மகாத்மா காந்தியை பிரிட்டிஷ் நிருபர் ஒருவர் பேட்டி கண்டார். அவர் காந்திஜியை மட்டம் தட்ட விரும்பி அவரிடம் “இந்திய மக்களின் சார்பாக ஆங்கிலேயே அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த உங்கள் மக்கள் உங்களை மட்டும் தேர்ந்தெடுக்க என்ன காரணம்? உங்களைவிட சிறந்த அறிவாளி யாரும் அவர்களுக்கு கிடைக்கவில்லையா..?” என்று கிண்டலாக கேட்டார்.
இதைப்புரிந்து கொண்ட காந்திஜி மெல்ல புன்னகைத்தபடி “உங்களது ஆங்கிலேய அரசை சமாளிக்க மிகப்பெரிய அறிவாளி தேவையில்லை. என்னைப்போன்ற மிகச் சாமான்யனே போதும் என்று என் இந்திய மக்கள் நினைத்திருக்கலாம்...” என்றார்.
காந்திஜி அவர்களின் வாழ்க்கை, அவருடைய நாட்கள், அவருடைய வார்த்தைகள் அத்தனையும் இன்று வாழும் தலைமுறைக்கு வேதங்கள். இன்று உலகம் இந்தியாபைப்பார்த்து... மிகப்பெரிய வெற்றியின் ரகசியத்தை, அமைதிக்கான வழியை, அனைவரையும் வெல்லக்கூடிய தந்திரத்தை, ஆத்ம சக்தியை கற்றுக்கொண்டுள்ளது அது அஹிம்சை.
கத்தியின்றி ரத்தமின்றி ஒரு யுத்தத்தை இந்த உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தவர் உத்தமர் காந்தி. அவருடைய கொள்கைகள்.. அவருடைய போராட்டங்கள், அவருடைய வழிமுறைகளை உலகம் பின்பற்றிக்கொண்டு வருகிறது.. அதை நாம் மறந்துக்கொண்டு வருகிறோம்...
உத்தமரின் இந்த அவதார நாளில் நாமும் அஹிம்சையை அரவணைப்போம். கத்தியின்றி ரத்தமின்றி இந்தியா வல்லரசாகட்டும்...
காந்திஜி பற்றி சொல்வதற்கு நிறைய இருந்தாலும், உடனே நினைவிற்கு வருவது
ReplyDeleteஎங்கும் எளிமை...
எப்போதும் எளிமை...
எதிலும் எளிமை...
சிறப்பு பகிர்வுக்கு நன்றி...
சாமான்யனே போதும் என்று என் இந்திய மக்கள் நினைத்திருக்கலாம்..
ReplyDelete>>
நல்ல நோஸ்கட்
நல்லதொரு பகிர்வு நண்பா.
ReplyDeleteஉத்தமரின் இந்த அவதார நாளில் நாமும் அஹிம்சையை அரவணைப்போம். கத்தியின்றி ரத்தமின்றி இந்தியா வல்லரசாகட்டும்...
ReplyDeleteநல்ல பகிர்வு.
நல்லதொரு பகிர்வு....நன்றி...
ReplyDeleteகாந்தி பிறந்த தினத்தில் சிறந்த பகிர்வு! நன்றி!
ReplyDeleteகாந்தியைப் பற்றி பலவிதமான தகவல்கள் பகிர்வது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. த.ம 7
ReplyDeleteஅறியாத தகவலுடன் அருமையான
ReplyDeleteசிறப்புப் பதிவை வழங்கியமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
tha.ma 8
ReplyDeleteகாந்தீயம் வாழ்க!வளர்க!
ReplyDeleteத.ம.9
ReplyDeleteஅன்பின் சௌந்தர் - மகாத்மாவின் பிறந்த நாளில் அவர் ஆங்கிலேய நிரூபருக்குக் கொடுத்த அருமையான் மூக்குடைப்பு. - அண்ணலை நினைவு கூர்ந்தது நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete