கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

09 October, 2011

இது என் அன்புள்ள எதிரிகளுக்கு...


துவரை நண்பர்களுக்கே
வாழ்த்துப்பாக்கள் பாடிய என் நா...

தோழர்களோடு மட்டுமே ‌தோழமைப்பாராட்டி
சிறகு முளைத்த என் தூரிகைகள்...

முதன் முதலாய்...
என் எதிரிகளுக்கும்
வண்ணம் பூசிஅழகுபார்க்க துடிக்கிறது..

ன் அன்புள்ள எதிரியே..
தற்போது
உன் வாழ்க்கைப்பதிவை பார்த்துதான்
என் படிக்கட்டுகள் பயணப்படுகிறது..

நீ வெற்றிக்கனியை பறிக்கும்போதெல்லாம்
என் தோல்விகள் துரத்துகிறது
எப்படியாவது அதை அடைந்து விட...

நீ கொண்டுள்ள வேகத்தை
குறைத்துக் கொள்ளாதே...
உன் வேகம் தான்
என் தற்காப்புக்கு என்னை தயார்படுத்துகிறது...

ன் வேகம் தான்
அதிகமாய் முயற்சிக்கவும்..
அதிகமாய் ஆயத்தப்படவும்..
‌அதிகமாய் போராடவும்
எனக்கு கற்றுக் கொடுக்கிறது...

ன் மீசைகளில்
சிலந்திகள் தங்கிவிடாமல் தூக்கி நிறுத்தவும்..
என் பாதங்கள் பாழ்படாமல்
பயணப்படவும்..!

ன் உயிர் அணுக்கள்
ஓய்வை தவிர்த்து உறுதிபடவும்..!
என் எதிரியே நீ மட்டும்தான் காரணம்

காயப்படுத்தியும்.. காயப்பட்டும்...
மீண்டுவிடுகிறேன்
உன் பயணமும் உன் வளர்ச்சியும்
என்னை தூங்கவிடுவதில்லை...!

ன்னோடு போரிட 
நீ எடுத்த ஆயுதம் உழைப்பு..!
அதனால் தான்
கத்தியின்றி ரத்தமின்றி
பயணப்படுகிறது நம் போர்முறை....

ஓ... அன்புள்ள எதிரியே
என்றாவது ஒருநாள் நீயோ.. நானோ..
வீ‌ழ்ந்து விடும் தருணம் வரும்போது
தோல் கொடுத்து தோழனாகிவிடுவோம்..

 

துவரை
நாம் எதிரிகளாகவே பயணிப்போம்...

தற்போது வருகைப்புரிந்த
என் அத்தனை அன்புள்ள .........களுக்கும்
என் நன்றிகள்...


38 comments:

  1. /////
    பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]

    யாருண்ணே அது?

    ////////////

    நாம எல்லாரும் தாங்க...

    ஒவ்வோருவருக்கும் ஒரு எதிரியும் ஒரு நண்பனும் இருக்கிறான்....

    இதில்

    ராமசாமி யாருன்னு நீங்க தான் சொல்லனும்...

    ReplyDelete
  2. முதுகில் குத்தாத எதிரி எமது வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருப்பான் )

    ReplyDelete
  3. அருமையான படைப்பு
    எதிரிகள் இல்லையெனில் நாம் சராசரிகள்
    ஆகி விடுவோம்
    நாம் சக்தி பெருக்கவும் ஆயுதங்களின்
    கூர் மழுங்காது காத்து இருப்பதும்
    எதிரிகளின் தொடர் தாக்குதலால்தானே
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 4

    ReplyDelete
  4. அண்ணே சூப்பர்

    ReplyDelete
  5. மோதல்களினால் விசையுறும் மனம். நல்ல கவிதை.

    ReplyDelete
  6. கவிஞ்சா கலக்கற!

    ReplyDelete
  7. ஓ... அன்புள்ள எதிரியே
    என்றாவது ஒருநாள் நீயோ.. நானோ..
    வீ‌ழ்ந்து விடும் தருணம் வரும்போது
    தோல் கொடுத்து தோழனாகிவிடுவோம்.. /

    தோள் கொடுத்து தோழனானவர்களுக்குப் பாராட்டுக்கள்>

    ReplyDelete
  8. எதிரிகளே வாழ்வில் உயர உத்வேகமளிக்கக்கூடியவர்கள்!

    ReplyDelete
  9. தட்டி குடுத்து கவிழ்த்து விடும் கூட இருப்பவனை விட, உங்கள் கருத்துக்கு எதிர் கருத்து பேசி உங்கள் குறைகளை சுட்டி காட்டுபவன் எதிரி அல்ல நண்பனே

    ReplyDelete
  10. //////
    FOOD said... [Reply to comment]

    கவிதை முழுவதும் அருமை. அந்த கடைசி வரிகள்:
    ”தற்போது வருகைப்புரிந்த
    என் அத்தனை அன்புள்ள எதிரிகளுக்கும்
    என் நன்றிகள்” மட்டும் நெருடல்.

    /////////


    தவறாக நினைக்க வேண்டாம்..

    கவிதையின் வடிவிலே சொல்ல வேண்டும் என்பதற்க்காக அப்படி சொன்னது...

    நிஜ வாழ்க்கையிலும் சரி... பதிவுலகிலும் சரி அன்புள்ள நண்பர்களே அதிகம்...

    கவிதைவியின் கருவுக்கு ஏற்றார்போல் அப்படிபோட வேண்டயதாயிற்று..

    தவறாக எண்ண வேண்டாம்...

    ReplyDelete
  11. ரெம்ப நல்லா இருக்கு தோழரே இல்லை இல்லை (எதிரி ) அவர்களே

    நம்
    அகத்திலும் இருக்கிறார்கள்
    நண்பனும் பகைவனும்

    நல்ல கருத்துள்ள வரிகள்

    ReplyDelete
  12. சௌந்தர் ---பாதிப்பு அதிகமோ ??

    ReplyDelete
  13. நீங்க ப்ரீ-யா இருந்தால் போன செய்யவும் ..

    ReplyDelete
  14. உங்கள் கவிதை மிகவும் அருமை எங்கள் எதிரிகளுக்கும் சேர்த்து நீங்கள் பேசியிருக்கின்றீர்கள். இந்த கவிதையை இலங்கை வசந்தம் தொலைக்காட்சியில் நான் தயாரிக்கும் தூவானம் கலை இலக்கிய நிகழ்ச்சியில் ஒளிபரப்புவதற்கு விரும்புகின்றேன் உங்கள் விருப்பத்தை தெரிவிக்கவும்.

    ''குயில்கள் இப்போது குரைக்கின்றன..''
    http://kavinger-asmin.blogspot.com/2011/10/blog-post.html

    ReplyDelete
  15. ஓ... அன்புள்ள எதிரியே
    என்றாவது ஒருநாள் நீயோ.. நானோ..
    வீ‌ழ்ந்து விடும் தருணம் வரும்போது
    தோல் கொடுத்து தோழனாகிவிடுவோம்..


    நல்ல வரிகள்.

    ReplyDelete
  16. யாருன்னு தெரியலையே

    ReplyDelete
  17. அன்புள்ள எதிரியே !
    அருமை!

    ReplyDelete
  18. டேய் நான் சாட் பண்ணினதுக்கு இன்னும் கவிதை போடலை, பிச்சிபுடுவேன் பிச்சி....

    போடலைன்னா நான் போட்டுருவேன் சாக்குரதை...

    ReplyDelete
  19. வாழ்க்கைக்கு கண்டிப்பா எதிரி தேவை மக்கா...!!!!

    ReplyDelete
  20. ஓர் எதிரி நண்பனாகின்றான்-
    வாழ்க்கை பாடம் கற்றுதரும்
    ஆசானாகிறான்? நாம் அவனை
    படிக்கும்போது!

    ReplyDelete
  21. // உன் வேகம் தான்
    அதிகமாய் முயற்சிக்கவும்..
    அதிகமாய் ஆயத்தப்படவும்..
    ‌அதிகமாய் போராடவும்
    எனக்கு கற்றுக் கொடுக்கிறது//


    நல்ல படைப்பு!

    தட்டத்தட்ட எழும் பந்து
    போல எதிரிகளின் தட்டலுக்கு
    எழுவதுதான் வளர்ச்சி!குட்டலுக்கு
    குனிவது தளர்ச்சி!

    இதைத் தெளிவாக்கும்
    உங்கள் கவிதை பாராட்டுக்கு உரியது

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  22. எதிரியையும் அன்புடன் அழைக்கும் தங்கள் குணம் அருமை நண்பரே

    ReplyDelete
  23. அருமையான 'எதிரி' கவிதை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  24. //என் மீசைகளில்
    சிலந்திகள் தங்கிவிடாமல் தூக்கி நிறுத்தவும்..
    என் பாதங்கள் பாழ்படாமல்
    பயணப்படவும்..!//அருமையான கவிதை

    ReplyDelete
  25. அருமையான கவிதை சௌந்தர் அண்ணே! ஒருவனுக்கு நண்பர்கள் இருக்கிறார்களோ இல்லையோ! கண்டிப்பாக எதிரி இருக்க வேண்டும்! அப்போதான் தெம்பு இருக்கும்!

    ReplyDelete
  26. அருமை. நல்லாயிருக்கு.

    ReplyDelete
  27. வாழ்க்கையில் ஜெயிக்க நண்பன் தேவை...
    வாழ்க்கை முழுவதும் ஜெயிக்க எதிரி தேவை....
    இனிமே நானும் ரெண்டு எதிரிககளை வச்சுக்கலாம்ன்னு நினைக்கிறேன்....நண்பா...

    எந்த எதிரியும் இதைப்படித்தவுடன் தோள் கொடுக்க ஓடி வருவான்....Super..

    ReplyDelete
  28. அன்பின் கவிதை வீதி சௌந்தர் - நம்க்கு வாழ்வினில் முன்னேற ஒரு இலட்சியம் வேண்டும் - அது உருவாவதற்குக் காரணமாய் இருப்பது பந்தயத்தில் நமது கூட வரும் நண்பர்கள் நம்மை முந்திச்செல்வதுதான். அவர்கள் முந்த முந்த நமக்கு உத்வேகம் கூடும் - அவர்களை முந்த வேண்டும் என்ற வெறி பிறக்கும் - சரியான சிந்தனை -

    //ஓ... அன்புள்ள எதிரியே
    என்றாவது ஒருநாள் நீயோ.. நானோ..
    வீ‌ழ்ந்து விடும் தருணம் வரும்போது
    தோல் கொடுத்து தோழனாகிவிடுவோம்.. //

    இச்சிந்தனை மிக மிக அருமை

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  29. எதிரிக்கும் கவிதை எழுதிய பாஸ்க்கு ஒரு சலூட்

    ReplyDelete
  30. ///////
    MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    டேய் நான் சாட் பண்ணினதுக்கு இன்னும் கவிதை போடலை, பிச்சிபுடுவேன் பிச்சி....

    போடலைன்னா நான் போட்டுருவேன் சாக்குரதை...

    ///////////

    கண்டிப்பாக நானே எழுதுகிறேன் மனோ..

    சரியான தாட் கிடைக்கவில்லை..

    தேர்தல் நேரம் கொஞ்சம் பிஸி அதனால்தான்

    ReplyDelete
  31. எதிரியின் தோல்வியினையும் தோழமையுடன் அணுகி நட்போடு தோள் கொடுக்கும் நல் உள்ளத்தின் உணர்வுகளைச் சொல்லி நிற்கிறது கவிதை!

    ReplyDelete
  32. வித்தியாசமான சிந்தனையில் உதித்த விவேகம் நிறைந்த கவிதை. மனமார்ந்த பாராட்டுக்கள்.

    ReplyDelete
  33. கவிதை அருமை....
    எதிரிகளைப் பாராட்டுவதுதான்..நல்ல உத்தி...

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...