கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

30 September, 2011

இப்படியெல்லாம் SMS வந்தா நீங்க என்ன பண்ணுவீங்க....



இன்று மாலை காதல் செய்ய 
நம்மால் சந்திக்க முடியும்?
நான் ஒரு நல்ல மனநிலையில் இருக்கிறேன்...

முத்தம் மற்றும் சின்னகடிக்கு மட்டும் அனுமதி
விரைவில் எனக்கு பதில் சொல்...!

  என்றும் அன்போடு...

"கொசு"

**************************************************************

பையன்: நான் ரோஹித் போன்ற பணக்காரன் அல்ல, 
நான் கூட ரோஹித் போன்று ஒரு கார் வாங்கும் முயற்சியில் இல்லை. ஆனால் நான் உன்னை நேசிக்கிறேன்!

பெண்: நானும் உன்னை காதலிக்கிறேன், 
ஆனால் ரோஹித் பற்றி இன்னும் சொல்லுங்கள் ..
************************************************************** 

கனவு எல்லாம் சாத்தியம், 
நம்பிக்கை எல்லாம் நன்றாக வேலை செய்கிறது, 
காதல் எல்லாம் அழகாகத்தான் செய்கிறாய்..
ஸ்மைல் எல்லாவற்றிற்கும் மேலாக இருக்கிறது..

அதனால் எப்போதும் உன் பல் துலக்க ‌போகிறாய்..?

************************************************************** 


ஒரு துறவி ஒரு ரயில் பயணம் செய்கிறார் அவரிடம் பயணச்சீட்டு பரிசோதகர் சோதனை செய்கிறார்..
TTR : தயவு செய்து உங்க டிக்கெட்டை காட்டுங்க...
துறவி: அப்படி ஒன்றும் என்னிடத்தில் இல்லை

TTR : நீங்கள் எங்கே போக வேண்டும்?
துறவி: ராமர் பிறந்த இடமான, அயோத்திக்கு..!

TTR : வா, போகலாம்!
துறவி: எங்கே?

TTR : இறைவன் Krishna'a பிறந்த இடமான, ஜெயிலுக்கு.
**************************************************************

வணிகவியல் பேராசிரியர் மாணவரிடம் : 
வணிகத்தை தொடங்குவதற்கு நிதி மிக முக்கியமான மூலம்...
அதை எவ்வாறு பெறுவாய்..?


மாணவர்: " என் தந்தையிடமிருந்து". 


************************************************************** 
விஜய் வேலாயுதம் அய்யோ அய்யோ...  விஜய் ‌வேலாயுதம்
வாங்க... வாங்க.... மறக்காம கருத்து சொல்லிட்டு போங்க...

29 September, 2011

கலைஞர், ஜெயலலிதா -வின் விஷப்பரிட்சை... பாடம் கற்க்கப்போவது யார்?

தமிழக அரசியலில் இதுவரை காணாத ஒரு புதிய திருப்பமாக அனைத்துக்கட்சிகளும் தனித்து போட்டி என்ற முடிவு வரவேற்கத்தக்கதா அல்லது  வருத்தப்பட வேண்டியதா என்று தெரியவில்லை.

தமிழகத்தின் பெரிய கட்சிகளான திமுக-வும்,  அதிமுக-வும் எந்த அடிப்படையை மனதில்வைத்து கூட்டணிக்கட்சி‌களை கழட்டிவிட்டது என்று தெரியவில்லை. சட்டமன்ற தேர்தலுக்கு உறுதுணையாக இருந்த கட்சிகளையும் தற்போது கழட்டிவிட்டு தன்னுடைய சுயரூபங்களை காட்டிவிட்டது இந்த இருகட்சிகளும். 

மூன்றாம் அணி என்ற கனவில் இருந்த தேமுதிக தற்போது தான் ஒருசில கட்சிகளை இணைத்துக் கொண்டு தேர்தலை சந்திக்கிறது. மீதமுள்ள கட்சிகளும் தனித்தனியாக தேர்தலை சந்திக்கிறது. இதுவும் நல்லதுக்குதான் எந்தக்கட்சி எவ்வளவு பலம் என்று தெரிந்துவிடும். பொதுவாக உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கு அங்கு நிற்க்கும் வேட்பாளரின் பலத்தை வைத்தே வெற்றி தோல்வி நிர்ணயக்கப்படுகிறது. கட்சி என்பது இரண்டாம் பட்சம்தான். ஆனால் மேயர் பதவிக்கான தேர்தலில் கட்சிகளே பிராதன இடத்தை பிடிக்கும்.

தமிழக உள்ளாட்சித் தேர்தலில், சட்டசபைத் தேர்தலை விட, போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. எல்லாம் பதவி ஆசை தான். பதவி பெறுவதெல்லாம், மக்களுக்கு உதவி செய்வதற்கே என்ற பொருள் பொதிந்த வாசகம், பொருளற்றதாக ஆகிவிட்டது. பொருள் சேர்க்க வேண்டுமா... ஒன்று, ஆன்மிகத்தில் சேர்; இல்லையேல், அரசியலில் சேர் என்ற நிலை, இன்றைய சமுதாயத்தில் ஊறித் திளைத்து விட்டது. தடி எடுத்தவர்கள், தலைதூக்கும் நிலையைக் காண முடிகிறது. 

இது ஒருபுறமிருக்க, தேர்தலில் கூட்டணி எதற்கு? சில கொள்கைகளை ஆணி வேராகக் கொண்டு, கட்சிகள் தொடங்கப் படுகின்றன. அத்தகைய கொள்கைகளை, தேர்தல் காலங்களில் மக்களிடம் எடுத்துக் கூறி, தனித்தே நிற்பது தான், மக்களாட்சியின் அசைக்க முடியாத தத்துவம். இதை விடுத்து, வெற்றிபெற வேண்டுமென்ற ஒரே நோக்கத்தோடு, கூட்டணி அமைத்து தேர்தலில் நிற்பது, மக்களாட்சிக்கு எதிரான செயல் என்றே கருத வேண்டும். வேண்டுமானால், கட்சியைக் கலைத்துவிட்டு, விரும்பும் கட்சியில் சேர்ந்து செயல்படலாம். 

கூட்டணி அமைத்து போட்டியிட்ட பிறகு, தேர்தலில் தோல்வி கண்டவர்கள் சலிப்புற்று, "கூடா நட்பு கேடாய் அமைந்தது' எனக் கூறுவது, எந்தவிதத்தில் நியாயம்? எனவே தான், ஒவ்வொரு கட்சியும், தனித்தே தேர்தலில் போட்டியிடுவது நல்லது.

திமுக-வும் அதிமுக-வும் தற்போது ஒரு விஷப்பரிட்சையில் ஈடுப்பட்டுள்ளது. தனித்துப்போட்டி என்ற இந்த முடிவில் பாடம் கற்கப்போவது தானைத்தலைவரா அல்லது புரட்சித்தலைவியா.. பொருத்திருந்து பார்ப்போம்...

27 September, 2011

பறிகொடுத்து விட்டோம் மூவரை.... நெஞ்சை பதற வைத்த சம்பவம்

திருவள்ளூர் அடுத்த ஒரு 18 கிமீ தூரத்தில் இருக்கும் வெள்ளியூரில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. மாணவர்கள் இன்று காலை 7.00 பள்ளிக்கு வந்து விட்டு காலை உணவுக்காக அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். சாலை ஓரம் இருக்கும் அந்த ஹோட்டலில் தான் சீக்கிறமாக வரும் மாணவர்கள்  காலை டிபன் சாப்பிட்டுவது வழக்கும்.

இன்று காலாண்டு தேர்வு எழுத வந்த +2  மாணவர்கள் அங்கு காலைவுணவு சாப்பிடும் போது அந்த வழியாக வேகமாக வந்த மணல் லாரி தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து அந்த ஓட்டலில் புகுந்தது. அப்போது ஓட்டலில் 9 மாணவர்கள் இருந்தனர் அதில் 3 மாணர்கள் சம்பவஇடத்திலேயே உயிர் இழந்து விட்டனர். 

காயமடைந்த மீதி 6 மாணவர்களுக்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் இரண்டு மாணவர்கள் கவலைக்கிடமாக இருக்கிறார்கள் அவர்கள் மட்டும் சென்னை பொது மருத்துவ‌மனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவத்தைக் நடந்த கொஞ்ச நேரத்தில் 108 மூலமாக மாணவர்கள் திருவள்ளூர் நகருக்கு கொண்டு வரப்பட்டனர். (நான் திருவள்ளூர் இருந்தேன்) நான் விஷயம் அறிந்து  108 வருவதற்க்குள் மருத்துவனைக்கு சென்றேன்.

நான் கண்ட காட்சி என்னை அப்படியே சுக்குநூறாக்கிவிட்டது. ஒரு ஆம்புலென்ஸ் முழுக்க காயப்பட்ட மாவணர்களை பார்த்தவுடன் என்மனது பதறிய பதற்ம் வார்த்தைகளில் சொல்லி மாளாது. அதில் இறந்த மூன்று மாணவர்களின் பார்த்து கதரும் சக மாணவர்களின் குமுறுல் என்னை அ‌‌‌ழ வைத்து விட்டது. அவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து 10.30 மணிக்கு அவர்களுக்கு முதலுதலி அளிக்கப்பட்டது.

மூன்று மாணவர்களின் நிலை மோசமடைவதை அறிந்து அவர்களை சென்னை பொது மருத்துவனைக்கு 108 மூலமாக அனுப்பி வைத்தோம். 11.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் நேரடியாக வந்து சிகிச்சையை துரிதப்படுத்தினர்.

இந்த சம்பவத்துக்கு மிக முக்கிய காரணம் விரைவாக லாபம் ஈட்ட வேண்டும் ‌என்ற மணல் லாரி ஓட்டுனரின் தவறே காரணம். அவர்களின் பணத்தாசைக்கு இன்னும் எத்தனை உயிர்களை நாம் இழக்க போகிறோம்.

இந்த கொடுர காட்சியை பார்த்திலிருந்து இன்னும் நான் சகஜநிலைக்கு வரவில்லை.  லாரி ஓட்டுனர் தப்பி‌யோடிவிட்டார். கனவுகளோடு காலை தேர்வுக்கு வந்த இவர்கள் தற்ப்போது சவக்கிடங்கில். காலத்தை நேரத்தை நான் எப்படிதான் மன்னிப்பதோ...?

எனக்கு தெரிந்து இவ்வளவு பெரிய விபத்து இப்பள்ளியில் நடந்ததில்லை. வெள்ளியூர் தான் எனக்கும் வேடந்தாங்கல் கருணுக்கும் சொந்த ஊர். +2 வரை நாங்களும் இந்த பள்ளியில் தான் படித்தோம்.

இறந்த அந்த மாணவர்களுக்காக ஊரை சோகத்தில் மூழ்கி உள்ளது. 
..

புரிதலின் இடைவெளியில் சில தருணங்கள்.....


டுகளை மேய்த்தே
அறிவு வளர்த்தோன் நம் முன்னோர்...

வாழ்க்கையை நகர்த்த மட்டுமல்ல
வாழ்க்கையைக்கூட கற்றுக் கொடுக்கும்
ஆடு மேய்த்தல்....

டுகளை பின்தொடர்வோர் கற்றுக் கொள்வார்
வாழ்க்கைக்கான பள்ள மேடுகள்...

ன் வாழ்க்கையில் முதல் ஆசிரியர்
இந்த ஆடுகள்தான்...‌


டுகளை தவிர்த்து அளவிடமுடியாது
மனிதனது வரலாற்றை

ஒருவருக்கு அது உணவுப்பொருள்...
அடுத்தவருக்கு அது உயிர்பொருள்...

நேற்று எங்க வீட்டு ‌சொக்கலிங்க தாத்தா 
ஆடு ஓட்டி செல்லவில்லை

ற்போழுது
அவர் கால்களில் முள் தைத்திருந்தது
ஆடுகளுக்கு தெரியாது...

மேய்ச்சலுக்கு போகாமல்

பசியோடு இருக்கும் ஆடுகளின் கோவம்
அவரும் அறிந்திருக்கவில்லை...

புரிதலின் இடைவெளியில்
ஐந்தறிவும்... ஆறறிவும்...


வேலாயுதம் தங்கள் வருகைக்கும்,
வேலாயுதம்
வேலாயுதம் கருத்துக்கும் மிக்க நன்றி... வேலாயுதம்

26 September, 2011

மத்திய அரசின் புதிய கண்டுபிடிப்பு.... இந்தியாவில் ஏழைகளே இல்லையாம்...


கடந்த இரண்டு வாரமாக செய்திதாள்களில் என்னைமிகவும் வேதனைப்பட வைத்த செய்தி ஒன்று வந்துக் கொண்டு இருக்கிறது. அது வறுமைக்கோட்டு கீழ் வாழ்வர்கள் குறித்த செய்திகள் ஆகும். இந்தியாவில் சில மாநிலங்களில் பட்டிச்சாவு நடைப்பெற்றுக்கொண்டிருக்க இந்தியாவில் யாரும் வருமைக்கோட்டுக்கு கீழ் இல்லை என்பது அரசின் முடிவாகும்.

இந்தியாவில், வறுமைக் கோட்டுக்குக் கீழே தொங்கிக் கொண்டிருப்பவர்கள் யார், யார் என, நம் மத்திய அரசு கண்டுபிடித்து அறிவித்துள்ளது. அதன் படி, நகர்ப்புறங்களில் நாளொன்றுக்கு, 32 ரூபாய்க்கு கீழும், கிராமப் பகுதிகளில், 26 ரூபாய்க்கு கீழும் சம்பாதிப்பவர்கள் தான், வறுமைக்கோட்டுக்குக் கீழே தொங்கிக் கொண்டிருப்பவர்கள் என அறிவித்துள்ளது. இது என்ன கொடுமை என்று தெரியவில்லை. நகர்புறங்களில் நாள் ஒன்றுக்கு 32 ரூபாய் வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்..? காலை உணவுக்குமட்டும் கூட இது போதாது.

இதே மத்திய அரசு தான், சில ஆண்டுகளுக்கு முன், "தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் என்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி, கிராமப்புற மக்களுக்கு, நாளொன்றுக்கு, 100 ரூபாய் கூலி வீதம், ஆண்டுக்கு, 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இத்திட்டத்தின் படி, தினசரி, 100 ரூபாய் வீதம் ஆண்டுக்கு, 100 நாட்கள் ஒருவர் தே.ஊ.வே.வா., திட்டத்தில் பணிபுரிந்தால், அவரது ஆண்டு வருமானம், 10 ஆயிரம் ரூபாய், மாத வருமானம் சராசரியாக, 833.33 ரூபாய்; 834 ரூபாய் என்றே வைத்துக் கொள்வோம். 


அரசின் புதிய கண்டுபிடிப்பின் படி, கிராமப் புறங்களில், மாதம், 780 ரூபாய் தினக்கூலி, 26 ரூபாய்க்குக் குறைவாய் வருவாய் ஈட்டுவோரே, வறுமைக் கோட்டுக்குக் கீழே தொங்குவோர். அதன்படி, தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில், ஆண்டுக்கு, 100 நாட்கள் பணிபுரிவோர், வறுமைக் கோட்டுக்கு மேலே நடை பயில்பவர்கள். அதாவது, அவர்களும், "மேட்டுக்குடியினர்' என்றும் பொருள் கூறலாம்.

நகர்ப்புறங்களில் பிச்சைக்காரர்கள் கூட, நாளொன்றுக்கு சராசரியாக, 100 முதல், 150 ரூபாய் வரை வருமானம் (பிச்சை) ஈட்டி விடுவர், அவர்களும் கூட வறுமைக் கோட்டுக்குக் கீழே வரமாட்டார்கள். இலக்கியம், மருத்துவம், அறிவியல் போன்ற துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு, "நோபல் பரிசு' வழங்குகின்றனர். புதிய கண்டுபிடிப்புகளுக்குக் கொடுக்கின்றனரா எனத் தெரியவில்லை. அப்படி கொடுக்கின்றனர் என்றால், அதை இந்தக் கண்டுபிடிப்புக்காக,  நம் மத்திய அரசுக்குக் கொடுக்கலாம்.

இதுபோன்ற மத்திய அரசு தன்னுடைய தவறான அறிக்கையை கைவிட்டு மக்களின் சாதாரான தேவைகளை பூர்த்திசெய்ய இன்று காலகட்டத்தில் இந்த தொகை எள்ளளவுக்கும் போது என புரிந்துக் கொள்ள வேண்டும். மக்களின் உண்மையான நிலையை உலகிற்க்கு அறிவிக்க வேண்டும்.

25 September, 2011

குடிக்கும் கணவனை அடிக்கும் மனைவிக்கு 10 ஆயிரம் பரிசா.. அமைச்சரவை அதிரடி....



"மது குடிக்கும் பழக்கம் உள்ள கணவரை, பொதுக் கூட்டங்களுக்கு அழைத்து வந்து, அவரை அவமானப்படுத்தும் விதத்தில் அடிக்கும் பெண்களுக்கு, ஒரு அடிக்கு ஆயிரம் ரூபாய் வீதம், 10 ஆயிரம் ரூபாய் வரை ரொக்கப் பரிசு வழங்கப்படும்'' என, ஆந்திர நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டி.ஜி.வெங்கடேஷ் தெரிவித்தார்.

ஆந்திரா கர்னூல் நகரில், நேற்று முன்தினம் (வெள்ளியன்று) நடந்த விவசாயப் பெண்கள் கருத்தரங்கில், கலந்து கொண்டு பேசிய அவர் கூறியதாவது: 

பெண்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்தை, மது குடிக்கும் பழக்கமுள்ள, அவர்கள் கணவர்கள் வீணாகச் செலவிடுகின்றனர். கணவர்கள் மது அருந்துவதால், பெண்களின் வருமானம் எல்லாம், சாராயத்திற்குச் சென்று விடுகிறது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவர்களை, அவர்களது மனைவியர், இதுபோன்ற பொதுக்கூட்டங்களுக்கு அழைத்து வந்து, மக்கள் மத்தியில் நிற்க வைத்து, அடிக்க வேண்டும். 
கணவரை அவமானப்படுத்தும் விதத்தில், இப்படி அடிக்கும் பெண்களுக்கு, ஒரு அடிக்கு 1,000 ரூபாய்க்கு குறையாமல், 10 அடி அடித்தால், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசாக, அந்த இடத்தில் வழங்கப்படும். கணவரை 10 அடி அடிக்கும் பெண்கள், 10 ஆயிரம் ரூபாயை பம்பர் பரிசாக பெற்றுக் கொள்ளலாம். தெலுங்கானா பகுதியில், போராட்டங்கள் தொடர்ந்தாலும், மதுக்கடைகள் மட்டும், முழுவீச்சில் செயல்படுகின்றன. இவ்வாறு, வெங்கடேஷ் கூறினார். (தினமலர்)

சில மாநிலங்களில் அரசே குடிப்பதற்க்கு தூண்டிவிடு இந்த சூழலில் இதுப்போன்று மதுவுக்கு எதிரான பிரச்சாரம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது. தொடரட்டு இந்த பணி...

இதை தமிழகத்தில் அறிவித்தால் எல்லா கணவரும் வடிவாங்குவாங்க போல...

24 September, 2011

தனுஷின் மயக்கம் என்ன .... கதை மற்றும் டிரெய்லர்..


செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் ரிச்சா கங்கோபாத்யாய் நடிக்கும் படம் ‘மயக்கம் என்ன’. தீபாவாளி வெளியீடாக வர இருக்கும் இப்படத்தின் அதிகார பூர்வ டிரெய்லர் நேற்று இரவு வெளியிடப்பட்டது.

இப்படத்திற்கு ‘இசை இளவல்’ ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் முன்பே வெளியாகி விட்டன.

டிரெய்லரை பார்த்ததில் இருந்து தனுஷ் கேரக்டரின் பெயர் கார்த்திக் என்பதும், அவர் ஒரு பத்திரிகையில் புகைப்படக்கார்ராக பணியாற்றுகிறார் என்பதும், அவருக்கும் ரிச்சாவிற்குமான ஊடலும் கூடலுமான காதல்தான் இப்பட்ம என்பது தெரியவருகிறது.


‘மயக்கம் என்ன’ படம் அடுத்த தலைமுறையினரின் பிரச்னைகளை பேசுகிற படம் என்று இயக்குனர் செல்வராகவன் கூறினார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள செல்வராகவன் படம் பற்றி கூறியதாவது: இது அடுத்த தலைமுறை கதை. அவர்களின் பிரச்னைகளை பேசும் படம். ‘மயக்கம் என்ன’ படம் ஒவ்வொரு வீட்டிலும் பார்க்கும் நம் வீட்டு கதை என்று சொல்லலாம். 
தனுஷ், ரிச்சா இருவரையும் சுற்றிதான் கதை நகர்கிறது. ஆனால், இது காதல் கதை இல்லை. காதலும் உள்ள கதை. இதில் நானும் தனுஷும் பாடல்கள் எழுதியுள்ளோம். அவை சிறப்பாக வந்துள்ளன.


மயக்கம் என்ன டிரெய்லர்...

சாமியாராக ட்ரெயினிங் எடுத்தா..தலைவருக்கு அது கிடைக்குமா..?


“என்ன ஆடி மாசம் மட்டும் கபாலி மாமூலை குறைவா கொடுப்பானா?”
“ஆமா... இது கேடி தள்ளுபடியாம்...!”

xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx
  “என்ன தலைவரே ஆசிரமத்தில் இருந்து வர்றீங்க...?”
“சாமியராக ட்ரெயினிங் எடுத்துட்டு வர்றேன்...!”
xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx


“கறவை மாடு திருடி போலீஸ்ல மாட்டிக்கிட்டியே... 
அப்புறம் என்னாச்சு..?”
“நிறைய கறந்துட்டாங்க...!”
xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx 


“ நீங்க ஏன் சிகரெட்டை பாதி பாதியா பிடிச்சி தூக்கிப் போடுறீங்க...?”
““டாக்டர்தான் என்னை சிகரெட் பிடிக்கிறதை பாதியா குறைச்சிக்க சொன்னறாரு..!”
xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx


கேடி 1 : கபாலி! உன்னைப் போலீஸ் தேடுது.

கபாலி : நான் இந்த மாசம் ஒரு தப்பும் பண்ணலியே.

கேடி 1 : அதான், ஏன் பண்ணலைன்னு தேடுது


xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx
'டாக்டர், என் பையன் அஞ்சு ரூபாய் காயினை முழுங்கிட்டான்...''

''சீக்கிரமா போய் பெரிய டாக்டரைப் பாருங்க!''

''ஏன், நீங்க பாக்க மாட்டீங்களா..?''

''நான் ரெண்டு ரூபாய் காயின் வரைக்கும்தான் பார்ப்பேன்...'' 
xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx 

கடைசியா ஒன்னு..



நம்ம மக்கள் மகிழ்ச்சியா இருக்கனும்..
என்ன நான் சொல்றது...

23 September, 2011

தடம்மாறுது தேமுதிக.., உள்ளாட்சியில் கூட்டணி அமைக்க காங்கிரஸிடம் திடீர் ரகசியப் பேச்சு


உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவால் கிட்டத்தட்ட கழற்றி விடப்பட்டு விட்ட தேமுதிகவுக்கும், திமுகவால் கழற்றி விடப்பட்டு விட்ட காங்கிரஸுக்கும் இடையே கூட்டணி வைத்துப் போட்டியிடுவது குறித்த ரகசியப் பேச்சுக்கள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தனித்துதான் போட்டி என்ற கொள்கையுடன் செயல்பட்டு வந்த தேமுதிக கடந்த சட்டசபைத் தேர்தல் மூலம் முதல் முறையாக கூட்டணி அரசியலில் புகுந்தது. யாருடைய வாக்குகளைப் பிரித்து வந்தது அதே அதிமுகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டது. கூட்டணி முடிவான பின்னர் தொகுதிப் பங்கீட்டில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதனால் அதிமுக தன்னிச்சையாக தான் போட்டியிடும் தொகுதிகளை அறிவித்து தேமுதிகவுக்கு ஷாக் கொடுத்தது.

பின்னர் சமரசப் பேச்சுக்கள் நடந்து இணைந்து போட்டியிட்டனர். அதிமுக ஆட்சியைப் பிடித்தது. தேமுதிகவுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைத்து, இன்று எதிர்க்கட்சியாகியுள்ளது.

இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் இடப் பங்கீட்டுக்காக கூட்டணிக் கட்சிகள் காத்திருந்த நேரத்தில் அத்தனை இடங்களுக்கும் அதிரடியாக தனது வேட்பாளர்களை அறிவித்து கதவை மூடி விட்டார் ஜெயலலிதா. இதனால் தேமுதிக கடும் அதிர்ச்சியில் மூழ்கியது. தேர்தல் தேதி அறிவித்து, வேட்பு மனு தாக்கலும் தொடங்கி விட்டதால் என்ன செய்வது, எங்கு போவது, எப்படிப் போவது என்பது தெரியாமல் தேமுதிகவினர் குழப்பத்தில் உள்ளனர்.

தற்போது இடதுசாரிகளை மட்டும் அழைத்து அதிமுக பேசி வருகிறது. அதிலும் உடன்பாடு ஏற்பட்டதாக தெரியவில்லை.

இந்த நிலையில் தேமுதிக தரப்பிலிருந்து, காங்கிரஸ் தரப்புடன் ரகசியப் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. காங்கிரஸும் திமுக கூட்டணியில் இருந்து வந்தது. ஆனால் திமுக திடீரென தனியாகப் போட்டியிடப் போவதாக அறிவித்து விட்டதால் காங்கிரஸ் குழம்பிப் போய் நிற்கிறது. இரு கட்சிகள் சார்பிலும் யார் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் பேச்சுவார்த்தை ஏற்கனவே தொடங்கி விட்டதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படி திமுக, அதிமுகவால் திராட்டில் விடப்பட்ட காங்கிரஸும், தேமுதிகவும் திடீரென பேசத் தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பேச்சுக்கள் கனிந்து, புதுக் கூட்டணி உருவாகுமா, அதில் இடதுசாரிகள் இணையுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

22 September, 2011

இப்படியெல்லாம் யோசிச்சாதான் நல்லதாம்...


“என்ன சார் இது... நடுரோட்டுலே நின்னுகிட்டு ஆகாயத்தைப் பார்த்துக்கிட்டிருக்கீங்க?”

“நின்னுகிட்ட யோசனை செய்யறதுதான் நல்லதுன்னு சொல்றாங்க...!”
 
“கலிபோர்னியா பல்கலைக்கழகத்துலே உள்ள ஓர் ஆராய்ச்சியாளர் (Masx Vercryssen) அப்படி சொல்றார்..!”

“எப்படி..?”

“உட்கார்ந்து கொண்டு ஒரு விஷயத்தைப்பற்றி யோசிக்கிறதைவிட நின்று கொண்டும், நடந்துக்கொண்டும், யோசித்தால் சீக்கிரமாக ஒரு முடிவுக்கு வரமுடியும்ங்கறார்.. அவர்!”

”அவர் சோதனையெல்லாம் செய்து பார்த்துட்டு தான் அதைச் சொல்லியிருப்பார்..!”

“ஆமாம்..! குறிப்பா... கடுமையான சூழ்நிலையிலே மன இருக்கத்துடன் வேலை செய்கிறவர்கள் நின்று கொண்டு யோசித்தால் 5 முதல் 20 சதவீதம் சீக்கிரமா முடிவு எடுத்துடறாங்களாம்..!”

“ஆகக் கூடி... நாற்காலியிலே உட்கார்ந்துகிட்டு யோசிக்கிறதைவிட நடந்துகிட்டு யோசிக்கிறது நல்லதுங்கறீங்க..?”

“ஆமாம்..!”

“அதுக்காக இப்படி நடுரோட்டுலே நாலுபக்கமும் பஸ் லாரியெல்லாம் படுவேகத்துலே வந்துகிட்டிருக்கிற இந்த இடத்துலே நின்னுக்கிட்டா நீங்க யோசிக்கணும்..?”

“ஹி.. ஹி்... ! என்ன பண்றது?  அவசரத்துலே வேறே இடம் கிடைக்கலே...!”

“சரி.. அப்படி என்னதான் யோசிக்கிறீங்க..?”

“பெரிய ஆஸ்பத்திரிக்கு உடனே போகணும். அதுக்கு என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன்..!”

“வேற ஒண்ணும் பண்ண வேணாம். இதே இடத்தில இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே நின்னுகிட்டிருங்க. யாராவது கொண்டுக்கிட்டுப் போய் சேர்த்துடுவாங்க...!” (நன்றி வாரம் ஒரு தகவல்)

எது எப்படியோ சரியான சிந்தனையுடன் சரியான கண்ணோட்டத்துடன் யோசிக்கும்போது ஒரு விஷயத்திற்கும் சரியான முடிவுகிட்டும்.  அவசரத்தில் எடுக்கும் எந்த முடிவும் சரியானதான இருக்காது. பொருமையுடன் யோசிக்கும்போது மட்டுமே நல்ல தீர்வுகள் நமக்கு கிடைக்கின்றன.

அவசரத்தில் சில முடிவுகள் எடுத்துவிட்டு பின்பு வருந்துவதை விடுத்து முடிவுகள் எடுக்கும் ‌போதே பொறுமையை கடைபிடித்தால் அந்த விஷயம் வெற்றியை சந்திக்கும். 


படிச்சி முடிச்சாச்சி நீங்க இப்ப என்ன யோசிக்கிறீங்கன்னு 
நான் சொல்லட்டுமா....
கருத்து சொல்லலாம ... ஓட்டு போடலாமா... அப்படின்னுதானே...

21 September, 2011

பிரபல பதிவர்களின் வெளிவராத ரகசியங்கள்..கிசுகிசுப்பது பச்சைக்கிளி பாண்டியம்மா....

கிசுகிசு-1
தமிழ்மணத்தில் இந்த வாரமும் தன்னுடைய முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்ட அந்த பிரபல பதிவர்.. இந்த வாரம் ஏதும் கில்மா படம் வராததில் செம கடுப்பில் இருக்கிறார். சில தமிழ் படம் பார்த்து பல்பு வாங்கிய பின் அதை அட்லீஸ் பதிவையாவது ஹிட் செய்து விடலாம் என்ற முனைப்பில் இருக்கிறார். (விட்டில் வாங்கும் பல்புகளை இங்கு குறிப்பிட விரும்பவில்லை)

கிசுகிசு-2
பறவைகளுக்கு சரணாலையம் அமைத்த இந்த பதிவரின் பதிவை கிண்டலடிக்க யாராவது ஒரு அனானி வந்துவிடுகிறார் ஆகையால் இந்த அனானிகளை அழித்துவிட தற்போது பெரிய ரப்பர் ஒன்றை தயாரித்துக் கொண்டிருக்கிறார். பரபரப்பாக பேசபட பதிவுகளுக்கு எப்படி தலைப்பு வைப்பது என்று தற்போது வகுப்புகள் எடுத்து வருகிறார்.

கிசுகிசு-3
மொக்கை பதிவுபோட்டு பிரபலமான சகதியில் உருளும்  பன்றியை அடைமொழியாக வைத்த இவர் தற்பபோது ‌எல்லா பதிவரும் மொக்கை பதிவை போட ஆரம்பித்தபிறகு அதனை படித்து விட்டு ‌முடியால் செம கடுப்பில் இருக்கிறார். இதை மையப்படுத்தி ஒரு பதிவும் இட்டுள்ளார். இதைவிடுத்து தொடர் கதை எழுத அதற்க்கு வரவேற்பு இல்லாததில் செம கடுப்பில் இருக்கிறார். (இங்கு வந்து என்னத்த பண்ணபோராரோ...)

கிசுகிசு-4
மதுரையில் இருந்து தமிழ் வாசிக்கும் இவர் தன்னுடைய பதிவுகளை எப்படியாவது மகுடம் சூட்டவேண்டும் என்று ஏகப்பட்ட தமிழ்மண கள்ளஓட்டுக்களை கைவசம் வைத்திருக்கிறார். அப்படியிருந்தும் முடியாததலால் நல்ல ஜோசியரிடம் யோசனை கேட்டுவருகிறார். (நல்ல நேரம் சதீஷ் கிட்ட இல்லிங்க நல்ல ஜோசியர்கிட்ட அட சதீஷ் ரொம்ப நல்லவருங்க) தன்னை தமிழகம் முழுவதும் பிரபலபடுத்த கடந்த வாரம் ரகசியமாக சென்னைக்கும் ஒரு விசிட் அடித்துள்ளார்..

கிசுகிசு-5
நெஞ்சில் மனோரஞ்சிதம் வைத்திருக்கும் இந்த பிரபல பதிவர் தன்னுடைய பழைய காதலை ஞாபகப்படுத்தி பதிவிட்டதில் அன்றிலிருந்து வீட்டில் சேர்க்கமால் விரட்டியடித்திருக்கிறர் அவர் வீட்டு தாய்குலம். தற்போது வேலை செய்யும் இடத்தில் தங்கியுள்ளதாக பக்ரைன் நாட்டு உளவு துறை அறிவித்துள்ளது... (இன்னு‌ம் நிறை காதல் மனதில் வைத்துக்கொண்டும் அதை பதிவிடும் முடிவை மாற்றியிருக்கிறார்)

கிசுகிசு-6
விக்கி விக்கி பேசும் உலகில் இருக்கும் இந்த பதிவர் மும்மூர்த்திகள் பதிவு போட்டதிலிருந்து வியட்நாமில் செம பல்பாம். போகும் வழியெங்கும் இவருக்கு வசையுடன் செமயா ஓடவிடுவதாக தகவல். அதனால்தான் அதைமறைக்க காமெடி வீடியோ படங்களை தன் பதிவில் நிரப்பி பதிவிட்டுவதாக தகவல்.
 
கிசுகிசு-7

எவ்வளவு சொல்லியும் நம்மை தமிழ்மணத்தில் வார பட்டியலில் இடம்பிடிக்க முடியவில்லையே என தமிழ்மண நிர்வாகிகளுக்கு மிரட்டல் விடுத்திருக்கிறார். அதற்கு அவர்கள் ஏதும் பதில் சொல்லாததில் செம கடுப்பில் இருக்கிறார் வந்தேமாதரத்தைச் சார்ந்த இவர்.

 இதுதான் பல்பு....

டிஸ்கி-1 : இந்த பதிவிற்க்கும் எனக்கும் சம்மந்தமில்லை. இது ஒரு விளம்பரதாரர் பதிவு.

டிஸ்கி-2 : இதையும் மீறி யாராவது பின்னூட்டத்தில் மிரட்டல் விடுத்தால் அவர்களுக்கு தனிப்பதிவிட்டு அவர்களின் அந்தரங்கம் அத்தனையும் அரங்கேற்றப்படும் என்று எச்சரிக்கிறேன்.

டிஸ்கி-3. கிசுகிசுக்கள் தொடரும்.....

20 September, 2011

படுத்துவிட்ட கலைஞரின் ராஜதந்திரம்... அழிவைநோக்கியா செல்கிறது திமுக...?

ஒரு பெரிய குழப்பாமான சூழலில் தற்போது திமுக எதிக்கொண்டுள்ளது. ஆட்சியை காப்பாற்ற அல்லது ‌அதை தக்கவைக்க கலைஞர் அவர்கள் எந்த ஒரு முடிவையும் எதிர்கொள்வார் ஆனால் அதை தக்க வைக்க தற்ப்போது எந்த ஒரு பிடிப்பு இல்லாமல் இருக்கிறார். அவர் இதுவரை மேற்க்கொண்ட சாணக்கயத்தனத்திற்க்கான உதாரணங்கள்...

"மறைந்த பிரதமர் இந்திராவினாலேயே தி.மு.க.,வை ஒன்றும் செய்ய முடியவில்லை. அதற்காக தன் வருத்தத்தை தெரிவித்துக் கொண்டார்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி திருவாய் மலர்ந்திருக்கிறார். "தி.மு.க.,வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது' என்றும் கூறுகிறார். அவர் எப்படி தி.மு.க.,வை இதுவரை காப்பாற்றினார் என்பதற்கு சில உதாரணங்கள்:

"இந்திராவை சேலை கட்டிய ஹிட்லர்' என, கூட்டத்திற்கு கூட்டம் வர்ணித்த கருணாநிதி, சர்க்காரியா கமிஷனை எதிர்கொள்ள, கூட்டணிக்கு அவர் காலில் விழுந்து, "நேருவின் மகளே வருக; நிலையான ஆட்சியைத் தருக' என, முழுக்கமிட்டு தி.மு.க.,வைக் காப்பாற்றினார்.

எம்.ஜி.ஆர்., மறைவு வரை, "கூடா நட்பு' காங்கிரசின் ஆதரவில் தி.மு.க.,வைத் தன் பக்கம் வைத்துக் கொண்டார். எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின், அ.தி.மு.க.,வை உடைத்து, அ.தி.மு.க., (ஜெ) என்றும் அ.தி.மு.க.,(ஜா) என்றும் நாமகரணம் சூட்டி மகிழ்ந்து காப்பாற்றிக் கொண்டார்.
அதற்குப் பின் மூப்பனாருடன் கைகோர்த்து, ஆட்சியைப் பிடித்து, தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டார். கூடாநட்பு காங்கிரசுடன் எக்காரணத்தைக் கொண்டும் அ.தி.மு.க., சேரவிடாமல், ஜெயலலிதா எப்போதோ சோனியாவை விமர்சித்துப் பேசியதை, இவரும், இவரது அடுத்த மட்ட தலைவர்களும், "ரிபீட்' செய்து பேசி, காங்கிரசை தந்திரமாக, அ.தி.மு.க., கூட்டணியில் சேர விடாமல் தடுத்துத் தன் கட்சியைக் காப்பாற்றிக் கொண்டார்.
தி.மு.க., தன் சொந்த பலத்தில் நின்று ஜெயித்ததாக வரலாறு கிடையாது. இப்போது தி.மு.க., தன் கடைசி கட்டத்தை எதிர் நோக்கியிருக்கிறது. தன் மகன்களே தனக்கு எதிராக செயல்படுவது, கழகக் கண்மணிகள் ஒவ்வொருவராக அந்தந்த மாவட்ட சிறைக்குச் செல்வது, கூடா நட்பு காங்கிரஸ் தன்னை விட்டு விலகி நிற்பது, 
சோனியா இவரைச் சட்டை செய்யாதது, பா.ம.க., மற்றும் விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர்கள் மணிக்கொருதரம் கோபாலபுரம் செல்லும் நிலை மாறி, அவர் முகத்தைக் கூட பார்க்க துணியாதது என, பல சம்பவங்கள் நடந்துவருகின்றன. அரசியல் புயலில் தி.மு.க., நிலைத்து நிற்க, பெரிய அளவில் சுயபரிசோதனை தேவை.

19 September, 2011

அந்த இரண்டையும் கொடுக்கிறது அவள் பார்வை..



ன் கண்களிலும் இருக்கிறது
புவிஈர்ப்பு வி‌சை...
அதனால்தான்
சுற்றிக்கொண்டு இருக்கிறேன் உன்னையே...!
கவ வீதி
போர்வாள்தான் கூர்மையானது
என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்
உன் விழிக்கூர்மையால் காயப்படாதவர்கள்....


மின்னலை நேரடியாக பார்க்கக்கூடாது
என்று எனக்கு தெரியும்...
அதனால்தான் உன் கண்களை பார்க்க பயமாகஇருக்கிறது எனக்கு.... 

kavithaiveedhi.blogspot.com
தாய்மொழியை  வைத்துக்கொண்டு
வார்த்தைகளுக்கு ஏனடி வஞ்சனை...

மொ‌ழிகளால் பேசினால் புரிந்துக் கொள்ளலாம்
விழிகளால் பேசினால் என்ன செய்ய...
அந்தரங்கம் அந்தரங்கம் அந்தரங்கம்
ரு வார்த்தைக்கு
ஒரு பொருள்
ஒரு பார்வைக்கு...?

காயப்படுத்தவும்
அதற்கு மருந்திடவும்....


ரணப்படுத்தவும் 

அதற்குபின் உயிரூட்டவும்....

போவென்று சொல்லவும்
அதன்பின் வாவென்றழைக்கவும்....
உன் பார்வையையே பயன்படுத்துகிறாய்...

டி..பெண்‌ணே..
உன்கண்களால் மட்டுமே முடிகிறது...

காதல் எனும் நோய் கொடுக்கவும்
அதை காதல் கொண்டே மருந்திடவும்...!!



மையக்குறள்

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து

(குறிப்பறிதல் / களவியல் / குறள் 1091)

பொருள் :
மைதீட்டிய அவள் கண்களில் இரண்டுவகை பார்வைகள் உள்ளன. ஒன்று காதல் நோய்தருவது, மற்றொன்று அந்நோயை தீர்க்கும் மருந்து.


தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...!

12 September, 2011

கலைஞரை விட ராஜபக்சேவே மேல் - சீமான் ஆவேசம்...

தமிழர் விஷயத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் செயற்பாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பரவாயில்லை. அவர் இன உணர்வுடன் செயற்படுகிறார் என்று விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மன வேதனையுடன் தன்னிடம் கூறியதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
 
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவருக்கும் மரண தண்டனையை ரத்துச் செய்யும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டத்தில் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் பேசுகையில்:

கடந்த 2008 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தம் ஆரம்பமாவதற்கு சில தினங்களுக்கு முன்னதாக விடுதலைப் புலிகளின் தலைவர் மேற்கண்டவாறு கூறினார். கருணாநிதி ஈழப்படுகொலையைத் தடுத்து நிறுத்தத் தவறியது மட்டுமல்லாமல் ஈழத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட உச்சக்கட்ட கொடுமைகளை வெளி உலகுக்குக் கொண்டு சேர்க்கவும் தவறிவிட்டார்.

மேலும் பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகனை ஏன் இன்னும் தூக்கில் போடவில்லை என்று 7 முறை மத்திய அரசுக்கு நினைவூட்டல் கடிதங்களும் எழுதியிருக்கிறார்.
 
இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் இந்திய அளவில் தெரியவந்து, இலங்கையைப் பொறுத்தவரை இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்கிற விவாதம் எழுந்திருக்கும் வேளையில் ஒட்டு மொத்த ஊடகங்களையும் தமிழர்களையும் திசை திருப்புவதற்காக அவசரவசரமாக கடந்த 9 ஆம் தேதி தூக்குத் தண்டனையை நிறைவேற்ற காலக்கடு விதித்தது ஏன்.?

இந்தியாவின் இறையாண்மை என்பது தமிழர்களுக்கு எதிரானது என்றால் அந்த இந்திய இறையாண்மைக்கு நாம் எதிரிதான். மும்பைக் குண்டு வெடிப்புக்குத் தமிழன் உட்பட கண்டனம் தெரிவிக்கும் நிலையில் தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கொல்லப்படும் போது அதனை எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்று ஏன் மற்றவர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை?  இவ்வாறு அவர் கூறினார்.

10 September, 2011

இதய பலகீனமானவர்கள் பார்க்க தடை! இம்புட்டும் நம்ம தமிழகத்தில்தான்....


தமிழ் சினிமா வளர்ச்சியடைந்துள்ளதாக சில சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் இது போலித்தனமானது. சினிமாவுக்கு நல்லதல்ல, என்றார் தமிழ் சினிமா ஜாம்பவான்களில் ஒருவரான பஞ்சு அருணாச்சலம்.

சூப்பர் டீம் சினிமாஸ் தயாரிக்கும் "நந்தா நந்திதா" படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேபில் நடந்தது. முதல் இசைத் தட்டை பஞ்சு அருணாசலம் வெளியிட, தயாரிப்பாளரும் இயக்குநருமான கேயார் பெற்றுக்கொண்டார்.

விழாவில், பஞ்சு அருணாசலம் பேச்சு, திரையுலகினருக்கே ஒரு புதிய சிந்தனையை ஏற்படுத்துவதாக அமைந்தது.

அவர் பேசுகையில், "முன்பெல்லாம் வருடத்துக்கு 60 படங்கள்தான் திரைக்கு வரும். அதில், 30 படங்கள் நஷ்டம் அடையாது. 20 படங்கள் நூறு நாட்கள் ஓடும். 5 படங்கள் வெள்ளிவிழா ஓடும். 5 படங்கள் மட்டும் நஷ்டம் அடையும். ஒரு படம் தயாரிக்க முப்பதாயிரத்தில் இருந்து நாற்பதாயிரம் அல்லது சில லட்ச ரூபாய்தான் ஆகும். முப்பது அல்லது நாற்பது நாட்களில் படம் தயாராகி விடும்.

ஆனால் இப்போது, வருடத்துக்கு 160 படங்கள் திரைக்கு வருகின்றன. அதில், மூன்று அல்லது நான்கு படங்கள்தான் ஓடுகின்றன. ஒரு படம் தயாரிக்க 80-ல் இருந்து 200 நாட்கள் வரை ஆகிறது. முன்பு திறமைக்கு மதிப்பு இருந்தது. இப்போது பணத்துக்குத்தான் மதிப்பு இருக்கிறது. பணத்தை வைத்துதான் வெற்றி நிர்ணயம் செய்யப்படுகிறது. போலித்தனமான வெற்றிகள் அதிகமாகி விட்டன. இந்த போலித்தனமான வெற்றியும் வளர்ச்சியும் சினிமாவுக்கு உதவுமா?


இளையராஜா சம்பளம்

"அன்னக்கிளி" படத்துக்கு இசையமைக்க இளையராஜாவுக்கு நான் கொடுத்த சம்பளம் வெறும் மூவாயிரத்து ஒன்றுதான். அவர், 100 படங்களுக்கு இசையமைத்த பின்புதான் ஒரு லட்சம் சம்பளம் வாங்கினார். அதுவரை ரூ 25 ஆயிரம் பெற்றுக் கொண்டார். சம்பளத்தை விட சாதனையைத்தான் அவர் பெரிதாக நினைத்தார்.

ஆனால் இப்போது, படம் இரண்டு வாரம் ஓடி கொஞ்சம் வசூல் செய்தால் போதும். அந்த படத்தின் கதாநாயகன், கதாநாயகி, டைரக்டர் தங்களின் அடுத்த படத்துக்கு 75 லட்சத்தில் இருந்து 80 லட்சம் வரை சம்பளம் கேட்கிறார்கள். இசையமைப்பாளர்கள் கோடிகளில் சம்பளம் பேசுகிறார்கள்.

யார் திறமைசாலி என்பதில் போட்டி இல்லை. யார் அதிக சம்பளம் வாங்குவது? என்பதில்தான் இப்போது போட்டி இருக்கிறது. இது நல்லதா... சினிமா எப்படி வளரும்?," என்றார்.

தயாரிப்பாளர்களை கரை சேர்ப்பேன்

படத்தின் இயக்குநர் ராம் ஷிவா பேசுகையில், "நான் சினிமாவில் மிகுந்த கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தேன். கதை, திறமை எல்லாம் இருந்தும் அதைக் காட்ட வழியின்றி தவித்தபோது, என் நண்பர்கள் எம்.கோவிந்தராஜ், எம்.நாகராஜ், ஜி.பூபால் ஆகிய மூவரும் படம் தயாரிக்க முன்வந்தார்கள்.

அவர்கள் என்னிடம் இரண்டு வாய்ப்புகளை முன் வைத்தனர். ரூ 25 லட்சம் தருகிறோம். மனைவி மக்களோடு ஊருக்குப்போ. பணத்தை திருப்பிக் கூட தர வேண்டாம். அல்லது ரூ 40 லட்சம் தருகிறோம், படம் பண்ணு என்றனர். அவர்களிடம், இன்னும் கொஞ்சம் மேலே பணம் போட்டு, நீங்களே தயாரிப்பாளராக இருங்கள். நான் ஒரு படம் செய்கிறேன். நிச்சயம் ஜெயித்துக் காட்டுகிறேன், என்றேன். நம்பி வந்தனர். நான் நேராக கேயாரிடம் அழைத்துப் போய் வழிகாட்டச் சொன்னேன். அவரது வழிகாட்டுதலில் படம் நல்லபடியாக முடிந்துவிட்டது.

என்னை நம்பி வந்த அந்த மூன்று தயாரிப்பாளர்களையும் நஷ்டமில்லாமல் கரை சேர்த்துவிடுவேன் என்ற நம்பிக்கை வந்துவிட்டது," என்றார்.

நடிகர் நாசர், கேயார், இயக்குநர் ஜனநாதன், இசையமைப்பாளர் எமில், ஒளிப்பதிவாளர் சீனிவாசரெட்டி, படத்தின் கதாநாயகன் ஹேமச்சந்திரன் ஆகியோரும் விழாவில் பேசினார்கள்.

பட அதிபர்கள் எம்.கோவிந்தராஜ், எம்.நாகராஜ், ஜி.பூபால் ஆகிய மூவரும் வரவேற்றார்கள்.

09 September, 2011

தமிழ் உலகம் வடிவேலுவை தவிர்ப்பது நியாயம்தானா...? வைகைபுயலின் அடுத்த நம்பிக்கை ரஜினி...!


ன்ராசாவின் மனசுல படத்தில் சாதாரண ஒரு கிராமத்துப் பையன்போல் எலும்பும் தோலுமாய் கருப்பு நிறத்தில் ஏதோ ஒரு துணைநடிகர்போன்று காட்சிஅளித்து... சினிமாவுக்கு வேண்டிய எந்த தகுதியும் இல்லாமல் திரையுலகில் நுழைந்து தன்னுடைய இயல்பான நகைச்சுவையாலும், தன்னுடைய நடிப்பாற்றலாலும் தன்னுடைய உடல் அசைவுகளாலும் இந்த தமிழினத்தையே சிரிக்க வைத்தவர் வைகைப்புயல் வடிவேலு. 

உதைத்து... உதைத்து.... (கவுண்டர்மணி-செந்தில்) நகைச்சுவை செய்துக்கொண்டிருந்த காலத்தில் உதைவாங்கி இவர் செய்த நகைச்சுவைகள் மக்கள் மனதில் பசையென ஒட்டிக்கொண்டது.

2000-ங்களுக்கு பிறகு தனக்கென தனிபாணியை வைத்துக் கொண்டு 10 ஆண்டிகளில் நகைச்சுவையின் உச்சத்திற்க்கு சென்றுவிட்டார். படத்திற்க்கு படம் வித்தியாசமான உருவம், தலைமுடி, மீசை, நடை, உடை, பாவனைகள் மாற்றி 6 வயது குழந்தை முதல் 60 வயது பெரியவர் வரை அத்தனைப்பேரையும் சிரிக்க வைத்தவர் நமது வடிவேலு.

மதுரையில் புறப்பட்டு சென்னையில் மையம் கொண்ட இந்த வைகை புயல் தற்ப்போது என்ன செய்வதென்று தெரியாமல் புயலுக்குபின் தோன்றும் ஒரு அமைதியில் இருக்கிறது. 

விஜயகாந்த்துக்கும் வடிவேலுக்கும் வண்டிநிறுத்துவதில் ஏற்ப்பட்ட மனஸ்தாபம், மற்றும் சிங்கமுத்துவிடம் நில வாங்கி ஏமாந்த போது உதவாத கேப்டன் மீது ஏற்ப்பட்டு வருத்தமும், கேப்டன் பற்றி விமர்சிப்பதா என்று தேமுதிக தொண்டர்கள் வடிவேலுமீது ஏற்படுத்திய சில கசப்பான சம்பவங்கள் மட்டுமே இவரை விஜயகாந்துக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட வைத்தது.

ஒரு அரசியல் பிரச்சாரம் அதுவும் தன்னை அவமானப்படுத்தியர் மீது தான் கொண்டுள்ள கோவத்தை தீர்த்துக் கொள்ள பயன்படுத்திக்கொண்டார். அரசியலில் நடந்த அந்த கசப்பான நிகழ்வுகளை மக்களே மறந்த நிலையில் தற்போதைக்கு எந்த பட தயாரிப்பாளர்களும் வடிவேலுவை பயன்படுத்தாதது மிகவும் தவறான வழிமுறையாகும் மற்றும் வருத்தப்படக்கூடிய விஷயமாகும்.

இதே விஜயகாந்த் கடந்த தேர்தலில் ஜெயலலிதாவுடன் மோதிக் கொண்டார். அவர் குடித்துவிட்டு வருகிறார் என்று ஜெ சொல்ல ஆமாம் எனக்கு அவர்தான் ஊற்றிக் கொடுத்தார் என்று கேப்டன் சொன்னார் அதையெல்லாம் மறந்துவிட்டு இன்று ஒரே கூட்டணியில் இருக்கிறார்கள். அதை மறக்கும்போது இதெல்லாம் சாதாரண விஷயம்தான்.

விஜயகாந்த், விஜய், சரத்குமார், கார்த்திக், விஜய ராஜேந்திரன், குஷ்பூ, ராதிகா, இன்னும் என்னற்ற நட்சத்திரங்கள் அரசியலில் ஈடுப்பட்டு அந்த பாதிப்பு ஏதும் இல்லாமல் தன்னுடைய கலைஉலகில் இருந்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இந்த விஷயத்தில் வடிவேலுவை மட்டும் விலக்கி வைப்பது எந்த விதத்தில் நியாயம்.

இன்று ஆதித்யா சிரிப்‌பொளி போன்ற நகைச்சுவை சேனல்கள் அனைத்திலும் ஆக்கிரமித்துள்ளது வடிவேலுவின் நகைச்சுவைதான் அவரின் திறமைகளை தமிழகம் இ‌ழக்க தயாராகி விட்டதா..?

புல்லட் பாண்டி, செட்டப் செல்லப்பா, அலார்ட்டு ஆறுமுகம், படித்துரைப்பாண்டி, நாய் சேகர், கைப்புள்ள, 23வது புலிகேசி, ஜாக்கி, என்று படத்திற்க்கு படம் வித்தியாசமான முறையில் தன்னுடைய நகைச்சுவையை அர்பணித்து இந்த தமிழ் நெஞ்சஞ்சங்களை ஆக்கிரமித்த ஒரு நகைச்சுவையாளனுக்கு நாம் அளித்திருக்கும் தண்டனை கொஞ்சம் அதிகம்தான்...

தமிழ் திரையுலகில் மீண்டும் வடிவேலுவின் ஆதிக்கம் தொடர வேண்டும். அவருடைய நகைச்சுவையில் இந்த தமிழ் நெஞ்சங்கள் நிறைய வேண்டும் என்று என்னுடைய எண்ணத்தை இங்கு நான் பதிவு செய்கிறேன்.

தமிழ் திரைப்படங்களில் என்னற்ற படங்கள் வடிவேலுவின் நகைச்சுவைக்காகவே ஓடியிருக்கிறது. இதை தமிழ் உலகம் மறந்துவிடக்கூடாது...  ஒரு ஒப்பற்ற கலைஞனை நாம் இழக்க கூடாது. வடிவேலுவின் அடுத்த பகுதி விரைவில் தொடங்க வேண்டும் என்பதே என்னைப்போன்ற ‌நகைச்சுவை ரசிகர்களின் ஆசை....
தற்போதைக்கு ராணாவில் வடிவேலுவை பயன்படுத்திக் கொள்ளுமாறு இயக்குனர் ரவிக்குமாரிடம் ரஜினி சொல்லியிருப்பதாக கேள்வி. தமிழ் உலகமே...! தமிழ் திரைஉலகில் நல்ல வரவேற்ப்பு பெற்றிருக்கும் வடிவேலுவை இன்னும் பயன்படுத்திக் ‌கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துகிறேன்.

தமிழ் திரைப்படங்களில் என்னற்ற படங்கள் வடிவேலுவின் நகைச்சுவைக்காகவே ஓடியிருக்கிறது. இதை யாரும் மறுத்துவிட முடியாது இதை தமிழ் உலகம் மறந்துவிடக்கூடாது...  ஒரு ஒப்பற்ற கலைஞனை நாம் இழக்க கூடாது. வடிவேலுவின் அடுத்த இன்னிங்ஸ் விரைவில் தொடங்க வேண்டும் என்பதே என்னைப்போன்ற ‌நகைச்சுவை ரசிகர்களின் ஆசை.... 

இதைப்பற்றி தங்களின் மேலான கருத்தையும் நான் எதிர்ப்பார்க்கிறேன்...

இப்படி செய்தால் இந்தியாவில் பள்ளிகளுக்கு பற்றாகுறையே இருக்காது..?


பீகாரில் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஊழல் பணத்தில் கட்டிய பங்களாவை அரசு பறிமுதல் செய்து, அதை அரசு ஆரம்பப் பள்ளிக்கு ஒதுக்கியது. பீகாரில் கடந்த 2007-ம் ஆண்டில் சிவ்சங்கர் வர்மா என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது ஊழல் புகார்கள் வந்தன.

சிறப்பு லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது வீட்டில் திடீர் சோதனை நடத்தி, 9 கிலோ தங்கம், 1600 அமெரிக்க டாலர்கள் மற்றும் பல சொத்து ஆவணங்களை கைப்பற்றினர்.

வர்மா வருமானத்தை மீறி ரூ.1.43 கோடிக்கு சொத்துகள் குவித்ததாக கண்டுபிடிக்கப்பட்டு, அவர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்போது அவர் சிறுபாசனத் துறை செயலாளராக பணியாற்றி வந்தார்.

இதன்பின், 2009ல் பீகார் சிறப்பு நீதிமன்றங்கள் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளபோதே, குற்றம்சாட்டப்பட்டவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய அரசுக்கு அதிகாரம் அளிககப்பட்டது.

கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, ‘ஊழல் அதிகாரிகளின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, அரசு பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும்’ என்று நிதிஷ்குமார் அறிவித்திருந்தார்.

அதே போல், தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானதும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கினார் நிதிஷ்குமார். முதல் நடவடிக்கையாக, பாட்னாவில் பெய்லி சாலையில் வர்மாவுக்கு சொந்தமான பங்களாவை அரசு பறிமுதல் செய்தது.

தனது 3 மாடி கட்டிடத்தை பறிமுதல் செய்ததை எதிர்த்து வர்மா தாக்கல் செய்த மனுவும் ஐகோர்ட்டில் தள்ளுபடியானது.   இந்நிலையில், அந்த பங்களாவை ருக்கன்புரா முசாரியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளிக்கு ஒதுக்க அமைச்சரவையில் கடந்த 4ம் தேதி முடிவெடுக்கப்பட்டது.

இதன்படி, புதிய கட்டிடத்திற்கு பள்ளி இடம் மாற்றப்பட்டது. இந்த பள்ளியில் ஏராளமான தலித் மாணவர்கள் படிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு நாளாக குடிசைப் பகுதியில் இயங்கி வந்த பள்ளி, புதிய கட்டிடத்திற்கு மாறியதில் மாணவர்களும், ஆசிரியர்களும் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

பீகாரில் ஊழல் சொத்து பறிமுதல் செய்யப்பட்டு, பள்ளிக் கூடமாக மாறியது இதுவே முதல் முறை. இதே போல், இன்னும் 16 ஊழல் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவையும் வழக்குகள் விசாரணைக்கு பின் அரசுக்கு பயன்படுத்தப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அப்படி இந்தியாவில் இருக்கும் ஊழல் வாதிகளின் வீடுகளையும் சொத்துக்களையும் பறிமுதல் செய்து அவற்றை பள்ளிகளாகவும் ஆனாதை விடுதிகளாகவும், காப்பகங்களாகவும் மாற்ற வேண்டும் இதுதான் அவர்களுக்கு உண்மையான தண்டனை..

ஊழல் செய்த எவரின் பணத்தை நாம் இதுவரை மீட்டிருக்கிறோம்.

நிதிஷ்குமார் போன்று அனைத்து மாநில முதல்வர்களும் பின்பற்றினால் ஊழல்கூட ஒழிந்துவிடும்தானே...

08 September, 2011

பொய்களைப் பொடிப்பொடியாக்கி நிஜத்தைப்போல நிமிர்ந்து வந்த ரஜினி! – வைரமுத்துவின் ஒரு பரவச கட்டுரை...


120 நாட்களுக்குப் பிறகு ரஜினியைச் சந்திக்கப் போகிறேன். பரவசம் போலொரு துயரம்; துயரம் போலொரு பரவசம் நெஞ்சில் பரவி நிற்கிறது.  வாழ்வின் விளிம்புவரை சென்று மீண்ட புகழ்மிக்கதொரு பெருங்கலைஞனை இன்னும் சற்று நேரத்தில் சந்திக்கவிருக்கிறேன்.

எத்தனை வதந்திகள்! எத்தனை தொலைபேசி அழைப்புகள்!

‘வீரன் ஒரு முறை சாகிறான்; கோழை பலமுறை சாகிறான்’ என்ற பழமொழி உண்டு. அதில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டிய மூன்றாம் வரி ஒன்றுண்டு: ‘புகழ்மிக்கவன் அடிக்கடி கொல்லப்படுகிறான்.’

பொய்களில் பிறந்த கற்பனைகளையெல்லாம் பொடிப் பொடியாக்கிவிட்டு நிஜத்தைப் போல நிமிர்ந்து வெளிவந்துவிட்டார் ரஜினி.

மருத்துவத்தின் அறிவும் மனிதர்களின் அன்பும் அவரை இன்று மீட்டெடுத்துக் கொண்டு வந்து காட்டிவிட்டன கண்களில்.

ராகவேந்திரா மண்டபத்துக்குள் நுழைகிறது கார்.

அன்போடு என்னை அழைத்துச் செல்கிறார்கள் உதவியாளர்கள்.

மாடியிலிருந்து இறங்கி வந்து வாயிற்படியில் நின்று வரவேற்கிறார் ரஜினி.
தமிழ்நாட்டின் வசீகரம் – லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவு மனிதர் – ஓடிக்கொண்டேயிருக்கும் உற்சாக நதி – பாடிக்கொண்டே திரியும் பரவசக் காற்று – என்னை நின்று வரவேற்று அழைத்துச் சென்றார் மாடிக்கு.

அறைக்கதவை அடைத்துவிட்டார்; இப்போது அவரும் நானும் மட்டும்.

‘‘நூற்றாண்டு வாழ்வீர்கள்; நோயின்றி வாழ்வீர்கள்!’’

அவரை வாழ்த்துகிறேன்; கைகள் பற்றிக் கண் கலங்குகிறேன்.

‘‘எப்படியிருக்கீங்க?’’ என்கிறார்.

‘‘உங்களைப் போலவே நல்லாயிருக்கேன்’’ என்கிறேன் நான்.

முகத்துக்கு முகம் பார்க்கவேண்டும் என்பதனால் எதிர்வரிசையில் அமர்கிறேன். கண்களால் அவரை அளக்கிறேன்.

நோயின் பிடியிலிருந்து விடுபட்டு விட்டாலும் அது பிடித்த பிடியின் தடம் ஆங்காங்கே பதிந்திருக்கிறது உடம்பில். ஆனால், மேகம் விலகிய இடுக்கில் சூரியன் சுடர்வி டுவது மாதிரி ஜொலிக்கின்றன அவர் கண்கள்.

அவர் புன்னகையை மறைக்காத இளந்தாடி முளைத்திருக்கிறது முகத்தில். பிள்ளை பெற்ற பெண்ணை அடிவயிற்றுச் சுருக்கங்கள் அடையாளம் காட்டுவதுபோல் சின் னதாய்ச் சாட்சி சொல்கிறது வடிந்தும் வடியாத வீக்கம்.

வெள்ளைப் பட்டையிட்ட கறுப்பு நீளக்கால்சட்டையும் வெள்ளை முழுக்கைச் சட்டையும் அணிந்திருந்தார்.

பழைய ரஜினியில் தொண்ணூறு விழுக்காடு பார்த்தேன். ஆனால் சொல்லில் அதே அழுத்தம். அசைவுகளில் அதே வேகம். உரையாடலில் அதே உற்சாகம். சிரிப்பில் அதே தெறிப்பு.

‘‘உணவு..?’’

‘‘பிடித்தமான உணவெல்லாம் சாப்பிடலாம்; ஆனால் பிடிக்கவில்லை.’’

‘‘உறக்கம்..?’’

‘‘நீண்ட நாட்களுக்குப்பிறகு இப்போதுதான் நிம்மதியாக உறங்குகிறேன்.’’

‘‘சர்க்கரை, கொழுப்பு, உப்பு, கிரியாட்டின்?’’

‘‘எல்லாமே கட்டுப்பாட்டில் இருக்கின்றன.’’

‘‘உங்கள் முகத்துக்குப் பழைய பொலிவு வந்து கொண்டிருக்கிறது. மருந்து வழியாக உங்கள் உடம்புக்குள் கிடக்கும் ரசாயனங்கள் வேலை முடித்து வெளியேறிவிட்டால் உங்கள் வசீகரம் மீண்டும் வந்துவிடும். அதற்குச் சில மாதங்களாகலாம்.’’

‘‘எனக்கும் நம்பிக்கை வந்திருச்சு; இன்னொரு ஜென்மம் எடுத்த மாதிரி இருக்கு எனக்கு.’’

‘‘உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்…’’

‘‘கேளுங்கள்’’

‘‘மனவலிமை என்பது பெரும்பாலும் உடல்வலிமையைச் சார்ந்தது. உடல் விழுகிறபோது மனமும் சடசடவென்று சரிந்தே போகும். நோயின் கோரப்பிடியில் சிக்கியிருந்த நாட்களில் உங்கள் உள்ளத்தில் ஓடிய எண்ண ஓட்டம்தான் என்ன?’’

‘‘ராமச்சந்திரா மருத்துவமனையில் 90 சதவிகிதம் எனக்கு ஞாபகமில்லை; எல்லாமே ஒரு கனவு மாதிரி இருக்கிறது: ஆனால் வைரமுத்து சார், ஒன்று சொல்கிறேன் உங்களுக்கு. அது டாடா, பிர்லா, அம்பானி, பில்கேட்ஸ் யாராக இருந்தாலும் உயிருக்குப் போராடும் நிமிடங்களில் எல்லாம்… எல்லாம் மறந்துபோகும். தன் புகழ், செல் வாக்கு, பணம் எதுவும் நினைவுக்கு வராது. தன் உடல், தன் உயிர் என்பதாக மட்டும் மனிதன் சுருங்கிப் போவான். யார் யாருக்கு நன்மை செய்தோம்; யாருக்கு இன்னும் செய்யவில்லை; எனக்குப் பிறகு இவர்கள் என்ன ஆவார்கள் என்ற ஒரே ஒரு சிந்தனை மட்டும்தான் எஞ்சி நிற்கும். எனக்கும் அப்படித்தான் இருந்தது.’’

அந்த உளவியல் அதிர்ச்சியிலிருந்து நான் மீள்வதற்கு நேரமாயிற்று.

‘‘டீ சாப்பிடறீங்களா?’’

‘‘சாப்பிடலாம்.’’

தேநீர் வந்தது எனக்கு; மருந்தும் மாத்திரையும் வந்தன ரஜினிக்கு. விருந்தினர்கள் உரையாடும்போது ஒரு பணியாளர் பாதம் எடுத்து வைக்கும் ஓசையும் பாத்திரம் எடுத்து வைக்கும் ஓசையும் இல்லாமல் பரிமாறும் கலாசாரம் எத்தனை வீடுகளில் இருக்கிறது? ரஜினி வீட்டில் இருக்கிறது.

‘‘ராணா படத்தின் கதை விவாதத்தில் இந்த வாரம் கலந்து கொண்டீர்களாமே? ரவிகுமார் சொன்னார்.’’

‘‘ஆமா: சில மாறுதல்களோடு படப்பிடிப்பைத் தொடங்கவேண்டியிருக்கிறது.’’

‘‘சில மாதங்கள் கழிந்தாலும் பரவாயில்லை. முழு பலம் பெற்று உங்கள் உடலே உங்களுக்குக் கட்டளையிடும்போது களத்துக்கு வாருங்கள். நீங்கள் தொடாத உயரமில்லை; அடையாத வெற்றியில்லை; சேர்க்காத செல்வமில்லை. இனி உடல்நலம்தான் முக்கியம்.’’

வாய்விட்டுச் சிரித்தார் ரஜினி. பழைய சிரிப்பு; பளிச்சென்ற சிரிப்பு; தங்கச் சில்லறை அள்ளிப் பளிங்குத் தரையில் எறிவது மாதிரி கலகலவென்ற சிரிப்பு.

‘‘அது எப்படி பாலசந்தர் சாரும் சோ சாரும் நீங்களும் கூடிப் பேசியதைப் போல் ஒரே கருத்தைச் சொல்கிறீர்கள்?’’

‘‘அன்புக்கு வாய்கள்தான் வேறு வேறு; வார்த்தைகள் ஒன்று.’’

மீண்டும் சின்னதாய்ச் சிரித்தார்; நான் சொன்னதை ரசித்தார்; அப்படியே என் படைப்புக்குத் தாவினார்.

‘‘உங்க ‘மூன்றாம் உலகப் போர்’ பிரமாதம். எப்படி எழுதறீங்க? உட்கார்ந்தா அப்படியே வந்துடுமா?’’

‘‘இல்லை; இல்லை. அது அவ்வளவு சுலபமில்லை. வாழ்வில் பழுத்த சில விஷயங்கள் நெஞ்சில் ஊறப்போட வேண்டும் சில வருஷங்களுக்கு. அதே நினைப்பு; அதுவே மூச்சு; ஒரே சிந்தனை என்று உடம்பையும் மனசையும் ஒன்று குவிக்கவேண்டும். அதில் அறிவு எது, உணர்ச்சி எது என்று தெரியாத மாதிரி அத்வைதம் ஆகவேண்டும். ஒரே ஒரு அத்தியாயம் எழுத சில வாரங்கள் கூட எடுத்துக்கொள்கிறேன்.’’

‘‘நீங்களே கைப்பட எழுதுவீர்களா?’’

‘‘இல்லை; ஓசையோடு சொல்லுவேன். உதவியாளர் எழுதுவார். நேற்று எழுதியதைச் சொல்லுகிறேன். அதில், ‘இஷிமுரா’ என்ற ஒரு ஜப்பானியப் பாத்திரத்தை இந்தியாவுக்கு அழைத்து வருகிறேன்.’’

(என்னை நிமிர்ந்து பார்த்தார். இதழ்க்கடையில் புன்னகை இழையோடியது. ஜப்பானில் ரஜினிக்கு ரசிகர்கள் அதிகமில்லையா அதனாலிருக்கலாம்.)

இந்திய இளைஞன் ஒருவன் இஷிமுராவைக் கேட்பான்:

‘‘இந்தியாவில் நீங்கள் வியப்பது?’’’’

‘‘உழைப்பை’’

‘‘வெறுப்பது?’’

‘‘ஊழலை’’

‘‘இத்தனை ஊழல் இருந்தும் இந்தியா முன்னேறியிருக்கிறதே?’’

‘‘சேவல் தூங்கும்போது குஞ்சு பொரித்துவிடும் கோழியைப் போல அரசியல்வாதிகள் தூங்கும்போது இந்தியா முன்னேறி விடுகிறது.’’

‘சூப்பர்’ என்று சொல்லிக் கலகலவென்று கைதட்டினார் சூப்பர் ஸ்டார்.

அந்த கூர்த்த மதியும் ரசனையும்தான் அவரை எப்போதும் இளமையாக வைத்திருக்கின்றன.

‘‘எழுதி முடித்துத் தூங்கச் சென்ற நள்ளிரவில் எழுந்து அரசியல்வாதிகள் என்ற சொல்லுக்குப் பக்கத்தில் ‘சில’ என்ற துணைச் சொல்லைச் சேர்த்தேன்’’ என்றேன்.

‘ஓ’ என்று விழியுயர்த்தி ‘சரி’ என்று தலையாட்டினார்.

‘‘ஒவ்வொரு தீமையிலும் ஒரு நன்மை நேரும்; இந்த நோயினால் நீங்கள் அடைந்த நன்மையென்ன?’’

‘‘மனைவி மக்களின் அன்பை அனுபவித்தேன். ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் பேரன்பின் பெருக்கத்தை அறிந்துகொண்டேன். இதுவரைக்கும் வாழ்ந்த வாழ்வை மறுபரிசீலனை செய்கிறேன்.’’

மது – புகை இரண்டிலிருந்தும் அவர் முற்றிலுமாக விடுபட்டுவிட்டார். ரசிகக் கண்மணிகளே! மதுவையும் புகையையும் தொடாதவர்கள் தொடாதீர்கள்; தொட்டவர்கள் விட் டுவிடுங்கள்.

அரசியல் நோக்கித் திரும்பியது பேச்சு.

இந்நாள் முதலமைச்சர், அவரிடம் பாசத்தோடு பேசிய பரிவைப் பகிர்ந்துகொண்டார். அந்த உரையாடல் பத்திரிகையில் மறுநாள் பதிவான பிறகு முன்னாள் முதலமைச்சரோடு ரஜினி பேசியிருக்கிறார். பத்திரிகையில் வந்த உரையாடலைக் கண்டுகொள்ளாமல் கண்ணியம் காத்து அன்பு காட்டிய கலைஞரின் நாகரிகத்தைப் புகழ்ந்து சொன்னார்.

90 நிமிடங்களுக்கு மேல் பேசியிருப்போம். விடைகொண்ட போது படியிறங்கி என்னோடு பயணித்து கார்க் கதவு வரை வந்து கைகூப்பினார்.
மீண்டும் அவர் முகம் பார்த்தேன்.

‘‘இளமை இனிமேல் போகாது
முதுமை எனக்கு வாராது’’

- என்ற வரிகள் என் நெஞ்சில் வந்து போயின. நிமிர்ந்து நின்ற ரஜினியிடம் பழைய கம்பீரம் பார்த்தேன்.

‘‘விதியை நினைப்பவன் ஏமாளி – அதை
வென்று முடிப்பவன் அறிவாளி’’
ரஜினி அறிவாளி!

-நன்றி: குமுதம்

07 September, 2011

எரித்துவிடலாம் என் கவிதை தாள்களை...



ணவைத்தேடி உழலுகின்ற வாழ்க்கை
இன்னும் இருக்கிறது இங்கு...!

ச்சங்களிலும் மிச்சங்களிலும்
தொலைத்துவிட்ட நிம்மதியை
கிளறிக்கொண்டிருக்கும் மனிதப் பட்சிகள் 
ஏராளம் ஏராளம்...

தீயை கடன்வாங்கும் அடுப்புகள்
இன்னும் தீர்ந்தப்பாடில்லை
நம் தேசத்தில்...

ற்போதைக்கு...
இரவலாய் கிடைத்த அரிசியை
கொதிக்க வைக்க ஆவலாய் இருக்கும்போது...

ர விறகை பற்ற வைக்க 
ஊதியே வலியை உணரும்
அந்த ஏழை உதடுகளுக்காக
எரிந்து விடாதோ...?

என் கவிதை தாள்...

தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி...!

06 September, 2011

பிரதமர் நியமனத்தில் திமுக-வின் தலையீடு... விக்கிலீக் பரபரப்பு செய்தி


கடந்த 2009ம் ஆண்டில், மன்மோகன் சிங்கிற்குப் பதிலாக, சோனியா பிரதமராக வேண்டும் என, தி.மு.க., விரும்பியது' என்று, விக்கிலீக்ஸ் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த 2008 ஜூனில், அமெரிக்க துணைத் தூதரக அதிகாரி டென்னிஸ் டி.ஹூப்பருடன் பேசிய, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமான சிவபிரகாசம் என்பவர், "காங்கிரஸ் கட்சியின் உள்விவகாரத்தில் தி.மு.க., ஒரு போதும் தலையிடாது. இருந்தாலும், 2009ம் ஆண்டில் மன்மோகன் சிங்கை விட, சோனியாவே பிரதமராக வேண்டும் என்பதே தி.மு.க.,வின் விருப்பம். சோனியா பிரதமராக வேண்டும் என்பதையே தமிழக மக்களும் விரும்புகின்றனர்.
 
 அதே நேரத்தில், பிரதமர் பதவியை ஏற்க, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுலும் விரும்பவில்லை. கட்சியின் மூத்த தலைவரான பிரணாப் முகர்ஜி, பிரச்னைகளைத் தீர்ப்பதில் வல்லவர் என்றாலும், அவர் பிரதமராக வேண்டும் என, வடமாநிலத்தவர் வேண்டுமானால் விரும்பலாம்; தென் மாநில மக்கள் அவரை விரும்ப மாட்டார்கள்' என்று கூறியுள்ளார்.
மேலும், தி.மு.க., தலைவர் கருணாநிதியை சென்னையில், ஒரு காலகட்டத்தில் சந்தித்த, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங்கும், தான் பிரதமராக தி.மு.க., ஆதரவு தர வேண்டும் என்றும் கோரியுள்ளார். இவ்வாறு இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

05 September, 2011

மதிய உணவில் இப்படியும் நடக்கிறது... பள்ளியில் நடக்கும் ஒரு உண்மை சம்பவம்...


என்னைச்சுற்றி நடக்கும் சில சம்பவங்களை அதன் அனுபவங்களை இங்கே உங்க‌ளோடு பகிர்ந்துக் கொள்ள நான் பெருமை அடைகிறேன்.

சில சம்பவங்கள் பார்ப்பதற்க்கும் கேள்விப்படும்‌போதும் மிகவும் சாதாரணமாக இருக்கும் அதன் உள்ளர்த்தம் பார்க்கும் போது மிகவும் அற்புதமானதாக தெரியும். அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தைதான் இன்று தங்களோடு பகிர்ந்துக்கொள்ளப் போகிறேன்.

திருவள்ளூர் மாவட்டம் வடமதுரை கிராமம் (இது பெயர்பெற்ற பெரியபாளையம் அருகில் இருக்கும் ஒரு கிராமம்) அங்கு எனது நண்பர் திரு விஜயக்குமார் என்பவர் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றுகிறார். அவர் வேலைசெய்யும் அப்பள்ளி ஒரு 1 முதல் 5-ம் வகுப்பு வரை இருக்கும் ஒரு தொடக்கப்பள்ளி ஆகும் தற்போது அப்பள்ளியில் 120 மாணவ மாணவிகள் படிக்கின்றனர்.

மதிய வேளையில் மாணவ மாணவியருக்கு உணவு ஏற்பாடுகளை சிறப்புற செய்து பறிமாறுவது இவரது வழக்கம். பொதுவாக உணவு இடைவேளை 12-45 மணிக்கு விடப்படும். சத்துணவு தயாரிக்கும் பணியை இவரது கீழ் உள்ள பணியாளர்கள் காலை 10-00 மணிக்கு செய்ய தொடங்கிவிடுவார்கள். சமையல் வேலைகள் பிற்பகல் 12-00 மணிக்கு முடிந்து விடும்.

நண்பரின் உத்திரவின்படி இப்பணியில் ஈடுபடும் இவர்கள் சமையல் வேலை முடிந்தவுடன் யாரவது ஒருவர் 12-15 மணிக்குள் சமைத்த உணவை சாப்பிட வேண்டும். வாரத்தில் ஒரு நாள் என் நண்பரும் உணவருந்துவாராம். இது தினசரியாக நடந்துக் கொண்டு இருக்கிறது.

இவரிடம் இதற்கான விளக்கம் கேட்டேன். என்இந்த வழக்கம் என்று அதற்க்கு அவர் கூறும் விளக்கம்.
நாங்கள் தயாரிக்கும் உணவை கிட்டதட்ட 100 அல்லது 110 குழந்தைகள் சாப்பிடுகிறார்கள். நாங்கள் சமைக்கும் உணவுவில் ஏதாவது தேவையில்லாத மாற்றங்கள் (தீய) இருந்தால் முன் கூட்டியே அறிந்துக் கொள்ளவே  நாங்கள் அரை மணி நேரத்திக்கு முன்னதாக அந்த உணவை உண்ணுகிறோம். அப்படி உணவில் ஏதாவது இருந்தால் அது அடுத்த ‌அரை மணி நேரத்திற்க்குள் தெரிந்து விடும். குழந்தைகளுக்கு எந்த பிரச்சனையும் வராகூடாது என்பதற்க்காகவே அந்த முறையை நாங்கள் பின்பற்றிக் கொண்டிருக்கிறேபம் என்றார்.. எனக்கு புல்லரித்தது.


ஏன் ‌இது போன்று செய்கிறோம் 
  • உணவில் பல பிரச்சனைகள் வரலாம். 
  • அரசியில்  கண்ணுக்கு தெரியாத விஷ பூச்சிகள் இருக்கலாம்.
  • சமையல் எண்ணை தரமற்றதாக இருந்திருக்கலாம்.
  • பருப்பில் சில உடம்புக்கு ஒவ்வாத பருப்புகள் கலந்திருக்கலாம்.
  • தண்ணீர் ஏதாவது வைரஸ் பரவியிருக்கலாம்.
  • சமைக்கும்போது ஏதாவது விழுந்திருக்கலாம்...
என அடுக்கிக் கொண்டே போனார்.

குழந்தைகள் மீது அக்கறைக் கொண்டும் அவர் பின்பற்றிவரும் இந்த செயல் என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது. கூடவே இவரது பள்ளியில் மாணவர்களுக்கு பந்திப்போன்று அமர வைத்துதான் உணவுப்பரிமாறுகிறார்.

குழந்தைகளின் நலனில் அக்கரைக்கொண்டு செயலாற்றினால் அதன்முலமாக எழும் பிரச்சனைகளுக்கு பதில்சொல்லவேண்டிய அவசியம் இல்லாமல் இருக்கலாம். இதை அனைத்து பள்ளி சத்துணவு அமைப்பாளர்களும் பின்பற்றினால் நன்றாகத்தானே இருக்கும்.

அப்படி சாப்பிடும் உணவில் ஏதாவது இருந்து விஷத்தன்னை இருந்து தங்களுக்கு ஏதாவது ஏற்ப்பட்டால் என்று நான் கேட்ட கேள்விக்கு அவர்தந்தப்பதில்...

அது எங்களோடு போய்விடும்.. குழந்தைகளை எந்தவிதத்திலும் பாதிக்காது.. எங்களுக்கு குழந்தைகளில் ஆரோக்கியமே முக்கியம் என்று கூறுகிறார்...

இவர் எனக்கு நண்பராக கிடைத்துள்ளது பாக்கியம் தானே....


இந்த ஆசிரியர் தினத்தில்... அவர் கொண்டுள்ள கொள்கைக்கு
ஒரு ஆசிரியராக நான் தலைவணங்குகிறேன்....


Related Posts Plugin for WordPress, Blogger...