கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

28 February, 2011

இனி பூமி உன்னைச் சுற்றும்..


விடியல்கள் என்னவோ நாளுக்கொரு விதமாய்
புதிதாகத்தான் பூக்கிறது
நாம்தான் பழைய போர்வைகளை
களைந்தெடுக்கவே பயந்துக் கொண்டிருக்கிறோம்...

ந்திய பெருங்கடலையே 
தன் இளம் சிறகால் கடந்து விடுகிறது 
தன் வம்சம் வளர்க்க பறவைக்கூட்டம்...

நாரால் முடிந்தபின்னும் வாடும் வரை
சிரித்துக் கொண்டுதான் இருக்கிறது பூக்கள்...

மேகத்தையே பார்க்காத 
பாலை நிலத்தில் கூட காற்றில் நீர்யெடுத்து 
கண் சிமிட்டிக் கொண்டுதான் இருக்கிறது 
கற்றாழை..

ண்டாண்டாய் தேய்ந்துக் கொண்டிருந்தாலும்
வளர்வதற்கான வழியை 
தேடிக் எடுக்கிறது பிறை நிலா..

க்கும் எறும்புக்கும் கூட வாழ்க்கையிருக்கிறது
நாம் மனிதர்களாயிற்றே...

திர்காலம் குறித்த கவலையில் 
நிகழ்காலத்தை ஏன் இழக்க வேண்டும்..

னி என்னதான் ஆகப்போகிறது 
உச்சிகளையே குறி வையுங்கள்
 
ங்கள் சிந்தனையில் ஓடும்
இரவுக்கான கனவுகளும்..
பகலுக்கான கனவுகளும்...
இந்த அண்டம் தாண்டி பேரண்டம் எட்டட்டும்
 
பிறகென்ன
சூரியனுக்கு விண்ணப்பமிடும் பூமி 
தினமும் உண்னைச்சுற்றிவர...


இன்று பிப்ரவரி 28 இந்திய அறிவியல் தினம்
  நாளை மார்ச் 1 இளைஞர் எழுச்சி தினம்
இளைஞர்களே எழுச்சிப் பெருங்கள்..நாளை உலகம் உங்கள் கையில்

கவிதை பிடித்திருந்தால் ஒரு கருத்துச் சொல்லுங்க...

26 February, 2011

பத்துக்குபத்து - கோடம்பாக்கம் கார்னர் (26-02-2011)

ரஜினிக்கு பாராட்டு

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு இந்திப்படமாக உருவாகிறது. அது சம்பந்தமாக சில்க் நடித்த படக்காட்சிகளை நஸ்ருதீன் ஷாவுக்கு போட்டுக் காட்டினார்கள். 

ரஜினியுடன் சில்க் ஆடிய நடனக் காட்சிகள் அந்த கலெக்ஷனில் அதிகமாக இடம் பெற்றிருந்தன. ரஜினியின் அசைவுகளை உன்னிப்பாக கவனித்த நஸ்ருதீன்ஷா கைதட்டி உற்சாகமானாராம். ‘நான் இதுவரை ரஜினி படங்களைப் பார்க்கவில்லை. எனக்காக ‘ரோபோ’ படம் பார்க்க ஏற்பாடு செய்யுங்கள் அவரது நடிப்பு எனக்கு உதவி கரமாக இருக்கும்’ என்று சொன்னதோடு, ரஜினியைப் பற்றி வெகுவாகப் பாராட்டிப் பேசினாராம். 

 ***********************************************************************************
மீண்டும் இயக்கம் : ரேவதி
  
‘மித்ர மை ஃப்ரண்ட்’ படத்தை இயக்கிய ரேவதி, மீண்டும் டைரக்ஷன் களத்தில் குதிக்க தயாராகிவிட்டார். முழு ஸ்க்ரிப்ட்டையும் முடித்து விட்ட அவர், அந்தப் படத்தை இந்தியில் எடுக்கத் திட்டமிட்டுள்ளார். அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதே கதை. மேலும் படத்தில் பணிப்புரிய தொழில்நுட்ப கலைஞர்களையும் தேர்வு செய்து வருகிறார் ரேவதி. 

 ***********************************************************************************
 கிரிக்கெட்டால் சினிமா பாதிப்பு

கிரிக்கெட் திருவிழா தொடங்கி சில நாட்களே ஆன நிலையில், தமிழ் திரையுலகம் கதி கலங்கியுள்ளது. லீக் ஆட்டம் நடக்கும் போது திரையரங்குகள் காற்று வாங்க ஆரம்பித்துவிட்டன. இனி வரவிருக்கும் கால் இறுதி  மற்றும் அரை இறுதி ஆட்டத்திற்குள் என்ன நடக்குமோ என அதிர்ச்சியில் திரையுலகம் மிதந்து வருகிறது. 

தற்போது வெளி வந்திருக்கும் படங்களான, பயணம், யுத்தம் செய் போன்றவற்றுக்குக் கூட பகல் காட்சிக்கு 50 பேர் வருவதே அதிசயமாகிவிட்டதாம். குறிப்பாக பகலிரவு ஆட்டம் என்றால் திரையரங்கு எல்லாம் காத்து வாங்குகிறதாம். இந்த நிலையை எதிர்ப்பார்த்தே, 7 முக்கியப் படங்களின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 8-க்குப் பிறகு வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 2-ம் தேதி உலகக் கோப்பைப் போட்டிகள் முடிவடைகின்றன. பாலாவின் அவன் இவன் கூட உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு, ஏப்ரல் 8-ம் தேதிதான் ரிலீஸ் செய்யப்படுகிறது. 

***********************************************************************************
படப் ‌பெயர் குழப்பத்தில் விஜய்..!
இப்போது கோலிவுட்டில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம், விஜய் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்கும் படம். இந்த படத்திற்கு "தெய்வமகன்" என்று பெயர் வைத்தனர், சில காரணத்தால் அந்த பெயர் நீக்கப்பட்டுவிட்டது. அதன் பின் "பிதா" என்றனர், அதற்க்கு

இயக்குனர் விஜய் கூறும் பதில், இன்னும் பெயர் முடிவு செய்யப்படவில்லை என்கிறார். விரைவில் படத்தின் தலைப்பு வெளியாகும் என்று கூறும் விஜய், இந்த படத்தின் பதிவு இப்போது சென்னையில் நடைபெற்று வருகிறது, மேலும் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் நிரவ் ஷாவும் , ஜி . வி. பிரகாஷும் படத்திற்கு பக்க பலம்  அதுமட்டுமின்றி சந்தானம் அவர் திறமையை சற்றும் குறையாமல் வெளிப்படுத்தி இருக்கிறார், என்றார் விஜய்.

***********************************************************************************
பாலிவுட்டுக்கு செல்கிறார் பாலா
தேசிய விருது பெற்ற இயக்குநர் பாலாவின் அவன் இவன் ஷூட்டிங் படுவேகமாக நடந்து வருகிறது. அவன் இவனில் விஷால், ஆர்யா நடிக்கின்றனர். ஹீரோயின் ஜனனி ஐயர். விஷால் இந்தப் படத்தில் திருநங்கையாக நடிக்கிறார். அவன் இவனுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 

இந்நிலையில் இந்த படத்துக்கு இந்தியில் படம் பண்ண பாலா திட்டமிட்டுள்ளாராம். பாலா தற்போது இந்தி படித்து வருகிறார். இந்தியில் படிக்க, எழுத, பேச எப்போது முடிகிறதோ அப்போது இந்திப் படத்தை எடுப்பேன் என தெ‌ரிவித்துள்ளா 

***********************************************************************************  
ரீ-மிக்ஸ் கண்டிப்பாக கிடையாது
மிஷ்கினின் முதலிரண்டுப் படங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது சுந்தர் சி.பாபுவின் இசை என்றால் மிகையில்லை. தூங்கா நகரமும் அவர் புகழ் சொல்லும்.
கோடம்பாக்கத்தின் பிஸியான இசையமைப்பாளர்களில் ஒருவராக உயர்ந்த பிறகும் தனக்கென சில கொள்கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார் இவர். அதில் முக்கியமானது வேறொருவ‌ரின் பாடலை ‌ீமிக்ஸ் செய்ய மாட்டேன்.
ீமிக்ஸ் இல்லையென்றால் படமே இல்லை என்ற நிலையில்தான் தமிழ் திரையுலகம் உள்ளது. மங்காத்தா முதல் பாலாவின் அவன் இவன் வரை எல்லாப் படங்களிலும் ‌‌ரீமிக்ஸ் பாடல் உள்ளது. ஆனாலும் சுந்தர் சி.பாபுக்கு மட்டும் இது அலர்‌ஜி.
என்னால் சிறப்பான டியூன்கள் போட முடியும் எனும்போது அடுத்தவர்களின் டியூனை நான் ஏன் பயன்படுத்த வேண்டும் என்பது இவரது கேள்வி. இதுவரை இருந்தது போலவே இனியும் நோ ‌‌ீமிக்ஸ் என்றுதான் திரையில் தொடரப் போகிறாராம். கீப் இட் அப்.  

***********************************************************************************  
‌எனக்கு பிடித்த நாட்கள்

69 பிலிம்ஸ் இண்டர் நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் புதியபடம் “எனக்கு பிடித்த நாட்கள்”. இப்படத்துக்கு கே. பன்னீர்ச்செல்வம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
 இவர் ஏற்கனவே தொ(ல்)லைபேசி படத்தை டைரக்டு செய்தவர். நாயகனாக நியூயார்க் பிலிம் அகாடமியில் நடிப்பி பயிற்சி பெற்ற கேஸ்ட்ரோ நடிக்கிறார். நாயகியாக ஜெயதி நடிக்கிறார்.

மகேஷ்வர், ஜான்ஸன், சிவதாஸ், கிளாமர் மாலி ஆகியோரும் அறிமுகமாகின்றனர். மேலும் நான்கு புதுமுக நாயகர்களுக்கான தேர்வு நடக்கிறது. காலேஜ் முடித்து வெளியில் வரும் நண்பர்கள் சில நாட்களை சந்தோஷமாக கழிக்க ஊர் சுற்றுகின்றனர்.

அவர்கள் மத்தியில் நாயகி குறுக்கிட்டு வில்லத்தனம் செய்கிறார். இதனால் ஒவ் வொரு நாளும் பிடிக்காத நாட்களாகிறது. அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பது கதை.

ஒளிப்பதிவு: சீனு ஆதித்யா, இசை: ஜி.எஸ். ஷாந்தன், எடிட்டிங்: மகாவிஷ்ணு, பாடல்: நா. முத்துக்குமார், அண்ணாமலை, நந்தலாலா நடனம்: எஸ்.எல். பாலாஜி, சதீஷ், சண்டைப்பயிற்சி: பவர் பாஸ்ட், தயாரிப்பு: எஸ். சிவம், எச். லியாகத், தயாரிப்பு நிர்வாகம்: பாலா. 
*********************************************************************************** 
ரஜினிக்கு தங்கை வேடம் வேண்டாம்
ராணா படத்தில் ரஜினிக்கு தங்கை வேடம் என்பதால் நடிக்காமல் விட்டுவிட்டேன் என நடிகை மாதுரி தீக்ஷித் கூறியுள்ளார்.

பாலிவுட்டின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்தவர் மாதுரி தீட்சித். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை படிப்படியாக குறைத்துக்கொண்ட அவர், தற்போது தனக்குப் பிடித்தமான வேடங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

இந்தநிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிப்பதற்கு வந்த வாய்ப்பை அவர் ஏற்கவில்லை. 

இதுகுறித்து டுவிட்டர் இணைய தளத்தில் மாதுரி தீட்சித் கூறியதாவது: ராணா படத்தில் ரஜினிகாந்துடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் அது அவருடைய தங்கை வேடம். அந்த வேடம் எனக்கு ஏற்றதாக இல்லாததால் மறுத்து விட்டேன்.

ரஜினிகாந்துடன் சேர்ந்து நடிப்பதை விரும்புகிறேன். ஆனால் சரியான வேடத்துக்காக காத்திருக்கிறேன் என்றார் அவர்.

*********************************************************************************** 
இசை அமைப்பாளர்கள் சங்க பொன்வி‌ழா


திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கப் பொன்விழா, சென்னையில் அடுத்த மாதம் 5-ம் தேதி நடக்கிறது. இதுபற்றி இச்சங்கத்தின் தலைவர் கல்யாணசுந்தரம், செயலாளர் சங்கரன், பொருளாளர் ராஜா ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் பொன்விழா நிகழ்ச்சி மார்ச் 5-ம் தேதி காலை தொடங்கி இரவுவரை நடக்கிறது. 

விழாவில் 50 இசையமைப்பாளர்கள், பின்னணி பாடகர், பாடகிகள், 250 இசைக்கலைஞர்கள், இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் கலந்துகொள்வார்கள். எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி, இளையராஜா முதல் ஜி.வி.பிரகாஷ்குமார் வரை அனைத்து இசையமைப்பாளர்களும் இதில் கலந்து கொள்கிறார்கள். இவ்விழாவுக்காக, 7 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. விழா நடைபெறும் இடம் இன்னும் முடிவாகவில்லை. 

*********************************************************************************** 
கதக்களி பயிற்சியில் டாப்ஸி



“வந்தான் வென்றான்” படம் பற்றி இயக்குனர் கண்ணன் கூறியது: பிடிவாதமான ஒரு வாலிபனும் இளம்பெண்ணும் தங்கள் லட்சியங்களை, வாழ்க்கையில் எதையுமே இழக்காமல் எப்படி அடைக்கின்றனர் என்பதுதான் கரு.  ஜீவா, டாப்ஸி ஜோடி. இதன் ஷூட்டிங் இப்போது மைசூர் மேல்கோட்டை காட்டுப் பகுதியில் நடக்கிறது. இதற்கு வனத்துறையிடம் சிறப்பு அனுமதி பெற்றிருக்கிறோம். மரம் வெட்டக்கூடாது, 

தீ மூட்டக்கூடாது என்று நிறைய நிபந்தனைகளுடன் ஷூட்டிங் நடக்கிறது. இதற்காக கேரளாவிலிருந்து பெண் நடன கலைஞர்கள் அடங்கிய கதகளி மற்றும் களறி குழுவினர் 20 பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர். தினேஷ் மாஸ்டர் அமைக்கும் இந்த நடன காட்சி பேசப்படுவதுடன், படத்துக்கு ஹைலைட்டாக இருக்கும். 


கேரள பெண்கள் ஆடும் பாரம்பரிய நடனமும் இடம்பெறுவதால், அதற்காக பயிற்சி பெற கேரளா செல்கிறார் ஹீரோயின் டாப்ஸி. தகுதி வாய்ந்த ஆசிரியரிடம் முறைப்படி கதகளி பயிற்சி பெற்ற பிறகே ஷூட்டிங்கில் பங்கேற்கிறார். இதையடுத்து மும்பையில் பாந்த்ரா, ஒராளி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய மேம்பாலம் அருகில் செட் அமைத்து ஷூட்டிங் நடக்கிறது.  

***********************************************************************************
நல்லாயிருந்தா சத்தமா வாழ்த்துங்க..
இல்லாயா அமைதியா திட்டிட்டு போங்க.. இது எப்படி இருக்கு..

24 February, 2011

இரவில் உன் வீடு தேடி..


ராரின் ‌இமைகள மூடிக் கொண்ட 
ஒரு கருப்பு இரவில்

திர்ப்புகளின் சுவர்தாண்டி
உன் தெருவுக்குள் குதித்த போது...

தெரு விளக்கின் வெளிச்சத்தில்
சாத்திக் கிடந்த வீட்டின் முன்
பூத்துக் குலுங்கின நீ போட்ட கோளம்.......
 
ன்னும் புன்னகையோடுதான் இருக்கிறது
நீ.... நிலவொளியில் காயவைத்த மல்லிகைச்சரம்
உன் வீட்டு கூரை மீது...

வீட்டு முற்றத்தில் துளசி செடியின் மீது
வெளிச்சத்தை உமிழ்ந்துக் கொண்டு இருந்தது
மின்மினிப் பூச்சிகள்...

டிக்கடி என்னை பயமுறுத்தி கொண்டிருந்தது
பனைமரத்தில் குடிக்கொண்டிருந்த
கோட்டான்கள்...

விடிய விடிய இவைகளை ரசித்த பின்
அனைத்திடமும் சொல்லி விட்டு வந்தேன்
 
ன்னை காணாத சோகத்தையும்
உனக்கான காதலையும்..

கவிதை பிடித்திருந்தால் ஏதாவது சொல்லிட்டு போங்க..
கவிதை வீதிக்கு வந்த முகம் தெரியாத உங்களுக்கு நன்றி...

23 February, 2011

கவிதையின் நிறம் சிகப்பு...




வெறுமை மட்டும் தான்
கவிஞர்களை கவிபாட வைக்கிறது,,,
 
றுமை கூட்டில் அமர்ந்து உறங்காமல்
எந்த கவிஞனும் முழுமை ‌பெற்றதில்லை,,,

பாடிய கவிதைகளிலெல்லாம்
அவனுடைய வலி தெரியும்,,,,
 
ழுதிய கவிதைகளிலெல்லாம்
அவனுடைய பசி தெரியும்,,,

டித்த கவிதைகளில் 
வண்ணம் இருக்கும்
நாங்கள் இருப்பதோ 

இன்னும் பாலைவனம்தான்,,,
ரோஜாவை பற்றி
நான் வர்ணித்த போது
என் அருகில் இருந்தது
கள்ளிக் காடுகளே,,,
 
ல‌கே,,,!
எனக்கு ஒரு ‌வேளை உணவில்லையா
ப‌ரவாயில்லை,,,,!
நான் கவிதை எழுதிவிட்டு போகிறேன் போ,,,,


இந்தக்கவிதை  என்னுடைய கவிதை நூலான ”என் பேர் பிரம்மன்”    நூலின் பின் அட்டை அலங்கரித்தவை.


 முந்தைய  பதிவு :

எப்படி பேர் வைச்சிருக்கங்க பாரு..

அன்பாக வாசகர்களே..
வந்துப் போனதற்கான  தடயங்களை இங்கே விட்டுச் செல்லுங்கள்..

அதுதான் என் கவிதைக்கு கிடைத்த கௌரவம்
 

22 February, 2011

எப்படி பேர் வைச்சிருக்கங்க பாரு..


“ஏங்க... நம்ம பிள்ளைக்கு என்ன  பெயர் வைக்கலாம்?”
 
“‌அதுதான் யோசிச்சிக்கிட்டிருக்கேன்.”
 
“எவ்வளவு நாள் யோசிப்பீங்க.”
 
“அவசரப்படதே. குழந்தை உளவியல் நிபுணர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?”
 
“என்ன சொல்றாங்க?”
 
“சில வகைப் பெயர்களாலே குழந்தையின் ம‌னோபாவம், ஆளுமை மாறிப் போயிடுதாம்...”
 
“அது எப்படி?”
 

“ரொம்பவும்  பழக்கத்துலே உள்ள பொதுவான பெயர்களைச் சூட்டினா குழந்தை தனித்தன்மையை இழந்துடும்ங்கறாங்க..! அதே மாதிரி ஆணா பெண்ணான்னு கண்டுபிடிக்க முடியாத  பேரா வச்சுடறாங்க பருங்க...  அப்படி வைச்சா அவங்க பாலினத் தனித்தன்மை குன்றிவிடும். அப்படிங்கறாங்க!”
 
“பேர் வைக்கறதுலேயும் இவ்வளவு விஷயம் இருக்கா..?”

”ஆமாம்... சினிமாவுலே வர்ற காமெடி நடிகர்கள்... பாத்திரங்களின் பெயர்கள்... வில்லன்கள் பெயர்கள்... அப்புறம்.. மதம்.. சாதி.. இனம்.. இப்படி இனம் காட்டிப்பிரிக்கும் பெயர்கள்.. இதையெல்லாம் வைக்க வேண்டாங்கறது நிபுணர்களின் ஆலோசனை. உச்சரிக்கவும் எழுதவும் சில பெயர்கள் ரொம்பக் கடினமா இருக்கும்... இதெல்லாம் வேண்டாங்கறாங்க!”
 
”ஓஹோ.. இவ்வளவும் யோசிச்சிக்கிட்டுதான் இப்படி உக்கார்ந்திருக்கீங்களா?”
 
“பின்னே... என்ன சும்மாவா உக்கார்ந்திருக்கேன்? இன்னோரு முக்கியமான விஷயம்?”
 
“எனனது..”
 
“சிலருடைய பெயரை செல்லமா சுருக்கி கூப்பிட்டா விபரீதமா  போயிடும்.. என்னோட பேர் மாதிரி...! அப்படிப்பட்ட பெயரையும் தவிர்க்கணும்..!”
 
“இருந்தாலும் உங்க  பேரைச் சுருக்கி செல்லமா கூப்பிடறதுதான் எனக்கு ரொம்பப் பிடிக்குது..!”
 
“நீ அப்படிக் கூப்பிடறப் போவெல்லாம் எனக்குக் கோபம் வரும்... ஆனா... உம் பேர்லே இல்லை....!”
 
“வேற யார் பேர்லே?”
 
“ மாடசாமி-ன்னு எனக்கு பேர் வச்ச எங்க அப்பா பேர்லே!”
 

நன்றி : தென்கச்சி கோ. சுவாமிநாதன்


உண்மைதாங்க குழைந்தை பேர் வைக்கிறப்ப சில பெற்றோர்கள் அதிகம் யோசிப்பதில்லை. அப்போது என்ன பேர் அதிக பிரபலமாக இருக்கிறதோ அதை வைத்து விடுகிறார்கள்.. (தற்போது எங்கள் பள்ளியில் ஒரு வகுப்புக்கு 5 விஜய் 4 அஜித், 2 தனுஷ், 4 திரிஷா.)  என சினிமா நட்சத்திரங்களின் பெயர்கள்தான் அதிக இருக்கிறது..

தற்போது வைக்கும் பெயர் அந்த குழந்தை வளர்ந்து பெரியவனாகி, அந்த குழந்தையின் வாழ்நாள் முழுமைக்கும் அந்த பெயர் பெருந்தகூடியாதா? என்று கொஞ்சம் கூட யோசிப்பதில்லை...

இன்னும் தற்போது.. நாகரீகம் வளர்ந்த போது கூட, தங்களுடைய குல தெய்வம் பெயர்கள், தங்களுடைய முதாதையர்கள் பெயர்கள், என வைத்து எதிர் காலத்தில் அவர்களை முகம் சுளிக்க வைத்து விடுகிறார்கள்.. ஒரு சபை நடுவே தன்னுடைய பெயரை உரக்க சொல்லக் கூட நிறைய பேர் தயங்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்..

தற்போது நியூமரலாஜி என்ற பெயரில் இருக்கும் பெயரை சுருக்குவது.. நீட்டுவது.. உடைப்பது.. என்று ஒரு குருப் இரங்கிவிட்டது..

சிலர் தாம் ‌எப்படியாவது பிரபலமாக வேண்டும் என்ற  நோக்கில் நன்றாக இருக்கும் பெயரைக்கூட புனைப் பெயரில் என்று  தன்பேருடன் சேர்த்துக் கொள்கிறார்கள் (உதா. பன்னிகுட்டி, கோமாளி,  அஞ்சா சிங்கம்,  ரொம்ப நல்லவன்.. பட்டாபட்டி.. டெரர்.. ‌சேட்டைக்காரன்.. ஓட்டவடை) இப்படியெல்லாம் பெமஸ் ஆகராங்க.... (இவங்க நம்மாளுஙக..)

எது எப்படியோ நம்பபேர  கேட்ட நாலு பேரு அதிரனும்.. இல்லன்னா வாழ்த்தனும்... அது சரி.. உங்க பேரை சொல்லிட்டு போங்க..

இதை படிக்கு அன்பு வாசகர்களே.. பதிவர்களே.
இது நல்ல பதிவு என்று நீங்கள் நினைத்தால் மட்டும் 
வாக்களியுங்கள்.. பின்னுட்டம் இருங்கள்.. நன்றி..

முந்தைய பதிவு :   இவங்க ஜெயிக்க மாட்டாங்க..

21 February, 2011

இவங்க ஜெயிக்க மாட்டாங்க..


கிரிக்கெட் பிரியர்களின் மத்தியில் 
நான்  நினைத்ததை 
சத்தமாகத்தான் கூறினேன்
 
ந்தியா தோற்று விடும்” 
என்று..
 
சையாடிய வார்த்தைகளை வாங்கிக் கொண்டது
வெரும் இருட்டை மட்டுமே 
சுமக்கும் என் இதயம்...

பூவா? ‌ தலையா? போட்டது முதல்
பரபரப்பானது அவரவர் வீடுகளின் 
வரவேற்பறைகள்.
 
திரணியினர் வீசுகின்ற பந்தை 
எதிர்கொள்ளும் வீரர்களுக்கு 
இங்கே படபடப்புகள்.. பாராட்டுக்கள்..
 
ந்தியா தோற்று விடும்” என்று சொன்னதற்காக 
யார் வீட்டிலும் சேர்க்கப்படாமல் 
நானும் ஓடிக்கொண்டிருந்தேன்..

ரபரப்புகள் பற்றிக் கொண்டிருந்தும்
அபார வெற்றிக் கண்டது 
இந்திய வேங்கைகள்...

ரும் நாடும் 
கொண்டாடி மகிழ்ந்தது..

ப்போது...
என் கருவிழிகளின் ஓரத்தில் 
கசிகின்ற நீர்துளிகளை துடைத்துக் கொண்டு
‌எனக்குள்ளே சொல்லத் தொடங்கினேன்..
 
யாருக்கும் தெரியும் 
நான் நினைத்த எதுவும் 
நடக்க  போவதில்லை என்று...

அன்பு வாசகர்களே.. எதிர்மறையான கருத்தில் 
கவிதை சொன்னதற்க்கு மன்னிக்கவும்..

 

இந்திய அணிக்கு இந்த கவிதை சமர்ப்பணம்...
நம் அணி உலக கோப்பையை வெல்ல வாழ்த்துவோம்...


முந்தைய பதிவு : ஒரு மலரின் மரண அறிக்கை..


ஒரு கருத்து சொல்லிட்டு போங்க...
கீழே ஸ்கோர் போர்டு இருக்கு..  ஆளுக்கு ஒரு பவுணடரி அடிங்க...
எதாவது சொல்லிட்டு போங்க..


19 February, 2011

ஒரு மலரின் மரண அறிக்கை..




வு இறக்கமற்று என்னை பறித்துச்
சூடிக் கொண்டவளே..

ந்நேரம் 
என் காம்பின்  கண்ணீரைப் 
பக்கத்து பூக்கள் துடைத்திருக்கும்..
 
ழுது கொண்டிருக்கும் 
என்னை தாங்கிய காம்புகளுக்கு 
ஆறுதல் சொல்லியிருக்கும் 
அரும்புகள்...

வாசிக்க வந்த கவிதையோடு
நான் காணாத ஏக்கத்தில்
கசந்து போய் திரும்பியிருக்கும்
வண்டுகள்...

லைகோத வந்து
நான் இல்லாத இடத்தை 
தடவிப்பார்த்து தவித்திருக்கும்
தென்றல்...

வெடுக் கொன்று பறித்த 
உன் விரல்களுக்கு தெரியாது 
என் வலி..

லித்துக் கொண்டே 
உன்னை அலங்கரிக்கிறது
என் மரணம்...



என் கவிதை எதிர் பார்ப்பது உங்கள் கருத்தையே..
ஏதாவது சொல்லிட்டு போங்க...

18 February, 2011

நடுநிசி நாய்கள் - திரைவிமர்சனம்

சிறு வயதில் குழந்தைகளை பாதிக்கும் சில சம்பவங்கள் அவர்களின் வாழ்க்கையில் எவ்வித மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. அந்த சம்பவங்களால் அவர்களது மனநிலை எந்தவிதம் பாதிப்படைகிறது  என்பதை மைய கருத்தை  கொண்டு,  ஒரு சிறுவனின் சிறு வயதில் எற்பட்ட பதிப்பு அவனது மனநிலையை எவ்வாறு பாதித்தது. அந்த பாதிப்பால் சமூகத்திற்கு ஏற்படும் இன்னல்கள் என்ன என்பதை ஒரு சில கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு கௌதம் மேனன் மிரட்டலாக சொல்லியிருக்கிற படம் தான் நடுநிசி நாய்கள்...

 
மும்பையில் அம்மாவையிழந்த  6 வயது சிறுவன் சமர். அவனுடைய தந்தை தன்னுடைய வீட்டில் பல பெண்களுடன் உல்லாச இருந்துக் கொண்டு அதை சிறுவனை பார்க்க வைக்கிறார்.. அவனுக்கு 10 வயது ஆகும் போது.. அந்த பெண்களுடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்துகிறார். இதனை வெறுத்து பயப்படும் அந்த சிறுவனை பக்கத்து வீட்டு மீனாட்சி  என்னும் இளம் பெண் காப்பாற்றி தன்னுடன் தங்க வைத்து வளர்க்கிறார். சமர் வளர வளர அவனது சிறு வயது சம்பவங்கள் அவனை ஒரு மன நோயாளியாக மாற்றி அடைக்கலம் கொடுத்த மீனாட்சியையை காதலிக்கவும் கற்பழிக்கவும் தூண்டுகிறது.. (செல்லமே.. பரத் போல..) இதை உணர்ந்த மீனாட்சி தனது காதலரை திருமணம் செய்ய முடிவெடுத்து திருமணமும் செய்துக் கொள்கிறார்.. ஆனால் முதலிரவில் அவனை கொன்று அந்த அறையையே கொலுத்தி எரிக்கிறார். அதில் அவன் இறக்க மீனாட்சி உடல் முழுவதும் தீக்காயங்களுடன் தப்பிக்கிறார்...

அவள் மேல் கொண்ட காதலால் மும்பையிருந்து சென்னை வந்து ஒரு பெரிய பங்களாவில் தங்குகிறார்கள். உடல் முழுவதும்  தீத்தழும்புகளுடன் ஒரே பங்களாவில் வசிக்கிறார்கள்.. தனக்கு ஒரு துணை தேவை என தீர்மானித்து வீராவாக மாறும் சமர்.. தனக்கு சிறு வயதில் அறிமுகமான சிலபெண்களை தன் வீட்டிற்கு அழைத்து வந்து  தங்குகிறார் ஆனால் இதை மீனாட்சி விரும்பாததால் கொலை செய்கிறார்.. சில பெண்களை தனி அறையில் பூட்டி வைத்து சித்ரவதை செய்கிறார்.

தன்னுடன் 10 வகுப்பு பயின்ற சமீரா ரெட்டியை சந்தித்து தன்னுடை காதலை சொல்ல முயலும் போது.. அவர் வெறு ஒருவருடன் காதல் என தெரிய  இரவில் திரைப்படம் பார்க்க வரும் அவனையும் கொன்று  விட்டு சமீராவிடம் காதலை சொல்லி அதை அவள் ஏற்காத போது கொலை செய்ய முயற்சித்து பின் அவளை கடத்தி தன்னுடை வீட்டில் வைக்கிறார்...

தொடர் சம்பவத்திற்கு பிறகு போலிஸ் கைது செய்யும்  விசாரிக்கும் போது அவன் சொல்லும கதை படம் பார்க்கு அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்துகிறது....

படத்தின் நாயகன் வீரா.. முதல் பாதியில் சமராகவும். பிற்பாதியில் வீராவாகவும் வந்து மிரட்டுகிறார். சிறு வயதில் மனதில் ஏற்படும் பாதிப்பு அவனை ஒரு கொலை காரணாக மாற்றுகிறது. தனக்கு அடைக்கலம் கொடுக்கும் மீனாட்சி காதலிப்பதாக சொல்லும் போது அவர் சமராகவும்.. அவரை பரிவோடு பார்க்கும் பேர்து வீராவாகவும் இரு வேறு நடிப்பில் அசத்தியிருக்கிறார் ..  நடிகர் வீரா
 
படத்தில் இறுதிகட்ட காட்சிகள் ஒரே இரவில் படமாக்கப்படடுள்ளது. கடைசி 30 நிமிட காட்சிகள் மழை, போலீஸ் துப்பாக்கி சூடு, நாய்கள் துரத்தல், என மிரட்டலாக இருக்கிறது.. கடைசி காட்சிகளில்  நாயகன் தன்னுடைய உடலில் சமர் மற்றும் வீரா என்ற இரு கதாபாத்திரங்களை உள்வாங்கி நடித்திருக்கிறார். (கிட்டதட்ட அந்நியன் விக்ரம் இறுதி காட்சி போல்) தீக்காயங்களுடன் இருந்த மீனாட்சி இறந்து விட அவர் இருப்பது போன்று நடந்துக் கொள்ளும் வீரா கடைசி காட்சிகளில் பாராட்டைப் பெறுவார்.. பரபரப்புகளுக்கு மத்தியில் போலீஸ் அவரை பிடித்து..... சம்பவங்களை விவரித்தல் என இறுதி கட்ட காட்சிகளை அமர்களப்படுத்தியிருக்கிறார்.

சமீரா ரெட்டி மாடர்ன் பெண்ணாக வந்து வீராவிடம்  மாட்டிக் கொண்டு..  அவரது மிரட்டலையும் அவரோடு சண்டையிட்டுவதும், தன் காதலன் கொள்ளப்பட்டிருப்பதை கண்டு பயப்படும் போதும், தனி அறையில் பூட்டி வைக்கும் போது ஏற்கனவே இரண்டு பேர் அடைக்கப்பட்டு இருப்பதை பார்க்கும் போதும்.. நாயுடன் மாட்டிக் கொண்டு நடுங்கும் போதும் பயத்தை கண்களில் வைத்து மிகவும்  அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்..

பாடல் இல்லை.. பின்னணி இசை பராயில்லை.. இறுதியில் அமர்களப்படுத்தியிருக்கிறார் சிவக்குமார். மனோஜ்ன் ஒளிப்பதிவு மிரட்டலாக இருக்கிறது... இறுதியில் சமூக சிந்தனையை சொல்லி சபாஷ் வாங்கியிருக்கிறார் இயக்குனர்.. படத்தில் சில காட்சிகள் நெருட வைக்கிறது.. (கண்டிப்பாக குடும்பத்துடன் பார்க்க முடியாது.)

குறைந்த பட்ஜெட்டில் படத்தை எடுத்து அதில் ஒரு சமுக கருத்தை சொல்லி ஜெயித்திருக்கிறார் கௌதம் வாசுதேவ மேனன். 


ஹலோ பாஸ் நீங்க வந்து இப்படி போயிட்டா எப்படி
ஏதாவது ஒரு கருத்து சொல்லிட்டு போங்க...
அப்படியே ஏதாவது ஒரு கவிதை படிச்சிட்டு போங்க..

16 February, 2011

வேண்டாம் அந்த வாழ்க்கை...!


முள்ளில் பட்டு இத‌ழ் கிழிந்தாலும் 
முகம் சுளிப்பதில்லை 
ரோஜாக்கள்..

ல் வீசி காயப்படுத்தினாலும்  
கண்ணீர் சிந்துவதில்லை 
கனிமரங்கள்..

கோடி முத்தங்களை 
உளியோடு பகிராமல்  
எந்தப்பாறையும் தெய்வமாவதில்லை..

சுமந்தவளின் மரணத்தில் தான் 
மகத்துவம் ஆகிறது 
முத்து..

 பிறையோடு வளர்ந்து தேய்ந்துதான்
உலகை பரவசப்படுத்துகிறது
வெண்ணிலா..

லைகள் அடிக்காத நிமிடங்களை
‌எப்போதும் ‌வேண்டுவதில்லை
கரைகள்..


 லி‌களை வாங்கிய மனமே
வாழ்க்கையை ரசிக்கும்..
ரணங்களை உடுத்திய இதயமே
உன்னதத்தை உணரும்..
ஆகையால்


 ஓ.. உலகத்தீரே..
ஒரு போதும் விரும்பாதீர்
வலிகள் இல்லாத வாழ்க்கையை...


அன்பாக வாசகர்களே..
வந்துப் போனதற்கான  தடயங்களை இங்கே விட்டுச் செல்லுங்கள்..


15 February, 2011

அந்த பழக்கம் உள்ளவரா நீங்கள்...

  
“கையிலே அது என்ன புத்தகம்?”
“மகாபாரதம்.”

“அப்படின்னா உங்ககிட்டே ஒரு கேள்வி.”

“கேளுங்க!”

”சூதாட்டத்தைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?”

“இது ‌ரொம்பத் தப்பான ஒரு பழக்கம்.”

“அந்தப் பழக்கம் வர்றதுக்கு என்ன காரணம்?”

“மனசுதான் காரணம்!”

“ஒரு ஹார்மோன் குறைப்பாடுதான் அதுக்குக் காரணமன்னு நிபுணர்கள் சொல்றாங்க!”

“அப்படியா?”

“ஆமாம்.. சார்ல்டன் - அப்படின்னு ஒரு ம‌னோதத்துவ நிபுணர்... அவர் ஒரு நூறு சூதாடிகளைத் தொடர்ந்து பரிசோதனை பண்ணிக்கிட்டு வந்தார். கடைசியிலே என்ன கண்டு பிடிச்சார் தெரியுமா?”

“என்ன கண்டுப்பிடிச்சார்?”


“செரோடோனின் (Serotonin)ங்கற ஹர்மோன் குறைச்சல் தான் இந்த சூதாட்டப் பழக்கத்துக்குக் காரணமன்னு கண்டுப்பிடிச்சார்..!”

“‌அப்படியா?”

“ஆமாம்.. சின்ன வயசுலேயே அடிக்கடி மன இறுக்கத்துக்கு (Tension) ஆளாகிற குழந்தைகளுக்கு செரோடோனின் குறைந்து விடுமாம்.  அப்புறம் சூதாட்டம் பரம்பரை வியாதியாகலாம். செரோடோனின் குறைச்சலை ஈடு செய்ய சரியான மருந்து மட்டும் வந்துட்டா நாட்டில் சூதாட்டமே ஒழிஞ்சுடும்ங்கறார் அந்த நிபுணர்..”

“இப்போதைக்கு நமக்குக் கிடைச்சிருக்கிற மருந்து இந்த மகாபாரதம் தான்..!”

“உங்களுக்கு ஒரு சேதி தெரியுமா? எங்க அப்பாவுக்கு நாங்க அஞ்சு பிள்ளைங்க.. மகாபாரதம் படிக்கலேன்னா கூட நாங்க அஞ்சு பேரும் பஞ்ச பாண்டவர்கள் தான்..!”

“அது எப்படி?”

“சொத்து எல்லாத்தையும் சூதாட்டத்துலே விட்டுடுட்டோம்...!”

நன்றி  : தென்கச்சி சுவாமிநாதன்


இன்று நாம் நாடு கெட்டு குட்டிச்சுவராய் ஆனதற்கு இந்த சூதாட்டம் தான் காரணம் கிராமத்தில் 5, 10 க்கு ஆரம்பித்து சர்வதேச நிலையில் 50 கோடி.. 100 கோடி என நீள்கிறது..

 நாம் எல்லோறும் ஏதோ ஒரு சூதாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டுதன் இருக்கிறோம்..   பிறந்த கு‌ழந்தைகள் முதல் முதியோர் வரை எவ்வளவு பந்தையாம் என்று வார்த்தையில் ஆரம்பித்து நம்மை அறியாமலயே நம்மை சூதாட்டத்தில் ஈடுபடுத்திக் கொள்கிறோம். சிறிய பருவத்தில் ஒரு முறை அல்லது இரு முறை சொல்லி பார்த்து பெற்றோர்கள் விட்டு விடுகின்றனர். அந்த பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இளைஞன் ஆனதும் மிகப் பெரியதாக ஆகிவிடுகிறது..

சீட்டாடம்,  காட்டன் பேரம், குதிரை ரேஸ். தாயம்,  மூணு சீட்டு,  விளையாட்டில் எந்த அணி ஜெயிக்கும், எந்த அணி தோற்கும்,  என்று ஏதாவது ஒரு பந்தயத்தில் தன்னுடைய உழைப்பு, செல்வம்? உடமை, நேரம், என அத்தனையும் வீணடித்துக் கொண்டிருக்கிறோம். 

நம் கண்முண்னே எத்தனையோ குடும்பங்கள் இந்த சூதாட்ட சூழலில் நடுத் தெருவுக்கு வந்திருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியும் இருந்தாலும் இதையெல்லாம் நாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. அதே நிலமை நமக்கு வரும் போது தான் அதைப்பற்றி நாம் உணர்கிறோம். 

அது காலம் தாழ்த்திய செயல்
கண்கணை இழந்தப்பின் 
காணுகின்ற சூரிய உதயம்..

புகைப்பிடிப்பவன் அந்த பாதிப்பு  பெரியதாக ஆனப்பின்தான் கவலைப்பட்டுக் கிடப்பான்  அது வரை யார் என்ன அறிவுரைச் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மாட்டான் அது போல் தான் சூதாட்டமும்.


சூதாட்டத்தில்
இலாபம் அடைந்தவர்கள் 10 பேர்..
ஆனால் இழப்பைசந்தித்தவர்கள் 100 ‌பேர்..



சின்ன வயதில் கிரிக்கெட் பார்க்கும் போது.. விளையாட்டாக சொல்வோம் அவன் காசு வாங்கி கொண்டு ஆடுகிறான் என்று.. ஆனால் அதுவே ஒரு காலத்தில் உண்மையாகிவிட்டது.. இந்நிலை நீடித்தால் நாடு அழிவு பாதைக்கே இட்டுச் செல்லக் கூடும். இந்தியா 2020 வல்லரசு கணவை பூர்த்தி  செய்ய சூதாட்டங்களில் இருந்து கொஞ்சம் விலகிநிற்போம்.


14 February, 2011

எப்படித்தான் முடிகிறதோ..... உன்னால்....


ரு துணை எழுத்து 
உயிர் எழுத்தாய் உயிர்ப்பித்துக் 
கொண்‌டதைப்பற்றி....

ரு வறண்ட காலம் 
மழைப்பார்த்து மறுபிரவேசம் கொண்டதைப்பற்றி.....

கிழமைகளில் சனி மட்டு‌மே எனக்கு சொந்தம் 
எல்லோரும் அப்படி அழைப்பதினால்...

நாள்முழுக்க ராகுகாலமும் எமகண்டமும் 
மாறிமாறி வருவது என்க்கு மட்டும்தான்....

விதி விளையாட நினைத்தால் 
யோசிக்காமல் வந்து விடும் என் முகவரிதேடி...

க்கத்து வீட்டு கருப்பு பூனை 
எனைப்பார்த்து பயந்தோடும் 
நான் குறுக்கிட்டு விடுவேனோ என்றஞ்சி...

டித்து விட்டு வேலையில்லாததால் 
மனிதனாய் கூட ஏற்றுக் கொள்ளவில்லை வீட்டார்...

திரும்ப திரும்ப நான் மட்டுமே அன்பு காட்டினேன்
எனைப்பார்த்து ஒரு நாளும் வாலாட்டியதில்லை 
அந்த நாய்குட்டி...
 நான் வரும்‌போது மட்டும் சகுனம் சரியில்லையென
திரும்பியிருக்கிறார் அந்த ஒற்றை பிராமணர்...

திசயமாய் என் விலாசம் வரும்போது மட்டும் 
தென்றலுக்கு தடைப் போடுகிறது காலம்...

சுமைக்கலந்த வசந்தக்காலத்தை 
இதுவரையில் பார்த்திராத கால் நூற்றாண்டு நான்..

டற்கரைக்கு சென்று 
கால் நனைத்தவர்களுக்கு தெரியும் 
நான் கண்ணீராய் சிந்திய உப்பின் அளவு...

காய்ந்து கருகிய 
அந்த ஓலைப்பாய் மட்டுமே அறியும் 
என் இதயத்தில் ஏக்கங்களை...

ப்பித்தவறிக் கூட என்னை தொட்டதில்லை 
மகிழ்ச்சியும் சந்தோஷமும்...

ண்டிகைக்கு பலிகொண்ட வாழையாய்...
உயிர் இருந்தும் உணர்ச்சியற்ற கோழையாய்....
வாழ்வைத்தொலைத்த என்னை 

ன்னால் மட்டும்
எப்படித்தான் முடிகிறதோ
என் அன்பே..
என்னை விரும்பித் தொலைக்க...


அன்பான வாசகர்களே... நீங்கள் வந்துப் போனதற்கான தடயத்தை 
இங்கே விட்டுச் செல்லுங்கள்...

12 February, 2011

பத்துக்கு பத்து - தமிழ் சினிமா இந்தவாரம் 12-02-2011

ஆச்சரியப்படுத்தும் அனோஷ்கா!
அஜீத்- ஷாலினி இருவரும் குழந்தை அனோஷ்காவுக்கு இப்போதில் இருந்தே நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுக்கிறார்கள்.

வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு மரியாதையாக `வணக்கம்' சொல்வது, வீட்டில் வேலை செய்பவர்களை, `அங்கிள்,' `ஆன்ட்டி' என்று அன்புடன் அழைப்பது...

என மூன்று வயது அனோஷ்கா ரொம்பவே ஆச்சரியப் படுத்துகிறாள்! 
***************************************************************************************
அவன் இவன் புதிய தகவல்  

அவன் இவன் படத்தின் ஸ்டில்களைப் பார்த்தவர்கள் முகத்தில் கண்டிப்பாக இளநகை தோன்றும். ிஷால், ஆர்யாவின் தோற்றங்கள் அப்படி.

தோற்றம் மட்டுமா? பெயர்களும் அப்படிதான் என்பது இப்போது தெ‌ரிய வந்திருக்கிறது.

அவன் இவனில் ிஷாலின் பெயர் வால்டர் வணங்காமுடி. ஆர்யாவின் பெயர் கும்பிடறேன் சாமி. பாலாவின் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் எல்லாமே சமூகத்தின் விளிம்புநிலையில் உள்ளவர்களாகவே இருப்பர்.

இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல. முக்கியமான வித்தியாசம், மற்றப் படங்களைப் போல் சீ‌ரியஸாக இல்லாமல் படு நகைச்சுவையாக அவன் இவனை எடுத்திருக்கிறாராம்.

பாலா படமில்லையா... நகைச்சுவையும் ப்ளாக் ‌ியூமராகதான் இருக்கும். 

**************************************************************************************

இலங்கை கடற்படையை கண்டித்து விஜய் ஆர்பாட்டம்

தமிழக மீனவர்களை தாக்கும் இலங்கை கடற்படைக்கு கண்டனம் தெரிவித்து நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் வரும் 22ம் தேதி நாகப்பட்டினத்தில் ஆர்பாட்டம் நடத்தவிருக்கிறார்.

நாகை மாவட்டம் புஷ்பவனம் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஜெயக்குமார் இலங்கை கடற்படையால் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டார். இதற்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. பல அரசியல் கட்சி தலைவர்கள் ஜெயகுமார் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறி, நிதியுதவியும் செய்து வருகின்றனர். ஜெயக்குமார் மனைவிக்கு கருணாநிதி அரசு வேலை கொடுத்துள்ளார். பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜ் ஜெயக்குமார் மனைவியை நேரில் சந்தித்து ரூ. 2 லட்சம் நிதி அளித்தார்.

இந்நிலையில் நடிகர் விஜய் ஜெயக்குமார் குடும்பத்தாரை வரும் 22-ம் தேதி நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். அவரது தந்தை எஸ். ஏ. சந்திரசேகரும் உடன் செல்கிறார். விஜய் வருவதையொட்டி அவரது ரசிகர் மன்றத்தினர் வரவேற்பு ஏற்பாடுகளை தடபுடலாக செய்து வருகின்றனர்.

அதே தினத்தில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து ஆர்பாட்டம் நடக்கின்றது. இதில் விஜய் கலந்துகொண்டு இலங்கை கடற்படைக்கு எதிராக கோஷங்கள் எழுப்புகிறார். இந்த தகவலை நாகை, திருச்சி மாவட்டம் விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கண்டன ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விஜய் ரசிகர்கள் நாகை வருகின்றனர். மேலும், இதில் விஜயின் தந்தையும், மனைவியும் கலந்துகொள்வார்கள் என்று தெரிகிறது.

 *********************************************************************************
சிம்புவிற்கு ரசிகர்கள் தந்த பரிசு!

யங் சூப்பர் ஸ்டார் சிம்பு, பரத், அனுஷ்கா நடித்துள்ள படம் ‘வானம்'. புதுமுக இயக்குனர் க்ரிஷ் இயக்கியுள்ளார். படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு படுவேகமாக நடந்து வருகிறது. இதனையடுத்து, சிம்பு நடித்த படங்களின் தலைப்புகளை வைத்து பாடல் எழுதி ஒலிப்பதிவு செய்து அவருக்கு பரிசாக அளித்துள்ளனர் அவரது ரசிகர்கள்.  

**********************************************************************************

செல்வராகவனுக்கு ஜூலை 3ஆம் தேதி திருமணம்


"நடந்தது நடந்ததாக இருக்கட்டும் நடப்பவை நல்லதாக நடக்கட்டும்" என்ற வாக்கியம் தற்போது செல்வராகவனுக்கு சரியாக இருக்கும். சினிமா வாழ்க்கையில் வெற்றிகொடி நாட்டிய செல்வராகவன் திருமண வாழ்க்கையில் ஏனோ பெரும் தோல்வியை சந்தித்தார். அவர் சந்தித்த தோல்விகளை வெற்றிகளாக்க அவருடன் இல்லர வாழ்க்கையில் இணைகிறார் கீதாஞ்சலி.

இந்த கீதாஞ்சலி யார், இவரும் செல்வராகவனும் எப்படி இணைந்தார்கள் என்ற செய்தியை நாம் முன்பே வெளியிட்டதால், நேரடியாக விஷயத்திற்கு வருவோம்.

இயக்குநர் செல்வராகவனுக்கும், கீதாஞ்சலிக்கும் பிப்ரவரி 10 திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி மணப்பெண் கீதாஞ்சலியின் இல்லத்தில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.

எளிமையான முறையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இரு வீட்டாரின் உறவினர்கள் கலந்துகொண்டார்கள். மேலும் ரஜினிகாந்த், லதா ரஜினி, கமல்ஹாசன், கெளதமி, மணிரத்னம் மற்றும் சுஹாசினி மணிரத்னம், ராம்குமார், யுவன் சர்ங்கர் ராஜா, தயாரிப்பாளர் தனஞ்செழியன், ஒளிப்பதிவாளர் ராம்ஜி, செளந்தர்யா ரஜினிகாந்த், தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், ராணா ஆகியோரும் இதில் கலந்துகொண்டார்கள்.

இந்த நிச்சயதார்த்ததில் செல்வராகவன் - கீதாஞ்சலியின் திருமணம் 2011, ஜூலை 3ஆம் தேதியன்று நடைபெறும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

*****************************************************************************
நண்பன் படத்தில் லாரன்ஸ் கெஸ்ட் ரோல்! 

ஆமிர்கான், மாதவன், சர்மான் ஜோஷி, கரீனா கபூர் நடித்து இந்தியில் ஹிட்டான படம், ‘3 இடியட்ஸ்’. இந்தப் படத்தை ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தமிழில் 'நண்பன்' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. ஷங்கர் இயக்கும் இந்த படத்தில் ஆமிர்கான் வேடத்தில் விஜய் நடிக்கிறார்.

மேலும் இலியானா, ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், அனுயா உட்பட பலர் நடிக்கின்றனர். நண்பன் படத்தில் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். ‘எந்திரன்’ சூப்பர் ஹிட்டுக்குப் பிறகு, ஷங்கர் இயக்குகிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். நா.முத்துக்குமார் பாடல்கள். படத்தின் ஷூட்டிங், ஊட்டியில் நடந்து வருகிறது. இம்மாதம் 25&ம் தேதி முதல் விஜய் நடிக்கும் காட்சி படமாக்கப்படுகிறது.

இந்நிலையில் நண்பன் மேலும் ஒரு கெஸ்ட் ரோலாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். முதலில் இந்த கெஸ்ட் ரோலுக்கு நடிகர் பிரசன்னாவைத்தான் கேட்டிருந்தார்களாம். தேதிகள் இல்லாத காரணத்தால் அவருக்குப் பதில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்.
 
**********************************************************************************

பிரகாஷ்ராஜ்-ப்ருத்விராஜ் கூட்டணியில் உருவான 'அன்வர்' 

மொழி', 'வெள்ளித்திரை' படங்களை தொடர்ந்து பிரகாஷ்ராஜ், ப்ருத்விராஜ் இணைந்து நடிக்கும் படம் 'அன்வர்'. தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை ரெட் கார்ப்பெட் நிறுவனம் தயாரிக்க, ராம்கோபால் வர்மாவிடம் இணை இயக்குநராக பணியாற்றிய அமல்நீரத் இயக்கியுள்ளார்.

தீவிரவாத செயல்களால் நம்முடைய நாடு எவ்வளவு பாதிப்புக்குள்ளாகின்றது. அவற்றை களைய ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லும் படமாக அன்வர் தயாராகியிருக்கிறது. கோயமுத்தூர் குண்டு வெடிப்பு முதல் அண்மையில்
நடைபெற்ற மும்பை தாக்குதல் வரையிலான நாட்டில் நடந்த தீவிரவாத நிகழ்வுகளை கோர்வையாக்கி திரைக்கதை அமைத்திருக்கிறார்
 
இயக்குநர் அமல்நீரத். மேலும் படத்தில் ஐந்து குண்டு வெடிப்பு சம்பவங்களை படமாக்கியுள்ளார்கள். இந்த காட்சிகள் படம்  பர்ப்பவர்களுக்கு குண்டு வெடிப்புகளின் கொடூரங்களை உணர்த்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறதாம்.

மதத்தலைவர் ஒருவருடைய கையாளாக நடித்திருக்கும் ப்ருத்விராஜின் கதாபாத்திரம் இதுவரை பார்த்திராத மாதிரி வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் அவருடைய கதாபாத்திரத்தின் நடவடிக்கை படம் முழுக்க ஒரு புதிருடன் கூடிய விருவிருப்பை கொடுக்கும் விதத்திலும் இருக்கும். இவருக்கு ஜோடியாக மம்தா மோகன் தாஸ், வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார்.

மும்பை தாக்குதல் நேரத்தில் பலியான காவல்துறை அதிகாரி ஹேமந்த் கர்க்கரை நினைவுபடுத்தும் விதமாக ஒரு புலனாய்வு போலீஸ்
அதிகாரியாக பிரகாஷ்ராஜ் நடிக்க, இவர்களுடன் லால், சம்பத், கீதா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

படம் பார்க்கும் இளைஞர்கள் அனைவரும் தீவிரவாத செயல்களை பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்காமல் அதற்கு எதிராக நாமும் செயல்பட முடியும் என்கிற நம்பிக்கையை ஊட்டும் விதத்தில் உருவாகியிருக்கும் 'அன்வர்' பிப்ரவரி 25ஆம் தேதியன்று வெளியாகிறது.
****************************************************************************************

ட்விட்டரில் யுத்தம் செய்

பொதுவாக திரை நட்சத்திரங்கள் தங்களது தகவல்களை டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பகிர்ந்து கொள்வது வழக்கம். ஆனால் சேரன் வித்தியசமாக, தனது டுவிட்டர், பேஸ்புக் நண்பர்களுக்காக ‘யுத்தம் செய்’ படத்தின் பிரத்யேக காட்சியை திரையிட்டுள்ளார். ஏன் இப்படி என்று கேட்டதற்கு வெளியிட்ட காட்சிகள் மூலம் ரசிகர்களை தியேட்டருக்கு வர வைக்க இப்படி செய்தேன் என்று கூறியுள்ளார். 
 ****************************************************************************************
ஆபாச குற்றச்சாட்டில் ஆரண்ய காண்டம்

எஸ்.பி.பி.சரண் தயா‌ரித்துள்ள ஆரண்ய காண்டம் படத்துக்கு நாற்பதுக்கும் மேற்பட்ட கட்-கள் கொடுத்து ஏ சான்றிதழ் தந்திருக்கிறது சென்சார். சர்வதேச திரைப்பட விழாவில் ப‌ரிசு வாங்கியிருக்கும் எங்கள் படத்துக்கு இத்தனை வெட்டா? என்று பொங்கியிருக்கிறார் சரண்.
விஷயம் பெ‌ரிதாவதை உணர்ந்த சென்சார் அதிகா‌ரிகள் படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் எப்படிப்பட்டவை என்று மீடியாவுக்கு விளக்கியிருக்கிறார்கள். அவர்கள் சொன்ன அனைத்தும் இரட்டை அர்த்த ஆபாசங்கள். குறிப்பாக ர‌ஜினி, கமலை வைத்தும் காமெடி என்ற பெய‌ரில் ஆபாசத்தை அரங்கேற்றியிருக்கிறார்களாம்.
இத்தனை கட் களுடன் படத்தை வெளியிட முடியாது என்பதால் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியிருக்கிறது தயா‌ரிப்பாளர் தரப்பு.  


****************************************************************************************

மிஷ்கின் இயக்கும் மார்ஷியல் ஆர்ட் படம்


மார்ஷியல் ஆர்ட் எனப்படும் தற்காப்புக் கலையில் மிஷ்கினுக்கு நிரம்பவே ஆர்வம். அவரது அடுத்தப் படம் மார்ஷியல் ஆர்ட்டை தழுவியதாக இருக்கும் என்கிறார்கள்.
யுத்தம் செய் படத்துக்குப் பிறகு லிங்குசாமியின் தயா‌ரிப்பில் மிஷ்கின் படம் இயக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. மார்ஷியல் ஆர்ட் சம்பந்தமான கதையாம். சீனா சென்று மார்ஷியல் ஆர்ட்டின் நுணுக்கத்தை தெ‌ரிந்து கொள்ளும் ஆர்வமும் மிஷ்கினுக்கு இருக்கிறது என்கிறார்கள்.
படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் லிங்குசாமியால் தாக்குப் பிடிக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Related Posts Plugin for WordPress, Blogger...