கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

09 September, 2011

தமிழ் உலகம் வடிவேலுவை தவிர்ப்பது நியாயம்தானா...? வைகைபுயலின் அடுத்த நம்பிக்கை ரஜினி...!


ன்ராசாவின் மனசுல படத்தில் சாதாரண ஒரு கிராமத்துப் பையன்போல் எலும்பும் தோலுமாய் கருப்பு நிறத்தில் ஏதோ ஒரு துணைநடிகர்போன்று காட்சிஅளித்து... சினிமாவுக்கு வேண்டிய எந்த தகுதியும் இல்லாமல் திரையுலகில் நுழைந்து தன்னுடைய இயல்பான நகைச்சுவையாலும், தன்னுடைய நடிப்பாற்றலாலும் தன்னுடைய உடல் அசைவுகளாலும் இந்த தமிழினத்தையே சிரிக்க வைத்தவர் வைகைப்புயல் வடிவேலு. 

உதைத்து... உதைத்து.... (கவுண்டர்மணி-செந்தில்) நகைச்சுவை செய்துக்கொண்டிருந்த காலத்தில் உதைவாங்கி இவர் செய்த நகைச்சுவைகள் மக்கள் மனதில் பசையென ஒட்டிக்கொண்டது.

2000-ங்களுக்கு பிறகு தனக்கென தனிபாணியை வைத்துக் கொண்டு 10 ஆண்டிகளில் நகைச்சுவையின் உச்சத்திற்க்கு சென்றுவிட்டார். படத்திற்க்கு படம் வித்தியாசமான உருவம், தலைமுடி, மீசை, நடை, உடை, பாவனைகள் மாற்றி 6 வயது குழந்தை முதல் 60 வயது பெரியவர் வரை அத்தனைப்பேரையும் சிரிக்க வைத்தவர் நமது வடிவேலு.

மதுரையில் புறப்பட்டு சென்னையில் மையம் கொண்ட இந்த வைகை புயல் தற்ப்போது என்ன செய்வதென்று தெரியாமல் புயலுக்குபின் தோன்றும் ஒரு அமைதியில் இருக்கிறது. 

விஜயகாந்த்துக்கும் வடிவேலுக்கும் வண்டிநிறுத்துவதில் ஏற்ப்பட்ட மனஸ்தாபம், மற்றும் சிங்கமுத்துவிடம் நில வாங்கி ஏமாந்த போது உதவாத கேப்டன் மீது ஏற்ப்பட்டு வருத்தமும், கேப்டன் பற்றி விமர்சிப்பதா என்று தேமுதிக தொண்டர்கள் வடிவேலுமீது ஏற்படுத்திய சில கசப்பான சம்பவங்கள் மட்டுமே இவரை விஜயகாந்துக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட வைத்தது.

ஒரு அரசியல் பிரச்சாரம் அதுவும் தன்னை அவமானப்படுத்தியர் மீது தான் கொண்டுள்ள கோவத்தை தீர்த்துக் கொள்ள பயன்படுத்திக்கொண்டார். அரசியலில் நடந்த அந்த கசப்பான நிகழ்வுகளை மக்களே மறந்த நிலையில் தற்போதைக்கு எந்த பட தயாரிப்பாளர்களும் வடிவேலுவை பயன்படுத்தாதது மிகவும் தவறான வழிமுறையாகும் மற்றும் வருத்தப்படக்கூடிய விஷயமாகும்.

இதே விஜயகாந்த் கடந்த தேர்தலில் ஜெயலலிதாவுடன் மோதிக் கொண்டார். அவர் குடித்துவிட்டு வருகிறார் என்று ஜெ சொல்ல ஆமாம் எனக்கு அவர்தான் ஊற்றிக் கொடுத்தார் என்று கேப்டன் சொன்னார் அதையெல்லாம் மறந்துவிட்டு இன்று ஒரே கூட்டணியில் இருக்கிறார்கள். அதை மறக்கும்போது இதெல்லாம் சாதாரண விஷயம்தான்.

விஜயகாந்த், விஜய், சரத்குமார், கார்த்திக், விஜய ராஜேந்திரன், குஷ்பூ, ராதிகா, இன்னும் என்னற்ற நட்சத்திரங்கள் அரசியலில் ஈடுப்பட்டு அந்த பாதிப்பு ஏதும் இல்லாமல் தன்னுடைய கலைஉலகில் இருந்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இந்த விஷயத்தில் வடிவேலுவை மட்டும் விலக்கி வைப்பது எந்த விதத்தில் நியாயம்.

இன்று ஆதித்யா சிரிப்‌பொளி போன்ற நகைச்சுவை சேனல்கள் அனைத்திலும் ஆக்கிரமித்துள்ளது வடிவேலுவின் நகைச்சுவைதான் அவரின் திறமைகளை தமிழகம் இ‌ழக்க தயாராகி விட்டதா..?

புல்லட் பாண்டி, செட்டப் செல்லப்பா, அலார்ட்டு ஆறுமுகம், படித்துரைப்பாண்டி, நாய் சேகர், கைப்புள்ள, 23வது புலிகேசி, ஜாக்கி, என்று படத்திற்க்கு படம் வித்தியாசமான முறையில் தன்னுடைய நகைச்சுவையை அர்பணித்து இந்த தமிழ் நெஞ்சஞ்சங்களை ஆக்கிரமித்த ஒரு நகைச்சுவையாளனுக்கு நாம் அளித்திருக்கும் தண்டனை கொஞ்சம் அதிகம்தான்...

தமிழ் திரையுலகில் மீண்டும் வடிவேலுவின் ஆதிக்கம் தொடர வேண்டும். அவருடைய நகைச்சுவையில் இந்த தமிழ் நெஞ்சங்கள் நிறைய வேண்டும் என்று என்னுடைய எண்ணத்தை இங்கு நான் பதிவு செய்கிறேன்.

தமிழ் திரைப்படங்களில் என்னற்ற படங்கள் வடிவேலுவின் நகைச்சுவைக்காகவே ஓடியிருக்கிறது. இதை தமிழ் உலகம் மறந்துவிடக்கூடாது...  ஒரு ஒப்பற்ற கலைஞனை நாம் இழக்க கூடாது. வடிவேலுவின் அடுத்த பகுதி விரைவில் தொடங்க வேண்டும் என்பதே என்னைப்போன்ற ‌நகைச்சுவை ரசிகர்களின் ஆசை....
தற்போதைக்கு ராணாவில் வடிவேலுவை பயன்படுத்திக் கொள்ளுமாறு இயக்குனர் ரவிக்குமாரிடம் ரஜினி சொல்லியிருப்பதாக கேள்வி. தமிழ் உலகமே...! தமிழ் திரைஉலகில் நல்ல வரவேற்ப்பு பெற்றிருக்கும் வடிவேலுவை இன்னும் பயன்படுத்திக் ‌கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துகிறேன்.

தமிழ் திரைப்படங்களில் என்னற்ற படங்கள் வடிவேலுவின் நகைச்சுவைக்காகவே ஓடியிருக்கிறது. இதை யாரும் மறுத்துவிட முடியாது இதை தமிழ் உலகம் மறந்துவிடக்கூடாது...  ஒரு ஒப்பற்ற கலைஞனை நாம் இழக்க கூடாது. வடிவேலுவின் அடுத்த இன்னிங்ஸ் விரைவில் தொடங்க வேண்டும் என்பதே என்னைப்போன்ற ‌நகைச்சுவை ரசிகர்களின் ஆசை.... 

இதைப்பற்றி தங்களின் மேலான கருத்தையும் நான் எதிர்ப்பார்க்கிறேன்...

30 comments:

  1. ராணா பற்றிக் கூட ஏதோ எடக்காக வடிவேலு சொன்னதாக முன்பு செய்தி ஒன்று வந்ததே!

    ReplyDelete
  2. ராணா பற்றியும் கவலை இல்லை, கானா பற்றியும் கவலை இல்லைன்னு சொன்னார்.. பார்ப்போம். என்ன நடக்குதென்று..

    ReplyDelete
  3. ஒரு ரவுண்ட் வந்தார். இனி மீள்வது சிரமம். சரியாக சொல்வதானால் பதினைந்து வருஷம் தம் திரை உலகில் அசைக்க முடியாமல் இருந்தவர். இளம் வயது நாயகர்களுக்கு சந்தானம் சரியான ஜோடியாகி விட்டார். ரஜினி கூட எந்திரனில் சந்தானத்துடன் நடித்தார். நடுத்தர வயது ஹீரோக்களுக்கு கஞ்சா கருப்பு. விவேக்கே இப்போது மார்க்கெட் இழந்து விட்டாரே. மாற்றங்கள் தவிர்க்க இயலாதது.

    ReplyDelete
  4. திறமையை பயன்படுத்தாவிட்டால் இழப்பு நமக்கு தானே ஒழிய அவருக்கு இல்லை..

    ReplyDelete
  5. அதுவும் இல்லாமல் வாய்ப்புகளை அவர் தவிர்த்தால் நாம் எதுவும் செய்ய முடியாதே!!??

    ReplyDelete
  6. வாய் கொழுப்பு சீலையில் வடிஞ்ச கதை தெரியுமோ...??

    ReplyDelete
  7. அதாவது வடிவேலு மீது கட்சி கறை செமையா பதிஞ்சி போச்சு இனி அவரை ரசிப்பது சில பலருக்கு கடினம்தான்,,,!

    ReplyDelete
  8. வணக்கம் சார், கும்புடுறேனுங்க!

    எனக்கும் வடிவேலு மீண்டும் வரணும்னு தான் விருப்பம்! எது எப்படி இருந்தாலும், எம்மையெல்லாம், கவலைகளை மறந்து சிரிக்க வைத்த ஒரு கலைஞனை, நீண்டகாலம் தண்டிப்பது, மனசுக்கு கஸ்டமாக இருக்குது!

    ReplyDelete
  9. சவுந்தர் சார், என்னோட ப்ளாக் பக்கம் எட்டிப் பாருங்க! மொக்கை போட்டிருக்கேன்!

    ReplyDelete
  10. ஒற்ற வரியில் சொல்ல போனால் -சினிமா பிடிக்காதவனுக்கு கூட வடிவேலுவை பிடிக்கும் :..

    ReplyDelete
  11. வடிவேலு திறமையானவர் என்பது சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது. நட்பு வேறு அரசியல் வேறு என்பதைப் புரிந்து கொள்ளாததால் வந்த அவலம் இது

    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete
  12. மாப்ள...நீங்க சொல்வது சரியே ஆனாலும் இதுவரை தன் தவறை அவர் உணரவில்லை...இப்போதும் தன் பணம் தன்னை காப்பாற்றும் என்று நினைக்கிறார்...இதுவே இன்றும் பிரச்சனையாக உள்ளது....

    ReplyDelete
  13. Give a chance to Vadivel, a best comedian. We need more from him. samy

    ReplyDelete
  14. உங்களது கருத்துதான் என்னுடைய கருத்தும்
    இதுபோன்ற கலைஞர்கள் இனியாவது தங்களது
    லெட்சுமணக் கோட்டைத் தாண்டாது இருக்கப் பழகவேண்டும்
    என்பது என்னுடைய அவா
    சரியான சமயத்தில் சரியான பதிவு.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. வாய்கொழுப்பு என்பது இதுதானா?

    ReplyDelete
  16. நல்ல நகைச்சுவை நடிகர்
    தன நிலை அறிந்து செயல்பட வேண்டும்
    என காலம் கற்றுக்கொடுத்த பாடத்தை
    புரிந்திருப்பார் என நம்புவோம்.

    ReplyDelete
  17. தமிழ் சினிமாவில் காமெடி மட்டும்தான் பார்க்ககூடிய பாகமாக இருக்கின்றது அதுவும் வடிவேலு என்றால் சொல்லவே தேவை இல்லை.

    சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி ஒருவருகொருவர் எதிரிகள் கிடையாது இன்றைக்கு அடித்துக் கொள்வார்கள் நாளைக்கு சேர்ந்து கொள்வார்கள் ஆனால் வடிவேலு விசயத்தில் தமிழ் சினிமா துறையினர் எடுத்த முடிவு அவர்கள் தலையிலியே அவர்கள் மண்ணை அள்ளி போட்டுக்கிட்ட மாதிரி இருக்கு.

    நகைச்சுவை கலைஞனை நகைச்சுவையாகத்தான் பார்ர்க்கனும் எதிரியாக பார்ப்பது தமிழ் சினிமாவிற்கு உகந்தது அல்ல.

    ReplyDelete
  18. வடிவேலுவை யாரும் அசைக்க முடியாதுங்க....

    அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
    ஆரிருள் உய்த்து விடும்.

    மக்கள் வடிவேலுவையும், அவரது நகைச்சுவையும் ரசித்தது உண்மை தான்... அதற்காக எலக்சனில் அவரது பிரச்சனையை வைத்து மக்களிடம் அரசியல் செய்தது தான் மக்களுக்கு பிடிக்கவில்லை..... இன்று மட்டுமல்ல வடிவேலுவின் தீவிர ரசிகனாக என்னைபோன்றோர், நம்மைப்போன்றோர் எல்லாரும் இருப்பார்கள் என்பது உண்மை தான் அவர் நடிப்பு என்ற எல்லையை தாண்டாத வரை....

    ReplyDelete
  19. கண்டிப்பாக வடிவேலு ஒரு ஒப்பற்ற கலைஞன் அதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் மதி கேட்டு பேசினால் என்னவாகும் என்பதற்கு வடிவேலு ஒரு சரியான உதாரணம். ஆனால் எவ்வளவோ குப்பை படங்களை ஓட வைத்து வடிவேலுவின் காமெடிகள். இவரை வைத்து லாபம் சம்பாதித்தவர்கள் எத்தனையோ இயக்குனர்களும்,தயாரிப்பாளர்களும் அவர்களே அந்த நன்றியை மறந்து விட்டனர்.

    ReplyDelete
  20. இன்றைய காலகட்டத்தில், சந்தானத்தை தவிர வேறு எந்த காமெடியன்களும் அவ்வளவாக தமிழ் திரையுலகில் ஜொலிப்பதில்லை. காரணம், 'சரக்கு' இல்லை அவர்களிடம். இதை தயாரிப்பாளர்கள் உணரும்போது கண்டிப்பாக வடிவேலுவை பயன்படுத்திக் கொள்வார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete
  21. வடிவேலு மீண்டும் வரணும்

    ReplyDelete
  22. வடிவேலுவை திரையுலகம் பயன்படுத்தவில்லை என்றால் நஷ்டம் அவருக்கில்லை... திரையுலகிற்கே

    ReplyDelete
  23. உங்கள் பதிவை ஆதரிக்கிறேன்
    நல்ல நடிகர்களை அரசியல்
    நோக்கோடு பார்ப்பது தவறு

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  24. அரசியலை விட சினிமாத்துரை கேவலமாகி
    விட்டது என்பதையே காட்டுகிறது...
    வடிவேலை புறந்தள்ளியது... தமிழ் சினிமாவில்
    தமிழ் தெரிந்தவர்கள் இருந்தால்தானே ஒரு நல்ல
    கலைஞனின் அருமையும் அவசியமும் தெரியும்.
    நான் வடிவேலுக்காகவே படம் பார்ப்பவன்
    அற்புதமான நகைச்சுவை நடிகர்.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...