கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

31 July, 2018

கருணாநிதியின் காலத்தால் அழிக்க முடியாத வசனங்கள்.. 1


தமிழ்த் திரையுலகில் பல அடுக்கு மொழி வசனங்களாலும், அதிரடியான வார்த்தைகளாலும் பல வெற்றிப் படங்களை தனது கதை வசனத்தில் வெளிக் கொணர்ந்தவர் திமுக தலைவர் கருணாநிதி. இன்றளவும் இவரின் பராசக்தி வசனங்கள் மக்களிடம் மிகுந்த தாக்கத்தை எற்படுத்துபவை.

சிறுவயது முதலே மொழிப்பற்று அதிகம் கொண்ட கருணாநிதி, கவிதைகள், நாவல்கள் மற்றும் மடல்களை எழுதி, தனது எழுத்துத் திறமையை வளர்த்து வந்தார். அதனை அடுத்தக்கட்டத்திற்குக் கொண்டுசென்ற அவர், நாடகங்களுக்கும் படங்களுக்கும் திரைக்கதைகளை எழுதினார்.தமிழ் சினிமாவில் எழுத்து மொழியே உரையாடலாக இருந்தது.. பாமர மக்களின், எளியவர்களின் வாழ்க்கை பேசாப் பொருளாக இருந்தது.

எல்லாப் படங்களிலும் சமூக கருத்துகளைப் பதிவு செய்திருந்தாலும், தற்கால சமூக பிரச்சனைகள், மூட நம்பிக்கைகள் என அனைத்தையும் முன்னிறுத்தியது சிவாஜி கணேஷ் நடிப்பில் வெளியான பராசக்தி படம்தான் என்றால் மிகையாகாது. சினிமாத் துறையில் அவர் செய்யாத காரியங்களே இல்லை என்று கூறலாம். அவர் படங்களுக்கு கதை, திரைக்கதை, பாடல்கள், வசனங்கள் என அனைத்திலும் தனது சீரிய எழுத்துகளால் கர்ஜித்தவர் கருணாநிதி. இப்படி தமிழ் சினிமாவில் மறக்க முடியாத, மறுக்க முடியாத வசனங்களை வலம் வர செய்த கலைஞரின் காலத்தால் அழிக்க முடியாத வசனங்களின் சிறப்பு தொகுப்பு.

பராசக்தி

எல்லாப் படங்களிலும் சமூக கருத்துகளைப் பதிவு செய்திருந்தாலும், தற்கால சமூக பிரச்சனைகள், மூட நம்பிக்கைகள் என அனைத்தையும் முன்னிறுத்தியது சிவாஜி கணேஷ் நடிப்பில் வெளியான பராசக்தி (1952) படம்தான் என்றால் மிகையாகாது. 

மனோகரா

அரசர்: மனோகரா! உன்னை எதற்காக அழைத்திருக்கிறேன் தெரியுமா?

மனோகரன்: திருத்திக் கொள்ளுங்கள் அரசே! அழைத்து வரவில்லை என்னை. இழுத்துவரச் செய்திருக்கிறீர்கள்.

அரசர்: என் கட்டளையைத் தெரிந்து கொண்டிருப்பாய் நீ.

மனோகரன்: கட்டளையா இது? கரை காண முடியாத ஆசை! பொன்னும், மணியும், மின்னும் வைரமும் பூட்டி மகிழ்ந்து கண்ணே முத்தே என்றெல்லாம் குலவிக் கொஞ்சி, தந்தத்தால் ஆன கட்டிலிலே, சந்தனத் தொட்டிலிலே, `வீரனே! என் விழி நிறைந்தவனே!' என்று யாரைச் சீராட்டி பாராட்டினீர்களோ அவனை அந்த மனோகரனை சங்கிலியால் பிணைத்து, சபை நடுவே நிறுத்தி சந்தோஷம் கொண்டாட வேண்டும் என்ற தங்கள் தணியாத ஆசைக்குப் பெயர் கட்டளையா தந்தையே?

இப்படியாய் அனல் பறந்த வசனங்கள்... 
பூம்புகார்ராஜா ராணி


26 July, 2018

உயிர் பயம் பொதுதானே...!

காலை நேர
பயிற்சிக்காக
நடந்துக்கொண்டிருந்தேன்
சாலையேரம்...


மரச்செடி நட
தோண்டப்பட்டிருந்த
குழிவொன்றை
எட்டிப்பார்த்தேன்
ஏதேச்சையாக...


முன்தினம் பேய்ந்த
கோடைமழை
தேங்கிக்கிடந்தது
கொஞ்சம் குழியினுள்...


அந்த மூன்றடி
குழியினுள்
தவறிவிழுந்து
வட்டத்துக்குள்ளே
வட்டமடித்துக்கொண்டிருந்தது...

ஓரடி 
நீளமுள்ள
குட்டி பாம்பு ஒன்று...


எப்படி 
வெளியேறுவது
என்ற தவிப்பில் 
பாம்பும்...

எப்படி 
விழுந்திருக்கும்
என்ற தர்க்கத்தில் 
நானும்...


பயத்தோடு
அமைதியாய் 
சந்தித்துக்கொண்டது
இருவரது பார்வைகளும்...


அருகில் கிடந்த 
கொம்பெடுத்து 
பாம்பு வெளியேற
சாத்தி வைக்கிறேன்...

தாக்கவரும் 
ஆயுதமென
தலைதெறிக்க 
ஓடுகிறது
வட்டத்திற்குள்ளே..


மேலே வரும்போது
தீண்டிவிடுமோ என்ற பயத்தில்

நகர்கிறேன்
என் வழியை நோக்கி...

 
வெளியில் சென்றால்
என்னாகுமோ
என்று எண்ணி
தொட மறுக்கிறது 
கொம்பின் நுனியை...!


இருவருக்குமான
உயிர்வாழ்தலின்
நீளத்தை

நீட்டிக்க வைக்கிறது
பயம்...!
எல்லா 
உயிர்களுக்கும்
பொதுதானே
உயிர் பயம்....!( நன்றி...
வருகைக்கும்... வாசித்தமைக்கும்...)

21 July, 2018

இதுதாங்க மீடியா... இப்பவும் இருக்காங்களே..!


*ஊடகங்கள் சமுதாயத்திற்கு எப்படிக் கடமையாற்ற வேண்டும் --ஓர் எடுத்துக்காட்டு.*


*தென்கச்சி கோ சாமிநாதன்* அவர்கள் சொன்னது.....

நான் திருநெல்வேலி வானொலி நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம்.

ஒரு நாள் மாலை வேளையில் ஒரு தொலைபேசி அழைப்பு.

“ஹலோ… ரேடியோ ஸ்டேஷனா?’

“ஆமாங்க.’

“நான் டீன் பேசறேன். ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியிலிருந்து… ஒரு முக்கியமான விஷயம்.’

“சொல்லுங்க டாக்டர்.’

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு ஆக்சிடெண்ட் நடந்துபோச்சி!’

“எங்கே டாக்டர்?’

“பாளையங்கோட்டை ரயில்வே கிராசிங் தாண்டி… கொஞ்ச தூரத்துலே…’

“பெரிய விபத்தா டாக்டர்?’

“ஆமாம்… வடநாட்டு சுற்றுலா பஸ் ஒன்றும் ஒரு லாரியும் மோதிக்கிட்டதுலே, டிரைவர் உள்பட கொஞ்ச பேர் அந்த இடத்துலேயே இறந்துட்டாங்க. அடிபட்டு உயிருக்குப் போராடிக் கிட்டிருக்கிறவங்களையெல்லாம் இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்காங்க. இந்த நேரத்துலே உங்களாலே ஒரு உதவி!’

“சொல்லுங்க டாக்டர்… எங்களாலே முடிஞ்சது எதுவா இருந்தாலும் செய்யிறோம்.

“வேறே ஒண்ணுமில்லே. இப்ப இங்கே எங்ககிட்டே வந்து சேர்ந்திருக்கறவங்களுக்கெல்லாம் உடனடியா ரத்தம் செலுத்தியாகணும். அப்படி செஞ்சா அவங்களையெல்லாம் காப்பாத்திப்புடலாம்.’

“சரி.’

“ஆனா போதுமான ரத்தம் இப்ப பிளட் பாங்க்ல இல்லே. பொதுமக்கள் யாராவது வந்து ரத்தம் கொடுத்தா இவங்கள்லாம் பிழைச்சுக்குவாங்க. இப்ப நான் உங்ககிட்டே கேட்டுக்கறது என்னன்னா, உடனடியா இது சம்பந்தமா நீங்க ரேடியோவுல ஒரு அறிவிப்பு கொடுக்க முடியுமா?’

“இப்பவே நாங்க அதுக்கு ஏற்பாடு செய்யறோம். நீங்க மற்ற வேலைகளைக் கவனிங்க.’வானொலி நண்பர்கள் உடனே செயலில் இறங்கினார்கள். அந்த சமயத்தில் திரைப்பட இசை ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தது. அவசரம் அவசரமாக அறிவிப்பு ஒன்று எழுதப்பட்டது நாலு வரிகளில்.

“நேயர்களே! ஒரு முக்கிய அறிவிப்பு. சற்று முன் நேர்ந்த ஒரு விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற ரத்தம் தேவைப்படுகிறது. ரத்ததானம் செய்ய விரும்புகிறவர்கள் உடனடியாக பாளையங் கோட்டை மருத்துவமனைக்கு விரைந்து செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.’

அறிவிப்பாளர் தூத்துக்குடி ராஜசேகரன், ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாடலை நிறுத்தி இடையே அந்த அறிவிப்பை வாசிக்கிறார். ஒரு முறைக்கு இருமுறையாக இந்த அறிவிப்பு வாசிக்கப்படுகிறது. மறுபடியும் படப்பாடல்கள் தொடர்கின்றன. ஒரு இருபது நிமிடங்கள் கடந்திருக்கும். இன்னும் இரண்டு பாடல்களை ஒலிபரப்ப நேரம் இருந்தது. அந்த சமயத்தில் மறுபடியும் தொலைபேசி அழைப்பு.

“ஹலோ!’

“”சார்… மறுபடியும் ஹை கிரவுண்ட் ஆஸ்பத்திரியில் இருந்துதான் பேசறோம். நீங்க உடனே இன்னொரு அறிவிப்பு செய்யணும்.’

“என்ன சொல்லணும்… சொல்லுங்க டாக்டர்.’

“தயவு செய்து மேற்கொண்டு யாரும் ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு ரத்ததானம் செய்ய வர வேண்டாம்னு சொல்லணும்.’

“என்ன ஆச்சு டாக்டர்?’

“ஏகப்பட்ட பேர் ரேடியோ அறிவிப்பைக் கேட்டுட்டு ரத்தம் கொடுக்க இங்கே வந்துட்டாங்க… கூட்டத்தை எங்களாலே சமாளிக்க முடியலே. அவ்வளவு பேர்கிட்டே ரத்தம் கலெக்ட் பண்ணவும் இப்ப இங்கே வசதி இல்லே. ப்ளீஸ்…!’

மறுபடியும் வானொலி அறிவிக்கிறது.

“இனி யாரும் அங்கே செல்லத் தேவையில்லை என்பதை நன்றியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

மறுநாள் மருத்துவமனைக்குப் போகிறோம். படுக்கையில் இருந்தவர்கள் பாசத்தோடு எங்களைப் பார்க்கிறார்கள். பாஷை ஒரு தடையாக இல்லை.

"ஊடகங்கள் சமுதாயத்திற்கு எப்படிக் கடமையாற்ற வேண்டும் என்று கேட்டீர்கள். இந்த உண்மை நிகழ்ச்சி அதற்கு ஓர் எடுத்துக்காட்டு.”

*தென்கச்சி கோ சாமிநாதன்*-
Related Posts Plugin for WordPress, Blogger...