கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

26 February, 2015

உங்க வீட்டம்மாகிட்ட இப்படி மொக்கை வாங்கியிருக்கீங்களா





காலங்காத்தால மனைவி கணவனிடம் ஓடி வந்தாள்....!!!
கொஞ்சம் பயந்த மாதிரி இருந்தாள்....

கொஞ்சம் நியூஸ் பேப்பர் கொடுங்கள் என்று கேட்டாள்...??

கணவன் மனைவியிடம்:
நீ இன்னும் எவ்வளவு நாள் இப்படியே இருக்க போற..??
உலகம் எங்கிருந்து எங்கயோ போயாச்சு..
நீ இன்னும் நியூஸ் பேப்பர் கேட்கறே ...???
இந்தா என்னோட TAB எடுத்துக்கோ .....!!!

மனைவியும் TAB எடுத்துண்டு போய் ....

அதால சமையல் அறையில் இருந்த,
கரப்பான்பூச்சிய ஒரு அடி போட்டா ........!!
கணவன் நிலைமையை நினைச்சு பாருங்க ...!!!

நீதி : அட்வைஸ் பண்ணுறேங்கிற பேர்ல மனைவிகிட்ட
உங்க புத்திசாலிதனத்தை காட்ட முயற்சிக்காதீங்க...!!!


இதுபோல் சம்பவங்கள் அனைத்துவீடுகளிலும் அடிக்கடி நிகழ்வதே... நாமோ அல்லது அவர்களோ ஏதோ ஒன்று சொல்ல அதை வேறு ஒன்றாக புரிந்துக்கொண்டு மொக்கை வாங்குவது சகஜம்தான்...

 

நமக்கு தெரியாமலே இதுபோன்ற சின்னசின்ன நகைச்சுவைகள் அனைவரின் வாழ்க்கையிலும் கண்டிப்பாக இருக்கும்.... ஆனால் வாங்கிய மொக்கையை நாம்தான் வெளியில் சொல்வதற்கு வெட்கப்பட்டு சொல்வது இல்லை.

*******************************************

ஆசிரியர் வகுப்பிலே நன்றாக படிக்கும்மூன்று மாணவர்களை எழுப்பி ஆசிரியர் கேளவி கேட்டார்..

''தேர்வில் எவ்வளவு மார்க்கு வாங்குவாய்'' என்று..

முதலாமவன்'' நான் மாவட்டத்திலே முதல் மார்க்குவாங்குவேன்..'' என்றான

இரண்டாமவன்.''.நான் மாநிலத்திலே முதல் மார்க்கு வாங்குவேன்.''என்றான்..

ஆசிரியர் ''அவர்கள் சொல்லிவிட்டார்கள்.

அவர்களைவிட பெரிதாய் சொல்லமுடியாது'' என்றார்..

மூன்றாவன் சொன்னான்.''.இந்த வகுப்பிலேயே முதல் மார்க் வாங்குவேன்..''.என்றான்...

ஆசிரியர் வாயடைத்து போனார்..

இதுதான் புத்திசாலிதனம்...!


தன்னம்பிக்கைக்கு எல்லைகள் என்று எதுவும் இல்லை... வாழ்க்கையும் முயற்சியும் எல்லைகள் இல்லாதது. தன்னம்பிக்கை மட்டும் நிலையாக இருந்துவிட்டால் அவர்கள்‌ வெற்றியின் படிகட்டை எளிதில் அடைவது உறுதி... 

பாருங்கள் மாநில அளவை விடவும் எடுக்கவேண்டும்  என்று சொன்னால் முந்தைய மாணவர் சொன்னதை அப்படியே நாம் சொன்னதுபோல் ஆகிவிடும். அந்த மாணவரும் அந்த வகுப்பறையில்தானே இருக்கிறார். 

தற்போதைய தலைமுறை எதற்கும் துணிந்ததாக இருக்கிறது. அவர்களுக்கு எல்லை என்பதே இல்லை. நல்வழியில் நடக்கும்போது நல்லதாகவும்.... குறுக்கு வழியில் நடக்கும்போது தவறாக முடிகிறது அவ்வளவுதான்.

*******************************************


(தவறுதலாக தன் மேனேஜர்-க்கு போன் செய்துவிடுகிறார்... ஊழியர்)


ஊழியர் : ஹேய் சீக்கிரம் என் அறைக்கு சூடாக ஒரு காபி கொண்டு வா....

மேனேஜர் : நீ யார்கிட்ட பேசிக்கிட்டு இருக்கேனு உனக்கு தெரியுமா....

ஊழியர் : தெரியாது ஏன்???

மேனேஜர் : நான் தான் இந்த கம்பேனியின் மேனேஜர்...

ஊழியர் :....ஹேய் நீ யார்கிட்ட பேசிக்கிட்டு இருக்கேனு உனக்கு தெரியுமா?

மேனேஜர் : தெரியாது...!!!!-!

ஊழியர் : நல்லவேளை தெரியல.......
(எஸ்கேப்...............)

நம்முடைய வீரத்தை நமக்கு கீழ்உள்ளவர்களிடம்தான் காட்டுவோம் நமக்கு மேல்உள்ளவர்களிடம் நாம் எப்போதும் கோழைகள்தான் இது எல்லா நிலையிலும் பொருந்தும். இப்படி இருக்கும் நிலையில் தனக்கு மேல்உள்ளவர்களை எதிர்த்து நிற்கிற தைரியம் உள்ளவர்களை மட்டுமே போராளி என சுட்டிக்காட்டுகிறது உலக வரலாறு....

இப்படிப்பட்ட நகைச்சுவை அனைத்து அலுவலகங்களிலும் இயல்பாக நடப்பதுதான் நாம் யாரென்று தெரியாத பட்சத்தில் பிரச்சனை இல்லை நாம் யாரென்று தெரிந்துக்கொண்டால் அம்புட்டுத்தான்....
 
***************************************

23 February, 2015

நீங்கள் பழைய சோறு சாப்பிடுபவரா....?


சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே....

உழைத்து வாழ வேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே....

என்ற தலைவர் பாடல் எங்கிருந்தோ வந்து காதுகளில் வாழியாக என்மூளையில் குதித்தது.... அப்படா என்ன ஒரு பாடல்.. என்ன ஒரு வரிகள்... புலமைப்பித்தன் ஐயா அவர்கள் எழுதிய இந்தப்பாடலுக்கு தனியாக விளக்கம் ஏதும் ‌சொல்லவேண்டியதில்லை... (தற்போதை பாடல்களுக்கு  எத்தனை அகராதிகளை பார்ததாலும் விளக்கம் கிடைப்பதில்லை)

உலகில் உழைப்பின்றி மாறுவதில்லை எதுவும்... உலகே மாறும்போது நம்முடைய வாழ்க்கை மட்டும் மாறாமலா போய்விடும்.... தற்போதைய உலகில் உழைத்து பணம் சம்பாதித்து வசதியாக இருப்பவர்களால் எந்தப்பிரச்சனையும் இல்லை... ஆனால் போன தலையில் சொத்து சேர்த்து தற்போதைய தலைமுறையை சார்ந்தவர்கள் அதை அனுபதிக்கும்போது அவர்களுக்கு பணத்தின் மதிப்பு தெரிவதில்லை.... 

உழைக்காம சாப்பிட்டா எப்படி உடம்புல ஒட்டும் என்று கிராத்தில் கேட்பார்கள்... ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் உழைக்காம சாப்பிடுவர்கள்தான் உடம்புமுழுவதும் ஊதிக்கிடக்கிறார்கள்...

உழைத்து வரும் காசில் வீண் செலவு செய்யத்தோனாது... ஆனால் உ‌ழைக்காமல் வந்த பணத்தில்.... ஹோட்டல், பார்க், ரிசார்ட், தியாட்டர், பார், பந்தயங்கள் என அவர்கள் செய்யும் அட்டகாசம் தினம்தினம் நாம் பார்ப்பதுதான்... சிலப்பேர் உணவகங்களில் கொடுக்கும் டிப்ஸ் என்பது ஒரு ஏழைக்குடும்பத்தில் ஒரு நாள் வருமானமாக இருக்கிறது...

தான் சம்பாதிக்காமல் தன்னுடைய அப்பனோ.. பாட்டனோ சம்பாதித்த பணத்தில் இவர்கள் செய்யும் அட்டகாசம் விவரிக்கமுடியாது.... முன்னோர்கள் சம்பாதித்ததை மூலதனமாக கொண்டு இன்னும் முன்னேறும் திறமைப்படைத்தோர் நிறையப்பேர் இருக்கிறார்கள்... நான் சொல்வது முன்னோர் சம்பாதித்ததை தற்போது உண்டும், குடித்தும் அழிக்கும் சிலரை மட்டும்தான்...



தான் சம்பாதிக்காமல் அடுத்தவர் சம்பாதித்ததை அது அப்பன் சம்பாத்தியமோ...  அல்லது பாட்டன் சம்பாதித்தாக இருந்தாலும் சரி உட்கார்ந்து சாப்பிடுதல் என்பது மிகவும் கேவலமானதுதானே... அதற்காகத்தான் இந்த குட்டிக்கதை...

மிகவும் நல்ல வசதியான சோம்பேறி ஒருவன் வேலைக்குப் போகாமல் நண்பர்களுடன் சேர்ந்து எப்போதும் சீட்டாடிக் கொண்டு காலத்தை வீணாக கழித்தான்.

ஒருநாள் அவன் அப்படி விளையாடிக் கொண்டிருந்தபோது உள்ளிருந்து அவன் மனைவி அழைத்தாள். "உள்ளே வந்து பழையது சாப்பிட்டுவிட்டுப் போங்கள்'' என்றாள். அதனைக் கேட்ட அவனது நண்பர்கள் திகைப்படைந்தனர். "இவ்வளவு வசதியிருந்தும் இவன் பழையது சாப்பிடுகிறவனாயிருக்கிறானே' என்று. அவனும் எழுந்து உள்ளே போனான். அங்கே அவனுக்கு மனைவி அறுசுவை விருந்து சமைத்திருந்தாள்.

"இப்படி சமைத்துவிட்டு, பழையது சாப்பிட வாங்க என்று கூப்பிட்டு, என் நண்பர்கள் முன்னே அவமானப்படுத்திவிட்டாயே'', என்றான் கணவன். அதற்கு

""சாப்பாடு சூடான சாப்பாடுதான். ஆனால் இது நீங்கள் சம்பாதித்ததில் சமைத்தது இல்லையே... உங்க முன்னோர்கள் சம்பாத்தியத்தில் வந்ததுதானே... அதனால்தான் "பழையது' என்றேன்'' என்றாள் மனைவி.

உழைக்காமல் வீணடிக்கும் நேரம் நம் எதிர்காலத்தை நாம் சிதைக்கும் நேரமாகும்... என்பதில் கொஞ்சமும் சந்தேமில்லை. உழைப்புக்கு தகுந்த பலன் தற்போது கிடைக்கவில்லை ‌என்னறாலும் ‌அதற்கான பலன் எப்போதாவது கண்டிப்பாக நம் வாசலை தட்டியே தீரும். தம்முடை வேலை உழைப்பதுமட்டுதான்.... உழைத்து தன்காசில் உண்ணும் எதுவாக இருந்தாலும் அது அமிர்தமே... மீண்டும் தலைப்பு.... நீங்கள் பழைய சோறு சாப்பிடுபவர்களா...? அப்படியென்றால் வேண்டாம் அது....!



உழைப்பினால் உலகே மாறியிருக்கிறது
நம் வாழ்க்கை மாறாதா என்ன?


வாழ்க்கையை மாற்றிக்கொள்ளுங்கள்
அந்த மாற்றம் உழைப்பால் மட்டுமே சாத்தியம்...!

18 February, 2015

இப்படியும் நடந்த செல்போன் விபரீதம்....!


“அலைபேசியில் பேசியபடியே
வேகமாய் வாகனம் ஓட்டிய நபர்
விபத்தில் சிக்கி உயிரிழந்தார்“...!

“காதலில் ஏற்பட்ட பிரச்சனையால்
அலைபேசிக் கோபுரம் மீதேறி
பட்டதாரி வாலிபர் தற்கொலை“...!

“மின் இணைப்போடு பேசியபோது
கைப்பேசி வெடித்து சிதறியது
இளம் பெண் பலத்த காயம்“...!

“அலைபேசியில் ஆபாசப்படம் பரவியது
அவமானம் தாங்க முடியமல்
ஒரு குடும்பமே தற்கொலை''...!

“ராங் காலில் ஏற்பட்ட பழக்கம்
கற்பும் பணமும் இழந்த பெண்
வீட்டைவிட்டு விரட்டியடிப்பு''...!

“பரிசு விழுந்ததாக குறுந்தகவல்
 
நூதன முறையில் கொள்ளை
பணத்தை பரிகொடுத்த வியாபாரி“...!

“2ஜி... 3ஜி... ஏலம் விட்டதில்
பல்லாயிரம்கோடி மோசடியாம்
செய்திகேட்ட மக்கள் அதிர்ச்சி''...!

இப்படியாய் வந்த செய்திகளைகேட்டு
 
உச்சிக்கிளையில் அமர்ந்து
 புலம்பிக்கொண்டிருந்தது
நேற்று நாங்கள் ... இன்று நீங்கள்...!

அலைப்பேசி கதிர்வீச்சால்
தன் வம்சத்தையே இழந்த 
சிட்டுக்குருவி ஒன்று...!

பல்லுயிர் வேற்றுமைய‌ை காப்போம்...!

16 February, 2015

இப்படி கூடவா ஜோக் சொல்லுவாங்க...!


மாணவர் 1 : பிராட்டிகல் எக்ஸாம்ல .. .. நாலு பரிசோதனை செய்யச் சொன்னாங்க .. ..

 மாணவர் 2 : நீ என்ன சோதனை செஞ்சே ?

 மாணவர் 1 : எனக்கு எதுவும் தெரியலை அதனால சோதனைமேல் சொதனை போதுமடா சாமின்னு எழுதினேன் .. 

******************************* 


எனக்கப்புறம் என்னோட அரசியல் வாரிசு நீதான்னு 
உங்க பையன்கிட்ட நீங்க சொன்னீங்களா..?

ஆமா... சொன்னேன்..!
அரசியல்ல இறங்கி மந்திரியாக் போற எனக்கப் 
படிப்பு எதுக்கு-ன்னு சரியாப் படிக்க மாட்டேங்கிறான...!

******************************* 

அடுத்தவங்க ஆயிரந்தான் உங்களுக்கு அட்வைஸ் பண்ணினாலும், நீங்க கொஞ்சம்கூட காதுல வாங்கிக்க மாட்டிங்களாமே...!
உண்மையா .. .. ?

ஆமா .. .. இப்ப நீங்க என்ன சொன்னீங்க 

******************************* 

டாக்டர்: நர்ஸ்!  க்ளினி வாசல்ல என்ன இன்னிக்கு நிறைய பூக்கடைபோட்டுருக்கானுங்க?

நர்ஸ்:  நீங்க இன்னிக்கு நாலு ஆபரேஷன் பண்ணப்போறதா கேள்விப்பட்டாங்களாம் டாக்டர்!
  ******************************* 

நீதிபதி : நீங்கள் குறுக்குவிசாரணை செய்யலாம்..!

வக்கீல் : இந்த ஆள் ஒரு பைத்தியம், மை லார்ட்

நீதிபதி : அப்போ கிறுக்கு விசாரணை பண்ணுங்க

******************************* 

"ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்!"

எப்படி?

"என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்!"

******************************* 

"டார்லிங்! உனக்காக, என்னோட உடல், பொருள், ஆவி எல்லாத்தையும் தர நான் தயாரா இருக்கிறேன்."

"நீங்க என்ன தர்றது, கல்யாணத்துக்கப்புறம் நானே எடுத்துக்குவேன்"

******************************* 

02 February, 2015

இதற்கான விடை உங்களிடம்தான் இருக்கிறது...!

பாட்ஷா படத்தில் அனைவரையும் கவர்ந்த ஒரு வசனம் “நம் வாழ்க்கை நம் கையில்”.... இன்றைக்கு அதிகமான ஆட்டோக்களில் அதை நாம் பார்க்கிறோம்... படிக்கிறோம்... ஆனால் நம்வாழ்க்கை நம் கையில்தான் இருக்கிறது என்று உணர்ந்தவர்கள் மிகமிகக்குறைவுதான்...!
உழைப்பு, தன்னபிக்கை, முயற்சி, ஊக்கம்,  புத்துணர்வு, முடியும் என்கிற அத்தனை நம்பிக்கையும் நம்மிடத்தில் இருக்கிறது. ஆனால் இவைகளை அடுத்தவர் நமக்கு அறிவுறுத்தவோ அல்லது அடுத்தவர் உதவியாலோ கிடைக்கட்டும் என்று காத்துக்கொண்டிருக்கிறோம்...

அடுத்தவர் எடுத்துரைக்கும் போது நம்மிடத்தில் இருக்கும் பலம் நமக்கு தெரியும் போது நமக்கே என்  நம்முடைய பலம் தெரிய மறுக்கிறது அது ஏன்... அனுமனுக்கு வேண்டுமானால் அவருடைய பலம் அவருக்கு தெரியாமல் இருக்கலாம் அது அவருடைய சாபம்... அவரை புகழும் போது மட்டும் அவருடைய பலம் பண்மடங்காகலாம்... நாம் என்ன அனுமன்களா அடுத்தவர் சொன்ன பிறகு பலம் அதிகரிக்க...

இந்த உலகம் தானகவே முன்னேறிக்கொண்டிருப்பது இதில் அடுத்தவரை மேலேத்தூக்கிவிட வேண்டும் என்ற எண்ணம் அதிகபடியான மக்களுக்கு இருப்பதில்லை.... சந்தர்ப்பம் கிடைத்தால் நம்மை கீழே தள்ளிவிட்டு முதுகின்மீது ஏறிசெல்கிற மக்கள்தான் அதிகம்... இதில் விதிவிலக்கானவர்கள்தான் தற்போதைய வேகமான உலகத்தில் காணாமல் போய்விட்டார்கள்..
ஆகையால் தன்கையை நம்பி உழையுங்கள்... விடாமுயிற்சியை கைவிடாதிர்கள்... தன்னால் முடியும் என்று நம்புங்கள்... இதை தன்னுடைய சந்ததிக்கு எடுத்துரையுங்கள்... அதில்தான் அவர்களில் ஒளி‌மய‌மான எதிர்காலம் அடங்கியிருக்கிறது... இரண்டு வயதில் கைதொலைப்போசியை கையால்வதினாலோ, எடக்குமடக்காக  பேசுவதினாலோ உங்கள் கு‌ழந்தை வெற்றியாளனாக வந்துவிடமுடியாது... உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்தான்... அதை ஆணித்தரமான நம்புவோம் நம்ப வைப்போம்....

என்னைப்பொருத்தவரை நான் இதுநாள் வரையில் அடுத்தவரை நம்பிஇருந்ததில்லை நட்புக்காக தவிர.... என் வெற்றி என் உழைப்பில்... இதுநாள்வரை அப்படித்தான்...! அடுத்தவரை நம்புவதைவிட நம்மை நம்புவதற்கு நாம் தயாராக வேண்டும்... அதற்கான பரிசுதான் வெற்றி...!
சமீபத்தில் நான்படித்த ஒரு ஜென் கதையில் சுருக்கம்...!
ஒரு இளைஞன் ஒரு சிறிய பறவையைப் பிடித்துத் தன்னுடைய உள்ளங்கைக்குள் வைத்துக் கொண்டு ஜென் துறவியிடம் வந்தான்....


"குருவே...! என் கையில் உள்ள பறவை உயிருடன் இருக்கிறதா, அல்லது இறந்து விட்டதா...? நீங்கள்தான் அனைத்தும் அறிந்தவர் ஆயிற்றே, பதில் சொல்லுங்கள் பார்ப்போம்" என்றாகிறார்...

பறவை உயிருடன் இருக்கிறது என்று குரு கூறினால் அதை உள்ளங்கையில் அமுக்கிக் கொன்று விடலாம். அல்லது அவர் இறந்து விட்டது என்று சொன்னால், "நீங்கள் சொல்வது தவறு! இதோ உயிருடன் இருக்கிறது" என்று காண்பிக்கலாம் என்பது அவன் திட்டம். எல்லாம் உணர்ந்த குருவுக்கா இது தெரியாது?


அவர் மிருதுவான குரலில், "விடை உன் கையில் இருக்கிறது" என்றார்!

தற்போதைக்கு... இந்த சமூகம் உள்ளங்கையை எதற்கெல்லாம் பயன்படுத்துகிறது... என்று கொஞ்சம் மனதை ஓடவிட்டுப்பாருங்கள்... அழகான பொன்மொழி ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது... வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று அமைதியாக இருந்துவிடாதீர்கள்... அந்த வாய்ப்பை உருவாக்குங்கள்.. என்பதுதான் அது...
உண்மையில் தான்... அந்த பறவையின் உயிர்மட்டுமல்ல அனைவருடைய உயிரும்... அவரவர் உயர்வும்.... அவரவர் உள்ளங்கையில்தான் இருக்கிறது....

தன்னுடைய உழைப்பின்றி உயர்ந்தவர் இங்கு யாராவது இருக்கீறிர்களா...?
Related Posts Plugin for WordPress, Blogger...