கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label பொது அறிவு G.K.. Show all posts
Showing posts with label பொது அறிவு G.K.. Show all posts

14 March, 2018

வாழைப்பழத்தை இதுக்கும் பயன்படுத்தலாமா


உலகின் மிகப்பெரிய உயிரியல் பூங்கா அமெரிக்காவில் உள்ள `டொராண்டோ உயிரியல் பூங்கா'


சஞ்சீவனி, காமினி மற்றும் அமர் ஆகிய பெயர்களில் 
கபடி ஆட்டம் நடைபெறுகிறது.


 பி.எச்.டி. பட்டம் பெற்றிருந்த ஒரே அமெரிக்க அதிபர் 
உட்ரோவில்சன்


 ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள்? - எகிப்தியர்



 கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும். 
அது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.


 தேனீக்கு இரண்டு இரைப்பைகள் உள்ளன. ஒன்று சேமிப்பு அறையாகவும், மற்றொற்று ஜீரண உறுப்பாகவும் பயன்படுகிறது.


 மண்புழுக்களில் ஆண், பெண் என்ற 
தனித்தன்மை கிடையாது.


 காகிதம் கண்டுபிடிப்பதற்கு முன்பு பட்டங்கள் 
பட்டுத் துணியால் செய்யப்பட்டன.


 மிகப்பெரிய விரிகுடாவான வங்காள விரிகுடாவின் நீளம் 
2,250 மைல்கள்.


 உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம், பனாமா கால்வாய்.


 இந்தியாவின் வரைபடத்தை வரைந்தவர் டா ஆன்வில் என்ற பிரெஞ்சுக்காரர்.


 இந்திய மொழிகளில் முதன் முதலாக கலைக்களஞ்சியம் தமிழில் உருவாக்கப்பட்டது.


 மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தப் பயன்படும் தாவரம் - கீழாநெல்லி


 மோனலிசா ஓவியம் வரைய மொத்தம் எத்தனை 
3 ஆண்டுகள் பிடித்தன


 சென்னை மெரினா கடற்கரையில் உள்ள 
உழைப்பாளர்கள் சிலையை செய்தவர்  டி பி ராய்.


 கார்த்திகை மலர் என்று அழைக்கப்படுவது 
காந்தள் மலர்

இந்தியாவின் பெரிய நதிகளில் ஒன்றான 
யமுனை கடலில் கலப்பது இல்லை.
********************************
வாழைப்பழத்தில் செய்யப்பட்ட அழகிய ஓவியங்களுடன்
சில பொது அறிவு தகவல்களும்....

23 November, 2013

பெண்கள் அதிகம் கவனம் செலுத்தும் இரண்டு விஷயங்கள்..


சூரியன் அஸ்தமனத்துக்கு முன் சிவப்பாக தோன்றும். ஆனால், அது பச்சையாகத் தோன்றுவது அண்டார்டிக்காவில் மட்டும் தான்.


காரில் செல்லும் போது மழை, இடி வந்தால் காரை விட்டு இறங்காமலிருப்பதே நல்லது. காரணம், பூமிக்கும், காருக்கும் பாசிடிவ் சார்ஜ் கவராமலிருப்பது தான்.


நீரை உறிஞ்சி குடிக்கும் ஒரே பறவை புறா தான்.


  பச்சைத் தங்கம் என அழைக்கப்படும் மரம் யூகாலிப்டஸ் மரம்.


பாம்புகளில் 3,000 வகையான பாம்புகள் உலகம் முழுவதும் உள்ளன. இந்தியாவில் மட்டும் 350 வகைகள் உள்ளன.


நாகபாம்பு, கண்ணாடி விரியன், சுருட்டுப் பாம்பு, கட்டுவிரியான் ஆகியவை மிகவும் கொடிய நச்சுள்ள பாம்புகள்.


  நச்சுள்ள பாம்பு இன்னொரு பாம்பைக் கடித்தால் கடிப்பட்ட பாம்பு இறந்து விடும்.



குழந்தைகள் 6 மாதம் வரை ஒரே நேரத்தில் மூச்சும், முழுங்கவும் முடியும்..



நிலத்தில் ஒரு மைல் என்பது 5,280 அடி. கடலில் ஒரு மைல் 6,080 அடி.


கண்களை கசக்கும் போது தோன்றும் நட்சத்திரம் மற்றும் கலர்கள், பாஸ்பீன்ஸ் எனப்படும்.


சூயிங்கத்தை முழுங்கினால், வயிற்றில் தங்காமல், தானாக வெளியேறி விடும்.



வறுக்காத முந்திரி கொட்டை விஷ தன்மை உடையது.


குழந்தைகள் பிறக்கும் போது மூட்டுகள் இல்லாமல் தான் பிறக்கின்றனர். 2 - 6 வயதில் தான் வளர்கிறது.



15 எழுத்து ஆங்கில வார்த்தை, எழுத்துக்கள் திரும்ப வராத வார்த்தை: uncopyrightable


லியானார் டா வின்சி, ஒரே நேரத்தில், ஒரு கையால் எழுதவும், மறு கையால் வரையவும் செய்வார்.


நீல நிறம், மக்களை அமைதி படச் செய்யும். மனித மூளை, 11 வகை இராசாயணத்தை அமைதி படுத்த அனுப்புகிறது.


பெரும்பாலான கை கடிகாரம் விளம்பரத்தில் காட்டப் படும் 10:10, புன்னகையை குறிக்கும்.

பொதுவாக பெண்களுக்கு தன்னுடைய நகங்களை அழகுப்படுத்தி கொள்வதிலும்... பொது விஷயங்கள் பொதுஅறிவு தகவல்களை படிப்பதிலும் அதிகம் ஆர்வம் படைத்தவர்கள்... தலைப்பு புரிந்ததா..!

27 October, 2013

கண்டிப்பாக இதை உங்களால் நம்பமுடியாது... ஆனால் உண்மை





உலகிலேயே மிக விசாலமான விமான நிலையம் சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையமாகும். இந்நிலையம் அடங்கியுள்ள நிலப்பரப்பு 55040 ஏக்கர்(225 சதுர கிலோமீட்டர்) ஆகும்.
***************************



முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான். 
***************************


 
கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறையைக் கண்டறிந்தவர் எட்வர்ட் ஹென்றி.

*************************** 


 
மீன் தன் வாழ்நாள் இறுதி வரை வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும்.
*************************** 


 
அட்லான்டிக் பகுதியில் ஆண்டிற்கு ஒரு முறைதான் சூரியன் உதயமாகிறது.

*************************** 


 
காட்டு நாய்களிடமிருந்து கம்பளி ஆடுகளை காப்பாற்றுவதற்கு ஆஸ்திரேலியா அரசாங்கம் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் 3 ஆயிரத்து 437 மைல் நீளமுள்ள வேலியை அமைத்துள்ளது. இதுதான் உலகின் மிகப் பெரிய வேலியாகும். 

*************************** 



கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை கொடுக்கிறது.


*************************** 



கனவாய் மீனின் ரத்தத்தில் காப்பர் அதிகமாக இருப்பதால் ரத்தத்தின் நிறம் பச்சையும் நீலமும் கலந்த நிறமாக தோன்றும். இதன் காரணமாகவே இதை ராஜா மீன் என்கின்றனர்.

*************************** 



சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது.

*************************** 



கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு – இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு – இதயம்.

***************************



உலகத்திலே மிகவும் வேகமாக வளரக்கூடிய மரம் யூக்கலிப்டஸ் (Eucalyptus) தான். இது 90க்கும் மேற்பட்ட நாடுகளில் வளர்க்கப்படுகிறது. காடுகளின் 8 சதவீதம் இம்மரமே உள்ளது. பிரேசில் நாட்டில் மட்டுமே 3.5 மில்லியன் ஏக்கரில் யூக்கலிப்டஸ் மரம் இருக்கிறது. 

***************************


மிகப்பெரிய கோதுமைக் களம் கனடாவில் உள்ள அல்பர்டா என்ற இடத்தில், சுமார் 142 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது

*************************** 


*************************** 

சாலைகளில் வரையப்பட்ட பார்க்கவே வியப்பூட்டும் அழகிய முப்பரிமாண  ஓவியங்களுடன்... சில பொது அறிவு துணுக்குகள்...!

ரசித்தமைக்கு மிக்க நன்றி...

28 July, 2013

இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..? தெரிஞ்சிக்கங்க அம்புட்டுதான்...!








• அண்டார்டிக் கண்டம் உலக நாடுகளுக்குத் தெரிய வந்தது 1820-ஆம் ஆண்டில்தான்.

• ஒவ்வோராண்டும் 160 லட்சம் இடி, மின்னல்கள் பூமியில் ஏற்படுகின்றன.

• தவளைகள் தண்ணீரில் வாழ்ந்தாலும் அந்தத் தண்ணீரைக் குடிக்கவே குடிக்காது.

• 11 நாடுகளை எல்லையாகக் கொண்ட நாடு சீனா.

• பிறந்த குழந்தை என்னதான் அழுதாலும் கண்ணீர் மட்டும் வராது. ஏனென்றால் கண்ணீர் சுரப்பி வளர்ந்து செயல்படுவதற்குக் குறைந்தது 15 நாட்களாவது ஆகும்.

• சேரன் தீவு என்றழைக்கப்பட்ட நாட்டின் இன்றைய பெயர் இலங்கை.

• காந்திஜி முதன்முதலில் சென்ற வெளிநாடு இங்கிலாந்து.

• அமெரிக்காவில் காணப்படும் லாமா என்னும் விலங்கு எதிரியின் மேல் எச்சிலைத் துப்பும் பழக்கம் உடையது. இது ஓட்டகக் குடும்பத்தைச் சேர்ந்தது.

• மனித உடலிலேயே மூக்கின் நுனிதான் மிகவும் குளிர்ச்சியான பாகம்.

• பிரேசில் நாட்டில் ஒருவகை வண்ணத்துப்பூச்சி உள்ளது. இது சாக்லேட் நிறத்தில் காணப்படும். இது பறந்து செல்லும்போது சாக்லேட் வாசனை அடிக்குமாம்!

• காபி பொடியில் கலக்கப்படும் சிக்கரித்தூள், சூரியகாந்தி செடி வகையைச் சேர்ந்த காசினி என்னும் செடியின் வேராகும்.

• கைரேகைகளை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கும் பழக்கத்தைச் சீனர்கள் கி.மு. 7-ஆம் நூற்றாண்டில் கடைப்பிடித்திருக்கிறார்கள்.

• ஒரே ஆண்டில் 7 புலிட்சர் விருதுகளை வென்ற அமெரிக்கப் பத்திரிகை நியூயார்க் டைம்ஸ்.

• பிறந்த அன்றைக்கே நிற்கவும் நடக்கவும் முடிகிற விலங்குகள் வரிக்குதிரையும் ஆடுகளும்.

• தர்பூஸ் பழங்களை இந்தியாவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் முகலாய மன்னர் பாபர்.

• யூதர்களின் காலண்டரில் முதல் மாதம் செப்டம்பர்.

• செடி விதைகளில் அதிக காலம் ( 30 ஆண்டுகள் ) கெட்டுப் போகாமல் இருப்பது தாமரைப்பூ விதைதான்.

• ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளின் பிறப்பிடம் கிரேக்க நாடு.

• ஆக்ஸ்ஃபோர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக ஆசிரியர்களுக்கு டான் என்று பெயர்.

• எழுத்தாளர் மாக்ஸிம் கார்கி, அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வெயின் ஆகியோர் ஆரம்பப் பள்ளிக்கு மேல் தாண்டியதில்லை.

• கண்ணாடியால் சாலைகள் போட்ட முதல் நாடு ஜெர்மனி.

• ஆண்களுக்கான சட்டையைக் கண்டுபிடித்த நாடு எகிப்து.

• இரண்டு செட் உடைகள் மட்டுமே பிடிக்கும் ஜேம்ஸ்பாண்ட் பாணி சூட்கேஸ்கள் முதன்முதலில் பிரேசில் நாட்டில் தயாரிக்கப்பட்டன.

• மாரடைப்பால் நின்றுபோன இதயத்தை மீண்டும் இயக்க உதவும் கருவியின் பெயர் மார்க்விட் ரெஸ்பாண்டர் 1200.

• இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன், திருச்சிக்கு அருகிலுள்ள "திருவானைக்காவல்' என்ற ஊரில் பிறந்தவர்.

• பூனைகளை வளர்ப்பது அதிர்ஷ்டமானது என்று கருதுபவர்கள் ஐஸ்லாந்து மக்கள்.

• உலகில் ஐம்பது சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் விரும்பும் நிறம் சிவப்பு.

• சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மனிதனின் அடிப்படைத் தத்துவத்தை முதன்முதலில் சொன்னவர் பிரான்ஸ் நாட்டு தத்துவஞானி ரூஸோ.

• பூமியின் வயது 4,610 மில்லியன் ஆண்டுகள் என்று தோராயமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

• ஒரு கிலோவில் சுமார் 2000 ரப்பர் பேண்டுகள் இருக்கும்.

• ரோஜாக்களிலிருந்து பன்னீர் எடுத்து அதைப் பிரபலமாக்கிய பெண்மணி, முகலாய அரசர் ஜஹாங்கீரின் மனைவியான நூர்ஜஹான்.

• பெட்ரோலை "கேúஸôலின்' என்று அமெரிக்கர்கள் அழைக்கிறார்கள்.

• ஜப்பானியரும் பிலிப்பைன்ஸ் நாட்டவரும் தோற்றத்தில் ஒரே மாதிரி இருப்பார்கள்.

• தொடக்கப் பள்ளியிலேயே படிப்பை நிறுத்தியவர் விஞ்ஞானி ஜி.டி.நாயுடு.

• இங்கே வீட்டுக்கு வீடு கிணறுகள் இருப்பது போல அமெரிக்காவின் புறநகர்ப் பகுதிகளில் வீட்டுக்கு வீடு நீச்சல் குளங்கள் இருக்கும்.

• தேங்காய் என்பது காயும் அல்ல; கனியும் அல்ல. அது விதை.

• முன்னாள் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு மிகவும் பிடித்த மலர் ரோஜா.

• ஜூடோ என்ற மற்போர்க் கலையை முதன்முதலி கண்டுபிடித்தவர் ஜப்பானைச் சேர்ந்த டாக்டர் ஜிராரே கானா.

• வானம்பாடிப் பறவைகளில் 75 வகைகள் உள்ளன.

• எல்லைப் பிரச்னை காரணமாக எறும்புகளும் சண்டை போட்டுக் கொள்கின்றனவாம்.

• ஆசியா கண்டத்தில் முதன்முதலில் கார் தயாரித்த நாடு ஜப்பான்.

• நிலக்கடலையின் பிறப்பிடம் தென் அமெரிக்கா.

• சூரியனை மிக வேகமாக (மணிக்கு 1,72,248 கி.மீ.) சுற்றும் கிரகம் புதன்.

• பூட்டுகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு மிருகங்களின் நரம்பினால் செய்யப்பட்ட உறுதியான கயிறுகளைக் கொண்டு வீட்டுக் கதவுகளைக் கட்டி வைத்தார்கள்.

• "கிராம் பெர்ரி' என்ற ரஷ்ய நாட்டுப் பழம் ஓராண்டு வரையிலும் கெட்டுப் போகாமல் இருக்குமாம்.

• தாஜ்மஹால் இருக்கும் ஆக்ரா நகரின் முந்தைய பெயர் "அக்பராபாத்'.

• புயல் உருவாகப் போவதை முன்கூட்டியே அறிவிக்கும் கருவி சீஸ்மோகிராஃப்.

• உலகத்திலேயே மிக விலையுயர்ந்த பூவைத் தரும் செடி குங்குமப் பூச்செடிதான்.

*கெய்ரோவிலுள்ள பல்கலைக்கழகம்தான் உலகில் முதன்முதலில் ஏற்படுத்தப்பட்டது..

நன்றி..
பொது அறிவு நண்பர்கள் குழு

12 December, 2010

இந்திய முதல் பெண்கள் (G.K.)

 
  • இந்தியாவின் முதல் பெண் பிரதமர்
இந்திரா காந்தி
  • இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர்
சுசேதா கிருபளானி (உத்திரபிரதேசம்)
  • இந்தியாவின் முதல் பெண் ஆளுநர்
சரோஜினி நாயுடு (உத்திரபிரதேசம்)
  • இந்தியாவின் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி
பாத்திமா பீவி
  • இந்தியாவின் முதல் பெண் மாநில ‌தலைமை செயலர்
லட்சுமி பிரானேஷ்
  • இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதர்
விஜயலட்சுமி பண்டிட் (ரஷ்யா 1947-49)
  • இந்தியாவின் முதல் பெண் காபினெட் அமைச்சர்
ராஜ்குமாரி அம்ரித்கௌர் (சுகாதாரத்தூறை 1957 வரை)
  • இந்தியாவின் முதல் பெண் ‌வழக்கறிஞர்
ரெஜினா குகா (1922)
  • இந்தியாவின் முதல் பெண் ‌மருத்துவர்
ஆனந்தபாய் ஜோஷி (அமெரிக்காவில் பட்டம் பெற்றார்)
  • இந்தியாவின் முதல் பெண் பொறியாலர்
லலிதா (சிவில் 1950)
  • இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி
அன்னா ஜார்ஜ் மல்கோத்ரா (1950)
 
  • இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி
கிரண்பேடி
  • இந்தியாவின் முதல் பெண் நீதிபதி
அன்னா சாண்டி
  • இந்தியாவின் முதல் பெண் பத்திரிக்கையாளர்
சுவர்ணகுமாரி தேவி (ராம்பூதோதானி பத்திரிக்கை)
  • இந்தியாவின் முதல் பெண் விமான ஓட்டி
காப்டன் துர்கா பானர்ஜி
  • இந்தியாவின் முதல் பெண் மேயர்
தாரா செரியன்
 
  • இந்தியாவின் முதல் பெண் துணை வேந்தர்
அன்சா மேத்தா (பரோடா பல்கலைகழகம்)
  • இந்தியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர்
வசந்த குமாரி (தமிழ்நாடு)
  • இந்தியாவின் முதல் பெண் விண்வெளிப் பெண்மனி
கல்பனா சாவ்லா
  • இந்தியாவின் முதல் பெண் ரயில் இஞ்சின் ஓட்டுனர்
சுரோகா யாதவ்
  • இந்தியாவின் முதல் பெண் டி.ஜி.பி. (DGP)
இகஞ்சன் சௌத்ரி பட்டாச்சார்யா
  • இந்தியாவின் முதல் பெண் ராணுவ கமாண்டன்ட்
புனிதா அரோரா
  • இந்தியாவின் முதல் பெண் ஏர்ஃசிப் மார்ஷல்
பத்மாவதி பந்தோபாத்யாயா
 
 
Related Posts Plugin for WordPress, Blogger...