கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

31 March, 2018

இந்த சீன் இல்லாம தமிழ் சினிமாவே எடுக்கமாட்டாங்களா?


எல்லாக்காலத்திலும் சினிமா என்பது அனைத்துவித மக்களையும் கவர்ந்து இழுக்கும் ஒரு மாயவலையாக திகழ்ந்து வருகிறது... என்னதான் நம்மமுடியாத காட்சிகளாக இருந்தாலும்... முழம் பூவை காதில் சுற்றினாலும் அதை ரசித்துவிட்டு வரும் ரசிகர்களை கொண்டுள்ளதால்தான் இன்று வரை யாராலும் அசைக்க முடியாத சக்தியாக  திராவிட சினிமாக்கள் அமைந்துவிட்டது...

சினிமாவை விரும்பி... ரசித்து... பார்க்கும் ஒருவரால் ஒரு படத்தையோ அல்லது ஒரு காட்சியை பார்த்தவுடன் அது எந்தமொழிக்கு உரியது என்று எளிதில் சொல்லிவிடலாம்....  திரைப்படங்களில் வரும் சில காட்சிகளை என்னதான் கழுவி கழுவி ஊற்றினாலும் மீண்டும் மீண்டும் அதே காட்சிகளை எல்லாபடத்திலும் வஞ்சனையில்லாமல் வைப்பதில் திராவிட படங்களுக்கு நிகர் திராவிட படங்கள் தான்...

உதாரணத்துக்கு ஒரு சீன்... ஜீப்பில் தப்பித்து ஓடும் வில்லனை.... வண்டியின் எதிரில் நின்று...  ஹீரோ கண்ணாடியை உடைத்து கொண்டு வில்லனை மட்டும் வெளியே கொண்டு வந்தால் அது தமிழ் படம்... அதே ஹீரோ... உதைத்து ஜீப்பையே பறக்க வைத்தால் அது தெலுங்கு படம்...  அந்த வில்லனை ஹீரோ அடிப்பாரு... அடிப்பாருன்னு... காத்திருந்து அவர் அமைதியா போக விட்டுட்டாருன்னா அது மலையாளப்படம்.... அந்த ஜீப்பை ஒரு துப்பாக்கி குண்டால சுட்டு வெடிக்க வச்சார்ன்னா அது ஹிந்தி படம் அவ்வளவு தான் வித்தியாசம்....


இப்ப நான் சொல்லப்போறது தமிழ் சினிமாவில இருக்கிற ஒரு சீன் பத்திதான்....

சினிமா ஆரம்பிச்சி  இப்பவரைக்கும் ஒரு சீன் மாறாம இருக்கிறது.... இந்த சீனை எப்படித்தான் யோசிக்கிறாங்களோ தெரியல...

கிளைமாக்ஸ்ல கண்டிப்பா ஒரு சேசிங் காட்சி இருக்கும்... வில்லன்கள் தப்பிச்சி போவாங்க... இல்லன்னா ஹீரோயினை வில்லன் கடத்திகிட்டு போயிடுவாங்க அவங்களை விரட்டிப்பிடிச்சி அவங்கள பந்தாடி... படத்தை பந்தாவ முடிச்சி வைப்பாரு நம்ம ஹீரோ..

இதுமாதிரி தான் அனைத்து தமிழ் சினிமாவும் இருக்கிறதே நீ எந்த காட்சி பத்தி சொல்ல வற்ர அப்படித்தானே கேக்குறீங்க...

வில்லன் தப்பிச்சி போறதுக்கு மாட்டுவண்டி, குதிரை வண்டி, ஸ்கூட்டர், கார், ஜீப், வேன், ஏன் ஹெலிகாப்டர் வரைக்கு கொடுப்பாங்க ஆன நம்ம ஹீரோக்கு அப்படி ஒன்னும் சொந்தமா இருக்காது.... அவங்க எதுல தப்பிச்சோ அல்லது கடத்திகிட்டு போறப்ப இவர் பல நாடுகள் கடந்து ஆலமர விழுதுகளை பிடித்தோ... வேகமா ஓடியே போய்கிட்டு இருப்பாரு....

அப்பத்தான் டைரக்டருக்கு யோசனை வரும்... எவ்வளவு நேரம் கார் பின்னாடியே ஓடிபோய்கிட்டு இருப்பாருன்னு... ஹீரோவுக்கும் ஏதாவது செய்யனுன்னு முடிவுப்பண்ணி ஒரு சீன் வைப்பாரு பாருங்க.... ஹீரோவுக்கு என்ன வண்டி வேணுமோ அந்த வண்டியை ஒருத்தர் புல்லா பெட்ரோல் போட்டு, ஆன் பண்ணி விட்டுட்டு... மரத்துப்பின்னாடி  நின்னு “சுச்சுஊ“ போயிட்டு இருப்பாரு... நம்ம ஹீரோ அந்த வண்டியை எடுத்துகிட்டு போய் வில்லனை பிடிப்பாரு...


நான் தெரியாமத்தான் கேக்குறேன் அது எப்படி... ஹீரோவுக்கு வண்டித்தேவைப்படுகிற அதே நேரத்தில யாருக்காவது சுச்சுஊ வந்தடுதுன்னு தெரியல... சரி அப்படி இருந்தாலும் வண்டியை ஸ்டார்பண்ணி விட்டுட்டா சுச்சுஊ போவாங்க....  கார், ஸ்கூட்டர், குதிரை இப்படி யாரையாவது ஏமாத்திட்டு எடுத்துகிட்டு போறாங்களே இது நியாயமா..?

இதுவே வண்டி திருடுற கேஸாச்சா... இது எப்படி நியாயம் ஆகும்... அப்போ வண்டியை பறிகொடுத்த அந்த அப்பாவிங்க மனநிலையை ஏன் இந்த டைரக்டர்கள் புரிஞ்சிக்க மாட்டேங்கராங்கன்னு தெரியல..... நமக்கு அவசரத்துக்கு ஒரு வண்டி தேவைப்படுகிற போது இப்படி ஒரு சீன் நம்ம வாழ்க்கையில... எது எப்படியோ இன்னைக்கு வரை அந்த காட்சிகளை நாமும் பார்த்துகிட்டுதான் இருக்கோம்...

பாம்பை நடுங்க வைக்கும் பெண்... அதிர்ச்சி செய்தி



பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. எவ்வளவு துணிச்சல் உள்ள ஆண்களும், பாம்பைக் கண்டவுடன் சிறிதுதூரம் பின்வாங்குவார்கள்.

காரணம், பாம்பு சிறிய உயிரினம் என்ற போதிலும், அதில் உள்ள கொடிய விஷம் மனிதர்களின் உயிரை சில மணிநேரங்களில் மாய்த்துவிடும் என்பதாலயே அதைக் கண்டு அஞ்சுகிறார்கள்.


ஆனால், இதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண், பாம்புகளை அனாசயமாகப் பிடித்து வருகிறார். இதை மக்களுக்கு சேவையாகச் செய்து, பாம்புகளை மக்கள் கொல்வதில் இருந்து காத்து வருகிறார். மக்களுக்கு பாம்புகள் குறித்த விழிப்புணர்வையும் ஊட்டி வருகிறார்.

திருவனந்தபுரம் மாவட்டம், நெடுமங்காடு வனப்பகுதிக்குள் இருக்கும் சிறிய கிராமமே பாலோடு. இங்குள்ள பச்சா எனும் மலைப்பகுதியில் வசிப்பவர் ஜே.ஆர். ராஜி(வயது 34). இவர்தான் பாம்புகளின் தோழியாக இருந்து துணிச்சலாக பாம்புகளை பிடித்து வருகிறார். திருமணமான ராஜிக்கு அனாமியா, அபிராமி என பெண் குழந்தைகள் உள்ளனர்.

பயிற்சியாளரிடம் ஒருநாள் மட்டுமே முறையான பயிற்சி பெற்ற ராஜி, கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 483 பாம்புகளைப்ப பிடித்து காடுகளில் பத்திரமாக விட்டுள்ளார்.

தனது பாம்பு பிடிக்கும் அனுபவம் குறித்து ராஜி நம்மிடம் கூறியதாவது:

''பாம்பு பிடிக்கும் கலையை நான் தொழிலாகச் செய்யவில்லை. இதை ஒரு சேவையாக எடுத்துச் செய்து வருகிறேன். மக்களுக்கு பாம்புகளைப் பற்றி விழிப்புணர்வும், அதேசமயம், பாம்புகளையும், மக்களையும் அழிவில் இருந்து காத்தும் வருகிறேன்.

என் தந்தை ஒரு ரப்பர் மரத்தொழிலாளி. நான் காடுகளில் வாழ்ந்து பழகியவள். இதனால், சிறுவயதில் இருந்தே பாம்புகளைப் பார்த்துப் பழகிவிட்டேன். சிறுவயதில் தேங்காய் சிரட்டைகளை வைத்து பாம்புகளை பிடித்து வந்தேன்.

பலநேரங்களில் பாம்புகளைத் தொட்டு விளையாடி இருக்கிறேன், ஆனால், ஒருபோதும் என்னை சீண்டியது இல்லை. இதையடுத்து, யுடியூப்பில் பாம்புகளை எப்படிப் பிடிப்பது என்பதைக் கற்றுக்கொண்டேன். அதன்பின் சிறிய அளவிலான பாம்புகளை மட்டும் பிடித்துவந்தேன்.

அதன்பின் கேரளாவில் உள்ள பாம்பு பிடிக்கும் வல்லுநரான பாபு பாலலயம் என்பவரிடம் என்னைப் பற்றிக்கூறி அவரிடம் முறைப்படி பாம்பு பிடிக்கும் நுனுக்கங்களை கற்றுக்கொண்டேன். எனக்கு ஒருநாள் மட்டுமே முறைப்படி பயிற்சி அளித்து, பாம்புகளின் வகைகளையும், அதன் குணங்கள், தன்மைகள், விஷம் தாக்கும் முறை ஆகியவற்றை கூறினார்.

இந்த பயிற்சிக்குபின் நான் முதன் முதலில் ஒரு கருநாகப் பாம்பு தான் பிடித்தேன். அதன்பின் நான் வீடுகளில், நகர்ப்புறங்களில் பிடிக்கும் பலவகையான பாம்புகளையும் வனத்துறையினரிடம் ஒப்படைத்து அதை காடுகளில் விட்டுவிடுவோம்.

நான் பாம்பு பிடிக்கும் விஷயத்தை மக்கள் அறிந்து வீடுகளில் எந்தவகையான பாம்புகள் இருந்தாலும் உடனடியாக எனக்கு போன் செய்து அழைக்கிறார்கள். இதற்காக நான் யாரிடமும் பணம் கேட்பதில்லை. சிலர் அன்பின் காரணமாக பணம் கொடுத்தாலும்கூட அதை மற்ற சேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்வேன்.

என்னுடைய கணவர் அனில்குமார் டிரைவராக பணிபுரிகிறார். அவரின் உதவியால் இருசக்கர வாகனம், நான்கு சக்கரவாகனம், லாரி போன்ற கனரக வாகனங்களையும் ஓட்ட கற்றுக்கொண்டேன்.

நான் முதலில் பாம்பு பிடிப்பதைப் பார்த்து எனது கணவர் மிகவும் அச்சப்பட்டார். ஆனால், இப்போது என்னைப் பற்றி கவலைப்படுவதில்லை.

பாம்புகளைப் பிடிக்கும் போது கையுறை ஏதும் போடமாட்டேன் வெறும் கைகளை மட்டும் பயன்படுத்துவேன். பாம்பு பிடிக்கும் கருவிகளை வைத்து பாம்பு பிடிப்பது எப்போதும் சிறிது ஆபத்தானது. சிறிது தவறாக பிடித்துவிட்டாலும், அல்லது எந்திரக் கோளாறு ஏற்பட்டாலும் நாம் கடுமையான விலை கொடுக்க வேண்டியது இருக்கும். ஆனால், நான் செய்யும் பணி நல்ல சேவையாக இருக்கிறது. எனக்கு எந்த சிக்கலும் வராமல் கடவுள் பாதுகாப்பார் என்று நம்புகிறேன்.''

இவ்வாறு ராஜி தெரிவித்தார்.

பாராட்டுகள் சகோதரி...
தி இந்து சொய்திகளில்....

29 March, 2018

இது சிரிப்பு மய்யம்



ஆசிரியர்: "டேய் ராமு, இன்னும் பத்து நாளில் உலகம் அழியப்போகுதுன்னு
வச்சுக்கோ. அப்போ கடவுள்கிட்டே என்ன வேண்டிக்குவே?"

ராமு: "அன்னிக்கு ஸ்கூல் லீவு விடணும்னு வேண்டிக்குவேன் சார்"

***********************
நோயாளி: டாக்டர் என் கால் நல்லா போயிடுமா டாக்டர்

டாக்டர்: இன்னும் மூனு நாளைக்குள்ளே உங்க கால் சரியாயிடும்

நோயாளி: நான் நடக்கலாமா

டாக்டர்: நல்லா நடக்கலாம். நான் கொடுத்திருக்கும் மருந்த மறக்காம தடவுங்க

நோயாளி: இந்த மருந்த தடவுனா கால் வலி போயிடுமா டாக்டர்... நான் அப்புறமா ஓடலாமா.

டாக்டர்: தாராளமா

நோயாளி: இந்த மருந்துக்கு அத்தனை பவரா..நான் சைக்கிள் ஓட்டலாமா.
டாக்டர்: ம்..ஓட்டலாமே...

நோயாளி: ஏன்னா எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது..அதான் கேட்டேன்.

டாக்டர்: ......????????

******************************

எதுக்கு சார், லஞ்சம் வாங்கும்போது உங்க கை இப்படி நடுங்குது?

ரெண்டு மாசமா லீவ்ல இருந்ததுனால டச் விட்டுப்போச்சுய்யா.
*******************************

உங்க மாப்பிள்ளைக்குப் பெரிய இடத்துல வேலையாமே!

ஆமாம். பீச்ல சுண்டல் விக்கிறார்!

*******************************

ஊர்ல நாலு பேர் சிரிக்கிற மாதிரி, எந்தக் காரியத்தையும் என் பையன் பண்ணவே மாட்டான்.

பையன் என்ன பண்றான்?

டி.வி. மெகா சீரியல் டைரக்டரா இருக்கான்..
*******************************

நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம் !

நபர் : ஏன்?

நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் !

*******************************
என்னோட மாமியார் அவங்க பணக்காரப் புத்தியைக் காட்டிட்டாங்க.

அப்படியா... என்ன பண்ணினாங்க?

எனக்கும் அவங்களுக்கும் நடந்த சண்டையை உள்ளூர் கேபிள்ல ஒளிபரப்ப ஏற்பாடு பண்ணிட்டாங்களாம்
*******************************

நோயாளி: டாக்டர் டாக்டர். நாய் கடிச்சிடுச்சு டாக்டர்! 
டாக்டர்: எங்கப்பா கடிச்சுச்சு?

நோயாளி: விட்டுக்கு பக்கத்துக்கு தெருவில் டாக்டர்!

28 March, 2018

வெயிலுக்கு இதமாக இப்படி பண்ணலாமா...?


வாட்டி வதைக்கும் வெயிலில் இருந்து நம்மை காத்து கொள்வதே வேலையாய் அமைகிறது. இந்த கோடை காலத்தில் உடலை சமநிலைக்கு வைத்திருப்பதில் நமது உணவுப் பழக்க வழக்கங்கள் முதல் இடத்தைப் பிடிக்கின்றன. கோடை காலத்தில் எதை உண்ணலாம், எதைத் தவிர்க்கலாம் என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.

வெளுத்து வாங்கும் இந்த கோடையை சமாளிக்க
இந்த டிப்ஸை கொஞ்சம் டிரை பண்ணிப் பாருங்களேன்...


கோடை காலத்தில் உடலின் தண்ணீர் அளவை சரியான அளவில் காத்துக் கொள்வது மிகவும் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. வெறும் தண்ணீர் இந்த பணியைச் செய்து விட முடியாது. அதற்கு உதவியாக முதலில் வருவது காய்கறிகள்.



காய்கறிகளில் ஏராளமான நீர்ச்சத்து உண்டு. முடிந்த அளவு காய்கறிகளை பச்சையாகவோ, கொஞ்சமாய் வேக வைத்தோ உண்பது மிகவும் சிறந்தது. அதிகமாய் வேகவைத்தோ, பொரித்தோ உண்பதில் எந்த விதமான பயன்களும் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.


பழங்கள் உண்பது கோடைக்காலத்துக்கு மிகவும் அவசியமானது. நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் உடலின் தண்ணீர் தேவையை நிவர்த்தி செய்வதுடன், உடலின் வெப்பத்தையும் கட்டுப்படுத்துகிறது.


காய்கறிகளும், பழங்களும் அதிகம் உண்பது உடலின் தண்ணீர் தேவையையும், குளிர் தேவையையும் நிறைவேற்றுவதுடன், அவற்றிலிருக்கும் வைட்டமின்கள், மினரல், விஷ எதிர்ப்பு தன்மை, நார்ச்சத்து இவையெல்லாம் கோடையில் நோய் வராமலும் நம்மைக் காத்துக் கொள்கின்றன.


வெங்காயம் நிறைய சாப்பிடுங்கள். வெயில் காலத்தில் உடலில் ஏற்படும் வெப்ப அரிப்பு போன்ற நோய்கள் வராமல் தடுக்க வெங்காயத்திலுள்ள குவர்சடின் எனும் வேதியல் பொருள் உதவும்.


கோடை வெயிலை தவிர்க்க தர்பூசணி சாப்பிடுவது அவசியம். தர்பூசணியில் 90 விழுக்காடு தண்ணீரே இருப்பதால், உடலின் தண்ணீர் தேவைக்கு சிறந்தது தர்பூசணி. தர்பூசணியை விட அதிக தண்ணீர் சத்துள்ள வெள்ளரிக்காயை அதிகமாய் உட்கொள்ளுங்கள் உடலுக்கு மிகவும் நல்லது.



உடலின் வெப்பம் வெளியேற வேண்டியதும், உடல் குளிர வேண்டியதும் கோடை காலத்தின் தேவைகளில் ஒன்று. அதற்கு கொஞ்சம் கொஞ்சமாக உண்ணும் கார்போஹைட்ரேட் அடங்கிய உணவுப் பொருட்கள் உதவும். குறிப்பாக வேக வைத்த உருளைக்கிழங்கு, பீன்ஸ், பீட்டா ரொட்டி, அரிசி இவை. 

கோடைகாலத்தில் மூன்றுவேளையும் வயிறு முட்ட சாப்பிடக்கூடாது. ஐஸ் காபி, ஐஸ் டீ அருந்தக்கூடாது. அதற்கு பதில் இளநீர், மோர், எலுமிச்சை சாறு பானங்கள் நல்லது. உணவு நேரம் ஒழுங்கு முறையில் இருக்க வேண்டும். 


டிபன் 8 மணி, மதிய உணவு 12 மணி, மாலை சிற்றுண்டி 6 மணி, இரவு உணவு 8 மணிக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக புரோட்டீன் மற்றும் குறைந்த ஹார்போஹைட்ரேட் உள்ள உணவு வகைகளை கோடையில் சாப்பிட வேண்டும். 

குளிர்ந்த நீர், பூண்டு, பீட்ரூட், மிளகு, திராட்சை, பைன் ஆப்பிள், மாம்பழம் இவைகளை கோடையில் தள்ளியே வைக்கவும். கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகளையும், எண்ணை பலகாரங்களையும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சிப்ஸ், ப்ரெஞ்ச் ப்ரை, சிக்கன் பிரை வகைகளை ஒதுக்கிவிடுங்கள்.


(இன்னும் அடுத்தப் பதிவில் தொடரும்....)

27 March, 2018

இப்படியா இருப்பது ஆசிரியர்கள்....


பண்படுத்துவது என்பது புண்படுத்துதல் அல்ல...
*~~~~~~~~~~~~~~~~~~~*

*"கற்களை சேதப்படுத்தக் கூடாது"* என்று சொன்னால் இங்கு சிற்பங்கள் எப்படி கிடைக்கும்...?

*"நிலங்களை சேதப்படுத்தக் கூடாது"* என்று சொன்னால் இங்கு விளைச்சல் எப்படி கிடைக்கும்...?

*"தங்கத்தை நெருப்பில் இடாதே"* என்றால் தங்க ஆபரணங்கள் எப்படி கிடைக்கும்...

*புரிதல் வேண்டும்...*

*"மாணவன் தவறு செய்தால் அடிக்கக் கூடாது,*
*திட்டவும் கூடாது...*
*மனம் புண்படும் படி பேசவும் கூடாது..."*

எனில்...
*"படிக்குமாறு அறிவுறுத்தக் கூடாது,*
*ஒழுக்கத்தை வலியுறுத்தக் கூடாது*
*இது எதுவுமே மாணவனுக்கு பிடிக்காது,*
*மாணவன் மனம் புண்படும்"*
எனில் ஆசிரியரின் வேலை தான் என்ன...?

பண்படுத்துவது என்பது புண்படுத்துவது அல்ல என்ற புரிதல் மாணவர்களுக்கு மட்டுமல்ல... மற்றவர்களுக்கும் வேண்டும்...!

ஒரு பச்சிளம் குழந்தைக்கு ஊசி போடுகிறார் மருத்துவர்...
"குழந்தைக்கு வலிக்கும் இது தவறு" என்று அவரிடம் சொன்னால்  குழந்தை நலமுடன் வாழ்வது எப்படி...?

ஒரு வீட்டில் குழந்தையின் கைகளை தந்தை பிடிக்க, கால்களை மாமா பிடிக்க.. தலையை அசைக்காமல் பாட்டி அழுத்தி பிடிக்க, குழந்தைக்கு பிடிக்காத கசப்பு மருந்தை தாய் தருகிறாள்... குழந்தையின் மீது செலுத்தப்படும் எவ்வளவு மோசமான வன்முறை இது... அவர்களுக்கான தண்டனை என்ன...?

குழந்தையின் நலன்கள் இரண்டு..
உடல் நலன்...
உள்ள நலன்...

உடல் நலனுக்காக இயங்கும் மருத்துவத்துறையின் கைகளை...
"ஊசி குழந்தைக்கு வலிக்கும்,
மருந்து குழந்தைக்கு கசக்கும்,
அறுவை சிகிச்சை அதை விட வலிக்கும்... எனவே எல்லாவற்றையும் தவிர்த்து 
குழந்தைக்கு மனம் நோகாமல் அறிவுரை மட்டும் கூறி அனுப்புங்கள்" என்று சொல்வீர்களா...?

மருத்துவ துறையின் கைகள் கட்டப்பட்டால், உடல் நலன் ஒழிந்தது என்று அர்த்தம்...

புரிதல் வேண்டும்...

அதே போல... உள்ள நலனுக்கானது தான் கல்விக்கூடங்கள்... அது கூடாது, இது கூடாது என்று இங்கே கற்பிப்பவரின் கையும், சுய சிந்தனை உணர்வும் கட்டப்பட்டுவிட்டன... விளைவு ... நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்...

ஒரு கல்விக்கூடம் மூடப்பட்டால்... அது நூறு சிறைச்சாலைகள் திறப்பதற்கு சமம் ென்பது கூற்று...

மூடும் அளவிற்கு அதிக சிரமம் வேண்டாம்... ஆசிரியரின் உடலும், உள்ளமும், கைகளும் கட்டப்பட்டாலே போதும்...

மாணவன் ஆசிரியரால் திருத்தப்படாவிட்டால், காவலர்களின் அடியால் திருந்த வேண்டும் அல்லது சிறைச்சாலைக்குத்தான் செல்ல வேண்டும்.

*சிந்தியுங்கள் பெற்றோர்களே..….!*

வருத்தத்துடன்.. மனம் நொந்து  போயுள்ள ஆசிரிய சமுதாயம்.....

#100 என்னுடைய ஆதங்கமும் இதுதான்

26 March, 2018

பொறுமையா செய்யுற விஷயம்தானா இது...!


இது பரபரப்பான உலகம். எங்கும் பரபரப்பு, எதிலும் பரபரப்பு! மனித வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும், அவசரம், ஆசை மற்றும் வேகம். ஒவ்வொருவரும், தனக்கென அதிக வேலைகளை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

அதிகமான இலக்குகளை நிர்ணயித்துக் கொள்கிறார்கள், கடமைகளை அதிகரித்துக் கொள்கிறார்கள், அதிகமாக பேசுகிறார்கள், அதிகமாக கோபப்படுகிறார்கள் மற்றும் அதிகமாக பதட்டமடைகிறார்கள்.

ஏன் இந்த நிலைமை? நிதானமடையுங்கள். உங்களின் செயல்பாடுகளையும், இயக்கத்தையும் எளிமைப்படுத்துங்கள். உலகின் வெற்றிகரமான மனிதர்கள் இதைத்தான் செய்துள்ளனர்.

ஒரு மனிதன் அடைவதற்கான மிகவும் கடினமான இலக்கு என்னவெனில், எளிமைதான்! அந்த எளிமையை கஷ்டப்பட்டு அடைந்த ஒருவன், வாழ்வில் அனைத்து வெற்றிகளையும் பெறுவான். இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக மறைந்த ஆங்கில நகைச்சுவை நடிகர் சார்லி சாப்லினை கூறலாம். 


பலவிதமான வாழ்வியல் கருத்துக்களையும், மனித உளவியலையும் தனது படங்களில் அவர் மிகவும் எளிமையாக கூறுவார். இதனால்தான் அவர் பெரும் வெற்றி பெற்றார். எத்தனையோ ஆண்டுகள் ஆனாலும்கூட, இன்றும் அவரது படங்கள் ரசித்துப் பார்க்கும்படியாக உள்ளன.

ஒரு விஷயத்தை ஒருவர் முழுமையாக புரிந்துகொண்டால், அதை அவர் எளிய முறையில் விளக்கி விடுவார். மாறாக, அறைகுறையாக புரிந்து கொண்டிருந்தால், அதை விளக்க அதிகமான வார்த்தைகளை உபயோகிப்பார் மற்றும் அதிக நேரம் எடுத்துக் கொள்வார் மற்றும் டென்ஷனாவார். இதுதான் மனித வாழ்வின் தத்துவம். முழுமையான எந்த விஷயமும் எளிமையாக இருக்கும்.

சீன தத்துவ மேதை லாவோட்சே கூறுவார், "மக்களுக்கு போதிக்க என்னிடம், எளிமை - பொறுமை - இரக்கம் என்ற மூன்று விஷயங்கள்தான் உள்ளன. இந்த மூன்றும்தான், அவர்களின் மிகப்பெரிய செல்வங்கள். இந்த மூன்றையும் அடையப்பெற்ற ஒருவர், உலகில் வெல்லமுடியாதது எதுவுமில்லை.

உதாரணமாக, இன்றைய விளம்பர உலகத்தைப் பாருங்கள். தாங்கள் விளம்பரம் செய்யும் விஷயத்தை எவ்வாறு எளிமையாக மக்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள் என்பதை வைத்தே, அந்தப் பொருட்களின் விற்பனை இருக்கும். அந்தப் பொருளானது, சந்தையில் நிலைத்தும் இருக்கும். 



ரஸ்னா என்ற ஒரு குளிர்பானம் அனைவருக்கும் அறிமுகமான ஒன்று. அந்த பானத்தை இல்லத்தரசிகளிடம் வெற்றிகரமாக கொண்டு சேர்க்க, அந்நிறுவனத்தார் செய்த விளம்பரத்தை நாம் இங்கு கவனிக்க வேண்டும். ஒரு ரஸ்னா பாக்கெட் வாங்கினால், இத்தனை டம்ளர் ரஸ்னா தயாரிக்கலாம் என்பதை, அத்தனை ரஸ்னா நிரப்பப்பட்ட டம்ளர்களை காட்டி, மக்களை கவர்ந்தார்கள். இந்த உத்தி மிகவும் எளிமையானது, ஆனால் அதன்மூலம் கிடைத்த வெற்றி மிகவும் பெரியது.

ரஸ்னாவுக்கு மட்டுமல்ல, எளிமையான விளம்பரங்கள் மூலம் மக்களை கவரும், நிறுவனங்கள் பல்லாண்டுகள் சந்தையில் நிலைத்து நிற்கின்றன.

உலகின் மிகப்பெரிய உண்மைகள் எளிமையானவை. வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் என்ற ஆங்கில கவிஞர், இயற்கையின் எளிமையான சந்தோஷங்களைப் பற்றி எழுதினார். அவர் இன்றும் போற்றப்படுகிறார். இந்தியாவின் முதன்மையான தலைவராக இருக்கும் காந்தியடிகளும், எளிமையை வலியுறுத்தியவர். அவர் அடைந்த வெற்றியைப் பற்றி நாம் விளக்க வேண்டியதில்லை.

மிகப்பெரிய மனிதர்கள், எதையும் எளிமையாகவே சிந்திப்பார்கள். சிக்கலான விஷயங்களுக்கு எளிமையான தீர்வை அளிப்பார்கள். அவர்கள் எப்போதும் எளிமையையே நம்புவார்கள். நாமும் எந்த ஒரு விஷயத்தையும் எளிமையான புரிந்துகொள்ள பழக வேண்டும். 

எந்த விஷயத்தைப் புரிந்துகொள்வதற்கும் பெரிய தியரி வேண்டும் என்று எண்ணக்கூடாது. தியரி பெரியதாக இருந்தால், அதனுள் அடங்கிய விஷயங்கள் தெளிவாக இருக்காது மற்றும் பெரிதாகவும் இருக்காது. சிறிய அணுவில்தான் அதிக ஆற்றல் அடங்கியுள்ளது. அதுபோலத்தான் எளிய விஷயங்களில் பெரிய அம்சங்கள் அடங்கியுள்ளன என்பதை உணர வேண்டும்.

#வெற்றி வழிகாட்டி கையேடிலிருந்து....

நிசப்தங்களற்ற மௌனங்கள்....


அலமாரி முழுவதும்
நிரம்பி வழிந்தது
கவிதை புத்தகங்கள்....

மனமோ கனகனத்தது
அடிவயிற்றில் 
இருவேளை பசி...

தூரத்தில் தெரிந்தது
சந்திரோதயம்....

நீரின்றி
வாடிக்கொண்டிருந்தது
அல்லி மலர்...

காலையில் 
உயிர்களை கொல்வது 
பாவம் என்றான்...

மாலையில் 
தூண்டிலுடன்
அஹிம்சைவாதி...

கேட்போருக்கு சொல்கிறேன்
சமுத்திரத்தின் ஆழம் 
இவன் சோகம்...

வானத்தின் அகலம் 
இவன் துயரம்...

இயற்கையே....

உறவுகளை 
மரணிக்கச்சொல்
உணர்வுகளை வேண்டாம்...

வறுமையை 
மரணிக்கச்சொல்
வயிறுகளை வேண்டாம்...

காலமே....
எங்களை மன்னித்து விடு
நாங்கள் மனிதர்கள் அல்ல
மண் பொம்மைகள்...

பூமியின் சுழற்சியை 
புரிந்துக் கொள்ள
முடியவில்லை..

வாழ்க்கையே... 
நீ எதில் உயிர்வாழ்கிறாய்
விடியலிலா....
அஸ்தமனத்திலா...

உலகம் 
இவ்வளவுதான் 

நிலவே 
நீ பூமிக்கு 
ஒளி கொடுக்கிறாய்....

பூமியோ 
உனக்கு இருள் கொடுக்கிறது...

பகைமையை 
மறந்துவிடு முற்செடியே
உன்னை அலங்கரிக்கவே
காத்திருக்கிறது  ரோஜா...

உலகம் 
மனிதர்களால்
நிறைந்திருக்கிறது...

மனிதர்கள்
சப்தங்களால் 
நிறைந்திருக்கிறார்கள்....

அதனால்தான்
யாருக்கும் கேட்பதில்லை...
என் மௌனங்கள்....


★★★★★★★★

வறுமை கால
 நினைவுகளோடு....

கவிதை வீதி சௌந்தர்...
(2002 டைரியிலிருந்து....)

25 March, 2018

கோடையை சமாளிக்கலாம் வாங்க... பகுதி - 2


கோடை வருவதற்கு முன்பே வெயில் வறுத்தெடுக்க ஆரம்பிச்சிருச்சு. கோடையை சமாளிக்க. மேலும் சில குளுகுளு டிப்ஸ் இங்கே....

காலை நேரங்களில் ஆப்பிள் ஜுஸ் சாப்பிட்டு வரலாம். நாள் முழுவதும் புத்துணர்வாக இருப்பதுடன் ஜீரண சக்தியும் அதிகரிக்கும். இது சருமத்தையும் மென்மையாக வைத்திருக்க உதவும்.

வியர்வை நாற்றத்தைப் போக்க தினமும் பூலாங்கிழங்கு, சந்தனம் தேய்த்துக் குளித்து வந்தால் நாள் முழுவதும் வாசனையாக இருக்கும்.



தினசரி ஒரு தக்காளி சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடம்பும் தளதள வென்று இருக்கும்.

பேரீச்சம் பழத்தை வெண்ணையோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரும்புச் சத்து கிடைக்கும்.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் தோலின் நிறத்தைப் பாதுகாக்க தினமும் உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு வரவும்.




குளிக்கும் நீரில் வேப்பிலையை போட்டு வைத்து அரை மணி நேரம் கழித்து குளித்தால் உடம்புக்கு குளிர்ச்சி கிடைக்கும். இது கிருமி நாசினியாகவும் திகழ்கிறது.

கண்கள் குளிர்ச்சி அடைய முருங்கைப் பூவை சமைத்து சாப்பிடலாம். ஒரு துணியில் முருங்கைப் பூவை இடித்துக் கட்டி கண்களின் மேல் 10 நிமிடம் வைக்கலாம். கண்கள் புத்துணர்ச்சியுடன் திகழும்.

நாள்தோறும் கேரட்டை பாலோடு தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து ஜுஸ் செய்து சாப்பிட்டு வந்தால் கண்கள் தெளிவடையும். உடலில் தசைப்பற்று உண்டாகும்.


பதநீர் குடித்தால் பற்களில் ஏற்படும் ஸ்கர்வி நோய் குணமாகும்.

பாதத்தில் எரிச்சல் ஏற்பட்டால் அதைப் போக்க மருதாணி, எலுமிச்சை சாறு கலந்து பாதங்களில் தடவி சிறிது நேரத்திற்கு பிறகு கழுவவேண்டும்.

பாலில் கொட்டை நீக்கிய பேரீச்சம் பழத்தையும் சர்க்கரையையும் சேர்த்து மிக்சியில் அரைத்துக் குடித்தால் மலச்சிக்கல் நீங்கும். எடை கூடும். சருமம் பளபளக்கும்...


இதையெல்லாம் கொஞ்சம் முயற்சித்து பாருங்களேன்....

24 March, 2018

கோடையை சமாளிக்கலாம் வாங்க... பகுதி 1


கோடை வருவதற்கு முன்பே வெயில் வறுத்தெடுக்க ஆரம்பிச்சிருச்சு. கோடையை சமாளிக்க குளுகுளு டிப்ஸ் இங்கே....


தினமும் உணவில் பச்சை வெங்காயம், வெள்ளரி, வாழைத்தண்டு, மோர், மற்றும் புதினா ஆகியவற்றைத் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்...


இளம் வேப்பிலை, துளசி ஆகியவற்றை காயவைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு, நீரில் கலந்து குளிக்கலாம். வியர்க்காமல் இருப்பதோடு, சரும வியாதிகளும், கோடை வெயில் கொப்பளங்களும் வராது.


மாதுளம் இலையை அரைத்துப் பூசிக் குளித்தால், சூட்டுக் கட்டிகள்,
உடற் வியர்க்குரு ஆகியன  நீங்கும்.


நா வறட்சி தணிய கொத்தமல்லி, கசகசா இரண்டையும் சிவக்க வறுத்து, அவற்றுடன் பனைவெல்லம், ஏலக்காய்பொடி சேர்த்து கஷாயம் செய்து அருந்தினால் தாகம் தீர்வதோடு பித்தமும் நீங்கும்.


வெளியே கிளம்பும்போது நெல்லிக்காய் ஒன்றிரண்டை வாயில் போட்டு மெல்லுங்கள். நாக்கு உலர்ந்து போகாமல் இருக்கும்.

உச்சி வெயிலில் வெளியே போகும்போது, ஒரு துண்டு எலுமிச்சம் பழத்தையோ, அல்லது ரோஜாப்பூவையோ கையில் கொண்டு செல்லவும். மயக்கம் வருவது போல் இருந்தால், முகர்ந்து பார்த்துக் கொள்ளவும்.


ஒரு நாள் விட்டு ஒருநாள் இரவு வெந்தயத்தை மோரில் ஊறவைத்து அரைத்து மறுநாள் காலை தலைக்குப் பூசிக் குளித்து வந்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.


இளம் பச்சை நிற கர்ட்டன்களை வீட்டின் ஜன்னலில் தொங்க விடுவது குளிர்ச்சி தரும்.


உடலின் வியர்வையை வெளியேற்றக்கூடிய பருத்தி துணிகளால் ஆன ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.

மோரை அடிக்கடி குடிப்பதால் வெயிலினால் ஏற்படும் நரம்புத் தளர்ச்சி சரியாகும்...

சமுத்திரக்கனியின் வில்லத்தனமும்... மனைவியின் கோவமும்...


சினிமா எனும் கனவுத்தொழிற்சாலையில் இந்த நூறாண்டுகால வரலாற்றில் நடிப்பில் ஞானசூன்யன்கள் முதல் ஜாம்பவான்கள் வரை என  இதுவரை ஆயிரக்கணக்கான நடிகர் நடிகைகள் வந்து போயிருக்கிறார்கள்... காலங்களுக்கு ஏற்பவும்.. கதைகளுக்கு ஏற்பவும் அந்தந்த காலக்கட்டத்தில் சினிமாவில் ஜொலித்த நட்சத்திரங்கள் ஏராளம்... ஏராளம்...

ஒவ்வொரு நடிகை, நடிகர்களுக்கும் நடிப்பில் தனக்கென தனிபாணியை கொண்டிருப்பார்கள்.. அவர்களுடைய நடிப்பு, அவர்களுடைய குணாதிசயங்கள், அவர்களுடைய தனித்தன்மைகள் என அத்தனை நடிகர்களும் தன்னுடைய முத்திரையை பதித்து மக்களால் போற்றப்பட்டவர்களே.... ரசிகர்களிடம் தன்னை தனித்துக்காட்ட படத்துக்கு படம் தன்னை மெருகேற்றி, படத்துக்கு படம் வித்தியாசம் காட்டி மக்கள் மனதிலே நிலையான இடத்தை பிடித்துவிடுகிறார்கள்...

தியாகராஜ பாகவதர் முதற்கொண்டு இன்றைய தத்தக்காபித்தக்கா வரை என்னற்ற ஹீரோக்கள் வரிசையை எடுத்துக்கொண்டாலும் சரி, நம்பியார், பி.எஸ்.வீரப்பா, அசோகன்,  ரகுவரன், மன்சூர்அலிகான், பிரகாஷ்ராஜ் என வில்லன்கள் பட்டியலை எடுத்துகொண்டாலும் சரி, திரையில் வந்துப்போன அத்தனை நகைச்சுவை நடிகர்களையும் சரி ஏதோ ஒரு காரணத்திற்காக ரசிகர்கள் அவர்களை கொண்டாடியிருக்கிறார்கள்.

ஹீரோக்களை கொண்டாடும் அதே காலக்கட்டத்தில் வில்லன்களையும் கொண்டாடியிருக்கிறார்கள். நம்பியாரை திரையில் காட்டும் வில்லத்தனத்தின் உச்சம் என்பது அவரை எம்ஜிஆரின் உண்மையான எதிரி என்றே நம்பிய கூட்டங்கள் கூட இருந்தது... அவருடைய வில்லத்தனம், அவருடைய நடிப்பு, அவருடைய தனித்தன்மை இன்றளவும் போற்றப்படுகிறது.

என் நண்பர் ஒருவர் ரகுவரனுக்கு அவ்வளவு பெரிய ரசிகர்... அவருடைய படங்களை பார்த்து அப்படி கொண்டாடுவார்... ஆனந்தராஜ், மன்சூர்அலிகான் ஒரு காலக்கட்டத்தில் சினிமாவை கலக்கியிருக்கிறார்கள்... இப்படியாய் பல்வேறு வில்லன் கதாபாத்திரங்களில் வந்து இன்றளவும் தமி‌ழ்திரைவுலகை அலங்கரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
..


சரி சௌந்தர்... என்ன சொல்ல வர... என்று தங்களுடைய மனதில் ஓடும் கேள்வி எனக்கு கேட்கிறது... பொதுவாக அந்தந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்களை அடுத்தப்படத்தில் நாம் அப்படியே பார்க்க விரும்புவோம்.. எம்.ஜி.ஆர் வில்லனாக நடித்தால் எப்படி ரசிகர்கள் விரும்பமாட்டார்களோ அதேபோல்தான் நம்பியாரை ஹீரோவாக மக்கள் விரும்பவில்லை...

ஜெமினி கணேசனை காதலுக்காகவே பார்த்தவர்கள் அவர் வீரவசம் பேசி சண்டையிட்டால் மனதில் சிரித்துக்கொண்டார்கள்.... அடுத்த காலக்கட்டத்தில் கமல் நடிப்புக்கு எனவும், ரஜினியை ஸடடைலுக்கு எனவும் ஒரு முத்திரை பதிந்துவிட்டது... ரசிகர்கள் ஹீரோக்களை ஹீரோவாகவும்... வில்லன்கள் வில்லன்களாகவும்.. மட்டுமே ஏற்றுக்கொண்டார்கள்...

ஆனால் அது டிஜிட்டல் சினிமாவுக்கு பொருந்தவில்லை.. ஹீரோ வில்லனாகவும்.. நகைச்சுவை நடிகராகவும்.. வில்லன்கள் ஹீரோவாகவும் எல்லாருக்கும் நடிப்பில் எதையும் நடித்துக்காட்டுவோம் என்று நிருபித்த காலக்கட்டமாக இருக்கிறது...

சமீபத்தில் என்னுடைய மனைவி சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நாயகனாகவும், சமுத்திரகனி வில்லனாகவும் நடித்த “பாயும் புலி“ படத்தை பார்த்துகொண்டிருந்தாள்.. பாதிபடம் முடிந்த நிலையில் ஏங்க.. என்று குரல்... என்னாச்சிம்மா என்று கேட்டேன்... என்னங்க இப்படி எடுத்திருக்காங்க... அப்படின்னு கேள்விக்கேட்டாள்...

என்னம்மா சுசீந்திரன் நல்லா பண்ணியிருப்பாரே... விஷால், சமுத்திரகனியும் நல்லா நடிச்சிருப்பாங்களே... எனக்கே பிடிச்சிருக்கு உனக்கு என் பிரச்சனை என்று கேட்டேன்... (எங்க வீட்டம்மா தெலுங்குவாடு... 10 தமிழ் படம் பார்த்தா 20 தெலுங்குபடம் பார்த்திருவாங்க..) எப்பவும் தமிழ்படத்தை பார்த்து கேள்விகேட்டது கிடையாது... ஏன் இப்படி கேட்குறாங்களேன்னு... மறுபடியும் சொல்லும்மான்னு கேட்டேன்...

இந்த படத்துல சமுத்திரக்கனி வில்லனாக வற்ராருங்க.. ஆமா.. அவர்தான் இந்தப்படத்தில் வில்லன்... ஏங்க என்னங்க சொல்றீங்க எவ்வளவு நல்லவர் அவர் ஏங்க இப்படியெல்லாம் நடிக்கிறாரு... அவர் வில்லானக நடிக்கிறத என்னால பார்க்க முடியலைங்க...அப்படின்னு ஒரே புலம்பல்...



ஒரு நடிகர் என்பவன் தனக்கு கொடுத்திருக்கிற வேடத்தில் தன்னுடைய திறமையை பயன்படுத்தி சிறப்பாக நடிச்சிக்கொடுப்பாங்க... அதன்படி இந்த படத்துக்கு அவர் நல்லாயிருக்கும்ன்னு அந்தப்படத்தில் வில்லனாக போட்டிருக்காங்க... அப்படின்னு பெரிய விளக்கம்கொடுத்தும் எங்கவீட்டம்மா அதை ஏற்றுக்கொள்ளவில்லை.. கடைசியிலே அந்தப்படத்தை முழுமையாக பார்க்கவேயில்லை... (நல்லவேளை அவங்க இன்னும் ரஜினிமுருகன் படத்தை பார்க்கல)

சமுத்திரக்கனி என்று சொன்னவுடன் ஒரே அறிவுரை என்றுதான் நினைவுக்கு வரும்... (இந்த சாட்டை, அப்பா போன்ற படங்களை இந்த விஜய் டிவி காரனுங்க மாதத்துக்கு 10 வாட்டி போட்டு அவர் இப்படித்தான் என்பதுபோல் மக்கள் மனதில் பதிந்துவிட்டார்போல) எல்லாப்படத்திலும் அவர் அதே பாணியை கொண்டு நடிப்பதால் சிலருக்கு சலிப்புகூட ஏற்பட்டிருக்கிறது...

அவர் வில்லனாக நடிப்பதை பலரும் பாராட்டியும் இருக்கிறார்கள்... ஆனால் என் மனைவியோ அவர் நல்லவனாகவே மட்டும்தான் நடிக்கனும்... அவர் வில்லனாக நடித்ததை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியல என்று கடைசிவரை விவாதம் செய்துக்கொண்டே இருக்கிறார்...

எதுஎப்படியோ ஒரு நடிகர் இப்படித்தான் நடிக்கவேண்டும்.. அவர் இந்த கதாபாத்திரத்துக்குதான் பொறுந்தவார்... அப்படின்னு நம்புற கூட்டம் இன்னும் இருக்கிறது என்று நம்பத்தோன்றுகிறது....

23 March, 2018

சிலர் வாழ்வில் இப்படியும் நடக்க வாய்ப்பிருக்கிறது....!


*****************************


 *******************************



  *****************************


  *****************************



  *****************************



ஒருவேளை இப்படி நடந்துவிட்டால்....

ஒருமுறை பெர்னாட்ஷா அவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி அங்கே அழகான ஹாலிவுட் நடிகையும் பங்கேற்றாராம்....

விருந்து முடியும் தருவாயில் நடிகை பெர்னாட்ஷாவை பார்த்து, நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டால் நமக்கு பிறக்கும் குழந்தை என்னை போல் அழகாகவும், உங்களை போன்று அறிவானதாகவும் இருக்கும் தானே, நாம் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டாராம்...

அதற்கு பெர்னாட்ஷா சொன்னாராம் "ஒருவேளை பிறக்கும் குழந்தை உன்னுடைய அறிவையும், என்னுடைய அழகையும் கொண்டதாக பிறந்தால் என்ன செய்வது"

அவ்வளவு தான் நடிகை துண்ட காணோம், துணிய காணோமுன்னு இடத்தை காலி செய்தாராம்....

  ******************************

வருகைக்கும் வாசித்தமைக்கும் மிக்க நன்றி..!

22 March, 2018

பஸ்ஸில் நடந்த உண்மைச் சம்பவம்



இன்னும் அறிமுகமாகாத
என் சி‌‌‌நேகிதியே...


தற்போதெல்லாம்
நாம் இருவரும் வெவ்வேறு
திசைகளில் பயணிக்கிறோம்
ஒரே பேருந்தில்...


ஏறுவதும்.... இறங்குவதும்...
நீ முன்வழியில்...
நான் பின்வழியில்....


வலபுற ஜன்னலோரத்தில்
அமர்ந்துக்கொண்டு
ஜன்னலுக்கு வெளியே 
சிறகடிக்கிறது உன் மனசு...


நான்... 
இடபுற ஜன்னலில்....


அருகில் அமர்ந்திருப்பது 
யாரென்று அறிந்திலர் 
இருவரும்...


நிறுத்தங்கள் பல கடந்து
நீயும் நானும்
இறங்கும் இடம் வருகிறது....


ஏறியது போலவே 
இறஙகும் ‌போதும்
நீ முன்வழி.. 
நான் பின் வழி...


இது  தான்  வாடிக்கை
பல நாட்களாய்...


ஆனால்...!
ஊரார் மூலம் காற்று வழியில்
‌ஒரு செய்தி வந்துக்‌‌கோண்டிருக்கிறது.....

இருவரும்...
தினமும்....
”ஒன்னாதான் போறாங்களாம்...
”ஒன்னாதான் வாறாங்களாம்....”
என்று...


திருமணமாகாத 
ஏக்கத்தில் நீயும்....

தங்கைகள் திருமணம்..., 
வேலையின்மை
என்ற விரக்தியில் நானும்...
நடை பிணமாய் 
வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்...


ஊரார்க்கு என்ன தெரியும்....

பேருந்தில்... 
நாம் அமர்ந்து எழும்
இருக்கைகள் மட்டுமே அறியும் 
நம் மனங்கள் சுமக்கும்
வேதனைகள்.... 

(மீள்)

21 March, 2018

பொண்ணு பிடிக்கலன்னா ஆள்வச்சி அடிப்பாங்களா



ருவர் : பிசினஸ் எனக்கு பொண்டாட்டி மாதிரி..

மற்றவர் : அந்த அளவு வேலையை நீ காதலிக்கிறீயா?

ஒருவர் : இல்லைடா, 

பிசினசிலேயும் நான் நிறைய அடி வாங்கியிருக்கேன்..

***********************************


“உங்க நாயை அடக்கி வையுங்க.

என் பெண் பாட ஆரம்பித்ததும் அது குறைக்க தொடங்கிவிடுகிறது.”

“அதற்கு நான் என்ன செய்ய முடியும்? உங்கள் பெண்தானே முதலில் ஆரம்பிக்கிறாள்? ... உங்க பொண்ணை மொதல்ல அடக்கி வையுங்க‌”

***********************************

ருவர் : தாய்க்கு பின் தாரம்னு சொல்லுரது சரியாத்தான் இருக்கு

மற்றவர் : எப்புடி??

ஒருவர் : சின்ன வயசுல அம்மா அடிச்சாங்க இப்ப பொண்டாட்டி அடிக்கிறா

***********************************

ரு L.K.G பெண்ணு கவனக்குறைவா Road Cross பண்ணிச்சாம்!

Traffic Police : நான் விசில் அடிச்சும்,
கை காட்டியும் ஏன் பாப்பா கண்டுக்கல?

L.K.G Girl : நான் ஒண்ணும் அந்த மாதிரி பொண்ணு இல்ல!
அன்று மாலையில் ஒரு L.K.G. பையன்
கோபத்துடன் அந்த Traffic Police யிடம்!

L.K.G.Boy : இன்னொரு தடவ என் ஆளப் பார்த்து
விசில் அடிச்ச, மவனே நீ! செத்தடா!

Traffic Police : !!!!!!

***********************************


முதலாளியின் பெருந்தன்மை!!

"எல்லோரும் இந்த வருடம் கடுமையா வேலை செஞ்சிருக்கீங்க. உங்க எல்லோருக்கும் நான் தலா 5000 ரூபாய்க்கு காசோலை தர்றேன்."

"ரொம்ப நன்றி சார்."


"இட்ஸ்.. ஓகே. இதே போல அடுத்த வருஷமும் வேலை செஞ்சா மட்டும்தான் இந்த காசோலையில நான் கையெழுத்துப் போடுவேன்!!"
 ***********************************
``அந்த வீட்டுப் பொண்ணைப் பார்த்துட்டு யாரும் புடிக்கலைனு சொல்ல முடியாது"

"ஏன் அவ்ளவு அழகா?"

"இல்லை. புடிக்கலைனு சொன்னா ஆள் வச்சு அடிப்பாங்க!"

ஒரு வழுக்கைத் தலை ஆள்:

"கொஞ்சம் ஏமாந்ததால எல்லாரும் என் தலை மேல ஏறி உட்கார்ந்துட்டாங்க?"

"அப்புறம் என்ன ஆச்சு?"

"வழுக்கி விழுந்துட்டாங்க!"

*************************************************

 என்ன ஒரு புத்திசாலிதனம்....

20 March, 2018

ஆடை குறைப்பும்.. அடுத்தவர் பார்வையும்...


ஆபாசம் என்பது உடையில் உள்ளதா...? பார்க்கும் பார்வையில் உள்ளதா..? நம் நடவடிக்கைகளில் உள்ளதா? என்பது குறித்து இன்று வரை பல்வேறு விவாதங்கள் நடந்தவண்ணமே உள்ளது.

ஆபாசம் என்பது என்னை பொறுத்தவரையில் ஆடைதான் முக்கியபங்கு வகிக்கிறது என்று கருதுகிறேன்... ஒருவருடைய மனதில் சட்டென மரியாதையையோ.. அல்லது காமத்தையோ உண்டுப்பண்ணுகிற சக்தி ஆடைக்கு உள்ளது.... நாகரீகம் என்ற பெயரில் ஆடையை குறைத்துக்கொண்டு பார்ப்பவர்கள் புத்திதான் சரியில்லை என்று மற்றவர்களை குறைச்சொல்லும் சமூகத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்.

ஆடைச்சுதந்திரம் என்பது நமக்கும் மற்றவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பையும் எற்படுத்தகூடியதாக இருக்கக்கூடாது. ஆடைதான் ஒருவர் மீது நல்ல அபிப்ராயத்தையும்.. தீய எண்ணத்தையும் ஏற்படுத்துவதான உள்ளது... நம்முடைய சுதந்திரம் நமக்கே பாதிப்பையும், அவமானத்தையும் ஏற்படுத்தும் என்றால் அப்படிப்பட்ட சுதந்திரத்தை நாம் ஏன் அது கிரிடமாக இருந்தால் கூட தூக்கியெறியகூடாது.


உடனே ஒரு கேள்வி எழும்... அது உன் வீட்டில் உள்ள பெண்கள் இப்படி இருந்தால் என்னச்செய்வீர்கள் என்ற கேள்விக்கு நான் அல்ல... மறைந்த அமெரிக்க குத்துச் சண்டை வீரர், முஹம்மது அலி அவர்களின் மகள் சொல்வதை கேளுங்கள்...

முஹம்மது அலி ஒருமுற‌ை தன் மகள், தன் தந்தையை பார்ப்பதற்கு வீட்டிற்கு சென்றபோது, மகளின் ஆடை சிறிது கவர்ச்சியாக இருந்துள்ளது. அதற்காக தன் மகளுக்கு எப்படி அறிவுரை கூறியுள்ளார் என்பதை அவரின் மகள் வெளியிட்டுள்ளார்....

நானும், எனது தங்கை லைலாவும் தந்தையின் அறைக்குச் சென்றோம். வழக்கம்போல், தந்தை கதவிற்குப் பின்னால் ஒளிந்துகொண்டு எங்களை பயமுறுத்துவது போல் நின்றார்.

நாங்கள் உள்ளே சென்றவுடன், எங்களை ஆரத் தழுவி, முத்தமிட்டப் பின்பு, அவர் எங்களை உற்றுப் பார்த்தார். 

எங்களை அருகில் அமர்த்திக்கொண்டு, என் கண்களை நோக்கி நேராகப் பார்த்து, "ஹானா, இந்த உலகில் மி்க மதிப்பு மிக்கதாக இறைவன் படைத்த அனைத்தும் மறைக்கப்பட்டவையாகவும், இன்னும் பெறுவதற்கு மிகக் கடினமாகவும் தான் உள்ளது. 


வைரங்களை எங்கு எடுப்பாய்? பூமியின் ஆழமான பகுதியில் மறைக்கப்பட்டதாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் தான் வைரங்கள் உள்ளன. 

முத்துக்களை எங்கு எடுப்பாய்? கடலின் ஆழமான பகுதியில் அழகான சிப்பிக்குள் மறைக்கப்பட்டதாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் தான் முத்துக்கள் உள்ளன. 

தங்கத்தை எங்கு எடுப்பாய்? சுரங்கத்தினுள்ளே, அடுக்கடுக்கான பாறைகளுக்குள்ளே மறைக்கப்பட்ட நிலையில், அதை எடுப்பத்தர்க்கு நீ மிகக் கடினமாக உழைக்க வேண்டும். 

"என்னை உற்று நோக்கியவராக, "உன்னுடைய உடல் புனிதமானது. வைரங்கள், முத்துக்களை விட நீ புனிதமானவள். உன் உடலை முறையாக நீ மறைத்துக்கொள்ள வேண்டும்"....

இதற்குமேல் வேறு ஒன்றும் சொல்வதிற்கில்லை... ஆடைச்சுதந்திரம் என்பது ஆடையை அழகுப்படுத்துவதில் இருக்கட்டும்... அதை குறைப்பதில் வேண்டாமே...!

19 March, 2018

ரஜினி காலா பரிதாபங்கள்


ரஜினி நடித்து விரைவில் வெளிவரயிருக்கும் காலா...

இப்படத்தின் டீசர் வெளிவந்ததிலிருந்து அதில் வரும் டயலாக்கை வைத்து நெட்டிசன்கள் பல்வேறு கோணத்தில் கலாய்த்து வருகிறார்கள் அவற்றில் சில...















Related Posts Plugin for WordPress, Blogger...