கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

01 June, 2013

தலைவர் ரஜினி நலமுடன் உள்ளார்… வதந்திகளை பரப்புவோருக்கு கடும் எச்சரிக்கை..!


கடந்த மூன்று தினங்களாக விஷமிகள் சிலர் வேண்டுமென்றே தலைவர் பற்றி சில வதந்திகளைப் பரப்பி வருகின்றனர், அது முற்றிலும் பொய்யானது என்பதை நன்கு தெரிந்த பிறகும்.

தலைவர் ரஜினி அவர்கள் நலமுடன் உள்ளார்… எந்த வதந்திகளையும் ரசிகர்கள் நம்ப வேண்டாம்!

இந்த நிமிடத்தில் தன் வீட்டில் அவர் விஜய் டிவி விருது வழங்கும் விழாவை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதே உண்மை.

ஆனால் கடந்த நான்கு தினங்களாக வெவ்வேறு வதந்திகளை சிலர் வேண்டுமென்றே பரப்பி வருகின்றனர்.

தலைவர் ரஜினி கோச்சடையான் இறுதிக் கட்டப் பணிகளில் மும்முரமாக உள்ளார். சில தினங்களுக்கு முன்புதான் படத்தின் இந்தி பதிப்புக்காக ஒரு பாடல் பாடியிருந்தார். தொடர்ந்து கேன்ஸ் விழாவுக்கு செல்லத் திட்டமிட்டிருந்தவர், கோச்சடையான் ட்ரைலரை இன்னும் சிறப்பாக தயாரிக்கச் சொல்லிவிட்டு, பயணத்தை ரத்து செய்தார். ஆனால் அவர் உடல்நிலை காரணமாகத்தான் பயணம் ரத்து செய்யப்பட்டதாக சிலர் பொய்ப் பிரச்சாரத்தை அவிழ்த்துவிட, அதை மறுத்து தயாரிப்பாளர் முரளி மனோகர் அறிக்கை வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

இன்று மாலை திடீரென்று மீண்டும் அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் ட்விட்டர் வழியாக றெக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்தன. காமெடி நடிகர் விடிவி கணேஷ் அனுப்பியதாக வெளியான ஒரு ட்விட்டை, பேஸ்புக்கில் பலரும் பகிர ஆரம்பித்தனர்.

அடுத்த சில நிமிடங்களிலேயே அது பொய்யானது என்ற உண்மையையும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சொன்னாலும் வதந்தி பரவிக் கொண்டே இருந்தது.

நாம் இது தொடர்பாக தலைவர் வீட்டில் விளக்கம் கேட்கக் கூட விரும்பவில்லை. காரணம், தலைவர் வீட்டில் நலமுடன் இருப்பதை நாம் நன்கு அறிவோம்.

இடையில் ஏராளமான நண்பர்கள் மற்றும் செய்தியாளர்கள் இதுகுறித்து நம்மிடம் விசாரித்தனர். அவர்களுக்காக ஒருமுறை தலைவர் வீட்டில் விஷயத்தைத் தெரிவித்தோம். அதற்கு அங்கிருந்து வந்த பதில், “தலைவர் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டுள்ளார். நாளை கோச்சடையான் டப்பிங் இரண்டாம் பகுதி பேசப் போகிறார். இதுபோன்ற வதந்தியையெல்லாம் நம்ப வேண்டாம்,” என்றார்கள்.

இந்த பதிலையே நம்மிடம் விசாரித்த அனைவருக்கும் தெரிவித்தோம்.

அடுத்த சில நிமிடங்களில் விடிவி கணேஷிடமிருந்து ஒரு அறிக்கை.

அதில், “என் பெயரில் வெளியான அந்த ட்விட் போலியானது. என் பெயரைப் பயன்படுத்தி யாரோ இப்படிச் செய்திருக்கிறார்கள். விரைவில் இதுகுறித்து சைபர் க்ரைமில் புகார் செய்யப் போகிறேன். இப்படி ஒரு வதந்தியில் என் பெயரை இழுத்துவிட்டது வருத்தத் தருகிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

தலைவர் ரஜினி சொன்ன வார்த்தைதான்… ‘ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்!’

நண்பர்களே.. ரஜினி என்பது வெறும் பெயரல்ல… ரசிகர்களின் உணர்வில் கலந்தது. அந்த ‘உணர்வு’க்கு தெரியாமல் அவருக்கு ஒன்றும் ஆகாது! (நன்றி: என் வழி)

5 comments:

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...