கோடி
பட்டாம்பூச்சிகள்
பறந்து வருவதை போல்
இருக்கும்..
என்
மூன்று வயது
குட்டி தேவதை
நடந்துவருவது...!
தத்திவந்து
என்னை
தவழுகையில்...
குற்றால
சாரலின் சுகம்
அத்தனையும்
என்னை சுற்றி கிடக்கும்...!
சுண்டு விரல்
என் தேகம்
தொடுகையில்...
அமைதிக்கடலை
தாலாட்டும்
தென்றல் போல்
இருக்கும்...!
என்னை
கட்டியணைத்து
முத்தமிட்டால்...
எனை ஒட்டிக்கொள்ளும்
துருவப்பகுதியின்
அத்தனை
குளிரும்...!
எங்கள்
இருவருக்கான
புரிதல் என்பது....
இரண்டு
அன்னப்பறவைகள்
மௌனத்தால்
பேசிகொள்வதுபோல்...
இறுதியாய்....
மெல்லிய
தென்றல் வந்து
படர்கையில்...
காம்பிடம்
சொல்லாமலே
விடைப்பெற்றுப்
கொள்ளுமே
பூக்கள்...
அப்படியாகத்தான்
நிகழவேண்டும்
என்
மரணமும்..!
இது...
யாராவது என்னிடம்
“உன் மரணம் எப்படி நிகழவேண்டும்“
என கேட்டால்
அதற்கான பதில்...
நன்றிகள்...
வருகைக்கும்... வாசித்தமைக்கு
எமன் எப்படி வரவேண்டும்...
ReplyDeleteஎன்னிடம் எப்படி அனுக வேண்டும்...
எப்படி என்னை அழைத்துக்கொண்டு போகவேண்டும்...
என்ற கேள்விக்கான உவமையுடன் கூடிய கற்பனை வரிகள்..
ஆகா...!
ReplyDeleteஅற்புதம்.
ReplyDeleteஅழகான வரிகள்,
ReplyDeleteஎமனுக்கு அவன் ஆசைப் படியே
உயிரெடுப்பதுதானே வழக்கம். ..!
அற்புதம். எமனின் வருகைக்கு எல்லோர் விருப்பமும் அதுதான். வெள்ளரி கொடியிலிருந்து பழம் விடுபடுவது போல
ReplyDelete