கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

30 November, 2010

பச்சைக்கிளி


சுரைக்காய் பிஞ்சின்
தலையில்
மிளகாய்ப் பழத்தைச்
செருகி
இடையில்
மல்லிகை இலைகள்
சிறகாய்ப்
பின்புறம் தாழை மடலை
வைத்தால் பச்சைக் கிளியே
உன்போல் படைப்பு!
உன்போல் படைப்பு!

வட்டத் தலையே
சிவப்பு மூக்கே!
சின்ன இறகே!
நீண்ட வாலே!
கண்ணற் கிளியே
சொன்னது
பிசகா?
வர்ணனை கேட்டு
வாழ்த்த மறுப்பாய்
புகழ்ச்சொல் கேட்டும்
போற்றிட மாட்டாய்!

காரணம் அறிவேன்
சின்னக் கிளியே!
கூண்டில் உன்னைப்
போட்டதனாலே
தூண்டிற் புழுவாய்த்
துடிக்கிறாய் நீயும்!

சிறையில் உன்னை
அடைத்து மகிழ்ந்தேன்!
இன்று தெரிந்தேன்
சிறைமிகக் கொடிது!
சிறைமிகக் கொடிது!
மன்னித் திடுவாய்!
மன்னித் திடுவாய்!
பொன்மொழிப் பாவாய்
மன்னித்திடுவாய்!

என்சிறை முடிந்ததும்
உன்சிறை உடைப்பேன்!
சிறையின் கஷ்டம்
சிறையால் உணர்ந்தேன்!
அடிமைப்புள்ளே!
அழகுக் கிள்ளாய்!
அனுபவம் பெற்றேன்!
அனுபவம் பெற்றேன்!

வந்ததும் தருவேன்
விடுதலை வாழ்வு!
பறப்பாய், பறப்பாய்
உயரப் பறப்பாய்!
கட்டிய கால்கள்
விடுபடும்; உடனே
எட்டிய மட்டும்
ஏறிப் பறப்பாய்!
 
எழில் நிறப் பெண்ணே
எங்கும் பறப்பாய்!
கூண்டில் உன்னை
அடைத்தேன் கிளியே!
மன்னித்து விடுக!
கூண்டின் கஷ்டம்
புரிந்து கொண்டேன்!
கூண்டின் கஷ்டம்
புரிந்துகொண்டதால்
கூண்டுக்கிளியுனைத்
திறந்துவிடுவேன்!
ஆனால் கிளியே
கூண்டின் கஷ்டம்
புரிந்தோர் இங்கு
ஆண்டிட வந்தார்
மாண்டிட எம்மைக்
கூண்டினில் போட்டார்!
 
ஏனோ கிளியே!
ஏனோ கிளியே!
பதிலும் சொல்வாய்
பச்சைக் கிளியே!
உன்னை நான்
அடைத்ததால்
என்னை அடைத்தார்
என்றே சொல்வாய்
நன்று கிளியே;

நீ யாரை அடைத்ததால்
நானுன்னை
அடைத்தேனோ?


(1953 ல் சிறையில் எழுதியது)

கி, கீ, கு, கூ வரிசை பழமொழிகள்

* கிடந்த கிடைக்கு நடந்த நடை மேல்!
* கிட்டாதாயின் வெட்டென மற
* கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.
* கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?
* கிரீடத்தை பிடிக்க, கிராமத்தை பிடி
* கீர்த்தியால் பசி தீருமா?
* கீறி ஆற்றினால் புண் ஆறும்.
* குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா?
* குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை.
* குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.
* குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும்.
* குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?
* குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது.
* குட்டுப் பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படவேண்டும்.
* குணத்தை மாற்றக் குருவில்லை.
* குணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை.
* குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று.
* குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.
* குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.
* குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.
* குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.
* குப்பை உயரும் கோபுரம் தாழும்.
* குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
* கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.
* குரங்கின் கைப் பூமாலை.
* குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.
* குரங்கிடம் மூத்திரம் கேட்டால் அது கொப்புக்கு கொப்புத் தாவுமாம்
* குரு இலார்க்கு வித்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.
* குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன?
* குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
* குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?
* குரைக்கிற நாய் கடிக்காது;
* குலம் குப்பையிலே, பணம் பந்தியிலே
* குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி.
* குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.
* குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.
* குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது.
* குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்றும், குறும்பியுள்ள காது தினவு கொள்ளும்
* குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
* கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.
* கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?
* கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம்.
* கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.
* கூழும் சிந்தல, கோப்பையும் உடையல
* கூத்தாடி கிழக்கே பார்த்தான் , கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.

மதுவும் மறதியும்“இன்று முதல் நான் ஒரு புது மனிதன்!”
 
“எதைவச்சு அப்படிச் சொல்றீங்க?”
 
“குடிப் பழக்கத்தை நிறுத்தப் போறேன்!”
 
“ரொம்ப நல்ல காரியம்... மதுபழக்கம் மறதியைக்கூட உண்டு பண்ணுதுன்னு இப்ப கண்டு பிடிச்சிருக்காங்க!”
 
“எங்கே”
 
“இங்கிலாந்துலே! அங்‌கே... மாணவர்களை மூணு பிரிவாப் பிரிச்சிக்கிட்டு... ஒரு புதிர்ப்போட்டி நடத்தினாங்களாம்!”
 
“எப்படி?”
 
”முதல் பிரிவினர்... அன்றைக்கு இர‌வே கொஞ்சம் மது அருந்த அனுமதிக்கப்பட்டாங்களாம்... இரண்டாம் பிரிவினர்... அடுத்த நாள் கழிச்சி கொஞ்சம் மது அருந்த அனுமதிக்கப்பட்டாங்களாம்... மூன்றாம் பிரிவினர்... மது அருந்தவில்லை! அதன் பிறகு அந்தப் புதிர் பற்றி அவங்ககிட்டே கேட்டுப் பார்த்தாங்களாம்!”
 
“என்ன ஆச்சி?”
 
“முதல் பிரிவு மாணவருக்கு நினைவு இல்லை... இரண்டாம் பிரிவு மாணவருக்கு அரைகுறை நினைவுதான் இருந்ததாம்!  மூன்றாம் பிரிவினர்தான் திறமையாப் பதில் சொன்னாங்களாம்!”

“பரவாயில்லையே!”
 
“அதனாலே... நீங்க  முடிவு செஞ்சப்படி எப்படியாவது கஷ்டப்பட்டு அந்த பழக்கத்தை விட்டுடுங்க...!”
 
“மதுப் பழக்கத்தை விடறது அப்படி ஒண்ணும் பெரிய கடினமான காரியம் இல்லே...!”
 
“அப்படியா ‌சொல்றீங்க?”
 
“ஆமாங்க... நா‌னே ஏற்கன‌வே அந்தப் பழக்கத்தை பதினைஞ்சு தடவை விட்டிருக்கேனே!..


நன்றி தென்கச்சி கோ. சுவாமிநாதன்

29 November, 2010

கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன்


வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பது கிராமிய மக்கள் மத்தியிலும் வெகுகாலமாகப் புழங்கும் ஓர் அற்புதமான அனுபவப் பழமொழியாகும்.
மனிதர்களிடம் உள்ள நகைச்சுவை உணர்வு (Sense of Humour) என்பது அவர்களை நீண்ட காலம் வாழ வைக்கும்; அவர்களை மட்டுமல்ல, அவர்களுடன் பழகுபவர்களிடமும்கூட இதன் தாக்கம் ஏற்பட்டு அவர்களது வாழ்வும் நோயற்ற வாழ்வாக அமையும்.

கலைவாணர் நகைச்சுவை அரசர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் கலைத்துறையில் நாடகம், சினிமா போன்ற துறைகளில் எளிதில் காணமுடியாத கொள்கை வைரமாகும்!

அவரது நகைச்சுவைக் காட்சிகள் என்பது வெறும் பொழுதுபோக்குக்காக மட்டும் இராது; மாறாக, வாழ்வியலை மற்றவர்களுக்கு ஒரு சில நொடிகளில் பதிய வைக்கும் ஆற்றலை உள்ளடக்கியவையாகும்!
அவர் மறைந்து சுமார் 50 ஆண்டுகளுக்குமேல் ஆன போதிலும்கூட, கலையுலகில் அவர் சாகா சரித்திரமாக வாழ்ந்து வருகிறார்கள்!
அவரது வாழ்க்கையில் பல்வேறு பழிகளுக்கு ஆளாகி, செய்யாத குற்றத்திற்கு ஜென்ம தண்டனை என்பதை உள்ளபடி ஏற்றும்கூட, சிறையேகிய பின்னரும் உறுதி குலையாது, உண்மையை நிலைநாட்டி விடுதலையாகி வந்தும் தனது தொண்டறத்தைத் தொடர்ந்தவர்!
தனது பொருளையெல்லாம் தாராளமாக வாரி வழங்கிய ஒப்புவமை இல்லாத வள்ளல் அவர்!
எந்தெந்த வள்ளல்களைப்பற்றியெல்லாம் படிக்கிறோம்; ஆனால், நம் கண்ணெதிரே வாழ்ந்த கலைவாணர் அவர்கள் தமது பொருள், செல்வத்தை ஊருணி நீராக மக்களுக்குத் தந்த மகத்தான உண்மை வள்ளல் ஆவார்கள்!

வாழ்க்கைச் சுருக்கம்

      நாகர்‌கோயில் அருகே ஒழுகினசேரியில் 1908ம் ஆண்டு நவம்பர் ஆம் நாள் கலைவாணர் பிறந்தார். சாதாரண வில்லுப்பாட்டுபக் கலைஞராக தனது கலையுலக வாழ்வை துவங்கினார். பின்னர் நாடக துறையில் நுழைந்தார். சொந்தமாக நாடக கம்பெனியையும் நடத்தினார். அப்போது தமிழகத்தில் திரைப்படத்துறை பிரபலமடைந்தது. அதிலும் நுழைந்து தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும், படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். யார் மனதையும் புண்படுத்தாமல், நகைச்சுவை மூலமாக கருத்துகளை பரப்பினார். ஏறத்தாழ 150 படங்களில் நடித்தார்
.
     இவரது மனைவி மதுரமும் பிரபலமான நடிகை என்பதால் இருவரும் இணைந்தே பல படங்களில் நடித்தனர். நகைச்சுவையை சினிமா காட்சிகளாக மட்டுமின்றி பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தவர். சொந்த குரலில் பல பாடல்களை பாடியுள்ளார். பிறர் மனதைப் புண்படுத்ததாமல் பண்படுத்தும் முறையில் நகைச்சுவையைக் கையாளும் கலை உணர்வு மிக்கவர். பழங்கலைகளின் பண்பு கெடாமல் அவற்றைப் புதுமைப் படுத்தி மக்கள் மன்றத்திற்குத் தந்தவர். அவர் நடத்திய கிந்தனார் கதாகாலட்சேபமும், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவைகளும் இதற்குச் சான்று.

     கருத்துகள் கருத்துக்கள் நாட்டில் பரவ வேண்டும் என்பதில் அக்கறை, ஆர்வம் கொண்டவர். ஏறத்தாழ 150 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர் சீர்திருத்தக் கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர். கலையுலகில் கருத்துக்களை வாரி வழங்கியது போல் தமது வாழ்க்கையிலும் ஆயிரக் கணக்கானவர்களுக்கு பணத்தை வாரி வாரி வழங்கியவர்.

    அண்ணல் காநதியடிகளிடமும் காந்திய வழிகளிலும் மிகுந்த பற்று கொண்டவர். காந்தியடிகளின் மறைவுக்குப் பினனர், அவரது நினைவைப் போற்றும் வகையில், ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் தமது சொந்தப் பணத்தைச் செலவிட்டு தமது ஊரான அண்ணல் காந்தியடிகளுக்கு நினைவுத்தூண் எழுப்பியவர்.

கொலைக் குற்றச்சாட்டு

    அப்போது பிரபல கதாநாயகனாக இருந்த தியாகராஜ பாகவதருடன் ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். இது இவரது கலை பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்தியா விடுதலை பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன் தான் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டார். ஏறத்தாழ 30 மாதங்கள் சிறைவாழ்க்கைக்கு பின்னர் விடுதலை பெற்ற கலைவாணர் மீண்டும் படங்களில் நடிக்க துவங்கினார். எனினும் வழக்குகளிலேயே அவரது சொத்தில் பெரும்பகுதி கரைந்திருந்தது.

இவர் நடித்த பிரபலமான திரைப்படங்கள்

 • அம்பிகாபதி
 • மதுரை வீரன்
 • நல்லதம்பி

இவர் இயக்கிய படங்கள்

 • பணம்
 • மணமகள்

இவர் பாடிய பாடல்கள்

 • ஜெயிலிக்குப் போய் வந்த (பைத்தியக்காரன்)
 • பணக்காரர் தேடுகின்ற (பைத்தியக்காரன்)
 • ஆசையாக பேசிப் பேசி (பைத்தியக்காரன்)
 • ஒண்ணுலேயிருந்து (முதல்தேதி)
 • இடுக்கண் வருங்கால் (முதல்தேதி)
 • சங்கரியே காளியம்மன் (ரங்கோன் ராதா)
 • ஆராட்டமுடன் வாராய் (சிவகவி)
 • காட்டுக்குள்ளே (ஆர்ய மாலா)
 • ஒரு ஏகாலியைப் (ஆர்ய மாலா)
 • ஆரவல்லியே (ஆர்ய மாலா)
 • கண்ணா கமலக் கண்ணா (கண்ணகி)
 • கண்ணனெந்தன் (கண்ணகி)
 • இருக்கிறது பார் கீழே (மங்கையற்கரசி)
 • கண்ணே உன்னால் (அம்பிகாபதி)
 • சந்திர சூரியர் (அம்பிகாபதி)
 • தீனா...மூனா...கானா...(பணம்)
 • உன்னருளால் (ரத்னமாலா)
 • என் சாண் உடம்பில் (ரத்னமாலா)
 • சிரிப்பு இதன் சிறப்பை (ராஜா ராணி)
 • நாலுக் கால் குதிரை (ஆசை)
 • தாலி பொண்ணுக்கு வேலி (ஆசை)
 • சங்கரியே காளியம்மா (நன்னம்பிக்கை)
 • வாதம் வம்பு பண்ண (டாக்டர் சாவித்திரி)]
 • காசிக்கு போனா கருவுண்டாகுமென்ற (டாக்டர் சாவித்திரி)
 • கிந்தன் சரித்திரமே (நல்ல தம்பி)
 • ஏண்டிக் கழுதை (உத்தமபுத்திரன்)
 • தளுக்கான வால வயசு (உத்தமபுத்திரன்)
 • விடுதியில் மேய்திடுவோம் (ஜகதலப்ரதாபன்)
 • பெண்ணுலகிலே பெருமை (கிருஷ்ணபக்தி)
 • சங்கர சங்கர சம்போ (கிருஷ்ணபக்தி)
 • நித்தமும் ஆனந்தமே (பவளக்கொடி)
 • விஜய காண்டிப வீரா (பவளக்கொடி)
 • அன்னம் வாங்கலையோ (பவளக்கொடி)
 • இவனாலே ஓயாத தொல்லை (பவளக்கொடி)
 • சொந்தமாக நெனச்சு (வனசுந்தரி)
 • ஊன்னு ஒரு வார்த்தை (மனோன்மணி)
 • இன்னிக்கு காலையிலே (சகுந்தலை)
 • வெகுதூரக்கடல் தாண்டி (சகுந்தலை)
 • நல்ல பெண்மணி (மணமகள்)
 • ஆயிரத்திதொள்ளாயிரத்தி (மணமகள்)
 • சுதந்திரம் வந்ததுண்ணு (மணமகள்)
 • குடி கெடுத்த குடியொழிஞ்சுது (நல்லதம்பி)
 • மழையில்ல சீமையில் (தக்ஷயக்ஞம்)
 • சிவானந்த ரஸம் (தக்ஷயக்ஞம்)
 • இருவரும் ஒன்றாய் (தக்ஷயக்ஞம்)
 • சோனா இல்லன்னா (லைலா மஜ்னு)
 • சும்மா இருக்காதுங்க (நல்லகாலம்)

மறைவு

1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30  ஆம் தேதி தனது 49-வது வயதில் கலைவாணர் மறைந்தார்.

கலைவாணர் அரங்கம்

தமிழ்நாடு அரசு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நினைவாக சென்னையில் உள்ள அரசு அரங்கத்திற்கு கலைவாணர் அரங்கம் என பெயர் சூட்டியுள்ளது. இந்த கலைவாணர் அரங்கம் 1035 இருக்கைகளுடன் குளிர் சாதன வசதியுடன் அரங்கம் விழாக்களுக்கும் பொது நிகழ்ச்சிகளுக்கும் வாடகைக்கு விடப்படுகின்றது. தற்போது அது இடிக்கப்பட்டு தமிழக அரசு சார்பில் புதிய கட்டுமான பணிகள் நடைப்பெற்று வருகிறது,

வெங்காயத்தின் மருத்துவகுணங்கள்


வெங்காயம் இல்லாமல் இன்று சிற்றுண்டியோ, குழம்பு வகைகளோ, காரப் பலகார வகைகளோ செய்வதைப் பற்றி யோசிக்கவே முடியாது.

குழம்புக்கு, மற்ற பலகாரங்களுக்கு மணமூட்டுவதற்காகவும், தாளிக்க வேண்டுமானாலும் வெங்காயத்தின் உதவிதான் தேவை.

சிலவகை உணவுக்கு ருசி சேர்ப்பதே வெங்காயம்தான்.

வெங்காய சாம்பாரின் ருசியறியாத மக்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியுமா? வெங்காய காரக் குழம்பின் சுவைக்கு நிகர் ஏது?

வெங்காய வடை, வெங்காய தோசை, வெங்காய ரவா தோசை, வெங்காய சட்டினி, தயிர்ப் பச்சடி என பட்டியல் போடத் தொடங்கினால் அந்தப் பட்டியலே ஒரு முழு நூலாகிவிடும்.

வெங்காயம் வெறும் உணவுப் பண்டமாக மட்டுமின்றி, அற்புதமான மருத்துவ ஆற்றல் படைத்த ஒரு பண்டமாகவும் இருக்கிறது என்ற உண்மையை மிகவும் தொன்மைக் காலத்திலேயே நமது நாட்டு மக்கள் அறிந்திருந்தார்கள் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. வெங்காயத்தின் தாயகம் தமிழகமோ அல்லது பாரத நாட்டின் பிற மாநிலங்களோ அல்ல. எகிப்து நாடு.

உலகிலேயே முதன் முதலாக எகிப்து நாட்டு மக்கள்தான் வெங்காயத்தைச் சரியாகவும், அதிகமாகவும் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

எகிப்திய மக்கள் அந்நாளில் வெங்காயத்தை தெய்வீக அம்சம் பொருந்தியதாகக் கருதி வந்துள்ளனர். பக்தி பூர்வமாகச் செய்யப்படும் பெரிய பூஜைகளின்போது வெங்காயமும், வெள்ளைப் பூண்டும் பூசனைக்குரிய மூர்த்திகள் போன்ற மதிப்புடன் மரியாதையுடன் பூஜையில் இடம் பெறுவது வழக்கமாம்.

பண்டைய எகிப்திய நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரிக்கப்படும்போது வாதியும், பிரதிவாதியும் வெங்காயத்தின் மீது சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொள்ளுமாறு கோரப்பட்டனராம். அத்தனை உயர்ந்த இடம் அதற்குத் தரப்பட்டிருந்தது.

பச்சையாகவே வெங்காயம் சாப்பிடுங்கள்...

வெங்காயத்தில் வைட்டமின் ‘சி’ சத்து மிகவும் அதிகமாக உண்டு. குறிப்பாக பச்சை வெங்காயத்தில் இந்தச் சத்து அதிகமாக உண்டு.

பெரும்பாலும் வெங்காயத்தை பச்சையாக உண்ணுவதன் மூலமே அதிலுள்ள சத்துக்களை முழுமையாகப் பெற முடியும். பச்சை வெங்காயத்திலுள்ள கந்தக சத்து சிலருக்கு ஒத்து வராது. அப்படிப்பட்டவர்கள் பிஞ்சு வெங்காயமாகப் பார்த்துச் சாப்பிடலாம். முற்றின வெங்காயமாக இருந்தால் வேக வைத்துச் சாப்பிடலாம்.

உடல் பருமனைக் குறைக்க....
வெங்காயத்தில் கொழுப்புச் சத்து மிக மிகக் குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக்கொள்ள விரும்புவோர் உணவில் வெங்காயத்தைத் தாராளமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அழகாக மாற உதவும்...
இரத்த விருத்திக்கும் இரத்த சுத்தத்திற்கும் வெங்காயம் மிகவும் உதவிகரமாக இருக்கிறது. அதனால் உடல் தேஜஸ் ஏற்பட்டு அழகாகிறது. உணவோடு வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்ளும்போது அந்த உணவு வெகு எளிதில் ஜீரணமாக வெங்காயம் உதவுகிறது.

உஷ்ணக் கடுப்பு அகல
பல்வேறு காரணங்களால் உஷ்ணம் அதிகரிக்கும்போது வெங்காயம் உடல் உஷ்ணத்தைச் சமனப்படுத்துகிறது. நாடித் துடிப்பைச் சீராக வைத்திருக்க உதவும் ஆற்றலும் வெங்காயத்துக்கு உண்டு.

சாதாரண தலைவலிக்கு

சாதாரணமாக தலைவலிக்கு வெங்காயத்தை நசுக்கி முகர்ந்தால் உடன் குணம் தெரியும்.

விசக் கடிக்கு

வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி தேள், குளவி போன்ற விச ஜந்துக்கள் கடித்த இடத்தில் அழுந்தத் தேய்த்தால் வலி குறையும்.

இருமலுக்கு
பொதுவான இருமலுக்கு வெங்காயச் சாற்றை மோருடன் கலந்து குடிக்க குணமாகும். முதுமைப் பருவத்தில் தோன்றுகிற கடுமையான இருமலுக்கு வெங்காயத்தை வதக்கி வெல்லம் கலந்து சாப்பிட குணம் தெரியும்.

மூளையின் சக்தி பெருகும்
மூளையின் ஆற்றலை வலுப்படுத்தும் சக்தி வெங்காயத்துக்கு இருக்கிறது. அது நல்ல உடல் தேற்றும் டானிக்காகவும் திகழ்கிறது.

ஆகவே தினமும் வெங்காயத்தை ‘சூப்’பாகச் செய்து அடிக்கடி சாப்பிடலாம். இரவு உறங்கப் போவதற்கு முன்பு ஒரு கோப்பை வெங்காய சூப் சாப்பிடுவது மிகவும் நல்லது. வெங்காயத்தை வேக வைத்து தேன், கற்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம்.

பல்வலி, ஈறு வலி
பற்களில் குறிப்பாக ஈறு பகுதிகளில் வீக்கம் கண்டு சீழ் வடிவதுண்டு. அப்போது வலியும் எரிச்சலும் கடுமையாக இருக்கும். அந்தக் குறைபாட்டை அகற்ற பதமான சுடுநீரில் தாராளமாக வெங்காயச் சாற்றைக் கலக்கி வாய் கொப்பளிக்க வேண்டும்.

பிறகு வெங்காயச் சாற்றை கொஞ்சம் பஞ்சில் நனைத்து பாதிக்கப்பட்ட பற்களில் நன்றாகத் தடவி விட வேண்டும்.

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை

பல்வேறு காரணங்களால் பெண்களுக்கு ஏற்படுகின்ற வெள்ளை ஒழுக்கிற்கு, வெள்ளைப் பூண்டை தோல் நீக்கி 100 கிராம் அளவு சேகரித்து சாறு எடுத்து பாதிப்புக்கு உள்ளான பெண்களுக்கு கொடுக்க குணம் தெரியும்.

உடல் அயர்வும் வலியும் நீங்க
அரைக் கீரையுடன் பூண்டும், மிளகும் தக்க அளவு சேர்த்து குழம்பு வைத்து இரவு நேரத்தில் சாப்பிட உடலில் தோன்றும் அயர்வும், வலியும் நீங்கி உடல் இலேசாகவும் சுகமாகவும் ஆகிவிடும்.

குடல் புழுக்கள் நீங்க

குழந்தைகளில் குடலில் புழுக்கள் உற்பத்தியானால் எப்போது வயிறு மந்தம், பசியற்ற நிலை, வந்து எவ்வளவு உணவு உட்கொண்டாலும், குழந்தைகள் நாளுக்கு நாள் பலவீனமடையும். இதற்கு தோல் நீக்கப்பட்ட வெள்ளைப் பூண்டுடன் குப்பை மேனி இலையைச் சேர்த்து நசுக்கி சாறு எடுத்து அதைச் சாற்றை குழந்தைகளுக்கு கொடுக்க மலப் புழுக்கள் வெளிவந்துவிடும்.

பால் சுரப்புக்கு

குழந்தைப் பேறுக்குப் பிறகு சில தாய்மார்களுக்கு போதிய அளவு பால் சுரக்காமல் இருந்து விடுவதுண்டு

பசுவின் பாலில் இரண்டொரு வெள்ளைப் பூண்டு பற்களைப் போட்டு காய்ச்சி பூண்டை சாப்பிட்டு பாலை குடித்து விட வேண்டும்.

25 November, 2010

கறிவேப்பிலை


கறிவேப்பிலை ஒதுக்காதீர்
மாறிவரும் இயந்திர யுகத்துக்கு ஏற்ப நோய்களும் புதிது புதிதாக வர ஆரம்பித்து விட்டன.

இப்பொதெல்லாம், இளம் வயதிலேயே, பார்வைக் கோளாறு, மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுவது மக்களை பீதியடையச் செய்கிறது.நோய்களின் தாக்கத்தில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள உடற்பயிற்சி மிக முக்கியம். அதோடு சரிவிகித உணவு அவசியம்.அதிலும் இயற்கையில் கிடைக்கும் உணவுப் பொருட்களில் எத்தனையோ சத்துக்கள் பொதிந்து கிடக்கின்றன.

நமது உணவுப் பொருட்களுடன் அன்றாடம் சேர்க்கப்படும் கறிவேப்பில்லையை சாப்பிடாமல் ஒதுக்கி விட வேண்டாம்.

அதில், வைட்டமின் ஏ 75000 மைக்ரோ கிராம், கால்சியம், போலிக் அமிலம், மற்றும் வைட்டமின் பி, சி ஆகிய சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

'வைட்டமின் ஏ' சத்து குறைவினாலே, பார்வை சம்பந்தமான கோளாறுகள் ஏற்படுகின்றன.

முருங்கைக் கீரை போல, கறிவேப்பில்லையிலும் 'ஏ' சத்து அதிகமிருப்பதால் இனி இதை தவிர்க்க வேண்டாமே!. மேலும், மற்ற உணவு வகைகளைப் போல கறிவேப்பில்லையை நாம் தேடி அலைய வேண்டாம். நமது அன்றாட உணவு வகையிலேயே கலந்து கிடக்கிறது.

உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது. 

இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.

கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.

திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர் சிட்டியில் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா? என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இந்தியன் கவுன்சில் ஆப் மெடிகல் தினமும் 170 கிராம் காய்கறிகளை சாப்பிட சிபாரிசு செய்கிறது. 75 - 125 கிராம் கீரைகளையும் சாப்பிட சிபாரிசு செய்கிறது. 170 கிராம் காய்கறிகளை சாப்பிட முக்கியமான 10 காய்கறிகளையும் குறிப்பிடுகிறது. அதில் ஒன்று கறிவேப்பிலை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம் :கீரையின் பயன்கள் அறிவோம்

அகத்திக்கீரை


தாவரங்களில் கீரை வகைகள் என்பது மிகுந்த சத்தான ஒன்றாகும். இவைகளில் பல சத்துக்களையும் வைட்டமின்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது அகத்திக்கீரை. இது சுவையானது. தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. வீட்டுத் தோட்டங்களிலும், வெற்றிலைக் கொடிக்காலிலும் பற்றுத்தாவரமாகவும் இது பயிரிடப்படுகிறது.

தோற்றம் :
அகத்திக்கீரையின் தாயகம் மலேசியா ஆகும். இது 10 மீட்டர் உயரம் வரை வளரும். மென்மையான கட்டை வகையாகும். அகத்தியில் பல வகைகள் உள்ளன. சிவப்பு மற்றும் வெள்ளை நிறப்பூக்களைக் கொண்டது. இலைகள் இரட்டை சிறகமைப்பு கொண்ட கூட்டிலைகளாகும். வெள்ளைப் பூக்களைக் கொண்டது அகத்தி எனவும், சிவந்த பூவைக் கொண்டது செவ்வகத்தி எனவும் அழைக்கப்படும்.

அடங்கியுள்ள பொருட்கள் :ஈரப்பதம் _ 73 சதம், புரதச்சத்து _ 83 சதம். தாதுஉப்புக்கள் _ 3.1 சதம், நார்ச்சத்து _ 2.2 சதம், மாவுச்சத்து _ 12 சதம், கொழுப்புச்சத்து _ 1.4 சதம் என்ற அளவில் சத்துக்கள் உள்ளன. தாதுஉப்புக்களில் சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்றவை உள்ளன. வைட்டமின் _ ஏ, தயாமின், நிபோபிளேவின், நிக்கோடினிக் அமிலம், வைட்டமின் _ சி போன்றவை அடங்கியுள்ளன.

மேலும் மரப்பட்டையில் டானின், பிசின் உள்ளது.

குணங்கள் :
இதற்கு நச்சை நீக்கும் குணமுள்ளதாகையால், பொதுவாக மருந்துண்ணும் காலங்களில் இதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

எப்படிப் பயன்படுத்தலாம்?
இலையை கீரையாக நறுக்கி வதக்கி உண்ணலாம், குழம்பிலிட்டு பயன்படுத்தலாம். பூக்களையும் வறுத்து உண்ணலாம், பூக்களை கஷாயமாக்கி அருந்தலாம். இலைச்சாறை தேனில் கலந்து அருந்தலாம்.

மருத்துவப் பயன்கள்
 •  பூவைச் சமைத்து உண்டுவர மலச்சிக்கல் மாறும்

 • அகத்தி இலைச்சாறை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்த, ஒரு மாதத்தில் இருமல், இரைப்பு மாறும்.
 • இலைச்சாறை உறிய, தலைநீர் இறங்கும்.
 • அகத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் சாறோடு, இதே அளவு தேன் கலந்து அருந்த, வயிற்றுவலி தீரும்.
 • இலைகளை அரைத்து அடிபட்ட புண்கள் மேல் கட்டிவர புண் ஆறும்.
 • அகத்திக்கீரை பொடியை நீர் அல்லது பாலில் கலந்து குடித்துவர, நாள்பட்ட வயிற்றுவலி மாறும்.
 • அகத்திக்கீரை பால்சுரப்பைக் கூட்டும்.
 • இக்கீரையை உணவில் சேர்த்து வர, மலச்சிக்கல் தீரும்.
 • பூக்களைப் பிழிந்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசிட, தலைவலி மாறும்.
 • அகத்திப்பூ சாறு ஒரு கரண்டி எடுத்து, இதோடு ஒரு கரண்டி தேன் கலந்து சாப்பிட இருமல், சளி தீரும்.
 • அகத்திக்கீரை சாறு இரு துளி மூக்கில் விட தும்மல், ஜலதோஷம் தீரும்.
 • அகத்திப்பூ சாறு இரு துளி மூக்கில் விட தலைநீர், ஜலதோஷம் தீரும்.
 • அகத்தி மரப்பட்டை கஷாயம், காய்ச்சலின்போது உள்ளுக்குக் கொடுக்கப்படுகிறது.
 • வேர்ப்பட்டையை அரைத்து வாதவலி மேல் பூசிவர வலி மாறும்.
 • அகத்திக்கீரை உடலிலுள்ள துர்நீரை வெளியேற்றும்.
 • இக்கீரை பித்த நோயை நீக்கும்.
 • இக்கீரை, உடல் சூட்டைத் தணிக்கும்.

23 November, 2010

கா வரிசை பழமொழிகள்

* காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.
 * காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
 * காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.
 * காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.
 * காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?
 * காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?
 * காணி ஆசை கோடி கேடு.
 * காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்
 * காற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.
 * காப்பு சொல்லும் கை மெலிவை.
 * காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
 * காய்த்த மரம் கல் அடிபடும்.
 * காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது.
 * காரண குருவே காரிய குரு!
 * காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.
 * காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?
 * கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை
 * காலம் செய்கிறது ஞாலம் செய்யாது.
 * காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்
 * காலத்துக்கு ஏற்றபடி பெருச்சாளி காவடி எடுத்து ஆடிற்றாம்!
 * காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.
 * காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை.
 * காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்
 * காவலுக்கு பொம்மை இருக்கேன்னு நம்பி களம் நிறைய நெல்லு காய வச்சாங்களாம்!
 * காற்றில்லாமல் தூசி பறக்குமா?
 * காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
 * காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்.

தூங்க முடியுமா?”அமைதிய இருக்கணும்னு ஆசைப்பட‌றேன்... அது முடியலே சார் என்னா‌லே!”
”ஏன்?”
”நான் குடியிருக்கிற இடம் அப்படி!”
“என்ன பிரச்சனை அங்‌கே?”
:ஒலி பெருக்கிகள் போடற சத்தம் தாங்க முடியலே!”
”அதிகமான சத்தம் காதுலே விழறது ஆபத்து... அது தெரியுமா உங்களுக்கு?”
”என்ன ‌சொல்றீங்க”
”நான் சொல்லலே... அது சம்மந்தமான நிபுணர்கள் சொல்றாங்க அப்படி!”
ஆராய்ச்சிக் கூடத்திலே விலங்குகளை வச்சி சோதிச்சுப் பார்த்தாங்களாம்... அளவுக்கு மீறிய சத்தம் உடம்புலே கொல
ஸ்டிரால் அளவை  அதிகரிச்சுதாம்... அது இதய தாக்குதல் வாய்ப்பை உண்டாக்குச்சாம்!
“விலங்குகளுக்கு தானே அப்படி?“
மனிதர்களையும் 100 டெசிபல் அளவு சத்தத்தைக் ‌கேட்கவச்சுப் பார்த்தாங்களாம்... அவங்களுக்கும் இதே நிலை ஏற்பட்டுச்சாம்!
“ரொம்ப வேதனைதான்!“
நானும் தூங்கறதுக்கு எவ்வள‌வோ வழிகள்லே முயற்சி பண்ணிப் பார்த்துட்டேன்... முடியலே..!
“நான் ஒரு வழி சொல்றேன்... பாருங்களேன்!“
என்ன வழி அது?
“படுக்கையிலே விழுந்தவுடனே கண்ணை மூடிக்கிட்டு ஒண்ணு, இரண்டு, மூணு,  நாலு... ன்னு வரிசையா சொல்லிக்கிட்டே வரணும்..!“
நேத்தி கூட... அதைத்தான் செஞ்சு பார்த்தேன்... முப்பதாயிரத்து முன்னூற்றுப் பதினேழு வரைக்கும் தான் எண்ண முடிஞ்சது...!
 

“அப்புறம் தூக்கம் வந்துட்டுதா?“
 

இல்லை... விடிஞ்சுட்டுது...!

 
நன்றி: தென்கச்சி கோ சுவாமிநாதன்

22 November, 2010

பொது அறிவு
டைட்டானிக் திரைப்படம் எத்தனை ஆஸ்கார் விருதுகளை பெற்றது
11 ஆஸ்கார் விருதுகள்

தமிழில் வெளியான முதல் நாவலின் பெயர்
பிரதாப முதலியார் சரித்திரம்


இந்தியாவின் மகிழ்ச்சி நகரம் என்றுஅ‌ழைக்கப்படுகிறது
கொல்கத்தா

இந்தியா தாரித்த பைலட் இல்லாத முதல் விமானத்தின் பெயர்
லக் ஷ்யா

யுவான் சுவான் எழுதிய பயணகுறிப்பு
சியூக்கி

இரு மாநிலங்களுக்கு தலைநகராக திகழும் இந்திய நகரம்
சண்டிகர்

செயற்கை இதயத்தை வடிவமைத்தவர்
வில்லியம் கேப்

அதிகமான எதிர் மின்தன்மை உள்ள தனிமம் எது
புளோரின்

மின்சார பல்பிலுள்ள வாயு எது.
நைட்ரஜன்

ஹர்ஷ சரிதம் இயற்றிய ஆசிரியர்
பாணர்

குப்தர்கள் காலத்தில் இந்தியா வந்த சீன யாத்திரிகர்
பாஹியான்

இந்தியாவின் கலாச்சார சோலை என வர்ணிக்கப்படும் நகரம்
கொல்கத்தா

கருப்பு தங்கம் என்று அழைக்கப்படுகிறது
நிலக்கரி

சூரியன் மறையும் ‌போது பச்சை நிறமாக காணப்படும்
அண்டார்டிகா 

சேரமன்னர்களின் தலைசிறந்த மன்னன்
‌சேரன் செங்குட்டுவன்

இரண்டு தேசிய கீதங்கள் பாடப்படும் நாடு
ஆஸ்திரேலியா

மௌரியர் கால கல்தூண்
சாரநாத் கல்தூண்

இந்திய நெப்போலியன் என்று அழைக்கப்பட்டவர்
சமுத்திரகுப்தர்


மிகப் பெரிய இதயம் உள்ள உயிரினம்
திமிங்கலம்

மனிதன் ஓரு சமூக விலங்கு என்று கூறியவர்
அரிஸ்டாட்டில்

21 November, 2010

மறைந்துப்போன பூக்காலம்

அதிசய மலராய்
பூமியிலே அரும்பு விட்டவள் அவள்!
 
அதிகாலைப் பொழுதில்
அகம் மலரும் தாமரைப் போல்
ஒவ்வொரு நாளும் அவளின் சிலிர்ப்புகள்...
 
என்
கையைப் பற்றிக்கொண்டு:
நடந்து வருகையில்...
அவள் கையைப் பற்றிக்கொண்டு
நடந்து செல்கையில்...
ஆயிரம் ஒத்தடங்களின் இதங்கள் காணும்
என்னை அறியாமலே என் மனது...
அரசமர ஆணி வேராய் நானிருந்தும்
அவளுக்காக ஆலமர
விழுதுகள் ‌போலவும் தாங்கி நின்றேன்...


கவிதையாய்
கை வீசி நடந்து விட்டு
அவள்
கானலாய் போனது எங்கே...?
 

சீறும் பூனையைக்கண்டு
நடுங்கும் பயத்தைப் பார்க்கவும்...!
 

புத்தகத்தின் நடுவிலே
மயில் இறகை வைத்துவிட்டு
தினம் தினம் குட்டிகளைத் தேடும்
அவளின் ‌பொறுமையை பார்க்கவும்...!
 

மழையில் நனைந்து ‌கொண்டு போகும்
பட்டாம் பூச்சியின் குளிருக்காக
இவள் சிந்திய கண்ணீரைப் பார்க்கவும்...!
 

நான்
இன்னொரு முறை
பிறந்‌தே ஆக வேண்டும்...!
அவள்
நடந்து பழகிய பாதைகளின் காலடித்தடங்கள்
இன்னும் கலையவில்லை
 

அவள் 
விடியும் முன்னே
எழுந்து முடித்து
என்னை எழுப்பி விட்டு
அதிகாலை ‌கொடுத்த முத்தங்களின் ஈரம்
இன்னும் காய்ந்தபாடில்லை
 

அவள்
அந்திப்பொழுது விளையாட்டில்
வண்ண பலூன்களில்
ஊதி வைத்த மூச்சு காற்றுகள்
இன்னும் கரைந்து முடியவில்லை...!


சுவாசங்களை இங்கே வைத்துவிட்டு
அதை தேடி
எங்கே சென்றிருக்கிறாள்..?


மழைத்துளிகள்

அழித்துவிட்டுப்போன
வண்ணக் கோலமாய்
அவள் மீண்டும் வராம‌லே ‌போவா‌ளோ...
 

ஏப்ரல் மாதத்து சாயம்
இன்று என் மனதில்
அவளின் இழப்பினால்

நான் முட்டாள்தான்
இனி காலம் முழுவதும்...
 

இனி வரும் காலங்களில்
அவளின் நினைவுகள்
சாலை ஓரத்து
மைல்கல்லைப் போல்
என்னை விடாமல் தொடரும்...
 

கொலுசுகளின் சத்தங்களை
இனி கேட்கத் தொடங்கு‌வேன்
அவள் புன்னகைகள்
மறைந்து போனதால்...
 

பூக்களின் ‌மென்மையை
இனி உணரத் தொடங்குவேன்
அவளின் ஸ்பரிசங்கள்
கலைந்துப் போனதால்...
 

யாழ் இனிது.. குழல் இனிது என்று
‌சொல்லவேண்டியிருக்கும்
அவளின் மழலை அமுது
மறைநதுப் போனதால்...
 

சொர்கம் சுகம் அடையத்தானோ
விருந்தினராய் உன்னை அழைத்து ‌கொண்டது...
 

நீ சொர்கம் பறந்து
சென்றதா‌லே
நரகம் இங்கு வந்து விட்டது...
 

பூவே உன்னை கருகச் செய்த
அந்த சூரியன் யார்?
 

மலரே உன்னை
உதிர வைத்த
அந்த தென்றல் யார்?
 

ஓடிவந்த வசந்தம்
உன்னைக் காணாமலே
ஒழிந்து விட்டது...
 

ஒண்ட வந்த ‌தெய்வம்
உன்னைக் காணாமலே
ஓய்ந்து விட்டது...
 

பூக்காலம்
போனப்பின்
இனி யார்க்காலமோ?
 

பெற்றெடுக்கும் வேளையில்
நீ அழுதுக்கொண்டு பிறந்தாய்...
நாங்கள் சிரித்துக் கொண்டு இருந்தோம்...


இழந்து விட்ட வேளையில்
புகைப்படமாய் - நீ
சிரித்துக் கொண்டிருக்கிறாய்...
நாங்கள் அழுதுக் கொண்டிருக்கிறோம்...
மலராய்
மலர்ந்து வந்த மகளை
பறிகொடுத்த துயரத்தை
 

தேடி வந்த தே‌வதையை
தொலைத்துவிட்ட சோகத்தை

இந்த தந்தையின்
கற்பனையில் இன்னும்
அடிக்கிக் கொண்டுப் போவேன்
 

இதயத்தை துக்கங்கள் 
அ‌டைக்காமல் இருந்தால்...
 

விழிகளை கண்ணீர்
நனைக்காமல் இருந்தால்....
20 November, 2010

இந்திய தேசிய கீதம்ஜன கன மன அதிநாயக, ஜய ஹே
பாரத பாக்ய விதாதா
பஞ்சாப சிந்து குஜராத் மராத்தா
திராவிட உத்கல பங்கா
விந்தியா ஹிமாச்சல யமுனா கங்கா
உச்சல ஜலதிதரங்கா
தவ சுப நாமே ஜாகே
தவ சுப ஆஷிஸ மாகே
காஹே தவ ஜய காதா
ஜன கன மங்கள தாயக ஜய ஹே
பாரத பாக்ய விதாதா
ஜய ஹே, ஜய ஹே, ஜய ஹே,
ஜய ஜய ஜய, ஜய ஹே!


தமிழ்தாய் வாழ்த்துநீராடும் கடல் உடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமென திகழ் பரத கண்டமிதில்
தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிறை நுதலும் தரித்த நறும் திலகமுமே!
அத் திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற,
எத் திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே!               தமிழணங்கே!
 
நின் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!


முருங்கைக்கீரை

பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள். கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது.அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம்.
 
முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.

சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. அதுபற்றி சற்று விரிவாக காண்போம்.

இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.
முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங் களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம்.
முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும்.
முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர் களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும்.
முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து.
கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து.

முருங்கைக் காயை வேக வைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்த மானதே. இந்த சாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.
முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தியை உண்டு பண்ணும். ஆனால் மலபந்தத்தைச் செய்வதில் முருங்கை விதைக்கு முதலிடம் தரலாம்.

முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் பிசின் நல்ல டானிக்குகள் செய்ய பயன்படுகிறது. பச்சைப் பிசினை காதில் ஒரு சொட்டு விட்டால் போதும், காது வலி உடனே நின்று விடும்.

இந்த மரத்தின் வேர் மற்றும் பிசின் சம்பந்தப்பட்ட டானிக்குகளை அல்லது லேகியங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரை சீக்கிரம் வராமல் தள்ளிப்போகும்.

மேலும் இந்தப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு. முருங்கைப் பூ உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியதுதான் என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை. முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப் பாண்டத்தில் வைத்திருந்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும்.
முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால்,இரத்த சுத்தியும்,எலும்புகளையும் வலுப்படுத்தும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம்,அயம்,வைட்டமின் உள்ளது.

கர்ப்பையின் மந்தத் தன்மையை பேக்கி,பிரசவத்தை துரிதப்பட்த்தும்.இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்தம்,தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும் ஆஸ்துமா,மார்சளி,சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சுப் நல்லது. முருக்கைப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப் செக்ஸ் பலவீனத்தைப் போக்கும்.ஆண்,பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கும்,விந்து விருத்திக்கும் சிறந்தது.

முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும். முருக்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன்,இருதய நோய்களை போக்கி இரத்தவிருத்தி தாதுவிரித்திசெய்யும். முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சகாமாலை,குடலில்ஏற்படு ம் திருகுவலு,வயிற்றுப்போக்க ு கட்டுபடும். விதையில் இருந்து என்னை தயாரித்து வாயுப்பிடிப்பு,மூட்டுவலி களில் பயன் படுத்தலாம் முருக்கைவேரில் இருந்து சாறெடுத்து பாலுடன் செர்த்துப பருகிவர காசநோய்,கீழ்வாயு,முதுகுவலி குணப்படும்.

வைட்டமின்கள் : முருங்கை இலை 100கிராமில் 92 கலோரி உள்ளது.

ஈரபதம்-75.9%

புரதம்-6.7%

கொழுப்பு-1.7%

தாதுக்கள்-2.3%

இழைப்பண்டம்-0.9%

கார்போஹைட்ரேட்கள்-12.5%

தாதுக்கள்,வைட்டமின்கள்,

கால்சியம்-440 மி,கி

பாஸ்பரஸ்- 70மி.கி

அயம்- 7 மி.கி

வைட்டமின் சி 220 மி.கி

வைட்மின் பி காம்ப்ளக்ஸ் சிறிய அளவில்

ஏழு பிறவிகள்

1. தேவர்

2. மக்கள்

3. விலங்கு

4. பறவை

5. ஊர்வன

6. நீர்வாழ்வன

7. தாவரம்

க வரிசை பழமொழிகள்

* கங்கையில் மூழ்கினாலும் காக்க்கை அன்னம் ஆகுமா?
* கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.
* கடலுக்குக் கரை போடுவார் உண்டா?
* கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
* கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?
* கடல் திடலாகும், திடல் கடலாகும்.
* கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?
* கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.
* கடன் இல்லா கஞ்சி கால் வயிறு.
* கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான்.
* கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.
* கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.
* கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
* கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
* கடுகு போன இடம் ஆராய்வார், பூசணிக்காய் போன இடம் தெரியாது.
* கடுகு களவும் களவுதான், கற்பூரம் களவும் களவு தான்.
* கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.
* கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.
* கடை காத்தவனும் காடு காத்தவனும் பலன் அடைவான்.
* கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது போல.
* கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.
* கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள்.
* கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.
* கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.
* கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை.
* கணக்கன் கணக்கறிவான் தன் கணக்கைத் தான் அறியான்.
* கணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும்.
* கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.
* கண் உள்ள போதே காட்சி; கரும்பு உள்ள போதே ஆலை!
* கண் கண்டது கை செய்யும்.
* கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?
* கண்டதே காட்சி கொண்டதே கோலம்.
* கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.
* கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.
* கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?
* கண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா?
* கண்ணிற் புண் வந்தால் கண்ணாடி பார்த்தல் ஆகாது.
* கண்ணு சிறுசு, காண்பதெல்லாம் பெரிசு.
* கத்தரிக்காய் சொத்தை என்றால் அரிவாள்மணை குற்றம் என்கிறாள்.
* கத்தரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும்.
* கதிரவன் சிலரை காயேன் என்குமோ?
* கந்தனுக்குப் புத்தி கவட்டுக்குள்ளே
* கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்.
* கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி.
* கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.
* கம்பால் சாய்க்காதவனைக் கயிற்றால் சாய்த்த கதையாக.
* கரணம் தப்பினால் மரணம்.
* கரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா?
* கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.
* கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்
* கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.
* கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாம்?
* கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.
* கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி!
* கல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி.
* கல்லாடம் [ ஒரு நூல்] படித்தவனோடு மல் ஆடாதே.
* கல்லாதவரே கண்ணில்லாதவர்.
* கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.
* கல்வி அழகே அழகு.
* கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.
* கல்விக்கு இருவர், களவுக்கு ஒருவர்.
* கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது.
* கழுவுகிற நீரில் நழுவுகிற மீன் போல.
* களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.
* கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
* கள்ள மனம் துள்ளும்.
* கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்.
* கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!
* கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!
* கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.
* கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.
* கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.
* கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.
* கன்றுக்குட்டிக்குத் தெரியுமா, கவணையுடைய உயரம்?
* கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?
* கனிந்த பழம் தானே விழும்.
* கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
* கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.

மூன்று குரங்குகள்

பொது அறிவு

 • இந்தியாவின் மிகத் தொன்மையான நடனம் எது?
பரதநாட்டியம்
 • ஒளி வருடம் என்பது எதன் அலகு
அண்டவெளி தூரம்
 
 • இந்திய தேசிய கீதத்தை எவ்வளவு நேரத்திற்குள் பாடிமுடிக்க ‌வேண்டும்?
52 வினாடிகள்

 • புவியை சுற்றி வருபவருக்கு வானம் எந்த நிறத்தில் தோன்றும்
கருப்பு
 • சூரிய ஒளி நம்மை வந்தடைய எவ்வளவு நேரம் ஆகிறது.
8 நிமிடங்கள்
 • உலகின் பிரதான மூன்று உணவுப் பொருட்கள் யாவை
கோதுமை, அரிசி, சோளம்.
 • தமிழில் வெளியான முதல் நாவலின் பெயர்
பிரதாப முதலியார் சரித்திரம்
 • மானசரோவர் ஏரி எங்குள்ளது.
சீனா


 • மேற்கத்திய கல்வி முறையை இந்தியாவில் கொண்டு வந்தவர்
ராஜாராம் மோகன்ராய் 

 • அ‌மெரிக்காவில் நீக்ரோக்கள் சமஉரிமை பெற அகிம்சை வழியில் போராடி வெற்றிக் கண்டவர்
மார்டின் லூதர் கிங்
 • டில்லி மீது படையெடுத்து கோஹினூர் வைரத்தை கைப்பற்றி சென்ற அரசன்
நாதீர் ஷா
 • அதிகபெஞ்ச் கொண்ட இந்திய உயர்நீதிமன்றம்
கவுகாத்தி உயர்நீதிமன்றம்
 • உயர் ஆற்றல் கொண்ட வண்ணம்
மஞ்சள்
 • ஒலியை பதிவு செய்ய மற்றும் மீட்க பயன்படுவது
சோனா மீட்டர்
 • கடல் ஆழத்தை கண்டறிய உதவும் கருவி
சோனார்
 • ஒளி எந்த வடிவில் வரவுகிறது
 குறுக்கலை
 • ஹைட்ரஜன் குண்டின் அடிப்படைத் தத்துவம்
அணுக்கரு இணைவு
 • 35 ஆயிரம் தேயிலை தோட்டங்கள் கொண்ட நாடு
இந்தியா
 • உப்பு ஏரிகள் அதிகம் ‌‌‌‌கொண்ட இந்திய மாநிலம்
குஜராத்
 • இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் பீரங்கி
விஜயந்தா

19 November, 2010

படுக்கை அறைகனவுகளின் தொழிற்சாலை...
ஏக்கங்களின் உற்பத்திக்கூடம்...
ஓடிய படகுகள் ஒதுங்கும் கறை...
பாடும் பறவைகளின் பல்லவிதேசம்...
வாழ்க்கை தேசத்து வசந்த மண்டபம்...
 

இளைய தலைமுறையின் அந்தப்புறம்...
பணம் படைத்தவனுக்கு
இங்கு நரகத்தின் அவஸ்தைகள்...
 

ஏழை வாசிக்கு
இங்கு சொர்கத்தின் சுகங்கள்


நாணம் கொள்ள இது நாடகமேடை...

மோகம் கொள்ள இது பள்ளியறை...
 

குடுமபத்தலைவிக்கு
‌இது விண்ணப்ப மையம்...
 

பெண்ணை பெற்றவனுக்கு
இது வேதனை கூடம்...
 

சோகங்களை சொல்லி அழுது
தலையனைகளோடு
தாம்பத்தியம் கொள்வதும் இங்குதான்


மோங்களை அள்ளி அனைத்து
தலைகால் புரியாமல்
தலை சுற்றி கவிழ்வதும் இங்குதான்...
 

கட்டில் வெறுத்து தொட்டில் வெறுத்து
முட்டிய காமத்தை முழுதாய் தீர்த்து
காவிக்கதைகள் துவங்கியதும் இங்குதான்
 

காதல் ‌கொண்டவனுக்கு
இவ்விடம் முட்களை விதைக்கிறது...
 

காதலை ‌வென்றவனுக்கு
இவ்விடம் மலர்களை விதைக்கிறது...
 

இங்குதான் நிகழ்த்தப்படுகிறது
நிரந்தர மரணத்திற்கான
நிகழ்கால ஒத்திகைகள்...
 

நித்தம் நித்தம் தென்றல் வீசி
ஜன்னலோடு சில கதைகள் பேசி
வாடிய மனதை மலர வைக்கும்
வாலிப மனதை வாட வைக்கும்
 

கவிதை வரும்
அதை எழுதித் தொலைக்கும் வரை
இவ்விடம் என்னை எதிரியாய் நடத்தும்
 

ஜீவன் சுமந்து ஜீரணிக்கும் வரை
படுக்கை அறை ஒரு சுதந்திரசிறை
 

படுக்கை அறையில் சண்டைகள் இருக்கும்
தோற்றவர் வெல்வார் வென்றவர் தோற்பார்
படுக்கை அறையில் மௌனம் இருக்கும்
உறக்கத்தில் கொஞ்சம் மயக்கத்தில் கொஞ்சம்
 

இறுதியாய்...
 

படுக்கை அறை
ஆக்கலும் அழித்தலும் மட்டுமல்ல
காத்தலும் செய்கிறது...
 

படுக்கை அறை
ஓய்வையும் உறக்கத்தையும் மட்டுமல்ல
வாழ்க்கையைகூட நிர்ணயிக்கிறது...18 November, 2010

ஐ. ஒ. ஓ வரிசை பழமொழிகள்

* ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.
* ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?
* ஐந்து வயது வரை பிள்ளையைப் பேய் வளர்க்கும்.
* ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது
* ஐயர் வரவில்லை என்பதற்காக அமாவாசை நிற்குமா?
* ஐயருக்கு எதுக்கு ஆட்டுக்குட்டி வெயாபாரம்.
* ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.
* ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?
* ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
* ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை
* ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
* ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?
* ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை
* ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?
* ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
* ஒரு பொய்யை மறைக்க ஒன்பது சொல்லுதல்
* ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்.
* ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.
* ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.
* ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.
* ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.
* ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா!
* ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.
* ஓடி ஒரு கோடி தேடுவதிலும், இருந்து ஒரு காசு தேடுவது நலம்
* ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.
* ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.
* ஓட்டம் உள்ளவரை ஆட்டமும் அதிகம்!
* ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
* ஓட்டை பானையிலும் சர்க்கரை இருக்கும்
* ஓணான் வேலிக்கு இழுக்கிறது; தவளை தண்ணீருக்கு இழுக்கிறது!
* ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.
* ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.
* ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.
* ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.
* ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.

16 November, 2010

எ ஏ வரிசை பழமொழிகள்

* எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.
* எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
* எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.
* எட்டிக்குப் பால் வார்த்து வளர்த்தாலும் தித்திப்பு உண்டாகாது.
* எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்ந்தென்ன?
* எண் இல்லாதவர் கண் இல்லாதவர்,
* எண்ணத் தொலையாது; ஏட்டில் அடங்காது!
* எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
* எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம்.
* எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.
* எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை.
* எண்ணெய் முந்துதோ திரி முந்துதோ?
* எதார்த்தவாதி வெகுசன விரோதி.
* எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
* எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.
* எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?
* எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.
* எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா
* எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?
* எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
* எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம்.
* எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.
* எருது நோய் காக்கைக்கு தெரியுமா?
* எலி அழுதால் பூனை விடுமா?
* எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.
* எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்
* எலி வளை யானாலும் தனி வலை வேண்டும்.
* எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?
* எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது
* எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் துக்குகிறவர் யார்?
* எல்லாரும் கூடிக் குல்லாய் போட்டனர்!
* எல்லாரும் தடுக்கின்கீழ் நுழைந்தால், இவள் கோலத்தின் கீழ் நுழைந்ததைப் போல்!
* எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
* எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்
* எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
* எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.
* எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.
* எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்
* எள் என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்.
* எள்ளுக்கு ஏழு உழவு கொள்ளுக்கு ஓர் உழவு.
* எறும்பு ஊரக் கல்லுந் தேயும்.
* எறும்புந் தன் கையால் எண் சாண்
* ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை
* ஏரி நிறைந்தால் கரை கசியும்.
* ஏருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
* ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.
* ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை
* ஏழை அமுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்.
* ஏழை என்றால் எவர்க்கும் எளிது
* ஏழைபேச்சு அம்பலம் ஏறாது
* ஏழைக்கு இரக்கப்பட்டா நாளைக்கு இருக்க மாட்டோம்
* ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.
Related Posts Plugin for WordPress, Blogger...