கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

09 May, 2011

108 -ல் ஒரு ஆச்சர்யம், உண்மை சம்பவம்...

இது என் வா‌ழ்க்கையில் நான்கு மாதங்களுக்கு முன் நடந்த உண்மை சம்பவம்....
ஒரு நாள் என் நண்பருடன் திருவள்ளூரில் இருந்து எங்கள் கிராமமான வெள்ளியூருக்கு டூவீலரில் சென்றுக் கொண்டிருந்தோம். அப்போது இரவு 8-00 மணி இருக்கும். நெடுஞ்சாலையினரால் அந்த சாலையில் நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடந்துக் கொண்டிருந்தது.

திருவள்ளூரில் இருந்து எங்கள் வீ டு சுமார் 20 கி.மீ. வழியில் சுமார் 10 கி.மீ. தூரத்தில் இருக்கும் ஒரு கிராமம் கீழானூர். அப்பகுதியில் ரோட்டின் குறுக்கே மழை நீர் செல்ல காய்வாய் அமைக்க பள்ளம் எடுத்திருந்தார்கள். அது சுமார் 20 அடி ஆழம் கொண்டது. அந்த பள்ளத்தை நாங்கள் மாற்றுப்பாதையில் கடக்கும்போது அந்த குழியில் இருந்து சத்தம் வருதை நான் கவனித்தேன். உடனே நண்பரிடம் சொல்லி வண்டியை நிறுத்தி‌னேன். அருகில் சென்று பார்த்த போது இரண்டுசக்கர வாகனத்துடன் இருவர் அந்த குழியில் விழுந்து கிடந்தனர். அவர்களுக்கு பலத்த காயம் ஏற்றபட்டிருந்தது.

உடனடியாக என்னுடைய செல் போனில் இருந்து 108-க்கு தகவல் கொடுத்தேன். அது 108 தலைமையக கட்டுப்பாட்டு அறைக்கு சென்றது. அவர்கள் என்னிடம் விவரங்கள் கேட்டுக் கொண்டு மாவட்ட தலைமையகத்திற்கு தெரிவித்து என்னுடைய செல் நம்பரையும் அவர்களுக்கு கொடுத்திருந்தார்கள். அடுத்த 5 நிமிடத்தில் 108 என்று முடியும் ஒரு செல் நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. நாங்கள் 108-ல் இருந்து பேசுகிறோம். திருவள்ளூரில் இருந்து கிளம்பிவிட்டோம். நாங்கள் எப்படி வரவேண்டும் என்று வழிச்சொல்லுங்கள் என்று வழிக்கேட்டுக் கொண்டே அடுத்த 10 நிடத்தில் நாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து விட்டார்கள்.

அதற்குள் அவ்வழி வந்த வாகனங்களை மடக்கி ஆட்களை அழைத்து அந்த இருவரையும் மேலே கொண்டு வந்து விட்டோம். இருவரும் ஓரளவுக்கு சுயநினைவுடன் இருந்தார்கள். ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ரத்தம் வடிந்து உடல் முழுவதும் நனைந்திருந்தது. அடுத்தவருக்கு கால் முறிவு மற்றும் உடல் முழுக்க காயங்கள். அவர்களிடம் தகவல் பெற்று (அவர்கள் திருத்தணி அருகில் உள்ள கனக்கம்மாசத்திரம் என்ற பகுதியை சார்ந்தவர்கள்) அவர்களின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தோம் நேராக திருவள்ளூர் மாவட்ட மைய மருத்துவமனைக்கு வரும் படி தெரிவித்துவிட்டோம்.

பிறகு அவர்கள் இருவரையும் 108-ல் ஏற்றி அனுப்பி வைத்தோம். அவ்வண்டியில் மூவர் இருந்தார்கள். ஒருவர் வண்டியில் ஏற்றியவுடன் தன்முதலூதவி பணியை தொடங்கி விட்டார். அதன் பிறகு நாங்கள் வீட்டுக்கு சென்று விட்டோம். அந்த வலியிலும் அவகள் எனக்கும் அங்கு உதவிய அனைவருக்கும் நன்றி கூறியது மிகவும் நெருடலாக இருந்தது.

அதன் பிறகும் ஆச்சரியங்கள் தொடர்ந்தது.

ஒரு 6 நாட்கள் கழித்து என் ‌செல் போனுக்கு 108-ல் முடியும் ஒரு நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. அதில் நீங்கள் இந்த தொலைபேசியை பயன்படுத்தி சிகிச்சைக்கு அனுப்பிவைத்த நபர் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு சென்று விட்டார். அ‌வரை தொடர்ந்து கண்காணித்து கொள்ளுங்கள் என்றனர். (அது ஒரு உதவிதான்  அவர் யார் என்று கூட எனக்கு தெரியாது என்று நடந்த விஷயத்தை விளக்கியபின் நன்றிகூறி வைத்துவிட்டனர்).
 

அதன் பிறகு இரண்டு மாதங்கள் கழித்து 108-ல் முடியும் நெம்பரில் இருந்து அதே விசாரிப்பு அவருக்கு முழுவதும் குணமடைந்து விட்டாதா. அவர் எப்படியிருக்கிறார் என்று....

எனக்கு உண்மையில் இது ஆச்சர்யத்தை ஏற்ப்படுத்தியது. ஒரு அரசாங்கம் அன்றைய சங்கதியோடு தன் பணியை முடித்துக் கொள்வார்கள். ஆனால் அதற்கு விதி விளக்கான 108-ல் நடந்த நிகழ்வுகள் 108 மீது மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியது. இது முற்றிலும் உண்மை நண்பர்களே... தன் வண்டியில்  நோயாளியை ‌மருத்துவமனையில் சேர்த்ததோடு முடிந்து விட்டது என்று இருக்காமல் இது போன்ற தொடர் பணி பாரட்டவதற்குறியதாக இருக்கிறது.

ஆகையால் 108-யை தேவையான அவசர உதவிக்கு மட்டும் அழையுங்கள். அவற்றுக்கு வழிவிட்டு செல்லுங்கள். தங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் 108-ன் செயல்பாடுகளை விளக்குங்கள். 108 சிறப்பாக செயல்பட நாமும் பங்குகொள்வோம்.. நன்றி...

93 comments:

  1. வாழ்த்துக்கள் தங்கள் உதவி உரிய நேரத்தில் பயன்பட்டு இருக்கிறது ..
    இன்னுமும் மழை பொழிவது உங்களை போன்றவர்களால் தான்
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  2. ஆகையால் 108-யை தேவையான அவசர உதவிக்கு மட்டும் அழையுங்கள். அவற்றுக்கு வழிவிட்டு செல்லுங்கள். தங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் 108-ன் செயல்பாடுகளை விளக்குங்கள்.


    .....இந்த செய்தி பலரை சென்றடைந்து பயன் தர வேண்டும். voted. :-)

    ReplyDelete
  3. பாராடுக்கள் தம்பி, உரிய நேரத்தில் உதவிய உங்களுக்கும், தொடர்ந்து சிறப்பாக பணியாட்றும் ஊழ்ழியர்களுக்கும்..

    ReplyDelete
  4. அருமை. தொடரட்டும் நல்லவர்கள் மற்றும் 108 ன் சேவை.

    ReplyDelete
  5. உம்முடைய உதவி அந்த மனிதர்களை இன்று உயிருடன் உலவ விட்டுள்ளதை நினைத்து பெருமை கொள்கிறேன் நண்பா.........நீவிர் வாழ்க......

    நல்ல விழிப்புணர்வு பதிவு நன்றி!

    ReplyDelete
  6. ////
    siva said... [Reply to comment]

    வாழ்த்துக்கள் தங்கள் உதவி உரிய நேரத்தில் பயன்பட்டு இருக்கிறது ..
    இன்னுமும் மழை பொழிவது உங்களை போன்றவர்களால் தான்
    வாழ்க வளமுடன்
    /////////

    அவ்வளவு பெரிய விஷயம் இல்லை நண்பா..
    நான் இல்லையேல் வெறெருவர் அந்த சந்தர்ப்பத்தை நல்கிய கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்...

    ReplyDelete
  7. ///
    Chitra said... [Reply to comment]

    ஆகையால் 108-யை தேவையான அவசர உதவிக்கு மட்டும் அழையுங்கள். அவற்றுக்கு வழிவிட்டு செல்லுங்கள். தங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் 108-ன் செயல்பாடுகளை விளக்குங்கள்.


    .....இந்த செய்தி பலரை சென்றடைந்து பயன் தர வேண்டும். voted. :-)
    ////

    தங்கள் கருத்துக்கு நன்றி சித்ரா...

    ReplyDelete
  8. ///
    கே.ஆர்.பி.செந்தில் said... [Reply to comment]

    பாராடுக்கள் தம்பி, உரிய நேரத்தில் உதவிய உங்களுக்கும், தொடர்ந்து சிறப்பாக பணியாட்றும் ஊழ்ழியர்களுக்கும்..
    ////

    தங்கள் பாராட்டுக்கு நன்றி தல...

    ReplyDelete
  9. வாக்குகளோடு இப்போது வருகிறேன், பின்னூட்டங்களோடு பின்னாடி வாறேன்!

    ReplyDelete
  10. ///
    தமிழ் உதயம் said... [Reply to comment]

    அருமை. தொடரட்டும் நல்லவர்கள் மற்றும் 108 ன் சேவை.
    ///

    நன்றி தமிழ் உதயம்..

    ReplyDelete
  11. ///
    விக்கி உலகம் said... [Reply to comment]

    உம்முடைய உதவி அந்த மனிதர்களை இன்று உயிருடன் உலவ விட்டுள்ளதை நினைத்து பெருமை கொள்கிறேன் நண்பா.........நீவிர் வாழ்க......

    நல்ல விழிப்புணர்வு பதிவு நன்றி!
    ////

    தங்கள் கருத்துக்கு நன்றி விக்கி

    ReplyDelete
  12. உண்மையில் பாராட்ட பட வேண்டிய செயல்....

    ReplyDelete
  13. படிக்கும்போதே மிகவும் நெகிழ்வாக உள்ளது. உங்களைப் போன்றவர்களின் உதவும் மனப்பான்மையாலும் அவ்வூழியர்களின் பொறுப்புணர்வாலும் பல குடும்பங்கள் வாழும். எனது உளமார்ந்த பாராட்டுகள்.

    ReplyDelete
  14. 108 சேவை பத்தி இதுநாள் வரைக்கும் எல்லோரும் தப்பாய் சொல்லித்தான் கேள்விப்பட்டிருக்கேன்! ( அரசியல் காரணங்களாக இருக்கலாம் ) ஆனால் உங்கள் செய்தி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது! அந்த திருத்தணி நண்பர்களுக்கு உதவிய உங்களது நல்ல மனம் வாழ்க!!!!

    ReplyDelete
  15. உண்மையிலேயே வியப்பாகத்தான் இருக்கிறது சௌந்தர்!நல்ல அனுபவம்!
    (வார இறுதி நாட்களில்-சனி,ஞாயிறு-மின்னஞ்சல் தவிர இண்டர்நெட்டில் வேறெதுவும் செய்வதில்லை.எனவே பதிவுகள் இல்லை,பின்னூட்டங்களும் இல்லை !மன்னிக்கவும்,)

    ReplyDelete
  16. வாழ்க 108 ம அதன் பணியாளர்களும். இவர்கள் சமூக கதாநாயகர்கள்.

    ReplyDelete
  17. ///
    நிரூபன் said... [Reply to comment]

    வாக்குகளோடு இப்போது வருகிறேன், பின்னூட்டங்களோடு பின்னாடி வாறேன்!
    ////

    கண்டிப்பாக கருத்துச் சொல்ல வாங்க..

    ReplyDelete
  18. ///
    NKS.ஹாஜா மைதீன் said... [Reply to comment]

    உண்மையில் பாராட்ட பட வேண்டிய செயல்....
    /////

    நன்றி ஹாஜா..

    ReplyDelete
  19. ///
    கீதா said... [Reply to comment]

    படிக்கும்போதே மிகவும் நெகிழ்வாக உள்ளது. உங்களைப் போன்றவர்களின் உதவும் மனப்பான்மையாலும் அவ்வூழியர்களின் பொறுப்புணர்வாலும் பல குடும்பங்கள் வாழும். எனது உளமார்ந்த பாராட்டுகள்.
    ////

    தங்கள் வுருகைக்கும் தங்கள் கருத்துக்கும் நன்றி
    கீதா..

    ReplyDelete
  20. 108 சேவைக்கு நன்றியும் உதவிய உங்களுக்கு வாழ்த்துகளும்

    ReplyDelete
  21. அட்டாகசம் அண்னே... ஆபத்தில இருப்பவர்களுக்கு உதவி இருக்கீங்க.. நிச்சயம் பாராட்டுக்குரியது. பலர் கண்டுக்கொள்ளாமல் செல்லவும் வாய்ப்புள்ளது.

    ReplyDelete
  22. ///
    ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... [Reply to comment]

    108 சேவை பத்தி இதுநாள் வரைக்கும் எல்லோரும் தப்பாய் சொல்லித்தான் கேள்விப்பட்டிருக்கேன்! ( அரசியல் காரணங்களாக இருக்கலாம் ) ஆனால் உங்கள் செய்தி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது! அந்த திருத்தணி நண்பர்களுக்கு உதவிய உங்களது நல்ல மனம் வாழ்க!!!!
    ///

    நன்றி ராஜீவன்..

    ReplyDelete
  23. ///
    சென்னை பித்தன் said... [Reply to comment]

    உண்மையிலேயே வியப்பாகத்தான் இருக்கிறது சௌந்தர்!நல்ல அனுபவம்!
    (வார இறுதி நாட்களில்-சனி,ஞாயிறு-மின்னஞ்சல் தவிர இண்டர்நெட்டில் வேறெதுவும் செய்வதில்லை.எனவே பதிவுகள் இல்லை,பின்னூட்டங்களும் இல்லை !மன்னிக்கவும்,)
    ///

    பரவாயில்லை தலைவரே..

    ReplyDelete
  24. ///
    ஜ.ரா.ரமேஷ் பாபு said... [Reply to comment]

    வாழ்க 108 ம அதன் பணியாளர்களும். இவர்கள் சமூக கதாநாயகர்கள்.
    //////////

    நன்றி பாபு...

    ReplyDelete
  25. 108 is not created by government, its sponsered by ramalinga raju of satyam, maintained by them government role is just holding the hospitals

    ReplyDelete
  26. http://thagavalmalar.blogspot.com/2011/05/blog-post.html வாருங்கள்...இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.

    ReplyDelete
  27. ///
    நா.மணிவண்ணன் said... [Reply to comment]

    108 சேவைக்கு நன்றியும் உதவிய உங்களுக்கு வாழ்த்துகளும்
    ///

    வாங்க மணி..

    ReplyDelete
  28. விழிப்புணர்வு பதிவு

    ReplyDelete
  29. எல்லா ஊர்லியும் ஒவ்வொரு அனுபவம்தான்..கட்டுரையில் நிறைய கலர் அடித்து கண் கூசுது ப்ளைனா விட்ருங்க..படிக்க நல்லாருக்கும்

    ReplyDelete
  30. ///
    bigilu said... [Reply to comment]

    அட்டாகசம் அண்னே... ஆபத்தில இருப்பவர்களுக்கு உதவி இருக்கீங்க.. நிச்சயம் பாராட்டுக்குரியது. பலர் கண்டுக்கொள்ளாமல் செல்லவும் வாய்ப்புள்ளது.
    ///
    நன்றி நண்பரே..

    ReplyDelete
  31. ///
    Thirumurugan MPK said... [Reply to comment]

    108 is not created by government, its sponsered by ramalinga raju of satyam, maintained by them government role is just holding the hospitals
    ////

    தகவலுக்கு நன்றி..

    ReplyDelete
  32. விலகி செல்லும் இந்த காலத்தில் நேரத்தே நீங்கள் செய்த உதவிக்கு ஒரு ராயல் சல்யூட்...

    ReplyDelete
  33. நீங்கள் என் நண்பர் என்பதை நான் பெருமையாக கருதுகிறேன் மக்கா....

    ReplyDelete
  34. அந்த ஆம்புலன்ஸ் சேவையை மிகவும் பாராட்டுகிறேன்....

    ReplyDelete
  35. சமூக அக்கறையுள்ள பதிவு.நானும் தங்கை மகனும் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தோம் சென்னை துறைமுகப் பகுதி நோக்கி.கிறுஸ்மஸ் இரவு மணி கிட்டத்தட்ட இரவு 12.30.கண்டெய்னர் லாரிக்குள் ஒருவர் பைக்கோடு ஒருவர் விழுந்து கிடந்தார்.ஆட்டோக்காரர் வண்டி நிறுத்துவதற்குள் தங்கை மகன் எட்டிக் குதித்து ஓடிப் போய் பைக் ஓட்டுநருக்கு உதவி செய்தது நினைவுக்கு வருகிறது.

    சாலை பராமரிப்பின்மை,மது,அன்றாட வாழ்க்கையின் பிரச்சினைகள் என்று தமிழகத்தில் பயணங்கள் உத்தரவாதமானதல்ல:(

    ReplyDelete
  36. 108 தகவல் தமிழக ஆட்சிக்கு சிறப்பு.உங்களுக்கும் தனி பாராட்டுக்கள்.

    ReplyDelete
  37. ///
    MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    விலகி செல்லும் இந்த காலத்தில் நேரத்தே நீங்கள் செய்த உதவிக்கு ஒரு ராயல் சல்யூட்...
    ///

    நன்றி மனோ..

    ReplyDelete
  38. ///MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    நீங்கள் என் நண்பர் என்பதை நான் பெருமையாக கருதுகிறேன் மக்கா....
    ////

    ஒரு மனிதனுக்கு அவசரகாலத்தில் உதவிடவில்லை என்றால் அதவிட கெர்டுமை என்ன இருக்கிறது..

    ReplyDelete
  39. ///
    !* வேடந்தாங்கல் - கருன் *! said... [Reply to comment]

    பாராட்டுக்கள்..
    ////

    வலைச்சரத்தில் கலக்க வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  40. @ராஜ நடராஜன்

    தங்கள் அனுபவத்தையும் பகிர்ந்தமைக்கு நன்றி..

    ReplyDelete
  41. long live Dr Kalainjar, just for this 108

    ReplyDelete
  42. உங்கள் நல்ல மனதைக் காட்டி நிற்கிறது பதிவு.பாராட்டுக்கள் சௌந்தர் !

    ReplyDelete
  43. //ஹேமா said... [Reply to comment]
    உங்கள் நல்ல மனதைக் காட்டி நிற்கிறது பதிவு.பாராட்டுக்கள் சௌந்தர் !//
    repeat! :-)

    ReplyDelete
  44. கலைஞர் கொண்டு வந்த திட்டங்களில் என்னை கவர்ந்ததும் மிக முக்கியமான திட்டமும் இது தான். ஒரு நாள் என் மொபைலில் காசு சுத்தமாக இல்லைரிங் போனால் கட் பண்ணிவிடலாம் என்று எண்ணி விளையாட்டாக 108 போன் போட்ட அடுத்த வினாடியே மறுமுனையில் ஒரு நபர் ஹலோ யார் சார் எங்கிருந்து பேசுகிறீர்கள் என்று குரல் வந்தது. பதட்டத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல் கட் பண்ணிவிட்டேன். பிறகு தான் என் தவறை உணர்ந்தேன் என் அசிங்கமான செயலுக்கு என் மனது என்னை திட்டியது.

    ReplyDelete
  45. வெகு அருமையான உதவியை
    தக்க சமயத்தில் செய்து இரு உயிர்களைக் காத்து இருக்கிறீர்கள்.
    மனம் நிறைந்த பாராட்டுகள். நூற்றியெட்டு எண் ஆம்புலன்ஸ்
    ஓட்டுனருக்கும் உதவியாளர்களுக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  46. வாழ்த்துக்கள் நண்பா..

    ReplyDelete
  47. மிக அருமையான பகிர்வை இங்கு பகிர்ந்துள்ளீரக்ள், அதோடு உஙக்ள் உதவும் மனப்பாண்மையும் தெரிந்து கொண்டோம்.,மற்றவர்களுக்கும் பயன் பட இங்க் பகிர்ந்தமையும் அருமை.
    நல்ல ஒரு விழிபுணர்வு பதிவு

    ReplyDelete
  48. தக்க சமயத்தில் உதவி செய்துள்ளீர்கள்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  49. இது போன்ற சேவைகள் தொடர்ந்து நடைபெற சமூகத்தில் உள்ளோர் அனைவரும் சேவையில் ஈடு படுவோருக்கு ஊக்குவிப்பும் ஒத்துழைப்பும் அளிக்கவேண்டும் ....மிகவும் அருமையான தகவல் .வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  50. அவசரத்திற்கு உதவிய 108ன் பணியும் உங்கள் நல்லுள்ளமும் பாராட்டிற்கு உரியவிஷயங்கள். உங்கள் அனுபவத்தை பதிவாக்கியதற்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  51. ///
    FOOD said... [Reply to comment]

    நண்பரே, தங்கள் அருமையான உள்ளம் என்னை ஆனந்தப்பட வைத்தது. இக்கட்டில் உதவி அவர்கள் உயிர் காத்துள்ளீர்கள். நல்ல விஷயம். நாலு பேரைச் சென்றடைய வேண்டும்.
    ////

    தங்கள் கருத்துக்கு நன்றி தலைவரே...

    ReplyDelete
  52. ///
    ஹேமா said... [Reply to comment]

    உங்கள் நல்ல மனதைக் காட்டி நிற்கிறது பதிவு.பாராட்டுக்கள் சௌந்தர் !
    ////

    தங்கள் வருகைக்கு நன்றி தோழி..

    ReplyDelete
  53. ////
    ஜீ... said... [Reply to comment]

    Good post boss!
    ////

    நன்றி ஜீ...

    ReplyDelete
  54. @சசிகுமார்

    தவறை உணர்ந்தாலே போதும் நண்பா..

    தங்கள் வருகைக்கு நன்றி...

    ReplyDelete
  55. ////
    வல்லிசிம்ஹன் said... [Reply to comment]

    வெகு அருமையான உதவியை
    தக்க சமயத்தில் செய்து இரு உயிர்களைக் காத்து இருக்கிறீர்கள்.
    மனம் நிறைந்த பாராட்டுகள். நூற்றியெட்டு எண் ஆம்புலன்ஸ்
    ஓட்டுனருக்கும் உதவியாளர்களுக்கும் வாழ்த்துகள்
    /////


    நன்றி வல்லி..

    ReplyDelete
  56. ///
    !* வேடந்தாங்கல் - கருன் *! said... [Reply to comment]

    வாழ்த்துக்கள் நண்பா..
    ////


    வாங்க நண்பரே...

    ReplyDelete
  57. அனுபம்...பதிவாய் சௌந்தர்

    108 சரியான தருனத்தில்...பயன்படுத்திகொள்ளுங்கள்

    108 பணியாளர்களுக்கு..நன்றிகள் பல...

    ReplyDelete
  58. ////
    Jaleela Kamal said... [Reply to comment]

    மிக அருமையான பகிர்வை இங்கு பகிர்ந்துள்ளீரக்ள், அதோடு உஙக்ள் உதவும் மனப்பாண்மையும் தெரிந்து கொண்டோம்.,மற்றவர்களுக்கும் பயன் பட இங்க் பகிர்ந்தமையும் அருமை.
    நல்ல ஒரு விழிபுணர்வு பதிவு
    ////

    தங்கள் கருத்துக்கு நன்றி...

    ReplyDelete
  59. ///
    thirumathi bs sridhar said... [Reply to comment]

    தக்க சமயத்தில் உதவி செய்துள்ளீர்கள்.
    வாழ்த்துகள்.
    /////

    தங்கள் வருகைக்கு நன்றி...

    ReplyDelete
  60. ////
    koodal bala said... [Reply to comment]

    இது போன்ற சேவைகள் தொடர்ந்து நடைபெற சமூகத்தில் உள்ளோர் அனைவரும் சேவையில் ஈடு படுவோருக்கு ஊக்குவிப்பும் ஒத்துழைப்பும் அளிக்கவேண்டும் ....மிகவும் அருமையான தகவல் .வாழ்த்துக்கள் .
    /////

    தங்கள் வருகைக்கு நன்றி பாலா...

    ReplyDelete
  61. ////
    பாரத்... பாரதி... said... [Reply to comment]

    அவசரத்திற்கு உதவிய 108ன் பணியும் உங்கள் நல்லுள்ளமும் பாராட்டிற்கு உரியவிஷயங்கள். உங்கள் அனுபவத்தை பதிவாக்கியதற்கு பாராட்டுக்கள்.
    ////

    நன்றி பாரத்..

    ReplyDelete
  62. ///
    செந்தில்குமார் said... [Reply to comment]

    அனுபம்...பதிவாய் சௌந்தர்

    108 சரியான தருனத்தில்...பயன்படுத்திகொள்ளுங்கள்

    108 பணியாளர்களுக்கு..நன்றிகள் பல...
    ////

    வாங்க செந்தில்..

    ReplyDelete
  63. எல்லோருக்கும் சென்றடைய வேண்டிய செய்தி...
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  64. டோனியால் இந்த நாடே குடிக்கிறதா?
    http://nkshajamydeen.blogspot.com/2011/05/blog-post_09.html

    @NKS.ஹாஜா மைதீன்
    @வேடந்தாங்கல் - கருன்
    @Abu Sana
    @MANO நாஞ்சில் மனோ
    @ஆர்.கே.சதீஷ்குமார்
    @கக்கு - மாணிக்கம்

    டோனி மது விளம்பரங்களில் நடிப்பதும் கிரிக்கெட் போட்டிகள் மூலமாக மதுபான விளம்பரங்கள் செய்யப்படுவதும் எவ்வளவு பெரிய கேடாக முடியும் என்பது நான் சொன்னால் உங்களுக்கு விளங்காது. இந்தியாவின் மிகப்பெரிய மதுபான அதிபர் விஜய மல்லயா என்ன சொல்கிறார் என்பதை பாருங்கள்:

    “F1 and Cricket are part and parcel of our business tools for promotion, and are sports in which, not only I am interested, but in which India is hugely interested.

    Why do you think I paid $112m for Royal Challengers cricket team?

    In India…cricket is almost like a religion. You then have the young demographic, new consumers coming into my industry, who are going to turn 21, coming of legal drinking age.

    The same people are going to watch cricket, are going to enter the consumer sector of India, and advertisers are going to look at that ever-increasing consumer sector.”

    - Vijay Mallya, chairman of the United Breweries Group (the king of India Liquor Industry)

    http://www.bbc.co.uk/news/business-12217018

    ReplyDelete
  65. உயரிய செயல் ஒன்றை செய்து விட்டு அதை பதிவாகவும் போட்டு எங்களோடு பகிர்ந்த உங்களின் கடமை உணர்ச்சி போற்றுதலுக்குரியது. வாழ்த்துகள் நண்பரே!!

    ReplyDelete
  66. அசத்துறிங்க நண்பா வாழ்த்துகள்

    ReplyDelete
  67. அண்ணே உங்களுக்கு முதல் பாராட்டுக்கள், அடுத்து அந்த பணியாளர்களுக்கும். அத்தோடு இந்த செய்தி பலருக்கு சென்றடையும் என்று நம்புகிறேன்..

    ReplyDelete
  68. ..இந்த செய்தி பலரை சென்றடைந்து பயன் தர வேண்டும்.
    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  69. /////
    பாட்டு ரசிகன் said... [Reply to comment]

    எல்லோருக்கும் சென்றடைய வேண்டிய செய்தி...
    வாழ்த்துக்கள்..
    //////////

    வாங்க பாட்டு ரசிகன்..

    ReplyDelete
  70. @அருள்


    வாருங்கள் நண்பரே...
    தங்கள் ஆதங்கம் புரிகிறது...
    அந்த பின்னூட்டத்தில் கவனியுங்கள்...

    அவர் நடித்தது தவறு என்றுதான் கூறியுள்ளேன்...

    நானும் மதுவுக்கு எதிரிதான்...

    ReplyDelete
  71. ///
    எம் அப்துல் காதர் said...

    உயரிய செயல் ஒன்றை செய்து விட்டு அதை பதிவாகவும் போட்டு எங்களோடு பகிர்ந்த உங்களின் கடமை உணர்ச்சி போற்றுதலுக்குரியது. வாழ்த்துகள் நண்பரே!!/////////

    தங்கள் வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  72. ///
    யாழ். நிதர்சனன் said...

    அசத்துறிங்க நண்பா வாழ்த்துகள்////

    நன்றி நிதர்சனன்...

    ReplyDelete
  73. ///
    கந்தசாமி. said...

    அண்ணே உங்களுக்கு முதல் பாராட்டுக்கள், அடுத்து அந்த பணியாளர்களுக்கும். அத்தோடு இந்த செய்தி பலருக்கு சென்றடையும் என்று நம்புகிறேன்..///

    நன்றி கந்தசாமி..

    ReplyDelete
  74. ////இராஜராஜேஸ்வரி said...

    ..இந்த செய்தி பலரை சென்றடைந்து பயன் தர வேண்டும்.
    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.///

    தங்கள் வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  75. thank you very much for your timely help. wishes to you and your family. great job done by you and 108 ambulance crew. sudarsan

    ReplyDelete
  76. 1080இன் சேவை இந்த நாட்டிற்கு தேவை

    ReplyDelete
  77. Great work, Well done.
    Thanks to 108 service!!!

    ReplyDelete
  78. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு அண்ணா. நீங்க செஞ்ச செயலை விட 108 லிருந்து வந்த விசாரிப்புகள் உண்மையில் இது நம்ம ஊரா என்று குழம்ப வைக்கிறது!

    ReplyDelete
  79. ///
    யாதவன் said... [Reply to comment]

    வாழ்த்துக்கள்
    ////

    நன்றி யாதவன்...

    ReplyDelete
  80. ///
    sudarsan said... [Reply to comment]

    thank you very much for your timely help. wishes to you and your family. great job done by you and 108 ambulance crew. sudarsan
    /////

    thanks for comment

    ReplyDelete
  81. ///
    FARHAN said... [Reply to comment]

    1080இன் சேவை இந்த நாட்டிற்கு தேவை
    ///
    உண்மை

    ReplyDelete
  82. ////s said... [Reply to comment]

    Great work, Well done.
    Thanks to 108 service!!!
    ////


    thanks

    ReplyDelete
  83. ////
    கோமாளி செல்வா said... [Reply to comment]

    ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு அண்ணா. நீங்க செஞ்ச செயலை விட 108 லிருந்து வந்த விசாரிப்புகள் உண்மையில் இது நம்ம ஊரா என்று குழம்ப வைக்கிறது!
    /////////

    வா செல்வா...

    ReplyDelete
  84. மனம் நிறைந்த பாராட்டுகள்! ஒரு கரம் நீட்டி நீங்கள் உதவினீர்கள்.. இரு கரங்கள் தட்டி பாராட்டுகிறேன்..
    இதை படிக்கும் அனைவருக்கும் ஊக்கத்தை தந்து இருக்கிறீர்கள்.. நன்றி நட்பு!
    http://karadipommai.blogspot.com/

    ReplyDelete
  85. 108ன் சேவை தொடரட்டும்.

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  86. ////
    Lali said... [Reply to comment]

    மனம் நிறைந்த பாராட்டுகள்! ஒரு கரம் நீட்டி நீங்கள் உதவினீர்கள்.. இரு கரங்கள் தட்டி பாராட்டுகிறேன்..
    இதை படிக்கும் அனைவருக்கும் ஊக்கத்தை தந்து இருக்கிறீர்கள்.. நன்றி நட்பு!
    http://karadipommai.blogspot.com/
    ////
    தங்கள் வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  87. ///
    இந்திரா said... [Reply to comment]

    108ன் சேவை தொடரட்டும்.

    பகிர்வுக்கு நன்றி.
    ///

    நன்றி இந்திரா...

    ReplyDelete
  88. 108 பணியாளர்களுக்கு..நன்றிகள்

    ReplyDelete
  89. ///
    rajvel said... [Reply to comment]

    108 பணியாளர்களுக்கு..நன்றிகள்
    ///

    தங்களுக்கும் நன்றிகள்

    ReplyDelete
  90. 108 பணியாளர்களுக்கு..நன்றிகள்

    ReplyDelete
  91. It is really nice of you to help the stranger.
    I am surprised to hear the high quality of patient care from an government entity. Hats off the the team and the department head.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...