கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

30 July, 2011

“கடவுளுக்கு நிகரானவர் ரஜினி காந்த்” Top 50 Stars பட்டியலில் புகழாரம்..



'டைம்ஸ் ஆஃப் இந்தியா' குழுமத்தின் டிவி சேனலான ஜூம் சூப்பர் நோவா 2010 இந்தியாவின் டாப் 50 மனிதர்கள் பட்டியலை அறிவித்துள்ளது.

டாப் 50 பட்டியலில் தென்னிந்தியாவில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய இருவரும் இடம் பெற்று உள்ளனர்.

இப்பட்டியலில் சல்மான் கான் முதல் இடத்தையும், அமீர் கான் இரண்டாம் இடத்தையும் பிடித்து உள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். ' ரஜினி எப்போதும் கடவுளுக்கு நிகராகப் பார்க்கப்படுபவர்' என்று புகழாரம் சூட்டியுள்ளது ஜூம் டி.வி.

இப்பட்டியலில் ஷாருக்கான் 4வது இடத்திலும், ஏ.ஆர். ரஹ்மான் 5வது இடத்திலும், அமிதாப் பச்சன் 6 வது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் இடம் பெற்ற ஒரே பெண் கத்ரீனா கைப். முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் 14வது இடம் கிடைத்துள்ளது.

29 July, 2011

பெண்களை தன் வலையில் விழவைப்பது எப்படி...?


இன்று 10 வயது  மாணவர் 20 வயது இளைஞர் மற்றும் 60 வயது முதியவர் வரை பெண்கள் மீது பெரிய ஈர்ப்பு இருக்கிறது. பொதுவாக அவ்வளவு ‌எளிதாக பெண்கள் ஆண்கள் வலையில் விழுவதில்லை. அப்படி விழவைப்பதற்க்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறேன்.  அதன்படி செய்தால் அவர்களை எளிதாக தம்முடைய வலையில் விழவைத்து விடலாம்.

முதலில் எந்தப்பெண்மை தன் வலையில் விழவைக்க வேண்டும் என்று பார்த்துக்கொள்ள வேண்டும். (அதை நான் காட்டமுடியாது... ராஸ்கேல்ஸ்...)

அவருடைய அன்றாட நடவடிக்கைகள் என்னவென்று ஒன்று அல்லது இரண்டுநாட்கள் ஆராய வேண்டும். (எந்த விஷயத்தை செஞ்சாலும் பிளான் பண்ணாம செய்யக்கூடாது)

அந்தப்பெண்ணுடைய தரப்பில் யாரவது வம்புக்கு வருவார்களா என்று ஆராய வேண்டும். (அப்புறம் சண்டைசச்சரவு ஆகிவிட்டால் நான் பொருப்பல்ல)

இப்போது முக்கியமானது, நல்ல தரமான நைலான் அல்லது நூலால் ஆன தரமான எளிதில் அறுபடாத வலை ஒன்று வாங்கிக்கொள்ள வேண்டும்.(ரைட்டு)

அதற்கடுத்து நீங்கள் எந்த பெண்ணை வலையில் விழவைக்க நினைத்தீர்களோ அந்த பெண் வரும் போது இந்த வலையை தரையில் பரப்பி வைக்க வேண்டும். ( மிக மிக ரகசியமாக)

அந்த வலையில் அவர் வரும்போது எதாவது செய்தோ அல்லது பயமுறுத்தியோ அந்த வலையில் அவரை விழவைக்க வேண்டும். அப்படி விழவில்லையென்றால் திரும்ப திரும்ப முயற்ச்சிக்க வேண்டும். (வேற என்ன வேலையிருக்கு)

அப்படி விழுந்து விட்டால் அந்த இடத்தை விட்டு வேகமாக ஓடுவது உங்களுக்கு நல்லது. இல்லையென்றால் அதன் பின்விளைவுகள் எப்படியிருக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது.

இப்படித்தான் ஒரு பெண்ணை வலையில் விழவைக்க வேண்டும்.


அடுத்து ஒரு எளிய வழியுடன் உங்களை நான் சந்திக்கிறேன். (இனிமேல் இங்க நிப்பேனா நானு..)


 விழுந்தப்பிறகு இப்படித்தான் இருக்கும்....

(குறிப்பு பின் விளைவுகளுக்கு கமபெனி பொருப்பல்ல...)

28 July, 2011

ஒரு தமிழனின் உணர்வை இங்கு பாருங்கள்....


தமிழ் மொழி இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, உள்ளிட்ட உலகநாடுகளில்  63+ மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.  முதல் 20 உலக மொழிகள் பட்டியலில் 18 வது இடம் பிடித்திருக்கிறது.  அப்படி சிறப்பு வாழ்ந்த மொழியைப்பற்றி வைரமுத்து அவர்களால்....

27 July, 2011

ஜெயலலிதா, மோடிக்கு அல்கொய்தா கொலை மிரட்டல்! பரபரப்பு தகவல்கள்...


தமிழக முதல்வர் ஜெயலலிதா, குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு அல் கொய்தா அமைப்பினர் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளனர்.

மேலும் புகழ்பெற்ற கேரள கோயில்களான குருவாயூர் கிருஷ்ணர் கோயில் மற்றும் ஸ்ரீபத்மநாபசுவாமி கோயில்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாகவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிரட்டல் விடுத்தவர்கள் தாங்கள் அல் கொய்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளனர். அதேநேரம் இந்தக் கடிதம் சென்னையிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதம் குருவாயூர் இன்ஸ்பெக்டருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அந்தக் கடிதம் கிடைத்தவுடன் குருவாயூர் அருகே உள்ள ஸ்ரீகிருஷ்ணர் ஆலயத்துக்கு போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று சோதனை செய்தனர். கோயிலின் உள்ளேயும், கோயிலைச் சுற்றியும் வெடிகுண்டு நிபுணர்களின் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது.

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த மற்றொரு கோயில் புகழ்பெற்ற பத்மநாபசுவாமி ஆலயம். இங்குதான் 150 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த பொக்கிஷ அறைகளில் அரிய தங்க மற்றும் வைர நகைகள் இருந்தது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த கோயிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பக்தர்களும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

வெடிகுண்டு மிரட்டலையடுத்து இந்த கோயிலிலும் சோதனை நடத்தப்பட்டது.எனினும் சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை.

இந்த கடிதம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

தமிழக போலீசாரும் இது தொடர்பில் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இருப்பிடத்துக்கு மேலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு இந்த கொலைமிரட்டல் கடிதம் குறித்த விவரம் அனுப்பப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவருக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் அல் கொய்தா பெயரில் இயங்கும் நபர்கள் யார் என்ற விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

அவள் வராத நாட்களில் இப்படித்தான் நடக்கும்...


முதல் நண்பனாய்
கால்களில் ஒட்டி இம்சிக்கும்
மெல்லிய மணல்...

பாசம் கொண்டு
பணிந்து என் பாதம் தொட
வந்துப்போகும் அலைகள்....

சிவந்த கீழ்வானில் 
வரைந்து வைத்த ஓவியமாய்
பாய்மரக்கப்பல்....

காற்றில் மிதந்து காதில் விழுகிறது 
இளம்காதல் ஜோடிகளின்
 முத்த சப்தம்....

ழுத்தம் திருத்தமாய் 
பதித்துவிட்டுப்போயிருக்கும்
காதலர்களின் பாதச்சுவடுகள்....

யிர் தேடி
உள்ளிருந்து வெளியில் வந்து
எனைப்பார்த்து ஓடிஒளியும் நண்டு...

டிக்கடி ராகத்தால்
மௌனத்தை கலைத்துவிட்டு போகும்
சுண்டல் விற்கும் பையன்...

வைகளை மட்டுமே 
ரசித்து விட்டுச் செல்கிறேன்...

ருகிறேன் என்று சொல்லி
அவள் வராத நாட்களில்...


கருத்திடுங்கள்... வாக்களியுங்கள்...
கவிதையால் இணைந்திருப்போம்....

25 July, 2011

பெண்மையே உன்னை என்னவென்று சொல்வது..?




ஆண்கள் உடல்ரீதியாக பலசாலியாக இருந்தாலும் அவர்களை விட பெண்கள்தான் பன்முக திறமை படைத்தவர்கள் என்று உளவியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இல்லத்தை கவனிப்பதில் தொடங்கி, கணவன், குழந்தைகளுக்கு தேவையான பணிவிடைகள் செய்வது வரை அவர்களின் திறமைகள் ஒவ்வொரு விஷயத்திலும் சிறப்பாக வெளிப்படுகிறது.

அன்புக்குரியவர்கள் பெண்கள்

ஆண்கள் சுயநலவாதிகள். அவர்களுடைய சிந்தனை, செயற்பாடு எல்லாம் மதிப்பு, வெற்றி, தீர்வு பற்றியே இருக்கும். ஆனால் பெண்களுடைய சிந்தனைகள் எல்லாம் குடும்பம், நண்பர்கள், உறவு பற்றியே இருக்கும்.

குழப்பமான நேரங்களில் ஆண்கள் தனியாக உட்கார்ந்து வானத்தை பார்த்து யோசித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் பெண்கள் பிரச்சினைகளை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் அன்புக்குரியவர்களிடம் கூறிவிட்டு மறந்துவிடுவார்கள்.

பெண்களின் பன்முகத்திறன்

பெண்கள் பலதிறன் கொண்டவர்கள். அவர்களால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை பார்க்க முடியும். போனில் பேசிக் கொண்டே அலுவலக வேலையையும் கவனம் சிதறா மல் செய்துவிடக் கூடியவர்கள் பெண்கள். அதற்கேற்ப அவர்களின் மூளையும் வடிவமைந்துள்ளது. ஆனால் ஆண்களால் இப் படி ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய முடியாது.

ஆண்கள் பொய் பேசினால் பெண்கள் உடனே கண்டுபிடித்து விடுவார்கள். ஆண்களின் முகபாவனை, அங்க அசைவுகள், வார்த்தை உச்சரிப்பு இவற்றை வைத்தே அதை கண்டுபிடிக்கிறார்கள். ஆண்களால் இப்படி கண்டுபிடிக்க முடிவதில்லை. அதனால்தான் அவள் என்னை ஏமாற்றிவிட்டாள் என்று தாடி வைத்துக் கொண்டு புலம்பித் திரிகிறார்கள்.

மனதிருப்தி

ஒரு ஆண் சந்தோஷமாக இருக்க நல்ல வேலை வேண்டும். கூடுதலாக சந்தோஷமாக நினைக்க மது, மாது ஏதாவது ஒன்று வேண்டும். ஆனால் பெண்களுக்கு நல்ல கணவர், நல்ல உறவு, நல்ல உறவினர்கள், நல்ல பொழுதுபோக்கு, நல்ல சந்தோஷம்… இப்படி எல்லாமே நல்லதாக இருந்தால் மட்டுமே அவர்கள் திருப்தி அடைவார்கள்.

உறவுகளுக்குள் ஒரு பிரச்சினை என்றால் பெண்களால் அவர்களுடைய வேலையில் கவனத்தை செலுத்த முடியாது. ஆண்கள் அப்படியில்லை.

வெளிப்படையான பேச்சு

பெண்கள் எதையும் சுற்றி வளைத்துதான் பேசுவார்கள். ஆசை களையும் ஒளிவுமறைவாக வெளிப்படுத்துவார்கள். ஆண்கள் `ஓபன் டைப்’. நல்லதோ கெட்டதோ விஷயத்தை நேராக போட்டு உடைத்துவிடுவார்கள். ஆசையையும் கொட்டித் தீர்த்து விடுவார்கள்.

பெண்கள் எதையும் யோசிக்காமல் பேசிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் ஆண்கள் எதையும் யோசிக்காமல் செய்வார்கள். – சில ஆண்களும், பெண்களும் இதில் உள்ள எல்லா விஷயங்களுக்கும் விதிவிலக்கான வர்களாகவும் இருப்பார்கள்.

ஆண் பெண் என்ற வித்தியாசம் மாறிவரும் இன்றைய காலகட்டத்தில் நாளை நம்பிக்கைகள் அவர்களே என்று நம்புவோம்.

23 July, 2011

இலங்கையின் அழைப்பை ஜெயலலிதா ஏற்றுக் கொண்டாரா?


இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு உயர்ஸ்தானிகராலயத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் நேற்றுமுன்தினம் சென்னையில் தமிழக முதல்வரை சந்தித்துப் பேச்சு நடத்தியபோதே ஜெயலலிதா இலங்கையின் அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.

அதேவேளை ஜெயலலிதா, ஜனாதிபதியிடம் தெரிவிக்குமாறு தகவல் ஒன்றையும் வழங்கியுள்ளார்.

இலங்கையில் அகதி முகாம்களில் தங்கியுள்ள தமிழர்கள், தங்கள் சொந்த இடங்களுக்கு விரைவில் திரும்பிச் செல்ல வேண்டும். அவர்கள் தமது சொந்த இடங்களில் மறுவாழ்வு பெறுவதை உங்கள் அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்ற தகவலை ஜெயலலிதா அனுப்பி வைத்துள்ளார்.

பிரசாத் கரியவாசம், முதல்வரின் இந்தத் தகவலை ஜனாதிபதியிடம் தெரிவிப்பதாகக் கூறியிருக்கிறார்.

அத்துடன், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும் எனவும் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாக் ஜலசந்தியில் மீன் பிடிப்பில் ஈடுபடும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் அவ்வப்போது தாக்கப்படுவது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. கடந்த 2 மாதங்களில் 3 முறை தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என்றும் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.


ஜெயலலிதாவுடனான சந்திப்பை முடித்துக்கொண்டு வெளியேறிய பிரசாத் காரியவசத்தை, சூழ்ந்துகொண்ட பத்திரிகையாளர்கள், "எதற்காக இந்த திடீர் சந்திப்பு" என்று கேட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதற்குப் பதிலளித்த தூதர் கரியவாசம், "முதல்வர் ஜெயலலிதா தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகப் பொறுப்பேற்றதற்காக, அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்க வந்துள்ளேன். முதல்வருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்குமாறு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ என்னைப் பணித்துள்ளார்" என்று தெரிவித்தார்.

ஜெயலலிதா தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராகப் பொறுப்பேற்றது, மே மாதம் நடுப்பகுதியில். தூதர் காரியவாசம் வாழ்த்துத் தெரிவிக்க வந்திருப்பது, ஜூலை மாதம் 21ம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது. (தமிழ்CNN)

22 July, 2011

இப்படியெல்லாம் SMS வந்தா என்ன பண்றது...?

வெல்லும் வரை தோல்வி..!
சிரிக்கும் வரை கண்ணீர்...!
உதிரும் வரை பூக்கள்...!
மறையும் வரை நிலவு...!
மரணம் வரை நம் நட்பு...!

**********************************************************
விரும்பிய ஒருத்தரை மட்டும்
சொந்தமாக்கிக் கொள்ளும் காதல்...!
விரும்பிய அனைவரையும் 
சொந்தமாக்கிக் கொள்ளும் நட்பு..!
\
**********************************************************

ம் நட்பை ஓவியமாய் வரைய நினைத்தேன்
ஆனால் முடியவில்லை..!
ஏன் தெரியுமா..?

ரோஜாவை வரைந்து விடலாம்
அதன் வாசத்தை எப்படி வரையமுடியும்...!

********************************************************** 
ண்ணில் ஒரு மின்னல்...
முகத்தில் ஒரு சிரிப்பு...
சிரிப்பில் ஒரு பாசம்...
பாசத்தில் ஒரு நேசம்...
நேசத்தில் ஒரு இதயம்...
அந்த இதயத்தில்
என் இனிய நண்பன் நீ...

**********************************************************

ண்ணீர் எனக்கு பிடிக்கும்
அ‌து எனக்கு கவலை இருக்கும் வரை...
இரவுகள் எனக்கு பிடிக்கும்
அது உண்மையாய் பிடிக்கும்...

உன் நட்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்
அது என் உயிர் பிரியும் வரை...!

********************************************************* 
இந்த நட்புக் கவிதைகள் என் கைபேசியில் 
குறுந்தகவல்களாக வந்தவைகள்...
இவைகள் யாருக்கு சொந்தமென்று எனக்கு தெரியாது...


தீயில் குளித்தாலும் 

சாம்பல்தட்டி எழும் பீனிக்ஸ் போன்று 
என்றும் உயிர் வாழ்பவைகள் இவைகள்...

ரசியுங்கள் அனைத்தையும்...
 தங்கள் வருகைக்கு நன்றி..! 

20 July, 2011

இரவில் மட்டும் அந்த ஞாபகம் வந்து விடுகிறது....


காலையில்
சுற்றம் நட்பிடம் உறவாடும் போது
நினைவுக்கு வருவதில்லை...

மாலையில் 
நண்பர்களோடு கலந்துப்போகும் போது
மறந்துத்தான்  போகிறேன்...
கலெல்லாம்
போகும் வரும் இடங்களில்
எங்கேயோ சென்று பதுங்கி விடுகிறது....

னக்கான தேடலில்
கனவுகளோடும் காட்சிகளோடும்
இருவிழிகள் சண்டையிடும் போதும்
அது நினைப்பு வருவதில்லை...

னால்
கவிதை எழுத அமரும் போதும
இரவு நேரங்களில் மட்டும்
நினைவுக்கு வந்துவிடுகிறது...

பாழாய்போன 
இந்த காதல் தோல்வி....

 

19 July, 2011

சென்டிமெண்ட்.... ரஜினியின் ராணா படத் தலைப்பில் மாற்றம்?


சூப்பர் ஸ்டார் ரஜினியின் ராணா படத் தலைப்பு மாறக்கூடும் என சில தினங்களாகவே பரபரப்பாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஆனால் ரஜினி அல்லது இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தரப்பிலிருந்து இதுகுறித்து எந்த ரியாக்ஷனும் இல்லை.

ரஜினி கதை எழுதி, 3 வேடங்களில் நடிக்கும் மெகா பட்ஜெட் படம் ராணா. தமிழ் மன்னன் ஒருவனின் கதை. முழுக்க முழுக்க சரித்திரப் படம். இதில் ரஜினியின் ஒரு வேடத்துக்குப் பெயர்தான் ராணா. இந்தப் பெயரை தேர்வு செய்தததும் ரஜினிதான்.

இந்தப் படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கின்போதுதான் அவருக்கு உடல் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு, சிங்கப்பூருக்குப் போய் சிகிச்சைப் பெற்று திரும்பியுள்ளார்.

இப்போது ஓய்விலிருக்கும் ரஜினி படத்தின் காட்சியமைப்புகள் குறித்து இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாருடன் விவாதித்து வருகிறார்.

இந்த நிலையில், சென்டிமெண்டாக ராணா தலைப்பு வேண்டாம் என ஒரு சாரார் கருத்து தெரிவி்த்துள்ளார்களாம். ஆனால் ரஜினியோ ராணா தலைப்புதான் மிக ஈர்ப்பாக இருக்கிறது என அபிப்பிராயப்படுகிறாராம்.

அடுத்தவர் கருத்துக்கு எப்போதுமே அவர் மதிப்பளிப்பவர் என்பதால், தலைப்பில் மாற்றம் செய்யக்கூடும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால் ரஜினியோ கேஎஸ் ரவிக்குமாரோ இதுபற்றி எதுவும் கருத்து தெரிவிக்காமல் உள்ளனர்.

ஏற்கனவே அண்ணாமலை படத்தில் நடித்த போது தலைப்பை பலர் கிண்டல் செய்தனர். அண்ணாமலை அரோகரா என்று பேசினர். எனவே தலைப்பை மாற்றலாமா? என யோசனை தெரிவிக்கப்பட்டது. ஆனால் ரஜினி அதை ஏற்கவில்லை. அண்ணாமலை என்பது திருவண்ணாமலை சிவன் பெயர் எனவே அதை மாற்றக் கூடாது என்று பிடிவாதமாக மறுத்தார். இதையடுத்து அந்த பெயரிலேயே படம் வந்து வெற்றிகரமாக ஓடியது.

படையப்பா பெயர்தான் பெரும் அளவு கிண்டலடிக்கப்பட்டது. ஆனால் வசூலில் தமிழ் சினிமாவையே புரட்டிப் போட்டது இந்தப் படம்.

எனவே ரஜினி தலைப்பை மாற்றுவாரா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

படத்தின் தலைப்பில் என்ன இருக்கிறது. நம்ம தல ரஜினி தோன்றினாலே அந்தப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகிவிடும். படத்தலைப்பு குறித்து ஒன்றுமில்லை தல நடித்தாலே போதும்...

படத்தின் தலைப்பு மாற்றப்படுமா பொருத்திருந்து பார்ப்போம்...

என் புனல் விசாரனை.... அதிரடியான உண்மை சம்பவம்....


நான் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்தேன். மதிய நேரம் என்பதால் டிவி- பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது சமையலறையில் இருந்து என் அம்மா என்னை அழைத்தார்கள். என்ன என்று கேட்டவாரே சமையலறைக்கு சென்றேன். 

அங்கே மண்ணென்னை கேனுடன் எனது அம்மா நின்றுக் கொண்டிருந்தார்கள்.

என்னம்மா என்று கேட்டேன்...
 
சமையல் செய்யனும்....
 
சரி செய்யுங்க என்றேன்..
 
இந்த மண்ணென்னையை அடுப்பில் (ஸ்டவ்) மண்ணென்னை தீர்ந்து விட்டது அதை  ஊற்ற வேண்டும். ஆனால் புனலை தேடிப்பார்க்கிறேன் காணவில்லை. அதை யார் வாங்கிச்‌ சென்றது என்றும் தெரியவில்லை என்றார்கள்.

அதன்பிறகு அதை எதிர்வீடு அல்லது பக்கத்து வீட்டில்தான் வாங்கிச் சென்றிருப்பார்கள் என்று முடிவுகட்டி நேராக எதிர்வீட்டிற்க்குச் சென்றேன். 

அந்த வீட்டிற்க்கு சென்று கதவைத்தட்டினேன்.
 
கமலா அக்கா வெளியில் வந்தார்கள்..
 
அக்கா எங்க வீட்டில் இருந்து புனல் வாங்கி வந்தீர்களா என்று கேட்டேன். (எவ்வளவு திறமையான கேள்வி பாருங்க.)
 
அதற்க்கு ஆமா என்றார்கள்..
 
அதை அம்மா வாங்கி வரச் சொன்னார்கள் என்று சொன்னேன்.. சரி என்று சொல்லி... வீட்டிற்க்குள் சென்று புனலை வாங்கி வந்து அம்மாவிடம் கொடுத்தேன்.

பரவாயில்லை உடனே கண்டுப்பிடித்துவிட்டாயே என்று பாராட்டினார்கள்...

புனல் விசாரணை முடித்து நான் நிம்மதியாக டிவி-தொடங்கினேன்...


ஓ... புனல் என்றால் என்னவென்று தங்களுக்கு தெரியவில்லையா..
சரி அந்த படத்தையும் போட்டு விடுகிறேன்...


என்ன கோவமா.. சரியா தலைப்பை படிங்க இது புனலைப்பற்றி விசாரித்ததால் இது புனல்  விசாரணை  ஆயிற்று...
எப்பூடி...

18 July, 2011

மூன்றில் அடங்குகிறது என் வாழ்க்கை.. (தொடர் பதிவு)


1) நான் விருப்பும் மூன்று விஷயங்கள்...?
  • இந்த உலகத்தின் வினாடிகளை கவிதையில் விவரிப்பது...
  • எல்லா நிலையிலும் மனிதநேயத்தை கடைப்பிடிப்பது..
  • மற்றும் அம்மா.. அம்மா... அம்மா...

2) நான் விருப்பாத மூன்று விஷயங்கள்
  • தன்மானத்தை தாரை வார்த்து இந்த பூமியில் வாழ்வது...
  • சாலை விதிகளை மதிக்காதவர்களை சும்மா விடுவது.. (இது பிறர் உயிரோடு விளையாடும் விஷயம்...)
  • முடியாத விஷயத்தில் வாதம் செய்வது...

3) நான் பயப்படும் மூன்று விஷயங்கள்
  • எல்லா நிலையிலும் என்னை பக்குவப்படுத்தும் என் மனசாட்சி...
  • உயிர்களை மிரட்டும் இயற்கை சீற்றங்கள்...
  • அற்புதங்களையும், ஆச்சரியங்களையும் மறைத்து வைத்திருக்கும் இந்த எதிர்காலம்....

4) நான் ரசித்த மூன்று திரைப்படங்கள்...?
  • கமலின் அன்பே சிவம்...
  • ரஜினியின் பாட்ஷா...
  • அஜீத்தின் முகவரி...

5) நான் விருப்பி அதிக முறை கேட்ட மூன்று திரைப்பாடல்கள்...?
  • ஒவ்வொறு பூக்களுமே.... (ஆட்‌டோகிராப்)
  • காதல் காயங்களே.... (இரட்டைக்குழல் துப்பாக்கி...)
  • கடவுள் தந்த அழகிய வீடு.... (மாயாவி)

6) எனக்கு பிடித்த மூன்று உணவுகள்...?
  • தயிர்ஊற்றிய பழைய கஞ்சி...
  • சாம்பார் சாதம்...
  • ஞாயிறு மட்டும் மட்டன் பிரியாணி...

7) இது இல்லை என்றால் என்னால் வாழ முடியாது...?
  • கிள்ளி, கீறி, வெட்டி, அடித்து, ஒடித்து, நொறுக்கி, செதுக்கி என்னை சிற்பமாக்கும் இந்த சமூகம்...
  • முடிந்த வரை நான் க‌டைபிடிக்கும் உண்மை...
  • என் நியாயமான கோவங்கள்...

8) கற்று கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்..?
  • யாருடனாவது சண்டையிட்டபின்  அதை மறந்து விட...
  • சுந்தரத் தெலுங்கு...
  • விதியை வெல்லும் வழி...

9) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்....?
  • தெரியாமல் செய்து விட்டேன் என்று சொல்வது...
  • அதை இன்னும் மறக்கலையா என சமாதானம் படுத்துவது..
  • குழந்தையின் அழுகுரல்....


10) நான் பெருமையாய் நினைக்கும் மூன்று காரியங்கள்...?
  • நான் ஆற்றிவரும் கல்விப் பணி...
  • பிளாக் எழுதுவது.... உலகத்தமிழர்களிடம் கிடைத்த அறிமுகம் (பதிவுலகம் மூலமாக)
  • என் கவிதைகள்....

11) எனக்கு புரியாத மூன்று விஷயம்...?
  • கடவுள் யார் என்பது...
  • ஆறறிவு இருந்தும் பயன்படுத்தாத மனிதனின் குணம்...
  • காதல்... காதல்... காதல்...

12) வாழ் நாள் முடிவதர்க்குள் செய்ய நினைக்கும் மூன்று விஷயம்...?
  • நான் வாழ்ந்ததற்க்கான அடையாளங்களை இந்த உலகிற்க்கு விட்டு செல்லுதல்...
  • தமிழுக்கும் இந்த சமுதாயத்திற்க்கும் என்னால் ஒரு அடையாளம்...
  • இந்தியா முழுவதையும் சுற்றிப்பார்க்க வேண்டும்...

13) மறக்க முடியாத(கூடாத) மூன்று நண்பர்கள்...?
  • 10-ஆம் வகுப்பில் எனக்கு கவிதை எழுத கற்றுக் கொடுத்த சகமாணவன் காட்டையன் (இவர் ஒரு இருளர் இன மாணவர்.. தற்போது எங்கிருக்கிறார்  என்று தெரியவில்லை...)
  • எனக்கு தன்னம்பிக்கையை கற்றுக்கொடுக்கும் திரு. பூரிவாக்கம் ர‌மேஷ்
  • பதிவுலகில் என்னை அறிமுகப்படுத்திய வேடந்தாங்கல் கருண்...

14) என் தளத்தில் எனக்கு பிடித்த மூன்று பதிவுகள்...?

15) இதை தொடர அழைக்கும் மூன்று பதிவர்கள்..?

யாரை கூப்பிடலாம்...

 (யான் பெற்ற இன்பம் இவர்களும் பெறட்டும்)




இந்த தகவல்கள் ஏதோ என்னையும் என் நடைத்தையும் பிரபலப்படுத்தவோ அல்லது என்னுடைய வாழ்க்கையை நியாப்படுத்தவோ அல்ல... மனதின் இடுக்குகளில் புழுங்கியவைகள் தற்போது பதிவாய் மிளிர்கிறது.

நன்றி என்னை அழைத்த  நுனிபுல் ரியாஸ் அஹமது

16 July, 2011

தெய்வதிருமகள் / விமர்சனங்கள் (Deiva Thirumagan review Top 5)

தெய்வதிருமகள் விமர்சனங்கள்....
உங்களுக்கு விரும்பியைதை தேர்வு செய்து படியுங்கள்...


அஷவின் அரங்கம் - தெய்வதிருமகள் - சுட சுட பார்வை.









செங்கோவி -தெய்வத் திருமகள் - திரை விமர்சனம்


நடிப்பு - விக்ரம், அனுஷ்கா, அமலா பால், சந்தானம், நாசர், பேபி சாரா
பாடல்கள் - நா முத்துக்குமார்
இசை - ஜீவி பிரகாஷ்குமார்
ஒளிப்பதிவு - நீரவ்ஷா
எடிட்டிங் - ஆண்டனி

தயாரிப்பு - எம் சிந்தாமணி & ரோனி ஸ்க்ரூவாலா
எழுத்து - இயக்கம் - விஜய்

மக்கள் தொடர்பு - ஜான்சன்

தங்களுக்கு பிடித்த தளத்தி அதை கிளிக் செய்து படித்துக் கொள்ளுங்கள்....

13 July, 2011

நித்தியானந்தா ஆபாசப் பட விவகாரம் - சன் டிவி, தினகரன், நக்கீரன் மீது போலீஸில் ரஞ்சிதா புகார்




தன்னையும் நித்யானந்தாவும் இணைத்து ஆபாசப்படம் வெளியிட்டதாக சன் டிவி, தினகரன் மற்றும் நக்கீரன் பத்திரிகை மீது சென்னை மாநகர கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார் நடிகை ரஞ்சிதா.

கடந்த வாரம் நித்யானந்தா சாமியாரின் சீடர்கள் சென்னை நகர போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு ஒன்றைக் கொடுத்தனர். அந்த புகார் மனுவில், நித்யானந்தா-நடிகை ரஞ்சிதாவை இணைத்து போலியான ஆபாச படங்களை வெளியிட்ட சன் டி.வி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். அந்த புகார் மனு விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில், அதே குற்றச்சாட்டை கூறி நடிகை ரஞ்சிதாவும் புகார் கொடுத்துள்ளார். நேற்று பிற்பகல் 2.45 மணிக்கு ரஞ்சிதா தனது மூத்த சகோதரியோடும், சீனியர் வக்கீல் ராஜன் உள்பட சில வக்கீல்களோடும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார்.

கமிஷனர் திரிபாதியை சந்தித்து அவர் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். புகார் கொடுத்துவிட்டு வெளியே வந்த அவரிடம் கமிஷனரிடம் கொடுத்த புகார் மனுவின் நகல் காப்பியை தரும்படி நிருபர்கள் கேட்டனர். அதை தர இயலாது என்று ரஞ்சிதா கூறிச் சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் கமிஷனர் திரிபாதி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், ரஞ்சிதா கொடுத்த புகார் மனு பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்து கமிஷனர் திரிபாதி கூறுகையில், "ரஞ்சிதா கொடுத்த புகார் மனுவில், ஆசிரமத்தில் நடந்ததாக போலியான வீடியோ காட்சிகளை வெளியிட்டு என்னை அவமானப்படுத்தி விட்டார்கள் என்றும், எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டார்கள் என்றும், அதுதொடர்பாக சன் டி.வி. மீதும், நக்கீரன் உள்பட சில பத்திரிகைகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த வீடியோ காட்சிகளை வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டினார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வளவு பணம் கேட்டார்கள் என்பதுபற்றி புகாரில் இல்லை. யார், யார் பெயர் உள்ளது என்பது பற்றி மனுவை முழுமையாக படித்து பார்த்தால்தான் தெரியும்.

இந்த புகார் மனு மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்துவார்கள். பெங்களூரில் நடக்கும் வழக்கு வேறு. இங்கு நடந்த சம்பவங்கள் தொடர்பாக இந்த புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. என்ன நடவடிக்கை என்பது பற்றி விசாரணை முடிந்தபிறகுதான் சொல்ல முடியும்.

சக்சேனா மீது நிறைய புகார்கள் இருந்தாலும், இதுவரை 3 புகார்கள் மீதுதான் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது," என்றார்.
ஆட்சி மாற்றின் விளைவாக  திமுக சார்ந்தவர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு வருகிறது. தற்போது பதுங்கி ஒதுங்கி இருந்தவர்கள் கூட வெளியில் வந்துவிட்டார்கள்... வழக்குகள் நியாயம் இருப்பின் சரியான தண்டனைகள் வழங்கவேண்டும் என்பது என்னுடைய வாதம். இதில் பழிவாங்கக்கூடிய போக்கு இல்லாமல் பார்த்துக் கொள்வது அரசின் கடமையாகும்...

இனி என்னவாகும் பொறுத்திருந்து பார்ப்போம்.

08 July, 2011

பெண்களின் இதயத்தை பாதிக்கும் தூக்கம்! அதிர்ச்சி தகவல்...


தூக்கம் என்பது உடலுக்கு அளிக்கும் ஓய்வு. நாள்தோறும் ஓடிக் களைத்த உடலுக்கும் மனதுக்கும் இரவு நேரத்தில் 7 மணிநேரம் வரை ஓய்வளித்தால்தான் மறுநாள் சுறு சுறுப்பாக பணியை தொடங்க முடியும். ஆனால் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே!. அதுபோலத்தான் தூக்கமும். அதிக நேரம் தூங்குவது ஆபத்தானது என்று ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இரவு நேரத்தில் ஒன்பது மணி நேரத்திற்கு மேல் தூங்கும் நடுத்தர மற்றும் வயதானப் பெண்களுக்கு, இதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவிக்கின்றது அந்த ஆய்வு.

நடுத்தர வயதுப் பெண்கள்

நடுத்தர வயதுப் பெண்களின் தூக்கத்திற்கும், இதய கோளாறுகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர் தெற்கு கரோலினா பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்கள்.

50 முதல் 79 வயது வரையிலான மொத்தம் 93,175 பெண்கள் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். ஏழரை ஆண்டுகாலம் பெண்களின் தூக்க நேரம் கண்காணிக்கப்பட்டது.

இந்தப் பெண்களில் 1,166 பேருக்கு மிகவும் பொதுவான வகையைச் சேர்ந்த இதயக் கோளாறான 'இஸ்கெமிக் ஸ்ட்ரோக்'கை அனுபவித்திருப்பது ஆய்வில் தெரியவந்தது.

இதயக் கோளாறு

ஆய்வின் முடிவில் சராசரியாக 7 மணி நேரம் தூங்குவோருடன் ஒப்பிடுகையில், 8 மணிநேரம் மற்றும் 9 அல்லது அதற்கும் மேற்பட்ட மணிநேரம் தூங்குவோருக்கு முறையே 14 சதவிகிதம், 24 சதவிகிதம் மற்றும் 70 சதவிகிதம் அளவில் இதயக் கோளாறு வருவதற்கான அபாயம் உண்டு என்பது கண்டறியப்பட்டது.

எனவே, பெண்கள் 9 மற்றும் அதற்கும் அதிகமான மணிநேரங்கள் தூங்குவதைத் தவிர்த்து, சராசரியாக 7 மணி நேரம் தூங்குவதே சிறந்தது என்று மருத்துவ ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதை நான் தட்ஸ் தமிழில் வாசித்தேன் அதை தங்களோடு: பகிர்ந்துக் கொள்கிறேன்.

07 July, 2011

வேங்கை - திரை விமர்சனம் (first on Net)


பி. நாகிரெட்டியின் விஜயா புரொடக்சன்ஸ் சார்பில் ஹரி அவர்களின் அருவாவின் வீச்சில் தனுஷ் நடிக்க தற்போது வெளிவந்துள்ள படமே வேங்கை.

கதைச்சுருக்கம் :

ஊரில் மிகபெரிய கையாக இருக்கும் ராஜ்கிரண் அவரது மகன் தனுஷ். அந்த ஊரில் இருக்கும் MLA  பிரகாஷ்ராஜ் இந்த மூவருக்கும் இடையில் கதை பின்னப்பட்டிருக்கிறது. துவக்க காட்சியில் ஹரியின் அதிரடியான துவக்க பாடலுடன் துவங்குகிறது. தன்மகன் தன்னைப்போல் ரவுடியாக ஆகவேண்டாம் என திருச்சிக்கு அனுப்ப திட்டமிட்டு அங்கு ரியல் எஸ்டேட் செய்யும் லிவிங்ஸ்டன் அலுவலகத்தில் பணியாற்ற அனுப்பப்படுகிறார். திருச்சியில் பஸ்ஸில்  தமன்னாவை  பார்த்த மாத்திரத்தில் சின்ன வயதில் தன்னுடன் பள்ளியில் படித்த ‌ராதிகா என கண்டுப்பிடித்து இருவருக்குமான நட்பு ஆரம்பித்து விடுகிறது. தமன்னா விலக இவர் விரட்ட என பல்வேறு குழப்பங்களுக்கிடையே இறுவருக்கும் காதல் மலர்கிறது.

ராஜ்கிரண் தயவில் MLA வாக இருக்கும் பிரகாஷ்ராஜ் மணல் கொள்ளையில் அதிக சம்பாதித்து அதிக சொத்து வாங்குகிறார். இதை தட்டிக்கேட்ட ராஜ்கிரணுடன் மோதல் துவங்குகிறது. ராஜ்கிரணுக்கு வலிக்கவேண்டும் என்பதற்காக திருச்சியில் இருக்கும் தனுஷை கொலை செய்ய ஆட்களை ஏவிவிடுகிறார் பிரகாஷ்ராஜ். தமன்னா படிக்கும் கல்லூரியில் ஆரம்பிக்கும் ரவுடிச்சண்டையில் தனுஷ் தலையிடும் தனுஷ் ரவுடிகளை துவம்சம் செய்கிறார். அதன்பிறகு  ஒதுங்கிப்போக நினைத்தாலும் ரவுடிகள் விடாமல் தனுஷை குறிவைக்கிறார்கள்.


இதற்க்கிடையில் MLA  பிரகாஷ்ராஜை ராஜ்கிரண் அடித்துவிட இருவருக்குமான பகை முற்றுகிறது. உடனடியாக பதவியை‌ ராஜினாமா செய்ய சொல்லும் ராஜ்கிரணை காலி செய்ய முடிவெடுக்கிறார் பிரகாஷ்ராஜ். வெளியூர் ஆட்களை கொண்டு தனுஷை கொலை செய்ய அனுப்பும் ஆட்களை கொண்டு 15 நாள் ஜெயிலுக்கு போகிறார் தனுஷ்.

பிரச்சனை இப்படியிருக்க பிரகாஷ்ராஜிக்கு மந்திரி பதவிக்கிடைக்கிறது. அந்த பதவியை வைத்து எப்படியாவது ராஜ்கிரணை ஒழித்துக்கட்ட முடிவெடுக்கிறார். அவரது வீட்டிற்கே சென்று சபதமும் செய்கிறார். இதைப்பார்த்த நாயகன் அமைச்சர் வீட்டுக்கு சென்று 30 நாளில் உன்னை கொள்வதாகவும் அப்படி செய்ய வில்லையென்றால் குடும்பத்துடன் உன் காலில் வந்து விழுவதாகவும் சபதம் செய்கிறார். இருவருக்குமான சந்திப்புகள் மற்றும் சண்டைகள் புதுபுது யுக்திகளை கையாண்டுள்ளார் இயக்குனர்.


கதையில் திருப்பமாக நாயகி தமன்னா தனுஷின் வீட்டிற்க்கு செல்கிறார். தன் தந்தை சாவுக்கு காரணமான ராஜ்கிரணை கொல்ல சதி செய்கிறார். வில்லன்களுக்கும் வேவு சொல்கிறார். இவ்வாறு நடக்கும் இரு தரப்பு சண்டையில் யார் ஜெயித்தது யார் யார் கொல்லப்பட்டார்கள் என ‌கிளைமாக்ஸ் காட்சிகள் ஓட்டம், துரத்தல், கத்தி, ரத்தம் என தனக்கே உண்டான பாணியில் பின்னியிருக்கிறார் ஹரி.

படத்தைப்பற்றி:
வேங்கைப்படம் 100 சதவீதம் அருவா டாடா சுமோ என ஹரியின் படமாகவே வந்திருக்கிறது. நாயகன் தனுஷ் ஆரம்பக்காட்சியில் தன் ஊர் நண்பனின் வேட்டியை அவிழ்த்துவிட்டு செல்லும் பக்கத்து ஊர்காரர்களின் பேன்டை உருவும் காட்சி முதல் கடைசிக்காட்சியில் பிரகாஷ்ராஜியுடன் மோதும் காட்சிவரை தனுக்கே உண்டான பாணியில் நல்ல ஸ்கோர் பண்ணியிருக்கிறார். அடிதடிச்சண்டைக்காட்சிகளில் நல்ல யாதார்த்தம் ‌தெரிகிறது. தன் தந்தை ராஜ்கிரணின் மகனாக தன் தந்தையை காக்க பல்வேறு  சூழ்ச்சிகளை எதிர்கொண்டு கைதட்ட வைக்கிறார்.


கடைசிக்காட்சிகளில் தனுஷின் கையில் அருவாளை எடுத்துக்கொடுத்து  கோவத்தில் அருவா எடுக்க கூடாது காவலுக்கு அருவா எடுக்கலாம் என்ற லாஜிக்கில் வில்லன்களை பழித்தீர்க்க அனுப்படும் காட்சிகளில் தியாட்டர் அதிர்கிறது.


அதிக அதட்டலுடன் ராஜ்கிரணும் பிரகாஷ்ராஜியும் படம் முழுக்க ஆக்கிரமித்துள்ளனர். ராஜ்கிரணின் கம்பீரம், பிரகாஷ்ராஜின் படப்படப்பு படம் முழுக்க சபாஷ் வாங்குகிறது.

தனுஷை தெரியாது போல நடிக்கும் தமன்னா முதல் எனக்கு இங்கே இப்பவே தாலிக்கட்டு என சொல்லும் தமன்னாவரை அதிக காட்சிகள் இல்லையென்றாலும் தோன்றும்  காட்சிகள் வரை அழகாக பண்ணியிருக்கிறார். ராஜ்கிரணை கொல்ல, செய்யும் சதியில் உடந்தையாக இருந்து பின்பு உண்மைநிலையறிந்து மனம்திருந்தி தனுசுடன் வந்துவிடும் தமன்னாவுக்கு இந்தப்படல் நல்ல பேரை எடுத்துக் கொடுக்கும். பாடல் காட்சிகளில் அழகாக தோன்றியிருக்கிறார்.


நகைச்சுவைக்கு கஞ்சா கருப்பு கூட்டாகவும் தனியாகவும் சிரிப்பலை‌யை ஏற்படுத்துகிறார். சைக்கிளுக்கு ஹான்டில்பார் பென்டு எடுக்கும் காட்சிகள் கைதட்ட வைக்கிறது.
படத்தில் ஊர்வசி, சார்லி, பொன்னம்பலம், ஒய்.ஜி.மகேந்திரன், பறவை முனியம்மா ஜஸ்வர்யா என நிறைய நடிகர்பட்டாளம் தன் பங்குக்கு அவர்களின் வேலையை செய்திருக்கிறது.


திரையரங்கில் பார்க்கும் போது அத்ததைப்பாடல்கலும் சூப்பர். ஆனால் பாடத்தில் வேத்தோடு பார்க்கும்போது பாடல்கள் வே‌கத்தை குறைப்பது போன்று தெரிகிறது.
பல்வேறு திருப்பங்களுடனும், நகைச்சுவையுடன்  கலந்து அடிதடிக்கு இனி என்னைவிட்டால் யாரும் இல்லையென நிருபித்திருக்கிறார் இயக்குனர் ஹரி. 


தேவிஸ்ரீ பிரசாத்தின் இசை படத்திற்க்கு ஏற்றார் போல் ஏற்ற இறக்கங்களுடன் சரியாக பொருந்தியிருக்கிறது. பாடல்கள் அருமை.

படம் தியாட்டரில் போதுமான வசூலை அள்ளும் என்பது என்னுடைய கருத்து.
 

திருவள்ளூர் நகரில் மீரா திரையறங்கில் படம் வெளிவந்துள்ளது.

யாரும் காதலை கொல்வதில்லை...


நாங்கள் உயிரோடு இருந்தோம்
ஊரில் ஊமையாக இருந்தது
எங்கள் காதல்...

நாங்கள் மரணித்துப்போனோம்
பின்பு உயிர்ப்பெற்றுக் கொண்டது
எங்கள்  காதல்...

லகத்தீரே...
நீங்கள் எல்லோரும் நல்லவர்கள் தான்
காதலர்களை கொல்கிறீர்களே தவிர
காதலை கொள்வதில்லை....


05 July, 2011

சன் பிக்சர்ஸ் நிர்வாகி கைது... திரை உலகினர் கொண்டாட்டம்...




சன் பிக்சர்ஸ், ஹன்ஸ் ராஜ் சக்சேனா, கலாநிதி மாறன் இவர்களை வானளாவப் புகழாத வாய்களே இல்லை எனும் அளவுக்கு இருந்தது நிலைமை, கடந்த 5 ஆண்டுகளில்.

எந்த சின்ன / பெரிய பட பூஜை அல்லது இசை வெளியீடாக இருந்தாலும் 'சாக்ஸ்' வந்தா நல்லாருக்கும் என்று கேட்பது வாடிக்கையாக இருந்தது.

ஆனால் இன்று அதே சினிமா உலகில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. மோசடி வழக்கில் சக்சேனா கைது செய்யப்பட்டதை அறிந்ததும், பிலிம்சேம்பர் எனப்படும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் நேற்று பட்டாசு வெடித்தும், இனிப்புகள் கொடுத்தும் கொண்டாடியுள்ளனர் சினிமாக்காரர்கள்.

மாருதி பிலிம்ஸ் ராதாகிருஷ்ணன், ஆர்.வி. கிரியேஷன்ஸ் வடிவேலு தலைமையில் சென்னை பிலிம்சேம்பர் வளாகத்தில் கூடிய திரைப்பட தயாரிப்பாளர்கள் பலர் இந்தக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


மேலும் பிலிம்சேம்பர் சார்பில் வெளியாகியுள்ள அறிக்கையில், "கடந்த 5 ஆண்டுகளாக சங்க பதவியை முறைகேடாக பிடித்தவர்கள், தயாரிப்பாளர்கள் நலனை காக்கத் தவறி குறிப்பிட்ட சேனல்களின் நலனில் அக்கறை செலுத்தி தமிழ் திரைப்பட துறையினரின் பலகோடி ரூபாய் நஷ்டத்திற்கு காரணமானவரும், தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களையும் வஞ்சித்தவருமான சன் டி.வி. தலைமை நிர்வாகி சக்சேனாவை கைதுசெய்ததன் மூலம் தமிழ்த்திரையுலகம் சுதந்திர காற்றை சுவாசிக்க செய்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோடானுகோடி நன்றி," என்று கூறியுள்ளனர்.

04 July, 2011

ஜெயலலிதாவிற்க்கும் இதற்க்கும் தொடர்பு இருக்கிறது..

தமிழ் திரைப்படத்தில் பாடல்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டாது. பாடல்கள் என்பது படத்தின் கதையை விளக்குவதாகவும், கதாநாயகன் கதாநாயகியின் கதாப்பாத்திரத்தை சொல்லுவதாகவும் இருக்கும். மேலும் காதலை, ஊடலை, புரட்சியை, சோகத்தை, உற்சாகத்தை என அத்தனையும் பாடல்கள் எடுத்துரைக்கிறது. ‌ஆனால் சில பாடல்கள் வாழ்க்கையையும், அதன் தத்துவத்தையும் எடுத்துக்கூறும்.

03 July, 2011

நான் எதுவாக விழ வேண்டும்..


ரிசல் காட்டில் விழுந்தேன்
தானியமாக முளைத்தேன்....

பூக்களின் இதழ்களில் விழுந்தேன்
நறுமணமாய் முளைத்தேன்...
 
 
டல் ‌ஆழத்தில் விழுந்தேன்
முத்துக்களாய் முளைத்தேன்...


 குயிலுக்குள் கருமையாய் விழுந்தேன்
ராகமாய் முளைத்தேன்...


செம்மொழி தமிழுக்குள் விழுந்தேன்
கவிதையாய் முளைத்தேன்...
 
துவாக விழுந்தால்
மனிதனாய் பிறப்பேன்....


02 July, 2011

அரசு கேபிள் டிவி ஜெயலலிதா வசம்... இனி சன் டிவிக்கு ஆப்பு...


அரசு கேபிள் டிவியை செயல்படுத்துவதின் முதல்கட்டமாக கேபிள் டிவி நிறுவனத்தை தன் கட்டுப்பாடில் இயங்கும் உள்துறைக்கு மாற்றியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இதையடுத்து அரசு கேபிள் டிவி பக்காவாக செயல்படும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

அரசு கேபிள் டிவியை இன்னும் 3 மாத காலத்தி்ற்குள் செயல்படுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா முனைப்பாக உள்ளார். இதன் முதல் கட்டமாக தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இருந்த கேபிள் டிவி நிறுவனத்தை தன் வசமுள்ள உள்துறைக்கு மாற்றியுள்ளார்.

கேபிள் டிவி நாட்டுடமையாக்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி கேபிள் டிவியை நாட்டுடமையாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. கடந்த அதிமுக ஆட்சியிலேயே கேபிள் டிவியை நாட்டுடமையாக்க முயன்றார். ஆனால் அது முடியாமல் போனது.

எனவே, இம்முறை கேபிள் டிவியை நாட்டுடமையாக்குவதில் முனைப்பாக உள்ளார்.

கடந்த 22-ம் தேதி அரசு கேபிள் டிவியை செயல்படுத்துவது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா கேபிள் ஆபரேட்டர்களை சந்தித்தார். அப்போது இன்னும் 3 மாதத்திற்குள் அரசு கேபிள் டிவி செயல்படத் துவங்கும் என்று அவர்களுக்கு வாக்குறுதியளித்தார். அதற்கு கேபிள் ஆபரேட்டர்கள் நன்றி தெரிவித்தனர்.

கேபிள் ஆபரேட்டர்களுக்கு அளித்த வாக்குறுதிபடி அரசு கேபிள் டிவியை 3 மாதத்திற்குள் துவங்க தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இதில் முதல்கட்டமாக அரசு கேபிள் டிவி நிறுவனத்தை தனது கட்டுப்பாட்டில் உள்ள உள்துறைக்கு மாற்றியுள்ளார்.

இவ்வாறு செய்ததன்மூலம் அரசு கேபி்ள் டிவி நிறுவனத்தின் செயல்பாடுகள் தனது நேரடிப் பார்வையில் இருக்கும். மேலும், அரசு கேபிள் டிவியைத் துவங்குகையில் ஏற்படும் இடையூறுகளை உள்துறையின் கீழ் உள்ள காவல் துறை மூலம் நீக்கி விடலாம் என்று அந்தத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசு கேபிள் டிவியை செயல்படுத்துவது குறித்து நேற்று தலைமை செயலகத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. இதற்கு தலைமைச் செயலாளர் தலைமை வகித்தார்.

கடந்த திமுக ஆட்சியில் தான் அரசு கேபிள் டிவி கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட கேபிள் ஆபரேட்டர்கள் உள்ளனர். மேலும் தஞ்சாவூர், கோவை, வேலூர், நெல்லை ஆகிய இடங்களில் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சார்பில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டன. இந்த அறைகள் ஒவ்வொன்றும் குறைந்தது ரூ. 100 கோடி செலவில் அமைக்கப்பட்டது.

இவ்வளவு செலவு செய்து அமைத்த கட்டுப்பாட்டு அறைகள் தற்போது இயங்காமல் உள்ளன. இவற்றை இயக்க குறைந்த பட்சம் ஒரு கட்டுப்பாட்டு அறைக்கு ரூ. 100 கோடி வீதம் ரூ. 400 கோடி செலவாகும். இது குறித்து அறிவிப்பு நிதி நிலை அறிக்கையிலோ அல்லது அதற்கு முன்னதாகவோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (தட்ஸ் தமிழ்)

முதல்வர் அளித்த வாக்குறுதிபடி 3 மாதத்திற்குள் அரசு கேபிள் டிவி செயல்படத் துவங்கும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த திட்டத்தின் மூலம் இனி கட்டண சேனல்கள் உள்பட அனைத்து வகையான சேனல்களையும் மக்கள் மிகக்குறைந்த விலையில் கண்டு களிக்கலாம் என்று கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தெரிவித்தனர்.

இனி எந்த ஒரு தனிப்பட்ட கேபிள் டிவிக்கள் அதிக லாபம் சம்பாதிக்க முடியாமல் முட்டுக்கட்டை இடப்படும் என்பதில் கொஞ்சமும் சந்தேகம் இல்லை...
Related Posts Plugin for WordPress, Blogger...