தமிழகத்தில் வடகோடியான திருஎவ்வளூரில் (திருவள்ளூர்) இருந்து தென்கோடிக்கு பயணிக்கபோகிறேன். அதுவும் ஒரு சாதாரண நிகழ்வுக்காக அல்ல. உறவுகள் கூடும் அன்பான இருமணங்கள் இனையும் ஒரு நெகிழ்ச்சியான திருவிழாவில் கலந்துக்கொள்ள...
இதுவரை முகம்பார்த்திடாத சில அன்பு உள்ளங்களைக் கண்டுணற, தூரத்தில் இருந்தே மனம் வீசிய அழகிய குறிஞ்சி மலர்களைத் தொட்டுணர, கம்பிகள் வழியே உரவாடிய சில உள்ளங்களை அன்புகள் வழியே அணைத்துக்கொள்ள... இதுவரை நிலத்தை பார்த்திடாத புது மேகம் போல் புறப்படுகிறோம்....
கடந்த சில நாட்களாய்... இரவு முடிந்தால் சுற்றுலா சொல்லும் குழந்தையின் மனதோடே படுக்கிறேன். என் கண்முன்னே நிழலாடும் காட்சிகளை எதுகைமோனையில் வர்ணிக்க எனக்குள் புதியதாய் வார்த்தைகள் ஏதுமில்லை...
வண்ணத்தில் தொடங்கி எண்ணத்தில் முடியும் அத்தனை வேறுபாடுகளையும் தூரத்தில் தூக்கி எரிந்து விட்டு அன்புக்கு அடிப்பணிந்து அரவணைத்துக்கொள்ள என் கரங்களும் நீள்கிறது தமிழகம் முழுமைக்கும்...
எங்கெங்கோ இருந்துக்கொண்டு பதிவுகள் வழியே அறிமுகமாகி, கருத்தால் படைப்புகளால் பழகி... பழகி..., ஒவ்வொறு நாலும் தமிழ்விருந்து படைத்து நட்பு வளர்த்து, செல்லமாய் சண்டையிட்டு நட்பை வளப்படுத்தி இன்று அதையும் தாண்டி உறவுகளாய் சங்கமிக்கப்போகிறோம்.
தமிழகத்தின் மேற்கும் (சிபி செந்தில்குமார்) கிழக்கும் (நக்கீரன், ராஜபாட்டை ராஜா), வடக்கும் (நானும் வேடந்தாங்கல் கருணும்) தெற்கும் (தமிழ்வாசி பிரகாஷ் உள்ளபட அனைவரும்) தரணிபோற்றும் தாமிரபரணி நதிக்கரை நகரில் சங்கமிக்கப்போகிறது...
இன்னும் நிறைய நண்பர்களை சந்தித்து உறவாக்கிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது... இதுவரை வேலி அளவுக்கூட தாண்டாத என் நட்பின் எல்லை இன்றைக்குத் தமிழர் வாழும் நாடுகள் அனைத்திலும் பரவிக்கிடக்கிறது என்று என்னும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
தன்வீட்டு விழாவிற்கு பதிவுலக நண்பர்களை அழைத்த கௌரவப்படுத்திய இதயம் கனிந்த அருமை நண்பர் திரு உணவு உலகம் சங்கரலிங்கம் ஐயா அவர்களின் இல்லத்திருமணத்தில் கலந்துக்கொள்வது பெருமைக்குரிய விஷயமே... அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...
நெல்லை நோக்கிய பணயம்.... தாமிரபரணியில் சங்கமிப்போம் வாருங்கள் நண்பர்களே..!
பயண விவரம் நானும் (9443432105), நண்பர் கருணும் (9042784428)
நாள் : 24.04.2012 செவ்வாய் காலை 7.30 மணி
குருவாயூர் எக்ஸ்பிரஸ், சென்னை.
நெல்லை : 24.04.2012 மாலை 7.30 மணி அளவில்
எங்களுடன் மதுரையில் தமிழ்வாசி பிரகாஷ் கலந்துக்கொள்வதாக வாக்கு கொடுத்திருக்கிறார்.