கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

13 June, 2013

தொப்பையை குறைக்க இதை முயற்சிசெய்து பாருங்க...!

ஒவ்வொரு மனிதனுக்கும், உடற்பயிற்சி அவசியம். தினமும் ஏதோ ஒரு வகையில், உடற்பயிற்சி செய்து வந்தால், அதுவே ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். அத்தகைய உடற்பயிற்சிகளில் நீச்சலும் ஒன்று. 

மார்பு: நீச்சல் பயிற்சி செய்வதால், தோள்பட்டை, கழுத்து, கால்களுக்கு நல்ல பயிற்சி கொடுக்கும்.

விரைவு நீச்சல்: இடுப்புப் பகுதி தசைகளும், இடுப்பு எலும்பும், முதுகெலும்பும் உறுதியாகும்.

பின் நீச்சல்: கெண்டைக்கால் தசைகள், இடுப்புப் பகுதி தசைகள் வலுப்பெறும்.
வண்ணத்துப்பூச்சி நீச்சல்: இதனால், வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள், முதுகுப் பக்கமுள்ள தசைகள் நன்கு வலுப்பெறுகின்றன.

நீச்சல் பயிற்சி உடலில் உள்ள தேவையற்ற எடை குறைகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும், உடலுக்குப் புத்துணர்வையும் தரக்கூடியது. தொப்பையைக் குறைக்கும்.

நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்:

நீச்சலின்போது, நீர், உடலுக்கு இயற்கை தடுப்பு ஆற்றலாகப் பயன்படுகிறது. உடலின் உள் உறுப்புகளுக்கும், நரம்புகளுக்கும், தக்க பயிற்சி கிடைப்பதால் அவற்றின் செயல்பாடுகள் சீராகின்றன.

* மனக் கவலை, மன அழுத்தம், எதிலும் நாட்டமின்மை போன்ற உள்ளக் கோளாறுகள் நீங்கும். நீந்தும்போது மனச்சிதறல் நீங்கி, மனம் ஒருநிலையடைகிறது.

* உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், இதயத்திற்கும், நுரையீரலுக்கும் வலுவூட்டம் கொடுக்கிறது.

* கை, கால், தொடைப் பகுதி தசைகள் நன்கு வலுப்பெறுகின்றன. மூட்டு வலி, கணுக்கால் வலி நீங்கும்.

* இடுப்பு வலி குறைவதுடன், முதுகெலும்பின் எலும்பு முடிச்சுகள் பலம் பெறுகின்றன.

* கழுத்து வலி, தோள்பட்டை வலி போன்றவை நீங்கும்.

* செரிமான சக்தியைத் தூண்டும். அஜீரணக் கோளாறைப் போக்கும். நன்கு பசியைத்தூண்டச் செய்யும். மலச்சிக்கல் நீக்கும்.

* ஆழ்ந்த உறக்கத்திற்கு, நீச்சல் மாபெரும் மருந்தாகும். உடலுக்கும், உள்ளத்திற்கும் பயன் தரும் நீச்சல் பயிற்சியை, அனைவரும் மேற்கொண்டு ஆரோக்கியம் பெறுவோம்.

பயிற்சியை தொடர்ந்தால் கண்டிப்பாக தொப்பை குறையும்...

16 comments:

  1. அண்ணே நல்ல பயனுள்ள பகிர்வு.. ஆனால் (என்னை மாதிரி) நீச்சல் தெரியாதவங்க என்ன பண்றது?

    ReplyDelete
    Replies
    1. அது ஒன்னுமில்லிங்க.. யாரையாவது விட்டு கிணத்திலையோ.. அல்லது ஆற்றிலையோ தள்ளிவிடச்சொல்லுங்க... சீக்கீறம் கத்துக்கலாம்....

      நாங்களும் அப்படித்தான் கத்துகிட்டோம்...

      Delete
    2. இப்ப நிறைய நீச்சல் பயிற்சி மையங்கள் இருக்குங்க... முயன்றால் கண்டிப்பாக கற்கலாம்...

      Delete
  2. நல்ல தகவல்தான்
    முன்புபோல் நீர் நிலைகளில்
    நீர் இருந்தால் வசதியாக இருக்கும்
    பயனுள்ள பகிர்வு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் இப்பத்தான் ஒரு ஆற்றையும் குளத்தையும விட்டுவைப்பது இல்லையே....

      Delete
  3. முன்பு இங்கு இருந்த போது தினமும் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள கிணற்றுக்கு செல்வதுண்டு... இப்போது பல கிணறுகள் பாழடைந்து விட்டது... (தண்ணீர் இல்லை)

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பகுதியில் ஆறு ஏதும் செல்லவில்லையா.... தலைவரே...

      Delete
  4. நல்ல யோசனை.நிச்சயமாய் பலன் கிடைக்கும் முறையான பயிற்சிக்குப்பின் தொடரவேண்டும்

    ReplyDelete
  5. பயன்மிக்க பதிவு, பள்ளிகளில் நீச்சலை அனைவருக்கும் பயிற்றுவிப்பதில் அரசு வழி செய்ய வேண்டும்.

    ReplyDelete
  6. அருமையான தகவலுக்கு மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  7. நல்ல யோசனைதான்..., முதல்ல நீச்சல் அடிக்க தண்ணி இருக்குற இடத்தை பதிவு போட்டுட்டு அப்புறம் யோசனை சொல்லுங்கோ

    ReplyDelete
  8. நீச்சல் அடிக்கலாம், அதற்க்கான கிணறு/குளம்/ஆறு இதெல்லாம் அடையாளம் தெரியாம காணாமப் போச்சே?

    ReplyDelete
  9. தமிழ்நாட்டில் குடிப்பதற்கே நல்ல தண்ணீர் இல்லையாமே....
    இதில் எங்கே போய் நீச்சல் அடிப்பது?

    (கவிதை வீதி... ஆண்களுக்கு மட்டும் தான் இந்த பதிவா...? அப்போ சரி. ஆனால் அவர்கள் எதையோ குடிக்காமல் இருந்தாலே தொப்பையே வராதாமே... மைண்டு வாய்ஸ் கேக்குதுங்க...))

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...