூலம் பெறப்படும் பூர்வீக சொத்துகள்
3. ஒரு வேளை அன்பளிப்பு வாங்கியவர் இறந்துவிட்டால்
4. இறந்த தொழிலாளியின் போனஸ், ஓய்வூதியம் மற்றும் முதிர்வுத் தொகை
5. என்ஆர்ஐ கணக்கு மூலம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் பெற்றோருக்கு அளிக்கும் அன்பளிப்பு

அதுபோல் ஒரு மருமகள் தனது மாமனார் மற்றும் மாமியாரிடமிருந்து ஒரு பெரிய தொகையையோ அல்லது பெரிய சொத்தையோ அன்பளிப்பாக பெற்றால் அதற்கு வரி செலுத்த தேவையில்லை. ஆனால் மருமகன் தனது மாமனார் மற்றும் மாமியாரிடமிருந்து ஒரு பெரிய தொகையையோ அல்லது பெரிய சொத்தையோ அன்பளிப்பாக பெற்றால் அதற்கு வரி செலுத்த வேண்டும்.

புரிந்து கொள்ள சில எடுத்துக்காட்டுகள்:

எடுத்துக்காட்டு 1

ஹரி என்பவர் தனது திருமணத்தின் போது தனது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் உடன் பணிபுரிபவர்களிடமிருந்து ரூ.50,000க்கும் அதிகமான அன்பளிப்புகளைப் பெற்றால் அதற்கு அவர் வரி செலுத்த தேவையில்லை. அதே போல் அவர் அசையும் மற்றும் அசையா பூர்வீக சொத்துக்களைப் பெற்றாலும் அதற்கு அவர் வரி செலுத்தத் தேவையில்லை.

எடுத்துக்காட்டு 2

ரூ.10 லட்சம் மதிப்பில் ஹரி தனது மனைவி தீபாவிற்காக ஒரு அன்பளிப்பு வாங்கிக் கொடுத்தால் அதற்கு அவர் வரி செலுத்த தேவையில்லை.

எடுத்துக்காட்டு 3

ஆனால் திருமணத்திற்கு முன்பு தனது வருங்கால மனைவி தீபாவிற்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான வைர நெக்லசை அன்பளிப்பாக வழங்கினால் அதற்கு வரி செலுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டு 4

ராகுல் என்பவர் ஹரி என்பவருக்கு ரூ.30,000 ரொக்க பணத்தை அன்பளிப்பாக வழங்குகிறார். அந்த பணத்திற்கு வரி செலுத்த வேண்டியதில்லை. ஆனால் அதே நிதி ஆண்டில் ராகுல் மேலும் ரூ.21,000ஐ ஹரிக்கு அன்பளிப்பாக வழங்குகிறார். தற்போது அந்த ஆண்டு முழுவதும் ராகுலிடமிருந்து அன்பளிப்பாக பெற்ற ரூ.51,000க்கும் ஹிர வரி செலுத்த வேண்டும்.

வரி செலுத்த வேண்டிய உறவினர்கள்:

1. வரி செலுத்த வேண்டியவரின் வாழ்க்கைத் துணைவர்
2. வரி செலுத்த வேண்டியவரின் சகோதரர் அல்லது சகோதரி
3. வாழ்க்கைத் துணைவரின் சகோதரர் அல்லது சகோதரி
4. வரி செலுத்த வேண்டியவரின் பெற்றோர்களின் சகோதரர் அல்லது சகோதரி
5. வரி செலுத்த வேண்டியவரின் வாரிசு அல்லது மூதாதையர்
6. வாழ்க்கைத் துணைவரின் வாரிசு அல்லது மூதாதையர்

20 March, 2013

நாம்ம ஆளுக எப்படியிருக்காங்க பாருங்க..! (இதில் உள்குத்து ஏதும் இல்லை)



இந்தியரும் அமெரிக்கரும் ஒரு சாக்லெட் கடைக்குள் நுழைந்தனர். அனைவரும் பிஸியாக இருந்த நேரம் அமெரிக்கர் 3 சாக்லெட் பார்களை யாருக்கும் தெரியாமல் எடுத்து தனது பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டார். சிறிது நேரம் கழித்து இருவரும் கடைக்கு வெளியே வந்தனர்.


அமெரிக்கர் தான் யாருக்கும் தெரியாமல் எடுத்த 3 சாக்லெட் பார்களையும் தனது பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்து இந்தியரிடம் காட்டி, 'நாங்கெல்லாம் யாரு! அப்பவே நாங்க அப்படி..! பார்த்தியா யாருக்கும் தெரியாம 3 சாக்லெட் பார்களை எடுத்து கொண்டு வந்துட்டேன் பார்த்தியா?.. என்று பெருமை அடித்ததோடு மட்டுமில்லாமல் உன்னால இதைவிட பெரிசா ஏதாவது செய்ய முடியுமா? என்று சவால் வேறு விட்டார் இந்தியரிடம்.


விடுவாரா இந்தியர். '.உள்ள வா. உனக்கு உண்மையான திருட்டுன்னா என்னன்னு காட்டுறேன்னு சொல்லி அமெரிக்கரை சாக்லெட் கடையின் உள்ளே அழைத்துச் சென்றார்.


விற்பனை கவுன்டரில் இருந்த பையனிடம் சென்ற இந்தியர், அவனிடம் கேட்டார், நான் ஒரு வித்தை காட்டுறேன் பார்க்கிறியா?..


பையனும் சரியென்று தலையாட்ட கவுண்டரில் இருந்து 1 சாக்லெட் பார் எடுத்து, அதனை தின்று முடித்தார். அடுத்து இன்னொரு சாக்லெட் பார் எடுத்து அதனையும் தின்று தீர்த்தார். பிறகு 3-வதாக ஒரு சாக்லெட் பார் எடுத்து அதனையும் தின்று முடித்துவிட்டு கவுன்டரில் இருந்த பையனை ஏறிட்டுப் பார்த்தார்.


கவுன்டரில் இருந்த பையன் கேட்டான், 'எல்லாம் சரி. இதில் வித்தை எங்கே இருக்கிறது?.'


இந்தியர் அமைதியாக பதில் அளித்தார், இப்போ 'என் ஃப்ரெண்டோட பாக்கெட்ல செக் பண்ணிப்பாரு. நான் சாப்பிட்ட 3 சாக்லெட் பாரும் இருக்கும்.'


ஹா.. ஹா.. ஹா.. யாருகிட்ட.. எப்படி நாம்ம ஆளுக... (பேஸ்புக்கில் படித்தது)

டிஸ்கி..: இப்பவாவது தெரியுதா இதில் ஏதும் உள்குத்து இல்லையென்று...

19 March, 2013

திமுக விலகல்... கலைஞரின் நாடகமா...? தேர்தல் கருதியே விலகல்..வாசகர்களின் குமுறல்...!

மத்தியில் அரசு அமைத்துள்ள, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, தி.மு.க., விலகிக் கொண்டதாக, அக்கட்சியின் தலைவர் கருணாநிதி, அறிவித்தார்.

இலங்கை தமிழர்கள் மீதான தாக்குதலை போர்க் குற்றம், இனப் படுகொலை என அறிவிக்க வேண்டும் என்ற திருத்தத்துடன், ஐ.“நா., மனித உரிமை அமைப்பில், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை, மத்திய அரசு ஆதரிக்க வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகிய இருவருக்கும், தி.மு.க., தலைவர் கருணாநிதி இரண்டு தினங்களுக்கு முன் கடிதம் எழுதினார். இதை நிறைவேற்றவில்லை எனில், கூட்டணியில் நீடிப்பதில் அர்த்தமில்லை என்றும கூறினார்.

என தினமலர் இணையதளத்தில் செய்தி வெளியானது அந்த செய்தியில் வாசககள் கூறிய கருத்துகளில் சில...


Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
19-மார்-201316:11:21 IST Report Abuse
Ramasami Venkatesan பிரதம மந்திரி அலுவலகம் 2ஜி தீர்மானங்களில் தங்களுக்கு சம்பந்தமில்லை என்றும் இது மந்திரியின் தனிப்பட்ட முடிவு என்றும் கூறிவிட்டது. இனி கேஸ் சூடு பிடிக்கும். இன்னொரு மந்திரி சபை மாற்றம் இருக்கும் தேர்தலுக்கு முன்பே. தி மு க மந்திரிகள் இருவரும் வெளியே. கனிமொழி கேசும் தீவிரமாகும். வரும் பாராளுமன்ற தேர்தலில் தி மு க அம்பேல் ஆனால் (ஆனால் என்ன - ஆகும்) மேலும் தொடரும் வழக்குகள்.
////////////
JOHN SELVARAJ - CHENNAI ,இந்தியா
19-மார்-201316:03:18 IST Report Abuse
JOHN SELVARAJ கருணாநிதி இந்த வயதிலும் இலங்கைப் பிரச்சினை குறித்து மத்திய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை, காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகல் என முக்கிய முடிவுகள் எடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், அடுத்த தி.மு.க தலைவர், அடுத்த முதல்வர் என வலம்வந்துகொண்டிருக்கும் மு.க.ஸ்டாலினோ, பிறந்தநாள் முடிந்து 20 நாளாகியும், இன்னும் தமிழகமெங்கும் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் மூழ்கியிருக்கிறார். இலங்கைப் பிரச்சினை தகித்துக்கொண்டிருக்கும் இந்நிலையில், மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்தவேண்டிய இவர் இப்படி பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதுதான் அழகா? 
///////////////
MOHAMED GANI - MADURAI,இந்தியா
19-மார்-201316:02:29 IST Report Abuse
MOHAMED GANI இவ்வளவு பிரச்சினைகள், இலங்கைத் தமிழருக்கான போராட்டங்கள் தீவிரமடைந்திருக்கும் வேளையில், தி.மு.கவின் அடுத்த தலைவர் என்று கருணாநிதியாலேயே முன்மொழியப்பட்ட ஸ்டாலின் எங்கே என்றே தெரியவில்லையே? மானவர்கள் போராட்டம் தமிழகத்தில் உக்கிரமாக இருந்துகொண்டிருக்கும் வேளையில் இன்னும் கருணாநிதிதான் பத்திரிகை அறிக்கை, தலைவர்கள் சந்திப்பு என்று பிசியாக இருக்கிறாரே தவிர ஸ்டாலின் எதிலும் கலந்துகொண்டதாகத் தெரியவில்லை. போராட்டம் நடத்தும் மாணவர்களையும் சந்தித்திக்கவில்லை இவர் எப்படி அடுத்த தலைவராக வரமுடியும்?
/////////////
LOTUS - CHENNAI,இந்தியா
19-மார்-201315:56:27 IST Report Abuse
LOTUS வழக்கம் போல ஊளை முட்டையை போட்டுவிட்டு நல்ல முட்டையை எடுத்துவா என்று குழந்தைகள் விளையாடுமே அதுதான் நடந்துள்ளது........ ராஜினாமா அறிவிப்புக்கு பின்னே மணியோசை வந்துவிட்டதே ............. பார்லிமெண்டில் தீர்மான வாசகம் மாற்றப்பட்டு ஒரு சேர தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் இந்த ராஜினாமாவும் வாபஸ் பெறப்படும் என்று .............எங்காவது பூனை கருவாட்டை விட்டு விட்டு சைவமாக மாறுமா ? ............ பதவியில்லாத கருணா என்பது அவரது சரித்திரத்தில் இல்லாதது..... எனவே, ஊரெல்லாம் போராடும் பொது தான் மட்டும் வீட்டில் இருப்பதாக யாரும் நினைக்க கூடாது என்று ஒரு நாடகம்............ நம்புவதற்கு முட்டாள் பொதுஜனம் நாமும்.............. மொத்தத்தில் பிரச்சினைக்குரிய ஈழ மக்களுக்கு 5 பைசா பிரயோஜனம் இல்லாத உண்ணாவிரதங்கள், போராட்டங்கள் , ஊர்வலங்கள், ராஜினாமா நாடகங்கள் .......... பாவம் அவர்கள்..............
/////////

Aravindh Raman - Auckland,நியூ சிலாந்து
19-மார்-201315:51:06 IST Report Abuse Aravindh Raman 2ஜீ அலை ஊழலில் தன்னையும் தனது குடும்பத்தையும் காப்பாற்ற கலைஞர் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்தே ஆக வேண்டும். இல்லையேல் கனிமொழி, தயாளு அம்மாள் மீதும் ராசா மீதும் இறுக்கு பிடி விழும் என்று பலர் முன்னர் இங்கே கருத்து எழுதி இருந்தனர்.... இப்போ? ஒட்டி இருந்தால் பதவியையும் குடும்பத்தையும் பாதுகாக்க வெட்டி விட்டால் வெறும் நாடகம்.. நான் தி மு க அடிவருடியோ கருணாநிதி ஆதரவாளனோ அல்ல..
//////////////
anu - chennai,இந்தியா
19-மார்-201315:44:48 IST Report Abuse
anu இந்த மாணவர்கள் போராட்டத்தை கருணாநிதியின் நாடகத்தால் நீர்த்து போக செய்து இலங்கை தமிழருக்கு தன்னால் மட்டுமே விடிவு உண்டு என்ற பிம்பத்தை ஏற்படுத்தி நம்ப வைத்துவிடுவார். மாணவர்களின் போராட்டம் தி.மு.க, திருமா, சிமான் போன்றவர்களின் வயிற்றில் புளியைக் கரைத்தது என்னவோ உண்மை. 9 வருடம் சுகத்தை அனுபவித்துவிட்டு இப்போது ஆதரவு வாபஸ். இலங்கை தமிழர்கள் இவர்களை நம்பும் வரை இவர்களின் அரசியல் வியாபாரம் களைகட்டும். அட ஏமாளிகளா 
///////////////
Saravana Kumar - Dallas,யூ.எஸ்.ஏ
19-மார்-201315:27:41 IST Report Abuse
Saravana Kumar பிரமாதம் தலைவரே இனி எப்பவும் இல்லன்னு சொன்னீக பாருங்க, அது தான் ராஜதந்திரம்... ப.ஜ.க கு மெசேஜ் சொல்லியாச்சு.. காங்கிரஸ் இனிமே வேண்டாம், நாங்க அடுத்த கூட்டணிக்கு தயார்... நீங்க நீங்க தான்... அணைத்து இராஜதந்திரங்களையும் கரைத்து குடித்து விட்டாய்ட நீ அ.தி.மு.க கு முன்னாடி வெளிய வந்து கூவிட்டீங்க இனிமே ஜே. ஜே ஏதாவது பண்ணியாகணும்.. என்னமோ போங்க.. 
///////////////
sethu - Chennai,இந்தியா
19-மார்-201315:19:40 IST Report Abuse
sethu நம்பாதீர்கள் தமிழா உலகத்தில் நீங்கள் யாரை வேணாலும் நம்புங்கள், கருணாவை நம்பிடாதீர்கள். குதிரைஏய் குப்புற தள்ளி குழியும் பார்த்தது வேறு யாரும் இல்லை. சட்சாத் இந்த கருணாதான். மன்மோகன் தான் பிரதமர். எப்படிவேனாலும் நீங்கள் நம்புங்கள். ஆனால் கர்ணா பின்னாடி போகணும்னு நம்பிடாதீர்கள். ஈழத்தில் நடந்ததை தமிழகத்திலும் நடத்தி அரசியல் செய்து விடுவார் இந்த நல்லவர்.
////////////////
Uthukkaattaan - Padmagiriswaram,இந்தியா
19-மார்-201315:12:16 IST Report Abuse
Uthukkaattaan ஐயா, தேர்தல் நெருங்கிவிட்டது. எல்லா பக்கமும் காங்கிரஸ் படுதோல்வியடையும் என பேசிக்கொள்கிறார்களாம். இதோ வெளியேறி விட்டார். பிஜேபி யும் பாராட்டி விட்டது. பலவகையில் மானத்தை விற்று எல்லா வழியிலும் முயன்று எங்கள் தன்மான தானை தலைவர் பிஜேபி யுடன் கூட்டணியமைத்து விடுவார். வாக்காளகள்தான் பேமானிகள். சொல்லமுடியாது. இந்துக்கள் பாபர் மசூதியை இடித்தது சரி அது காலத்தின் கட்டாயம் என்று தமிழ் தாத்தா ஹிந்தி அத்வானி தாத்தாவுடன் ஒரே மேடையில் கூடிய விரைவில் பேசுவார். காமெடியை ரசித்து தலையில் அடித்துக்கொள்ள தயாராகுங்கள்
//////////////////
Imran - Chennai,இந்தியா
19-மார்-201315:04:46 IST Report Abuse
Imran வெறும் அரசியல் நாடகம் மாணவர் போராட்டம் தான் இதுக்கு காரணம். வாபஸ் வாங்கினா மட்டும் என்ன நடக்க போகுது. என்னிக்கு தமிழ்நாடு பத்தி கவலை பட்டாங்க. இத்தாலி காரங்க 2 பேர சுட்டதுகு அவங்க தூதர அனுப்ப கூடாதுன்னு சொல்றாங்க. ஆனா 20000 மக்களை கொன்ன ராஜ்யபக்ஷ இவங்க சிவப்பு கம்பளம் விரிக்கிராங்க. இவனாக மட்டும் யோக்கியமா. ஞாயமா அவன் வரும் போதே இத பண்ணி இருக்கனும். இப்ப மாணவர் போராட்டம் ஆரம்பிச்ச பின்னாடி கூட இத பண்ணலேன்னா நாளைக்கு ஒரு ஓட்டு கூட விழாது. இது கூட ஒரு கேவலமான அரசியல் நாடகம் தான் - உண்மையான ஒரு தமிழ் நாடு பிரஜை மக்கள் உண்மையா நினைப்பது இப்படி தான்  

///////////////

Snake Babu - Salem,இந்தியா
19-மார்-201315:00:59 IST Report Abuse
Snake Babu "சிங்கம் களம் இறங்கிடுச்சி" சொல்லனும்னு ஆசைதான். ஆனா முடியாதே அவ்வளவுக்கு பாதிபடைஞ்சிருக்கோம், மறுபடியும் ஒரு பல்டி வந்தது. இனிமேல தி மு க வால எழுந்திருக்கவே முடியாது. தாத்தாவுக்கு அப்புறம்தான் மாற்றம் வரும்னு எதிர்பார்ப்பு இருக்குது. இப்பவும் ஒரு சந்தர்ப்பம். பார்ப்போம் பொறுத்திருந்து 
/////////////////
Srinivasan Dhakshnamoorthy - Malaysia,மலேஷியா
19-மார்-201314:53:50 IST Report Abuse
Srinivasan Dhakshnamoorthy தமிழக மக்களே ......உங்களை முட்டாள் ஆக்க இதோ கருணாநிதியின் மற்றும் ஒரு கபட நாடகம் ....ஜெயலிதா வரும் பொது தேர்தலில் எந்த கட்சிஉடனும் கூட்டனி கிடையாது என்று அறிவித்து விட்டார் ....கருணாநிதி கு தெரியும் தமிழகதில் இனி எந்த மடையனும் காங்கரஸ் கு ஒட்டு போட மாட்டன் என்று ....நாட்டில் மெல்ல மோடியின் அதரவு பெருகுவது தெரியும் ...அகவே தற்போது எந்த காரணமும் கிடைக்காததால்....ஈழ தமிழர்களின் பிரிச்சனையை எடுத்து மீண்டும் பதவிகளை பிடிக்க முயல்கிறார் ......கருணாநிதி அவர்களே உணர்ச்சிவசப்படும் சராசரி தமிழன் எப்போதும் போல ஏமாறுவான் என்று நினைகாதிர்கள் .....உங்கள் துரோக வரலாற்றை மறக்க மாட்டோம் .....நீங்கள் பதவி க்காக எதையும் செய்பவர் என்பதை எக்காலத்திலும் நினைவு கொள்வோம் .....நீங்கள் , உங்கள் குடும்பம் , உங்கள் மந்திரிகள் , உங்கள் கட்சி காரர்கள் செய்த அத்தனை யும் எங்கள் பிள்ளை களுக்கு சொல்லிவளர்ப்போம் .....உங்களை ஒருபோதும் எதிர்காலம் தவரிபோய் குட உங்களை நல்ல தலைவரை நினைக்க விடமாட்டோம்  
 ///////////
Arul - Chennai,இந்தியா
19-மார்-201314:44:06 IST Report Abuse
Arul கருணாவின் நாடகம் : கேள்வி: நாடாளுமன்றத்தில் நீங்கள் கேட்டபடி திருத்தங்களோடு தீர்மானம் கொண்டு வரப்பட்டால், உங்களுடைய தற்போதைய முடிவை மீண்டும் பரிசீலனை செய்வீர்களா? பதில்: அதற்கு நேரம் அதிகமாக இருக்கிறது. இன்று மாலை வரையிலே நேரம் இருக்கிறது, நாளைக்கும் இருக்கிறது, 21ம் தேதிக்கு முன்பும் இருக்கிறது. அதற்குள் நாடாளுமன்றத்தில் நாங்கள் எண்ணியவாறு இந்தத் தீர்மானம் திருத்தங்களோடு முன்மொழியப்பட்டு, விவாதத்திற்குக் கொண்டு வரட்டும்.
//////////////
Uma Shankar Umashankar - Tirupur,இந்தியா
19-மார்-201314:42:39 IST Report Abuse
Uma Shankar Umashankar மற்றும் ஒரு அரசியல் நாடகம். மத்திய அரசில் இருந்து வெளியேற இதுவே சரியான சந்தர்பம். மிகவும் சாதுர்யமான காய் நகர்த்தல். இது தான் கலைஞர் ஸ்டைல். அடுத்து கூடாரத்தை பி. ஜே.பி. இடம் நகர்த்த சரியான டைம் . அரசியல் ஒரு நாள் கிரிகெட்டை விட நல்லா தான் இருக்கு. பார்போம் அம்மாவா அய்யாவா. யார் பி.ஜே.பி. யுடன் கூட்டனி என்று. 
//////////////
இன்னும் இருக்குங்க... இதுவே பேர்தும்ன்னு நினைக்கிறேன்...

18 March, 2013

பரதேசி, விஸ்வரூபம், வழக்கு எண் 18/ 9-க்கு, தேசிய விருதுகள் ... ஓரம் கட்டப்பட்ட தமிழ் சினிமா..!


2012-ம் ஆண்டு சிறந்த படங்கள், சிறந்த திரைக் கலைஞர்களுக்கான 60 வது தேசிய விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. வழக்கு எண் 18/9 மற்றும் விஸ்வரூபம் ஆகிய படங்களுக்கு தலா இரு விருதுகள் கிடைத்துள்ளன. 

பாசு சட்டர்ஜி தலைமையிலான நடுவர் குழு அறிவித்துள்ள இந்த விருதுகளில் அகில இந்திய அளவில் சிறந்த படமாக பான் சிங் தோமரும், சிறந்த பொழுதுபோக்குப் படமாக விக்கி டோனர் படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

சிறந்த நடிகர் பான் சிங் தோமரில் நடித்ததற்காக இர்பான் கான் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மராத்தி படம் தாக்-ல் நடித்த உஷா ஜாதவ் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த துணை நடிகர் விருது விக்கி டோனரில் நடித்த அனுகபூருக்கு வழங்கப்பட்டுள்ளது. 


இஷாக்காதே படத்தில் நடித்த பரிநிதி சோப்ராவுக்கு நடுவர் குழுவின் சிறப்பு விருது வழங்கப்படுகிறது. வித்யாபாலன் நடித்த கஹானிக்கு சிறந்த ஒரிஜினல் திரைக்கதைக்கான விருதும், அக்ஷய் குமார் நடித்த ஓ மை காட் படத்துக்கு சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதும் தரப்படுகிறது. 

விஸ்வரூபம் பிராந்திய மொழிப் படங்களில் கமல்ஹாஸன் இயக்கி தயாரித்து நடித்த விஸ்வரூபம் படத்துக்கு சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் சிறந்த நடனத்துக்கான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 


பாலாஜி சக்திவேல் இயக்கி வெளிவந்த வழக்கு எண் 18/9 படத்துக்கு சிறந்த ஒப்பனைக்கான விருது கிடைத்துள்ளன. சங்கர் மகாதேவன் சிறந்த பாடகருக்கான விருது சிட்டகாங் படத்தில் இடம்பெற்ற போலோ நா பாடலைப் பாடிய சங்கர் மகாதேவனுக்கு கிடைத்துள்ளது. 

சிறந்த பாடகிக்கான விருது, மராத்தியில் வெளியான ஆர்த்தி அங்க்லேகர்ட்கேகர் படத்தில் இடம்பெற்ற நா மூன் டான் பாடலைப் பாடிய சம்ஹிதாவுக்குக் கிடைத்துள்ளது. சிறந்த இசை சிறந்த இசையமைப்பாளருக்கான விருது மராத்தி இசையமைப்பாளர் ஷைலேந்திர பார்வேவுக்கு கிடைத்துள்ளது. படம்: சம்ஹிதா. சிறந்த பின்னணி இசைக்கான விருது மலையாளப் படம் கலியாச்சனுக்கு இசையமைத்த பிஜி பாலுக்கு கிடைத்துள்ளது. 

சிறந்த பாடலுக்கான விருது சிட்டகாங்கில் இடம்பெற்ற போலோ நா பாடலுக்குக் கிடைத்துள்ளது. மலையாளம் மலையாளத்தில் வெளியான உஸ்தாத் ஓட்டல் படத்தின் வசனத்தை எழுதிய அஞ்சலி மேனனுக்கு சிறந்த வசனகர்த்தா விருது கிடைத்துள்ளது. தெலுங்கில் சிறந்த படமாக ராஜமௌலி இயக்கிய ஈகா தேர்வு செய்யப்பட்டுள்ளது சிறந்த இயக்குநர் மராத்தியில் வெளியான தாக் (Dhag) படத்தை இயக்கிய ஸ்ரீ சிவாஜி லோட்டன் பட்டேலுக்கு சிறந்த இயக்குநருக்கான விருது கிடைத்துள்ளது. 

இந்திரா காந்தி விருது புதுமுக இயக்குநரின் சிறந்த படத்துக்கான இந்திராகாந்தி தேசிய விருது சிட்டகாங் (இந்தி) மற்றும் 101 சூடியங்கள் (மலையாளம்) படங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. ரிதுபர்னோ கோஷ் பிரபல வங்காள இயக்குநர் ரிதுபர்னோ கோஷ் (சித்ராங்கதா) மற்றும் இயக்குநர் நவாசுதீன் சித்திக் ஆகியோருக்கு நடுவர் குழுவின் சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தமிழுக்கு அவ்வளவு சிறப்பானதாக இல்லை. பல்வேறு சிறந்த தமிழ்ப்படங்கள் வந்தும் இந்த ஆண்டிற்காக விருகள் பட்டியலில் அதிகம் இட்ம் பெற வில்லை. இது தமிழ் திரைஉலகினருக்கும் தமிழ் ரசிகர்களுக்கும் பெருத்த ஏமாற்றமே..