கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

28 April, 2016

10-வது சமூக அறிவியலில் 100-க்கு தடைப்போட்ட அமெரிக்கா மற்றும் சணல்...!

பள்ளிக்கூடங்களை கடக்கும்போது இனம் புரியாத ஒரு ஏக்கம் நம்மில் எட்டிப்பார்க்கும்.... பள்ளி வளாகத்தில் குழந்தைகளை பார்க்கும்போது ஏதோ நந்தவனத்தில் பட்டாம்பூச்சிகள் சிறகடிப்பதுபோன்ற உணர்வை நமக்கும் ஏற்படுத்தும்... ஒவ்வொறு மனிதனின் வாழ்க்கையிலும் வசந்தக்காலமாக என்றும் பசுமை மாறாமல் இருக்கும் காலங்கள் எதுவென்றால் அது பள்ளிபருவக்காலம் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இருந்துவிடமுடியாது.... 

பள்ளிக்காலங்களில் ஒவ்வொறு நிமிடத்தையும் ரசித்து ருசித்து வாழ்ந்தோம் என்பது அப்போது நமக்கு தெரியாது பிற்காலத்தில் நாம் அக்காலங்களை அசைப்போடும் போதுதான் அதன் அர்த்தம் நமக்கு புரியும். பள்ளிப்பருவத்தில் கற்ற கல்வி... பெற்ற நட்பு... கற்பித்த ஆசிரியர்கள்... கொண்ட காதல்... செய்த குறும்பு... விளையாட்டுகள்... அப்பப்பா.. அவைகள் என்றும் நம் மனதைவிட்டகலாத வாழ்க்‌கைப்பதிவுகள்..

படிப்பு முடித்து வேறு பணிகளுக்கு செல்வோருக்கு கிடைக்காத பாக்கியம் ஆசிரியர் பணிக்கு செல்பவர்களுக்கு கிடைக்கும்... நம்பள்ளி வாழ்வை மீண்டும் நம்கண்முன்னே பார்க்கும் அறிய பாக்கியம்தான் அது.....  அப்படிப்பட்ட பாக்கியம் பெற்றவர்களில் நானும் ஒருவன் என்று என்னும்போது மனதுக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.... 

பொதுவாக ஜுன் மாதத்தில் தொடங்கும் கல்வியாண்டானது ஒவ்வொறு நாளும் ஒரு அனுபவத்தை வைத்துக்கொண்டிருக்கும்... ஆண்டுமுழுவதும் மாணவர்களுடன் பழகி அவர்களின் திறமைகள், சாதனைகள், குறும்புகள், அடாவடிகள், ஆடல் பாடல் மோதல் என் அத்தனை நிகழ்வுகளையும் சந்திக்க வேண்டிருக்கும்... காலஓட்டத்துக்கு ஏற்ப மாணவர்களின் செயல்பாடும் தற்போது மிகவும் வித்தியாசமாக மாறியிருக்கிறது... அதை நம் காலத்தோடு ஒப்பிட்டுபார்க்ககூட முடியவில்லை...!

பள்ளி காலத்தில் முதல் சோதனைக்காலமாக மாணவர்கள் கருதுவது 10-ம் வகுப்புதான்... காரணம் மற்றவகுப்புகளுக்கு தேர்ச்சி என்பது ஒரு கடினமான விஷயம் அல்ல.. ஆனால் 10-ம் வகுப்பு என்பது பொதுத்தேர்வாக இருப்பதுதான் இதற்கு காரணம்...  அதனால் அவர்கள் தேர்ச்சி அடைய வைக்க 10 வகுப்பு மாணவர்களிடம் நாங்கள் படும் பாடிருக்கே அப்பப்பா... அதைச் சொல்லத்தேவையில்லை ஏனென்றால் நாம் அனைவரும் 10 வகுப்பு படித்தவர்கள் தானே... அப்பவே நாம் என்னன்ன செய்திருப்போம்... அப்பவே அப்படியென்றால் இக்காலகட்டத்துக்கு மாணவர்கள் எப்படியிருப்பார்கள் என்று கற்பனை செய்துக்கொள்ளுங்கள்...

பத்தாம் வகுப்பு மாணவர்களும் ஆசிரியர்களும் எப்போதும் ஒரு பிணைப்பு இருக்கும். அந்த பிணைப்பில் ஆண்டுமுழுவதும் தொடச்சியாக இருக்கும் மாணவர்கள் மட்டுமே நல்லதொரு மதிப்பெண் எடுத்து காட்டுகிறார்கள்... அந்த பிணைப்பில் இருந்து சில மாணவர்கள் விலகி அவர்போக்குக்கு தன்னை மாற்றிக்கொள்கிறார்கள்... மாணவப்பருவத்தில் தன்னை கதாநாயகனாக உருவகப்படுத்திக்கொள்ளும் காலக்கட்டமும் இந்த காலக்கட்டம்தான்...

பத்தாம் வகுப்பு பொருத்தவரை அவர்களுடைய க்ளைமாக்ஸ் எதுவென்றால் அவர்கள் எழுதும் அரசு பொதுத்தேர்வுதான்... அதை எழுதும் வரை அவர்கள் ஏதோ மந்திரித்துவிட்டது போல் இருப்பார்கள்.. (நன்றாக படிக்கும் மாணவர்கள் மட்டும்) பொதுத்தேர்வு முடிந்தவுடன் தான் அவர்கள் சகஜநிலைக்கு திரும்புவார்கள்...

ஆனால் ஆசிரியர்களுக்கு எது க்ளைமாக்ஸ் என்றால் பத்தாம் வகுப்பு பொதுத்‌தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிதான்... பொதுவாக பள்ளியில் நடக்கும் தேர்வுகளில் மாணவர்கள் அதிகம் கட்டுக்கதைகளை விடுவதில்லை ஏனென்றால் அந்த விடைத்தாள்கள் திருத்தப்பட்டு அவர்களிடம் வழங்கப்படும்... அப்படி கதையடித்திருக்கும் மாணவர்களின் விடைத்தாளை தரும்போது அதை படித்து காட்டிவிடுவார்களோ என்ற பயம்தான்... ஆனால் பொதுத்தேர்வு அப்படியல்லா.. விடைத்தாள் அவர்களுக்கு திரும்ப வராது...

தற்போதுதான் 2016-ஆம் ஆண்டுக்கான விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பெற்றிறுக்கிறது... இருக்கும் பாடங்களிலே ‌கதையடிக்க ஏற்றப்பாடம் எதுவென்றால் எல்லோருக்கும் தெரியும் அது சமூக அறிவியல் பாடம் தான்... அம்புட்டு கதைகள் இருக்கும்...

இதில் இவர்கள் தரும் வரலாறு என்பது எந்த வரலாற்று ஆசிரியரும் எழுதாத புது வரலாராக இருக்கும்... விடைத்தாள் திருத்தும்போது விடை‌களை படிக்கும்போது அவ்வளவு சுவாரஸ்யமும் நகைச்சுவையும் நிறைந்ததாக இருந்தது... அதில் சொந்த புராணம்... சோக கதை... சினிமா கதை... தேர்ச்சி செய்யச்சொல்லி கடிதங்கள் என மனதுக்கு வந்ததையெல்லாம் எழுதிவைப்பார்கள்.

விடைத்தாள் திருத்தும்போது ஒவ்வொரு விடைத்தாளும் ஒரு அனுபவமாக இருக்கும்...  காந்தி இருக்கவேண்டிய இடத்தில் ஹிட்லர் இருப்பார்.. காமராஜருக்கு பதில் பெரியார்.... இன்னும் பொதுவான கேள்விகளுக்கு அவர்கள் தருவதுதான் விடை... உதா. காடுகள் பயன்கள், நில, நீர் மாசு, மழைநீர் சேகரிப்பு போன்ற வினாக்களுக்கு படித்து எழுதாமல் பாடம் நடத்தும்போது நாம் விளக்கியதை மனதில் வைத்து அப்படியே அவனுடைய திறமையையும் இணைத்து எழுதியிருப்பார்கள்... அவ்வளவு சுவாரஸ்யங்கள் நிறைந்தது விடைத்தாள் திருத்தும் பணி என்பது......

100-க்கு 100-‌ஐ தவரவிட்ட மாணவர்கள்...!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் என சில மாவட்டங்கள் மழைவெள்ளத்தில் பாதித்தது...! இதனால் மாணவர்களுக்கு 45 நாட்கள் வரை விடுமுறையில் இருக்கநேர்ந்தது... இதனால் இந்த ஆண்டு பொதுத்தேர்வு வினாதாளும் கடினமும் இன்றி.. மிக எளிமையாகவும் இல்லாமல் இடைப்பட்ட நிலையில் கேட்கப்பட்டிருந்தது...

சமூக அறிவியல் தேர்வு எளிமையாக இருந்தது என்பது மாணவர்களின் பொதுவான கருத்து... பொதுவாக பயிற்சி வினாக்களில் இருந்துதான் வினாக்கள் கேட்கப்படும். அந்த நடைமுறையை மாற்றி மாணவர்களின் அறிவுதிறனை வளர்க்கவும், “மக்கப்“ செய்யும் முறையை கட்டுப்படுத்தவும் ஒருசில கேள்விகள் பாடபகுதியில் இருந்து கேட்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது....

அந்த வகையில் இந்த ஆண்டு கேட்கபட்ட ‌கேள்விகளில் 1 மதிப்பெண் கொண்ட சரியானதை தேர்ந்தெடுக்கும் கேள்வியில் இரண்டு மட்டுமே பாடத்தின் உள்ளிருந்து கேட்கப்பட்டிருந்தது.. அதுவும் மிகவும் எளிமையான வினாவே... அவை

வினா எண் 3) 1945-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரில் ஹிரோசிமா, நாகசாகி ஆகிய நகரங்களைத் தாக்கி அழித்த நாடு?
அ) அமெரிக்கா ஆ) ரஷ்யா  இ) பிரான்ஸ்  ஈ)ஜெர்மனி

வினா எண் 9) “தங்க இழைப்பயிர்“ என்று அழைக்கப்படுவது
அ) தேயிலை  ஆ) காப்பி  இ) புகையிலை  ஈ) சணல்

(இந்த இரு வினாக்களுக்கும் 80 சதவீத மாணவர்கள் விடை தவறாகவே எழுதியிருந்தனர்) 

இப்படி எளிமையான இந்த இரண்டு வினாக்களுக்கு நன்றாக படித்த மாணவர்கள் கூட பதில் தவறாகவே எழுதியிருந்தனர். காரணம் இந்த இரண்டு வினாவும்  மனப்பாடம் செய்யும் பாட பயிற்சி வினாவில் இல்லை என்பதே... 100 எடுக்க வேண்டிய மாணவர்கள் கூட இந்த இரண்டு வினாக்களும் தவறானதால் 98 மதிப்பெண் மட்டுமே எடுக்க வேண்டிய சூழல் நிலவியது... இதன் மூலம் மாணவர்கள் பாடம் முழுவதையும் புரிந்துக்கொண்டு பாடத்தை ஒருமுறைகூட படிப்பதில்லை என்று தெரிகிறது... இப்படியாய் மாணவர்கள் ஒரு கட்டத்திற்குள்ளே வைத்திருக்கிறோம் என்ற குற்ற உணர்வு ஒரு ஆசிரியராக என்னை உறுத்துகிறது..... 

இவைகள் எளிமையான வினாக்கள் என்று சொல்லக்காரணம் பாடங்கள் நடத்தும்போது கண்டிப்பாக மாணவர்களுக்கு சொல்லப்படுகிறது... ஆனால் அதை அவர்கள் நினைவில்கொள்வதில்லை..  சென்ற ஆண்டு 55000 மாணவர்கள் சமூக அறிவியல் பாடத்தில் 100-க்கு 100 எடுத்தார்கள் ஆனால் அது இந்த ஆண்டு மிகக்குறைவாக இருக்கும் என்று கருதுகிறேன்...

எங்கள் பள்ளியில் இருந்து 59 மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியிருக்கிறார். அவர்களையும் சேர்த்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சிப்பெற வேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்கிறேன்... 

இந்தமுறை 10-ம் வகுப்புபொதுத்தேர்வு மதிப்பீட்டு மையம் பூந்தமல்லியில் அமைக்கப்பட்டிருந்தது... 8 நாட்கள் நடந்த இந்த மதிப்பீட்டு பணியின் போது எங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது வெயில் மட்டுமே...!
(படங்கள் கூகுளில் எடுத்தது)

27 April, 2016

கட்சிக்காரரை கட்டிக்கிட்டது தப்பாபோச்சே...! அரசியல் ஜோக்ஸ்

41 தொகுதிக்கு பின்னும் கட்சிக்குள்ள பேச்சு வார்த்தை நடக்குதாமே..." 
"மொத்தம் கட்சியிலே 9 கோஷ்டி இருக்கே.. 
 
ஒரு கோஷ்டிக்கு ஒன்பது தொகுதிகள் கேட்டு பேச்சு வார்த்தை நடந்துக்கிட்டு இருக்கு...."

******************************************

அரசியல் கட்சித் தொண்டரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது பெரிய வம்பாப் போச்சு." "என்ன பண்றாரு?" 
 
"சாப்பாடு வச்சி, குழம்பு கொண்டு வர்றதுக்குள்ளே 'சோறு இங்கே. குழம்பு எங்கே?'னு கோஷம் போட ஆரம்பிச்சிடுறாரு!"

******************************************

வேட்பாளர்: என் பேரை "தர்மம்"னு மாத்திக்கச் சொல்றீயே....ஏம்பா?

உதவியாளர்: தேர்தல்ல நீங்க தோத்துட்டாக் கூட "தர்மம்" தோத்துப்போச்சுன்னுதானே மக்கள் பேசிப்பாங்க!

******************************************

ஆனாலும் தேர்தல் கமிஷன் இந்த அளவுக்கு
கெடுபிடியா இருக்கக் கூடாது..!

- என்ன விஷயம் தலைவரே..?

அட..என்னோட ஃபேஸ்புக் அக்கவுன்ட்டைக்கூட
முடக்கிட்டாங்களே..!

******************************************

தலைவர் லோகல் பாலிடிக்ஸை டச் பண்ணவே
மாட்டாராம்..!
 
அதுக்காக 'டென்மார்க்' நாட்டை இரண்டு
ஃபைவ் மார்க்'கா பிரிக்கணும்னு அறிக்கை
விடுறது நல்லாவா இருக்கு...!

******************************************

மக்களோட தான் என்னோட கூட்டணின்னு தலைவர் மேடைக்கு மேடை பேசினது தப்பா போச்சு....!" 
 
"ஏன்... என்ன ஆச்சு...?" 
 
"தலைவர் எங்கே போனாலும், 'தேர்தல் நெருங்கிடுச்சி, வாங்க தொகுதி பங்கீடு பத்தி பேசலாம்'னு மக்கள் அவரை சூழ்ந்துக்கறாங்களாம்...!"

******************************************

தலைவர் தான் ஒரு பத்திரிகை ஆசிரியராய் இருந்ததை நிரூபிச்சுட்டார்

எப்படி

தேர்தல் அறிக்கையில கடைசி பக்கத்திலே..'இதில் காணப்பட்டவையெல்லாம் கற்பனையே..கற்பனையன்றி அவற்றில் உண்மை இல்லைன்னு எழுதிட்டாரே

******************************************

ஜாதகக் கட்டுகளை தூக்கிக் கிட்டு தலைவர் ஏன் ஜோஸியர் கிட்ட போயிருக்கார்..

வேட்பு மனு கேட்டு இருக்கறவங்கள்ல யார் யாருக்கு பதவி யோகம் இருக்குன்னு ஜோஸியம் கேட்டுட்டு.. அவங்களுக்கு தொகுதியை ஒதுக்குவாராம்.

******************************************
 
தலைவரே … வாக்காளர்களுக்கு வர வர குசும்பு ஜாஸ்தி ஆயிடுச்சு !..

எதனால அப்படி சொல்றிங்க ?

வரப்போகிற தேர்தல்ல ஒட்டுக்கு என்ன ரேட்டு தரப்போறிங்கன்னு தகவல் அறியும் உரிமை சட்டத்துல கேள்வி கேட்டு இருக்காங்க.
 
******************************************
நான் ரசித்ததை நீங்களும் ரசித்தமைக்கு மிக்க நன்றி...!

23 April, 2016

இதுதாங்க கோடைக்கேற்ற உணவு..!

காலநிலை மாற்றத்துக்கு ஏற்ற வகையில் ஆடைகளை தேர்ந்தெடுத்து அணியும் நாம், கால நிலைக்கு ஏற்ற வகையில் உணவு முறைகளை மாற்றிக் கொள்வதில்லை. அதனால்தான் அந்தந்த சீசன்களில் வரும் நோய்களுக்கு பலரும் ஆளாக நேரிடுகிறது. அதாவது, மழைக் காலத்தில் காய்ச்சல், சளி, குளிர் காலத்தில் சரும பாதிப்பு, வெயில் காலத்தில் உடல் உஷ்ணம், கட்டி போன்றவை ஏற்படுகிறது. எனவே, அந்தந்த சீசனுக்கு ஏற்ற வகையில் நாம் உணவு முறைகளையும் மாற்றிக் கொள்வது அவசியமாகிறது. அந்த வகையில் தற்போது கோடைக் காலத்துக்கு ஏற்ற உணவுகளைப் பார்க்கலாம்.

மதிய உணவில், வெள்ளரி, தக்காளி, வெங்காயம், கேரட் போன்ற காய்கறிகள் சேர்ந்த அல்லது ஒரு காய்கறி சேர்க்கப்பட்ட ரைத்தா சாப்பிடுவது நல்லது. இதில் கொத்துமல்லியும் அவசியம். இதனை சாப்பிடுவதால், வெயிலால் ஏற்படும் சரும பாதிப்புகள் குறையும். 
 
நமது உணவில் பெரிய வெங்காயத்துக்குப் பதில் சின்ன வெங்காயத்தை அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். சின்ன வெங்காயம் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும்.

கார உணவு வகைகளைத் தவிர்த்தல் நலம். காரக் குழம்பு வைத்தே ஆக வேண்டும் என்றால், வெந்தயக் கீரை அல்லது வெந்தயக் குழம்பு வைக்கலாம். வெண்டைக்காய் போன்ற குளிர்ச்சியாக காய்கறிகளை சேர்த்து காரக்குழம்பு வைக்கலாம். இதனால் காரக் குழம்பின் உஷ்ண பாதிப்பு குறையும்.

அதிக நேரம் வெயிலில் அலைபவர்கள், அதிகாலையில் வெறும் வயிற்றில், ஊறவைத்த வெந்தயம் அல்லது வெந்தயப் பொடியை எடுத்துக் கொள்ளலாம். 

நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு, கோடைக் காலம் நோயை அதிகரிக்கும் காலமாக அமையும். எனவே, இவர்கள் தண்ணீரில் சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் சுகம் பெறலாம்.

நீர் சத்து மிக்க சௌசௌ, பூசணி, வெள்ளரி, பீர்க்கங்காய், கோஸ், தக்காளி போன்றவற்றில் ஒன்றை மதிய உணவில் சேர்த்துக் கொள்ள மறக்க வேண்டாம்.

மாம்பழ சீசனில் மாம்பழம் சாப்பிடாமல் இருக்க முடியுமா? அப்படியே விரும்பி சாப்பிட்டுவிட்டால் ஏற்படும் உஷ்ணத்தைத் தவிர்க்க, இரவில் ஒரு டம்ளர் பால் குடித்து வரலாம். 

மதியம் 11 மணியளவில் தேநீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இந்த ஒரு மாத காலத்துக்கு அதனை மாற்றி எலுமிச்சை சாறு அல்லது மோர் குடித்து வரலாம்.

கோடைக் காலத்தில் அதிக வியர்வை மூலம் உப்பு வெளியேறுவதால் உப்பு கலந்த பண்டங்கள் அன்றாட உணவில் இடம்பெறுவது நல்லது.

உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் தன்மை கொத்துமல்லிக்கு உள்ளது. எனவே, வீட்டில் சட்னி அல்லது துவையல் அரைக்கும் போது, ஒரு கைப்பிடி கொத்துமல்லி மற்றும் கருவேப்பிலையை சேர்த்து அரைத்தால் சுவையும் நன்றாக இருக்கும், உடலுக்கும் நல்லது. இந்த முறையை எந்த பருவ காலத்துக்கும் பயன்படுத்தலாம். 

எண்ணெய் சேர்த்து செய்யும் பண்டங்களை வெயில் காலங்களில் குறைத்துக் கொள்ளலாம். பூரி, வடை போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால் வெயிலில் மயக்கம் ஏற்பட வாய்ப்புண்டு.
பாட்டி வைத்தியம்

வெயில் கால வியர்வையின் காரணமாக தலையில் சேரும் அழுக்கு, பேன் பொடுகு ஆகியவை போக வெந்தயத்தை இரவு முழுவதும் ஊற வைத்துக் கொள்ளவும். அத்துடன் வேப்ப இலைகளை சேர்த்து அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் இந்த மூன்று பிரச்னையும் தீரும்.

வெயிலால் ஏற்படும் உடல் சூடு குறைய வெந்தயக் கீரையுடன் பூண்டு, உப்பு சேர்த்து அரைத்து சாப்பிட்டால் போதும்.

விளா மரத்தின் இலையை குளியல் மஞ்சளுடன் சேர்த்து அரைத்து உடல் முழுவதும் தேய்த்துக் குளிப்பதன் மூலம் சொரி, சிரங்கு மற்றும் வியர்க்குரு போன்றவை நீங்கும்.

முருங்கை கீரையை அரைத்துத் தலையில் தேய்த்துக் குளித்தால் உடல் சூடு தணியும், பொடுகுத் தொல்லையும் இருக்காது.

மஞ்சள், ஆவாரம்பூ  இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து தினமும் உடலில் பூசிக் குளித்தால் கற்றாழை நாற்றம் ஏற்படாது. உடலும் அழகாகும்.

மகிழ மர இலையை பன்னீர் சேர்த்து அரைத்து உடல் முழுவதும் தேய்த்து குளித்தால் உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம் விலகும்.

புளியங் கொழுந்தையும், மஞ்சளையும் சேர்த்து அரைத்து குளிர்ந்த நீரில் கலந்து குளித்து வந்தால் அம்மை நோயைத் தடுக்கலாம்.

நன்னாரி வேர், வெட்டி வேர் இரண்டையும் சம அளவில் எடுத்து கஷாயம் வைத்துக் குடித்தால் உடல் சூடு தணியும்.

கருந்துளசியுடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்து உடல் முழுவதும் பூசிக் குளித்தால் உடல் நாற்றம் போவதுடன் தோல் நோய்களும் குறையும்.

திருநீற்றுப் பச்சிலையின் விதையை தண்ணீரில் ஊற வைத்துக் குடித்து வந்தால் உஷ்ண நோய்கள் விலகும். - See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=3392#sthash.ksZ1d4PN.dpuf

15 April, 2016

தேர்தல் கமிஷனும்... பைனான்ஸ் கம்பெனியும்...!

"தேர்தல் கமிஷன் வர வர ஃபைனான்ஸ் கம்பெனி மாதிரி ஆயிடுச்சு!"

"ஏன் தலைவரே புலம்பறீங்க?"

"டெபாசிட்டைத் திருப்பித் தர மாட்டேங்கிறாங்களே!"

*****************************************

அமலா: என்னை என் காதலர் ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டார்.

விமலா: என்ன சொல்லி ஏமாத்தினார்?

அமலா: சமைக்கத் தெரியும்னுதான்.

*****************************************

மனைவி: உங்க அம்மாவுக்கு சப்பாத்தி போட்டா பிடிக்கல இட்லி தோசை போட்டா பிடிக்கல உப்புமா போட்டா பிடிக்கல. . .

கணவன்: வேற என்னதான் போட்ட?

மனைவி: பேசாம பட்டினி போட்டேன்

*****************************************
 
“அம்மா. நான் பக்கத்து வீட்டு கீதாவைக் காதலிக்கிறேன். அவளை எனக்குக் கல்யாணம் பண்ணிவைம்மா”

“கீதாவா? டேய். அவ உன்னைவிட ஒரு வயது மூத்தவ டா”

“அப்ப சரி. ஒரு வருசம் கழிச்சி கல்யாணத்த வச்சிக்கலாம்”

*****************************************

டாக்டர்: வாயில் என்ன கட்டு ?

நோயாளி: எனக்குக் கொழுப்பு அதிகமாயிடுச்சு வாயைக் கட்டணும்னு நீங்கதானே டாக்டர் சொன்னீங்க ?

*****************************************
 
ஆசிரியர்: நான் தினமும் ஏழு கிலோ மீட்டர் நடந்து சென்று படித்து வந்தேன்...

மாணவன்: அப்பவே உங்களுக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரமா சார்...

*****************************************
 
"கூட்டணி பேச்சுவார்த்தை நல்லபடியா முடிஞ்சுதா தலைவரே?"

"கூட்டணியே பேச்சுவார்த்தையோடு முடிஞ்சுபோச்சுய்யா!"

*****************************************
 
" மாற்றம்... மாற்றம்'னு பேச வேணாமா, ஏன்யா?"

"எனக்கு என்னமோ 'மாட்றோம்... மாட்றோம்'னே கேக்குது தலைவரே!"

*****************************************
 
கணவன் : நா ரோட்ல போகும் போது, என்னை பாத்து போலீஸ்னு நினைச்சு எல்லாரும் பயப்படறாங்க தெரியுமா?

மனைவி : தொப்பையைக் குறைங்கனு சொன்னா கேட்டாதானே நீங்க... ...

*****************************************
 
டாக்டர் : தினமும் காலையில வெறும் வயித்துல அரை மணி நேரம் நடந்தா உங்க வெயிட் குறைஞ்சிடும்.

பேஷண்ட் : யார் வயித்துல டாக்டர் நடக்கணும்? ...

*****************************************
 
அன்பே, என் பிறந்தநாளுக்கு என்ன பரிசு கொடுப்பீர்கள்...?

என்ன வேண்டுமோ கேள் டியர்...

எனக்கு ஒரு ரிங் வேண்டும்....

கொடுத்திட்டாப் போச்சு. லேண்ட் லைனில் இருந்தா... அல்லது மொபைலில் இருந்தா...? ....!!!! ...

*****************************************

வங்கி ஊழியர்: நீங்கதானே தமிழ்செல்வன்..?

தமிழ்ச் செல்வன்: ஆமாங்க..?

வங்கி ஊழியர்: உங்க பேர்லே கணக்கு இருக்கா..?

தமிழ்ச்செல்வன்: இல்லைங்க தமிழ்-தான் இருக்கு.... ...

*****************************************

நீதிபதி: ஒரு ரூபாய், 2 ரூபாய் கள்ள நோட்டா எதுக்கு அடிச்சே ?

திருடன்: மக்கள் சில்லறைத் தட்டுப்பாட்டுல கஷ்டப்படறதைப் பார்த்து மனசு பொறுக்கல எசமான்... ...

*****************************************

 அமலா: என்னடி இது அநியாயம் .. .. உன் வீட்டு வேலைக்காரி லீவு போடற அன்னிக்கு உன் வீட்டுக்காரரும் லீவு போடறாரா.... இதென்ன கூத்து ?

விமலா: சும்மாயிருடி... நான்தான் அவரை வீவு போட வைப்பேன. வேலைக்காரி விட்டுப் போன வேலையை பின்னே யார் செய்யறது ?

*****************************************
 
ராமசாமி: ஏன் சார், நேத்து உங்க காருக்கு எப்படி ஆக்சிடென்ட் ஆச்சு..?

குமாரசாமி: அதோ, அங்கே ஒரு மரம் தெரியுதா..?

ராமசாமி: ஆமா, தெரியுது...

குமாரசாமி: ஆனா, அது நேத்து எனக்கு தெரியலை..!

*****************************************

தீக்குச்சிகளை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட கலைநயமிக்க ஓவியங்களுடன்... நான் ரசித்த நகைச்சுவைகளும்...!

05 April, 2016

இப்படியாய் பல்பு வாங்கியவர்...

இந்த உலகில் அதிர்ஷ்டத்தை எதிர்பார்க்காதவர் என்று யாரும் இல்லை... சிலபேர் அதே நம்பிக்கையில் இருப்பார்கள்... சில அது நடக்கும்போது நம்புவார்கள்... நமக்கு சில விஷயங்களில் அதிர்ஷ்டம் நடப்பது போல் தோன்றும் அதன்படியே சென்றுக்கொண்டிருப்போம் ஆனால் முடிவில்தான் நாமக்கு கிடைப்பது பலனா... அல்லது பல்பா... என்று தெரியும்... அப்படி பல்பு வாங்கியவர்கள் நமக்குள் நிறையபேர் இருப்போம்...! 

அதிர்ஷ்டம் என்பது அது இஷ்டத்துக்குதான் வரும் அது எப்படி வரும் எப்போது வரும் என்று தெரியாது... அப்படி அதிர்ஷடம் வந்த ஒருவரின் கதைதான் இது...!

ஒருவன் காலை தூங்கி எழுந்தான்... இரவு தூங்க வெகுநேரம் ஆனதால் காலை எழுந்துக்கொள்ள நேரமாகிவிட்டது... சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தில்  9 ஆகிவிட்டதை காட்டும் விதமாக 9 மணிஅடித்து ஓய்ந்தது....

குளித்து முடித்து... காலண்டரில் தேதியை கிழித்தான்... 8-ம் தேதி‌ போய்.. இன்று தேதி 9 எனக்காட்டியது...

வங்கிக்கு சென்றுவரலாம் என்று வங்கிக்கு செல்ல ஆட்டோ பிடித்தார்... அதில் ஆட்டோ எண் 9 என வட்டம் போட்டு எழுதியிருந்தது... வங்கியில் இறங்கி வங்கியில் நுழையும்போதுதான் கவனித்தான் வங்கியின் க‌தவு எண் 99 என இருந்தது...

வங்கியின் உள்ளே சென்று கணக்கரிடம் தன்னுடை பாஸ்புக்கை காண்பித்து பண இருப்பை சரிப்பார்த்தான் அதில் 9 இலட்சங்கள் உள்ளது எனக்காட்டியது... இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது... என்ன காலையில் இருந்து நமக்கு 9 எண் மட்டுமே கண்ணில் படுகிறதே என்று அப்போதுதான் அவனுக்கு நினைவுக்கு வந்தது...

இன்று ஏதோ நமக்கு இந்த 9 என்ற எண்ணில் அதிர்ஷ்டம் இருக்கிறது என்று நினைக்கிறேன்... இந்த அதிர்ஷ்டத்தை எப்படியாவது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்தான்... அதன்படி அந்த 9 இலட்சத்தையும் எடுக்க செக் எழுதி கொடுத்தான்... அவனுக்கு வந்த டோக்கன் எண் 999 அவனுக்கு மிகுந்த ஆச்சரியம்...

பணத்தை எடுத்துக்கொண்டு சாலையில் நடந்துச்செல்லும்போது... எதை எடுத்தாலும் 99 ரூபாய் என கடை கண்ணில் பட்டது.. அதில் ஒரு தொப்பி அவனை கவர்ந்தது.... அதை 99 ரூபாய் கொடுத்து வாங்கினான்... அப்போதுதான் அவனுக்கு குதிரைப்பந்தையம் நினைவுக்கு வந்தது...

நேராக குதிரைப்பந்தையம் நடக்கும் அந்த இடத்துக்கு சென்றான்.. வாயில் எண் 9 வழியாக உள்நுழைந்தான்.... அங்கிருந்த முகவரை சந்தித்தான்...

ஐயா மொத்தம் எத்தனை பந்தையங்கள் நடக்க இருக்கிறது... மொத்தம் 10 போட்டிகள் என பதில் வந்தது... அப்படி என்னறால் நான் 9-வது போட்டியில் பங்கெடுத்துக்கொள்கிறேன்.... பந்தையமாக நான் 9 இலட்சத்தை கட்டுகிறேன் என்று மொத்தப்பணத்தையும் கட்டினான்...

எல்லாப் போட்டிகளையும் பார்த்த அவன் 9-வது ‌பந்தையம் வந்தவுடன் தானும் கலந்துக்கொண்டான்... போட்டித்துவங்கியது... 10 குதிரைகள் ஓடியதில் குதிரை எண் 9 என எண்கொண்ட குரையின் மீது தன் மொத்தப்பணத்தையும் கட்டினான்....

இன்று எனக்கு 9-ல் அதிர்ஷ்ம் இருக்கிறது.. இன்றைய போடியில் நாம்தான் ஜெயிப்போம் என்று முழுமனதுடன் நம்பினான்... அந்த முகவரும் இவரை அணுகி வினவினார்... ஏன் 9-வது பந்தையம்.. 9 எண் கொண்ட குதிரை.. 9 லட்சம்... இப்படியாய்... என கேட்டார்... அவன் மீண்டும் நம்பிக்கையுடன் சொன்னான் இன்று எனக்கு 9-ல் அதிர்ஷ்டம் அதனால்தான் இப்படி என்று...

போட்டி துவங்கியது...
குதிரைகள் சீறிப்பாய்ந்து ஓடின...
பந்தையம் கட்டியவர்கள் பரபரப்பாய் ஆரவாரம் செய்துக்கொண்டிருந்தார்கள்....

போட்டி முடிந்தது....
இவன் மயக்கம்போட்டு விழுந்தான்...
காரணம்...
இவன் பணம் கட்டிய குதிரை ஒன்பதாவதாக வந்தது....

எப்போதும் குருட்டு அதிர்ஷ்டத்தை நம்பினால் இப்படியாய் பல்பு வாங்க வேண்டியதுதான்...
Related Posts Plugin for WordPress, Blogger...