தள்ளிப்போகிறது மங்காத்தா
டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத்தில், நடிகர் அஜித் - நடிகை த்ரிஷா ஜோடி நடித்து வரும் புதிய படமான மங்காத்தா ரீலிஸ் தேதி தள்ளிப்போகிறது. அஜித் பிறந்த நாளான மே 1ம்தேதி படத்தை ரீலிஸ் செய்யும் திட்டத்துடன் விறுவிறுப்பாக சூட்டிங்கை நடத்தி வரும் குழுவினர், இப்போது ரீலிஸை ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்க முடிவு செய்துள்ளனர்.
அஜித் - த்ரிஷா தவிர லட்சுமிராய், பிரேம்ஜி அமரன், அர்ஜூன், வைபவ் உள்ளிட்டவர்கள் நடித்து வரும் இப்படத்தின் இறுதிகட்ட சூட்டிங் இப்போது மும்பையில் நடந்து வருகிறது. ஏப்ரல் 16ம்தேதி வரை மும்பையில் நடக்கவுள்ள படப்பிடிப்பை முடித்த கையோடு 2 பாடல் காட்சிகளை எடுக்க வெளிநாட்டுக்கு செல்ல திட்டமிட்டிருக்கிறார் வெங்கட்பிரபு. அதன் பிறகுதான் படத்துக்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை செய்ய முடியும். எனவே, தமிழகத்தில் தேர்தல் பரபரப்பு ஒருபுறம், ஐபிஎல் கிரிக்கெட் ஒருபுறம் என பரபரப்புக்கு இடையே படத்தை அவசரம் அவசரமாக ரீலிஸ் செய்ய வேண்டாம் என நினைக்கிறதாம் தயாரிப்பு தரப்பு. இதனால் மே மாதம் என இருந்த ரீலிஸ் தேதி ஜூன் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
*********************************************************************************
விக்ரமின் பிதா, தெய்வ திருமகன் ஆனது
நடிகர் விக்ரம் அடுத்து நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு தெய்வ திருமகன் என பெயரிடப்பட்டுள்ளது. மதராசபட்டனம் விஜய் இயக்கத்தி்ல உருவாகும் புதிய படத்தில் விக்ரம் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்கு முதலில் தெய்வமகன் என்று பெயரிடப்பட்டது. தெய்வமகன் பெயரை ஏற்கனவே ஒருவர் பதிவு செய்து வைத்திருந்ததால் பிதா என மாற்றப்பட்டது. பிதா என்ற தலைப்புக்கும் வேறோருவர் உரிமைகொண்டாடியதால் இப்போது படத்தின் பெயரை தெய்வ திருமகன் என மாற்றியுள்ளனர்.
படத்தில் விக்ரம் ஜோடியாக அனுஷ்கா, அமலா பால் நடிக்கிறார்கள். டைரக்டர் விஜய்யின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான நீரவ் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தெய்வ திருமகன் படத்தில், விக்ரம் முத்து என்ற மனநலம் பாதிக்கப்பட்ட கேரக்டரில் நடிக்கிறார். அமலா பால் விக்ரமின் மனைவியாக நடிக்கிறார். இப்படம் ஐ யம் ஷாம் என்ற படத்தின் தழுவல் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் அதனை டைரக்டர் விஜய் மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
*********************************************************************************
என்ன துரத்தப்பார்க்கிறார்கள் - ஜெனிலியா
ஜெனிலியா கூறியது: ‘பாலிவுட்டை உதறிவிட்டு கோலிவுட்டுக்கு போனவர், இப்போது மீண்டும் பாலிவுட்டில் தஞ்சம் புகுந்திருக்கிறார்' என்று மும்பையில் சிலர் என் மீது புகார் கூறுகின்றனர். இது யாரோ கட்டிவிடும் கதை. நான் பாலிவுட்டுக்கு வந்தது பிடிக்காமல் என்னை துரத்தப் பார்க்கிறார்கள். பாலிவுட்டில்தான் அறிமுகம் ஆனேன். அதன்பிறகு கோலிவுட், டோலிவுட்டில் பெரிய வரவேற்பு கிடைத்தது.
ஷங்கரின் ‘பாய்ஸ்' படத்தில் நடித்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் ‘துஜே மேரி கஸம்' என்ற இந்தி படத்திலும் நடித்துக் கொண்டிருந்தேன். தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் ஒரே நேரத்தில் அறிமுகமான நடிகை நான் ஒருத்திதான். இப்போதுதான் நான் இந்தியில் கவனம் செலுத்துவதாகவும் பாலிவுட்டில் லாபம் அடைய வந்திருப்பதாகவும் கூறுவது தவறு. ஷூட்டிங்கிற்காக மும்பை, சென்னை, ஐதராபாத் என்று 3 நகரங்களுக்கும் சுற்றி சுற்றி வட்டமடித்துக் கொண்டிருந்தேன். ஒரு வெற்றி, இந்த பேச்சுக்களையெல்லாம் மாற்றிவிடும். அதற்காக காத்திருக்கிறேன்.
*********************************************************************************
மணிரத்னம் படத்திலிருந்து விக்ரம் விலகல்?
ராவணன் டப்பா ஆனபிறகும் மணிரத்னம் அழைத்தார் என்று படப்பிடிப்பை கேன்சல் செய்து அவரைப் பார்க்கப் போனார் விக்ரம். இந்த அழைப்பு பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பது தொடர்பாக இதே படத்தில் முக்கிய வேடத்தில் விஜய்யும், மகேஷ்பாபுவும் நடிப்பார்கள் என்ற செய்தி வெளியான பிறகு விக்ரமின் உற்சாகம் வடிந்துவிட்டது.
எதிர்பார்த்தது போல முக்கியமான ரோல்கள் அவர்களுக்கு, இரண்டாவது ஹீரோ போன்ற வேடம் விக்ரமுக்கு. இதனால் படத்திலிருந்து அவர் விலகிவிட்டதாக நம்பத்தகுந்த செய்திகள் தெரிவிக்கின்றன. விக்ரமுக்குப் பதில் அந்த வேடத்தில் ஆர்யா நடிப்பார் என தெரிகிறது.
***************************************************************************************
இசை அமைப்பதையே நிறுத்தி விடுகிறேன் - இளையராஜா
இளையராஜா இசையில் உருவாகியிருக்கும் 'அழகர்சாமியின் குதிரை' படத்தின் இசை அண்மையில் சென்னையில் வெளியிடப்பட்டது. இசை வெளியீட்டுக்குப் பிறகு பத்திரிகையாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர். இதில் இளையராஜாவும் கலந்துகொண்டார்.
இளையராஜா பேச ஆரம்பித்ததுமே நிகழ்ச்சி பரபரப்பாக துவங்கியது. காரணம் அவர் ஆரம்பித்ததே சூப்பர் ஸ்டாரை வைத்துதான். இதில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் அப்புக்குட்டியை பார்த்து. "நீ மேடை ஏறியபோது எவ்வளவு பேர் கைதட்டினார்கள் பாத்தியா? ஆனால் அதனால நீ சூப்பர் ஸ்டாராக ஆகமுடியாது. அதேபோல சூப்பர் ஸ்டாரல இந்த வேடத்தில் நடிக்க முடியுமா? அதுதான் படம்." என்று பேச்சை துவங்கியவர். பூகம்பம் ஏன் வருகிறது. அதற்கும் மனிதர்களுக்கும் என்ன சம்மந்தம் என்று எப்போதும் போல புரியாதவாரே பேசியவர்,
"இந்த படத்திற்கு இப்போதுதான் பின்னணி இசை சேர்ப்பு வேலையை முடித்திருக்கிறேன். இப்போது கூட டைட்டில் இசை சேர்ப்பு பணியில்தான் இருந்தேன். இந்த படத்தின் இசையை கேட்கும்போது மக்களின் கண்களில் இருந்து கண்ணீர் வரும். அப்படி வரவில்லையென்றால் நான் இனி இசையமைப்பதையே நிறுத்தி விடுகிறேன்" என்றார். பிறகு எப்போதும்போல மறுபடியும் எதை எதையோ பேச ஆரம்பித்து இறுதியில் 'வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் போஸ்டர்களை பார்த்தபோதே அந்த படம் வெற்றி பெறும் என்று நான் சொன்னவன். அதுபோல இந்த படமும் கண்டிப்பாக வெற்றிபெறும்." என்றார்.
***********************************************************************************
ஒரு சூப்பர் ஸ்டாரும் தீவிர ரசிகனும்!
தொலைக்காட்சி உலகில் முன்னணி நடிகர் வேணு அர்விந்த். சினிமாவில் எப்போதோ அறிமுகமாகியும் கூட பெரிய அங்கீகாரம் கிடைக்காமல் போகவே, சின்னத் திரைப் பக்கம் போய் வெற்றிக் கொடி நாட்டியவர். இப்போது மீண்டும் பெரிய திரையில் களமிறங்கியுள்ளார்… வெறும் நடிகராக மட்டுமல்ல, ஒரு இயக்குநராக. சபாஷ் சரியான போட்டி என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படம், ஒரு சினிமா சூப்பர் ஸ்டாருக்கும் அவரது தீவிர ரசிகனுக்குமான உறவைச் சித்தரிக்கிறதாம்.
சூப்பர் ஸ்டாராக ஜெயராமும், அவரது ரசிகனாக ஸ்ரீராம் கார்த்திக்கும் நடித்துள்ளனர். அஞ்சனா நாயகியாக நடிக்கிறார். தமன் இசையமைத்துள்ளார்.
படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை பிரசாத் லேப் வளாகத்தில் நடந்தது. கிட்டத்தட்ட சின்னத்திரை உலகமே திரண்டு வந்துவிட்டதைப் போல, எக்கச்சக்க டெலிவிஷன் நட்சத்திரங்கள் குவிந்துவிட்டனர் விழாவில். முதல் இசைத் தகடை இயக்குநர் பாலுமகேந்திரா வெளியிட, இயக்குநர்கள் ஆர்கே செல்வமணி, சமுத்திரக்கனி, வெற்றிமாறன் மற்றும் அபிராமி ராமநாதன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
***********************************************************************************
ஏப்ரல் மாதம் காதலியுடன் பிருத்விராஜ் திருமணம்
‘கனா கண்டேன், ‘மொழி, ‘நினைத்தாலே இனிக்கும், ‘அபியும் நானும் என கோலிவுட்டில் அவ்வப்போது தலைகாட்டும் பிருத்விராஜ், மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லாலுக்கு போட்டி ஹீரோவாக வலம் வருகிறார். சந்தோஷ் சிவன் இயக்கத்தில் ‘உருமி“ படத்தில் நடித்துள்ளார். விரைவில் இந்தி படமொன்றிலும் நடிக்கிறார்.பிருத்விராஜ் உடன் நடிக்கும் ஹீரோயின்களுடன் அடிக்கடி காதல் கிசுகிசுக்களில் சிக்குவார். தற்போது மீண்டும் பரபரப்பான காதல் கிசு கிசுவில் சிக்கி இருக்கிறார் பிருத்வி. ஒரு வருடத்துக்கு முன்பு டிவி நிகழ்ச்சிக்காக பேட்டி காண வந்த பெண் நிருபரை சந்தித்ததும் காதலில் விழுந்தாராம் பிருத்வி. அந்த பெண் மும்பைவாசி. இது பற்றிய ரகசியம் வெளிவராமல் இருப்பதற்காக வார இறுதி நாட்களில் மும்பைக்கு ரகசிய விசிட் அடித்துக் கொண்டிருந்தார் பிருத்வி. இந்த ரகசிய காதல், இப்போது மல்லுவுட்டில் லீக் ஆகி இருக்கிறது. விஷயம் பிருத்வியின் அம்மாவுக்கு தெரிந்ததும் அவரும் பச்சை கொடி காட்டிவிட்டாராம். ஏப்ரல் மாதம் காதலியுடன் திருமணம் நடக்கிறது. பிறகு திருவனந்தபுரத்தில் ஊர் அறிய திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருக்கிறாராம் பிருத்வி.
*********************************************************************************
நடிகர் தாமுவுக்கு இரட்டை பெண் குழந்தை
காமெடி நடிகர் தாமுவுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. தமிழ் சினிமாவில் நூற்றுக்கணக்கான காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருப்பவர் நடிகர் தாமு. இவருக்கும் இவரது மனைவி சுந்தரிக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு குழந்தை இல்லாமல் இருந்த தம்பதியருக்கு இனிப்புச் செய்தியாக சுந்தரி கர்ப்பமானார். இதையடுத்து டாக்டர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை மேற்கொண்ட வந்த சுந்தரிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. பிரசவத்திற்கு பிறகு குழந்தைகளும், தாயும் நலமுடன் இருக்கிறார்கள். திருமணமாகி 12 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை அதுவும் இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதால் தாமு தம்பதியர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நண்பர்கள், திரையுலக பிரமுகர்களுக்கு இனிப்பு கொடுத்து கொண்டாடி வருகிறார் தாமு.
********************************************************************************* மீண்டும் ஜோடியாக நடிக்க தயார் - சூர்யா ஜோதிகா!
நடிகர்களுக்கு நடிப்பைத் தொடர திருமணம் ஒரு தடையாக இருப்பதில்லை. ஆனால் நடிகைககள்தான் திருமணத்திற்குப் பிறகு தொடர்ந்து நடிப்பதில் ஏகப்பட்ட இடியாப்பச் சிக்கல்கள். பெரும்பாலானவர்கள் மீண்டும் நடிக்கு வந்து விடுகிறார்கள். கலையார்வத்தைக் கட்டுப்படுத்த முடியவிலல்லை என்பதே இவர்களிடம் இருக்கும் ரெடிமேட் பதில். இந்த சினிமா நியதிக்கு உட்படாத நடிகைகள் யாராவது இருக்கிறார்களா என்றால்... ம்ஹூம் ரொம்பக் கம்மி(ராதாவும் நடிக்கத் தயார் என்று ஸ்டேட்மெண்ட் விட்டுவிட்டார்)! அந்த வகையில் ஜோதிகாவும் இப்போது நடிக்க வந்து விட்டார்.
எக்காரணம் கொண்டும் ஜோதிகா இனி நடிக்க மாட்டார் என திருமண வரவேற்பின்போது அறிவித்தார் அவரது மாமனார் சிவகுமார். ஆனால் இதோ, நான்காண்டுகள் கழிந்த நிலையில் இப்போது ஜோதிகா நடிக்கவுள்ளதாக கணவர் சூர்யாவே அறிவித்துள்ளார். சமீபத்தில் ஒரு விளம்பரப் படத்தில் சூர்யாவும், ஜோதிகாவும் கணவன்-மனைவியாக ஜோடியாக நடித்துள்ளனர். ஒரு காபி விளம்பரம் அது.
இது ஒரு ட்ரையல்தான் போலிருக்கிறது. இப்போது, பெரிய வாய்ப்பிருந்தால் சொல்லுங்கள், கணவன் - மனைவியாக முழுப்படத்திலும் நடித்துக் கொடுக்கிறோம் என்று அறிவித்துள்ளனர் சூர்யாவும் ஜோதிகாவும்!
*********************************************************************************
'வேலாயுதம்' படத்தில் ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர்
வேலாயுதம் படத்தில் படுபிசியாக இருக்கிறார் நடிகர் விஜய். இப்படம் விஜய் பிறந்தநாளில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம் ராஜா இயக்கும் படம் “வேலாயுதம்”. இப்படத்தில் விஜய், ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடிக்கின்றனர். விஜய்யின் தங்கையாக சரண்யா மோகன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்மரமாக நடைபெற்று வருகிறது. ‘வேலாயுதம்Õ படத்தில் ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் டாம் டெல்மர் அமைக்கும் சண்டை காட்சியில் விரைவில் நடிக்க இருக்கிறார் விஜய்.
*****************************************************************************
நல்லதா ஒரு நாலு வார்த்தை சொல்லிட்டு போங்க...