கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

09 August, 2011

சுயமரியாதையை விட்டு வாழ்வதா..?


காலையில் 
பூக்களைப்போல் மலர்கிறேன்...!
மாலைக்குள் மனித சூரியன்களால்
மரணிப்போம் ‌என்று தெரிந்தும்.... 

சிகரங்களில் விழுந்தாலும்
அடிவாரத்தை நோக்கி பாயும் மழைபோல
மேல் நோக்கி எழும்போதெல்லாம் 
சூழ்ச்சியால் வீழ்த்தப்படுகிறேன்....

வானம் நோக்கி சிறகு விரிக்கையில்
கால்களுக்கு சங்கிலிபிணைப்பு...

காலத்தோடு போர்கொடி ஏந்தி
காத்திருக்கிறேன் என்விடியலுக்காக...

லகத்திற்கு என்னதெரியும்
பாறைக்குள் முளைத்திட்டு
நீருக்காக அலையும் 
என்வேர்களைப்பற்றி... 

சுயமரியாதையை விட்டுவிட்டு
இங்கு யாருக்கும் தலைவணங்க
இடம் கொடுக்கவில்லை 
என் உயிரணுக்கள்....

காலத்திற்கும் இடத்திற்கும்
நேரத்திற்கும் ஏற்றார்போல்
வண்ணம் ‌கொண்டு மாறிக்ககொள்ள
நான் ஒன்றும் பச்சோந்தியல்ல...

னிமையை சுவாசித்து
மௌனம் கொண்டு சாதிக்கிறேன்...
வெட்டும்போதும் கூட 
எதிர்ப்பு காட்டாமலிருக்கும்
மரத்தினைப்போல...

நாளை துளிர் விடலாம்
என்ற நம்பிக்கையில்...!


நல்ல பதிவுகளுக்கு 

கருத்திட்டு வாக்களித்து கௌரவப்படுத்துங்கள்...
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...!

33 comments:

  1. வணக்கம் மச்சி, நல்லதோர் கவிதையினைத் தந்திருக்கிறீங்க.
    விரிவான கருத்துக்களை இன்று மாலை வழங்குகிறேன்.

    மன்னிக்கவும்,
    இப்போது வருகையினை மட்டும் பகிர்ந்து விட்டுப் போகிறேன்.

    ReplyDelete
  2. மனதை நெருடும் கவிதை ..
    அசத்தல்..
    பாராட்டுகள்..

    ReplyDelete
  3. உலவுக்கு என்ன ஆச்சின்னு தெரியல நண்பா.?

    ReplyDelete
  4. தனிமையை சுவாசித்து
    மௌனம் கொண்டு சாதிக்கிறேன்...
    வெட்டும்போதும் கூட
    எதிர்ப்பு காட்டாமலிருக்கும்
    மரத்தினைப்போல...


    ..... அருமையாக எழுதி இருக்கீங்க....

    ReplyDelete
  5. உள்ளம் வருடும்
    நெஞ்சம் தாலாட்டும்
    நம்பிக்கை கவிதை
    அழகு

    ReplyDelete
  6. >>தனிமையை சுவாசித்து
    மௌனம் கொண்டு சாதிக்கிறேன்...
    வெட்டும்போதும் கூட
    எதிர்ப்பு காட்டாமலிருக்கும்
    மரத்தினைப்போல...

    குட் ஒன்

    ReplyDelete
  7. ரசித்தேன் கவிதையை ,அழகான வரிகள்

    ReplyDelete
  8. மனதை நெருடும் கவிதை.

    ReplyDelete
  9. தனிமையை சுவாசித்து
    மௌனம் கொண்டு சாதிக்கிறேன்...
    வெட்டும்போதும் கூட
    எதிர்ப்பு காட்டாமலிருக்கும்
    மரத்தினைப்போல...

    நாளை துளிர் விடலாம்
    என்ற நம்பிக்கையில்...!

    அருமையான நம்பிக்கையை
    ஊட்டும் கவிதைவரிகள்
    இவை அனைவரையும் சென்றடைய
    வாழ்த்துக்கள் சகோ .....

    ReplyDelete
  10. //தனிமையை சுவாசித்து
    மௌனம் கொண்டு சாதிக்கிறேன்...
    வெட்டும்போதும் கூட
    எதிர்ப்பு காட்டாமலிருக்கும்
    மரத்தினைப்போல...

    நாளை துளிர் விடலாம்
    என்ற நம்பிக்கையில்...!//

    தற்பொழுது உள்ள நிலைமையில் ஆறுதலான வரிகள் நண்பரே... மனதுக்கு ஆரோக்கியம் ஊட்டும் கவிதைக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
  11. ''..மாலைக்குள் மனித சூரியன்களால்
    மரணிப்போம் ‌என்று தெரிந்தும்....

    மேல் நோக்கி எழும்போதெல்லாம்
    சூழ்ச்சியால் வீழ்த்தப்படுகிறேன்....

    காலத்தோடு போர்கொடி ஏந்தி
    காத்திருக்கிறேன் என்விடியலுக்காக...

    நீருக்காக அலையும்
    என்வேர்களைப்பற்றி...
    யாருக்கும் தலைவணங்க
    இடம் கொடுக்கவில்லை
    என் உயிரணுக்கள்....

    நான் ஒன்றும் பச்சோந்தியல்ல...
    எதிர்ப்பு காட்டாமலிருக்கும்
    மரத்தினைப்போல...

    ஓ! அத்தனையும் மிகக் கனதியாக வரிகள் சௌந்தர்! பிரமாதம். வாழ்த்துகள். பல காலமாக இணையத்தளங்களில் பரிச்சயமானது உமது..பெயரா..எனக்கு? பெயரைப் பார்த்த ஞாபகம் உள்ளது....
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் ...சகோ ...
    அருமை அருமை ...

    ReplyDelete
  13. மனதுக்கு தெம்பூட்டும் கவிதை...
    அருமை

    ReplyDelete
  14. நல்லதோர் கவிதையினைத் தந்திருக்கிறீங்க.

    ReplyDelete
  15. கவிதை கவிதை கவிதை கவிதை கவிதை கவிதை கவிதை...!

    ReplyDelete
  16. நாளை துளிர் விடலாம்
    என்ற நம்பிக்கையில்...!
    //

    நம்பிக்கை தரும் அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  17. காலத்திற்க்கும் இடத்திற்க்கும்
    நேரத்திற்க்கும் ஏற்றார்போல்
    வண்ணம் ‌கொண்டு மாறிக்ககொள்ள
    நான் ஒன்றும் பச்சோந்தியல்ல...

    சுயமரியாதையை விட்டுவிட்டு
    இங்கு யாருக்கும் தலைவணங்க
    இடம் கொடுக்கவில்லை
    என் உயிரணுக்கள்....//

    என்னை கவர்ந்த வரிகள், கவிதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது, ஓட்டு போட்டாச்சு...

    ReplyDelete
  18. indru naam ithathan seikirom. Nice Lines

    ReplyDelete
  19. அருமையான நம்பிக்கையை
    ஊட்டும் கவிதைவரிகள் நண்பரே...

    கவிதை எனக்கு பிடித்திருக்கிறது...

    ReplyDelete
  20. உலகத்திற்க்கு என்னதெரியும்
    பாறைக்குள் முளைத்திட்டு
    நீருக்காக அலையும்
    என்வேர்களைப்பற்றி... /


    தனிமையை சுவாசித்து
    மௌனம் கொண்டு சாதிக்கிறேன்...
    வெட்டும்போதும் கூட
    எதிர்ப்பு காட்டாமலிருக்கும்
    மரத்தினைப்போல.../

    மனித வாழ்க்கை உண்மையாகவே பலருக்கு இப்படித்தான் ஓடுகிறது..

    என்ன பிரமாதம்...
    பிடித்த வரிகள் தேட முடியவில்லை...
    எல்லாமே பிடித்ததாய்த்தானே இருக்கிறது..
    நல்ல ஒப்பனைகளோடு அருமையான கவிதை....
    பாராட்ட வார்த்தைகள் இல்லை சகோ/
    ...
    http://sempakam.blogspot.com/

    ReplyDelete
  21. நாளை நிச்சயம் துளிர் விடும்!

    ReplyDelete
  22. அருமையா அருமை ! !

    ReplyDelete
  23. இருக்கும் இடத்தை மறந்து பறக்க ஆசை படுவதால்
    குட்டுப்பட்டு கீழே வருகிறது நீர், மழையாக...
    மரணம் என்பது உன் உடலுக்கு தானே தவிர
    நீ செய்த செயல்களுக்கு அல்ல,
    கீழிறங்கி வருவதால் உடைந்து விடாதே,
    உன் வருகையால் தான் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்,
    நம்பிக்கையுடன்...

    ReplyDelete
  24. சுயமரியாதையை விட்டுவிட்டு
    இங்கு யாருக்கும் தலைவணங்க
    இடம் கொடுக்கவில்லை
    என் உயிரணுக்கள்....

    உண்மை! தோழரே உண்மை!

    வாழும் காலம் சிறிதானாலும்!
    ப்லவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  25. நாளை துளிர் விடலாம்
    என்ற நம்பிக்கையில்...!

    நிச்சயமாக துளிர்விடுவாய்

    அருமையான உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதை

    ReplyDelete
  26. வெட்டும்போதும் கூட
    எதிர்ப்பு காட்டாமலிருக்கும்
    மரத்தினைப்போல...

    நாளை துளிர் விடலாம்
    என்ற நம்பிக்கையில்...!


    நம்பிக்கையூட்டும் வரிகள்

    ReplyDelete
  27. அன்பின் சௌந்தர் - அருமை அருமை - கருத்து அருமை - தேர்ந்தெடுத்துப் போடப்பட்ட சொற்கள் - நாளையே துளிர் விட நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  28. சுயமரியதையை விட்டுவிட்டு இங்கு யாருக்கும் தலைவண்ங்க இடம் கொடுக்கவில்லை
    என் உயிரனுக்கள்.
    சொரணையுள்ள தமிழன் அனைவரும் உணரவேண்டிய உன்னதமான கருத்து,
    ஈரோட்டு சந்தையில் வாங்கிய கருத்தாக இருந்தாலும்,என்றும் நிலைத்தும் நிற்கும் கருத்து. எழிலன்

    ReplyDelete
  29. நமக்கான தனித்தன்மையுடன், நாம் பயணிப்போம், நம்மை வேண்டுவோர் நாடட்டும்,வேண்டாதோர் விலகட்டும்,

    சுயமரியாதையை இழந்து நாம் எதற்காகவும் சமரசம் செய்ய தேவையில்லை, கவிதை அருமை!

    ReplyDelete
  30. தனிமையை சுவாசித்து
    மௌனம் கொண்டு சாதிக்கிறேன்...
    வெட்டும்போதும் கூட
    எதிர்ப்பு காட்டாமலிருக்கும்
    மரத்தினைப்போல...

    நாளை துளிர் விடலாம்
    என்ற நம்பிக்கையில்...!

    அருமையான நம்பிக்கையை
    ஊட்டும் கவிதைவரிகள்

    ReplyDelete
  31. தனிமையை சுவாசித்து
    மௌனம் கொண்டு சாதிக்கிறேன்...
    வெட்டும்போதும் கூட
    எதிர்ப்பு காட்டாமலிருக்கும்
    மரத்தினைப்போல...

    நாளை துளிர் விடலாம்
    என்ற நம்பிக்கையில்...!

    அருமையான நம்பிக்கையை
    ஊட்டும் கவிதைவரிகள்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...