கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

29 June, 2011

பேரம் பேசும் படலத்தில் ஜன்னல் பூக்கள்...


ல்லிகை மணத்தது
மஞ்சள் பூசிய முகத்தில்
புதியதாய் பவுடர் வாசனை...

போனமுறை பூசிக்கொண்ட
மருதாணி ‌ கோலம்
அதன் மேலே
இன்னொரு முறை...!

மீண்டும் ஒரு முறை இயற்றப்பட்டது
பெரியதாய் ஒரு 
மளிகைப்பட்டியல்...

டக்கும் என்ற அவநம்பிகையில்
விடியலில் ஒரு சின்னக்கனவு
அது விடிந்தப்பிறகும் நீள்கிறது..

னத்த இதயத்தோடு சீவிமுடித்து
நாணம் கொண்ட கொலுபொம்மையாய்
வாங்க வந்த கூட்டத்தில்
வணங்கி முடிக்கிறாள்...
வளைந்து நிற்கிறாள்...

லசலப்பு முடிந்தப்பின் சூடுப்பிடிக்கிறது
பகல் கொள்யைர்களின் 
வரதட்சணை பட்டியல்

லைவந்து அடித்தது போல்
ஆடிப்போகிறது இந்த மண்பாறைகள்...

விலைபோகாத முதிர் கன்னியோ
மீண்டும் ஜன்னலில் பூக்கிறாள்...

வேஷங்களை கலைத்துவிட்டு
தொடர்கதைப்போல் நீள்கிறது இந்த நாடகம்...

ரதட்சணை போர்களில்
வீழ்கிறது ‌பெண்ணினம்
என்று முடியுமே
இந்த பேரம் பேசும் படலம்...!

கருத்திடுங்கள்.. வாக்களியுங்கள்...
கவிதைகறும் உயிர்ப்பெரும்...!

25 June, 2011

ஜாக்சனின் 2-ம் ஆண்டு நினைவு தினம்: சகோதரி அதிர்ச்சி தகவல் வெளியீடு


யானை இறந்தாலும் ஆயிரம் பொன், செத்தாலும் ஆயிரம் பொன் என்று கூறுவது அதன் மதிப்பை வலியுறுத்து வதாக அமைகிறது. அதுபோல, அதற்கு நிகரான மதிப்பு மிக்க மனிதர்கள் இவ்வுலகில் இறந்தும் அவரது ரசிகர்கள் நெஞ்சில் இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். அதற்கு சிறந்த உதாரணமாக, பாப் இசை உலகின் கடவுள் என்றழைக்கப்பட்ட மைக்கேல் ஜாக்சனை கூறலாம். மைக்கேல் ஜாக்சன் என்றால், அவரது துள்ளலான இசையுடன் கூடிய நடனம், அதற்கு வளைந்து நெளிந்து கொடுக்கும் அவரது உடல்வாகு உள்ளிட்டவை நமக்கு ஞாபகம் வருவதைப் போன்று, அவரை நினைத்தாலே, அவரது இசை மற்றும் நடனம் நமது கண்களுக்கு விருந்தளிக்கும்.

அத்தகைய நீங்கா புகழை பெற்ற பாப் உலகின் முடிசூடா மன்னாக விளங்கிய பாடகர் மைக்கேல்ஜாக்சன் மறைந்து இன்றுடன் இரண்டு ஆகிறது. ஆண்டுகள் இரண்டு ஆன போதிலும் அவரின் ரசிகர்கள் அவரை மறக்கவும் இல்லை. சொல்லப்போனால் மறக்க தயாராகவும் இல்லை. இதனால் உலகம் முழுவதும் அவரது இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை உலகம் முழுவதும் இன்று கொண்டாடி வருகின்றனர். கலிபோர்னியாவில் அவர் சமாதியில் திரளாக கூடி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


மைக்கேல் ஜாக்சன் மறைவு என்ற அதிர்ச்சியிலிருந்து அவரது ரசிகர்கள் இன்னும் மீளாத நிலையில், அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஜாக்சனின் சகோதரி பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது அவரது ரசிகர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: ஜாக்சன்இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் தன்னை யாரோ கொலைசெய்ய முயற்சி மேற்கொள்வதாக சொல்லிக்கொண்டிருந்தார்.மேலும் மைக்கேல் ஜாக்சனுக்கு சிகிச்சையளித்த டாக்டர் தோமேதோமே தான் ஜாக்சன் உடன் இறுதிவரை வியாபார ஆலோசகராக வும் இருந்துள்ளார்.தற்போது அவரைப் பற்றிய எந்த தகவலும் இல்லாமல் இருப்பது அவரின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றும்அவருடன் இருந்த சில நண்பர்களும் ஜாக்சனின் சம்பாத்தியத்தில் பலன்பெற்றுள்ளனர் என்றும் லா டோயா தெரிவித்துள்ளார்.
(தினமலர்)

மக்கள் எந்த அளவிற்குஜாக்சன் மீது அன்பு செலுத்தியிருக்கின்றனர் என்பது அவர்இறப்பிற்கு பின்னர் அவருடைய அறையில் கிடைத்த சில குறிப்புகள் மூலம்இது தெரிய வந்துள்ளதாக லா டோயா தெரிவித்துள்ளார். அதே சமயம் ஜாக்சன் இறப்பு குறித்து இறப்பு குறித்த எந்தவித தடயமும் குடும்பத்தினர் கைவசம் வைத்திருக்க வில்லை. எனவே ஜாக்சனின் இறப்பு குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

24 June, 2011

பிள்ளையார் தெரு கடைசி வீடு... - திரை விமர்சனம் அல்ல...


வானம் முட்டி 
தலைத் தேய்த்ததுண்டா...?
சிதறிய நட்சத்திரங்களை
தரையில் பார்த்ததுண்டா..?
நிகழ்ந்தது உன்னைப் பார்த்த போது..

வ்வளவு நேரம் என்றாலும்
உனக்காக காத்திருப்புகள் 
எனக்குள் சுகமானவையே...

னதோடு புதைந்த காதலை
வி‌ழிவ‌ழியாய் சொல்ல
நினைக்ககையில்
இமைகளுக்குள் தயக்கங்கள் வந்து 
தடைப்போடுகிறது...

விடிந்த ஒரு நாள்
சிறகு வளர்த்த குயில்போல்
எங்கோ சிறகடித்து விட்டாய்....

நீ சிந்திவிட்டுப்போன சில புன்னகைகள்...
நீ உதிர்த்து விட்டுப்போன சில ஞாபகங்கள்...
நீ பதித்து விட்டுப்போன சில தடையங்கள்...
என்னைச்சுற்றி சிதறிக்கிடக்கிறது..
 
ற்‌போது
உன் நினைவுகளை மட்டுமே சுமந்து
வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்...

னக்கே தெரியாது 
வந்துவிட்ட காதலோடு நானும்...

ன்னை பிரிந்து வாடும்
அந்த பிள்ளையார் ‌கோயில் கடைசி வீடும்...


23 June, 2011

உங்களுக்கு ஒரு சவால்.. முடிந்தால் மோதிப்பாருங்கள்...

வந்துட்டிங்களா...
(நமக்கும் ஒரு அடிமை சிக்கியாச்சி....)

இன்னைக்கு என்ன போடுறதுன்னு யோசிச்சி பார்த்தேன்...
நிறைய வேலைவேற அதான் ஏதாவது வித்தியாசமா தலைப்பு கொடுத்து இன்றைய பதிவை முடிச்சிடலாம்ன்னு... எப்போதோ காபி செய்த ஒரு படத்தை போட்டிருக்கேன்...  (அப்ப  ஒரு பதிவு தேத்தியாச்சி..)

இந்தப்படத்தில் கட்டங்களுக்கு இடையில் இருக்கிற கரும்புள்ளிகள் எத்தனைன்னு கொஞ்சம் எண்ணி சொல்லிட்டுப்போங்க...
(நானும் எண்ணி எண்ணி பார்த்தாச்சி கணக்கு சரியா வரமாட்டேங்குது...)

சரியான விடைகள் சொல்பவர்களுக்கு ஏகப்பட்ட பரிசு காத்திருக்கிறது..
என்ன பரிசா... உங்களை வாழ்த்தி பன்னிக்குட்டி பிளாக்கில் பதிவு போடப்படும்.

ரைட்டு...
எப்படியோ வந்திட்டீங்க..
அப்படியே ஏதாவது சொல்ல வேண்டியது இருந்தா சொல்லிட்டு
உங்களுடைய வாக்குரிமைகளை நிறைவேற்றிவிட்டு செல்லுங்கள்...


நன்றி...

22 June, 2011

கருவில் உள்ள குழந்தை பேசுகிறது...



மழையில்லை
அதனால்
தண்ணீருக்கு பஞ்சம்...

‌உழவு இல்லை
அதனால்
நெல்லுக்கு பஞ்சம்...

ஆனால்
பாலுக்கு பஞ்சமில்லை
ஆம் 
எங்கள் ஊரில் கள்ளிசெடிகள் அதிகம்...


தற்போதைய சூழலில் பெண் சிசுகொலை நம்நாட்டில் இல்லையென்றே நினைக்கிறேன். இல்லாமல் இருக்கவே வேண்டுகிறது மனம்.  இதுவரை குழந்தை பிறந்தவுடன்தான் பிறந்தது என்ன குழந்தையென்று தெரியவரும். ஆனால் தற்போது 3-வது மாதத்திலேயே ஸ்கேன் எடுத்து கருவில் உள்ளது என்ன குழந்தை என்று தெரிந்துக்கொள்கிறார்கள். அது ஆண் குழந்தையாக இருந்தால் பிரச்சனையில்லை அதுவே ஒரு பெண் குழந்தை என்று தெரிந்து விட்டால் அந்த குழந்தை பிறக்கும் நாளுக்குள் அதன்  மீதுள்ள மகிழ்ச்சியும் ஆர்வமும் குறைந்து விடுகிறது.


குழந்தை பிறந்து பிரசவம் பார்ப்பவர்கள் வந்து சொல்லும் வரை  10 மாதங்களாக இருக்கும் ஆர்வம், தவிப்பு, எதிர்பார்ப்பு போன்ற அறிய உணர்வுகளை தற்போதெல்லாம் கருவுற்ற மூன்று மாதத்திலேயே தீர்ந்து போய்விடுகிறது. கருவில் உள்ளது என்ன குழந்தை என்று பார்க்கு வசதியை அரசு தடைச் செய்தாலும் மக்கள் அதை பொருட்படுத்துவதில்லை. ஆர்வக்கோளாராக தொடங்கும் இந்த விஷயம் பிரசவக்காலத்திற்க்குள் பல்வேறு பிரச்சனை கொண்டு வந்துவிடுகிறது என்பதில் சந்தேகம் இல்லை.

குழந்தைகள் எதிர்காலத்தை உறுவாக்கும் அட்சய பாத்திரங்கள். நாளையை தீர்மானிக்கும் நம்பிக்கை நட்சத்திரங்கள், பாலின பாகுபாடு குறைந்து வரும் இந்த காலக்கட்டத்தில் இந்த பூவுலகின் வடிவமைப்புக்கும் இரண்டுதரப்புமே மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படவேண்டும். நாளை உலக எதிர்க்கொள்ள மட்டும் பயிற்ச்சிக் கொடுப்போம்.


ஆணோ பெண்ணோ
குழந்தையில் என்ன இருக்கிறது...
அன்‌பையும்... பாசத்தையும்...
பகிர்ந்துக் கொள்ள...

20 June, 2011

முதுகெலும்பற்ற ஈனத்தமிழர்களல்ல நாம்.... (ஒரு அழைப்பு..)


ற்பனைகள் செய்தால்கூட
காணமுடியாத கொடும்காட்சிகள்...
பாலினம் பாராது நிர்வாண கோலத்தில்
உயிர் மூச்சை நிறுத்திய ஆணவத்தனம்...

விலங்கினங்களை வதைத்தாலே
வீறுகொண்டு எழுகிறது ஒரு அமைப்பு
ஒரு இனப்படுகொலைக்கு எதிராக ஏன்
தயக்கம் காட்டுகிறது இந்த உலகம்....

யிர்களை அங்கே உறுக்குலைத்தபோது
அறிக்கைகளும் வருத்தங்கள்  மட்டுமே
இங்கிருந்து அனுப்பிவைக்கப்பட்டன
இனி என்னச்செய்யப் போகிறோம்...

கிளைகளை வெட்டும் போதே
கேள்விகள் கேட்டிருந்தால்
ஒரு இனத்தையே வேறருக்கும் போது
வேடிக்கை பார்க்கும் நிலை வந்திருக்குமா?

யிர்களை வதைக்கும் போது 
வருத்தப்பட்டவர்களே... தற்போதைக்கு
அந்த ஆத்மாக்களையாவது
சாந்திப்படுத்துவோம் வாருங்கள்...

முத்துக்குமரன் விட்டுப்போன
நெருப்பு இன்னும் நீருப்பூக்கவில்லை
என நிருபித்து
தியாக சுடரேந்துவோம்...

மெரீனாவில் கால் நனைக்கும்
கடல்அலைகளிடம் சொல்லிவிடுவோம்....
எந்திய தீபத்தில் கிளம்பும் சுடரில்
தமிழ் ஈழம்  ஒருநாள் மலரும் என்று....

நாம் ஏந்திநிற்க்கும் தீபங்கள்
ஒரு நாள் தீப்பிழம்பாய்
சிங்கள வெறிப்பிடித்தவர்களை
தீக்கிறையாக்கும் என்ற நம்பிக்கையுடன்...





ஈழப் படுகொலைகளை நினைவு கூறும் அதே சமயம், 
இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட 
543 தமிழக மீனவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதாகவும் 
ஒன்று கூடுவோம்...

நாள்: ஜூன் 26
நேரம்: மாலை 5 மணி
இடம்: மெரினா கண்ணகி சிலை.

கவிதை வீதியில் இருந்து இதைப்படிப்பார் கண்டிப்பாக வர 

முயற்ச்சிப்பீர்கள் என நம்புகிறேன்...
 

ஒன்றுபடுவோம்... விடியும் ஒரு நாள்...

 

18 June, 2011

உறவுச் சங்கிலியின் நெருக்கம் அதிகரிக்க...


இல்லற பந்தத்தில் கணவன் மனைவிக்கு இடையேயான உறவு என்பது மிகவும் புனிதமானது. வெவ்வெறு தளங்களில் இருந்து வந்திருக்கும் இருவர் இணைந்து வசிக்கும் போது அவர்களுக்கிடையேயான பரஸ்பரம் புரிதலும் அன்புமே வாழ்க்கை பயணத்தில் இனிமையை கூட்டும். அபரிமிதமான அன்பும், எதிர்பார்ப்பில்லாத நேசமுமே உறவுச்சங்கிலியின் நெருக்கத்தை அதிகரிக்கும்.

பிறந்து வளர்ந்த இடங்களையும் உறவுகளையும் விட்டு விட்டு கணவனின் வீடே உலகம் என்று வரும் பெண்ணிற்கு சரியான பாதுகாப்பினை வழங்கவேண்டியது கணவனின் கடமை. உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்க்கும் கணவனுக்காக எதை வேண்டுமானலும் செய்ய மனைவி தயாராகி விடுகிறாள். மனைவியின் நன்மதிப்பு புத்தகம் எனப்படும் ‘குட்புக்’ கில் இடம் பெற கணவன் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்


அதிக நேரம் செலவிடுங்கள்

மனைவி என்பவர் உங்களை மட்டுமே நம்பி வந்தவர். அவருக்காக அதிக நேரம் செலவிடுவது ஒன்றும் தவறில்லை. உறவுகளும் மிகவும் முக்கியம் தான். ஆனால் வாழ்க்கையின் அனைத்து சுக துங்கங்களையும் சரிபாதியாக பகிர்ந்து கொள்ளும் மனைவிக்கு கூடுதல் நேரத்தை ஒதுக்குவதில் தவறொன்றும் இல்லை.


பொழுது போக்கில் ஆர்வம்

அதிகாலை எழுவது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை கணவருக்காகவும், அவரது குடும்பத்திற்காகவும் நேரத்தை செலவிடுகின்றனர் பெண்கள். அவர்களுக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்கும் என்பதை புரிந்து கொண்டு அக்கறை காட்டுங்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்


பொறுப்பான தந்தையாக நடந்து கொள்ளுங்கள்

கணவனுக்கு அடுத்தபடியாக பெண்கள் அதீத அக்கறை செலுத்துவது குழந்தைகள் மீதுதான். குழந்தைகளை கவனித்துக் கொள்வதில் பெண்களுக்கு எந்த அளவிற்கு உரிமையும் கடமையும் இருக்கிறதோ அதே அளவு ஆண்களுக்கும் உண்டு. குழந்தைகளுக்கு பொறுப்பான தகப்பனாக நடந்து கொள்ளும் ஆண்களை கொண்டாடும் பெண்கள் அதிகம் உள்ளனர்.


மனைவியின் நட்புக்கு மதிப்பு

ஆண்களுக்கு என்று நட்பு வட்டம் இருப்பதைப் போல பெண்களுக்கு உயிர்தோழிகள் உண்டு. திருமணத்திற்குப் பிறகு அதை தொடர முடியவில்லையே என்ற ஏக்கம் அநேகம் பேருக்கு ஏற்படுவதுண்டு. மனைவியை அழைத்துக்கொண்டு அவரது தோழிகளின் வீட்டுக்குச் சென்று நட்பை புதுப்பிப்பதில் தவறொன்றும் இல்லை.


பரிசுப் பொருட்களால் அசத்துங்கள்

ஒவ்வொரு பெண்ணிற்கும் விலை மதிப்பில்லாத பரிசுப்பொருள் கணவன் மட்டுமே. இருந்தாலும் கணவர் ஒரு முழம் வாங்கிக் கொடுத்தாலே அதை நான்கு பேரிடம் சொல்லி பெருமைப் பட்டுக்கொள்வார்கள். பிறந்தநாள், திருமணநாள் என வாழ்வின் முக்கிய தருணங்களை நினைவில் வைத்துக்கொண்டு அந்த நாளில் மனைவிக்கு பரிசுகளை வாங்கித்தந்து அசத்துங்கள். எந்த சந்தர்ப்பத்திலும் திருமண நாளை மறந்துவிடாதீர்கள்.


விடுமுறையை அனுபவியுங்கள்

ஆண்டு முழுவதும் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் மனைவியை ஆண்டுக்கு ஒருமுறையாவது வெளியூருக்கு அழைத்துச் சென்று வாருங்கள். அது அவர்களுக்கு பரவசமான தருணமாக இருக்கும்.

இவற்றை சரியாக கடைபிடித்தாலே உறவுபந்தத்தின் நெருக்கம் அதிகரிக்கும். எந்த சந்தர்ப்பத்திலும் யாருக்காகவும் மனைவி உங்களை விட்டுக்கொடுக்க மாட்டார்.

17 June, 2011

அவன் - இவன் திரைவிமர்சனம்


பாலாவின் இயக்கத்தில் கல்பத்தி அகோரம் தயாரிப்பில் இன்று திரைக்கு வந்துள்ள அவன் இவன் திரைப்படத்தின் விமர்சனத்தை பார்ப்போம். கமுதிக்கோட்டை ஜமீன்தார் திரிபாதியாக ஜி.வி. குமார். அவரது 60-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விஷால் பெண் வேடமிட்டு ஆடிப் பாடுகிறார்.பெண்களே தோற்றுப்போகும் அளவிற்கு நடனமாடியிருக்கும் விஷாலா இது என்று நம்பமுடியவில்லை. அவரது நடிப்பும், நடனமும் கனகச்சிதம்.

விஷாலின் பரம்பரை குலத் தொழிலே திருடுவதுதான். விஷாலின் அப்பாவிற்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி முன்னாள் நடிகை அம்பிகா. அவரது மகனாக மாறு கண் கொண்ட விஷால் வருகிறார். திருடுவது பிடிக்காமல் இவர் ஒரு நாடக நடிகராக முயற்சிக்கிறார். இவரது தந்தையின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவர் ஆர்யா. திருட்டுத் தொழில் செய்வதில் மன்னனாக வருகிறார். ஜட்ஜ் வீட்டில் இருக்கும் லாக்கரின் சாவி தொலைந்து போய்விட, அதை திறக்க ஆர்யாவை கூட்டிச் செல்கிறார்கள். அவரது திருட்டுத் திறமைக்கு இதை சான்றாக காட்டுகிறார் பாலா.

விஷால் திருடப் பிடிக்காமல், நாடகத்தில் நடித்து கொண்டிருக்கிறார். திருடனான ஆர்யாவோ பல வழிகளில் திருடி சம்பாதிக்கிறார். “நம்ம குலத் தொழிலே திருடுவதுதான். இல்லையெனில் அது சாமி குத்தமாகிவிடும்’’ என்று அம்மாவின் தூண்டுதலால் விஷாலும் திருடனாகிறார். தானும் ஒரு திருடன் என்பதை நிரூபிக்க விஷால் ஒரு வீட்டிற்குள் திருட நுழைகிறார். அங்கு கான்ஸ்டபிளாக இருக்கும் அவரது கதாநாயகியான ஜனனி ஜயரை சந்திக்கிறார். அங்கு நடக்கும் சில நிகழ்வுகளால் இவர்களுக்குள் காதல் மலர்கிறது.

இதனிடையே டுடோரியல் கல்லூரியில் படிக்கும் மாணவி தேன்மொழியாக வருகிறார் மதுஷாலினி. இவருடைய அழகால் மயங்கும் ஆர்யா, அவரை விரட்டி விரட்டி காதலிக்கிறார். மதுவும் காதலிக்கிறார். இதனிடையே அந்த ஊரில் இருக்கும் பாரஸ்ட் ஆபிஸர், ஜமீன்தார் திரிபாதியை அவமானப்படுத்தி விடுகிறார். அவரை பதிலுக்கு அவமானப்படுத்த வேண்டும் என்று திரிபாதி ஆர்யாவிடமும், விஷாலிடமும் சொல்கிறார்.

அதன்படி பாரஸ்ட் ஆபிஸரை அவமானப்படுத்த இருவரும் மலைக்கு செல்கின்றனர். பாரஸ்ட் ஆபிஸரோ 1 கோடி ரூபாய் மதிப்புள்ள சந்தன மரங்களை மலையிலிருந்து அலுவலகத்திற்கு கொண்டு வருகிறார். அந்த நேரத்தில் விஷாலும், ஆர்யாவும் வந்து சண்டையிடுகிறார்கள்.

போலிஸார் இந்த ஒரு கோடி சந்தனமரத்திற்குதான் இவர்களிருவரும் சண்டையிடுகிறார்கள் என மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விடுகிறார். ஒரு கோடி சந்தனமரம் இருக்கும் லாரியை எடுத்துக் கொண்டு விஷால் தப்பித்து விடுகிறார். ஆர்யா போலிஸிடம் சிக்கிக் கொள்கிறார். பிறகு விஷால் லாரியைக் கொண்டு வந்து வனத்துறையிடம் ஒப்படைக்க, இருவரும் ரிலீஸ் செய்யப்படுகிறார்கள்.

அந்த ஊரில் இருக்கும் மாடுகளை கடத்திச் சென்று இறைசிக்காக விற்கும் வேலையை செய்து வருகிறார் ஆர்.கே.  இதை திரிபாதி கண்டறிந்து தடுப்பது மட்டுமின்றி காவல் துறை, பத்திரிகை என அனைவருக்கும் தெரிவித்து விடுகிறார். இதனால் சிறைக்குப் போகும் ஆர்.கே, திரும்பி வந்து ஜமீன்தாரை கொடூரமாக கொலை செய்து விடுகிறார்.


 ஹைனஸ் என்று அந்த ஊர் மக்களால் அழைக்கப்படும் ஜமீன்தார் மேல் பற்று கொண்டுள்ள ஆர்யாவும், விஷாலும் இதற்கு பழிவாங்க முனைகிறார்கள். இதில் யார் ஜெயித்தார், யார் தோற்றார் என்று காட்டி சுபம் போட்டிருக்கிறார் பாலா. 

தனது வழக்காமன படங்களிலிருந்து நகைச்சுவை கலந்த படத்தை வழங்கியிருக்கும் பாலாவிற்கு விஷாலின் அட்டகாசமான நடிப்பு உறுதுணையாக நிற்கிறது. 

மாறுகண்ணை கொண்டு நடித்திருக்கும் விஷாலின் துணிச்சல் பாராட்டப் படவேண்டிய ஒன்று. மாறுகண்ணுடையவராகவே வாழ்ந்திருக்கிறார். அகரம் பவுண்டேசன் சார்பில் அந்த கிராமத்திற்கு வரும் நடிகர் சூர்யாவிடம் நாடக நடிகராக இருக்கும் விஷால் நடித்துக் காட்டும் ஒரு காட்சி போதும் அவரது திறமையை பறைசாற்ற... விஷாலா இப்படி நடிப்பது என்று நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறார். பாலா சொன்னது போல் இவருக்கு விருது கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

அசால்டான பேர்வழியாக வரும் ஆர்யாவின் நடிப்பும் பிரமாதம். தன் காதலியான மதுஷாலினியை மறந்து விடு என்று திரிபாதி சொல்லும் போது “மலத்தை திங்க சொல்லு திங்கறேன்... அவளை மறந்துடுன்னு சொன்னா எப்படி” என்று நறுக்கென தெறிக்கிறார்.

ஜனனி ஐயருக்கு நல்ல வாய்ப்பு. அதை அவர் சிறப்பாக செய்திருக்கிறார். மதுஷாலினி சில காட்சிகளில் வந்து போனாலும் மனதில் நிற்கிறார்.

வில்லனாக வரும் ஆர்.கே வழக்கமான பாலாவின் படங்களில் வரும் கொடூரத்தனத்தை கண்முன்னே நிறுத்துகிறார். திரிபாதியை மலைமேல் அம்மணமாக அடித்துக் கொல்வது, மரத்தில் கட்டி தொங்க விடுவது என குரூரமாய் காட்சியளிக்கிறார்.

ஹைனாஸாக வரும் ஜி.வி.குமாரின் நடிப்பு இப்படத்திற்கு மற்றொரு பலம். இவரைச் சுற்றித்தான் இப்படத்தின் கதை நகர்கிறது என்றே சொல்லாம். அந்த அளவிற்கு இவரது நடிப்பு வெகு இயல்பு.

இப்படத்தின் மேக்கப் மேனுக்கு ஒரு சபாஷ் போட்டே ஆகவேண்டும். அவ்வளவு நேர்த்தி. யுவனின் இசையைமைப்பை பாலாவின் அட்டகாசமான திரைக்கதை முந்திச் சென்றுவிடுகிறது. (பிலிமிக்ஸ்)

இத்தனை பேரையும் நேர்த்தியாக வேலைவாங்கியிருக்கும் பாலாவை எத்தனை பாராட்டினாலும் தகும். மொத்ததில் பாலாவின் மற்றொரு ஆணித்தரமான படைப்பு இந்த ‘அவன் இவன்’

மார்க் உங்க இஷ்டம் போல...  ரேங்க் ஏதோ போட்டுகுங்க... தியாட்டரில் நீங்க பார்க்கிற வரை ஓடும்.. வேறஏதாவது டவுட் இருந்தா படம்பார்த்து தீர்த்துக்கங்க...

அஜீத்தின் மங்காத்தா... காப்பியா ஒரிஜினலா?



ஒரிஜினல் திரைக்கதை எழுதுவதைவிட எங்கிருந்தாவது சுட்டு எடுப்பதில் கில்லாடி வெங்கட்பிரபு. இதை நாம் சொல்லவில்லை... சரோஜா படம் வெளியானபோது அவரே சொன்னதுதான்.

அஜீத்தை வைத்து அவர் இப்போது இயக்கியுள்ள மங்காத்தா எந்த ஹாலிவுட் அல்லது வேறு மொழிப் படத்திலிருந்து சுடப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கான பதிலை சிலர் ஏற்கனவே எழுதியும் விட்டார்கள். இந்தியில் மேட்ச் பிக்ஸிங் பற்றி வெளியான ஜான்னெட் படத்தின் உல்டாதான் மங்காத்தா என்ற தகவல் பரபரப்பாக உலா வர, பதறிப் போன மங்காத்தா டீம் மறுப்பறிக்கையாக விட்டுக் கொண்டுள்ளது.

எந்த செய்தி வந்தாலும் அலட்டிக் கொள்ளாத மாதிரி காட்டிக் கொள்ளும் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரியும் இப்போது மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வந்தா தெரிஞ்சிடப் போகுது... ஆட்டம் ஒரிஜினா, அப்பட்ட காப்பியா என்று!

16 June, 2011

வலுப்படுத்தும் உறவோடு விவாதியுங்கள்.. (நெல்லை பதிவர் சந்திப்பு வாழ்த்து செய்தி)

அன்புள்ளம் கொண்ட பதிவுலகின் பதிவர்களே... மற்றும் வாசகர்களே....
நாளை (17-06-2011) நெல்லையில் கூடும் பதிவர்சந்திப்பில் கலந்துக் கொள்ள வரும் பதிவர்களையும் மற்றும் வாசகர்களையும் அன்புள்ளத்தோடு வாழ்த்தி மகிழ்கிறேன்...


ஜாதி, மதம், இனம், கட்சி என் அத்தனைக்கும் அப்பாற்பட்டு மொழி என்ற ஒரே ஒரு உணர்வோடு உலகத்தின் மூலைகளில் எங்கோ இருந்துக்கொண்டு நம்முடைய கற்பனைகள், படைப்புகள், தகவல்கள் மூலம் நட்புகளை பறிமாறிக்கொண்டு, நம்முடைய நட்புப்பாலம் உலகம் முழுவதும் விரிந்துக்கிடக்கிறது.

அந்த நட்பை உறுதிப்படுத்த, முகம் காட்டாது இருக்கும் நம் “முக”வரிகளை அறியச்செய்யயும் இந்த சந்திப்பில் கலந்துக் கொள்ளுபவர்களுக்கும், கலந்துக் கொள்ளாதவர்களுக்கும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. இதற்கு ஏற்பாடு செய்து அறிய பணியாற்றி வரும் அருமை நண்பர் உணவு உலகம் திரு  அ.ரா.சங்கரலிங்கம்  அவர்களுக்கு மிக்க நன்றியை தெரிவிப்பதில் கவிதைவீதி பெருமைப்படுகிறது.

நாளைய சமூதாயத்தை, நாளைய உல‌கை வடிவமைப்பதில் கண்டிப்பாக பதிவுலகம் ஒரு சிறப்பாக பங்கு வகிக்கும். புதியப்புதிய பதிவர்கள் பதிவுலகிற்கு வந்த வண்ணம் உள்ளனர். இளைஞர்களின் வருகை கண்டிப்பாக எதிர்காலத்தில் பதிவுலகின் குரல் ஒரு சமூக மாற்றத்திற்கு வித்திடும் என்பதில் யாரும் சந்தேகம் படவேண்டாம்.
சச்சரவுகள் ஏதுமின்றி அடுத்த பதிவர்சந்திப்பிற்குக்கு வித்திடுங்கள்.

 பதிவர்கள் கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் பதிவர்களுக்கும், இணையம் மூலமாக கலந்துரையாடும் பதிவர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். அன்பை பறிமாறிக்கொள்ளுங்கள் அதோடு எதிர்கால கொள்கை, எதிர்கால நோக்கம், பதிவர்களின் கடமைகள் ஆகியவற்றையும் விவாதியுங்கள். இந்த விவாதம் நாளைய உலக மாற்ற வழிவகுக்கலாம்.

மொக்கை பதிவு போட்டு, நகைச்சுவைகள் செய்து, தம்முடைய படைப்புகளை பகிர்ந்து, காபி டூ பேஸ்ட் பதிவுகள் இட்டு என முடிந்துவிடுவதில்லை நம் பயணம் என்று நம்பிக்கையையுங்கள். இந்த பதிவர்கள் சந்திப்பை நாளை வரலாற்றுப்பக்கங்கள் குறித்து வைத்துக் கொள்ளட்டும்.

நெல்லை பதிவர் சந்திப்பு வெற்றியடைய வாழ்த்துகிறேன். 
(என்னால் கலந்துக் கொள்ள முடியவில்லை என்பதற்க்கான வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்)

முக்கிய அறிவிப்புகள்
இந்த நிகழ்வை  உறவுகள் அனைவரும் கண்டு களிக்கலாம்.
அனைத்துலகெங்கும் பரந்து வாழும் உள்ளங்களிற்கு விருந்தளிக்கும் நோக்கிலும்,  பதிவர் சந்திப்பிற்கு வருகை தர முடியாத உறவுகளிற்கு நேரடித் தரிசனம் கிடைக்கும் வண்ணமும், இந்த ஏற்பாட்டினைச் செய்துள்ளார்கள். நேரஞ்சலானது இந்திய நேரம் காலை 6.00 AM இல் இருந்து ஆரம்பமாகும்.

இந்த சுட்டி கிளிக் செய்து கண்டு ரசியுங்கள்


(இதற்க்கான ஏற்பாடுகள் செய்துவருபவர் நண்பர் நிருபன்...)

மிக்க நன்றிகள்..!‌
வெல்லட்டும் பதிவுலக நட்பு....

15 June, 2011

இலங்கை எனும் கொலைக்களம் பரபரப்பு வீடியோ காட்சிகள்...


இலங்கையில் ராஜபக்சவின் இனவெறி இராணுவம் நடத்திய தமிழின அழிப்பின் காணொளி பதிவு ஒன்றை ‘கொலைக்களம்’ என்ற பெயரில் சானல் 4 தொலைக்காட்சி இன்று வெளியிட்டது.

இலங்கையில் தமிழினம் எப்படியெல்லாம் திட்டமிட்ட இனப் படுகொலைக்கு உடபடுத்தப்பட்டது என்பதை பல காணொளிகள் மூலம் உலகின் பார்வைக்குக் கொண்டு வந்த சானல் 4, அங்கு நடந்த மிகப் பெரிய படுகொலைக்கு ஆதாரமான மிகப் பெரிய காணொளியை இன்று (14-06-2011 இரவு 11.00 மணிக்கு) வெளியிட்டது.
காட்சிகளை பார்க்கும் அதிகாரிகள் கூட கண்கலங்கும் காட்சிகள் பார்ப்போரை கதிகலங்க வைக்கிறது.

அந்த வீடியோ காட்சிகள் :




கொலை பாதகன் ராஜபக்சே சர்வச குற்றவாளி கூண்டில் எப்போது ஏற்றப்படுவான்....  இனப் படுகொலைக்கு என்று வரும் ஒரு தீர்வு... 
தன் சொந்த மண்ணில் உரிமைகள் இழந்து உணர்வுகள் இழந்து இலங்கை ராணுவ துப்பாக்கிகளுக்கு இறையாகும் தம் இனம் என்றுதான் சுதந்திர காற்றை தனிஈழம் அமைத்து சுவாசிக்குமோ...

14 June, 2011

காதல் கடிதம்.... (இதை ரகசியமா வச்சிக்கங்க..)



“இந்தக் கல்லூரியிலே எவ்வளவோ பெண்கள் இருக்காங்க... இருந்தாலும் உங்களைத்தான் நான் விரும்பறேன்... இது நான் உங்களுக்காக எழுதின முதல்  காதல் கடிதம்...!”

“உங்களுக்குத் தெரியுமா... காதல் கடிதம் எழுதினதுலே ஓர் உலக சாதனை...!”

“தெரியாதே!”

“கனான் பில் குக் - அப்படின்னு ஒருத்தார். இங்கிலாந்து ராணுவத்திலே இருந்தார். இவர் ஹெலன் - என்கிற பெண்ணைக் காதலிச்சார். கொஞ்ச நாள்‌லே யுத்தம் ஆரம்பமாயிட்டுது... இவர் போர்முனைக்குப் போயிட்டார். சுமாரா நாலரை ஆண்டுகள் காதலியைப் பிரிஞ்சி இருந்தார். போர் முடிஞ்சி திரும்ப வந்ததும் திருமணம் அமோகமா நடந்துதாம். ‌அதுக்கப்புறம்தான் தெரிஞ்சுதாம்... பிரிவுக் காலத்துலே அவங்க எழுதிக்கிட்ட காதல் கடிதங்கள் மொத்தம் ஆறாயிரம்! இது ஒரு கின்னஸ் சாதனை!”

“இந்த முதல் கடிதத்தை நீங்க மறுக்காமே வாங்கிக்கிட்டா... என்னதலேயும் அதுமாதிரி ஒரு சாதனை நிகழ்த்த முடியும்!”

“அதுக்கு முன்னாடி நான் உங்ககிட்டே கேட்டுத் தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம் ஒண்ணு இருக்கு!”

“எதுவா இருந்தாலும் ‌கேளுங்க... சொல்றேன்!”

“இவ்வளவு பெண்கள் இருக்கிற இந்தக் கல்லூரியிலே நீங்க என்னை விரும்பறத்துக்கு என்ன காரணம்?”

“எனக்கு மனைவியா வருகிற பெண் அழகா இருக்கணும்ன்னு நான் நினைக்கிறேன்... அதனாலே தான்?”

“சாரி.. நான் உங்க காதலை ஏத்துக்க முடியாத நிலை...”

“என்ன காரணம்?”

“எனக்குக் கணவனா வருகிற ஆண் அழகா இருக்கணும்ன்னு நான் நினைக்கிறேன்.. அதனாலே தான்....!” (நன்றி வாரம் ஒரு தகவல்)
பொதுவாக நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் தான் பெண் அழகாக இருக்க வேண்டும், படித்திருக்க வேண்டும், வசதியாக இருக்க வேண்டும், சொந்தங்கள் குறைவாக இருக்கவேண்டும், வரதட்சணை அதிகம் கொடுக்க வேண்டும் என்று பல்வேறு பரிமாண வளர்ச்சிக்கு பிறகுதான் ஒரு பெண் மணமேடை ஏறுகிறாள். ஆனால் காதல் திருமணங்களில் பொதுவாக பார்க்கப்படுவது அழகு மட்டுமே. ஒரு பெண் அழகாக இருந்துவிட்டால் போதும் அவளுக்கு இளைஞர்களின் காதல் பார்வைகள் பல்வேறு கோணங்களில் இருந்து அம்புகளாய் வந்து விடும். ஆனால் கொஞ்சம் அ‌ழகு குறைவாக இருக்கும் பெண்களுக்கு காதல் என்பது கொஞ்சம் தாமதமாகத்தான் கைக்கூடுகிறது.

இன்றைய இளைஞர் கூட்டம் அ‌ழகு பெண்களை தேடியே தன் காலத்தை ஓட்டிவிடுகிறார்கள். அவர்களுக்கு தன்னைப்பற்றி கவலையில்லை தன் நிலையைப்பற்றி கவலையில்லை ஆனால் காதலி மட்டும் அழகாக இருந்து விடவேண்டும். அப்படியென்றால் அழகே இல்லாமல் இருக்கும் பெண்களின் நிலையை கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். அ‌ழகு மட்டுமே வாழ்க்கையை நடத்திவிட கைகொடுத்து விடாது. நல்ல மனது மட்டும்தான் ஒரு வாழ்க்கையை வசந்தக்காலமாக்கும்.


அழகை நம்பி வாழ்க்கையை இழந்தவர்கள் கண்டிப்பாக ஏராளமாக இருக்கிறார்கள் ஆகையால் பெண்ணின் மனதுக்கு மரியாதை தாருங்கள், அழகு அடுத்த இடத்தில் வையுங்கள். அப்போதுதான் வாழ்க்கை இனிக்கும்.


இந்த பதிவு பிடித்திருந்தால் கருத்திட்டு வாக்குகளை பதிவுச் செய்யுங்கள்...
தங்கள் வருகைக்கு நன்றி..!

10 June, 2011

லேப்டாப் வாங்கியதில் முறைகேடு... பிரபல பதிவர் தலைமறைவு..?

வெகுநாளாக ஒரு லேப்டாப் வாங்க எண்ணம் கொண்டிருந்த அந்த பிரபர பதிவர் ஊருக்கு போறதுக்குள் ஒரு புது லேப்டாப் வாங்கனும்னு ஆசைபட்டு எப்படியாவது ஒரு லேப்டாப் வங்கியே ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்காக அந்த  பிரபல பதிவர் தான்னுடன் வேலைச்செய்யும் திரு. அனில் என்வரிடம் உதவிக்கோரினார்.
 
அந்த நேரத்திரல் அந்த ஹோட்டலில் தங்கியிருந்த ஒரு அமெரிக்கரான ஒரு ராணுவக்கரரை அனுகினார்கள். அவரிடம் எப்படியாவது அமெரிக்க மாடல் லேப்டாப்பை குறைந்த விலையில் வாங்கி விடவேண்டும் என்ற முடிவோடு இரு இ‌ரவில் ரகசிய பேச்சுவார்த்தை நடைப்பெற்றது.

 (இதுதான் அந்த லேப்டாப்... உள்ளிருப்பது அந்த பிரபல பதிவர்)

அதன் பிறகு விசாரணையில் அவர் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுப் பெற்ற ராணுவ வீரர் என்று தெரியவந்தது. அவர் பெயர் கிறிஸ்டோபர் பண்டோலா

ரகசிய பேச்சுவார்த்தையில் அமெரிக்க கப்பலில் இருந்து ஒரு லேப்டாப் வேண்டும் என கேட்டு அவரும் சரி என ஒப்புக்கொண்டார். அதன் பிறகு தான் ஒரு குறிப்பிட்ட பணம் கைமாறியது. கிறிஸ்டோபர் மீது சந்தேகம் இருந்தும் தைரியமாக நம் பிரபல பதிவர் பணத்தை கொடுத்தார். ஆனால் இதை விட நல்ல லேப்டாப் வாங்கி தருகிறேன் என்று கூறி அந்த பலான பணத்தை இவரிடமே திருப்பிக் கொடுத்து விட்டார்.
/////////  அவன் சொன்னான் ஹேய் மிஸ்டர், என் நண்பன் சொன்னான் இன்னும் மூன்று நாளில் இன்னொரு கப்பல் யூ எஸ்'ல இருந்து வருது, அதில் இன்னும் சூப்பரான லேப்டாப் இருக்குமே'ன்னு சொன்னான் ஆகவே நான் இப்போது வாங்கவில்லை பொறுத்ததே பொறுத்தாய் இன்னும் மூன்று நாள் பொறுத்துக்கொள் என்று பணத்தை கையில் தந்தான்///////////

அந்த நம்பகமான வார்த்தையை கேட்ட நம்பதிவர் அடுத்த கப்பல் வரும் வரை காத்திருந்தார். அதன் பிறகு அவர்கள் நினைத்தபடி ஒரு கப்பல் வந்தது. ஒரு லேப்டாப்பும் கிடைத்து விட்டது.
///// லேப்டாப் வியட்நாமில் 1100 அமெரிக்கன் டாலராம்...நான் வாங்கியதோ 596 அமெரிக்கன் டாலர்....!!!/////


இரவில் தங்கிய ஒரு அப்பாவி அமெரிக்கனை ஏமாற்றி இரவோடு இரவாக புதிய லேப்டாப் கைமாறியது. அந்த அப்பாவி அமெரிக்கருக்கு அதன் உண்மை விலை தெரிய வரும்போது நமது பதிவர் தலைமறைவாகிவிட்டார். (அவர் நெல்லை வருவதாக புலனாய்வுத்துறை கண்டுப்பிடித்துள்ளது.) அதைப்பற்றி சிபி‌ஐ தரும் தகவல்.


////////////வரும் 17.06.2011 வெள்ளி அன்று, திருநெல்வேலியில் பதிவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இடம்: மிதிலா ஹால்,A/C.
ஹோட்டல் ஜானகிராம்,
மதுரை ரோடு,
திருநெல்வேலி சந்திப்பு.

நாள்: 17.06.2011

எனது unavuulagam@gmail.com mail ID க்கு உறுதி செய்து மெயில் கொடுங்கள்.
என் செல் எண் 9442201331.

ஜூன் பத்தாம் தேதிக்குள் விருப்பம் தெரிவித்தால், சிறப்பான ஏற்பாடுகள் செய்ய உதவிடும்.
மிக்க அன்புடன்,
அ.ரா.சங்கரலிங்கம்,
உணவு உலகம் /////////// என்ற தகவல் வந்துள்ளது.

அந்த கணினிக்குறித்த தகவல்கள் :
SONY NOTEBOOK PC W/ 17.3" DISPLAY
intel core i3-350M processor, 4GB system memory, 320GB Hard drive, Dual layer DVD Drive, ATI Mobilitty Radeon HD5470 with 512MB Dedicated Graphics, MOTION EYE Camera and Microphone, 802.1 1 b/g+N Wireless LAN, HDMI Out, Microsoft Office 2010 Starter, Windows 7 Premium 64-Bit # EC22FX/BL

லைமறைவான அந்த பிரபல பதிவர் மும்பை வழியாக தமிழகத்தில் ஊடுறுவலாம் என அஞ்சப்படுகிறது. தமிழக எல்லையில் அவரை பார்த்தவுடன் சுட்டுத்த நமது புரட்சித்தலைவி உத்திரவிட்டுள்ளார். அதோடு நிர்காமல் ஓபாமாவும் தன்  பங்குக்கு ஒரு டீமை நெல்லை அனுப்புவார் என நம்பப்படுகிறது. 

யாரவாது அவரை பார்த்தாலே அவரைப்பற்றி தகவல் அளித்தாலே தக்க சன்மானம் தரப்படும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது..

அந்த பதிவர் போலீஸிடம் சிக்குவாரா..? அந்த லேப்டாப் கைப்பற்றபடுமா பொருத்திருந்து பார்ப்போம்...

(இது என்னுடைய முதல் மொக்கை பதிவு..)

08 June, 2011

காங்கிரஸுக்கு 'குட்பை' - கலைஞர் அதிரடி முடிவு



திமுகவின் உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் வரும் பத்தாம் தேதி கூட்டப்பட்டுள்ளது. அன்றைய தினம் முக்கிய முடிவுகளை திமுக தலைமை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று நிராகரித்து விட்டதன் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெடித்துக் கிளம்பியது முதலே திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையிலான உறவில் புகைச்சல் கிளம்பியது. இருந்தாலும் சட்டசபைத் தேர்தலை மனதில் கொண்டு அமைதி காத்து வந்தது திமுக.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட காங்கிரஸ் சீட் கேட்டு பேரம் பேச ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை பயன்படுத்திக் கொண்டு அதிக சீட்களை வாங்கி போண்டி ஆனது. தேர்தல் படு தோல்விக்குப் பின்னர் திமுக, காங்கிரஸ் இடையிலான உறவு மேலும் மோசமடைந்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியுடன் இதுவரை சோனியா காந்தி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மேலும், கருணாநிதியின் மகள் கனிமொழியை சிபிஐ அதிரடியாக கைது செய்து திஹார் சிறையில் அடைத்து விட்டது. தற்போது தயாநிதி மாறனின் பதவிக்கும் பேராபத்து நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இதனால் கருணாநிதி கடும் அதிருப்தி அடைந்துள்ளார். திருவாரூரில் நடந்த நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கருணாநிதி, எனது மகள் கனிமொழி இன்று கடும் வெப்பத்துடன் கூடிய திஹார் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார். அவர் கைது செய்யப்பட மத்திய அரசுதான் காரணம் என்று பேசியிருந்தார். (தட்ஸ் தமிழ்)

இதனால் திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையிலான புகைச்சல் மேலும் அதிகரித்தது. இந்த நிலையில் இன்று கனிமொழிக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது.

இந்தப் பின்னணியில் திமுகவின் உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் ஜூன் 10ம் தேதி மாலை 4.30 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகும் முடிவு அல்லது மத்திய அமைச்சர்களை மட்டும் வாபஸ் பெற்று வெளியிலிருந்து ஆதரவு தருவது என்ற முடிவு ஆகியவற்றில் ஒன்று எடுக்கப்படும் என்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இனி என்ன நடக்கப்போகிறது பொறுத்திருந்து பார்ப்போம்..

கர்த்தர் குழப்பத்தில் இருக்கிறார்.....!

 
முதிர்ச்சிப்பெற்ற முரண்பாடுகளின்
தொகுப்புதான் காதலோ....
 

ன்னை மறக்க நீயும்
உன்னை நினைக்க நானும்
ஜெபித்துக் கொண்டிருக்கிறோம்....

ம் ஜெபத்தை ஆசீர்வதிக்க
திண்டாடிக் கொண்டிருக்கிறார்
கர்த்தர்...



தங்களின் கருத்துக்கு காத்திருக்கிறது இந்த கவிதை..

07 June, 2011

சிபிஐ அடுத்த அட்டாக் தயாநிதி மாறன்.... பரபரப்பு தகவல்..


தயாநிதி மாறனுக்கு எதிராக சிவசங்கரன் அளித்துள்ள வாக்குமூலம் முக்கிய சாட்சியமாக மாறுகிறது. இதை வைத்து ஏர்செல் நிறுவனத்திற்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் தரப்பட்ட விவகாரத்தில் எப்ஐஆர் பதிவு செய்ய சிபிஐ தயாராகி விட்டது. பிரதமரின் அனுமதிக்காக தற்போது சிபிஐ காத்துள்ளதாக தெரிகிறது.

தயாநிதி மாறன் மீதான குற்றச்சாட்டு இதுதான் - சிவசங்கரன் வசம் ஏர்செல் நிறுவனம் இருந்தபோது 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் கோரி அவர் விண்ணப்பித்தார். ஆனால் தயாநிதி மாறன் லைசென்ஸ் தரவில்லை. மாறாக அவரை, மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனத்திடம் ஏர்செல் நிறுவன பங்குகளை விற்குமாறு தயாநிதி மாறன் நெருக்கினார், மிரட்டினார். இதையடுத்து வேறு வழியில்லாமல் சிவசங்கரன், ஏர் செல் நிறுவனத்தை மேக்ஸிஸ் நிறுவனத்தின் ஆனந்தகிருஷ்ணனிடம் விற்று விட்டார்.

இந்த ஆனந்தகிருஷ்ணன், சன் டிவியின் நிறுவனரான கலாநிதி மாறனுக்கு மிகவும் நெருக்கமானவர். ஏர்செல் நிர்வாகம் மாறிய உடனேயே 14 லைசென்ஸ்கள் வழங்கப்பட்டது.

அடுத்த சில மாதங்களில் சன் டிவியின் சன் டைரக்ட் நிறுவனத்தில் ரூ. 800 கோடியை முதலீடு செய்தது ஆனந்தகிருஷ்ணனின் மேக்ஸிஸ் நிறுவனம். இதுதான் தற்போது சர்ச்சையாகியுள்ளது. இதுகுறித்த விவரங்களை டெஹல்கா இணையதளம் செய்தியாக வெளியிட்டது. இதைத்தான் தற்போது சிபிஐ தீவிரமாக விசாரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சிவசங்கரனிடம் நேற்று சிபிஐ நீண்ட நேரம் விசாரணை நடத்தியது. அப்போது என்ன நடந்தது என்பது குறித்து வாக்குமூலம் அளித்தார் சிவசங்கரன்.

சிவசங்கரன் கூறுகையில், தயாநிதி மாறன் எனக்குக் கொடுத்த நெருக்கடியால், என்னை கழுத்தை நெரிப்பது போல உணர்ந்தேன். தயாநிதி மாறனின் செல்வாக்கு காரணமாக எனது விண்ணப்பங்களை மத்திய தொலைத் தொடர்புத்துறை நிராகரித்து விட்டது. இதையடுத்து வேறு வழியில்லாமல் நான் ஆனந்தகிருஷ்ணனிடம் ஏர்செல்லை விற்க முடிவு செய்தேன் என்று கூறியுள்ளார். (தட்ஸ் தமிழ்)

சிவசங்கரனின் வாக்குமூலத்தை முக்கிய சாட்சியமாக பதிவு செய்துள்ளது சிபிஐ. இந்த விவகாரம் குறித்து தற்போது பிரதமர் அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளது சிபிஐ. பிரதமர் ஒப்புதல் கிடைத்தவுடன் தயாநிதி மாறன் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதையடுத்து அவரை நேரில் வரவழைத்து சிபிஐ விசாரணை நடத்தும் என்றும் தெரிகிறது.
நெருப்பில்லாம் புகையாது என்ற ப‌ழமொழியைப்போல் உள்ளிருக்கும் விஷயங்கள் கண்டிப்பாக வெளிவரும் என நம்புவோம்...

06 June, 2011

யிர்கோளத்தின் யிர்காப்போம்...!







விதைத்திட்ட எங்கும்
விளைந்த காலங்கள் போய்
வள்ளுவனின் குறளாய் குறைந்து விட்டது
நிலங்கள்...

றட்சியின் 
போர்வையில்
புகுந்து கொண்ட உலகத்தை...

கருகருக்கும் 
மேகங்கள்
காணவரும் நாள் இனிகுறைவே...!

டையாய் இருந்த 
மரங்கள்
அவிழ்ந்தப்பின்னர் நிர்வாண 
கோலத்தில் தான்
இன்றைய காடுகள்..

தென்றலாய் 
தவழ்ந்து வந்த 
காற்றினம்
மாசுக்களின் மடியில்
மரணித்துப் போயிருக்கிறது..

இவற்றின் உயிர் இழப்புகளால்தான்
ஓசோனின் 

ஓட்டைகள்...!

ஞ்சை புஞ்சை நிலங்களில்
இன்று அமோகமாக விளைவது
வீடுகள் மட்டுமே..

றுகள் 
குளங்கள் கூட
மனிதக் கறையான்களால்
உருமாறிப் போயிருக்கிறது..
 
நாகரீகம்.. புரட்சி... 
என்ற பெயரில்
நாம் செய்துகொண்டிருப்பது
‌ஐம்பூதங்களை 
அழிக்கும் பணியே...

காற்றுக்கும் தண்ணீருக்கும் 
மரணதண்டனை கொடுத்துவிட்டு
பிறகு எப்படி 

எதிர்பார்ப்பது
ஆரோக்கிய வாழ்வு...!

புதிய கோளை தேடி அலைய வேண்டியது
இனி அவசியம்தான்...
பூமிக்கு இனி ஆரம்பித்துவிட்டது
மூச்சடைப்பு...
 
முருகனின் 
மயிலையும்...
ஏசுவின் 
காலடித்தடமும்....
புத்தனின் 
போதிமரமும்...
அல்லாவின் 
அருளும்...
சுமந்துக்கிடக்கும் 
இந்த பூமியை
அழிக்கவா 

நம் அவதாரங்கள்...
 
நாளை சங்கதிக்கு
நாம் வழங்கும் 

வாழ்க்கை
இந்த பூமியாக இருக்கட்டும்...
 
ண்ணீர் அதன்
கற்பி‌ழக்காமல் 

காப்போம் ..!

காற்றை 
வடிக்கட்டி
காயம் 

ஆற்றுவோம்..!

புகைக்கு 
தடைப்போட்டு
கதவடைப்போம்..!

சுமை வளர்க்க 
முதலில் 
வழிவிடட்டும்
நம் வாசற்படிகள்...


ப்போதுதான்...
துளிர்விடும் இந்த உயிர்கோளம்...!

 

உலக சுற்றுச்சூழல் நாள்  விழிப்புணர்வு கவிதை
தங்களின் கருத்தை பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
தமிழ்மணத்தில் தங்கள் வாக்குகளை பதிவுச்செய்யுங்கள்...

04 June, 2011

ஈழத்தமிழரை ஆதரிப்பதால் சீமான் மீது பொய் வழககு - பிண்ணனியில் காங்கிரஸ்


ஈழத்தமிழர்கள் விஷயத்தில் யாரெல்லாம் ஆதரவுகரம் நீட்டுகிறார்களோ அவர்களையெல்லம் இந்த காங்கிரஸ் அரசு ஓரம் கட்டிக்கொண்டிருக்கிறது. பகிரங்கமாக போசிக்கொண்டிருந்த வைகோ கிட்டதட்ட அரசியலைவிட்டே ஓரம்கட்டப்பட்டு விட்டார். இதுபோன்று தான் சீமான் வழக்கு இருக்குமோ என்று எண்ணத்தோன்றுகிறது

நாம் தமிழர் கட்சி‌‌த் தலைவர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகா‌ரின் பே‌ரில் கற்பழிப்பு உள்ளிட்ட மூன்று பி‌ரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சீமானுடன் நெருக்கமாக இருந்ததாக விஜயலட்சுமி கூறும் நாட்களில் சீமான் ஈழப் போராட்டத்தில் தீவிரமாக இருந்ததாகவும், பலமுறை சிறை சென்றதாகவும் அதே போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த‌க் கூற்று விஜயலட்சுமியின் புகார் திட்டமிட்ட சதியோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

விஜயலட்சுமி கமிஷன‌ரிடம் புகார் கொடுக்க வரும் செய்தி காங்கிரஸ் பிரமுகர் ஒருவ‌ரின் எஸ்எம்எஸ் தகவல் மூலமே பத்தி‌ரிகையாளர்கள் அறிந்து கொண்டனர். அந்த தகவலின் அடிப்படையில் கமிஷனர் அலுவலகம் சென்ற போது விஜயலட்சுமி புகார் தந்திருக்கவில்லை. ஒரு நடிகை புகார் தரும் விஷயம் எப்படி காங்கிரஸ் பிரமுகருக்கு முன்கூட்டியே தெ‌ரிந்தது?

காங்கிரஸை தமிழகத்தில் படுதோல்வியடைச் செய்ததில் சீமானுக்கு பெரும் பங்கு‌ண்டு. அந்த வன்மத்தின் எதிரொலிதான் இந்த‌ப் புகார் என்று நம்பவே அதிக வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் பயங்கர அடிவாங்கிய காங்கிரஸ் மத்தியில் ஆளும் கட்சி என்றபோர்வையில் மறைமுக பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.  ஈழத்தமிழர்களுக்காக போராடும் ஒரு சிலரையும் பொய்வழக்குகள் போட்டு கைது செய்து சிறையில் அடைக்கும் இந்த போக்கு தொடர்ந்தால் நாளை தமிழகத்தில் இருந்து ஒருவரும் ஈழத்தமிழர்களுக்காக போராட முன்வரமாட்டார்கள்.

03 June, 2011

வெளியில் தெரியாத மனக்கறை...!



தூசுகளும் அழுக்குகளும்
நிறைந்த இந்த உலகில்
ஆடையின் மீதும் உடல் மீதும்
கறைகள் படாமல் பார்த்துக் கொள்கிறேன்...

ன் மீது படுகின்ற கறைகளை
போக்குவது பற்றிய கவலைகள்
தினம் தினம்..

டல் அழுக்குகளை
போக்க வழிகள் அறிவேன்...
 
டைக்கறைகள் அகற்ற
எத்தனை வ‌ழிமுறைகளை
பின்பற்ற முடியுமோ
அத்தனையும் பின்பற்றுகிறேன்...

ன்னுடைய ஆடைகளில்
விடாத கறைபடுமாயின் அவைகள்
தலையணையிலே தஞ்சம் அடைகிறது...
 
னக்கு தெரிந்தும்
எனக்கு தெரியாமலும்
நான் செய்யும் என்னுடைய தவறுகள்
மனதில் அழுக்காய் படிகிறது...
 
தைப்பற்றி நான்ஒன்றும்
‌பெரியதாய் கவலைப் படுவதில்லை...


ருவேளை
மனதில் படிகிற கறை ‌
வெளியே தெரியாது என்பதலோ...!



இந்த கவிதை குறித்த தங்கள் மனசு என்ன சொல்கிறது...

02 June, 2011

சிக்கன் 65, வறுத்தமீன் / சிபி-யும் மனோவும்....

‌இதெல்லாம் கூகிலில் சுட்டு அப்படியே கொஞ்சம் பட்டி பார்த்து, டிங்கரிங் செய்து நம்ம பதிவுலே ஓட விட்டிருக்கிறேன்.. பாருங்க சிரிங்க... (யாராவது கிண்டல் செய்தால் என் அத்தனை பதிவையும் மெயிலில் அனுப்பி வச்சிடுவேன்...)

ஏதோ வந்தமா படிச்சமா.. ஓட்டு போட்டுட்டு ஒரு கமாண்ட் போட்டுட்டு போனமான்னு இருக்கனும்.....

*************************************************************
இந்த படங்களுக்கு வசனங்கள் 
தேவையில்லைன்னு நினைக்கிறேன்..
*************************************************************

 

*************************************************************
பெட்ரோல் விலை ஓவரா போகுதுங்க
அதனாலதான் இந்த ஐடியா....
(ரொம்பவே கண்ணை கட்டுதே..)


*************************************************************
நான் வாழபிடிக்காம தற்கொலைக்கு முயற்சிக்கிறேன்...
என்னை விடுங்க...
(என்ன ஒரு புத்திசாலிதனம்...)

*************************************************************
நம்ம ஊர்ல கொஞ்சம் திருட்டு பயம் அதிகம்
அதுக்குதான் இந்த ஏற்பாடு...
(எவ்வளவு விவரமானவங்க...)


*************************************************************
 
 இதற்க்கு நான் ஒன்னும் சொல்லல...


*************************************************************
 
 என்ன கொடுமை சார் இது....
ஒண்னை மட்டும் சமைச்சா எப்படி எனக்கு பத்தாதே...
(சரியா பாத்துக்கங்க இப்படித்தான் சிவக்க வேகணும்..) 
*************************************************************
நன்றிங்ன்னா...!

01 June, 2011

18 கடிதங்களுடன் வாதாடப் போகும் ராசா-2ஜி சிக்கலில் மாட்டும் மன்மோகன்?


ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யவுள்ள முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பிரமதருக்கும் தனக்கும் நிகழ்ந்த 18 கடித பரிமாற்றங்களை முன் வைத்து வாதாட உள்ளதால், ஸ்பெக்ட்ரம் ஊழலின் விசாரணை வளையத்தில் மன்மோகன் சிங்கும் இழுக்கப்படலாம் என்று தெரிகிறது.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்த ஜாமீன் மனு விசாரணைக்கு வரும்போது, தான் அமைச்சராக இருந்தபோது பிரதமருக்கு எழுதிய 18 கடிதங்களுடன் தானே வாதாட ராசா திட்டமிட்டிருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த 18 கடிதங்களும் 2007ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2010 ஜூலை வரையிலான காலகட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், ராசாவுக்கும் இடையே பரிமாறிக் கொள்ளப்பட்ட கடிதங்களாகும்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அமைச்சரவையின் ஒப்புதலின் பேரில்தான் மேற்கொண்டேன் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் இந்த 18 கடிதங்களையும் ராசா முக்கிய ஆதாரமாகக் காட்டக்கூடும் என்று தெரிகிறது.

இந்த விவகாரத்தில் நான் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கவில்லை, அதற்கு உரிய அனுமதியைப் பெற்றிருந்தேன், எனவே நான் நிராபராதி என்று வாதாட ராசா தீர்மானித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த கடிதங்களை ஆதாரமாக வைத்து ராசா வாதாடும்போது மத்திய அரசுக்கு, குறிப்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடும் நெருக்கடி ஏற்படலாம்.

ராசாவின் வாதத்தை வைத்து பிரதமர் மன்மோகன் சிங்கையும் சிபிஐ தனது விசாரணைக்குள் கொண்டு வரவும் வாய்ப்புள்ளது.

ராசா அடிப்படையில் ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது வரையில் பிரதமரின் பெயரை தெரிவிக்காத ராசா தற்போது களத்தில் 18 கடிதங்களுடன் தானே இறங்குகிறார். இச்சூழலில் அரசியலில் ஏற்படும் அதிரடிகளை பொருத்திருந்து பார்ப்போம். 

பிரதமர் தன் சுத்தத்தன்மையை நிருபிப்பாரா என்ற கேள்விகளுடன்...!
Related Posts Plugin for WordPress, Blogger...