30 April, 2013

ஆன்மீகத்தில் தவறான பற்றுக்கொண்டால் இப்படித்தான் ஆகும்...!

ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது?

இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும். ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது... நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருத்தன் குபீர் என்று ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்துவிட்டது.
 
அடுத்தவன் பார்த்தான். நமக்கு ஒரு ‘வால்’ கிடைக்காதா என்று எதிர்பார்த்தான். இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது. இதுதான் நேரம் என்று இவனும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான். இந்த மனிதனையும் இழுத்துக் கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை. திணறியது. ஒரு கட்டத்தில் நாய், ‘வாள்... வாள்’ என்று கத்த ஆரம்பித்து விட்டது.

விளைவு இருவருமே ஆற்று நீர் போகும் திசையிலேயே மிதந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் போக வேண்டிய திசை வேறு. போய்க் கொண்டிருக்கிற திசை வேறு. கரை சேர நினைக்கிற மனிதர்களின் கதை இது. சிலர் கரையிலேயே நின்று விடுகிறார்கள். சிலர் காளையின் வாலைப் பிடித்துக் கொள்கிறார்கள். சிலர் நாயின் வாலைப் பற்றிக் கொள்கிறார்கள்.

ஆன்மிகம் என்ன சொல்கிறது தெரியுமா? நீங்கள் கரை சேர விரும்புகிறீர்களா? அப்படியானால் எதையும் பற்றிக் கொள்ளாதீர்கள். ஏற்கெனவே பற்றிக் கொண்டிருப்பதை எல்லாம் விட்டு விடுங்கள்!

ஆற்றின் நடுவே கம்பளி மூட்டை ஒன்று மிதந்து செல்கிறது. உள்ளே ஏதாவது பொருள் இருக்கும் என்கிற ஆசையில் ஒருத்தன் நீந்திச் சென்று அதைப் பற்றுகிறான். நீண்ட நேரம் ஆகியும் கரை திரும்பவில்லை. நடு ஆற்றில் போராடிக் கொண்டிருக்கிறான். கரையில் நின்று கொண்டிருக்கிற நண்பர்கள் கத்துகிறார்கள்...
 
‘‘நண்பா...
 
கம்பளி மூட்டையை இழுத்துக் கொண்டு உன்னால் வர முடியவில்லை என்றால் பரவாயில்லை... அதை விட்டுவிடு! ’’ஆற்றின்நடுவே இருந்து அவன் அலறுகிறான்: ‘‘நான் இதை எப்பவோ விட்டுட்டேன்... இப்ப இதுதான் என்னை விடமாட்டேங்குது ஏன்னா, இது கம்பளி மூட்டை இல்லே. கரடிக் குட்டி!’’

தவறாகப் பற்றுகிறவர்கள் தடுமாறிப் போகிறார்கள்.
சரியாகப் பற்றுகிறவர்கள் கரையேறி விடுகிறார்கள்.
பற்றையே விடுகிறவர்கள் கடவுளாகி விடுகிறார்கள்!

மன்னிப்பின் மகத்துவத்தை எரித்தோம்...!



ல்லாத் தவறுகளுக்கும்
கடைசித் தீர்ப்பாய் இருப்பது
மன்னிப்பே...!


தவறுகளின் தன்மையும், அளவுகளும் 

வேறுப்படுகின்றன
ஆனால் மன்னிப்புகள் ஒன்றே...!

மன்னிப்பளித்து மன்னிப்பளித்து
தினம் தினம் தவறுகளை 

நியாயப்படுத்தி விடுகிறோம்...!

மன்னிப்புகளுக்கு பஞ்சமில்லை இங்கு
அதனால் தான்
தவறுகள் தவறாமல் நடக்கிறது...!


தற்போது இங்கு
“மன்னிப்பு“ தவறாகிவிட்டது
தவறுகளை மன்னித்தே...!



29 April, 2013

விஜய்-க்கு அதிர்ச்சி கொடுத்த அஜீத்... பரபரப்பில் தலைவா படக்குழு...

விஜய்யின் தலைவா படப்பிடிப்பு அஜீத் குமார் திடீர் என்று வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தாராம். விஜய், அமலா பால் நடித்துள்ள தலைவா படத்தின் படிப்பிடிப்பு மும்பையில் நடந்தது. 
 
அதன் பிறகு ஆஸ்திரேலியாவில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டது. தற்போது தலைவா படப்பிடிப்பு முடிந்துள்ளது. 
 
மும்பையில் தலைவா படப்பிடிப்பு நடந்தபோது அஜீத்தின் வலை படப்பிடிப்பும் நடந்தது. அப்போது நடந்த சுவாரஸ்யமான நிகழச்சி குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.
 

விஜய்யின் தலைவா படப்பிடிப்பு தன் படப்பிடிப்புக்கு அருகில் நடப்பதை அறிந்த அஜீத் குமார் அங்கு திடீர் விசிட் அடித்துள்ளார். திடீர் என்று அஜீத் வந்தது விஜய் உள்பட மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்துள்ளது.

அஜீத் விஜய்யுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தாராம்.

தலைவா படத்தில் விஜய் பாடியுள்ள பாடலை கேட்டுள்ளார் அஜீத். பாட்டை கேட்டு முடித்ததும் இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் பாடல்களில் உங்கள் பாடலும் ஒன்று என்று தளபதியிடம் தெரிவித்துவிட்டு கிளம்பியுள்ளார்.

28 April, 2013

“பகல்ல படிச்சா படிப்பு வராதா?.. சன்டே ஸ்பெஷல் நகைச்சுவைகள்

 
ஒரு தம்பதியினர் கோயிலுக்குச் சென்றனர். அங்கு ஒரு கிணறு இருந்தது. அது விருப்பத்தை நிறைவேற்றும் கிணறு. அதனிடம் சென்று கணவன் தன் விருப்பத்தைக் கூறிவிட்டு வந்தான்.
 

பிறகு மனைவி அந்த கிணற்றுக்கு அருகே சென்றாள். அவளுக்கு உயரம் போதாததால் கொஞ்சம் எட்டிப்பார்த்தால். அவ்வளவுதான் அவள் கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டாள்.
 

கணவன் பதறியபடி, 
நிஜமாகவே பலிக்கிறதே என்றான்.

********************************
 
"நாம ரெண்டு பேரும் கோயிலுக்குப் போயி மோதிரம் மாத்திக்கலாமா?"
 

"வேண்டாம்"
 

"ஏன்?"
 

 "என் மோதிரம் நாலு கிராம்; 
உன் மோதிரம் ரெண்டு கிராம்தானே!!"

********************************
 
 ராமசாமியின் மனைவி தன்தோழியிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்..
 

 "என் பக்கத்து வீட்டு பத்மா இருக்காளே.. சுத்த மோசம்.. தன் புருஷனை இப்படியா கேவலமா பேசுவா..? இப்போ என்னையே எடுத்துக்கோ.. என் புருஷன் சுத்த மொக்கை. ஒன்னுக்கும் புண்ணியமில்லாதவர்.. வடிகட்டின முட்டாள்... சரியான வேஸ்ட்.. ஆனா நான் என்னிக்காவது, அவரைப்பற்றி யார்கிட்டயாவது தப்பாச் சொல்லியிருக்கேனா..?

********************************
 
கலிலியோ இரண்டு சின்ன விளக்குகளை வைத்து படித்தார்!
கிரகாம்பேல் மெழுகுவர்த்தி வைத்து படித்தார்!

ஷேக்ஸ்பியர் தெருவிளக்கில் படித்தார்!

ஒண்ணும் மட்டும் புரியலை,

“பகல்ல படிச்சா படிப்பு வராதா என்ன?” 
********************************
பஞ்ச் :
வீரம் என்பது உடல் பலத்தில் இல்லை
மனபலத்தில் தான் இருக்கிறது...

27 April, 2013

எம்.ஜி.ஆர் தொடங்கி குஷ்பு வரை!!! திமுக-வும் தமிழ் திரையுலமும்..!


அரசியலில் நடிகர்கள் இணைவது ஒன்றும் புதிய விசயமில்லை. நடிகர்களை வைத்து அவர்களின் ரசிகர்களை ஈர்க்கும் அரசியல் கட்சியினர், நடிகர்களுக்கு ஓரளவிற்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.


கூட்டம் சேர்க்கத் தேவை என்பதால் கட்சியில் ஓர் ஓரத்தில் நடிகர்களை வைத்து அழகு பார்க்கும் அரசியல் தலைவர்கள், கட்சியை வைத்து நடிகர்கள் வளர்கிறார்கள் என்று தெரிந்தாலே ஓரங்கட்ட ஆரம்பித்துவிடுவார்கள்.


சைலண்டாக நடக்கும் இந்த உள்குத்து நடவடிக்கைகள் எல்லா கட்சியிலும்தான் இருக்கும் என்றாலும் திமுகவில் இது கொஞ்சம் அதிகமாகவே நடக்கும். நடிகராக இருந்த எம்.ஜி.ஆர் தொடங்கி இன்றைய குஷ்பு வரை யாரும் இதற்கு விதி விலக்கல்ல. திமுகவில் நடிகர்களுக்கு ஏற்பட்ட மனச்சங்கடங்களைப் பற்றியும், அதனால் ஏற்பட்ட விலகல் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
எம்.ஜி.ராமச்சந்திரன்
*******************
எம்.ஜி.ஆர் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட எம்.ஜி.ராமச்சந்திரன் அண்ணாவின் பேச்சால் ஈர்க்கப்பட்டு திமுகவில் இணைந்தார். அண்ணாவின் மறைவிற்குப் பின்னர் கருணாநிதியை முதல்வராக்க முன் நின்றார். பொதுக்குழுவில் கணக்கு கேட்டார் என்பதற்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் அ.இ.அ.தி.மு.க உதயமானது. தொடர்ந்து 3முறை முதல்வராக தமிழகத்தை ஆட்சி செய்தார்.
நடிகர் எஸ்.எஸ்.ஆர்
*******************
லட்சிய நடிகர் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன், இந்தியாவிலேயே அரசியலில் நுழைந்து எம்.எல்.ஏ ஆன முதல் நடிகர் என்ற பெருமையோடு இருந்தவர். பொதுக்குழுவில் கருணாநிதிக்கு எதிராக கருத்து கூறியதாக அவரை அடித்து துவைக்க பாய்ந்தனர் தொண்டர்கள். இந்த கசப்பினால் கட்சியில் இருந்து விலகினார் எஸ்.எஸ்.ஆர்.
டி.ராஜேந்தர்
***********
சினிமாவில் டி.ராஜேந்தருக்கு என்று தனி ரசிகர் வட்டம் ஒரு காலத்தில் இருந்தது. அதனாலேயே திமுகவில் இணைந்தார். ஒருமுறை எம்.எல்.ஏ கூட ஆனார். எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது எல்லோரும் அடக்கி வாசிக்கையில் அவரை எதிர்த்து பிரச்சாரம் செய்தவர் டி.ராஜேந்தர். இலங்கைப் பிரச்சினைக்காக கட்சியில் இருந்து விலகினார்.

ராதாரவி
********
எம்.ஆர்.ராதா காலத்தில் இருந்தே அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரும் திமுகவில்தான் இணைந்தனர். ராதிகா, ராதாரவி ஆகியோரும் திமுகவிற்காக பிரச்சாரம் செய்தனர். அவர்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் இல்லை என்பதால் விலகிவிட்டனர்.
எஸ்.எஸ்.சந்திரன்
*****************
கட்சியின் நீண்ட நாளைய பிரச்சார பீரங்கி. நீண்ட நாட்களாக தம்பியாகவே வைத்திருந்தார் கருணாநிதி. திமுகவை உதறிவிட்டு அதிமுகவில் இணைந்தார். நாடாளுமன்ற எம்.பியாக உயர்ந்து டெல்லிக்குப் போனார்.
நடிகர் சரத்குமார்
***************
திமுகவில் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினராக டெல்லிக்குப் போனார். கட்சியில் உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று எம்.பி பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு கட்சியில் இருந்து விலகினார்.
நடிகர் தியாகு
************
ஆரம்ப காலம் தொட்டே திமுக உறுப்பினராக இருந்தவர். கட்சியில் சிலர் தனக்கு எதிராக செயல்படுகின்றனர் என்று திமுகவிற்கு முழுக்குப் போட்டுவிட்டு அதிமுகவில் இணைந்தார்.
இயக்குநர் கே. பாக்கியராஜ்
*************************
எம்.ஜி.ஆர் இருந்தபோது அவரின் வாரிசு என்று அறிமுகம் செய்யப்பட்டவர். 2006 சட்டமன்றத் தேர்தலில் திமுகவில் இணைந்தார். கடந்த 2011 தேர்தல் வரை கட்சிக்காக பிரச்சாரம் செய்தார். உரிய முக்கியத்துவம் இல்லை என்று அவரும் புலம்புகிறார்.

நடிகை குஷ்பு
************
காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதாக பேச்சு அடிப்பட்டது. ஆனால் திடீரென்று திமுகவில் ஐக்கியமானார். கட்சித் தலைவர் பற்றி பேட்டி புயலைக் கிளப்பியது. இதனால் அதிருப்தி நிலையில் இருக்கும் குஷ்பு திமுகவில் இருந்து விலகப் போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
விஜயகாந்த் உள்பட இன்னும் நிறைய நடிகர்கள் திமுக-வில் உள்ளேயும் வெளியேயும் மாறிமாறி இருந்துக்கொண்டு இருக்கிறார்கள்...

கண்டிப்பாக மருத்துவரிடம் மறைக்கக் கூடாத சில இரகசியங்கள்...!


பொதுவாக மருத்துவரிடமும், வழக்கறிஞரிடமும் எதையும் மறைக்க கூடாது என்று சொல்வார்கள். அதிலும், மருத்துவர்களிடம் நம்மைப் பற்றி எவ்வித ஒளிவு மறைவும் இல்லாமல் உண்மையைச் சொல்வது மிகவும் அவசியம். ஏனெனில் அவ்வாறு உண்மையைச் சொன்னால் தான், சரியான மருத்துவத்தை அவர்கள் செய்ய முடியும். 

இல்லையெனில் அவர்களால் எந்த ஒரு மருத்துவத்தையும் மேற்கொள்ள முடியாது. ஆகவே நமக்கு சிறப்பான மருத்துவ உதவியைச் செய்ய எந்த விஷயத்தையெல்லாம் மறைக்கக் கூடாது என்று பட்டியலிட்டுள்ளோம். அவற்றையெல்லாம் மறைக்காமல் இருந்தால், மருத்துவர்கள் மருத்துவத்தை மேற்கொள்ள உறுதுணையாக இருக்கும்.

தவறான பழக்கவழக்கங்கள்

புகைப்பிடித்தல், மது அருந்துதல், போதைப் பொருள் உட்கொள்ளுதல் போன்ற பழக்கங்கள் இருந்தால், அவற்றை மருத்துவ ஆலோசனையின் போது தயக்கமின்றி சொல்வது அவசியம். துள்ளியமாக மருத்துவம் செய்ய இது போன்ற தகவல்கள் இன்றியமையாதவையாகும்.
முந்தைய அறுவை சிகிச்சைகள்


முந்தைய காலகட்டத்தில் ஏதாவது அறுவை சிகிச்சைகள் நடைபெற்றிருந்தால், அது குறித்த விளக்கங்கள் மற்றும் சிகிச்சைத் தொடர்பான ஆவணங்கள் இருப்பின், அவற்றை மருத்துவரிடம் கொடுக்க வேண்டும். இது மருத்துவர்கள் நமது உடல் நிலையைப் பற்றி நன்றாகப் புரிந்து கொண்டு, சிறப்பாக மருத்துவம் செய்ய ஏதுவாக அமையும்.
உணவுப் பழக்கவழக்கங்கள் 

எவ்வளவு தான் ஆரோக்கியமான உணவுகள் நம்மைச் சுற்றி இருந்தாலும், சுவை மற்றும் ஆசையின் காரணமாக ஆரோக்கியமற்ற உணவைச் சாப்பிடுவதில் நம்மில் பலருக்கு ஆர்வமுண்டு. அப்படிப்பட்ட ஆரோக்கியமற்ற உணவுப் வழக்கங்களை மருத்துவரிடத்தில் தெரிவிக்க வேண்டும். இன்னும் ஒரு சிலர் டயட் என்று சொல்லி சரியாக சாப்பிடவே மாட்டார்கள். அப்படிபட்டவர்களும் மருத்துவரிடம் தெளிவாக தங்கள் உணவுப் பழக்கத்தைச் சொல்ல வேண்டும்.


மன அழுத்தம் 

இப்பொழுதிருக்கும் காலக்கட்டத்தில் பலர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் தனிமையில் இருப்பார்கள், தமக்குள்ள கஷ்ட நஷ்டங்களை வெளியில் சொல்லாமல், மனதிலேயே வைத்திருப்பார்கள். உடல் சம்பந்தப்ப்ட்ட பல பிரச்சினைகளுக்கு மன அழுத்தமும் முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆகையால், இதையும் ஒளிவு மறைவு இல்லாமல் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
உட்கொள்ளும் மருந்துகள் 

பெரும்பாலும், இப்போது அனைத்து வீடுகளிலும் ஒரு குட்டி மருந்து கடையே இருக்கிறது என்று கூறும் அளவிற்கு, மருந்துகள் மனிதனின் அன்றாட வாழ்வில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றன. அப்படி தொடர்ச்சியாக உட்கொள்ளும் மருந்து மாத்திரைகளின் விவரங்களை மருத்துவரிடம் சொல்வது மிகவும் அவசியம். இதனைக் கணக்கில் கொண்டு, நம்முடைய உடல் ஏற்றுகொள்ளும் அளவினை அறிந்து மருந்துகளை பரிந்துரை செய்ய, இந்தத் தகவல்கள் பெரிதும் உதவும்.

அலர்ஜி 

ஒரு சில மருந்து, மாத்திரைகளை உட்கொண்டால் நம்மில் பலருக்கு அலர்ஜி ஏற்படும். இது தொடர்பான தகவல்களை முன்கூட்டியே மருத்துவரிடம் தெரிவிப்பது நல்லது.
மலத்தில் இரத்தம் கலந்திருத்தல் 

மலம் பற்றி பேசவே இன்னும் நாம் தயங்கிக் கொண்டிருக்கிறோம். இந்நிலை மாற வேண்டும். மலம் கழிக்கும் போது சிலருக்கு மலத்தோடு, இரத்தம் கலந்தவாறு வெளியேறும். இதனை அவசியம் மருத்துவரிடம் சொல்ல வேண்டும். ஏனெனில் அது மலக்குடல் சார்ந்த புற்றுநோயாக இருக்க வாய்ப்புள்ளது. இதனை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால், எளிதில் குணப்படுத்த முடியும். 

இவ்வாறு நாம் அனைத்திலும் திறந்த மனதோடு, பயமோ கூச்சமோ இல்லாமல், மருத்துவரிடம் உண்மையை உரைப்பது நம் உடல் நலத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள உதவும். (நன்றி மருத்துவ உலகம்)

26 April, 2013

யாருடா மகேஷ், ஒருவர் மீது இருவர் சாய்ந்து, நான் ராஜாவாகப் போகிறேன் / 26-04-2013 படங்கள் ஒரு அலசல்

யாருடா மகேஷ்தான் படத்தின் பெயர். சமீபமாக இளம் இயக்குனர்கள் வழக்கமான திரைக்கதை அமைப்பை விடுத்து புதிதாக முயற்சி செய்கிறார்கள். யாருடா மகேஷின் ட்ரெய்லரைப் பார்த்தால் இதுவும் அப்படியொரு முயற்சி போலதான் தெரிகிறது.


சூதுகவ்வும் படத்துக்குப் பிறகு யாருடா மகேஷின் ட்ரெய்லர்தான் யு டியூபில் ஹிட். செம ரகளை. ஆண்டனி நவாஸ், ஆர்.மதன் குமார், சத்திய நாராணயன் என்று மூன்று பேர் இணைந்து படத்தை தயாரித்திருக்கிறார்கள். இதில் ஆர். மதன் குமார்தான் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாமும். கோபி சுந்தர் இசை.

சிவா என்பவன் மகேஷை தேடிச் செல்வதுதான் படத்தின் ஒன் லைன். ரொமாண்டிக் காமெடியாக உருவாக்கியிருக்கிறார்கள். கன்னடத்தில் நடித்து வரும் சந்தீப் கிஷன் ஹீரோ. ஹீரோயின் டிம்பிள். இவர்கள் தவிர நண்டு ஜெகன், லிவிங்ஸ்டன், உமா பத்மநாபன், ஸ்ரீநாத், சுவாமிநாதன், சிங்கமுத்து ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இயக்குனர் ஆர். மதன் குமார் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை இயக்கிய மணிகண்டனின் முன்னாள் உதவியாளராம். ஆனால் குருவைப் போல சொதப்பலாக இல்லாமல் நன்றாக இயக்கியிருப்பதாக கேள்வி.


நா.முத்துக்குமார் பாடல்கள் எழுதியிருக்கிறார். கலர் பிரேம்ஸும், ரெட் ஸ்டுடியோஸும் இணைந்து படத்தை தயாரித்துள்ளது. நாளை வெளியாகும் படம் நான்தாண்டா மகேஷ் என்று சொல்லிக் கொள்கிற வெற்றியை பெறுமா?

***************************
 
விஜய் நடித்து ஹிட்டான 'லவ் டுடே' மாதவனின் 'ஆர்யா' போன்ற படங்களை இயக்கிய பாலசேகரன் புதிதாக 'ஒருவர் மீது இருவர் சாய்ந்து' என்ற படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்கிறார். ஆட்ரியா டெக் பிலிம்ஸ் சார்பில் நாராயணராஜு தயாரிக்கிறார்.

இதில் நாயகனாக லகுபரன், நாயகியாக சுவாதி நடிக்கின்றனர். இவர்கள் 'ராட்டினம்' படத்தில் அறிமுகமானவர்கள். இன்னொரு நாயகியாக சான்யதாரா நடிக்கிறார். முக்கிய கேரக்டரில் பாக்யராஜும், கவுரவத் தோற்றத்தில் விசுவும் வருகின்றனர். மாஸ்டர் பரத், சிங்கம் புலி, ராஜ்கபூர், ஆர்த்தி, பரவை முனியம்மா, பாண்டு, சின்னி ஜெயந்த், அரவிந்த் ஆகியோரும் நடிக்கின்றனர்.

காதல், காமெடி படமாக தயாராகிறது. இரு பெண்களை பற்றிய முக்கோண காதல் கதை சினிமாவில் நிறைய காதல் படங்கள் வந்துள்ளன. யாரும் சொல்லாத விஷயம் படத்தில் இருக்கும். இளமை கலந்த கலர்புல் படமாக வந்துள்ளது.

சென்னை, பழனி, பாண்டிச்சேரி, பொள்ளாச்சி பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. தற்போது இறுதி கட்ட பணிகள் நடக்கின்றன.

இசை: ஷிவா, ஒளிப்பதிவு: விஜயகோபால், எடிட்டிங்: வி.டி.விஜயன்.
************************************


குலுமனாலியில் ஆரம்பித்து சென்னையில் முடியும் கதை

நகுல் கதாநாயனாக நடித்து, பிருத்வி ராஜ்குமார் கதை–திரைக்கதை–டைரக்ஷனில் வளர்ந்துள்ள ‘நான் ராஜாவாகப் போகிறேன்’ படம், ஒரு பயண கதை.

‘‘ஒரு இளைஞன் தன் வாழ்க்கையில் நடக்கிற பிரச்சினைகளின் உண்மையை தெரிந்து கொள்வதற்காக, ஊர் ஊராக பயணப்படுகிறான். கதை குலுமனாலியில் ஆரம்பித்து, போபால் வழியாக, சென்னையில் முடிகிறது’’ என்கிறார், டைரக்டர் பிருத்வி ராஜ்குமார்.

நகுலுடன் நிஷாந்த், கவுரவ், மணிவண்ணன், மைசூர் சுரேஷ், ஏ.வெங்கடேஷ், ஜெயசிம்மா, ‘வழக்கு எண்’ முத்துராமன், சேத்தன், குமரவடிவேல், டெல்லி கணேஷ், தியாகு, மயில்சாமி, கிரேன் மனோகர், மூணாறு ரமேஷ், சாந்தினி, அவனி மோடி, கஸ்தூரி, சீதா, ஆர்த்தி, வனிதா விஜயகுமார், ஜானகி, செந்தி ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள்.

உதயம் வி எல் எஸ் சினி மீடியா சார்பில் கே.தனசேகர், வி.சந்திரன் ஆகிய இருவரும் தயாரித்துள்ளனர். இணை தயாரிப்பு: என்.வி.டி.தேவராஜ். படத்தின் வசனத்தை வெற்றி மாறன் எழுதியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து இருக்கிறார். ஒளிப்பதிவு: ஆர்.வேல்ராஜ். பாடல் காட்சிகளை கோவாவில் படமாக்கியிருக்கிறார்கள். படம், அடுத்த மாதம் (ஜனவரி) திரைக்கு வர இருக்கிறது.

காதலியை காப்பாற்ற போராடும் காதலனின் கதை

நகுல் கதாநாயகனாக நடித்துள்ள ‘நான் ராஜாவாகப் போகிறேன்,’ காதலியை காப்பாற்ற போராடும் காதலனின் கதை. சமூக சேவையில் அக்கறை உள்ள கதாநாயகி ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அதில் இருந்து அவரை காப்பாற்ற கதாநாயகன் போராடுவதுதான் இந்த படத்தின் திரைக்கதை.

நிஷாந்த், கவுரவ், மணிவண்ணன், சுரேஷ், ஏ.வெங்கடேஷ், ஜெயசிம்மா, முத்துராமன், சேத்தன், குமரவடிவேல், டெல்லி கணேஷ், தியாகு, மயில்சாமி கிரேன் மனோகர், சீதா, சாந்தினி, அவனி மோடி, ஸெரின் கான், கஸ்தூரி, ஆர்த்தி, வனிதா விஜயகுமார் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இவர்களில் கஸ்தூரி கல்லூரி பேராசிரியையாகவும், வனிதா விஜயகுமார் மனநோய்க்கான டாக்டராகவும் வருகிறார்கள். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க, கதை–திரைக்கதை–டைரக்ஷன்: பிருத்வி ராஜ்குமார். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

கே.தனசேகர், வி.சந்திரன் ஆகிய இருவரும் தயாரிக்க, இணை தயாரிப்பு: என்.வி.டி.தேவராஜ். படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

25 April, 2013

அறிவுரைகளை மீறி கேன்னஸ் செல்லும் ரஜினிகாந்த்! சம்மதிப்பாரா வித்யாபாலன்?


ரஜினிகாந்த நடிப்பில் சௌந்தர்யா அஸ்வின் இயக்கும் கோச்சடையான் திரைப்படத்தின் கடைசி கட்ட பணிகள் மும்மரமாக நடந்துவருகின்றன.


உலக தரத்தில் உருவாகியிருப்பதாக கூறப்படும் கோச்சடையான் திரைப்படத்திற்கு உலக அங்கீகாரம் பெற கேன்னஸில் நடக்கவிருக்கும் புகழ்பெற்ற கேன்னஸ் திரைப்பட விழாவில் கோச்சடையானை திரையிட்டுக் காட்ட முடிவு செய்திருக்கின்றது படக்குழு.

உலகம் முழுவதிலுமிருக்கும் பல மொழித் திரைப்படங்களுக்கும் விருதுகள் வழங்கப்படும். இந்த கேன்னஸ் திரைப்பட விழாவின் படங்களை தேர்வு செய்யும் நடுவர்கள் குழுவில் தமிழ்த் திரையுலகத்தால் நிராகரிக்கப்பட்ட நடிகை வித்யாபாலனும் ஒரு நடுவராக இருக்கிறார்.

கோச்சடையான் திரைப்படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கவிருக்கும் திரைப்படம் பற்றிய தகவல்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கும் நிலையில், படக்குழு ரஜினியின் அடுத்த படத்திற்கு வித்யாபாலனை ஜோடியாக நடிக்க வைக்கும் ஐடியாவில் இருக்கிறதாக தகவல் வெளியாகியுள்ளது.


கேன்னஸ் விழாவிற்கு கண்டிப்பாக போகும் முடிவில் ரஜினி இருப்பதால் கோச்சடையான் முதன் முதலாக திரையிடப்படும் கேன்னஸ் திரைப்பட விழாவிற்கு செல்வது, அடுத்த பட ஹீரோயினை பார்ப்பது என இரண்டு வேலைகளும் ஒரே பயணத்தில் முடித்துவிடும் எண்ணத்தில் மருத்துவர்கள் அவ்வளவு தூர பயணம் வேண்டாம் என அறிவுருத்தியும் போயே தீருவேன் என்று ரஜினி கூறிவிட்டதாக கோடம்பாக்கம் பரபரக்கிறது.

ரஜினியின் கோச்சடையான் மட்டுமல்லாமல் அமிதாப் பச்சன் நடித்துள்ள ‘தி கிரேட் காட்ஸ்பி’ என்ற ஹாலிவுட் திரைப்படமும் கேன்னஸில் திரையிடப்படுவதால் ரஜினி மருத்துவர்களின் அறிவுரையைக் கூட பொருட்படுத்தாமல் கேன்னஸ் செல்வதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என பேசப்படுகிறது.

தமிழ்த் திரையுலகமே வேண்டாம் என்ற முடிவில் இருக்கும் வித்யாபாஅன் ரஜினி கேட்டால் சம்மதிக்கிறாரா? இல்லையா? என பொருத்திருந்து பார்க்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர் ரசிகர்கள்.

காய்கறி வியாபரியின் முதலிரவு அறை எப்படி இருக்கும்...!

 ''அதிக தன்னம்பிக்கைக்கு ஓர் உதாரணம்?''
 

 ''ஓர் இளைஞன் பைக் ஓட்டிச் செல்லும்போது சாலையில் பறந்த கிளியை மோதிவிட்டான். அடிபட்ட கிளி மயக்கமாகிவிட்டது. பரிதாபப்பட்ட இளைஞன், கிளிக்கு மருந்துபோட்டு, கூண்டில் வைத்திருந்தான்.

கூண்டில் கண் விழித்த கிளி நினைத்ததாம், ''அடடா! நம்மை ஜெயில்ல போட்டுட்டாங்களே, அந்த பையன் ஸ்பாட் அவுட் போல!''


*******************************************

இன்ஸ்பெக்டர் : கொள்ளைக்கும்பல்ல டிரைவரா நடிச்சு தகவல்களை அனுப்பச் சொன்னா என்ன 6 மாசமா ஒரு தகவலும் உங்கிட்டேர்ந்து வரவே இல்ல?
 
போலீஸ் : இங்க எனக்கு நல்ல சம்பளம் கொடுத்து வீடெல்லாம் குடுத்து பாத்துக்கறாங்க அய்யா.

**********************************

 மணமகன் : உங்கப்பா காய்கறி வியாபாரியா இருக்கலாம். அதுக்காக இப்படியா பண்றது ?
 
மணப்பெண் : ஏன் .. .. ? என்னாச்சு.. .. .. ?
 
 மணமகன் : முதலிரவு அறையில் போய் பாரு .. .. பூச்சரத்துக்கு பதிலா புடலங்காயை தொங்க விட்டிருக்கார்
 (தொகுத்தவைகள்)
*************************************
 காற்று மாசடைவதை தடுப்போம்...
ஒரு இயற்கை தொழிற்சாலையை காப்போம்...!

24 April, 2013

கோடைகாலத்தில் இந்த விஷயத்தில் நீங்கள் எப்படி..?

இந்த ஆண்டு கோடை வெயில் ஆரம்பமே மிக மோசமாக இருக்கிறது. பல நகரங்களில் வெயிலின் கடுமை 110 டிகிரியைத் தாண்டிவிட்டது. புவிவெப்பம் அதிகரிப்பின் காரணமாக பருவநிலையில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. வழக்கத்துக்கு மாறாக பனிப்பொழிவு மார்ச் மாதம் வரை நீடித்தது. 

அதைத் தொடர்ந்து வந்த கோடைகாலம், தொடங்கிய உடனேயே தகிக்கத் தொடங்கி விட்டது. கடும் பனிப்பொழிவால் கருகிப்போன மரங்கள், செடி கொடிகள் இன்னமும் துளிர்விடத் தொடங்கவில்லை. அதற்குள் கோடையின் வெப்பத்தால் தொடர்ந்து வாடிவதங்கத் தொடங்கி விட்டன. 


கடலோரப் பகுதிகளில் பொதுவாக பகல் 11 மணிக்கு கடல் காற்று வீசத் தொடங்கும். அதைத் தொடர்ந்து வெப்பம் தணியும். ஆனால் கோடை காலத்தில் கடல் காற்று வீசும் நேரம் தாமதம் ஆவதால் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கி விடுகிறது. 

கோடை மழைக்கான அறிகுறி பெரும்பாலான பகுதிகளில் இன்னமும் தென்படவில்லை. கோடை வெயில் கொளுத்துகிறது என்பதற்காக ஏழை எளிய நடுத்தர மக்கள் வீட்டுக்கு உள்ளேயே முடங்கி விட முடியாது. தங்கள் குடும்பத்துக்கு உணவளிக்கும் தொழிலை பார்க்க, வெளியில், வெயிலில் செல்லத்தானே வேண்டும். ஆனால் மிகுந்த எச்சரிக்கையுடன் கோடை காலத்தில் நடந்து கொள்ள வேண்டும் என்று, அறிவுரைகளும் ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. இல்லையேல் சன்ஸ்ட்ரோக் போன்ற மோசமான நோய்களைச் சந்திக்க நேரிடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.


கோடை காலம் வந்து விட்டால் வெப்பம் காரணமாக நோய்கள் பலவும் வந்து விடுகின்றன. நீர் கடுப்பு, சிறுநீர் அடைப்பு, சிறுநீரகத்தில் கல், மஞ்சள் காமாலை, அம்மை போன்ற பல நோய்கள் கோடை காலத்தில் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. 

கோடை காலத்தில், வெயிலின் பாதிப்பில் இருந்து விடுபட குளிர்பானங்களை மக்கள் அதிகம் நாடுகிறார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் தயாரித்து கவர்ச்சியான விளம்பரங்களுடன் வினியோகிக்கும் குளிர் பானங்கள் பலரையும் சுண்டி இழுக்கின்றன. அவைகள் சூட்டைத் தணிப்பதற்குப் பதில், மோசமான எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவ ஆலோசகர்கள்.

கோடை வெயில் தொடங்கியதும் வெப்பத்தைச் சமாளிக்கும் வகையில், இயற்கையே பல பொருள்களை மனிதனுக்குக் கொடையாகத் தந்து விடுகிறது. 

பதனீர், பனை நுங்கு, இளநீர், சாத்துக்குடி, ஆரஞ்சு, தர்ப்பூசணி உள்ளிட்ட பழங்கள், வெள்ளரிக்காய் போன்றவை அந்தப் பட்டியலில் அடங்கும். 

யோசனைகள்:

கோடைகாலம் வந்து விட்டால் வழக்கத்தைவிட கூடுதலாக 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். 

சுரக்காய், பூசணிக்காய், முள்ளங்கி போன்ற நீர் காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். நன்னாரி சர்பத், வெண்ணெய் எடுத்த தாளித்த நீர் மோர், இளநீர், சாத்துக்குடி, எலுமிச்சை, ஆரஞ்சு பழச்சாறுகள் போன்றவை உடல் உஷ்ணத்தை வெகுவாகத் தணிக்கும். உடலைக் குளிர்ச்சி ஆக்கும்.

குளிர்பானம் கூடாது பன்னாட்டு நிறுவனங்கள் தயாரித்து வழங்கும் குளிர்பானங்களால் எந்தப் பயனும் இல்லை. அவைகள் குளிர்ச்சியான உணர்வைத் தோற்றுவித்தாலும், உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும், 

எதிர் விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். எனவே அத்தகைய குளிர் பானங்களைத் தவிர்ப்பதே நலம். உஷ்ணத்தால் ஏற்படும் நீர் கடுப்பு, சிறுநீரகத்தில் கல், மஞ்சள் காமாலை போன்ற உடல் உபாதைகளுக்கு, பக்க விளைவுகள் எதையும் ஏற்படுத்தாத சித்த மருந்துகள் பல அரசு மருத்துவமனைகளில் உள்ளன. 

நெரிஞ்சில், நீர்முள்ளி கசாயங்கள், வெண்பூசனி லேகியம் உள்ளிட்ட பல மருந்துகள் உஷ்ணத்தால் ஏற்படும் நோய்களுக்கு நல்ல மருந்தாகும். பெரும்பாலும் தகிக்கும் வெயிலில், வெளியில் செல்வதைத் தவிர்ப்பதே நல்லது என்றார் டாக்டர் செந்தில்குமார்.

22 April, 2013

நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்...!



வ்வொறு சந்திப்பின் போதும்
எப்படியாவது வந்துவிடுகிறது 
சின்ன சின்ன சண்டைகள் நமக்குள்...

தவறு செய்தது நீதான்என்று நானும்
நான்தான் என்று நீயும்
மாறி மாறி சுமத்திக்கொள்கிறோம்
குற்றச்சாட்டுகளை...!

இப்படியே 

வெகுநேரம் பேசிபேசியே
முடிவு தெரியாமலே பிரிவோம்...

அதன்பிறகு என்னநேருமோ..?
இமைகள் அரித்துக்கொண்டிருக்கும்
மனசு உறுத்திக்கொண்டிருக்கும்...

உன்னை காயப்படுத்தியதில்
அதிகம் வலிக்கும் எனக்கு
மன்னிப்பு கேட்கும் வரை...!

மறுநாள் சந்தித்து
நான் மன்னிப்பு கோருவதற்கு முன்
“தவறு என்னுடையதுதான்” என்பாய்
பார்க்க துணிவில்லாமல் தலைகுனிந்து...!


உண்மைதான்...!
மன்னிப்பு கேட்கும் மனமும்
மன்னிக்கும் மனமும் இருந்தால்
காதல் செழிக்கும்...!


என் காதலை வாசித்த
அனைவருக்கும் நன்றி...!


21 April, 2013

திருமதி தமிழ் விமர்சனம் / மாப்பிள்ளை சிம்பு / மற்றும் ரஹீம் கஸாலி



மேதைப் படத்தை பார்த்து விமர்சனம் எழுதி பதிவுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சென்னை பதிவர்கள்... மெகா மற்றும் சோலார் ஸ்டார் நடித்த திருமதி தமிழ் படத்தை மெட்ராஸ் பவன் சிவக்குமார் தலைமையில் பார்த்து விமர்சனம் எழுதியிருக்கிறார்கள்.

அவர்களுடைய தைரியத்தை பாராட்டி அவர்களுடைய விமர்சன லிங்க்கும் இங்கு தரப்பட்டுள்ளது.... வாழ்க இவர்கள்... வளர்க இவர்கள் சினிமா தொண்டு...

திருமதி தமிழ் - சினிமா விமர்சனம்
(ஸ்கூல் பையன் அவர்களின் விமர்சனம்)

 **************************************

வல்லவன் படத்தில் நடித்தபோது நயன்தாராவுடன் உதட்டு முத்தக்காட்சியில் நடித்து படு சூட்டைக் கிளப்பினார் சிம்பு. அதையடுத்து அவர்கள் ஜாலியாக ஊர் சுற்றியதால் அவர்களை இணைத்து காதல் கிசுகிசுக்கள் வேகமாக பரவின. ஆனால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அவர்களது காதல் முறிந்து போனது. 
இருவரும் அதன்பிறகு இணைந்து நடிப்பதைகூட தவிர்த்தனர். ஏதாவது சினிமா விழாக்களில் எதேச்சையாக சந்தித்தால்கூட முகத்தை திருப்பிக்கொண்டு ஆளுக்கொரு பக்கமாக எதிரும் புதிருமாக அமர்ந்திருந்தனர். அதையடுத்து அடிக்கடி சிம்புவை முன்னணி நடிகைகளுடன் இணைத்து கிசுகிசு பரவுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.

இந்த நிலையில், இந்த மாதிரியான கிசுகிசுக்கள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சிம்புவுக்கு ஒரு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கும் வேலைகளில் அவரது பெற்றோர் தீவிரமடைந்துள்ளனர். 
சமீபத்தில் வேலூரில் அவர்கள் சிம்புவுக்காக ஒரு பெண் பார்த்தார்களாம். அது மனசுக்கு திருப்தியாக இருக்க, மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அப்படி விரைவில் பிடித்தமான பெண் கிடைத்துவிட்டால், இந்த வருடம் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சிம்புவுக்கு திருமணம் நடைபெறுமாம். ஆக, இப்போதே புதுமாப்பிள்ளை களை சிம்புவின் முகத்தில் தாண்டவமாடத் தொடங்கி விட்டது.
******************************** 
இன்று பிறந்த நாள் கொண்டாடும் அன்பு நண்பர் ரஹீம் கஸாலி அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்....
 **************************