கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

29 August, 2011

இந்த குழந்தை என்ன செய்திருக்கிறது உங்களை...!



தயதுடிப்பில் தொடங்கி
பேரண்டத்தின் பெரும்பகுதி வரை
நிசப்தத்தை நிர்மூலமாக்குகிறது
சப்தங்கள்...!

சில சப்தங்களை தின்று
இசையாய் உமிழ்கிறது உலகம்...

ற்கால மனிதனின் சுவடுகள்
இன்னும் ஒட்டிக்கொண்டிருந்திருக்கும்
நாம் இசையால் செதுக்கப்படாமல் இருந்திருந்தால்...
kavithaiveedhi.blogspot.com
ழு  ஸ்வரங்களை வைத்துக்கொண்டு
ஏழு கோடி ராகங்களை
உற்பத்திசெய்தாயிற்று....

வீணையென மீட்டும் 
நரம்புகளின் ஓசை
என் நரம்புகளையும் தட்டிப்பார்க்கும்...

குழலில் குதித்து 
வெளியேறிய காற்று என் குதூகலத்தின் 
வாசல் வரை வந்திருக்கும்...

ப்புத்தப்பாய் அடித்தாலும்
தப்புக்கு தாளமிடால் அமைதிகாத்ததில்லை
என் கால்கள்...

னால் இவை எதுவும்
என் செவியில் நுழைந்து
என் மூளையில் மூகாமிட்டு
என் இதயத்தில் இறங்கி
என் மனதுக்குள் மலர்ந்து
என்னை பரவசப்படுத்தியதில்லை...!

ன் குழந்தையின் 
மழலைச் சொல்லைப்போல....


குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
(மக்கட்‌பேறு குறள் 66)


பொருள் :
 தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.

 தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...!

43 comments:

  1. கலக்குற மாப்ள!

    ReplyDelete
  2. அருமை!திருக்குறளை கவிதையாய் இனிக்கச்செய்து விட்டீர்கள்!
    படங்கள் பொருத்தம்!
    தொடரட்டும்!உங்கள் முயற்சி!

    ReplyDelete
  3. மிக அழகாகச் சொல்லியிருக்கீங்க நண்பா.

    ReplyDelete
  4. படைப்புப் பலபடைத்துப் பலரோ டுண்ணும்
    உடைப்பெருஞ் செல்வ ராயினு மிடைப்படக்
    குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
    இட்டுந் தொட்டுந் கவ்வியுந் துழந்தும்
    5 நெய்யுடை யடிசின் மெய்பட விதிர்த்தும்
    மயக்குறு மக்களை யில்லோர்க்குப்
    பயக்குறை யில்லைத் தாம்வாழு நாளே. (188)

    பாண்டியன் அறிவுடை நம்பி பாட்டு.

    ReplyDelete
  5. படைப்புப் பலபடைத்துப் பலரோ டுண்ணும்
    உடைப்பெருஞ் செல்வ ராயினு மிடைப்படக்
    குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
    இட்டுந் தொட்டுந் கவ்வியுந் துழந்தும்
    5 நெய்யுடை யடிசின் மெய்பட விதிர்த்தும்
    மயக்குறு மக்களை யில்லோர்க்குப்
    பயக்குறை யில்லைத் தாம்வாழு நாளே. (188)

    பாண்டியன் அறிவுடை நம்பி பாட்டு.

    ReplyDelete
  6. ஆம்!மழலையின் இனிமைக்கு எதுவும் ஈடாகுமோ!
    நன்று!

    ReplyDelete
  7. அழகிய குறளுக்கு
    இனிய விளக்கக் கவிதை....
    முனைவர் இரா.குணசீலன்
    அவர்களின் கருத்து மேலும் உங்கள்
    கவிதையை மெருகூட்டுகிறது.

    ReplyDelete
  8. உங்கள் கவிதையே அருமையான விளக்கம்தான். மேலும் ஒரு விளக்கம் தேவை இல்லை என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  9. சூப்பர் பாஸ்! மிக அழகான கவிதை!

    ReplyDelete
  10. உண்மைதான் .......குழந்தைகளின் குரல் அத்தனை வசீகரமானது (தெய்வத்தின் குரலல்லவா )

    ReplyDelete
  11. ஆனால் இவை எதுவும்
    என் செவியில் நுழைந்து
    என் மூளையில் மூகாமிட்டு
    என் இதயத்தில் இறங்கி
    என் மனதுக்குள் மலர்ந்து
    என்னை பரவசப்படுத்தியதில்லை...!

    ....super!!!

    ReplyDelete
  12. //ஆனால் இவை எதுவும்
    என் செவியில் நுழைந்து
    என் மூளையில் மூகாமிட்டு
    என் இதயத்தில் இறங்கி
    என் மனதுக்குள் மலர்ந்து
    என்னை பரவசப்படுத்தியதில்லை...!///

    மிக அற்புதமான வரிகள்...

    ReplyDelete
  13. நல்ல கவிதை வரிகள் பாஸ்.

    இன்று என் கடையில்-(பகுதி-4)நினைவுகள் மாறாத உண்மைக்கதை மறக்கமுடியாத பாடசாலை நாட்கள்
    http://cricketnanparkal.blogspot.com/2011/08/4.html

    ReplyDelete
  14. என் செவியில் நுழைந்து
    என் மூளையில் மூகாமிட்டு
    என் இதயத்தில் இறங்கி
    என் மனதுக்குள் மலர்ந்து
    என்னை பரவசப்படுத்தியதில்லை...!

    என் குழந்தையின்
    மழலைச் சொல்லைப்போல....

    அழகிய கவிதைக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  15. அருமை ஒரு ஒரு வரியும் ரசித்து உணர்ந்து எழுதி இருக்கீங்க வாழ்த்துக்கள்

    கடைசி புகைப்படம் சூப்பர்

    ReplyDelete
  16. kavithai கவிதை படம் 2 ம் அசத்தல்

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள்..
    அருமையான கவிதை..

    ReplyDelete
  18. இயற்கையின் இசை ஒட்டு மொத்தத்தினையும் சேர்த்து குழைந்த கலவையான இன்பம் மழலையின் குரலில்.. உங்களை கவிதையும் அத்தகைய இன்பத்தையே காட்டுகிறது.. வாழ்த்துகளும், பாராட்டுக்களும்..

    ReplyDelete
  19. //ஆனால் இவை எதுவும்
    என் செவியில் நுழைந்து
    என் மூளையில் மூகாமிட்டு
    என் இதயத்தில் இறங்கி
    என் மனதுக்குள் மலர்ந்து
    என்னை பரவசப்படுத்தியதில்லை...!
    என் குழந்தையின்
    மழலைச் சொல்லைப்போல....
    //


    அழகான வரிகள்..

    ReplyDelete
  20. குழந்தை பற்றிய கவிதை அருமை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  21. குழந்தையின் மழலைச் சொல் பற்றிய குதூகலமான கவிதையினூடாக, நீங்கள் ரசித்த மழலையின் உணர்வுகளை மீட்டியிருக்கிறீங்க.

    ReplyDelete
  22. மழலையே ஒரு கவிதைதான். கவிதையைப் பற்றிய தங்கள் கவிதை மிக இனிமை. படங்கள் அருமை.

    ReplyDelete
  23. //இந்த குழந்தை என்ன செய்திருக்கிறது உங்களை...!//

    உங்கள் தலைப்பு இது.

    மழலை மனதை திருடிவிட்டது. கவிதையும்தான்.

    ReplyDelete
  24. //என் குழந்தையின் மழலைச்சொல் போல//

    உண்மைதான். குழந்தையின் மழலை பேச்சுக்கும் சின்ன சின்ன சிரிப்புக்கும் ஈடு இணையில்லை.

    ReplyDelete
  25. கவிதை அருமை. பகிர்வுக்கு நன்றி.

    தமிழ் மணம் ஓட்டும் போட்டாச்சு

    ReplyDelete
  26. குறளும் பொருளும் பின்னர் பொருள் கவிதையும் சூப்பர் அண்ணா.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. ஆனால் இவை எதுவும்
    என் செவியில் நுழைந்து
    என் மூளையில் மூகாமிட்டு
    என் இதயத்தில் இறங்கி
    என் மனதுக்குள் மலர்ந்து
    என்னை பரவசப்படுத்தியதில்லை...!

    உண்மை...உண்மை...
    கவிதை மிகவும் அழகாய் இருக்கு

    ReplyDelete
  28. அருமையான படைப்பு
    மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் சொல்லாட்சி
    என் குழந்தையின் என்பதைவிட
    ஒரு குழந்தையின் என இருந்தால் இன்னும்
    சிறப்பாக இருக்குமோ எனத் தோன்றியது
    தரமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம.21

    ReplyDelete
  29. என் பேரன் வயது 11 மாதம். உங்கள் கவிதை அவனை வாழ்த்துவது போல் உள்ளது.இளம் மழலை உள்ளவர்களுக்குத்தான் உங்களினிய கவிதையின் மகத்துவம் புரியும்.நன்றி. எழிலன்.

    ReplyDelete
  30. அண்ணே...
    முகாமா?மூகாமா?
    சொன்னேன்னு கோவிச்சுகாதண்ணே!...

    ReplyDelete
  31. சகா அருமையான கவிதை. . . நல்லா இருக்கு. . .

    ReplyDelete
  32. மழலைக்குப்பிறகு தான் மற்றவை என்று அழகான கவிதையில் சொல்லியுள்ளீர்கள் நண்பா வாழ்த்துக்கள்

    ReplyDelete
  33. குயிலின் குரலில், கடலின் இரைச்சலில், சருகுகளின் சரசரப்பில் இன்பம் காணுகின்றேன். என் குழந்தையின் சிரிப்பிலேயே என் உலகத்தை மறக்கின்றேன். உண்மை அழகைக் காணுகின்றேன். அழாகன கவிதை. மனதுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது.

    ReplyDelete
  34. ரொம்ப அழகா இருக்கு கவிதை.

    ReplyDelete
  35. அன்பின் சௌந்தர் - அருமை அருமை - சிந்தனை அருமை - சொற்கள் தேர்ந்தெடுத்த சொற்களால் எழுதப்பட்ட கவிதை. கருத்து நன்று. வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

    ReplyDelete
  36. This comment has been removed by the author.

    ReplyDelete
  37. superb...கவிதை வள்ளுவன் வார்த்தைக்கு வலு செய்யும் வரிகள்.
    திருக்குறளுக்கு புதிய உரை செய்யும் முயற்சியா?? வாழ்த்துக்கள்        சௌந்தர்..

    ReplyDelete
  38. என் மனம் கவர்ந்த இந்த பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் இருக்கும்போது சென்று பாருங்கள். நன்றி. சுட்டி முகவரி:http://blogintamil.blogspot.com/2011/11/blog-post.html

    ReplyDelete
  39. //ஆனால் இவை எதுவும்
    என் செவியில் நுழைந்து
    என் மூளையில் மூகாமிட்டு
    என் இதயத்தில் இறங்கி
    என் மனதுக்குள் மலர்ந்து
    என்னை பரவசப்படுத்தியதில்லை...!


    என் குழந்தையின்
    மழலைச் சொல்லைப்போல....
    //

    arumayana varigal

    from
    chandhan-lakshmi.blogspot.com

    ReplyDelete
  40. நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...