கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

31 July, 2012

அராஜக கட்சிகளுக்கு துணைப்போகும் மத்திய அரசு.... அதிர்ச்சி தகவல்..!

கடந்த நான்கு நாட்களுக்கு முன் செய்திதாள்களில் ஒரு செய்தியை வாசித்தேன். அது நாட்டில் உள்ள பொதுச்சொத்துக்களை அதிகஅளவில் சேதம் விளைவிக்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்தியஅரசு அறிக்கைதாக்கல் செய்துள்ளது.

முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியான பிரகாஷ் சிங் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் கோரும் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "அரசியல் கட்சிகள், போராட்டத்தில் ஈடுபடும் போது, பெரிய அளவில் வன்முறைகள் நிகழ்கின்றன. பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப் படுகின்றன. சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் பாதைகளில் மறியலில் ஈடுபடுவதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, பெரிய அளவில், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் வகையில், நடக்கும் போராட்டங்களை தடுக்க, வழிகாட்டிக் குறிப்புகளை உருவாக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் சிங்வி, முகோபாத்யாயா ஆகியோர் அடங்கிய, உச்ச நீதிமன்ற பெஞ்ச் முன், கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, "வன்முறையில் ஈடுபட்டு, பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தும், அரசியல் கட்சிகளை, தற்போதைய சட்ட விதிகளின் கீழ், தடை செய்ய முடியுமா? அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாமா? இது தொடர்பாக, மத்திய அரசு, ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரோகின்டன் நாரிமன் கூறியதாவது:

போராட்டத்தில் ஈடுபடும் போது, அரசியல் கட்சியினர் பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவதற்காக, குறிப்பிட்ட அரசியல் கட்சியின் அங்கீகாரத்தை, தேர்தல் கமிஷனோ அல்லது நீதிமன்றமோ ரத்து செய்ய முடியாது. உச்ச நீதிமன்றமே, இது தொடர்பாக வழக்கு ஒன்றில் தீர்ப்பு அளித்துள்ளது என்றார்
 
கடுமையான சட்டங்கள் இருந்தாலே அதை மீறுகிற கட்சிகள் தான் இங்கு இருக்கிறது. அவைகள் பல்வேறு விதமான சட்டவிரோதமான வேலைகளை செய்து வருகிறது. மேலும் இதுபோன்ற தீர்ப்புகள் மூலம் கட்சிகள் தாங்கள் நடத்தும் பொதுபோராட்டங்களில் அளவுக்கு மீறி நடந்துக்கொள்ளும் என்பதில் சந்தேகமில்லாமல் தெரிகிறது.

போராட்டங்கள் என்ற பெயரில் ரயில் மறிப்பது அதை எரிப்பது, பேருந்தை சேதப்படுத்துவது மற்றும் எரிப்பது, தனியார் சொத்துக்களையும், அரசு சொத்துக்களையும் தாக்கி சேதப்படுத்துவது என தன்னுடைய கடமைபோன்று செய்து வரும் அரசியல் கட்சிகள் மத்திய அரசின் இந்த முடிவு மூலம் அரசியல் கட்சிகளின் போக்கு எப்படியிருக்கும் தாங்களே கற்பனை செய்துக்கொள்ளுங்கள்.


இதுபோன்ற பொது நல மனுக்கள் மீது நீதிமன்றங்கள், பொதுமக்களுக்கும் நாட்டுக்கும் நல்லது நடக்கும்படியான தீர்ப்பை அளிக்கவேண்டும். தனிப்பட்ட முறையில் ஆட்சி நடத்தும் மத்திய அரசின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.

28 July, 2012

நித்தியானந்தா இந்த ஜோக்கை படிச்சிருப்பாரு போல...


இந்த சனி ஞாயிறு என்றால் என்ன பதிவு போடுறதுன்னு ரொம்ப குழப்பாக இருக்குங்க... சிபி அட்வைஸ் என்னன்னா நல்ல நல்ல  பதிவுகளை வார இறுதி நாட்கள்ள போடக்கூடாது என்பதுதான். 

எனக்கு அதுதாங்க பிரச்சனை.... நான் போடுறது எல்லாமே நல்லப்பதிவு சுமாரான பதிவுக்கு நான் எங்க போறது... (‌ஜனங்க இன்னும் நம்மல நம்புறாங்கப்பா) 

கோவப்படாதிங்க மக்களே.... காக்கைக்கு தன் குஞ்சு.... 
(அடடா ஆரம்பிச்சிட்டாங்கப்பா)
அதனால பின்வரும் துணுக்கு ஜோக்குகளை ‌எல்லாம் பாடித்து சிரித்து விட்டு போகும்படி வற்புறுத்தப்படுகிறது..
(என்ன... நான் சொல்றது..)

எலே மக்கா... நல்ல பதிவை போடக்கூடாதுன்னு ஜனங்ககிட்ட சொல்லிட்டு இந்த சிபி மட்டும் ஒரு படம் விடாம பார்த்துட்டு விமர்சனம் போட்டுகிட்டு இருக்கான்... 
அவன் இந்தப்பக்கம் வந்த நீ சுடு... 
இந்தப்பக்கம் வந்தா நான்சுடுறேன்... 
(எஸ் பாஸ்.. ஒழியட்டும் ராஸ்கேல்... இது மனோ டயலாகச்சே..)
***************************
சிஷ்யன் : குருவே..! மனிதனுக்கு வாழ்க்கையின் இன்பமும், துன்பமும், எப்போது கிடைக்கும்?
 
குரு : சம்சாரியானால் துன்பமும், அப்படியே சாமியாரானால் இன்பமும் கிடைக்கும் சிஷ்யா... 

(நித்தியானந்தா இந்த ஜோக்கை படிச்சிருப்பாரு போல...)

***************************


நண்பன் 1 : டாக்டர் உன்னை கலாய்க்கிறாரா.. எப்படி?

நண்பன் 2 :  நாக்குல புண் வந்திருக்குன்னு போனா, நீங்க புண்ணாக்கு ஆயிட்டீங்கன்னு சொன்னாரு..!

***************************
 
   

நண்பர் 1 : ஏன்டா மூணு வேளையும் டிபனே சாப்பிடுறே....!
 
நண்பர் 2 : ஏன்னா..! என்னை யாரும் தண்ட சோறுன்னு சொல்லக்கூடாது பாரு அதுக்குத்தான்...
***************************

 
இதுக்கு என்ன அர்த்தம்... உங்களுக்கு தெரியுமா..?
இனிமே மனோகிட்டே பேசக்கூடாது...
மனோ சொல்றதை கேட்கக்கூடாது...
ஏன்.. மனோ பதிவைக்கூட பார்க்ககூடாது...

பாருங்க இதுகளுக்குகூட தெரிஞ்சிருக்கு...!

***************************
(என்ன ஒரு கொலை வெறி..)
எஸ்கேப்....


அவ்வளவுதான் படம் முடிஞ்சிடுச்சி.. கிளம்புங்க..

26 July, 2012

ஆடி மாச அனுபவங்கள்..! நீங்களும் தெரிஞ்சிக்கங்க...

தமிழ் மாதத்தில் ஆடி மாதத்திற்கு என்று ஒரு தனிசிறப்பு இருக்கிறது. இம்மாதம் வரும்போதே பயபக்தியையும் அழைத்துக்கொண்டு வந்துவிடும். வேப்பிலை அணிந்து பக்தியோடு,  கூழ் ஊற்றுதல், அம்மன் தரிசனம் என இம்மாதமே விழா கோலத்தோடு இருக்கும். 

25 July, 2012

இவையும் உயிர்கொல்லி தானோ..?


 
 
ரவில் மரம் பரவசப்பட்டது
கிளையெல்லாம்
மின்மினிக்கள்...  

***********************************************************

 
 
ண்களுக்கு தெரியாமல்
கண்ணீர்
கனவில் அழுதேன்... 
 
***********************************************************


 
 தினம் தினம் துயரம்
காரணம் வேறென்ன..?
காதல்...!
 
*********************************************************** 


 
 வான்வெளியில்
ஒலியும் ஒளியும்
மேகத்திற்குள் இடி மின்னல்...!
 
***********************************************************


 
யிர்கொல்லி நோய்..
எய்ட்ஸ்..
சார்ஸ்...
காதல்.....
 
***********************************************************
 
 என் துளிப்பாக்கள்...

24 July, 2012

இலவச பயண அட்டையும், தமிழக அரசின் அலட்சியமும்.. பரிதவிப்பில் மாணவர்கள்


தமிழக அரசு மாணவர்களுக்கு அறிவித்த சலுகைகளில் மாணவர்களுக்கு உண்மையில் வரபிரசாதமாக இருக்கும் ஒரு விஷயம் இலவச பேருந்து பயண அட்டை தான். இந்த சலுகை வந்தப்பிறகு படிக்கும் மாணவர்களுக்கு தூரம் என்பது ஒரு தடையாக இல்லாமல் இருந்தது. இதை வைத்துக்‌கொண்டு தன் பகுதியில் மட்டுமே படித்துக்கொண்டிருந்து மாணவர்கள் தொலைவில் உள்ள ‌நல்ல பள்ளிகளை நாடி செல்ல ஆரம்பித்தார்கள். 

கடந்த பலவருடமாக இந்த நடைமுறை இருந்து வருகிறது. திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்திய இத்திட்டம் அடுத்த வந்த அதிமுக ஆட்சியும் அதை அமுல் படுத்திவந்தது. பொதுமக்கள் மத்தியிலும் நல்லவரவேற்பை பெற்ற இத்திட்டம் தற்போது கைவிடப்பட்டுவிட்டாதா என்று எண்ணத்தோன்றுகிறது.ஒவ்வொறு வருடமும் பள்ளித்திறந்த உடன் அப்பகுதியில் உள்ள பனிமணை கிளை மேளாலர்களால் விண்ணப்பபடிவங்கள் பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு, பள்ளி திறந்த முதல் வாரத்திற்குள் மாணவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்ற தகவல்கள் திரட்டப்பட்டு அடுத்த ஒரு வாரத்திற்குள் இலவச பயண அ‌ட்டை அனைவருக்கும் வழங்கப்பட்டு விடும். 

ஒவ்வொறு வருடமும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் இச்செயல் முடிந்து விடும். பள்ளி திறந்த 15 நாட்களுக்குள் மாணவர்களுக்கு இந்த சலுகைகிடைத்துவிடும். தற்போது மாணவர்கள் 5 கி.மீ முதல் 30 கி.மீ தூரைவம் வரை சென்று படிக்கிறார்கள் அதற்கான கட்டனம் ரூ. 10 முதல் 40 வரை இருக்கும்.

அந்த கட்டண சுமையை போக்குவதற்க்கு மாறாக இந்த வருடம் புறநகர் மற்றும் திருவள்ளுமாவட்ட பெரும்பாலான பள்ளிகள் இன்னும் மாணவர்களுக்கு இச்சலுகை கிடைக்ககில்லை. (தமிழகம் முழுவதும் இந்நிலைதான்) பள்ளி திறந்த முதல் வாரத்திலே விண்ணப்பபடிவங்கள் பள்ளிகள் மூலம் அனுப்பப்பட்டு விட்டது. 

ஆனாலும் இதுவரையில் கிட்டதட்ட இரண்டு மாதம் ஆன நிலையிலும் மாணவர்களுக்கு இலவச பயண சீட்டு இன்னும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பல்வேறு மாவட்டங்களில் பெற்றோர்கள் பலஅதிகாரிகளிடம் முறையிட்டும் மௌனமே மிஞ்சுகிறது என்று வேதனை தெரிவிக்கிறார்கள்.


தமிழக அரசு மாணவர்களுக்கு இலவச பயண அட்டை ஸ்மார்ட் கார்டு வடிவில் தயாராகிறது அதனால் இந்த தாமதம் என்று தெரிவித்திருக்கிறது. பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதும் நேற்று முதல் (23-07-2012) அடையாள அ‌ட்டை இல்லாவிடிலும் பரவாயில்லை மாணவர்களை இலவசமாக அழைத்துச்செல்லுங்கள் என்று போக்குவரத்து துறைக்கு தமிழக அரசு ஆணை ஒன்று பிரப்பித்துள்ளது. 

நேற்று பெரும்பாலான பேருந்துகளில் மாணவர்கள் கட்டணமின்றி அழைத்துச்செல்லப்பட்டார்கள். ஆனால் ஒருசில பேருந்துகளில் அப்படி ஏதும் இல்லை என்று மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தார்கள். 

இன்றும் பெரும்பாலான பேருந்துகளில் அப்படி ஏதும் எங்களுக்கு தகவல்இல்லை என்று கட்டணம் வசூலித்தார்கள். மேலும் டிக்கெட் வசூலிக்க சிரமப்படும் நடத்துனர்கள் (இன்று நான் வந்த கும்மிடிப்பூண்டி-திருவள்ளுர் 172 பேருந்து உள்பட) வண்டி காலியாக இருந்தும் பல நிறுத்தங்களில் நிறுத்தாமல் வந்துவிட்டார்கள் கேட்டதற்கு எல்லாம் எங்களுக்கு தெரியும் என்ற அரசு ஊழியர் என்ற அகங்கார பதில் வேறு....

மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு இலவசபயண அட்டை விஷயத்தில் விரைந்து முடிவெடுத்து ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களின் நலனை காக்கும்படி வேண்டுகோள் விடுக்கிறேன். 

இதுபோன்ற விஷயங்களையும் ஊடகங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தமிழக அரசின் கவணத்திற்கு கொண்டு சென்றால் மாணவர்கள் பயன்அடைய மிகவும் வாய்ப்பாக இருக்கும். என்று வேண்டுகோள் வைக்கிறேன்.

23 July, 2012

நீங்கள் எந்த இனத்தைச் சார்ந்தவர்...!அடுக்கடுக்காய் தவறுகள் செய்துவிட்டு
அதையும் சரி என்று நியாயப்படுத்தும்
ஆறறிவு அற்பர்களை கண்டு மனம் கொதிக்கிறீர்களா..?


வகுத்து வைத்த விதிகள் எதையும் 
சட்டைசெய்யாதவரின் சட்டையை பிடித்து
இரு கன்னத்திலும் அறைய நினைக்கீறீர்களா..?


பாதியில் மரணமென்று தெரிந்தும்
‌பேருந்தில் படிக்கட்டில் பயணிக்கும் வம்பர்களை
வீதியில் வைத்து தண்டிக்க  துடிக்கிறீர்களா...?


கால்கடுக்க முறையாய் வரிசையில் நிற்போரிருக்க
அத்துமீறி குறுக்குவழியில் நுழைவோரை
பொருத்துக்கொள்ள சகியாமல் சபிக்கிறீர்களா...?


தன்கடமை செய்யவே லஞ்சம்  கேட்கும்
கயவர்களைக்கண்டு விட்டுவிடத்தோணாமல்
அவர்களை அப்படியே சுட்டுவிடத் தோன்றுகிறதா....?


நவநாகரீகம் என்ற போர்வையில்
தினம் நாட்டை பாழ்படுத்தும் பதர்களை
பார்க்க சகிக்காமல் மனவேதனை அடைகிறீர்களா..?


காவிநிறம் பூண்டு பக்தி என்ற வேடத்தில்
கடவுள்களையும் மீறி எழுச்சிப்பெறும்
இழிவானவர்களை கண்டு உமிழ்கிறீர்களா...?


புனிதம் நிறைந்த அரசியலை கலங்கடித்து
நல்லர்களாய் காட்டிக்கொள்ளும் நயவஞ்சகர்களை
வாய்ப்பு கிடைத்தால் சாக்கடையில் போட நினைக்கிறீர்களா...?


மனிதர்களாய் பிறந்துவிட்டதை மறந்து
பகுத்தறிவு வழியில் பயணிக்காத யாவரையும்
விலங்கினும் கீழானவர்கள் என்று நினைக்கிறீர்களா..!


சந்தேகம் வேண்டாம்.. தோழரே...
நீங்களும் நானும்
ஓர் இனம்தான்....
கவிதையின் வேர்... :
அநியாயங்களையும், அக்கிரமங்களையும் 
கண்டு உன் மனம் கொதித்தால் 
நீயும் என் தோழனே! 
–சேகுவேரா.

20 July, 2012

பேஸ்புக்கில் அடங்க மறுக்கும் மனோ..! அதற்கு இவைகள் சாட்சி..!

அன்பு நிறைந்த இஸ்லாமிய நண்பர்கள்  தங்களுடைய ரமலான் கடமையை சிறந்த முறையில் முடிக்க நான் மனமுவந்து வாழ்த்துகிறேன்...!

*********************************************************

"தாஜ்மஹால்" எங்கே இருக்கு சொல்லு பார்க்கலாம்...?

"ஆக்ரா'வுல..."

"வெரிகுட்.....சார்மினார் எங்கே இருக்கு சொல்லு பார்க்கலாம்...?"

"அதோ உங்க "பாக்கெட்டுல"....
*********************************************************
 கணவன் : ச்சீய்! காப்பியாடி இது? நாய்கூட இதை குடிக்காதுடி.

மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.

கணவன் : ????!!!!


*********************************************************
காதலன் : நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன்.

காதலி : அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா?

காதலன் : மெதுவா சொன்னதால அவங்களுக்கு கேட்கலை...

காதலி : !!!!

[[த்தூ இதெல்லாம் ஒரு பொழைப்பா]]
*********************************************************
 கல்யாண வீட்டில் வந்து, மணமேடையில் அமர்ந்திருக்கும் மாப்பிளையிடம் ட்ரீட் கெட்ட ச்சே கேட்ட அதே நண்பன்தான் இந்த பய....!

*********************************************************

அவர் போலி டாக்டர்னு எப்படி சொல்ற?

போன வாரம் அவர் கிட்ட போய் எனக்கு சுகர் இருக்கான்னு பாருங்க டாக்டர்னு சொன்னேன்.

அதுக்கு உங்க வீட்டு ரேஷன் கார்ட கொண்டு வந்தாதானே பார்த்து சொல்ல முடியும்னு சொல்றார்.

*********************************************************
கணவன் : அந்த கருப்பு நாய்க்கு சோறு வச்சியா???

மனைவி : ஆமாங்க.. ஏன் கேட்கிறீங்க???

கணவன் : இல்ல. அந்த நாய் தெருவோரமா செத்து கிடந்துச்சு.. அதான் கேட்டேன்..

[[செத்தான்டா சேகரு இன்னைக்கு]]
*********************************************************
(விமான நிலயத்தில்...)

வடிவேலு:சென்னையில் இருந்து மும்பை செல்ல எவ்வளவு நேரம் ஆகும்??

Receptionist :Plz one minute sir...

வடிவேலு:அடங்க் கொக்கமக்கா..என்ன speed..


*********************************************************
 ராஜபாட்டை ராஜா : பாம்பு கடிக்கு முதலுதவி என்ன தெரியுமா...? கடிவாய்க்கு கீழும் மேலும் அழுத்தமாக ஒரு கயிற்றால் கட்டு போடவேண்டும்.

மாணவன் : தொண்டையில பாம்பு கடிச்சாலும் இதே மாதிரி கட்டு போடலாமா சார்...?

ரா ராஜா : ???????????......ங்கே ங்கே ங்கே ங்கே ங்கே.....


*********************************************************
 கல்யாண வீட்டில் செருப்பை தொலைத்தவன்
எழுதிய கவிதை *********

"உள்ளே ஒரு ஜோடி சேர்ந்துவிட்டது"

"வெளியே ஒரு ஜோடி தொலைந்துவிட்டது"

*********************************************************

"சின்னவீடு"சுரேஷ் : டாக்டர், வெள்ளரிக்காய் சாப்பிட்டு பார்த்தேன், மருதாணி தடவி பார்த்தேன், ஏன் கண்ணுல விளக்கெண்ணெய் கூட தடவி பார்த்தேன், அப்போ கூட உடம்பு குளிர்ச்சியே ஆகலை...!

டாக்டர் : பேசாம ஃபிரிட்ஜ் உள்ளே போயி உட்கார்ந்து உள்பக்கமா பூட்டிக்குங்க...!

 
*********************************************************
இது மனோவின் இன்றைய பேஸ்புக் அலம்பல்கள்...!
இப்பசொல்லுங்க இந்த மனோவை என்ன செய்யலாம்...!

19 July, 2012

ஜெ,. அமைச்சரவை மாற்றம்.... காரணம் பின்னணி மற்றும் உண்மை


தமிழக சட்டமன்றத்தில் அதிமுக ஆட்சி என்றால் எதாவது ஒரு பரபரப்பு இருந்துக்கொண்டே இருக்கும்.  மந்திரி சபையில் இடம்பெற்றிருக்கும் அமைச்சர்கள் காலை எழுந்து தொலைக்காட்சியை  பார்த்துதான் நாம் இன்னும் அமைச்சர் பதவியில் இருக்கிறோம் என்பதை உறுபடுத்திக்கொள்ள வேண்டும். அப்படி ஒரு சூ‌ழல் அம்மா ஆட்சியில் இருக்கும்.

கடந்த ஆண்டு தொடர்மழையினால் பாதித்த பகுதிகளுக்கு சென்று நிவாரணப் பணிகளை கவனிக்க நவம்பர் முதல் வாரத்தில் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதை ஏற்று அமைச்சர்கள் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளுக்கு சென்று நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர். 

அந்த சமயத்தில், செந்தமிழன், என்.ஆர்.சிவபதி, எஸ்.பி. சண்முகநாதன், உதயகுமார், புத்தி சந்திரன், சண்முகவேலு, ஆகிய 6 அமைச்சர்களை முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக நீக்கினார்.

மாற்றப்பட்ட இவர்களுக்கு பதிலாக மாதவரம் மூர்த்தி, பரமக்குடி சுந்தர்ராஜன், கிணத்துக்கடவு தாமோதரன், சிவகாசி ராஜேந்திர பாலாஜி, நன்னிலம் காமராஜ், திருச்சி மேற்கு பரஞ்சோதி ஆகிய ஆறுபேரை அமைச்சரவையில் சேர்த்தார். 

ஆட்சி அமைத்த 6 மாதத்தில் அமைச்சரவையை 3 முறை ஜெயலலிதா மாற்றியமைத்தார். அமைச்சரவையில் இடம் பெற்று இருந்துபோன மரியம் பிச்சை விபத்தில் இறந்தார். அவருக்கு பதிலாக முகமது ஜான் அமைச்சராக நியமிக்கப்பட்டார். 

பிறகு சட்ட அமைச்சர் இசக்கி சுப்பையா திடீரென்று நீக்கப்பட்டார். அமைச்சர் கருப்பசாமி உடல்நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தபோது இலாகா மாற்றம் நடந்தது.

பின்பு வேளாண்மைத்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன், தகவல் தொழில் நுட்பத்துறைக்கு மாற்றப்பட்டார். 

எம்.சி.சம்பத் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறையில் இருந்து ஊரக தொழில் துறைக்கும், சுற்றுச்சூழல் அமைச்சர் சின்னையா கால்நடைத்துறைக்கும், கைத்தறித்துறை அமைச்சராக இருந்த பி.வி.ரமணன் சுற்றுச்சூழல் துறைக்கும் மாற்றப்பட்டனர். சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயத்திடம் இருந்த சத்துணவு திட்டம் மட்டும் சம்பத்துக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. 

பரஞ்சோதி உள்ளிட்ட ஆறு அமைச்சர்கள் பதவி ஏற்று ஒரு மாதம்தான் ஆகிய நிலையில் பரஞ்சோதி, செல்விராமஜெயம் ஆகியோர் தங்களுடைய பதவியை இழந்துள்ளனர்.


அந்த வரிசையில் தற்போது வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அமைச்சர் பதவி மற்றும் கட்சி பதவியில் இருந்து கூட நீக்கப்பட்டிருக்கிறார்.

யாரெல்லம் மாற்றப்படுவார் என்று யாருக்கும் தெரியாது. மாற்றப்பட்டதற்க்காக காரணம் பிண்ணனி மற்றும் உண்மை அந்த நபருக்கு கூட தெரியாமல் மறைக்கப்படும்.

என் இப்படி அடிக்கடி மாற்றுகிறார்கள் என்பதற்கான காரணம் ஒரு வேளை இப்படியிருக்குமோ என்று ஆய்ந்ததில் கிடைத்த தகவல்கள்..,

1. ஒரு அமைச்சர் குறைந்தது மாதம் ஒரு முறை மட்டுமே பேட்டி அளிக்க வேண்டும். அதுவும் ‌ஜெயா டிவிக்கு மட்டும்தான் பேட்டி கொடுக்க வேண்டும். குறிப்பாக சன் டிவிக்கு பேட்டி கெர்டுத்தால் உடனே நடவடிக்கைதான்.

2. அமைச்சர் கலந்துக்கொள்ளும் விழாக்களில் அவரை விட அம்மாவுக்குதான் அதிக ‌கட்-அவுட்டுக்கள் வைக்க வேண்டும். அதையும் மீறி அவ‌ருடைய பெயரில் அதிக கட்-அவுட்டுகள் வைக்க கூடாது.

3.   அம்மா கலந்துக்கொள்ளும் கூட்டங்களில், விழாக்களில் அம்மா சொல்ல கூடிய நேரத்தில்தான் வரவேண்டும். அப்படி முன்னதாகவோ அல்லது தாமதமாகவே வந்தால் மாற்றப்படலாம்.

4. விழாக்களில் பேசும்போது அம்மாவின் பார்வைக்கு சென்று வந்த நகல்களைத்தான் வாசிக்க வேண்டும். வேறு ஏதாவது வார்த்தை கூடுதலாக கலந்து பேசினால் கண்டிப்பாக நடவடிக்கைதான்.

5.  இலாக வாரியாக மாதாமாதம் வந்து சேரவேண்டி மாமூல் கண்டிப்பாக சொன்ன தேதி, நேரத்திற்குள் போயஸ் கார்டனுக்கோ, கொடநாடு பங்ளாவுக்கோ வந்து சேரவேண்டும் அப்படி சேரவில்லையென்றால் இலாகா மாற்றப்படும் அல்லது அமைச்சர் பதவியில் இருந்தே தூக்கப்படும்.

6. சட்டசபைக்குள் அம்மா அவர்கள் பார்த்தவுடன் பேச ஆரம்பிக்க வேண்டும், அவர்கள் திரும்பி பார்த்வுடன் முடித்துவிடவேண்டும். 

7. அம்மா அவர்கள் சட்டசபையில் பேசும்போது தேவையில்லாமல் கைதட்டகூடாது. அவர்கள் பேச்சை நிறுத்தி ஒரு நிமிடம் திரும்பி பார்ப்பார்கள் அப்பேர்து ஆரம்பித்து அவர்கள் போதும் என்று மறுபடியும் திரும்புவரை கைதட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.

8. தனது கட்டுப்பாட்டில் இருக்கும் இலாகாவில் முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியில் யார் இருந்தார்கள் என்று பார்த்து அவர்கள் ஏதாவது ஊழல் செய்தார்களா என்று கண்டறிந்து அவர்ளை சிறைக்கு அனுப்ப வேண்டும். அப்படி குறைந்தது மாவட்டத்துக்கு 20 பேரையாவது சிறைக்கு அனுப்ப வேண்டும் இந்த வேளையை செய்யாத அமைச்சர் கண்டிப்பாக மாற்றப்படலாம்.

9. எப்போதும் இதற்கு காரணம் முந்தைய மைனாரிட்டி திமுக அரசுதான் காரணம் என்று சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.

10. அம்மாவை வாழ்த்தி அடிக்கடி தன் பகுதிகளில் விளம்பரங்கள், விழாக்கள் நடத்திக்கொண்டே இருக்க வேண்டும்.

மேற்கண்ட நி‌பந்தனைகளில் ஒன்றில் இருந்துகூட யாராவது விலகினால் கண்டிப்பாக அந்த அமைச்சர் மாற்றப்பட்டு வேறு ஒருத்த நியமிக்க வாய்ப்பிருக்கிறது.

ஆகையால் அமைச்சர்களே பார்த்து நடந்துக்கங்க....


அடுத்த பதவிப்பறிப்பு யாருடையது என்று பொருத்திருந்து பார்ப்போம்....

18 July, 2012

இதற்கு என்ன சொல்லப்போகிறது பதிவுலகம்...!

வணக்கம் மக்களே...! அனைவரும் நலமா..!


பதிவுலகை விட்டு கொஞ்ச ஓய்வுக்கு பிறகு தற்போது திரும்பியிருக்கிறேன். ராஜி அக்கா மட்டும்தான் I CAME BACK - ன்னு பதிவு போடுவாங்களா..!  நாங்களும் அப்படி போடுவோம்ல என்று தெரியப்படுத்தத்தான் இந்த பதிவு. நானும் திரும்பியாச்சிங்க...


இந்த படத்தைப்பாருங்க அப்படி என்னதான் மேஜிக் இருக்குன்னு தெரியல.. அசையறமாதிரியே தெரியுது ஒரு வேளை... நான் கண்டாக்டரை பார்க்கனுமா இல்லை எல்லாருக்கும் இப்படித்தான் தெரியுதா ?  எல்லோருக்கும் இந்த படம் அசையறமாதிரி இருந்தா நான் பயப்படவேண்டியதில்லை...


பார்க்கிறேன் பதிவுலகம் என்ன சொல்லபோகிறது என்று..? ( அம்மாடி தலைப்பை ஒரு வழியா பதிவுல போட்டாச்சி....)
....

14 July, 2012

TNTET- I & II Key, TNTET Answers / ஆசிரியர் தகுதித் தேர்வு விடைகள்பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு கடந்த 12-07-2012 அன்று நடைபெற்றது. 

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி சட்டத்தின்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே தனியார் பள்ளிகள் உள்பட எந்த பள்ளியிலும் ஆசிரியராகப் பணிபுரிய முடியும். 

தமிழகத்தில் 1,027 மையங்களில் நடந்த இந்த தகுதித் தேர்வில் 6.56 லட்சம் பேர் எழுதினார்கள். 

தேர்வு மிகவும் கடினமாக இருந்தது என்று தேர்வு எழுதிய அனைத்து தரப்பினரும் கவலையடைந்தார்கள். அதற்கு தேர்வுவாரியம் 105% தேர்ச்சி அடைந்தாலே போதும் என்று கூறியிருக்கிறது. 


இந்த தேர்வுக்கான விடைகளை தேர்வு வாரியம் இன்னும் ஒருரிரு வாரங்களில் வெளியிடுவதாக அறிவித்திருக்கிறது. 

அப்போலோ ஸ்டெடி சென்டர் இதற்காக விடைகளை தற்போது வெளியிட்டுள்ளது அதை பார்த்து தங்களுடைய மதிப்பெண்னை தெரிந்துக் கொள்ளுங்கள்.


தவறான பதில்கள் இருந்தால் தெரியப்படுத்துங்கள். 

03 July, 2012

எல்லாம்... அவளுக்கு தெரியாமலே..!


 
சொல்லத் தெரிந்தாலும்
சொல்ல முடிவதில்லை
அவளுக்கான காதலை...!

ழுத  தெரிந்தாலும்
எழுத முடிவதில்லை
அவளுடைய அழகை..!

றைக்கத் தெரிந்தாலும்
மறைக்க முடியவில்லை
அவளுடைய நினைவுகளை..!

யினும்...
காதல் தெரியவில்லையென்றாலும்
காதலிக்க முடிகிறது
அவளுக்குத் தெரியாமலே...! 


Related Posts Plugin for WordPress, Blogger...