கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

30 July, 2013

பேஸ்புக்கில் இந்த வார கலக்கல் ஜோக்ஸ் / மற்றும் கேபிள் சங்கர் /



"உங்க மாமியார்கிட்டே போய், கேரட் அல்வா.. கேரட் அல்வா-னு சொல்லிட்டு வர்றியே ஏன்?"

"கேரட் அல்வா-ன்னா உயிரையே விட்டுடுவேன்-னு அவங்க சொன்னாங்களே.

**********************************

எதிர்க்கட்சித் தலைவரிடம் நம்ப தலைவர் சூடான கேள்வின்னு போட்டிருக்கே..

அப்படி என்னா கேட்டாரு?"

"இன்னிக்கு எவ்வளவு டிகிரி வெயில்னு கேட்டாரு..!"

****************************************

ஒரு நிறுவனத்தின் முதலாளி முடி வெட்டுக் கொள்வதற்காக சலூன் கடைக்கு வந்தார். அவர் முடி வெட்டி முடிந்ததும் உரிய தொகைக்கு மேல் ஒரு ரூபாய் இனாமாகக் கொடுத்தார். முடி வெட்டுபவருடைய முகம் சுருங்கியது. ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளி ஒரு ரூபாய் இனாம் தருவதா? என்கிற ஏளனத்துடன் சொன்னார்;

“உங்களிடம் வேலை பார்க்கும் கணக்கர்கள் கூட பத்து ரூபாய் இனாம் கொடுப்பார்கள். ஆனால் நீங்கள்...?”
“உண்மைதான். அதனால்தான் ஆயுள் முழுவதும் அவர்கள் கணக்கர்களாகவே இருக்கிறார்கள். நான் முதலாளியாக இருக்கிறேன்.” என்றபடியே அங்கிருந்து நகர்ந்தார்.

******************************
 பிரபலமான அமைச்சர் ஒருவர், பல லட்ச ரூபாய் மதிப்புள்ள கார் ஒன்றை வாங்கினார்.

அந்தக் காரை ஓட்டுவதற்கு டிரைவரும் இருந்தார்.

ஒரு நாள் உல்லாசமாக வெளியில் செல்கையில், தன் காரை ஓட்டிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அமைச்சருக்கு எழுந்தது.

உடனே டிரைவரிடம்,

"நீ சிறிது நேரம் ஓய்வுஎடு. நான் சிறிது நேரம் காரை ஓட்டுகிறேன்."என்றார்.

அதனை ஏற்க மறுத்த‌ டிரைவர் சொன்னார்,

"நீங்கள் ஓட்டுவதாக இருந்தால் நான் கீழே இறங்கிக் கொள்கிறேன்"

"ஏன் அப்படி சொல்கிறாய்?" கேட்டார் அமைச்சர்.

அதற்கு டிரைவர் சொன்னார்,

"ஏனெனில் இது கார். நீங்கள் ஓட்ட நினைப்பதற்கு இது ஒன்றும் சர்க்கார் அல்ல. கடவுள் பார்த்துக் கொள்வார் என்று விடுவதற்கு"
*****************
இந்த வாரம் பேஸ்புக்கில் கலக்கிய நகைச்சுவைகள்...
நான் ரசித்ததை நீங்களும் ரசியுங்கள்..!

*****************
 இன்று  பிறந்தநாள் காணும் நண்பர் கேபிள் சங்கர் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்......

29 July, 2013

இது எல்லாமே வேஷம் தானே...!



ஒருமுறை ஒத்திகை பார்த்துவிட்டு
அழுகிற உலகம்...!


முழதாய் ஒப்பனைசெய்துக்கொண்டு
சிரிக்கும் உதடுகள்...!


நன்றாக வாழ்கிறவனைக்கண்டு
எரிகிற வயிறுகள்...!


நாணயத்தை பார்த்தால் மட்டும்
நீளுகிற நட்பு...!


வலியுள்ளவனை காலில் விழவைக்கும்
நாகரீக கலாச்சாரம்....!


எவ்வளவு தேடிப்பார்த்தும்
கிடைக்கவில்லை நிஜங்கள்...!


வாழ்க்கை ‌மேடையில் அரங்கேறுகிறது
வேஷம் கட்டிய நாடகங்கள்...!


28 July, 2013

இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..? தெரிஞ்சிக்கங்க அம்புட்டுதான்...!








• அண்டார்டிக் கண்டம் உலக நாடுகளுக்குத் தெரிய வந்தது 1820-ஆம் ஆண்டில்தான்.

• ஒவ்வோராண்டும் 160 லட்சம் இடி, மின்னல்கள் பூமியில் ஏற்படுகின்றன.

• தவளைகள் தண்ணீரில் வாழ்ந்தாலும் அந்தத் தண்ணீரைக் குடிக்கவே குடிக்காது.

• 11 நாடுகளை எல்லையாகக் கொண்ட நாடு சீனா.

• பிறந்த குழந்தை என்னதான் அழுதாலும் கண்ணீர் மட்டும் வராது. ஏனென்றால் கண்ணீர் சுரப்பி வளர்ந்து செயல்படுவதற்குக் குறைந்தது 15 நாட்களாவது ஆகும்.

• சேரன் தீவு என்றழைக்கப்பட்ட நாட்டின் இன்றைய பெயர் இலங்கை.

• காந்திஜி முதன்முதலில் சென்ற வெளிநாடு இங்கிலாந்து.

• அமெரிக்காவில் காணப்படும் லாமா என்னும் விலங்கு எதிரியின் மேல் எச்சிலைத் துப்பும் பழக்கம் உடையது. இது ஓட்டகக் குடும்பத்தைச் சேர்ந்தது.

• மனித உடலிலேயே மூக்கின் நுனிதான் மிகவும் குளிர்ச்சியான பாகம்.

• பிரேசில் நாட்டில் ஒருவகை வண்ணத்துப்பூச்சி உள்ளது. இது சாக்லேட் நிறத்தில் காணப்படும். இது பறந்து செல்லும்போது சாக்லேட் வாசனை அடிக்குமாம்!

• காபி பொடியில் கலக்கப்படும் சிக்கரித்தூள், சூரியகாந்தி செடி வகையைச் சேர்ந்த காசினி என்னும் செடியின் வேராகும்.

• கைரேகைகளை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கும் பழக்கத்தைச் சீனர்கள் கி.மு. 7-ஆம் நூற்றாண்டில் கடைப்பிடித்திருக்கிறார்கள்.

• ஒரே ஆண்டில் 7 புலிட்சர் விருதுகளை வென்ற அமெரிக்கப் பத்திரிகை நியூயார்க் டைம்ஸ்.

• பிறந்த அன்றைக்கே நிற்கவும் நடக்கவும் முடிகிற விலங்குகள் வரிக்குதிரையும் ஆடுகளும்.

• தர்பூஸ் பழங்களை இந்தியாவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் முகலாய மன்னர் பாபர்.

• யூதர்களின் காலண்டரில் முதல் மாதம் செப்டம்பர்.

• செடி விதைகளில் அதிக காலம் ( 30 ஆண்டுகள் ) கெட்டுப் போகாமல் இருப்பது தாமரைப்பூ விதைதான்.

• ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளின் பிறப்பிடம் கிரேக்க நாடு.

• ஆக்ஸ்ஃபோர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக ஆசிரியர்களுக்கு டான் என்று பெயர்.

• எழுத்தாளர் மாக்ஸிம் கார்கி, அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வெயின் ஆகியோர் ஆரம்பப் பள்ளிக்கு மேல் தாண்டியதில்லை.

• கண்ணாடியால் சாலைகள் போட்ட முதல் நாடு ஜெர்மனி.

• ஆண்களுக்கான சட்டையைக் கண்டுபிடித்த நாடு எகிப்து.

• இரண்டு செட் உடைகள் மட்டுமே பிடிக்கும் ஜேம்ஸ்பாண்ட் பாணி சூட்கேஸ்கள் முதன்முதலில் பிரேசில் நாட்டில் தயாரிக்கப்பட்டன.

• மாரடைப்பால் நின்றுபோன இதயத்தை மீண்டும் இயக்க உதவும் கருவியின் பெயர் மார்க்விட் ரெஸ்பாண்டர் 1200.

• இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன், திருச்சிக்கு அருகிலுள்ள "திருவானைக்காவல்' என்ற ஊரில் பிறந்தவர்.

• பூனைகளை வளர்ப்பது அதிர்ஷ்டமானது என்று கருதுபவர்கள் ஐஸ்லாந்து மக்கள்.

• உலகில் ஐம்பது சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் விரும்பும் நிறம் சிவப்பு.

• சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மனிதனின் அடிப்படைத் தத்துவத்தை முதன்முதலில் சொன்னவர் பிரான்ஸ் நாட்டு தத்துவஞானி ரூஸோ.

• பூமியின் வயது 4,610 மில்லியன் ஆண்டுகள் என்று தோராயமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

• ஒரு கிலோவில் சுமார் 2000 ரப்பர் பேண்டுகள் இருக்கும்.

• ரோஜாக்களிலிருந்து பன்னீர் எடுத்து அதைப் பிரபலமாக்கிய பெண்மணி, முகலாய அரசர் ஜஹாங்கீரின் மனைவியான நூர்ஜஹான்.

• பெட்ரோலை "கேúஸôலின்' என்று அமெரிக்கர்கள் அழைக்கிறார்கள்.

• ஜப்பானியரும் பிலிப்பைன்ஸ் நாட்டவரும் தோற்றத்தில் ஒரே மாதிரி இருப்பார்கள்.

• தொடக்கப் பள்ளியிலேயே படிப்பை நிறுத்தியவர் விஞ்ஞானி ஜி.டி.நாயுடு.

• இங்கே வீட்டுக்கு வீடு கிணறுகள் இருப்பது போல அமெரிக்காவின் புறநகர்ப் பகுதிகளில் வீட்டுக்கு வீடு நீச்சல் குளங்கள் இருக்கும்.

• தேங்காய் என்பது காயும் அல்ல; கனியும் அல்ல. அது விதை.

• முன்னாள் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு மிகவும் பிடித்த மலர் ரோஜா.

• ஜூடோ என்ற மற்போர்க் கலையை முதன்முதலி கண்டுபிடித்தவர் ஜப்பானைச் சேர்ந்த டாக்டர் ஜிராரே கானா.

• வானம்பாடிப் பறவைகளில் 75 வகைகள் உள்ளன.

• எல்லைப் பிரச்னை காரணமாக எறும்புகளும் சண்டை போட்டுக் கொள்கின்றனவாம்.

• ஆசியா கண்டத்தில் முதன்முதலில் கார் தயாரித்த நாடு ஜப்பான்.

• நிலக்கடலையின் பிறப்பிடம் தென் அமெரிக்கா.

• சூரியனை மிக வேகமாக (மணிக்கு 1,72,248 கி.மீ.) சுற்றும் கிரகம் புதன்.

• பூட்டுகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு மிருகங்களின் நரம்பினால் செய்யப்பட்ட உறுதியான கயிறுகளைக் கொண்டு வீட்டுக் கதவுகளைக் கட்டி வைத்தார்கள்.

• "கிராம் பெர்ரி' என்ற ரஷ்ய நாட்டுப் பழம் ஓராண்டு வரையிலும் கெட்டுப் போகாமல் இருக்குமாம்.

• தாஜ்மஹால் இருக்கும் ஆக்ரா நகரின் முந்தைய பெயர் "அக்பராபாத்'.

• புயல் உருவாகப் போவதை முன்கூட்டியே அறிவிக்கும் கருவி சீஸ்மோகிராஃப்.

• உலகத்திலேயே மிக விலையுயர்ந்த பூவைத் தரும் செடி குங்குமப் பூச்செடிதான்.

*கெய்ரோவிலுள்ள பல்கலைக்கழகம்தான் உலகில் முதன்முதலில் ஏற்படுத்தப்பட்டது..

நன்றி..
பொது அறிவு நண்பர்கள் குழு

27 July, 2013

சிம்புவிடம் சண்டைபோட்டது உண்மைதான்... தனுஷ் + மசாலா கார்னர்


 தமிழ்த் திரையுலகில் சமீபத்தில் பரபரப்பாக எல்லோராலும் பேசப்பட்டு வருவது சிம்பு-ஹன்ஸிகா காதல் சமாச்சாரம் தான். ஹன்சிகா சிம்புவுடன் வாலு, வேட்டை மன்னன் என இரண்டு படங்களில் கமிட் ஆகும்போதே சிலர் ’சிம்பு ஒரு மாதிரியான ஆளு. நமக்கு எதுக்கு வம்பு. கொஞ்சம் தள்ளியே இரும்மா’ என எச்சரித்திருக்கிறார்கள்.





திரைப்படங்களில் வருவது போல, இந்த அறிவுரையே இருவரிடமும் காதல் உண்டாக வழி ஏற்படுத்திக்கொடுத்துவிட்டது. சிம்புவுடன் ஹன்ஸிகா காதலா? என தமிழ், தெலுங்கு திரையுலகங்கள் ஆச்சர்யப்பட்டுக்கொண்டிருக்கும் சமயத்தில், தனுஷ் ’சிம்புவைப் பற்றி ஹன்ஸிகா கூறியது உண்மைதான்’ என கூறியுள்ளது பரபரப்பை எற்படுத்திவிட்டது.


முன்பு ஒரு பேட்டியில் ’உங்களுக்கும் தனுஷுக்கும் என்ன பிரச்சனை’ என்று கேட்டபோது சிம்பு “நாங்க நல்ல ஃப்ரெண்ட்ஸா தான் இருந்தோம். தனுஷ் நடிச்ச காதல் கொண்டேன் திரைப்படமும், நான் நடிச்ச அலை திரைப்படமும் ஒரே சமயத்துல ரிலீஸ் ஆச்சு. அதுல இருந்து தனுஷ் என்னோட பேசுறதில்ல” என்று கூறியிருந்தார். 
ஆனால் தனுஷ்-ஐஸ்வர்யா காதல் விவகாரத்தால் தான் இருவருக்கும் பிரச்சனை என்று பரவலாக பேசப்பட்டது. ஹன்ஸிகாவும், சிம்புவும் காதல்வயப்பட்டுள்ள நிலையில் அவர்களைப் பற்றி தனுஷ் பேசியிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.


சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தனுஷ் “சிம்புவுக்கும் எனக்கு பிரச்சனை இருந்தது உண்மைதான். எங்களுக்கிடையில் சரியான பேச்சுவார்த்தை இல்லாததால புரிஞ்சிக்காமலே இருந்துட்டோம். ஆனா நாங்க மனசுவிட்டு பேசினதுக்கப்புறம் ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிகிட்டோம்.


வாலு பட டிரெய்லரில் ஹன்ஸிகா சொல்றது மாதிரி சில பசங்களை பாக்க பாக்க தான் புடிக்கும். ஆனா சிம்பு மாதிரி பசங்கள பாத்ததுமே புடிச்சிடும். என்ன எனக்கு சிம்புவ புடிக்க கொஞ்சம் லேட் ஆச்சு அவ்ளோ தான்” என்று கூறியுள்ளாராம்.


*****************************************
ஒரு பேஸ்புக் போராளி,

தன்னுடைய பக்கத்தில் ஒரு அமைச்சரை "முட்டாள்" என்று பதிவிட்டு விட்டார்.

இதை அறிந்து கொதித்துப் போன அமைச்சர் அந்த பேஸ்புக் போராளி மேல் மானநஷ்ட வ‌ழக்கு தொடர்ந்தார்.

பேஸ்புக் போராளிக்கு எதிராக தீர்ப்பு வந்தது.

"அமைச்சரை அவமானப்படுத்தியதற்கு இரண்டு வருசமும், அரசாங்க இரகசியத்தை வெளிப்படுத்தியதற்கு எட்டு வருசமும் ஆக மொத்தம் பத்துவருசம் சிறை தண்டனை

*******************************************




ஒரு திருமண வீட்டிற்குச் சென்றிருந்தேன்.

பந்தியில் கூட்டம் குறைந்ததும் சாப்பிட உட்கார்ந்த போது, பக்கத்தில் அமர்ந்திருந்த நபரை எங்கேயோ பார்த்த ஞாபகமாக‌ இருந்தது.

"உங்களை நான் இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே...!" என்று கேட்டேன்.

"அட, நீங்கள் ரெண்டாவது பந்தியில சாப்பிட்டுக் கொண்டிருந்த போது எதிர்ல உட்கார்ந்திருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேனே..." என்றார் அவர்.

ஞாபகம் வந்துவிட்டது. சாப்பிட்டபின் இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்புகையில்...

"ஏங்க மொய் வைக்கலே..." கேட்டேன் அவரிடம்.

அவர் சொன்னார்,

"அட... மாப்பிள்ளைப் பய எனக்கு பத்திரிகையே வைக்கல... நான் ஏன் மொய் வைக்கணும்?"
***********************************************
***********************************************
நோ கமாண்ட்ஸ்....
 நான் ரசித்தவைகளை நீங்களும் ரசித்ததற்கு மிக்க நன்றி...!

இதை யாருகிட்டயாவது சொல்லியே ஆகனுமே...!


ஓர் அரசனுக்கு அரச போகங்கள் அலுத்துப் போனது. வாழ்வின் நிலையாமை, ஆன்ம விழிப்புனர்வு இவற்றைப் பற்றியெல்லாம் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது.

யாராவது ஒரு குருவைத் தேடிக் கண்டுபிடித்து இதற்கான உபதேசம் பெற வேண்டும், ஞானம் பெறவேண்டும் என்றெல்லாம் அவனது மனமானது அலைபாய்ந்தது.

அப்போது ஒரு ஜென் குருவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அரசன் அவரிடம் என்னிடம் எல்லாம் இருக்கிறது, ஏவல் செய்வதற்கு ஆயிரம் பேர் உள்ளனர், மற்றும் நான் பல கலைகள் கற்று இருக்கிறேன். எனக்கு தெரியாததது ஏதும் இல்லை.

ஆனாலும், மனதில் அமைதி இல்லை. அதனால் நான் ஞானம் அடைய வேண்டும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்..? என்ற தன் உள்ளடக்கையை அவரிடம் அவன் வெளியிட்டான்.

ஆனால் அவரோ,

ஞானம் அடைவது கிடக்கட்டும், முதலில் அதற்கு நீ உன்னைத் தகுதி உடையவனாக ஆக்கிக் கொள் என்றார்.

அரசனுக்கு அவர் சொன்னது விளங்கவில்லை. தனக்கு ஞானம் பெறுவதற்கான எல்லாத் தகுதிகளும் இருப்பதாக நினைத்தான் மன்னன்.

அவன் மனதில் ஓடிய எண்ணங்களை புரிந்து கொண்ட ஜென் குரு,

மன்னா,

ஒரு நிலத்தில் பயிர்கள் விளைவிக்க வேண்டும் என்றால் முதலில் அந்த நிலத்தை நன்கு உழுது பண்படுத்த வேண்டும். அதுபோல் உன் மனமும் ஞான உபதேச பெறுவதற்கு தகுந்த வகையில் பண்படுத்தப்பட வேண்டும் என்றார்.

ஆனால்,

குருவின் இந்த பதிலால் மன்னன் சமாதானம் அடையவில்லை.
அந்தச் சமயத்தில் ஒரு சீடன் ஒருவன் நின்று பேசிக்கொண்டு இருந்த இடத்தைப் பெருக்கிக் கொண்டு வந்தான்.

அதனால் அங்கு ஏற்ப்பட்ட புழுதிப் படலத்தில் இருந்து தூசுகள் பறந்து வந்து அங்கு நின்று இருந்த மன்னனின் அழகிய ஆடைகளின் மீது படிந்தன.

மன்னன் மிகுந்த கோபத்துடன் அதை குருவிடம் சுட்டிக் காட்டி, சீடனை கண்டித்து வையுங்கள் என்றான்.

குரு அதைப் பார்த்து சிரித்தபடி, உன்னிடத்தில் நிறைய பாம்புகள் நிறையக் குடி கொண்டு உள்ளது. நீ முதலில் அதை அப்புறப்படுத்திவிட்டு என்னிடம் வா.

இப்போது நீ போகலாம் என்றார்.

பாம்புகளா, என்னிடத்திலா என்ன சொல்கிறார் இந்த குரு என்று மன்னன் சிந்தித்தபடி அந்த இடத்தைவிட்டு சென்றான்.

சில ஆண்டுகள் கழித்து மீண்டும் குருவை பார்க்க வந்தான் அரசன்.

அப்போதும் அதே சீடன் பெருக்கிக் கொண்டு இருந்தான். இந்தத் தடவையும் குப்பை, கூளங்கள் அரசரின் ஆடையின் மீது ஒட்டிக் கொண்டன.

இந்த தடவை மன்னன் குருவிடம் செல்லாமல் நேராக சீடனிடம் சென்று, நான் யார் என்று தெரியுமா..?

நான் இப்போது நினைத்தால் உன் தலையை சீவிவிடுவேன் என்று சீடனைப் பார்த்து கடுஞ்சொல்லால் திட்டினான்.

ப்போது குரு அரசனைப் பார்த்து,

உன்னிடம் நிறைய நாய்கள் உள்ளன. அதை முதலில் விரட்டிவிட்டு என்னிடம் வா என்றார் குரு.

மன்னனுக்கு ஒன்றும் புரியவில்லை.

ஆனால் மன்னன் யோசித்தபடி அந்த இடத்தில் இருந்து நகர்ந்தான்.

இரண்டு ஆண்டுகள் உருண்டு ஓடிவிட்டன. மீண்டும் மன்னன் குருவை தேடி வந்தான். இந்த முறையும் சீடன் அந்த மன்னனை விட்டுவைக்கவில்லை.

இந்த தடவை சீடன் ஒரு வாளியில் சாணக் கரைசல் கொண்டு தொளித்துக் கொண்டு இருந்தபோது சீடனின் கை தவறுதலாக மன்னன் மீது பட்டு சாணக் கரைசல் முழுவதும் அரசனின் ஆடை முழுவதும் சிந்திவிட்டது.

ஆனால், இந்தத் தடவை மன்னன் கோபமும் படாமல், சீடனை பார்த்து முக மலர்ச்சியுடன், நான்தான் தவறு இழைத்துவிட்டேன்,

நீங்கள் வேலை செய்யும்போது கவனிக்காமல் குறுக்கே வந்துவிட்டேன் என்றான் அமைதி தவழ..

இதையெல்லாம் தூரத்தில் இருந்து கவனித்துக் கொண்டு இருந்த குரு மன்னன் இருக்கும் இடம் தேடி வந்து மன்னனைப் பார்த்து,

மன்னா,

நீ ஞானம் பெற இப்போது முழுத் தகுதியும் அடைந்துவிட்டாய் இந்த கணம் முதல். உனக்கு நான் சொல்லித் தருவதற்கு ஒன்றும் இல்லை என்றார் குரு.

அரசனும் குருவை வணங்கிவிட்டு, மனம் தெளிவு அடைந்தவராய் சென்றார்.
 
இந்த கதைமூலம் நாம் உணர்ந்து கொள்வது....
ஆரம்பத்தில் மன்னன் குறைவான அறிவை உடைய ஒரு புல்லனைப் போல் நடந்து கொண்டான்.

அரசன் குருவை சந்திக்க வந்த இரண்டு முறையும் அப்போது தனக்கு எல்லாம் தெரியும் என்ற ஆணவம் இருந்தது.

பேச்சிலும் அதிகார திமிர் இருந்தது.

ஆனால்,

இவைகள் அனைத்தையும் அறிந்த குருவும், சீடனும் அப்போது அமைதி காத்தார்கள்.

மூன்றாவது தடவை மன்னன் வந்தபோது மன்னனிடம் அறிவு குடி கொண்டு இருந்தது.

ஆணவமும், அதிகாரமும் இல்லாமல் முகத்தில் அன்பு தழும்பியது.

ஒருவன் மிகுந்த செல்வாக்கு உடையவனாக இருந்தாலும், மிகுந்த புத்திக் கூர்மை உடையவனாக இருந்தாலும், ஆற்றல், அதிகாரம் படைத்தவனாக இருந்தபோதிலும், நல்ல குணங்கள் மிகுதியாக இருந்தாலும், அவன் இடத்தில் அதிகார போதையும், அகம்பாவமும் தலைதூக்குமானால் அவன் மீது யாருக்கும் மதிப்பும், மரியாதையும் ஏற்படாது.

மற்றும் எல்லா நற்பண்புகள் ஒருவனிடத்தில் இருந்தும், அகந்தை, கர்வம் தோன்றிவிட்டால் அவனது ஆற்றலும், அறிவும் பயனற்று போய்விடும்.

உண்மைதானே....?

26 July, 2013

சொன்னா புரியாது

சில புகைப்படங்களை விளக்கிச்சொல்லத் தேவையில்லை... பார்த்தாலே புரிந்துவிடும்...!

இந்த புகைப்படங்கள் தத்துவம், கவிதை, அன்பு, நகைச்சுவை, புதுமை எனபல விஷயங்களை தன்னுள்ளே வைத்துக்கொண்டிருக்கிறது....

தற்போது அப்படிப்பட்ட சில படங்களைத்தான் நீங்ள் பார்க்கிறீர்கள்...



















சொர்கம் நரகமா..? அங்கு செல்ல எவ்வளவு செலவு செய்யவேண்டும்



ஒரு பெரிய மனிதன். இந்த உலகத்தில் மிகவும் வசதியாக வாழ்ந்தான்.


ஒரு நாள் அவன் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு சொர்க்கத்துக்குப் போனான்.


அங்கே போன பிறகுதான் தெரிந்தது... சொர்க்கத்தின் வாசல் கதவு மூடி இருந்தது.


மூடிய கதவின் முன்னால் போய் நின்றான்.

‘‘இங்கே யாருமே இல்லையா?’’ என்று உரக்கக் கத்தினான். பதில் இல்லை.

‘‘நான் ஒரு பெரிய மனிதன் வந்திருக்கிறேன். கதவைத் திறந்து விடு!’’

சற்று நேரத்தில் சித்ரகுப்தன் அங்கே வந்தான்.

உடனே இந்தப் பெரிய மனிதன், தனது சட்டைப்பையிலிருந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவன் கையில் திணித்தான்.

‘‘இந்தா... இதை வெச்சுக்கோ... சீக்கிரம் கதவைத் திற... நான் உள்ளே போகணும்!’’

சித்ரகுப்தன் சிரித்தான்.

‘‘இதெல்லாம் உங்கள் பூலோக நடைமுறைகள்--! லஞ்சம் கொடுக்கறது, கதவைத் திறக்கச் சொல்றது... அதெல்லாம் இங்கே ஒண்ணும் எடுபடாது!’’

‘‘அப்படின்னா நான் எப்படி உள்ளே வர்றது?’’

‘‘சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனு மதிச் சீட்டு கொண்டு வந்திருக்கியா?’’

‘‘அனுமதிச் சீட்டா? அது எங்கே கிடைக்கும், சொல். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. வாங்கிக்கலாம்.’’

‘‘அதைக் காசு கொடுத்து வாங்க முடியாது!’’

‘‘வேறே எப்படி வாங்கறது?’’

‘‘அடுத்தவர்களுக்கு ஏதாவது உதவி செஞ்சாத்தான் அது கிடைக்கும்.’’

‘‘என்ன சொல்றே நீ?’’

‘‘பூலோகத்துலே நீ செய்யுற புண்ணிய காரியங்கள்தான் சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனுமதிச் சீட்டு!’’


‘‘இப்ப நான் உள்ளே வர என்ன வழி?’’

‘‘பூலோகத்துலே நீ யாருக்காவது... ஏதாவது உதவி செஞ்சிருக்கியா?’’

பெரிய மனிதன் ரொம்ப நேரம் யோசித்தான்.

பிறகு சொன்னான்: ‘‘ஒரு முறை ஒரு கிழவிக்கு 10 காசு தானம் கொடுத்திருக்கேன்.... அப்புறம் இன்னொரு நாள் ஓர் அநாதைப் பையனுக்கு ஐந்து காசு கொடுத்திருக்கேன்.’’

‘‘கொஞ்சம் பொறு!’’ என்று சொல்லிவிட்டு சித்ரகுப்தன் உள்ளே போனான்.

கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்தான்.

‘‘உள்ளே போய் சொர்க்கத்தின் தலைவர்கிட்டே உனது கதையைச் சொன்னேன். அவர் உடனே உத்தரவு போட்டுட்டார்!’’

‘‘என்ன உத்தரவு?’’

‘‘அந்தப் பதினஞ்சு காசை உன்கிட்டே திருப்பிக் கொடுத்துடச் சொன்னார்!’’

‘‘அப்புறம்?’’

‘‘உன்னை நரகத்துக்கே அனுப்பி வெச்சுடச் சொன்னார்!’’ பெரிய மனிதன் மயங்கி விழுந்தான்.

ஆன்மிக உலகில் பயணம் செய்கிறவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பாடம்:


காசு கொடுத்து சொர்க்கத்தை வாங்க முடியாது; ஆனால், கருணையைக் கொடுத்து அதைச் சுலபமாக வாங்க முடியும்!


இன்று ஒரு தகவல்- தென்கச்சி கோ.சுவாமிநாதன

25 July, 2013

விஜய்-க்கு விலை நிர்ணயித்த சன் டிவி... ஜில்லா கேடி டா..!


வேந்தர் மூவீஸ் வெளியிடும் தலைவா படத்தை சன் டிவி 15 கோடிகள் கொடுத்து டெலிவிஷன் காப்பிரைட்ஸை வாங்கி உள்ளது. இதற்கு முன்பாக விஜயின் பல படங்கள் சன் டிவியில் பல கோடிகளுக்கு விலைபோயிருக்கிறது. (வேலாயுதம் தவிர - வேலாயுதம் படம் ஜெயா டிவிக்கு வழங்கப்பட்டது).

விஜய் நடித்த தலைவா படம் நிர்ணயித்த பட்ஜெட்டைவிட அதிகமாக போனது என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை மாநகரில் தொடங்கிய படத்தை ஆஸ்திரேலியாவில் முடித்திருக்கிறார் இயக்குனர் விஜய்.


விஜய் - மோகன்லால் இணைந்து நடிக்கும் ஜில்லா படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் என்று திட்டமிடப்பட்டுள்ளது. ஜில்லா படத்தின் ஷூட்டிங் கூட முடிவடையாத நிலையில் 18 கோடிகள் கொடுத்து அதன் டெலிவிஷன் காப்பிரைட்ஸை வாங்கி உள்ளது சன் டிவி.

ஜில்லா படத்தை அறிமுக இயக்குனர் நேசன் இயக்குகிறார். டி.இமான் இசையமைக்கிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும், பூர்ணிமா பாக்யராஜும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள் என்பது படத்தின் ஹைலைட்.

ஆல்ரெடி வசூல் மன்னனாக இருக்கிறார் விஜய். அடுத்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸோடு கைகோர்க்கிறார். விஜய்யின் உயரம் வானம் போல விரிந்துகொண்டே போகிறது.

24 July, 2013

இப்படிப்பட்ட மனநிலை வர என்ன செய்யலாம்...!


அமெரிக்காவின் தலைசிறந்த டென்னி்ஸ் விளையாட்டு வீரர் ஆர்தர் ஆஷ் (Arthur R. Ashe. Jr).  ஒழுக்கத்தின் இலக்கணமாக திகழ்ந்த இவருக்கு இதய அறுவை சிகிச்சையின் போது கொடுத்த ‌ரத்த ஏற்றுதலில் HIV  என்னும் வைரஸ் உட்சென்று அவருக்கு எய்ட்ஸ்  நோய் ஏற்பட்டது.


ஒரு முறை நாளிதழ் நிருபர் ஒருவர் ஆர்தரிடம், “நல்லதையே நினைத்து நல்லதையே செய்யும் எனக்கு ஏன் இந்தக்கொடிய நோயைக் கொடுத்தாய் என இறைவனிடம் உங்களுக்குக் கோபம் வரவில்லையே?” எனக்கேட்டார்.


அதற்கு ஆர்தர், “பல்லாயிரக்கணக்கானோர் டென்னிஸ் விளையாட்டில் ஓர் இடமாவது பெற வேண்டும் என்ற கனவோடு இறைவனிடம் தினமும் வேண்டும் போது, என்னை வெற்றிபெற செய்தவனிடம், “ஏன் என்னைத் தேர்ந்தெடுத்து வெற்றிப்பெறத் செய்தாய்?” என ஒரு நாளும்கூட நான் கேட்டதில்லையே?” என திருப்பிக்கேட்டார்.


“வெற்றி பெறும்போது “ஏன் நான்?”  எனக்கேட்காத நான் எப்படி இந்த நோய்க்காக இறைவனை குற்றம் சாட்டலாம்?“ என தொடர்ந்தார் ஆர்தர்.


அவரின் கேள்வியில் நமக்கான பதிலும் அடங்கியிருக்கிறது.

‌வெற்றியையும் தோல்வியையும், இன்பம் துன்பத்தையும் நாம் சமமாக எடுத்துக்கொள்ள பழகிக்கொண்டால் வாழ்க்கை இனிக்கும் என்பதே அது.

ஆனால் பொதுவாக இந்த மனநிலை உடனடியாக யாருக்கும் வரவில்லை. வெற்றியையும் கூடவே தோல்வியையும் கொண்டாடுவோம்.. பிறகு நம் வாழ்க்கை தெளிவடையும்...!

23 July, 2013

இதை குழந்தைகளிடம் சொல்லலாமா.. வேணாமா...? இது பெற்றோருக்கு...!





1. அம்மா என்றால் சமையல் செய்பவள், அப்பா என்றால் சம்பாதிப்பவர் என்ற கருத்துக்களை குழந்தைகளின் மனதில் விதைக்காதீர்கள். யார் வேண்டுமானாலும் எந்த வேலையையும் செய்யலாம், உயர்ந்தது, தாழ்ந்தது ஏதுமில்லை என்ற எண்ணங்களை விதையுங்கள்!



2.. எதுவாய் இருந்தாலும் அம்மா மட்டுமே அல்லது அப்பா மட்டுமே, அல்லது வீட்டில் உள்ள பெரியவர் மட்டுமே முடிவு செய்ய வேண்டும் என்று இப்போதே கருத்து சுதந்திரத்தை மறுக்காதீர்கள்!



3. குழந்தைகள் பற்றிய முடிவுகளை, அவர்களிடம் கருத்துக் கேட்டு, அவர்களின் உணர்வுக்கும் மதிப்பு கொடுத்து முடிவு செய்யுங்கள். அவர்கள் சொல்லும் கருத்து அல்லது விருப்பம் உங்களுக்கு ஏற்புடையது அல்ல என்றால், அதை ஒரு தோழமையுடன் எடுத்துச் சொல்லுங்கள்! ஒருபோதும் உங்கள் அதிகாரத்தை பிரயோகிக்காதீர்கள்!



4. பகிர்ந்து உண்ணுதல், விலங்குகளிடம் அன்பு செலுத்துதல் போன்ற பழக்கங்களை விதையுங்கள். குழந்தையுடன் செல்கையில் நீங்களே ஒரு நாயையோ, பூனையையோ கல்லெடுத்து விரட்டி, வன்முறையை விதைக்காதீர்கள்! பெரும்பாலும் வீட்டு விலங்குகளுடன் பழகும் குழந்தைகளிடம் அன்பு நிறைந்திருக்கும், வன்முறை குறைந்திருக்கும். (அன்பு நிறைந்திருக்க நீங்கள் இங்கு கூறிய எல்லாவற்றையும் செயல்படுத்த வேண்டும்)



5. அந்த மாமா வந்தால், அப்பா வீட்டில் இல்லை என்று சொல்லு என்றோ, அந்த கடன்காரன் பேசுறானா போனில், நான் வீட்டில் இல்லை என்று சொல்லு என்றோ இப்போதே பொய் கூற பழக்காதீர்கள்.

6. "நம்ம சாதிக்காரங்க இவங்க"," நம்ம மதத்தை சேர்ந்தவங்க இவங்க" என்ற அறிமுகத்தை விட்டுவிட்டு, உறவுமுறை கொண்டோ, நட்பின் பின்புலம் கொண்டோ அறிமுகம் செய்யுங்கள்.



7.. உங்கள் குழந்தையை, உங்கள் மற்றொரு குழந்தையோ அல்லது வேறு ஒருவரின் குழந்தையோ, அடித்தாலோ, திட்டினாலோ, "திருப்பி திட்டு", "திருப்பி அடி" என்று வன்மம் வளர்க்காதீர்கள்! நாளை இவர்கள்தான் ஆயுதம் எடுப்பார்கள்.



8.. ஏன் அந்த தவறு நடந்தது? இனி இப்படி நடக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று சம்பந்தப்பட்ட குழந்தைகளிடமே தீர்வு கேளுங்கள்! மெதுவாய் இணக்கமான சூழ்நிலை உருவாகும். நாளை நல்ல சட்ட வல்லுனர்கள் உருவாகலாம்!



9."கத்தாதே சனியனே" என்று நீங்கள் கத்தி கொண்டு இருக்காதீர்கள். மலர்களை கொடிய வார்த்தைகளில் அர்ச்சிக்காதீர்கள்.



10.. பலபேர் முன்னிலையில் ஒருபோதும் உங்கள் குழந்தையை திட்டி, குறை சொல்லி வேதனை படுத்தாதீர்கள். குழந்தைகளுக்கும் சுயகௌரவம் உண்டு, எந்த வயதானாலும்.



11. "அண்ணன் சொல்வது போல நட", "அக்கா சொல்வது போல நட" என்று சொல்லாமல்," நீங்கள் இருவரும் பேசி முடிவு செய்யுங்கள்" என்று சமத்துவம் உருவாக்குங்கள். பெரியவர் முதுகில் சுமையையும், சிறியவர் மனதில் தாழ்வுணர்ச்சியையும் ஏற்படுத்தாதீர்கள்!



12. கூட்ட நெரிசல் மிக்க இடங்களில் குழந்தைகளை அழைத்துச் செல்வதை தவிர்த்து விடுங்கள்! அழைத்து செல்ல நேர்கையில், பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்!



13. ஒருபோதும் குழந்தையின் முன்னிலையில் புகைப்பிடிப்பது, மது அருந்துவது, அல்லது அதை வாங்கி வர பணிப்பது போன்ற அடாத செயல்களை செய்யாதீர்கள்!



14. குழந்தையின் சில சிறு வயது குறும்புகள், விலங்குகளையோ, பெரியவர்களையோ, சக குழந்தையையோ துன்புறுத்துவதாக அமைந்தால், குழந்தையின் எதிரே அந்த குறும்பை கண்டு சிரித்து, ரசிக்காதீர்கள். உங்கள் சிறு குழந்தை, குறும்பாய் வீட்டில் பாட்டியின் பல்லை உடைத்தாலோ, பூனையின் வாலைத் பிடித்து தூக்கி எறிந்தாலோ, குழந்தைக்கு எவ்வளவு வலிமை, பயமேயில்லை என் குழந்தைக்கு என்று குழந்தையின் எதிரே ரசித்தீர்கள் என்றால், பின்னாளில் வளரும் வன்முறையில் நீங்கள் ரசிப்பதற்கு ஏதும் இருக்காது!



15. உங்களால் செய்யக் கூடிய செயல்களை, தரக் கூடிய பொருள்களை, குழந்தையை அழ வைக்காமல் செய்து விடுங்கள், கொடுத்து விடுங்கள். அடம் பிடிக்க வைத்து, அழ வைத்தபிறகு செய்தால், குழந்தைக்கு அழுவதும், அடம் பிடிப்பதும் மட்டுமே இயல்பாகும்.



16. காய்ச்சல் என்பது ஒரு நோயின் அறிகுறியே தவிர, அதுவே நோய் அல்ல. உடலில் உள்ள கிருமிகளை அழிக்கும் பொருட்டு இயற்கையாய் உடலில் ஏற்படும் வெப்பம் அது. குழந்தைகளுக்கு காய்ச்சல் கண்டால், சிறந்த குழந்தை நல மருத்துவரை கண்டு, எதற்கான காய்ச்சல் என்று கண்டறிந்து பரிந்துரைக்கப்படும் மருந்துகளை குறித்த வேளையில், குறித்த இடைவெளியில் மட்டுமே தருக. நாமே மருத்துவர் ஆவதை தவிர்த்தல் நலம்!



17. பலபேர் முன்னிலையில் எப்போதும் குழந்தைகளை குறை கூறுவதோ, அடிப்பதோ, திட்டுவதோ...இது போன்ற எந்த செயல்களையும் செய்யாதீர்கள். உங்களை இதுபோல் பிறர் செய்தால் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா?



18. குழந்தைகள் சின்னஞ்சிறு பெரிய மனிதர்கள், இன்று நீங்கள் விதைப்பதை நாளை நீங்கள்தான் அறுவடை செய்ய வேண்டும். நல்லன விதைத்தால் நாளை நல்ல சமுதாயம் மலரும்!



19. நல்ல கல்வி, சுய சிந்தனை, கைத்தொழில், சத்துள்ள உணவு, மரியாதை, ஆரோக்கியம் மற்றும் உள்ளார்ந்த அன்பு இவையே எல்லா குழந்தைகளுக்குமான அடிப்படை தேவைகள்! உங்கள் வன்முறை அல்ல! (-Aatika Ashreen படித்தது...)

22 July, 2013

இதற்கு நீங்கள் பதில் சொல்லியே தீரவேண்டும்...!

 
 
தமிழக போக்குவரத்துக் கழகத்தில், எட்டு கோட்டங்கள், 21 மண்டலங்கள், 22 ஆயிரம் பஸ்கள் உள்ளன, அவற்றில், 1.5 லட்சம் தொழிலாளர்களும் பணிபுரிகின்றனர். அடிக்கடி உயரும், டீசல் விலையால், கழகத்துக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. எனினும், தனியார் பஸ் நிறுவனங்கள், புதுப்புது பஸ்களை இயக்கி, தொழிலாளர்களுக்கு ஓரளவு ஊதியமும் கொடுத்து, தாமும் வளமாக வளர்ந்து வருகின்றன.
 
அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள, மேல்மட்ட அதிகாரிகளான, மேலாண் இயக்குனர்கள், நிலைமைகளை அடிக்கடி ஆராய்ந்து, தக்க நடவடிக்கைகளை, காலா காலத்தில் எடுத்தால், பெரும் நஷ்டங்களைத் தவிர்க்கலாம். முதற்கண், பழைய பஸ்களை ஆராய்ந்து, டீசல் குடித்து, அடிக்கடி பிரேக் டவுன் ஆகும் நிலையில் உள்ளவற்றை, முற்றிலுமாக நிறுத்த வேண்டும். 
 
ஆரம்பத்தில் ஏற்படும் சிறு சிறு பழுதுகளை, அவ்வப்போதே சரி செய்ய வேண்டும். டீலக்ஸ் பஸ், சொகுசு பஸ் மற்றும் டவுன் பஸ்களைத் தவிர உள்ள, அனைத்து பஸ்களையும், சாதாரண அல்லது விரைவு வண்டிகள் என்று தரம் பிரிக்காமல், ஒரே சீரான கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும்.
 
 
 
உதாரணத்துக்கு சொல்லப் போனால், ஒருசில இடஙக்ளில் சாதாரணமாக 30 கி.மீ., தொலைவுக்கு, அரசு பஸ்களில், 21 ரூபாய், 20 ரூபாய் மற்றும் 15 ரூபாய் என, டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டு, மக்களின் வெறுப்பைப் பெறுகிறது. இதை, ஒரே கட்டணமாக 15 ரூபாய் என்று, நிர்ணயம் செய்யலாமே! 
 
தனியார் பஸ்களில், இதே 30 கி.மீட்டருக்கு 17 ரூபாய் மட்டுமே, கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தனியார் பெட்ரோல் "பங்க்' களில், டீசல் முதலானவற்றை வாங்கவும், தடை விதிக்க வேண்டும். தமிழக அரசோ, மத்திய அரசோ எரிபொருள்களின் விலையை ஏற்றினாலும், இறக்கினாலும் அது, ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கும், மக்களின் சுமையே என்பதை உணர வேண்டும். 
 
தனியாரையும், ஒரு சில முறைகேடுகள் செய்யும் ஊழியர்களையும், மனதில் கொண்டு, தனியாரிடம் டீசல் பிடிப்பதை நிறுத்த வேண்டும்.
****************************\

"இனி மேல் குடிக்கமாட்டேன்னு என்னோட வீட்டுக்காரர் என் கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்டாரு''

"வெரி குட்.....அப்புறம்?''

"அப்புறமென்ன‌ .. என் கொலுசைக் காணோம்''
*************************
 அப்புறம் இந்த சொம்பு எப்படியிருக்குன்னு கொஞ்சம் சொல்லமுடியுமா...! 

21 July, 2013

இதையெல்லம் பார்த்த அனுபவம் உங்களுக்கு உண்டா...?

இதையெல்லம் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதா...
ஆமாங்க எல்லாம் காய்கறிகள் தான்....
எவ்வளவு அழகா செதுக்கியிருக்காங்க பாருங்க...!











































ரசித்த ‌ அனைவருக்கும் நன்றி...!
Related Posts Plugin for WordPress, Blogger...