கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label தபால். Show all posts
Showing posts with label தபால். Show all posts

09 October, 2013

தபால்காரர் குரலும்... என் கவிதைகளும்...!



நட்ட குழியிலே
நடுவதற்கிங்கே...
 

ஒருமரம் நட
ஊரே திரள...
 

வெட்டப்பட்ட மரங்கள்
வேஷம் கட்டின
விழாப் பந்தலாய்....



j
அறிவியல் 
சுருக்குவதை விடவும்
இவ்வுலகத்தை
அதிகம் சுருக்குவது காதல்...!

இதோ பார்...
உன்னில் துவங்கி
உன்னில் முடிகிறது
என் உலகின் எல்லைகள்...! 

*****************************

வீடுகளின் முன், "சார் போஸ்ட்' என்ற வார்த்தை இப்போதெல்லாம் காணாமல் போய்விட்டது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால், தபால் துறையின் மகத்துவம் பற்றி, இன்றைய தலைமுறையினருக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனாலும், இன்றும் லட்சக்கணக்கான மக்களின் தினசரி வாழ்க்கையில் தபால் துறை முக்கிய பங்கு வகிக்கிறது.

உலக தபால் அமைப்பு 1874ம் ஆண்டு சுவிட்சர்லாந்து தலைநகர் பெர்ன் நகரில் தொடங்கப்பட்டது. 1969ல் இதை நினைவுபடுத்தும் விதமாக அக்.,9, உலக தபால் தினமாக அறிவிக்கப்பட்டது. உலக தபால் அமைப்பில், இந்தியா உள்ளிட்ட 150 நாடுகள் உள்ளன. 

தபால் துறையின் சேவைகளை பாராட்டும் விதமாகவும், தபால் துறையின் திட்டங்கள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் அக்.,9ம் தேதி, உலக தபால் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் தபால் வாரமாக (அக்.,9 - 15) கடைப்பிடிக்கப்படுகிறது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, இந்தியாவை ஒருங்கிணைக்கும் பணியை தபால்துறை செய்து வருகிறது. கடிதம் எழுதும் பழக்கம், இ-மெயில் வரவால் குறைந்திருந்தாலும், அலுவல் ரீதியான கடிதங்களைக் கொண்டு சேர்க்கும் பொறுப்பு, இன்றும் தபால் துறை வசமே உள்ளது. சமீபத்தில் 100 ஆண்டுகளைக் கடந்த பாரம்பரிய "தந்தி' சேவை நிறுத்தப்பட்டது.

இந்திய தபால் துறை, 1764ல் துவக்கப்பட்டது. சுதந்திரம் பெற்ற தொடக்கத்தில் 23 ஆயிரம் தபால் நிலையங்கள் மட்டுமே இருந்தன. தற்போது நாடு முழுவதும் ஒரு லட்சத்து 55 ஆயிரத்துக்கு 333 தபால் நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் 89 சதவீதம் கிராமங்களில் உள்ளன. 12 ஆயிரம் தபால் நிலையங்கள் கம்ப்யூட்டர் மையமாக்கப்பட்டன. 

உலகில், இந்தியாவில் தான், அதிக தபால் நிலையங்கள் உள்ளன. 5 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.ஸ்டாம்ப் விற்பனை, பதிவு தபால், விரைவு தபால், இ- போஸ்ட், மணி ஆர்டர், பார்சல் சர்வீஸ் மற்றும் சேமிப்பு கணக்கு போன்ற பணிகளை தபால் துறை மேற்கொண்டு வருகிறது. நவீன தொழில்நுட்ப வளர்ச்சி, தபால்துறையின் முன் உள்ள மிகப்பெரிய சவாலாக உள்ளது.

 இன்று உலக தபால் தினம்

Related Posts Plugin for WordPress, Blogger...