**************************************************************************************
சீமான்-விஜய் கூட்டணி உறுதி
காவலன் வெற்றியடைந்த உற்சாகத்தில் இருக்கும் நடிகர் விஜய், சீமான் இயக்கத்தில் நடிக்கவுள்ள பகவலன் கதையில்தான் இப்போது ஆர்வமாக இருக்கிறாராம். புரட்சிகரமான படங்களை எடுத்து, வெற்றியும் கண்ட சீமானின் பகலவன் மூலம் தன்னை வெற்றி நாயகனாக தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற முடிவிற்கு வந்து விட்ட விஜய், பகலவன் படத்தின் ஒட்டுமொத்த கதையையும் கேட்டு விட்டார். இந்நிலையில் சமீபத்தில் சீமானும், விஜய்யும் சந்தித்துக் கொண்டனர். அப்போது படத்தில் நடிக்கும் பிற நடிகர் - நடிகைகள், டெக்னீஷியன்கள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதித்துள்ளனர்.
மேலும் இச்சந்திப்பின்போது, சீமானிடம் விஜய் ஒரேயொரு வேண்டுகோள் வைத்துள்ளார். அதாகப்பட்டது, பகலவனை ஆரம்பிச்சுட்டா எங்கயும் பிரேக் இல்லாம முடிச்சிடணும். அதனால படம் முடியிற வரைக்கும் நீங்க சர்ச்சைக்குரிய விஷயங்கள் எதையும் பேச வேண்டாம். மீண்டும் ஜெயிலுக்கு போகிற நிலைமையும் வரக் கூடாது, என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார். சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகள், பிரச்னைகளில் சிக்கி விழிபிதுங்கி, ஒருவழியாக அதில் இருந்து மீண்டு வந்திருக்கும் விஜய்யின் வேண்டுகோளில் நியாயம் இருப்பதை உணர்ந்த சீமான், விஜய்யின் நம்பிக்கைக்கு உத்தரவாதம் அளித்திருக்கிறாராம்.
**************************************************************************************************
காவலனுக்கு போட்டா போட்டி
காவலன் படம் விஜய்யின் சமீபத்திய படங்களின் தோல்வி கணக்கிற்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது. இந்தப் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கிறார்கள். பெல்லம்பொண்ட சுரேஷ் ரீமேக் உரிமையை வாங்கியிருக்கிறார்.
மலையாளத்திலும், தமிழிலும் வெற்றிபெற்ற படம் என்பதால் காவலன் தெலுங்கில் ரீமேக்கில் நடிக்க போட்டா போட்டி.
முதலில் பாலகிருஷ்ணா நடிப்பார் என்றார்கள். அவரது வயது படத்தின் கதைக்கு பொருந்தாது என்பதால் கோபிசந்தை ஹீரோவாக்க முடிவு செய்திருக்கிறார்கள். இதுவும் முடிவில்லை. பலரும் முட்டி மோதுவதால் கடைசி நிமிடத்திலும் ஹீரோ பெயர் மாறலாம்.
***************************************************************************************************
பில்லா வேலை ஆரம்பம்
மங்காத்தாவுக்குப் பிறகு அஜீத் பில்லா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். அஜீத்தின் கடைசி மற்றும் மாஸ் ஹிட் பில்லா என்பது முக்கியமானது.
மங்காத்தா புரொடக்சனில் இருக்கும் போதே பில்லா 2-வின் வேலைகளை தொடங்கியிருக்கிறார் விஷ்ணுவர்தன். இவர்தான் பில்லா முதல் பாகத்தை இயக்கியவர். அந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த நீரவ் ஷா பில்லா 2-க்கும் ஒளிப்பதிவு செய்கிறார். நவீன ஹெச்டி கேமராக்களை இந்தப் படத்துக்காக பயன்படுத்தவுள்ளனர்.
முதல் பாகத்துக்கு இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜா இரண்டாம் பாகத்துக்கும் இசையமைக்கிறார்.
பில்லாவில் ஹைலைட்டாக அமைந்தது காஸ்ட்யூம். இரண்டாம் பாகத்தில் காஸ்ட்யூமுக்கு மட்டும் பல லட்சங்களை செலவழிக்கவுள்ளனர்.
***************************************************************************************************
வானம் ரிலீஸ் சிக்கல்
யங் சூப்பர் ஸ்டார் சிம்பு, பரத், அனுஷ்கா நடித்துள்ள படம் ‘வானம்'. புதுமுக இயக்குனர் க்ரிஷ் இயக்கியுள்ளார். வழக்கமாக படத்தில் இருக்கும் எல்லா பாடல்களை வெளியிடுவது தான் வழக்கம் ஆனால் வானம் படத்தில் சிம்பு-யுவன்சங்கர்ராஜா இணைந்து பாடியுள்ள ஒரு பாடல் மட்டும் கொண்ட சிடி ரிலீஸ் செய்யப்பட்டது. மற்ற பாடல்கள் பின்னர் வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்தது.
இதனை தொடர்ந்து வானம் படத்தை காதலர் தினத்தில் திரைக்கு வரும் என சொல்லப்பட்டது. ஆனால் சிம்புவுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக வானம் பிப்.14 காதலர் தினத்துக்கு திரைக்கு வரவில்லை என்பது சிம்பு ரசிகர்களை வருத்தமடையச் செய்யும் விஷயம். படம் எப்போது திரைக்கு வரும் என்பது சிம்புவுன் உடல்நிலையைப் பொறுத்த விஷயம் என்கிறார்கள்.
***************************************************************************************************
ரஜினி ஜோடி தேர்வு
ரஜினிகாந்த்தை வைத்து சுல்தான் தி வாரியர் என்ற பெயரில் முதலில் அனிமேஷன் படமாக எடுக்கப்பட்டு வந்ததை இப்போது ராணா என்ற பெயரில் மாற்றி ரஜினியையே நேரடியாக நடிக்க வைத்து தயாரிக்கிறார்கள். இப்படத்தில் அனிமேஷன் அல்லாத ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வருமாறு தீபிகா படுகோனேவை அழைத்துள்ளனராம். ஆனால் இதுவரை அவர் பதில் ஏதும் தரவில்லையாம்.
ரஜினிகாந்த்தின் இளைய மகள் செளந்தர்யா ரஜினி உருவாக்கிய படம்தான் சுல்தான் தி வாரியர். முதலில் முழுமையான அனிமேஷன் படமாக இது எடுக்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது அதை அப்படியே மாற்றி முழுமையான பொழுது போக்குப் படமாக கொண்டு வருகின்றனர்.
அனிமேஷன் ரஜினி காட்சிகளை படத்தில் ஆங்காங்கு செருகி, புதிய படமாக மாற்றியுள்ளனர். படத்தின் பெயரையும் ராணா என்று மாற்றியுள்ளனராம். அனிமேஷன் அல்லாத காட்சிகளை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கவுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
அனிமேஷன் அல்லாத ரஜினிக்கு தற்போது ஜோடி தேடி வருகின்றனர். முதலில் திரிஷா நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது தீபிகாவை அணுகியுள்ளனராம்.
ரஜினி படத்திற்காக தன்னை அணுகியிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார் தீபிகா. இருப்பினும் இன்னும் தான் முடிவெடுக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். அவருடைய கால்ஷீட் புத்தகம் 2011 இறுதி வரை நிரம்பி வழிகிறதாம். இருப்பினும் ரஜினி படம் என்பதால் அந்த வாய்ப்பை நழுவ விட்டு விடாமல் தக்க வைத்துக் கொள்வதற்காக, கால்ஷீட்டில் அட்ஜெஸ்ட் செய்யும் முயற்சியில் இருக்கிறாராம் தீபிகா.
தான் ஒரு தீவிர ரஜினி ரசிகை என்று கூறியுள்ள தீபிகா, அவருடைய படத்தில் இணைந்து நடிப்பது பெருமைக்குரியது என்றும் கூறியுள்ளார்.
***************************************************************************************************
விஷாலின் பட்டத்து யானை
தேவதையை கண்டேன், திருவிளையாடல், மலைக்கோட்டை. காதல் சொல்ல வந்தேன் படங்களுக்கு பின் 'பட்டத்து யானை' படத்தை இயக்க உள்ளார். பூபதி பாண்டியன்
முன்னதாக, சீயான் விக்ரம் நடிக்கும் வெடி படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் படம் நின்று போனது. இதனால் சிறிது காலம் தன் கதைக்கு ஹீரோ தேடிக் கொண்டிருந்த பூபதி பாண்டியன் தற்போது விஷாலுடன் 'பட்டத்து யானை' படத்தில் இணைய உள்ளார். ஆனால் இது விக்ரமுக்கு தயாரான கதையா அல்லது புது கதையா என்பது தெரியவில்லை.
***************************************************************************************************
கார்த்திகாவுக்கு ஈடுகொடுக்க முடியாம கஷ்டப்பட்டேன் : ஜீவா
மாஜி நடிகை ராதாவின் மகள் கார்த்திகாவுக்கு ஈடுகொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டேன் என்று நடிகர் ஜீவா கூறினார். கோ படத்தில் ஜீவாவுடன் ஜோடி போட்டிருக்கும் கார்த்திகா ராதாவின் மகள் என்பது கிட்டத்தட்ட எல்லோருக்குமே தெரியும். நடிப்பில் அம்மாவையே மிஞ்சி விடுவார் என்று கோ படக்குழுவினர் கார்த்திகா புராணம் பாடிக் கொண்டிருக்கின்றனர். டைரக்டர் முதல் படத்தின் ஹீரோ ஜீவா வரை அனைவருமே கார்த்திகாவை பாராட்டியிருக்கிறார்கள்.
கார்த்திகா பற்றி ஜீவாவிடம் கேட்டால்... கார்த்திகாவுக்கு அவங்க அம்மா ராதா ட்ரெய்னிங். வீட்ல ஹோம் வொர்க் பண்ணிட்டு வந்து நடிச்சாங்க. ஈடு கொடுத்து நடிக்க ரொம்பவே சிரமப்பட்டேன், என்கிறார். அந்த அளவுக்கு நடிப்புக் கலையை கற்று வைத்திருக்கிறாராம் கார்த்திகா.
*************************************************************************************************
இளையராஜாவிடம் பாராட்டு பெற்ற இயக்குநர்
வர்ஷா பிக்சர்ஸ் சார்பில் எஸ்.சேகர்ராஜன் தயாரிக்கும் படம் 'அய்யன்'. 'மாமதுரை' வாசன் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக, புதுமுகம் திவ்யா பத்மினி நடித்துள்ளார். ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி இயக்கியுள்ள இந்த படத்திற்கு, இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். வாலி, மு.மேத்தா, நா.முத்துக்குமார், கபிலன், சினேகன், சிற்பு பாலசுப்பிரமணியன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.
இப்படத்தில் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நேற்று (ஜன.26) காலை 10 மணிக்கு நடைபெற்றது. இளையராஜா முதல் பாடல் சிடியை வெளியிட, இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் பெற்றுக்கொண்டார்.
படம் பற்றி பேசிய இளையராஜா, "இயக்குநர் கதை சொன்னபோது பிடித்திருந்தது. அவருடைய இளவயது வேகம் அதில் தெரிந்தது. இப்போது படத்தை முடித்துவிட்டு வந்து காட்டியதும் அவருடைய திறமையை தெரிந்து கொள்ள முடிந்தது. இந்தப் படத்தில் பாடலாசிரியர்களுடன், எழுத்தாளர் சிற்பி பாலசுப்பிரமணியத்தையும் பாடல் எழுத வைத்திருக்கிறேன். எனக்கு படம் பிடித்திருக்கிறது. இருந்தாலும் படத்தை மக்கள் பார்த்துதான் அவங்க கருத்தை சொல்லனும்.." என்றார்.
அதே நாள் மாலையில் நடைபெற்ற இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன், சசி, ராஜகுமார், நடிகை தேவயானி ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
*******************************************************************************
தமிழில் ரிலீசாகும் ஹாலிவுட் ஆக்ஷன் படம்
ஹாலிவுட்டில் தயாரான “தி க்ரீன் ஹார்னெட்” என்ற ஆங்கில ஆக்ஷன் படம் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது. சேத்ரோகன், காமரூன் டயாஸ், ஜேய்சூ ஆகியோர் நடித்துள்ளனர். மிக்கேல் காண்ட்ரி இயக்கியுள்ளார்.
லாஸ்ஏஞ்சல்சில் பிரிட்டின் தந்தை மர்மமாக சாகிறார். அதன் பின்னணியை கண்டு பிடிக்க பிரிட் புறப்படும் போது ஒரு நிழல் உலகம் இருப்பதை உணர்கிறான். குற்றவாளிகளை பிடிக்க முகமூடி அணிந்து குற்றவாளி போலவே மாறுகிறான். பரபரப துப்பாக்கி சண்டைகள், மர்ம சாகசங்களுடன் உருவாகியுள்ள இப்படம் 3டி தொழில் நுட்பத்துடன் வருகிறது.
*******************************************************************************
யோகாவால் “உடல் எடை குறைத்தேன்” -நமீதா
நடிகை நமீதா கடும் உடற்பயிற்சி, யோகா மூலம் ஒல்லியாகி இருக்கிறார். இது பற்றி அவர் சொல்கிறார். குண்டான என் உடம்பு தற்போது பழைய பொலிவுக்கு மாறியுள்ளது. அதற்கு காரணம் உடற்பயிற்சி, யோகா, தினமும் ஜிம்முக்கு போய் கடுமையாக உடற்பயிற்சிகள் செய்தேன்.
வெளியூர் படப்பிடிப்புக்கு போனாலும் உடற்பயிற்சிகளை தவறாமல் செய்தேன். கடந்த இரு மாதங்களாக யோகாவும் செய்கிறேன். யோகா மூலம் உடலின் உள் பாகங்கள் சீராகின்றன. புத்துணர்ச்சியும் கிடைக்கிறது. விரைவில் புது நமீதாவை காணலாம்.
இளைஞன் படத்தில் ஒல்லியாக நடித்தேன். முதல்-அமைச்சரின் வசனம் பேசி நடிக்கும் வாய்ப்பு கிட்டியதற்காகவே அப்படத்தில் நடிக்க சம்மதித்தேன். இளைஞன் படம் பார்த்த ரசிகர்கள் பலர் என்னை வெறுத்தனர். அந்த அளவுக்கு எனது நடிப்பு அதில் சிறப்பாக அமைந்தது.
******************************************************************************