கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

29 June, 2011

பேரம் பேசும் படலத்தில் ஜன்னல் பூக்கள்...


ல்லிகை மணத்தது
மஞ்சள் பூசிய முகத்தில்
புதியதாய் பவுடர் வாசனை...

போனமுறை பூசிக்கொண்ட
மருதாணி ‌ கோலம்
அதன் மேலே
இன்னொரு முறை...!

மீண்டும் ஒரு முறை இயற்றப்பட்டது
பெரியதாய் ஒரு 
மளிகைப்பட்டியல்...

டக்கும் என்ற அவநம்பிகையில்
விடியலில் ஒரு சின்னக்கனவு
அது விடிந்தப்பிறகும் நீள்கிறது..

னத்த இதயத்தோடு சீவிமுடித்து
நாணம் கொண்ட கொலுபொம்மையாய்
வாங்க வந்த கூட்டத்தில்
வணங்கி முடிக்கிறாள்...
வளைந்து நிற்கிறாள்...

லசலப்பு முடிந்தப்பின் சூடுப்பிடிக்கிறது
பகல் கொள்யைர்களின் 
வரதட்சணை பட்டியல்

லைவந்து அடித்தது போல்
ஆடிப்போகிறது இந்த மண்பாறைகள்...

விலைபோகாத முதிர் கன்னியோ
மீண்டும் ஜன்னலில் பூக்கிறாள்...

வேஷங்களை கலைத்துவிட்டு
தொடர்கதைப்போல் நீள்கிறது இந்த நாடகம்...

ரதட்சணை போர்களில்
வீழ்கிறது ‌பெண்ணினம்
என்று முடியுமே
இந்த பேரம் பேசும் படலம்...!

கருத்திடுங்கள்.. வாக்களியுங்கள்...
கவிதைகறும் உயிர்ப்பெரும்...!

43 comments:

  1. இனிய காலை வணக்கம் சௌந்தர்,

    ReplyDelete
  2. கனத்த இதயத்தோடு சீவிமுடித்து
    நாணம் கொண்ட கொலுபெம்மையாய்//

    கீபோர்ட் இங்கே மக்கர் பண்ணி விட்டது பாஸ்,

    ReplyDelete
  3. கவிதை- இக் காலத்தில் சீதனச் சந்தையில் விலை பேச முடியாதவர்களாகிச் சிக்கித் தவிக்கும்,
    வரதட்சணை எனும் பெயரில் நசுக்கப்படும் பெண்களின் வாழ்க்கையினை,
    முதிர் கன்னி எனும் நாமத்தினூடாகக் காட்டி நிற்கிறது.

    ReplyDelete
  4. அருமையான கவிதை

    ReplyDelete
  5. நடக்கும் என்ற அவநம்பிகையில்//
    வேதனை தந்த வரி . இவ்வளவு பாடும் பட்டு பெண்ணின் திருமணம் முடிந்தாலும் கணவன் அன்பாய் இருக்க வேண்டுமே எனத் தொடங்கும் அடுத்த கவலை

    ReplyDelete
  6. விலைபோகாத முதிர் கன்னியோ
    மீண்டும் ஜன்னலில் பூக்கிறாள்...///



    வலி........!!!

    ReplyDelete
  7. அருமையான க"விதை" மக்கா மனம் முழுவதும் ரணம்....!!!

    ReplyDelete
  8. நிரூபன் said...
    கனத்த இதயத்தோடு சீவிமுடித்து
    நாணம் கொண்ட கொலுபெம்மையாய்//

    கீபோர்ட் இங்கே மக்கர் பண்ணி விட்டது பாஸ்,//

    சரி சரி விடுய்யா......

    ReplyDelete
  9. //வரதட்சணை போர்களில்
    வீழ்கிறது ‌பெண்ணினம்
    என்று முடியுமே
    இந்த பேரம் பேசும் படலம்...!

    அருமையான வரிகள்....

    ReplyDelete
  10. சிறந்த சமூக விழிப்புணர்வு அதனுடன் அசத்தலான கவிதை நடை ...

    ReplyDelete
  11. நல்ல கருத்து சௌந்தர்.

    என்ன செய்யுறது வரதட்சணை கம்மியா கேட்டாலோ இல்ல வேணாம்ன்னு சொன்னாலோ மாப்பிள்ளை கிட்ட ஏதோ குறை இருக்குன்னு சொல்லுவானுகலேன்னு தான் இதெல்லாம் கேட்குறது

    ReplyDelete
  12. இது இப்போதைக்கு முடியிற பிரச்சனை இல்ல .. பெரிகிக்கொண்டே போகும் ரமேஷ் சொன்ன போல இப்ப வரதட்சணை கேக்காதவனை குறைபாடு உள்ளவனாக பார்க்கிற நிலைமையும் உண்டு ...

    கவிதை நல்லை இருக்கு பாஸ் ...

    ReplyDelete
  13. ஜன்னல் பூக்கள் மனம் கனக்கவைத்தன.

    ReplyDelete
  14. கவிதை சூப்பர் தல

    ReplyDelete
  15. சலசலப்பு முடிந்தப்பின் சூடுப்பிடிக்கிறது
    பகல் கொள்யைர்களின்
    வரதட்சணை பட்டியல். . .அருமை சகா . . ."வரதட்சனை" இருக்கிறவங்க வீட்டுல கௌரவம் ஆகிடுச்சு' இல்லாதவுங்க வீட்டுல கொடுமையா ஆகிடுச்சு. . .

    ReplyDelete
  16. அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. நல்ல, அருமையான கவிதை நண்பா.

    ReplyDelete
  18. //விலைபோகாத முதிர் கன்னியோ
    மீண்டும் ஜன்னலில் பூக்கிறாள்...//

    சூப்பர்

    ReplyDelete
  19. ரசனை மிக்க கவிதைகள் பாஸ்
    ரெம்ப ரசித்தேன்
    தேங்க்ஸ்

    ReplyDelete
  20. யதார்த்தம்!
    ”விழிகள் நட்சத்திரங்களை வருடினாலும்
    விரல்கள் என்னவோ ஜன்னல் கம்பிகளோடு தான்”(மு.மேத்தா)

    ReplyDelete
  21. முதிர்கன்னிகளின் முடிவில்லாத பிரச்சினை பற்றிய கவிதை அருமை. மனதைக் கொஞ்சம் வலிக்கவே வைக்கிறது.

    ReplyDelete
  22. //வரதட்சணை போர்களில்
    வீழ்கிறது ‌பெண்ணினம்
    என்று முடியுமே
    இந்த பேரம் பேசும் படலம்...!//அருமையான கவிதை

    ReplyDelete
  23. நடக்கும் என்ற அவநம்பிகையில்
    விடியலில் ஒரு சின்னக்கனவு
    அது விடிந்தப்பிறகும் நீள்கிறது../////

    எல்லோருக்கும் பொருந்தும் வரி ....
    ரொம்ப touching ...super

    ReplyDelete
  24. voted in all...as a salute ...tq

    ReplyDelete
  25. அன்பின் சௌந்தர் - அருமை அருமை சிந்தனை அருமை - தீராத பிரச்னை இது - ஆனால் குறைந்திருக்கிறது. பெண்கள் எல்லாம் படிக்க, பணி புரியத் துவங்கி விட்டார்கள். ஒரு வகையில் பார்த்தால் - பெண்களுக்கு கிராக்கி வந்து விட்டது. ம்ம்ம்ம் - காலம் மாறும் . நட்புடன் சீனா

    ReplyDelete
  26. நடக்கும் என்ற அவநம்பிகையில்
    விடியலில் ஒரு சின்னக்கனவு
    அது விடிந்தப்பிறகும் நீள்கிறது..


    சகோ/அழகிய அற்புத்மான கவிதை
    சும்மா இல்லை அத்தனையும் ரணமாய்..
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. நல்ல கவிதை முதிர்கன்னிகளின் கனவு நினைவாகுமா?

    ReplyDelete
  28. கவிதை நல்ல கவிதை#ஸ்டாண்டர்ட் கமென்ட் போல தான் இருக்கு ஆனா உண்மை அதுவல்ல!

    ReplyDelete
  29. பாருங்க பாருங்க கொஞ்ச நாள் கழித்து கதையே மாறிப்போகும். பூக்கள் பற்றிய பாக்கள் தேடப்படும்.

    ReplyDelete
  30. சௌந்தர்,

    உங்களது முதிர்கன்னி கவிதை மிகவும் அருமை....
    முதிர்கன்னிகளின் ஏக்கங்கள் மிகவும் பரிதாபத்திற்குரியது.....

    ஜாதகம், அந்தஸ்து என்ற காரணத்தினாலும் பல கன்னிகள் "முதிர்" பட்டம் பெறுகின்றார்கள்....

    சில சமயங்களில் மாற்றுதிறனாளிகளுக்கு கூட வரன் அமைகின்றது, ஆனால் ஜாதகம், அந்தஸ்து என்ற போர்வையில் நல்ல உடல் தகுதி உடையவர்கள் கூட வரனில்லாமல் அவதிபடுகின்றார்கள்....

    மிகவும் சிந்திக்க வேண்டிய கவிதை இது....வாழ்த்துக்கள்...

    -"மின்சார" சிவா

    ReplyDelete
  31. வரதட்சணை போர்களில்
    வீழ்கிறது ‌பெண்ணினம்
    என்று முடியுமே
    இந்த பேரம் பேசும் படலம்
    அருமை

    தரமுள்ள கவிதை-நீர்
    தந்ததாம் சௌந்தர்
    வரவேண்டும் மேலும்-பெண்கள்
    வாழவே நாளும்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  32. ஹலோ. கவிதை எல்லாம் நல்லா இருக்கு. ஆனா நிலைமைதான் தலைகீழாகிவிட்டது. இப்பொழுதெல்லாம் பெண் கிடைக்கவே ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. மணமகன் தேவை குறைந்து, மணமகள் தேவை பக்கங்கள்தான் அதிகம் இப்பொழுதெல்லாம்.

    ReplyDelete
  33. கவிஞ்சனின் பார்வையில் அவள்...நல்லா இருக்கு கவிஞ்சரே!

    ReplyDelete
  34. உங்களது பதிவுகளை எல்லாமேதமிழ்.காம் என்னும் பதிவர் தளத்தில் பதிவு செய்து மற்றும் உங்களது நண்பர்களுக்கு அறிமுக படுத்துங்கள் EllameyTamil.Com

    இப்படிக்கு
    EllameyTamil.Com

    ReplyDelete
  35. அருமை தோழரே..

    //சலசலப்பு முடிந்தப்பின் சூடுப்பிடிக்கிறது
    பகல் கொள்யைர்களின்
    வரதட்சணை பட்டியல்//

    வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய
    வாசகங்கள்..

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  36. கவிதையின் ஒவ்வொரு வரிகளும் நிராகரிப்பின் வலியை உணர்த்துகின்றன. பயணம் தொடரட்டும்

    ReplyDelete
  37. சிந்திக்க வைத்த கவிதை, மிகவும் அருமை....

    ReplyDelete
  38. மனதை நெகிழ வைத்த கவிதை !

    ReplyDelete
  39. நல்ல கவிதை.அருமையான சிந்தனை.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...