கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

17 January, 2014

இப்படியும் பெண்களா...?ஒரு குளிர்கால மழைப்போல்
என்னை ‌அதிகம் சிலிர்க்க வைத்தவள் நீ....

ஒரு கோடைகால நிழல் போல்
என்னை அதிகம் ரசிக்க வைத்தவள் நீ...

ஒரு கடலோர படகுப்போல்
என்னை அதிகம் தடுமாற வைத்தவள் நீ...

ஒரு குறிஞ்சி பூத்த பள்ளத்தாக்குப்போல்
என்னை அதிகம் ஆக்கிரமித்தவள் நீ...

ஒரு இரவு ‌நேர வீண்மீன்களைப்போல்
என்னை அதிகம் வியக்க வைத்தவள் நீ...

ஒரு வசந்தகால பூக்களைப்‌ போல்
என்னை அதிகம் மிளிர வைத்தவள் நீ...

ஒரு அவசரக்கால ஒலிப்பானைப் போல்
என்னை அதிகம் பரபரக்கவைத்தவள் நீ...

ஒரு ஏழையின் மகிழ்ச்சிப்போல
என்னை விண்ணில் மிதக்கவைத்தவள் நீ....

நீயின்றி தோற்றுவிடுகிறது என் விதிகள்
நீயிருந்தால் மாறிவிடும் என் புவியீர்ப்பு விசைகளை...!


 

13 comments:

 1. கவிதை ரைட்டுதான் ..ஒலிப்பான்,தோற்று என்றும் இரண்டையும் திருத்தி விடுங்கள் !
  +3

  ReplyDelete
 2. என்றும் தொடரட்டும்...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. அருமை அருமை
  த.ம.5

  ReplyDelete
 4. அழகான கவிதை! பகவான் ஜி சொன்ன எழுத்துப்பிழைகளை சரி செய்யவும்! நன்றி!

  ReplyDelete
 5. அருமை
  கவிதை ஜெயித்துவிட்டது
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. தாமதமாக வந்திருக்கிறேன்...
  கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி...

  பிழையை சரிசெய்து விட்டேன்... நன்றி...

  ReplyDelete
 7. அருமையான கவிதை...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. அந்த "நீ "
  கவிதை மெஷின்?

  ReplyDelete
 9. வணக்கம் !
  வலைச்சரத்தின் வாயிலாக வந்தேன் .
  அருமை உணர்வுகளும் கவிதையும்.தொடர வாழ்த்துக்கள் .....!

  ReplyDelete
 10. அழகான கவிதை!!!! அழகான புகைப்படங்களும் தான் ..!!!

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...