முகமது நபியை குறித்து வெளியான சர்ச்சைக்குரிய திரைப்படத்தால் உலகம் முழுவதும் இருக்கும் இஸ்லாமிய மக்கள் கொதித்தெழுந்து அமெரிக்கா மீதான போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளகர். அந்த சம்பவம் அடங்கும் முன் இயேசு நாதம் குறித்த புதிய சர்ச்சை உறுவாகியுள்ளது.
இயேசுநாதர் திருமணமானவர் என்றும் அவருடைய முதன்மையான சிஷ்யையாக கருதப்படும் மேரி மெகதலீன்தான், இயேசுநாதரின் மனைவி என்றும் புதிய தகவல் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான ஆதாரமும் கிடைத்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் இறையியல் பிரிவு தலைவரான பேராசிரியர் கேரன் கிங் என்பவர்தான் இதுதொடர்பான ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளார். இயேசுநாதர் குறித்த இந்த முக்கிய தகவலை வெளியிட்ட அவர் கூறுகையில், மிக மிகப் பழமையான கையால் எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய கோரைப்புல்லால் ஆன கையெழுத்துப் படி ஒன்று கிடைத்துள்ளது. அதில் இயேசுநாதரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
முழுமையான வாசகங்கள் அதில் இல்லை. பண்டைய எகிப்திய கோப்டிக் மொழியில் வாசகங்கள் உள்ளன. அதை ஆராய்ந்து பார்த்ததில், இயேசுநாதரின் மனைவிதான் அவரது முதன்மையான பெண் சிஷ்யையான மேரி மெகதலீன் என்பது தெரிய வருகிறது. இருவரும் கணவன், மனைவியாக இருந்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த கையெழுத்துப் படியானது 8 செமீ நீளமும், 4 செமீ அகலமும் கொண்டதாக அமைந்துள்ளது. இந்த கையெழுத்துப் படியில் உள்ள வாசகங்கள் மூலம் இயேசுநாதரும், மேரி மெகதலீனும் கணவன் மனைவி என்பது திட்டவட்டமாக தெரிய வருகிறது.
ஒரு இடத்தில் மேரி மெகதலீனை எனது மனைவி என்று இயேசுநாதர் தனது சீடர்களிடம் குறிப்பிட்டதாக கூறப்பட்டுள்ளது.
ஒரு இடத்தில் மேரி மெகதலீன் எனது சிஷ்யையாக இருப்பார் என்று இயேசுநாதர் கூறுகிறார். அடுத்த 2 வரிகளில், நான் அவருடன் வசித்து வருகிறேன் என்று கூறியுள்ளார் இயேசுநாதர்.
இந்த கையெழுத்துப் படி நம்பகத்துக்குரியதாக இருக்க வேண்டும் என்றே நம்புகிறோம். அப்படி இருந்தால் இது மிகப் பெரிய ஆச்சரியகரமான தகவலாக அமையும் என்றார்.
ஏற்கனவே மேரி மெகதலீனும், இயேசுநாதரும் தம்பதியர் என்று அமெரிக்க எழுத்தாளர் டேன் பிரவுன் தனது தி டாவின்சி கோட் நூலில் குறிப்பிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையையும், எதிர்ப்புகளையும், புயலையும் கிளப்பியிருந்தது என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் மேரி மெகதலீன், இயேசுநாதரின் மனைவிதான் என்று அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யார் இந்த மேரி மெகதலீன்?
மேரி மெகதலீன் குறித்து பைபிளில் பல்வேறு தகவல்கள் உள்ளன. அவர் குறித்த சர்ச்சைக்கிடமான கருத்துக்களும் நிறைய உள்ளன. மேரி மெகதலீன் இயேசுநாதரின் முதன்மையான பெண் சீடராக இருந்தவர். அவருக்கு சீடர்கள் குழுவில் மிகுந்த முக்கியத்துவம் இருந்தது.
மேரி மெகதலீன் ஒரு விபச்சாரப் பெண்ணாக ஆரம்பத்தில் இருந்தார் என்று 591ம் ஆண்டு ஒரு குறிப்பு உள்ளது. பின்னர் இயேசுநாதர் அவரை சீர்திருத்தி தனது சிஷ்யையாக ஏற்றுக் கொண்டார் என்று கூறப்படுகிறது.
மேரி மெகதலீன் குறித்து இயேசுநாதரின் சீடர்களான லூக், மார்க், ஜான் ஆகியோரும் நிறையவே குறிப்பிட்டுள்ளனர்.
இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட பின்னர் அவரது ஆண் சீடர்கள் பலரும் போய் விட்டனர். ஜான் மட்டுமே உடன் இருந்தார். அவருடன் உடன் இருந்தவர் மேரி மெகதலீன். அதேபோல இயேசுநாதர் உயிர்த்தெழுந்தபோது அதை முதலில் கண்டவர் மேரி மெகதலீன்தான். இதை ஜானும், மார்க்கும் தங்களது குறிப்புகளில் சொல்லியுள்ளனர்.
இந்த நிலையில்தான் இயேசுநாதருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த மேரி மெகதலீன் உண்மையில் இயேசுநாதரின் மனைவி என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த செய்திகுறித்து இன்னும் என்னென்ன சர்ச்சைகள் கிளம்பு என்றும், இவற்றின் நம்பகத்தன்மை என்வென்று போகபோகத்தான் தெரியும்.
விமர்சனங்களைத் தாங்கும் வலுவும்,இதையெல்லாம் கடந்து போகும் தன்மையும் கிறுஸ்தவ மதத்திற்கு உண்டு.
ReplyDeleteஎல்லா மதங்களுக்கும் சர்ச்சைகைகளைத் தாங்கும் வலிவுண்டு
ReplyDeleteபார்ப்போம்
tha.ma 2
ReplyDeleteஆரம்பித்து விட்டார்களா....?
ReplyDeleteஅப்போ டேன் ப்ரவுன் சொன்னது உண்மையா??? உண்மையாகும் பட்சத்தில் என்னென்ன நடக்குமோ?
ReplyDeleteவணக்கம் சகோ,
ReplyDeleteமேரி மகதலேன் இயேசுவின் மனைவி என ஏற்கெனெவே டாவின்சி கோட் புத்த்கத்தில் டான் பிரௌன் எழுதியதுதானே. மேரி மகதலேன் எழுதிய சுவிசேசம் என்பதும் உண்டு.
/http://en.wikipedia.org/wiki/Gospel_of_Mary/
அக்காலத்தில் இருந்த பல் புத்த்கங்க்களில், ஒத்த கருத்து கொண்ட சில புத்தகங்கள் மட்டும் தொகுத்து மதபுத்தகம் ஆக்கப்பட்டன. ஆகவே நாம் அறிந்த மத புத்தக கருத்துக்கு மாறான கருத்துகள் கிடைக்கும் போது வியப்பு அடைகிறோம். ஆனால் இதுதான் உண்மை.ஒவ்வொரு மதத்தின் தோற்றமும் அரசியல் அதிகாரம் கைப்பற்றும் முயற்சியே!.
இன்னும் இயேசு என்பவர் வாழ்ந்தார் என்பதற்கே ஆதாரம் இல்லை என பல வரலாற்று ஆய்வாளர்கள் கடந்த 100 வருடங்களாக் கூறிவருகிறார்.அதற்கே கிறித்தவர்கள் கண்டுக்காமல் போகிறார்கள் ,பிரச்சினை ஒன்னும் இல்லை!!
இது ஏற்கெனவே தெரிந்த செய்தி என்பதால் ஒரு பிரச்சினையும் வராது!!.
நன்றி!!
இயேசு திருமணம் செய்திருந்தால் என்ன தவறு. திருமணம் செய்தவர் தேவனுடைய குமாரராக இருக்க முடியாதா?.
ReplyDeleteவிஜயகுமார் சார்! நீங்கள் ஒரு கொசுவைப் படைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு கொசுவைத் திருமணம் செய்து கொள்வீர்களா? மனிதரை கடவுள் சிருஷ்டித்திருந்தால் அவரும் திருமணம் செய்து கொள்ள நிர்பந்திப்பது சரியா? இது முட்டாள்தனம் இல்லையா? சிருஷ்டியையும் சிருஷ்டிகர்த்தாவையும் ஒப்பிடுவது கூடாது. நம்முடைய படைப்புத்தன்மை வேறு. கடவுளின் இருப்புத் தன்மை வேறு. He is not a human. He is God. Always He is God.
Deleteஅப்போ கல்யாணம் பண்ண்வங்க எல்லாம் கடவுள் இல்லையா......
Deleteஎனக்கு எங்க அம்மா அப்பா தான் கடவுள்..... எங்க அம்மா அப்பாவையும் அப்ப அம்மாவையும் கல்யாணம் பண்ணினதால அவங்கள கடவுள் இல்லைன்னு ஆகிடுமா
தந்தையையும் தாயையும் உன்னத ஸ்தானத்தில் வைத்து மதிப்பது தவறே ஆகாது. சொல்லப்போனால் கடவுளுக்கு அடுத்து அவர்களே முக்கியமானவர்கள். ஆனால் ஒருபோதும் கடவுளுடைய ஸ்தானத்தை மனிதர்களுக்கு கொடுக்கக் கூடாது கேரளாக்காரன் சார். துரதிர்ஷ்ட வசமாக நம்முடைய மார்க்கங்கள் இவ்வித போதனையை வழங்கத் தவறிவிட்டன.
Deleteடாவின்சி கோட் சர்ச்சையை மீண்டும் கிளப்புகிறார்கள் போலிருக்கிறது.
ReplyDeleteரைட்டு..
ReplyDeleteகிறித்தவர்களால் பிரச்சினை வராது.
ReplyDeleteஇந்துக் கடவுள் பற்றி எழுதினால் இந்துக்கள் கண்டு கொள்ளவே மாட்டார்கள்.
இவர்களுக்கெல்லாம் சகிப்புத்தனமையும்,புரிதலும் இருக்கிறது!
இன்று என் தளத்தில் “பைத்தியம் தெளிவதில்லை”
ReplyDeleteஇவையெல்லாம் வேண்டாத ஆய்வுகள் என்பதே என்
கருத்து!
ஹா...ஹா...இந்த ஆராய்ச்சி முடிவுகளெல்லாம் எனக்கு சிரிப்பையே வரவழைக்கின்றன. சாம்ராஜ்யங்களும், சரித்திர புருஷர்களும் அழிக்க முடியாத உன்னத மார்க்கத்தை இந்த கொசுப் பேச்சு என்ன செய்து விடும்? கிறிஸ்தவர்களின் நம்பிக்கை மூளையில் அல்ல. இதயத்தில் இருக்கிறது. கிறிஸ்துவின் மீது உள்ள அன்பை எந்த படைப்பும் எடுத்துவிட இயலாது. கிறிஸ்து உலக இரட்சகர். இந்த அதி உன்னத அஸ்திபாரத்தை தகர்த்தெரிய வரலாற்றுக்கும் சக்தி இல்லை என்பதே மறுக்க இயலாத உண்மை. தகவலுக்கு நன்றி சார்.
ReplyDeleteநம் மத்ததின் மீது நமக்கு இந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கும் போது இதுமாதிரியான விமர்சனங்களால் என்ன சாத்த்துவிட முடியும் :) சூப்பர் டேனியல் சார்
Deleteஆம். நீங்கள் சொல்வது சரியே. நன்றி சகோ. கேரளாக்காரன் அவர்களே!
Deleteஉலக வரலாற்றில் ஏசு கிருஸ்துவைப்போல விமர்சனத்துக்கு ஆளானவர்கள் வேறு யாரும் கிடையாது.கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக ஏசுவை பற்றி ஏகப்பட்ட புனை கதைகளும் வதந்திகளும் பொய்களும் வரிசை கட்டி வந்த வண்ணம் இருப்பது ஒன்றும் புதிதல்லவே. கிருஸ்துவம் இதைபோன்ற பல தாக்குதல்களுக்கு உட்பட்டு அதையும் தாண்டி இன்றுவரை நீடித்து இருப்பதே அதன் பலம்.கிருஸ்துவர்கள் முஸ்லிம்கள் போல உணர்ச்சியால் வழிநடத்தப்படுபவர்கள் கிடையாது. மதத்தையும் அரசியலையும் பிரித்துப்பார்க்க தெரிந்த மனநிலை அவர்களுக்கு உண்டு. இன்னும் என்னென்ன புதிய கதைகள் வந்தாலும் அவர்கள் நம்பிக்கை அசையப்போவதில்லை. ஒரு சின்ன உப்பு பெறாத கார்ட்டூனுக்கும், யாருமே பார்க்காத ஒரு பதினாலு நிமிட பட முன்னோட்டத்துக்கும் குதி குதி என்று குதித்து ஆர்ப்பாட்டம் கொலை வரை போகும் மதவெறி அவர்களுக்கில்லை.
ReplyDeleteகடவுள் என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு அவரை காணாமல் விசுவசிப்பவனே மனிதன் . அவனே கிறிஸ்தவனும் கூட . ஏசுவைப் பற்றி எவ்வளவுதான் மோசமாக விமர்சித்தாலும் அவரையும் மன்னிப்பவர் இயேசு . பகைவனையும் நேசி என்று சொன்னவரே அவர்தானே . எனவே அவர் வழியில் செல்லும் கிறிஸ்தவர்களை எந்த செய்தியும் சலனப்படுத்தி விட முடியாது. சிரித்து விட்டு போவோமே ஒழிய யார் மேலும் பழி உணர்வை கூட வளர்த்துக் கொள்ள மாட்டோம் .
ReplyDelete//யாருமே பார்க்காத ஒரு பதினாலு நிமிட பட முன்னோட்டத்துக்கும் குதி குதி என்று குதித்து ஆர்ப்பாட்டம் கொலை வரை போகும் மதவெறி அவர்களுக்கில்லை//
ReplyDeleteha ha
இங்கு பின்னூட்டமிட்டவர் பலர் இந்த கண்டுபிடிப்பை ஏதோ கிருத்துவத்தின் மீதான விமர்சனம் என்பது போல தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். இது ஒரு ஆராய்ச்சி முடிவு, இதில் யாதொரு விமர்சனமும் இல்லை. கேரன் கிங் ஆரம்பகால கிருத்துவத்தில் பெண்களின் பங்கு குறித்து ஆய்ந்து வருபவர். கிருத்தவத்தின் வரலாற்றினை முடிவு செய்யும் அறிஞர் குழாமில் ஒருவர். " இந்த ஆவணம் கிருஸ்து திருமணம் புரிந்த கொண்டதற்கு அத்தாட்சியாக கருத இயலாது. ஆனால் ஆரம்ப கால கிருத்துவ குழுக்களிடையே கிருத்துவின் திருமணம் குறித்து கருத்து வேறுபாடுகள் இருந்ததை காட்டுவதாக கொள்ளலாம்" என்று மட்டுமே சொல்கிறார் கேரன். இந்த ஆவணம் உண்மையாகவே 4-ம் நூற்றாண்டின் பிரதியா என்பது குறித்து சந்தேகம் சிலர் தெரிவித்துள்ளனர். மேலும் இது 4-நூற்றாண்டை சார்ந்தது என்றாலும் எழுத்தாளர் பொய்யாவும் எழுதியிருக்கலாம்.
ReplyDeleteகத்தோலிக்க கிருத்துவ பாதிரிகளின் பிரம்மச்சரியம் ஏசுவின் பிரம்மசரியத்தை ஒட்டி ஆரம்பிக்கப்பட்டது. ஆகவே ஏசுவின் திருமணம் பற்றிய செய்திகள் கத்தோலிக்க சபையினரால் உக்கிரமாக மறுதலிக்கபடுகிறது. அமெரிக்காவில் இவர்கள் சிறுபான்மையினர் என்பதால் இந்த செய்திக்கு அவ்வளவு எதிர்ப்பு இல்லை. முன்பு, டாவின்சி கோடுக்கு இந்தியாவில் இருந்த எதிர்ப்பு அமெரிக்காவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கிருத்துவின் காலத்திய ஆவணங்களில் கிருத்து பிரம்ச்சாரி என்பதான குறிப்பு ஏதுமில்லை. 2-ம் நூற்றாண்டில் அலெக்சாண்டியாவின் கிளமான்ஸ் எனும் மதவாதி, திருமணம் சாத்தானின் கருத்து எனவும் கிருத்தவர்கள் கிருத்துவின் வழிநடந்து மணமுடிக்க கூடாது என எழுதினார். இதை ஒட்டியே பிற்கால கிருத்தவர்கள், ஏசு பிரம்மச்சாரி என போதிக்க ஆரம்பித்தார்கள் என கேரன் கருதுகிறார்.
எந்த மதமாக இருந்தாலும் பின்புலத்தை தோண்டி துருவுவதை விரும்பவதில்லை. ரிஷிமூலம் பார்க்ககூடாதாம்!
//இவையெல்லாம் வேண்டாத ஆய்வுகள் என்பதே என்
ReplyDeleteகருத்து!//
ஹிஹி இந்த மாதிரி ஆராய்ச்சிக்கு பணம் கொடுத்து உதவும் கிருத்துவ அமெரிக்கா வேறுவிதமாக கருதுகிறதே , என்ன செய்வது?
சர்ச்சைகள் இல்லாமல் மனிதர்கள் இல்லை.
ReplyDeleteமதங்களால் ஏற்படும் சர்ச்சைகளாலும், கலவரங்களாலும் காணாமல் போவது அவற்றின் போதனைகளே!
This comment has been removed by the author.
ReplyDeletekarekan nee yenna muttala oru ayvukke evvalasvu kuthikkeraye enkalin vuerai avamanappaduththinal eppadi erukkum karppanaiel vazathy manithanai padi
ReplyDeleteதிருவாளர் மன்சூர் அலி ரஹ்மான் நீங்கள் எனகென்று எதோ எழுதி இருப்பதாக தோன்றுகிறது ஆனால் தெளிவான தமிழிலோ அல்லது சுத்தமான ஆங்கிலத்திலோ அதை எழுதி இருந்தால் நலமாக இருந்திருக்கும். எதோ கற்பனை குதிப்பு என்று பினாத்தி இருக்கிறீர்கள்..போகட்டும்... உங்கள் நாகரீக எதிர்ப்பைத்தான் உலகம் நன்றாக பார்த்துக்கொண்டிருக்கிறதே? சம்பம்தம் இல்லாத ஒரு அமெரிக்கரை கொன்றதும் பல வெளி நாட்டவரை கொன்றும் உங்கள் நபி மேல் இருக்கும் அபிமானத்தை ரொம்ப நியாயமாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். இதே போல ஒரு கிருஸ்துவனோ அல்லது இந்துவோ கண்டிப்பாக செய்யமாட்டான். அவன் ஒரு தீவிரவாத இயக்கத்தில் இல்லாதவரை. முஸ்லிம்களில் பெரும் பான்மையான மக்கள் இப்படி ரத்த வெறி கொண்டு அலைவதைத்தான் நான் குறிப்பாக உணர்த்தி இருக்கிறேன். உங்களை போன்ற ஆட்களுக்கு கோபம் வந்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல.. அது உங்கள மதம் உங்களுக்கு செலுத்தி இருக்கும் கொலைவெறி உங்கள் அகராதி படி மத விசுவாசம்,, நடத்துங்கள் உங்கள் அட்டூழியத்தை.... கொஞ்ச நாட்களே .. அதன் பின் நீங்கள் எல்லோரும் ஓரம் கட்டப்படுவீர்கள்.. இதே நிலை தொடர்ந்தால்..
Delete