கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

29 September, 2012

பொய் சொல்லும் இயந்திரமும்.. கட்டிய மனைவியும்...


மணி : சார்..! நான் பெரியவன் ஆனதும் விண்வெளி வீரனாக ஆவேன். அப்படியே விண்வெளிக்கு சென்று அங்கேயே தங்கிடுவேன்... இந்தப் பூமிக்கே திரும்ப மாட்டேன்.

ஆசிரியர் : ஏன் அப்படிச் சொல்கிறாய்..!


மணி : என்னுடைய அப்பா என்னைப் பார்த்து அடிக்கடி “இந்த உலகத்தில் வாழ்வதற்கே நீ லாயக்கி இல்லை” என்று திட்டறார் அதான் சார்...!



************************************************

வழக்கறிஞர் : நீதிபதி அவர்களே..! மீண்டும் இந்த வழக்கை முதலிலிருந்து விசாரணை செய்ய அனுமதி வேண்டுகிறேன்.

நீதிபதி : எதற்காக மீண்டும் விசாரணை செய்ய அனுமதி கேட்கிறீர்கள்..?


வழக்கறிஞர் : நீதிபதி அவர்களே..! எனக்கு சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதனால்தான்...


நீதிபதி : என்ன ஆதாரங்கள்...?


வழக்கறிஞர் : என் கட்சிக்காரரிடம் இன்னும் ஒரு லட்ச ரூபாய் பணமும், ஒரு ஏக்கர் நிலமும் இருப்பது இப்போதுதான் எனக்கு தெரியவந்தது...!



************************************************


புகழ்பெற்ற விஞ்ஞானி ஒருவர் பெண்கள் சங்கத்தில் சொற்பொழிவு செய்து விட்டு அமர்ந்தார்.. “நீங்கள் ஏதேனும் கேள்வி கேட்பதாக இருந்தால் கேட்கலாம்“ என்றார்..


பெண்மணி ஒருத்தி, “விஞ்ஞானி ‌ அவர்களே..! பொய் சொன்னால் கண்டுபிடித்துவிடும் இயந்திரத்தைப் பற்றி நாங்கள் நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட இயந்திரத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா..?” என்று கேட்டார்..


“பார்த்திருக்கிறேனா..? நான் திருமணமே செய்து கொண்டு குடும்பமே நடத்திக்கொண்டிருக்கிறேன்...”

************************************************
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மக்களே..!

28 September, 2012

முகமது நபியை இழிவுபடுத்தி படம் எடுத்த இயக்குனர் கைது... ஆனால் அவரை காப்பாற்ற முயற்சிக்கிறது அமெரிக்கா..!


நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி படம் எடுத்து அதை யூடியூபில் வெளியிட்ட அமெரிக்கரான நகோலா பேசலி நகோலாவை அமெரிக்க போலீஸார் இத்தனை நாட்கள் விட்டு விட்டு இப்போது திடீரென கைது செய்துள்ளனர்.

உலகம் முழுவதும் இஸ்லாமியர்களிடையே பெரும் கொந்தளிப்பையும், கொதிப்பையும் ஏற்படுத்தியது நகோலா இயக்கிய இன்னொசன்ஸ் ஆப் முஸ்லீம்ஸ் என்ற திரைப்படம். இதில் நபிகள் நாயகத்தையும், இஸ்லாமியர்களையும் இழிவுபடுத்தும் வகையில் சித்தரித்திருந்தார் நகோலா. இதனால் இஸ்லாமியர்கள் கடும் கொந்தளிப்பையும், எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.

உலக நாடுகள் முழுவதிலும் அமெரிக்காவுக்கு எதிராக பெரும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் வெடித்தன. இதையடுத்து அமெரிக்க அதிபர் ஒபாமா டிவி விளம்பரப் படம் மூ்லம் இஸ்லாமியர்களுக்கு விளக்கம் அளித்து வேண்டுகோள் விடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்...


இந்த நிலையில் சர்ச்சைக்குரிய நகோலாவை அமெரிக்க போலீஸார் திடீரென கைது செய்துள்ளனர். ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக அவர் கைது செய்யப்படவில்லை. கடந்த 2010ம் ஆண்டு அமெரிக்க கோர்ட் ஒன்று அவருக்கு ஒரு வழக்கில் 21 மாத சிறைத் தண்டனைக்கு விதித்திருந்தது. இருப்பினும் பின்னர் அது புரேபஷனாக அது மாற்றப்பட்டது - அதாவது காத்திருப்புக் காலம். இந்த காத்திருப்புக் காலத்தின்போது அவர் இணையதளத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றத்திற்காக தற்போது அவரைக் கைது செய்துள்ளனராம்.

காத்திருப்புக் காலத்தின்போது அவர் ஐந்து ஆண்டுகளுக்கு நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல், கம்ப்யூட்டர், இணையதளம் ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. அதை மீறியதற்காகத்தான் தற்போது கைது செய்துள்ளனர். மற்றபடி இஸ்லாமை இழிவுபடுத்திய குற்றத்திற்காக அவரைக் கைது செய்யவில்லை அமெரிக்க காவல்துறை.


நகோலாவை கைது செய்த போலீஸார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர் சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிகிறது.

இன்னொசன்ஸ் ஆப் முஸ்லீ்ம்ஸ் என்ற பெயரில் நகோலா இயக்கிய படத்தின் 14 நிமிட டிரெய்லர்தான் யூடியூபில் வெளியிடப்பட்டது. இதுதான் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி விட்டது. அதில் நபிகள் நாயகத்தை பெண் பித்தர் போலவும், மத மோசடியாளர் என்பதாகும், குழந்தைகளை பாலியல் ரீதியாக சீரழித்தார் என்றும் கூறியுள்ளார் நகோலா.

கடந்த ஜூலை மாதம் இந்த டிரெய்லர் யூடியூபில் வெளியிடரபப்பட்டது. ஆனால் செப்டம்பர் 11ம் தேதிக்குப் பிறகுதான் பிரச்சினை பெரிதானது.

இந்த பிரச்சசனைக்குறித்து அவரிடம் விசாரிக்கப்படுமா? உலக முஸ்லீம்களின் நம்பிக்கையை கேலி செய்த அவரை எவ்வாறு அமெரிக்க நடத்தும் என்று கேள்விகள் எழுகிறது. இந்த விஷயத்தில் ஒருதலைபட்சமாக அமெரிக்கா நடந்துக்கொண்டால் அதன் விளைவு இன்னும் அதிகமாகத்தான் இருக்கும் என்பதை அமெரிக்கா உணரவேண்டும். உலக அளவில் இவ்வளவு பிரச்சனைகள் நடந்தும்  நகோலாவை வேறுஒரு காரணத்திற்காக கைது செய்கிறோம் என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது.

அவரை இந்த பிரச்சனைக்காகவும் கைது செய்து, அதுகுறித்து இஸ்லாமிய மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும் என்பதுதான் என்னுடைய வாதம்.

26 September, 2012

எரித்தாலும் இல்லை இதற்கு தீர்வு...


சூரியன் மரிக்கும் ஒரு மாலையில்
கடற்கரையில் சந்தித்த நாம்
முத்தமிட்டுக்கொண்டது...

நானே மறந்த என் பிறந்த நாளில்
வாழ்த்துச்சொல்லி நீ எனக்கு தந்த 
வாழ்த்து அட்டைகள்...

நம்பிக்கையற்று தளர்ந்துப்போகும்போது
ஆறுதல் சொல்லி அ‌ரவணைத்த உன்
மடியில் தூங்கியது...

அதிகமாய் அன்பு கொண்டு பாசமாய்
என் தலைக்கோதி என்னை புதுப்பிக்கும்
உன் விரல்களின் ஸ்பரிஷம்...

நம்மை கேட்காமலே நம் இதயங்கள்
பறிமாறிக்கொள்ளும் மௌனம் கலந்த
காதல் மொழிகள்...

இவைகளையெல்லாம் மறந்துவிட்டு
நீ.. வேண்டாம் என என்கையை
உதறிவிட்டுச் சென்றாயே...

அந்தநிமிட நினைவுகள் வரை
நான் மறப்பேன் என நீ நினைக்கலாம்
 
ஆனால் அவைகள் 
நான் மறித்தாலும் இறக்காதவை...
என்னை எரித்தாலும் கருகாதவை...


25 September, 2012

மின்தடையை போக்க ஜெயலலிதா அவர்கள் இந்த நடிவடிக்கை எடுப்பார்களா..?


மின்பற்றாக்குறை சமீபகாலமாக அதிகமாக நாம் ‌கேட்கும் வார்த்தை. தற்போது தமிழகத்தில் மின்தடை கிட்டதட்ட 14 முதல் 16 மணிவரை நிறுத்தப்படுகிறது. இதில் அதிகம் பாதிப்பது ஏழைகளும், குறு சிறு விவசாயிகள், தொழிற்சாலைகள் தான். ஆனால் இந்த மின்தடையால் மேல்தட்டுமக்கள் பாதித்ததுமாதிரி தெரியவில்லை.

அரசு மேல்தட்டு மற்றும் அரசியல் தலைவர்களுக்கும் கீழ்கண்ட நடைமுறைகளை பின்பற்றினால் நன்றாகத்தான் இருக்கும்.

மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்கும் வகையில் இப்போது மக்களுக்கு பல்வேறு உபதேசங்களைச் செய்ய ஆரம்பித்துள்ளது மின்வாரியம். அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே என்று மக்களுக்கு அறிவுரை கூற ஆரம்பித்துள்ளனர். மின்வாரியத்தின் இந்த பலே யோசனைகள் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. இருப்பினும் நம்மால் முடிந்த சில பல யோசனைகளை மின்வாரியத்திற்குத் தெரிவிப்போம்.. இதுவும் கூட கரண்ட்டை மிச்சப்படுத்த உதவும் என்ற நம்பிக்கையில்...

 how save power some tips tneb
- போர்லேண்டர் உள்ளிட்ட சொகுசுக் கார்களை வைத்திருக்கும் அரசியல் தலைவர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள், வட்டப் பிரதிநிதிகள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், அரசியல்வாதிகளுக்கும் இந்த அட்வைஸை விரிவுபடுத்தலாம். தேவைப்பட்டால் தனிச் சட்டமே கூட கொண்டு வரலாம். காரணம், பொதுமக்களை விட அதிக அளவில் ஏசியில் புழங்குவது இவர்கள்தான்.
- 2 மாதங்களுக்கு தமிழகத்தில் எங்குமே அரசியல் பொதுக்கூட்டங்கள், அரசியல் நிகழ்ச்சிகள், கூட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கலாம்.


- தலைவா வா, தங்கத் தமிழே வா என்ற ரேஞ்சுக்கு ஆங்காங்க மின்னும் விளக்கொளியில் அலங்காரம் செய்து தட்டி வைப்பது, போர்டு வைப்பது இத்யாதி இத்யாதி விவகாரங்களை 2 மாதங்களுக்கு தடை செய்து உத்தரவிடலாம்.

- அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்களில் நூற்றுக்கணக்கான டியூப் லைட்டுகள், சீரியல் செட்டுகள், விளக்கொளியில் ஜொலிக்கும் கட் அவுட்கள் ஆகியவற்றுக்கு 2 மாதத்திற்கு வேண்டுமானால் தடை விதிக்கலாம்.

- முக்கியத் தலைவர்களின் வீடுகளுக்கு மட்டும், அவர்கள் குடியிருக்கும் தெருவுக்கு மட்டும் 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்குவதை ஒரு இரண்டு மாதத்திற்குத் தடை விதித்துப் பார்க்கலாம்.

- அரசியல்வாதிகள், கவுன்சிலர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்டவர்களின் வீடுகளில் ஏசி மெஷினே பொருத்தக் கூடாது என்று கூட உத்தரவிடலாம். எல்லாம் 2 மாசத்துக்குத்தானே...!


- இந்த 2 மாத ஏசி நிறுத்தம், அயர்ன் பாக்ஸ் நிறுத்தம், இன்டக்ஷன் ஸ்டவ் நிறுத்தம், வாட்டர் ஹீட்டர் நிறுத்தம் ஆகிய உத்தரவுகளை அமைச்சர்கள் அளவிலும் கூட விரிவுபடுத்தி தமிழக மக்களுக்கு கூடுதல் மின்சாரம் வழங்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கலாம்.

- பிறகு ஆடம்பரமாக நடத்தப்படும் கட்சிக்காரர்கள் கல்யாணங்களின்போது பெருமளவில் விளக்குகளைப் போட்டு கட் அவுட் வைப்பது, தலைவர்களின் சீரியல் செட் கட் அவுட் வைப்பது, சாலை நெடுகிலும் டியூப் லைட்டுகளைக் கட்டுவது போன்றவற்றையும் கூட 2 மாதத்திற்குத் தடுத்துப் பார்க்கலாம். முடிந்தால் கல்யாணமே பண்ணாதீங்க, 2 மாதத்திற்கு என்று கூட அட்வைஸ் கொடுத்துப் பார்க்கலாம். நன்றி தட்ஸ் தமிழ்

இப்படி பல்வேறு வகையிலும் கூட மின்சாரத்தை நாம் சிக்கணமாக சேமித்து தமிழக மக்களுக்கு விரிவான முறையில் வழங்க முடியும். மின்வாரிய அதிகாரிகள் இதுகுறித்தும் யோசித்தால் நல்லது!

விரைவான விரிவான நடைமுறைகளை பின்பற்றி தமிழகத்தில் நல்லதொரு மின்விநியோகம் நடைப்பெறவேண்டும் என்று வேண்டிக்கொள்வோம்.

24 September, 2012

மரணத்தை அருகில் வைத்துள்ளீர்களா.! இதோ மரணத்தை வெல்லும் வழி...!


இந்த உலகம் விசித்திரமானது. இங்கு வாழ்க்கை என்பது மிகவும் சிக்கலான ஒன்று. அதை வெற்றிகரமாக வாழ்ந்து முடித்து இந்த இன்னுலகை விட்டு நாம் மறைகிறோம். மனித வாழ்வில் பலர் தன்னுடைய வாழ்க்கைப்பயணத்தில் சந்திக்கும் சோதனைகள், வேதனைகள் மிகமிக அதிகம். ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில் எப்போது இறப்பான் என்று அவனுக்கு தெரியாது. அப்படி தெரியாத காரணத்தினாலே மனித குலம் ஒவ்வொறு நொடியும் மரணபயத்தோடே வாழ்கிறது.

ஆனால் மனிதர்களுள் பலபேர் தன்னுடைய மரணத்தை தன்னுடனே வைத்திருக்கிறார்கள். வேகம், பயமின்மை, அஜாக்கிரதை, முட்டாள்தனம், அவசரம், பாதுகாப்பின்மை, சரியானமுறையில் கையாலுதல் இல்லாமை, என பல்வேறு வகையில் ஒருவன் மரணத்தை சந்திக்கிறான். ஆக மரணம் என்பது எதோ ஒரு வகையில் நம்முடனே நாம் வைத்துக் கொள்கிறோம்.

மரணம் பயம் இல்லாத வரையில் நாம் நம்போக்கில் இருப்போம். மரணபயம் வந்துவிட்டால் அப்போதுதான் நம்முடைய மனது பயத்தை ஆட்கொள்கிறது.


அதுகுறித்த ஒரு ஜென்கதை....

இல்லறவாசி ஒருவர் அருகிலுள்ள ஊருக்குப் புறப்பட்டார். அவரால் மறுநாள்தான் திரும்பி வரமுடியும். எனவே, அவரது மனைவி மதியமும் இரவும் சாப்பிடுவதற்காக அவருக்கு ஒரு உணவுப் பொட்டலங்களை ஒரு பையில் போட்டுக் கெர்டுத்தாள். காட்டுவழியே தான அவரது பயணம் அமைந்தது.

அவர் நடுக்காட்டை அடைந்தபோது மதியம் ஆகிவிட்டது. ஒரு மரத்தடியில் அமர்ந்து மதிய உணவை உண்டார். உணவுக்குப் பின் பையை எடுத்துத் தோளில் தொங்க விட்டவாறு தனது பயணத்தை தொடர்ந்தார். நினைத்ததைவிட மிக விரைவில் சேர வேண்டிய இடத்தைச் சென்றடைந்த அவர் தனது வேலைகளை விரைவில் முடித்துக் கொண்டார். தனது ஊரை நோக்கிப் புறப்பட்டார்.  விரைவிலேயே புறப்பட்ட காரணத்தால், வீட்டிற்குச் சென்ற பின் இரவு உணவைச் சாப்பிடலாம் எனத் தீர்மானித்தார்.

திரும்பும் வழியில் அவர் ஒரு ஜென் துறைவி அமர்ந்திருப்பதை கண்டார். அந்த ஜென் துறவி இவரிடம், ”இன்று நீ உன் வீடு திரும்பினால் உன் மனைவி இறந்து விடுவாள், இன்று திரும்பவில்லை என்றால் நீ இறந்து விடுவாய்” என்று கூறினார்.

இதைக்கோட்ட இல்லறவாசி திடுக்கிட்டார். துறவிகளின் வார்த்தைகள் பொய்க்காது என்பதை அறிந்த அவர், தம் மனைவியின் உயிரைக் காக்கும் பொருட்டு அன்று வீடு திரும்புவதில்லை என்று முடிவு செய்தார். காட்டில் விலங்குகள் எந்த நிமிடமும் தன் மீது பாய்ந்து தன்னைக் கொன்று தின்னலாம் என்ற எதிர்பார்ப்புடன் அவர் மிக மெதுவாக, கவனமாக எல்லா திசைகளிலும் கூர்ந்து நோக்கியவாறு நடக்க ஆரம்பித்தார்.

சிறிது தூரம் நடந்தபிறகு, ஒரு மரத்தடியில் சில துறவிகள் அமர்ந்திருக்க தலைமைத் துறவி அருளுரை நிகழ்த்துவதைக் கண்டனர். அந்தத் தலைமைத்துறவி யாரென்று பார்த்தபோது அங்கு புத்தரைக் கண்டார்.

இல்லறவாசி ஆர்வத்துடன் அவரது அருளுரையைக் கேட்டார். உரை நிறைவுற்ற பின்னர், அவர் புத்தரை வணங்கினார். பின்னர் தான் வழியில் ஒருவரைச் சந்தித்ததை விளக்கமாக கூறி, தன்னைக் காக்குமாறு வேண்டினார்.

புன்னகை புரிந்த புத்தர். “எனக்குப் பசியாக இருக்கிறது. ஏதாவது சாப்பிட இருக்கிறதா?” என்று கேட்டார்.

இல்லறவாசி அளவற்ற மகிழ்ச்சியுடன் பையைத் திறக்க முற்பட்டார்.  ஆனால் புத்தர், அந்தப்பையை அப்படியே தன்னிடம் தருமாறு கேட்டார். இல்லறவாசியும் பையை அப்படியே புத்தரிடம் கொடுத்தார். புத்தர் மெதுவாக பையைத் திறந்து, அதன் உள்ளே இருந்த சிறிய விஷப்பாம்பை வெளியில் எடுத்தார்.

அதைக்கண்ட இல்லறவாசி திடுக்கிட்டான். மதியம் தான் உணவருந்தப் பையைத் திறந்து மரத்தடியில் வைத்திருந்தபோது விஷப்பாம்பு பைக்குள் சென்றிருக்க வேண்டும் என்று இல்லறவாசி புரிந்து கொண்டார். அப்போதுதான் துறவி சொன்னதன் பொருள் அவனுக்குப் புரிந்தது.

(ஒருவர் மரணத்தை எப்போதும் தன்னுடனேயே எடுத்துச் செல்கிறார். சாதுக்கள் தொடர்பு அவரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும்)

மரணத்தை வென்றவர் என்று இதுவரையில் யாரும் இல்லை நல்லவர்களோடு தொடர்பில் இருப்போம். மனித நாகரீகத்தோடு செயல்படுவோம். மரணங்கள் வந்தாலும் நாம் அதை எதிர்த்து நிற்கலாம்...

23 September, 2012

மத்திய அரசு அந்த விஷயங்களில் உறுதியாகத்தான் இருக்கிறது..! பா.சிதம்பரம்

 மத்தியில் ஆளும் “ஐக்கிய முற்போக்கு கூட்டணி” அரசு உறுதியாக உள்ளது. என்று தமிழகத்தின் தவபுதல்வர் மத்திய அமைச்சர் சிதம்பரம் ஒரு அறிக்கையில் கூறியிருக்கிறார். 

உண்மை தான்... அவர் சொன்னதை நாம் சரியாக புரிந்துக்கொள்ளவில்லை
மத்திய அரசு எதில் உறுதியாக இருக்கிறது என்றால்..?

கோடிக்கணக்கில் ஊழல் செய்வதில்...
சி.பி.ஐ., மூலம் கட்சிகளை மிரட்டுவதில்...

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதில்...
கூட்டணி கட்சிகளின் ஊழலைக் கண்டு கொள்ளாமல் இருப்பதில்...

மத்திய தணிக்கை குழுவை குறை கூறுவதில்...

கூடங்குள அணு மின் திட்டத்தை செயல்படுத்துவதில்...


ராஜபக்சேவுக்கு தாளம் போடுவதில்...

கூட்டணி கட்சிகளிடம் பேரம் பேசுவதிலும், அதற்கு பணிந்து போவதிலும்..

 இந்திய பொருளாதாரத்தை அகல பாதாளத்திற்கு கொண்டு செல்வதில்...
அமெரிக்ககாரனுக்கு பணிந்து போவதில்...

இறுதியாக அன்னை சோனியாஜியின் துதியை 
தொடர்ந்து பாடுவதில்....

என இது போன்ற இன்னும் பல விஷயங்களில், தற்போதைய கூட்டணி அரசு, "உறுதி'யாகவே இருப்பதாக மக்களை நம்பவைக்கின்றனர். நாமும் அவர்கள் கூறும் அறிக்கைகளையும், வாய்வார்த்தைகளையும் நம்பி ஏமார்ந்துக்கொண்டு இருக்கிறோம்.

உறுதியான கொள்கை பிடிப்பு இல்லாமல், மக்களின் எதிர்கால பிரச்சனைகளை தீர்க்காமல், ஒரு தொலைநோக்கு பார்வை யில்லாமல் செயல்பட்டுக்கொண்டிருக்கும்  இந்த மானங்கெட்ட ஜக்கிய முற்போக்கு கூட்டணியை நாம் ‌என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஊழலின் எல்லையைத் தொட்ட இவர்கள் இனி இந்தியாவையே விழுங்காமல் இருந்தால் நல்லது...

21 September, 2012

விஜய், நடிப்பை துறந்து ஐ.ஏ.எஸ்,. அதிகாரியாகிறார்...!


 நிருபர்: நீ நடிக்க வரலேன்னா என்னவாயிருப்பீங்க?

விஜய்: ஐ ஏ ஸ் ஆகிருப்பேன்.

நிருபர்: அதான் நடிக்க தான் வரலேயே, ஏன் இன்னும் ஐ ஏ ஸ் ஆகாம இருக்கீங்க?

*********************************************


ஒரு கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் பாலிஸி எடுத்தது
தப்பாப் போச்சு..!
-
ஏன்?
-
நான் வெளியே போயிட்டு திரும்ப வீட்டுக்குள்ளே போகும்போது
என் மனைவி ஏக்கப் பெருமூச்சு விடறா…!

*********************************************


கணவன் கிட்டே மனைவி சொன்னா.."

டார்லிங்.. கண்ணாடியை கழட்டிடுங்க..

அப்பதான் நீங்க அழகா இருக்கீங்க.."

கணவன் கண்ணாடியை கழற்றியபின் சொன்னான்.. " நீயும்தான்..!"

*********************************************

 பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்பது சரிதான் போல..

என்னடா சொல்ற?

பின்ன என்னப்பா? நீங்க தப்புத் தப்பா ஹோம் ஒர்க் போட்டுத் தர்றீங்க. வாத்தியார் என்னல அடிக்கிறாரு.

*********************************************

 ஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார்.

பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க, சார்.

ஆசிரியர் : தங்கள் மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலு விழந்து இருக்கின்றான், ஐயா.

*********************************************

எங்க கிளினிக்ல இதுவரைக்கும் ஒரு பேஷன்ட்டையும்
டாக்டர் கைவிட்டதில்லை...

அப்படியா?

ஆமா...நர்ஸூங்கதான் நிறைய பேரை கை விட்டிருக்காங்க..!

*********************************************
பேஸ்புக்கில் இருந்து தொகுத்தது....
படங்கள் கூகுலாண்டவர்...

20 September, 2012

என்ன செய்யலாம் இந்த உலகை...?



ம்பிக்கை ஒன்றே என் மூலதனம்
அதனால்தான் இன்னும்
என் வாழ்க்கை சக்கரத்தின் அச்சு 
மழுங்காமல் இருக்கிறது..!

விதிவசம் அகப்பட்டு,
இந்த மண்மீது வீழ்கையில்
என்னைத் தூக்கிவிடுவது
நம்பிக்கையே...!
 
விடியும் ஒவ்வொறு நாளிலும்
துளிர்விடும் என் முயற்சிகளுக்கு
அதுவே உரம் ஊட்டுகிறது..!

ம்பித்தான் 
வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்
என்வீட்டில்...

ற்போது 
வீட்டுக்குள்ளே கூடுகட்டுகிறது
என் வீட்டில் நம்பிக்கையில்லாத 
குருவி ஒன்று...!

மீள் பதிவு...

19 September, 2012

முகமது நபியை அடுத்து இயேசுநாதர் குறித்து புதிய சர்ச்சை... அமைதியிழக்கும் உலகம்


முகமது நபியை குறித்து வெளியான சர்ச்சைக்குரிய திரைப்படத்தால் உலகம் முழுவதும் இருக்கும் இஸ்லாமிய மக்கள் கொதித்தெழுந்து அமெரிக்கா மீதான போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளகர். அந்த சம்பவம் அடங்கும் முன் இயேசு நாதம் குறித்த புதிய சர்ச்சை உறுவாகியுள்ளது.

இயேசுநாதர் திருமணமானவர் என்றும் அவருடைய முதன்மையான சிஷ்யையாக கருதப்படும் மேரி மெகதலீன்தான், இயேசுநாதரின் மனைவி என்றும் புதிய தகவல் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான ஆதாரமும் கிடைத்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
 proof jesus was married found on ancient papyrus  
ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் இறையியல் பிரிவு தலைவரான பேராசிரியர் கேரன் கிங் என்பவர்தான் இதுதொடர்பான ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளார். இயேசுநாதர் குறித்த இந்த முக்கிய தகவலை வெளியிட்ட அவர் கூறுகையில், மிக மிகப் பழமையான கையால் எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய கோரைப்புல்லால் ஆன கையெழுத்துப் படி ஒன்று கிடைத்துள்ளது. அதில் இயேசுநாதரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

முழுமையான வாசகங்கள் அதில் இல்லை. பண்டைய எகிப்திய கோப்டிக் மொழியில் வாசகங்கள் உள்ளன. அதை ஆராய்ந்து பார்த்ததில், இயேசுநாதரின் மனைவிதான் அவரது முதன்மையான பெண் சிஷ்யையான மேரி மெகதலீன் என்பது தெரிய வருகிறது. இருவரும் கணவன், மனைவியாக இருந்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த கையெழுத்துப் படியானது 8 செமீ நீளமும், 4 செமீ அகலமும் கொண்டதாக அமைந்துள்ளது. இந்த கையெழுத்துப் படியில் உள்ள வாசகங்கள் மூலம் இயேசுநாதரும், மேரி மெகதலீனும் கணவன் மனைவி என்பது திட்டவட்டமாக தெரிய வருகிறது.

ஒரு இடத்தில் மேரி மெகதலீனை எனது மனைவி என்று இயேசுநாதர் தனது சீடர்களிடம் குறிப்பிட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஒரு இடத்தில் மேரி மெகதலீன் எனது சிஷ்யையாக இருப்பார் என்று இயேசுநாதர் கூறுகிறார். அடுத்த 2 வரிகளில், நான் அவருடன் வசித்து வருகிறேன் என்று கூறியுள்ளார் இயேசுநாதர்.

இந்த கையெழுத்துப் படி நம்பகத்துக்குரியதாக இருக்க வேண்டும் என்றே நம்புகிறோம். அப்படி இருந்தால் இது மிகப் பெரிய ஆச்சரியகரமான தகவலாக அமையும் என்றார்.

ஏற்கனவே மேரி மெகதலீனும், இயேசுநாதரும் தம்பதியர் என்று அமெரிக்க எழுத்தாளர் டேன் பிரவுன் தனது தி டாவின்சி கோட் நூலில் குறிப்பிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையையும், எதிர்ப்புகளையும், புயலையும் கிளப்பியிருந்தது என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் மேரி மெகதலீன், இயேசுநாதரின் மனைவிதான் என்று அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யார் இந்த மேரி மெகதலீன்?

மேரி மெகதலீன் குறித்து பைபிளில் பல்வேறு தகவல்கள் உள்ளன. அவர் குறித்த சர்ச்சைக்கிடமான கருத்துக்களும் நிறைய உள்ளன. மேரி மெகதலீன் இயேசுநாதரின் முதன்மையான பெண் சீடராக இருந்தவர். அவருக்கு சீடர்கள் குழுவில் மிகுந்த முக்கியத்துவம் இருந்தது.

மேரி மெகதலீன் ஒரு விபச்சாரப் பெண்ணாக ஆரம்பத்தில் இருந்தார் என்று 591ம் ஆண்டு ஒரு குறிப்பு உள்ளது. பின்னர் இயேசுநாதர் அவரை சீர்திருத்தி தனது சிஷ்யையாக ஏற்றுக் கொண்டார் என்று கூறப்படுகிறது.

மேரி மெகதலீன் குறித்து இயேசுநாதரின் சீடர்களான லூக், மார்க், ஜான் ஆகியோரும் நிறையவே குறிப்பிட்டுள்ளனர்.

இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட பின்னர் அவரது ஆண் சீடர்கள் பலரும் போய் விட்டனர். ஜான் மட்டுமே உடன் இருந்தார். அவருடன் உடன் இருந்தவர் மேரி மெகதலீன். அதேபோல இயேசுநாதர் உயிர்த்தெழுந்தபோது அதை முதலில் கண்டவர் மேரி மெகதலீன்தான். இதை ஜானும், மார்க்கும் தங்களது குறிப்புகளில் சொல்லியுள்ளனர்.

இந்த நிலையில்தான் இயேசுநாதருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த மேரி மெகதலீன் உண்மையில் இயேசுநாதரின் மனைவி என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இந்த செய்திகுறித்து இன்னும் என்னென்ன சர்ச்சைகள் கிளம்பு என்றும், இவற்றின் நம்பகத்தன்மை என்வென்று போகபோகத்தான் தெரியும்.

18 September, 2012

யாரிடமும் சொல்லமுடியாத என் தவிப்பு...!




செய்வதாகச் செல்லி
குறையாக விட்ட
சீர்செனத்திக்காக
அழுதுவிட்டுப்போன தங்கை...!

ன்னும் எவ்வளவு காலம்
கொடுத்துக்கொண்டே இருப்பீர்கள்..?
அழுது வடியும் மனைவி...!

கனிடம் கேட்கலாமா வேண்டாமா
என் இயலாமையை அறிந்து
மனதுக்குள்ளே கலங்கும் அம்மா...

கொடுக்கவும் முடியாமல்
மறுக்கவும் முடியாமல்
தவிக்கும் என் தவிப்பை
யாரிடம் சொல்லி அழ...



கவிதைகள்... வாழ்வின் பதிவுகள்...

17 September, 2012

அந்த பிரபல பதிவர்களுக்கு.... ஒரு சிறப்பு கிடாவெட்டு...

 

நிருபர் : ஜாக்கி நீங்கள் சிறுவனாக இருந்த போது நினைத்த ஏதேனும் இப்போது நடந்து உள்ளதா..?

ஜாக்கி சேகர் : “நான் சிறுவனாக இருந்த போது எங்க அம்மா எப்ப பார்த்தாலும் என் தலை முடியைப் பிடித்து இழுத்துக் கொண்டே இருப்பார்கள்.

தலையில் முடியே இல்லாமல் இருந்தால் நல்லது என்று அப்போது நினைத்தேன். அது தற்போது நிறைவேறி உள்ளது..!”


****************************************************


பிலசபி பிரபாகரன் : “என்னைக் கல்யாணம் செய்து கொள். கல்யாணம் செய்துக்கொள் என்று எப்போதும் பார்த்தாலும் நச்சரிக்கிறார்கள்..!”

அஞ்சா சிங்கம் செல்வின் : யார்.. யார்.. நச்சரிக்காங்க..?

பிலசபி பிரபாகரன் : ”வேற யாரு.. எல்லாம் எங்க அம்மாவும் அப்பாவும்தான்..”


****************************************************
(வல்லரசு விஜயகாந்த்)

இரவு நேரம் பன்னிக்குட்டி ராமசாமியும், நாஞ்சில் மனோவும் தங்களுடைய அறையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென்று மின்சாரம் நின்று விட்டது.

நாஞ்சில் மனோ மெழுகுவர்த்தியை ஏற்றி மேசையின்மேல் வைத்தார். இருவரும் சாப்பிடத் தொடங்கினார்.

“ஒரே புழுக்கமாக இருக்கிறது. அந்த பேனைப் போடு” என்று ஏதோ நினைப்பில் சொன்னார் ப.ரா.

“என்ன முட்டாள் தனமாப் பேசறீங்க. பேன் போட்டால் மெழுகுவர்த்தி அணைந்து விடாதா..? பிறகு நாம் எப்படி இருட்டில் சாப்பிடுவது..” என்று கேட்டார் மனோ..!


****************************************************


அதிகம் சாப்பிடும் போட்டி நடந்தது.

அதில் ஆரூர் மூனா செந்தில் கலந்துக்கொண்டு 120 இட்லிகளை ஒரே மூச்சில் சாப்பிட்டு விட்டு முதல் பரிசை பெற்றார்.
 ‌
செந்தில் தன்னோடு இருந்த நாய்-நக்ஸிடம் “நான் சாப்பாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றதை எங்க வீட்டிற்கு சொல்லி விடாதே.” என்றார்.

“ஏன்..?“ என கேட்டார் நாய் நக்ஸ்

“ அப்புறம் எனக்கு வீட்டில் சாப்பாடு போட மாட்டார்கள்” என்றார் செந்தில்.

 ****************************************************
 

கேபிள் சங்கர் ஒரு விளம்பரத்தை படித்தார்...

“இன்று இரவு இங்கு நடனம் ஆடுபவர்கள் அனைவரும் மேலாடையின்றி நடனம் ஆடுவார்கள்” என்று விளம்பரம் படுத்தப்பட்டிருந்தது...

கேபிளாரும் ஆர்வத்துடன் அந்த விழாவுக்கு சென்றார்..

சொன்னபடியே அன்று நடனத்தில் ஆடிய அனைவரும் மேலாடையின்றியே நடனம் ஆடினார்கள்...

ஆனால் கேபிள் சங்கர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்...
காரணம்.. அன்று நடனம் ஆடிய எல்லோரும் ஆண்கள்...

*****************************************

டிஸ்கி : இங்கு பிரபல பதிவர்கள் கலாய்க்கப்பட்டிருக்கிறார்கள்...
இதற்கு அந்த பதிவரே அல்லது வேறு யாராவதோ ஆட்சேபனை தெரிவித்தால் இன்னும் கடுமையாக கலாய்க்கப்படுவாகள் என்று எச்சரிக்கிறேன்...!


தொடரும்....

15 September, 2012

சூர்யாவின் மாற்றான் டிரைலர் / திரைப்பட காட்சிகள்






14 September, 2012

இந்திய தலைவர்களை இழிவுப்படுத்தும் விஜயகாந்த்... இதுவா இவரது சாதனை


தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) செப்டம்பர் 14, 2005 அன்று விஜயகாந்த் தலைமையில் மதுரையில் தொடங்கப்பட்டது. அதன் ஆண்டு விழா இன்று அந்த கட்சியினரால் கொண்டாடப்படுகிறது.
 
கட்சி தலைவரான விஜயகாந்த் தன்னுடைய முன்‌யோசனையற்ற தன்மையால் பல்வேறு விமர்சனங்களுக்கும், பல்வேறு கன்டணங்களுக்கும் ஆளாகியிருக்கிறார்.

விஜயகாந்த் சினிமாவுக்காக எத்தனையோ கதாபாத்திரத்தில் நடித்தவராக இருக்கலாம். காவல் துறை சார்ந்த அவர் நடித்தப்படங்கள் மிகவும் சக்கைப்போடு போட்டவை. அவருடைய வசனங்கள் கைதட்டவைத்தது...
 
ஆனால் அவர் அவைகளை சினிமாவோடு நிறுத்திக்கொள்ளாமல் தன்னுடைய பொதுவாழ்விலும் கடைபிடிப்பதுதான் வேதனையாக இருக்கிறது.
 
தன்னுடைய வாழ்க்கையில் ஒருவர், மூத்த அல்லது தேசிய தலைவர்கள் போன்று அவர்களது வழியை பின்பற்றி அவர்களைப்போல் வாழமுயற்சிக்கலாம். அதற்காக அவர்கள்போல் வேடமிட்டு கொண்டு அவர்களை இழிவுப்படுத்தி வருவது தவறு. 

இதை இவரே விருப்பப்பட்டு செய்கிறாரா அல்லது ‌ஆர்வகோளாரால் அவரது‌ தொண்டர்கள் இப்படி செய்கிறார்களா என்று தெரியவில்லை. எது எப்படியோ அதை செய்யக்கூடாது என்று தொண்டர்களுக்கு கட்டளையிடாதது அமைதிகாப்பதும் குற்றத்திற்கு துணைப்போவதுபோல்தானே...



கருப்பு எம்ஜிஆர் என்று இவரே இவரை சொல்லிக்கொண்டால் எப்படி, மக்கள் சொல்லவேண்டும். எம்.ஜி.ஆர். செய்ய சேவைகள், அவர் நடத்திய அரசியல், அவருடைய பெருந்தன்மை, அவரது சபை நாகரீகம் கொஞ்சமாவது இவர் பின்பற்றினால் சரி என்று ஏற்றுக்கொள்ளலாம். அவைகள் கொஞ்சமாவது இவரிடத்தில் இருக்கிறதா நீங்களே சொல்லுங்கள்.





எம்ஜிஆர் போல் வேடமிட்டது போதாதென்றுமேற்கண்ட தேசிய தலைவர்கள் போலும் இவரை சித்தரிக்கிறார்கள். பாரதியார், சுபாஸ்சந்திரபோஸ், பகத்சிங்,  திலகர் என இவரது அட்டகாசங்கள் நீள்கிறது. இதற்கு நான் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.






இந்த பட்டத்துக்கு நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை நீங்களே சொல்லுங்கள். விஜயகாந்த் தமிழகத்தின் அன்னா ஹசாராவா..?



இது அவரது உண்மை முகம் இது நான்சொல்ல தேவையில்லை. தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும்.



தமிழக வரலாற்றில் ஒரு எதிர்கட்சித் தலைவர் சஸ்பெண்ட் செய்ய காரணமான சம்பவம். சட்டமன்றத்தை கூ்ட இவர் நாடக மேடை என்று நினைத்துவிட்டார் போலும்.



இது போன்ற சிறுபிள்ளைத்தனமான செய்கைகளை இவர் அரசியலில் விட்டால்தான் எதிர்காலத்தில் கொஞ்சமாவது மதிக்கப்படுவார் என்பதில் சந்தேகம் இல்லை. இதுபோன்றே தொடர்ந்தால் என்ன ஆவரோ.....?
Related Posts Plugin for WordPress, Blogger...