கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

01 August, 2011

ஏய்... என்னஇது! தயவுசெய்து வாயை மூடுங்க...


“டாக்டர்..! ஒரு முக்கியமான பிரச்சனை... அதான் உங்ககிட்டே வந்தேன்...”

“என்கிட்டே வந்துட்டீங்கள்லே... இனி‌மே எதுக்கும் பயப்பட வேண்டாம்... ‌சொல்லுங்க... என்ன பிரச்சனை?”

“எனக்குத் தொடர்ந்து கொட்டாவி வந்துகிட்டே இருக்கு டாக்டர்...!” (ஏன்... மனோ பதிவை படிச்சாரா)

“அப்படியா...? வந்து இப்படி இந்த நாற்காலியிலே சாய்ஞ்சு உக்காருங்க.. பார்க்கலாம்..!”

“ஏன் டாக்டர்... மனிதன் மட்டும்தான் இப்படி கொட்டாவி விடறானா..?”

“அப்படி இல்லே... பறவைகள், மிருகங்கள், மீன்கள் கூட கொட்டாவி விடறதுண்டு..!”

“ஓ... அப்படியா..?”

“ஆனா ஒரு வித்தியாசம்..?”

“என்னது?”

“நாமெல்லாம் கொட்டாலி விட்டா... ஒண்ணு தூக்கம் வருது.... அல்லது விஷயம் ரொம்ப போர் அடிக்குதுன்னு அர்த்தம் பண்ணிக்கலாம். ஆனா மிருகங்கள் விஷயத்துலே அப்படி இல்லே..!”

“வேறே எப்படி?”
 
“‌அதற்கெல்லாம் வேறே வேறே காரணங்கள்... உதாரணத்துக்கு, ஒரு நீர் யானை கொட்டாவி விட்டா அது ஓர் எளிய சண்டைக்குத் தயாராகுது-ன்னு அர்த்தம்.!” (மாப்ள தமிழ்வாசி பிரகாஷ் கொட்டாவி விட்டா அதுக்கு அர்த்தமே வேற.... அட.. ‌நைட் டூயுட்டின்னு அர்த்தங்க...)

“ஆச்சரியமா இருக்கே..!”

“ஆச்சரியப்பட்டு ஏன் இவ்வளவு அகலமா வாயைத்திறக்கறீங்க.. மருந்து விட்டுட்டேன்.. மூடுங்க! ஏன்? மறுபடியும் கொட்டாவி வருதா..?”

“இப்ப நான் வாயைத் திறக்கறது கொட்டாவியினாலே இல்லே டாக்டர்...”

“வேறே எதனாலே?”

“உங்கக் கையிலே இருக்கிற, “பில்”லைப்பார்த்ததுனாலே..!”

கொட்டாவி என்பது தன்னியல்பாக வாயைப் பெரிதாகத் திறந்து மூச்சுக் காற்றை வாய் வழியாகவும் மூக்கு வழியாகவும் உள்ளிழுப்பதும், அதே வேளையில் செவிப்பறை விரிவடைவதும், பின்னர் நுரையீரலில் இருந்து பெருமூச்சாக வாய்வழியே காற்றை வெளிவிடுவிடுவதுமான செயலைக் குறிக்கும். இத்துடன் கைகால்களை நீட்டி மடக்குவதை சோம்பல் முறித்தல் என்பர்.

அலுப்பு , உளைச்சல், மிகுதியான பணிப்பளு, ஆர்வமின்மை, சோம்பல் ஆகியவற்றுடன் கொட்டாவியைத் தொடர்பு படுத்துகின்றனர். இது இடத்திற்கேற்றாற் போல் வெவ்வேறு பொருள் தரக்கூடிய சைகைக் குறிப்பாகவும் உள்ளது. கொட்டாவி ஒரு தொற்று வினையும் கூட. 

பின்வரும் கூற்றுகள் கொட்டாவியின் காரணங்களாகக் கருதப்படுவன. 

  • கொட்டாவியின் போது காற்று ஆழமாக உள்ளிழுக்கப்படுவதால் நுரையீரல் நுண்ணறைகள் சுருங்கி விடாமல் தவிர்க்கப்படுகின்றன.
  • நுரையீரல் நுண்ணறையிலுள்ள வளிக்கலங்கள் (வகை II) விரிவடைவதால் பரப்பியங்கி நீர்மம் ஒன்று வெளிப்படுகிறது.
    மூளை குளிர்வடைகிறது.
  •  நீர்மம் ஒன்று வெளிப்படுகிறது. 
  • மூளை குளிர்வடைகிறது.
    கூடுதல் எச்சரிக்கை உணர்வு நிலையிலிருந்து இயல்பு நிலைக்குத் திரும்புவதைத் தன்னையறியாமல் வெளிக்காட்டுதல்
  • குருதியில் கரிமவாயு-உயிர்வவாயு நிலைப்பாடு மாறுபடுதல்.
  • ஈடுபாடின்மையையைத் தெரிந்தோ தெரியாமலோ வெளிப்படுத்துதல்.
  • அயர்வு
  • அருகிலிருப்பவரது கொட்டாவியால் தமது செவியின் நடுவில் ஏற்படும் அழுத்த மாற்றத்தைச் சரிக்கட்டும் பொருட்டு
  • மூளைக்குப் போதிய அளவு குளுக்கோசு கிடைக்காததால்
கடைசியா ஒரு நகைச்சுவை


"தலைவரே! நீங்க இப்ப சொன்னது
நூத்துக்கு நூறு உண்மை...!''

''சரியான ஜால்ராய்யா நீ!
இப்ப நான் ஒண்ணுமே சொல்லலை...
கொட்டாவி தான் விட்டேன்...!''
 



இதற்கு மேல் நான் சொல்ல மாட்டேன் ஏன்னா அப்புறம் நீங்க கொட்டாவி விடப்போறீங்க....
 
கருத்து பரவுலுக்காக தங்களுடைய வாக்குகளையும் கருத்துக்களையும்
பதிவுச் செய்யுங்கள்..
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...!

39 comments:

  1. ஹாவ்வ்வ்வ்வ்வ்!முதல் கொட்டாவி!

    ReplyDelete
  2. நல்ல பதிவுன்னு சொன்னா....
    ''சரியான ஜால்ராய்யா நீ! ன்னு சொல்லுவீங்க....

    ஹா.........ஹா.......கொட்டாவி தான்...

    ReplyDelete
  3. என்னை வம்புக்கு இழுக்கலின்னா உமக்கு கொட்டாவியே வராது போல...

    ReplyDelete
  4. கொட்டாவி... கொட்டாவி தான்...

    ReplyDelete
  5. அப்படீன்னா கொட்டாவி நல்லதா .....

    ReplyDelete
  6. கொட்டாவி பற்றி கொட்டாவி வராத அளவுக்கு
    தீட்சண்யமான பதிவு.
    நன்றி நண்பரே.

    ReplyDelete
  7. எப்படி நண்பா இப்படி ....
    நகைச்சுவை பொது அறிவு என இரண்டு
    வேறு தளங்களை ஒன்றாக இணைத்து
    ஒரு பதிவு நல்லா இருந்தது

    ReplyDelete
  8. மாப்ள சூப்பர்யா!...hehe!

    ReplyDelete
  9. “எனக்குத் தொடர்ந்து கொட்டாவி வந்துகிட்டே இருக்கு டாக்டர்...!” (ஏன்... மனோ பதிவை படிச்சாரா)//

    யோவ் நான் உமக்கு என்ன அநியாயம் செஞ்சேன், இப்பிடி காலை வாரி விட்டுட்டீரே ஹி ஹி....

    ReplyDelete
  10. கடைசி ஜோக் சூப்பர்....!!!

    ReplyDelete
  11. ஹாஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்..

    ReplyDelete
  12. கொட்டவியில இத்தனை விஷயங்களா? ஹா,ஹா,ஹா,ஹா.... கலக்குங்க....

    ReplyDelete
  13. கொட்டாவி விட்ட வாய்க்கு முன்னால் சொடக்கு!

    ReplyDelete
  14. கொட்டாவி பற்றி இவ்வளவு விஷயங்களை கொட்டாவி விடாம படிக்க முடிஞ்சது- உங்களின் நகைச்சுவையான எழுத்து நடையால்... பாராட்டுகள்.

    ReplyDelete
  15. supper pathivu..
    koddaavi paarri...nalla suvaaracikamaaka solliyirukkirinka....
    vaalththukkal....


    enna namma pakkam kaanala?

    ReplyDelete
  16. கொட்டாவி .. பற்றி இவ்வளவு தகவல்களா?

    ReplyDelete
  17. மட்நான்களா மனோவும், தமிழ்வாசியும்..

    ReplyDelete
  18. என்ன சொல்றதுன்னு தெரியலை ......! Ooohooo

    ReplyDelete
  19. ///தலைவரே! நீங்க இப்ப சொன்னது
    நூத்துக்கு நூறு உண்மை...!''

    ''சரியான ஜால்ராய்யா நீ!
    இப்ப நான் ஒண்ணுமே சொல்லலை...
    கொட்டாவி தான் விட்டேன்...!'' //ஹிஹி, பாஸ் தொண்டனாய் இருப்பதற்கு அடிப்படை தகுதியே இது தானே))

    ReplyDelete
  20. கொட்ட ஆவி ,கொட்ட ஆவி ,

    கொட்டாவி

    ReplyDelete
  21. ஆஆவ் நல்லா விடுறாங்கய்யா கொட்டாவி.... ஆமா இதுக்கு இங்கிலீஷ்ல என்னா பாஸ்

    ReplyDelete
  22. //////
    பலே பிரபு said...

    ஆஆவ் நல்லா விடுறாங்கய்யா கொட்டாவி.... ஆமா இதுக்கு இங்கிலீஷ்ல என்னா பாஸ்/////


    Yawn

    ReplyDelete
  23. ஆஹா.. கொட்டாவியை பற்றி தெரிந்துக்கொண்டேன்...ஆனால் முன்னோர்கள்..கெட்ட ஆவி என்று சொன்னதை தான் மருவி மருவி கொட்டாவி என்று வந்து விட்டது... பகிர்வுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. நகைச்சுவையோடு தெரியாத சில செய்திகளை சொன்னதற்கு நன்றி.

    ReplyDelete
  25. "தலைவரே! நீங்க இப்ப சொன்னது
    நூத்துக்கு நூறு உண்மை...!''

    comment kooda postla irunthu than edupom naanga ahhhh..(kottavi)

    ReplyDelete
  26. குமரிப்பெண் தனியாகப் போனாலும், கொட்டாவி தனியாகப் போகாது.

    ஒருவருக்கு கொட்டாவி வந்தால் சுற்றியிருப்பவர்கள் , பார்ப்பவர்கள் அனைவருக்கும் கொட்டாவி வரும் சாத்தியக் கூறுகள் அதிகம்.

    ReplyDelete
  27. உங்க பதிவை படித்தால் கொட்டாவியா வறுத்து. போரடித்ததால் அல்ல. யாராவது கொட்டாவியை பற்றி பேசினால் நமக்கும் வருமே அதே போல. பல அரிய தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  28. ஹா...வ்.

    ஓ! கொட்டாவி விட்டா இப்படியெல்லாம் சமாளிக்கலாமா....

    ஒரு புதிய கோணத்தில் கொட்டாவி...
    அருமை நண்பரே...

    ReplyDelete
  29. எல்லா கருத்துரை களையும்
    படிச்சேன் நானும் எழுதலாமே
    நினைச்சேன்
    அதுக்குள்ளே பாழும்
    கொட்டாவி வந்துடிச்சே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  30. உண்மையாவா????

    ReplyDelete
  31. நல்ல கருத்து பாஸ்!!
    தமிழ் மணம் என்னாச்சு?

    ReplyDelete
  32. ஆவ்வ்வ்வ்வ் - சவுந்தரு - கொட்டாவியா வருதுய்யா - தூங்கப்போறேன்யா - ராத்ரி 10:22 மணிய்யா . வர்ட்டா

    ReplyDelete
  33. “எனக்குத் தொடர்ந்து கொட்டாவி வந்துகிட்டே இருக்கு டாக்டர்...!” (ஏன்... மனோ பதிவை படிச்சாரா)//

    யோ..உனக்கு ஓவர் குசும்பையா. ஆளாளுக்கு நம்ம அண்ணாச்சி மனோவைப் போட்டு சட்னியாக்குறீங்களே;-)))

    ReplyDelete
  34. "தலைவரே! நீங்க இப்ப சொன்னது
    நூத்துக்கு நூறு உண்மை...!''

    ''சரியான ஜால்ராய்யா நீ!
    இப்ப நான் ஒண்ணுமே சொல்லலை...
    கொட்டாவி தான் விட்டேன்...!'' //

    அவ்...கொட்டாவி பற்றிய ஹொட்டான விளக்கப் பதிவு- எனக்கு இதுவரை தெரிந்திருக்காத, பல தகவல்களைத் தந்திருக்கிறது.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...