கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

31 March, 2011

நண்பனுக்கான தகுதியிருக்கிறதா உனக்கு..ள்ளத்தில் வேதனைதான்
உன் உதடுகள் உச்சரித்த வார்த்தைகளால்,,,


ருகனம் உன் சிந்தனையை
ஓடிப்போன நாட்களோடு ஓட விட்டுப்பார்,,,


தில் அன்பாய் இருக்கும் என்னோடு
நீ அன்பு காட்டிய நாள் இல்‌லை,,,


நீ தெரிந்து இழைத்த தவறுக்காய்
நான் கோவப்படவும் இல்லை
நீ மன்னிப்புக் கோரவும் இல்லை,,,


நீயே கிழித்துக்கொண்ட உன் சட்டைக்காக
உன் தாயாரிடம் மண்டியிட்டுள்ளேன் நான்
மௌனித்திருந்தாய் நீ,,,


மாங்காய் திருடிவிட்டு
தோப்புகாரனிடம்
மாட்டிக்கொண்ட போதும்,,,

 டிக்கெட் வாங்காமல் சோதனையாளரிடம் 
பதில் ‌சொல்ல முடியாமல்
விழித்துக்கொண்டிருந்த போதும்....


முக்கிய தேர்வு என்று தெரிந்தும்
வராத பள்ளி நாட்களில்
உனக்காக வாதாடியதும்...


னது கடமையாயிருந்தது...

ஓ... நண்ப‌னே
என் உண்மையான நட்பை
எத்தனையோ முறை உணர்த்திருக்கிறேன்...


நீயோ அதிலிருந்து
ஒதுங்கியே இருந்திருக்கிறாய்...


னால்

டந்த மாதம் வாங்கிய
இருபது ரூபாவை திருப்பித் தந்து விட்டு
எப்படி சொல்ல முடிகிறது


னக்கும் எனக்கும்
கடன் ஏதும் இல்லையென்று....முந்தையப் பதிவு : 

கோமாளி செல்வாவும் விண்டோசும்...!
நேற்று இந்தியாவை கொண்டாட வைத்த
தன்னம்பிக்கை தருணங்கள்..

இன்னும் ஒரு போர்... ஒரு போட்டி... ஒரு சாதனை...
காத்திருப்போம்  அந்த தருணத்திற்காக...

29 March, 2011

கோமாளி செல்வாவும் விண்டோசும்...!


கோமாளி செல்வாவின் புகழும் அவரின் வீரதீர செய்ல்களும்  நமக்கு தெரிந்ததே... இன்னும் அவரின் புகழுக்கு புகழ் சேர்க்கவே இந்த பதிவு.

செல்வா கணினி பயிலுவதற்காக அவருக்கு ஒரு கணினி வாங்கிக் கொடுத்தார்கள் அதிலே வீட்டில் பயிற்சி ‌எடுத்தார்.
 
ஒரு முறை கணினி பழுதடைந்தது. அப்போது எனக்கு தெரிந்த ஒரு நண்பரை அழைத்து கணினியை சரிசெய்ய கேட்டுக் கொண்டோம். 

அந்த ஹார்டுவேர் இன்ஜினியர் கணினியில் விண்டோஸ் கரப்ட் ஆகிவிட்டது. நியூ விண்டோ இன்ஸ்டால் செய்து கொடுத்து விடுகிறேன் என்றார்.
 
ஒரு சில மணிநேரத்தில் பழுது சரிசெய்யப்பட்டு கணினி செயல்படத் தொடங்கியது. அதற்காக அவருக்கு ரூ. 450 வழங்கப்பட்டது. அவர் கிளம்பத்தயாராக இருந்தார்.
 
அப்போது பரபரப்பாக வந்த செல்வா என்ன சார் முடிஞ்சதா என்றார்.. அதற்கு அவர் முடிஞ்சது ‌பழைய விண்டோ மாற்றி நியூ விண்டோ போட்டாச்சி அதற்கு கட்டணமும் வாங்கியாச்சி என்றார்.

அதன் பிறகு செல்வா சரி சார் அந்த பழைய விண்டோவை கொடுத்து விட்டுச் செல்லுங்கள் என்றார். வந்தவருக்கு ஒன்றும் புரியவில்லை. அதற்குள் செல்வா தொடர்ந்தார்.

கீ-போர்ட் பழுதானது புதியது மாற்றி பழையதை கொடுத்துவிட்டார்கள்... மௌஸ் மாற்றினோம் புதியது மாற்றி பழையதை கொடுத்து விட்டார்கள்  தற்போது விண்டோ போய் விட்டது தாங்கள் புதிய விண்டோ மாற்றினீர்கள் ஆகையால் அந்த பழைய விண்டோவை கொடுத்து விட்டு செல்லுங்கள் ‌என்றார்... (அப்போது மயங்கி விழுந்த அவர் ஒரு வாரம் கழித்துதான் தெளிந்தது..)

வீட்டிலுள்ள அனைவராலும் செல்வா பாராட்டப்பட்டார்.. இந்த சின்ன வயசில் இவ்வளவு பொறுப்பாகவும்.. இவ்வளவு அறிவாளியாவும் இருப்பதைக் கண்டு அனைவரும் புகழாரம் சூட்டினார்கள்.‌ ஊராரும் அங்குவந்து வாழ்த்தினார்கள்... கொஞ்சம் கொஞ்சமாக செல்வாவின் புகழ் இந்த உலக‌மெங்கும் பரவியது..

வாழ்க.. செல்வா புகழ்.. வளர்க செல்வா அறிவு..


28 March, 2011

கைபேசியில் மலர்ந்த கவிதை பூக்கள்.. !த்தனை துன்பங்கள் வந்தாலும்
எத்தனை தோல்விகள் வந்தாலும்
எனக்கு கவலையில்லை
ஏனென்றால்..

நான் 100 முறை ஜெயித்தவன் அல்ல...
1000 முறை தோற்றவன்..

**********************************************************


ன்னை நான் பார்த்ததும் இல்லை
என்னை நீ பார்க்கவும் இல்லை
பின்பு எதற்காக
நான் வாழ நீ துடிக்கிறாய்..
இதயமே...!

**********************************************************


ன்று அவளுக்காக
என்னைக்கொன்றாய்...
அவளோ... உன்னையே கொன்றுவிட்டாள்..
இன்று உன் கல்லரையின் அருகில்
யார் இருக்கிறார் என்னை தவிர...
-ஒரு மலரின் கவிதை

**********************************************************
 

ன்னை கட்டியவனும் இல்லை
என்னை கட்டச்சொன்னவனும் இல்லை
இருந்தாலும் வாழ்கிறேன்..
உண்மையான காதலர்களை
காண்பேன் என்ற நம்பிக்கையில்..
-தாஜ்மஹால்

**********************************************************
 இந்த கவிதைகள் என் கைபேசியில் குறுந்தகவல்களாக வந்தவைகள்...
இவைகள் யாருக்கு சொந்தமென்று எனக்கு தெரியாது...

முட்டையிடும் குயில்
கூட்டின் முகவரிகள் அறிவதில்லை..
காகங்கள் அடைக்காத்தாலும்
எந்த குயிலும் ராகத்தில் குறைந்ததல்ல...

ரசியுங்கள் அனைத்தையும்...


25 March, 2011

என் தரப்பு நியாயங்கள்...!

அன்பான பதிவுலகமே.. புதிய தலைப்பில் சமுதாய அக்கறையை இங்கே பதிவு செய்கிறேன். இவை நாமும் குற்றவாளி என்ற தோரணையில்...


ஒரு காலத்தில் இந்த சமூகத்தின் முன்னேற்றத்திற்காக  அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டது. பல்வேறு புரட்சிகள் மூலம் சமூதாயத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. அந்த கட்சிகள் பிற்காலங்களில் நாட்டின் மறுமலர்ச்சிக்கும், அடிமைப்பட்டுக்கிடந்த நாட்டின் விடிவுக்கும் தன்னை  அர்ப்பணித்துக்கொண்டது. அப்போது கட்சிகள் மற்றும் அவற்றின் தலைவர்கள் நாட்டு மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களை பின்பற்ற தொடங்கினார்கள். நாட்டின் ‌நட்சத்திரங்களாக அவர்கள் உயர்ந்தார்கள். மக்கள் மனதில் இடம் பிடித்தார்கள்.


அவர்கள் செய்த செயல்கள் அவர்களின் வாழ்க்கை அவர்களின் கொள்கைகள் எல்லாம் பொன் எ‌ழுத்துக்களால் என்றும் பொறிக்கப்பட வேண்டியவை. ஆனால் இன்று நாட்டை சோம்பேறிகளின் சொர்க்க பூமியாக ஆக்கி விடுவார்கள் போல தெரிகிறது. அவர்கள் இது போன்று ஆனதற்கு நாமும் ஒரு காரணம் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

இது நியாயம் தானா? :

நாம் கொஞ்சம் யோசிக்க வேண்டும். நாம் 1000 ரூபாய் முதலீடு செய்து  ஒரு தொழில் செய்கிறோம்  என்றால் அவற்றை இரட்டிப்பாக்க முறச்சிக்கிறோம். குறைந்த பட்சம் போட்ட முதலை விட அதிகமாக சம்பாதிக்க ஆயத்தப்படுகிறோம். இன்று அரசியல் தொழிலும் அப்படித்தான் ஆகிவிட்டது. ஓட்டுக்கு பணம், விளம்பரச் செலவுகள், கூட்டம் கூட்ட பணம் செலவு செய்தல், ஆட்சிக்கு வந்தப்பிறகு மக்களுக்கு இலவசப் பொருட்கள் என பொது மக்கள் வாங்கிக் கொண்டால். பிறகு எப்படி அரசியல் வாதிகளை நாட்டிக்கு நல்லது செய்யகள் என்று எதிர்பார்க்க முடியும்.


ஒரு முறை சட்டமன்ற உறுப்பினரை சந்திக்க சென்றோம். அப்போது  ஊர் பிரச்சனையை பற்றி விவாதிக்கும் போது.. சும்மாவா ஓட்டுப் போட்டார்கள் காசு வாங்கினுதானே ஓட்டு போட்டார்கள்.. என்று மறுத்து அனுப்பினார். உண்மைதான் ஒரு ஓட்டுக்கு 500, 1000 என வாங்கிக்கொண்டு பிறகு நமது பகுதிக்கு ஏதும் செய்ய வில்லை என்பதில் அர்த்தம் இருக்கிறதா.

தற்போது பாருங்கள் கட்டிக்கொடுக்கும் பெண்ணுக்கும் தரும் சீர்வரிசையைப்போல் ஏராளமான பொருள்கள் தருவதாக வாக்குறுதிகளை அள்ளி வீசிக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் இதை கருத்தில் கொண்டே வாக்களிக்க தயாராகி கொண்டிருப்பார்கள். அப்படியென்றால் வசிய தேவைகளான சாலை, குடிநீர், போக்குவரத்து, மின்சாரம், வேலைவாய்ப்பு, கல்வி இவற்றின் மேம்பாட்டிற்கு எந்த அறிவிப்புகளும் இல்லை.  இலவசங்கள் மட்டும் கொடுத்தால் போதுமா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, ஆகியவற்றை தருகிறார்கள் சரி அவற்றிற்கான மின்சாரத்தை எப்படி அதிகரிக்கப் போகிறார்கள். (தற்போதே தமிழகத்தின் எல்லா பகுதியிலும் 3 மணிநேர மின் தடை அமுலில் இருக்கிறது)
வேலை வாய்ப்புகளை அதிகரித்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தினால் அனைத்து வசதிகளையும் மக்களே ஏற்படுத்திக் கொள்ளப் போகிறார்கள். அது ஆள்பவர்களுக்கும் தெரியும் ஆனால் என்ன செய்ய மக்களின் பலவீனம் இப்படி இருக்கிறது.

இப்படி இலவசங்களை வாங்கிக் குவித்துக் கொண்டு நாட்டின் ஆட்சி சரியில்லை, ஆட்சியாளர்கள் சரியில்லை, நாட்டின் பொருளாதார நிலை சரியில்லையென குறை கூறுவது எந்த விதத்தில் நியாயம். ஆட்சியாளர்களை மாற்றியது மக்களா.. அல்லது மக்களை மாற்றியது ஆட்சியாளர்களா என்பதில் விவாதித்தால் இறுதியாய் இரண்டு நிலையிலும் பாதிப்படைவது மக்களே.. மக்களே...


இலவசங்களை வெறுத்து சமுதாய அக்கரையுடன் யோசிப்போம்.. அப்போதுதான் எதிர்காலத்தில் அரசியல் மக்களுக்காக இருக்கும். அமெரிக்காவே பொருளாதார சூழலில் சிக்கித்தவித்த இன்றைய காலகட்டத்தில் இதுபோன்ற இலவசங்கள் நாட்டை என்ன செய்யும் ‌என்று ஏன் யாரும் யோசிக்காததுதான் வெட்கக்கேடு.


இது என்தரப்பு நியாயம் தான் உங்கள் தரப்பு நியாயத்தையும்
பதிவு செய்யுங்கள்..

23 March, 2011

இவைகள் விசித்திரக் கிழக்குகள்...

 
 கிராமங்கள்...
மக்களை நகரத்திற்கு தத்துக் கொடுத்துவிட்டு
குருவிகளை இழந்த மரமாய்
வெறும் கூடுக‌ளை மட்டுமே 
சுமந்து கொண்டிருக்கிறது...

 கொக்குகள் குடித்தனம் நடத்திய ஏரிகள்
தற்போது புதர்களுக்குள்
முடங்கிப்போய் இருக்கிறது...

நிலவுகள் குதித்து ஆடிய ஆற்றுப்படுகை
விண்மீன் நனையக்கூட வழியில்லாமல்
வாடிக்கொண்டிருக்கிறது...

ளையல் ஓசைகளை
கேட்டுக் களித்த வயற்காடுகள்
விளைச்சலை மறந்து வீரியம் இழந்திருக்கிறது...

காதலர்கள் கைகோர்த்து திரிந்த
அந்த கம்மாக்கறை
இன்று இரண்டையும் காணவில்லை...

முக்கால விளக்கு பூஜை
இருவேளை படையல்
வேப்பிலை அணிந்துக் கொண்டு
ஒய்யாரமாய் காட்சி தந்த அம்மனோ...
இன்று பாழடைந்த மண்டபத்தில் ஒண்டிக்கிடக்கிறாள்...

பூக்களோடு புன்னகையும் உதிர்த்துவிட்டு
பசுமையற்றுக்கிடக்கிறது
அன்று காய்த்து கனிந்த மாந்தோப்பு..

சந்தம் தேவையில்லை
வறட்சியாவது வராமல் இருக்கட்டும்
என காலத்தோடு
போரடிக்கொண்டிருக்கிறது 
காக்கையும் குருவியும்...

லகமே
அமுதம் விளைகிற
அட்சய பாத்திரங்களை அழுக்குப்படுத்தியா
நீ சுகம்காண துடிக்கிறாய்...

ற்போது... நாட்டின் முதுகெலும்புகளில்
கறையான்களின் குடியிருப்பு...

சந்தத்தை மட்டுமே பாடிய
கிராமத்து குயில்களின் இராஜங்கம்
இன்று கோட்டான் வசம்...

ரு காலப் பெட்டகம்
காலனின் கையில்...

ரு இயற்கை ஓவியம்
இயற்கை எய்திக்கொண்டு...

றுதியாய் கிராமங்கள்...
சூரியனைத் தொலைத்துவிட்டு
விடியலைத் தேடிக் கொண்டிருக்கும்
விசித்திரக் கிழக்குகள்...நிறைகுறைகளை சுட்டிக் காட்டிங்கள்...
அப்போதுதான் என் எழுத்துக்கள் இன்னும் வலுப்படும்...22 March, 2011

இரண்டு சூப்பர் ஸ்டார்கள் கூட்டணி...20 ஆண்டுகளுக்குப் பிறகு அமிதாப்புடன் இணைந்து நடிக்கிறார் ரஜினிகாந்த். ராணா படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் அமிதாப்.

எண்பதுகளில் ரஜினி தனது பாலிவுட் பிரவேசத்தைத் தொடங்கியதே அமிதாப்புடன்தான். அந்தாகானூன் படத்தில் ரஜினியும் அவரும் இணைந்து நடித்திருந்தனர். தொடர்ந்து கிராப்தார், ஹம் உள்ளிட்ட படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர்.

1991-ல் வெளியான ஹம் படத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்கவில்லை. இந்த நிலையில் ராணா தமிழில் மட்டுமல்ல, இந்தியிலும் நேரடிப் படமாகவே உருவாகிறது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் அமிதாப். இதனை அமிதாப்பும் உறுதிப்படுத்தியுள்ளார்.


மணமகள் தேவை... உதவிக்கு நீங்க வரலாம்..


“ நீங்க பத்திரிகையிலே கொடுத்திருந்த விளம்பரத்தைப் பார்த்தேன்”
 
“அப்படியா?”
 
“85 வயசான மணமகனுக்கு ஒரு மணமகள்  தேவைன்னு கொடுத்திருந்தீங்க.”
 
“ஆமாம்.”
 
“அதுதான் வந்திருந்தேன்.”
 
“ஹி... அப்படியா... ரொம்ப சந்தோஷம்!”
 
“இந்த வயசுலேயும் நீங்க ரொம்ப உற்சாகமாத்தான் இருக்கீங்க..!”
 
“இதோ பாரும்மா.... ஆர்க்கிமிடீஸ் முகம் பார்க்கற கண்ணாடியைத் தனது 75 ஆவது வயசுலேதான் கண்டுப்பிடிச்சார். பிளாட்டோ தனது 80 ஆவது வயசுலே தான் கிரேக்க மொழியைக் கத்துக்கிட்டார். சாப்போக்கல்ஸ் என்கிற அறிஞர் ஓடிப்பஸ் ரெங்க்ஸ்ங்கற நூலை தனது 70 ஆவது வயசுலேதான் எழுதினார். கதே தனது புகழ் பெற்ற நூலான பாஸ்ட் (Faust) இன் இரண்டாம் பாகத்தை தன்னுடைய 83ஆவது வயசுலேதான் எழுதி முடிச்சார். கோன்ராட் அட்னியா தனது 73ஆவது வயசுலே பெடரல் ரிபப்ளிக் ஆப் ‌ஜெர்மனியின் சான்ஸ்ஸல்லர் பதவியை ஏற்ற 87 ஆவது வயசுவரை திறம்பட பணியாற்றினார்.”

“பரவாயில்லையே... நீங்க உங்க 85 ஆவது வயசுலேயும் இவ்வளவு விவரத்தை மறக்காம ஞாபகத்துலே வச்சிருக்கீங்களே..!”
 
“நானும் கூட நிறையச் சாதிக்கணும்னு தான் நினைக்கிறேன். அதனாலேதான் அப்படி ஒரு விளம்பரம் கொடுத்தேன்.”
 
“உங்களுக்கு இரண்டு கோடி ரூபாய் சொத்து இருக்கறதாகவும், அந்த விளம்பரத்துலே சொல்லியிருக்கீங்க!”
 
“இது இருக்கட்டும்.. உன்னைப் பார்த்தா வயசு ரொம்ப குறைச்சலா தெரியுது. எனக்கு வயசு 85. அது உனக்கு வருத்தம் இல்லையா?“
 
“உங்களுக்கு இன்னும் ஒரு பத்து வயசு கூடுதலா இல்லையே-ன்னு நினைக்கறப்பதான் எனக்கு வருத்தமா இருக்கு..!” (அப்பதானே சொத்து என் பேருக்கு வரும்). நன்றி : தென்கச்சியார்.

இன்றைய திருமணங்கள் பெரும்பாலும் வரதட்சணைகள் இல்லாமல் முடிவதில்லை. பெண்பார்க்கும் போதே பெண்ணுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது எவ்வளவு தருவார்கள் என்றெல்லாம் கணக்கு பார்த்தப்பிறகு தான் அடுத்தக்கட்ட நடவடிக்கையே ஆரம்பிக்கிறது. இன்னும் சிலர் படித்தது வேலைசெய்யும் பெண்கள் மட்டுமே வேண்டும் என்ற நோக்கில் தேடுகிறார்கள்.

தற்போதல்லாம் திருமண உதவி மையங்கள், திருமண தகவல் நிலையங்கள், செய்தி தாள்களில் மணமகன் தேவை என்ற விளம்பரங்கள் அதிக அளவில் இடம் பெறுகிறது. எத்தனையோ பெண்கள், குடும்பங்கள் இது போன்ற போலியான தகவல்களை சரியாக அலசாமல் மாட்டிக் கொண்டு அல்லல் படுகிறார்கள். மக்களே விளம்பரங்களை நம்பி ஏமாறாதீர்கள். அவற்றை தீர ஆராய்ந்து அதன் பிறகு முடிவெடுங்கள் அது தான் நல்லது.

தற்போது வெளிநாட்டு மோகம் அதிக அளவில் பரவிவருகிறது. வெளிநாட்டு மாப்பிள்ளை என்று சொல்லிக் கொள்ளவே அவர்கள் என்ன வேலைசெய்கிறார்கள், எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்று யோசிக்காமல் பெண்ணை மனம் முடித்து விட்டு பின்னர் கண்களை கசக்கிக் கொண்டு இருக்கும் குடும்பங்கள் ஏராளம் ஏராளம் (அதற்காக வெளி நாட்டு மாப்பிள்ளை வேண்டாம் சொல்ல வில்லை).

ஆகையால் மணமகள் தேவை என்ற விளம்பரத்தை பார்த்தவுடன் தன் பெண்ணுடைய அனைத்து தகவல்களையும் முன்கூட்டியே தராமல் ஆராய்ந்து முடிவெடுங்கள்...  திருமணம் என்பது இருமணமும் இணைந்து கூடும் பந்தம் அதைவிட்டு இருமணத்தையும் மற்றவர்களின் உதவிக் கொண்டு இணைக்க யாராலும் இணைக்க முடியாது.

கடைசிய ஒரு காமெடி :
 
என்னங்க நமக்கு திருமனம் செய்து வைத்தாரே அந்த ஜோசியர் ஒரு விபத்துல இறந்துட்டாராம்..
 
அப்படியா.. 

என் பாவம் அவனை  சும்மா விடாதுன்னு அப்பவே சொன்னேனே..
*******************************************************************************
என்ன பாஸ்... எனக்கு தெரிந்த விஷயத்தை தங்களுக்கும் சொல்ல வேண்டும் என்று தோன்றியது சொல்லிவிட்டேன்..

இந்த தளம் தங்களுக்கு பிடித்திருந்தால் தங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.. மறக்காமல் உங்களுடைய கருத்தையும் பதிவுச்செய்யுங்கள்..
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...!

21 March, 2011

இராத்திரி நேரத்து இம்சைகள்...ண்ணீரால் நனைந்த 
ஈரத்தோடு வந்தது
சகோதரியின் கடிதம்...

“தயவுசெய்து செய்வதாய் சொன்ன 
சீரை சீக்கிறம் செய்து விடுங்கள்..”


நிலை அறிந்தும் 
கேட்பதை விட வேறு வழியில்லையென
கேட்டே விடுகிறான் சகோதரன்...

“தேர்வுக்கட்டணம் செலுத்த 
இந்த வாரம்தான் இறுதி”


யங்கியும் தவிப்போடும் 
தாயுள்ளம் விண்ணப்பம் வைக்கிறது..

“நேற்றோடு மாத்திரைகள் 
தீர்ந்துப்போனது..”

ந்த நாள் முதல் 
எனக்கு ஏதுவுவே செய்வதில்லை 
கண்னை கசக்கி மனைவி சொல்கிறாள்...

“உங்க வீட்டார்க்கே 
‌எல்லாத்தையும் செய்றீங்க”

கொடுக்கவும் முடியாமல்
மறுக்கவும் முடியாமல்
விம்பிக் கொண்டிருக்கும் என்னை 
அடைக்காத்துக்கொண்டிருக்கிறது இரவு...
ன் கண்ணீரை
யாருக்கும் காட்டாமல்...


இந்த கவிதை உங்களை பாதித்திருந்தால் 
அந்த பாதிப்பை இங்கே பதிவு செய்துவிட்டு செல்லுங்கள்..19 March, 2011

பத்துக்கு பத்து - கோடம்பாக்கம் கார்னர் (19-03-2011)


தள்ளிப்போகிறது மங்காத்தா
 
டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத்தில், நடிகர் அஜித் - நடிகை த்ரிஷா ஜோடி நடித்து வரும் புதிய படமான மங்காத்தா ரீலிஸ் தேதி தள்ளிப்போகிறது. அஜித் பிறந்த நாளான மே 1ம்தேதி படத்தை ரீலிஸ் செய்யும் திட்டத்துடன் விறுவிறுப்பாக சூட்டிங்கை நடத்தி வரும் குழுவினர், இப்போது ரீலிஸை ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்க முடிவு செய்துள்ளனர்.

அஜித் - த்ரிஷா தவிர லட்சுமிராய், பிரேம்ஜி அமரன், அர்ஜூன், வைபவ் உள்ளிட்டவர்கள் நடித்து வரும் இப்படத்தின் இறுதிகட்ட சூட்டிங் இப்‌போது மும்பையில் நடந்து வருகிறது. ஏப்ரல் 16ம்தேதி வரை மும்பையில் நடக்கவுள்ள படப்பிடிப்பை முடித்த கையோடு 2 பாடல் காட்சிகளை எடுக்க வெளிநாட்டுக்கு செல்ல திட்டமிட்டிருக்கிறார் வெங்கட்பிரபு. அதன் பிறகுதான் படத்துக்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை செய்ய முடியும். எனவே, தமிழகத்தில் தேர்தல் பரபரப்பு ஒருபுறம், ஐபிஎல் கிரிக்கெட் ஒருபுறம் என பரபரப்புக்கு இடையே படத்தை அவசரம் அவசரமாக ரீலிஸ் செய்ய வேண்டாம் என நினைக்கிறதாம் தயாரிப்பு தரப்பு. இதனால் மே மாதம் என இருந்த ரீலிஸ் தேதி ஜூன் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

********************************************************************************* 
விக்ரமின் பிதா, தெய்வ திருமகன் ஆனது 

 நடிகர் விக்ரம் அடுத்து நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு தெய்வ திருமகன் என பெயரிடப்பட்டுள்ளது. மதராசபட்டனம் விஜய் இயக்கத்தி்ல உருவாகும் புதிய படத்தில் விக்ரம் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்கு முதலில் தெய்வமகன் என்று பெயரிடப்பட்டது. தெய்வமகன் பெயரை ஏற்கனவே ஒருவர் பதிவு செய்து வைத்திருந்ததால் பிதா என மாற்றப்பட்டது. பிதா என்ற தலைப்புக்கும் வேறோருவர் உரிமைகொண்டாடியதால் இப்‌போது படத்தின் பெயரை தெய்வ திருமகன் என மாற்றியுள்ளனர்.

படத்தில் விக்ரம் ஜோடியாக அனுஷ்கா, அமலா பால் நடிக்கிறார்கள். டைரக்டர் விஜய்யின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான நீரவ் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தெய்வ திருமகன் படத்தில், விக்ரம் முத்து என்ற மனநலம் பாதிக்கப்பட்ட கேரக்டரில் நடிக்கிறார். அமலா பால் விக்ரமின் மனைவியாக நடிக்கிறார். இப்படம் ஐ யம் ஷாம் என்ற படத்தின் தழுவல் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் அதனை டைரக்டர் விஜய் மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

*********************************************************************************
என்ன துரத்தப்பார்க்கிறார்கள் - ஜெனிலியா


ஜெனிலியா கூறியது: ‘பாலிவுட்டை உதறிவிட்டு கோலிவுட்டுக்கு போனவர், இப்போது மீண்டும் பாலிவுட்டில் தஞ்சம் புகுந்திருக்கிறார்' என்று மும்பையில் சிலர் என் மீது புகார் கூறுகின்றனர். இது யாரோ கட்டிவிடும் கதை. நான் பாலிவுட்டுக்கு வந்தது பிடிக்காமல் என்னை துரத்தப் பார்க்கிறார்கள். பாலிவுட்டில்தான் அறிமுகம் ஆனேன். அதன்பிறகு கோலிவுட், டோலிவுட்டில் பெரிய வரவேற்பு கிடைத்தது. 

ஷங்கரின் ‘பாய்ஸ்' படத்தில் நடித்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் ‘துஜே மேரி கஸம்' என்ற இந்தி படத்திலும் நடித்துக் கொண்டிருந்தேன். தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் ஒரே நேரத்தில் அறிமுகமான நடிகை நான் ஒருத்திதான். இப்போதுதான் நான் இந்தியில் கவனம் செலுத்துவதாகவும் பாலிவுட்டில் லாபம் அடைய வந்திருப்பதாகவும் கூறுவது தவறு. ஷூட்டிங்கிற்காக மும்பை, சென்னை, ஐதராபாத் என்று 3 நகரங்களுக்கும் சுற்றி சுற்றி வட்டமடித்துக் கொண்டிருந்தேன். ஒரு வெற்றி, இந்த பேச்சுக்களையெல்லாம் மாற்றிவிடும். அதற்காக காத்திருக்கிறேன்.

*********************************************************************************
மணிரத்னம் படத்திலிருந்து விக்ரம் விலகல்?


ராவணன் டப்பா ஆனபிறகும் மணிரத்னம் அழைத்தார் என்று படப்பிடிப்பை கேன்சல் செய்து அவரைப் பார்க்கப் போனார் விக்ரம். இந்த அழைப்பு பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பது தொடர்பாக இதே படத்தில் முக்கிய வேடத்தில் விஜய்யும், மகேஷ்பாபுவும் நடிப்பார்கள் என்ற செய்தி வெளியான பிறகு விக்ரமின் உற்சாகம் வடிந்துவிட்டது.

எதிர்பார்த்தது போல முக்கியமான ரோல்கள் அவர்களுக்கு, இரண்டாவது ஹீரோ போன்ற வேடம் விக்ரமுக்கு. இதனால் படத்திலிருந்து அவர் விலகிவிட்டதாக நம்பத்தகுந்த செய்திகள் தெ‌ரிவிக்கின்றன. விக்ரமுக்குப் பதில் அந்த வேடத்தில் ஆர்யா நடிப்பார் என தெ‌ரிகிறது.
***************************************************************************************
இசை அமைப்பதையே நிறுத்தி விடுகிறேன் - இளையராஜாஇளையராஜா இசையில் உருவாகியிருக்கும் 'அழகர்சாமியின் குதிரை' படத்தின் இசை அண்மையில் சென்னையில் வெளியிடப்பட்டது. இசை வெளியீட்டுக்குப் பிறகு பத்திரிகையாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர். இதில் இளையராஜாவும் கலந்துகொண்டார்.

இளையராஜா பேச ஆரம்பித்ததுமே நிகழ்ச்சி பரபரப்பாக துவங்கியது. காரணம் அவர் ஆரம்பித்ததே சூப்பர் ஸ்டாரை வைத்துதான். இதில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் அப்புக்குட்டியை பார்த்து. "நீ மேடை ஏறியபோது எவ்வளவு பேர் கைதட்டினார்கள் பாத்தியா? ஆனால் அதனால நீ சூப்பர் ஸ்டாராக ஆகமுடியாது. அதேபோல சூப்பர் ஸ்டாரல இந்த வேடத்தில் நடிக்க முடியுமா? அதுதான் படம்." என்று பேச்சை துவங்கியவர். பூகம்பம் ஏன் வருகிறது. அதற்கும் மனிதர்களுக்கும் என்ன சம்மந்தம் என்று எப்போதும் போல புரியாதவாரே பேசியவர்,

"இந்த படத்திற்கு இப்போதுதான் பின்னணி இசை சேர்ப்பு வேலையை முடித்திருக்கிறேன். இப்போது கூட டைட்டில் இசை சேர்ப்பு பணியில்தான் இருந்தேன். இந்த படத்தின் இசையை கேட்கும்போது மக்களின் கண்களில் இருந்து கண்ணீர் வரும். அப்படி வரவில்லையென்றால் நான் இனி இசையமைப்பதையே நிறுத்தி விடுகிறேன்" என்றார். பிறகு எப்போதும்போல மறுபடியும் எதை எதையோ பேச ஆரம்பித்து இறுதியில் 'வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் போஸ்டர்களை பார்த்தபோதே அந்த படம் வெற்றி பெறும் என்று நான் சொன்னவன். அதுபோல இந்த படமும் கண்டிப்பாக வெற்றிபெறும்." என்றார்.

***********************************************************************************
ஒரு சூப்பர் ஸ்டாரும் தீவிர ரசிகனும்!தொலைக்காட்சி உலகில் முன்னணி நடிகர் வேணு அர்விந்த். சினிமாவில் எப்போதோ அறிமுகமாகியும் கூட பெரிய அங்கீகாரம் கிடைக்காமல் போகவே, சின்னத் திரைப் பக்கம் போய் வெற்றிக் கொடி நாட்டியவர். இப்போது மீண்டும் பெரிய திரையில் களமிறங்கியுள்ளார்… வெறும் நடிகராக மட்டுமல்ல, ஒரு இயக்குநராக. சபாஷ் சரியான போட்டி என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படம், ஒரு சினிமா சூப்பர் ஸ்டாருக்கும் அவரது தீவிர ரசிகனுக்குமான உறவைச் சித்தரிக்கிறதாம்.

சூப்பர் ஸ்டாராக ஜெயராமும், அவரது ரசிகனாக ஸ்ரீராம் கார்த்திக்கும் நடித்துள்ளனர். அஞ்சனா நாயகியாக நடிக்கிறார். தமன் இசையமைத்துள்ளார்.

படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை பிரசாத் லேப் வளாகத்தில் நடந்தது. கிட்டத்தட்ட சின்னத்திரை உலகமே திரண்டு வந்துவிட்டதைப் போல, எக்கச்சக்க டெலிவிஷன் நட்சத்திரங்கள் குவிந்துவிட்டனர் விழாவில். முதல் இசைத் தகடை இயக்குநர் பாலுமகேந்திரா வெளியிட, இயக்குநர்கள் ஆர்கே செல்வமணி, சமுத்திரக்கனி, வெற்றிமாறன் மற்றும் அபிராமி ராமநாதன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
***********************************************************************************
ஏப்ரல் மாதம் காதலியுடன் பிருத்விராஜ் திருமணம்  


‘கனா கண்டேன், ‘மொழி, ‘நினைத்தாலே இனிக்கும், ‘அபியும் நானும் என கோலிவுட்டில் அவ்வப்போது தலைகாட்டும் பிருத்விராஜ், மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லாலுக்கு போட்டி ஹீரோவாக வலம் வருகிறார். சந்தோஷ் சிவன் இயக்கத்தில் ‘உருமி“ படத்தில் நடித்துள்ளார். விரைவில் இந்தி படமொன்றிலும் நடிக்கிறார்.பிருத்விராஜ் உடன் நடிக்கும் ஹீரோயின்களுடன் அடிக்கடி காதல் கிசுகிசுக்களில் சிக்குவார். தற்போது மீண்டும் பரபரப்பான காதல் கிசு கிசுவில் சிக்கி இருக்கிறார் பிருத்வி. ஒரு வருடத்துக்கு முன்பு டிவி நிகழ்ச்சிக்காக பேட்டி காண வந்த பெண் நிருபரை சந்தித்ததும் காதலில் விழுந்தாராம் பிருத்வி. அந்த பெண் மும்பைவாசி. இது பற்றிய ரகசியம் வெளிவராமல் இருப்பதற்காக வார இறுதி நாட்களில் மும்பைக்கு ரகசிய விசிட் அடித்துக் கொண்டிருந்தார் பிருத்வி. இந்த ரகசிய காதல், இப்போது மல்லுவுட்டில் லீக் ஆகி இருக்கிறது. விஷயம் பிருத்வியின் அம்மாவுக்கு தெரிந்ததும் அவரும் பச்சை கொடி காட்டிவிட்டாராம். ஏப்ரல் மாதம் காதலியுடன் திருமணம் நடக்கிறது. பிறகு திருவனந்தபுரத்தில் ஊர் அறிய திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருக்கிறாராம் பிருத்வி.

*********************************************************************************
நடிகர் தாமுவுக்கு இரட்டை பெண் குழந்தை


காமெடி நடிகர் தாமுவுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. தமிழ் சினிமாவில் நூற்றுக்கணக்கான காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருப்பவர் நடிகர் தாமு. இவருக்கும் இவரது மனைவி சுந்தரிக்கும் கடந்‌த 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு குழந்தை இல்லாமல் இருந்த தம்பதியருக்கு இனிப்புச் செய்தியாக சுந்தரி கர்ப்பமானார். இதையடுத்து டாக்டர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை மேற்கொண்ட வந்த சுந்தரிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. பிரசவத்திற்கு பிறகு குழந்தைகளும், தாயும் நலமுடன் இருக்கிறார்கள். திருமணமாகி 12 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை அதுவும் இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதால் தாமு தம்பதியர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நண்பர்கள், திரையுலக பிரமுகர்களுக்கு இனிப்பு கொடுத்து கொண்டாடி வருகிறார் தாமு.   

********************************************************************************* மீண்டும் ஜோடியாக நடிக்க  தயார் - சூர்யா ஜோதிகா!


நடிகர்களுக்கு நடிப்பைத் தொடர திருமணம் ஒரு தடையாக இருப்பதில்லை. ஆனால் நடிகைககள்தான் திருமணத்திற்குப் பிறகு தொடர்ந்து நடிப்பதில் ஏகப்பட்ட இடியாப்பச் சிக்கல்கள். பெரும்பாலானவர்கள் மீண்டும் நடிக்கு வந்து விடுகிறார்கள். கலையார்வத்தைக் கட்டுப்படுத்த முடியவிலல்லை என்பதே இவர்களிடம் இருக்கும் ரெடிமேட் பதில். இந்த சினிமா நியதிக்கு உட்படாத நடிகைகள் யாராவது இருக்கிறார்களா என்றால்... ம்ஹூம் ரொம்பக் கம்மி(ராதாவும் நடிக்கத் தயார் என்று ஸ்டேட்மெண்ட் விட்டுவிட்டார்)! அந்த வகையில் ஜோதிகாவும் இப்போது நடிக்க வந்து விட்டார்.

எக்காரணம் கொண்டும் ஜோதிகா இனி நடிக்க மாட்டார் என திருமண வரவேற்பின்போது அறிவித்தார் அவரது மாமனார் சிவகுமார். ஆனால் இதோ, நான்காண்டுகள் கழிந்த நிலையில் இப்போது ஜோதிகா நடிக்கவுள்ளதாக கணவர் சூர்யாவே அறிவித்துள்ளார். சமீபத்தில் ஒரு விளம்பரப் படத்தில் சூர்யாவும், ஜோதிகாவும் கணவன்-மனைவியாக ஜோடியாக நடித்துள்ளனர். ஒரு காபி விளம்பரம் அது.

இது ஒரு ட்ரையல்தான் போலிருக்கிறது. இப்போது, பெரிய வாய்ப்பிருந்தால் சொல்லுங்கள், கணவன் - மனைவியாக முழுப்படத்திலும் நடித்துக் கொடுக்கிறோம் என்று அறிவித்துள்ளனர் சூர்யாவும் ஜோதிகாவும்!

*********************************************************************************  
'வேலாயுதம்' படத்தில் ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் 


வேலாயுதம் படத்தில் படுபிசியாக இருக்கிறார் நடிகர் விஜய். இப்படம் விஜய் பிறந்தநாளில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம் ராஜா இயக்கும் படம் “வேலாயுதம்”. இப்படத்தில் விஜய், ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடிக்கின்றனர். விஜய்யின் தங்கையாக சரண்யா ‌மோகன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ‌சென்னையில் மும்மரமாக நடைபெற்று வருகிறது. ‘வேலாயுதம்Õ படத்தில் ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் டாம் டெல்மர் அமைக்கும் சண்டை காட்சியில் விரைவில் நடிக்க இருக்கிறார் விஜய். 

*****************************************************************************
நல்லதா ஒரு நாலு வார்த்தை சொல்லிட்டு போங்க...


18 March, 2011

காதலன்னா சும்மா இல்ல..காதல் பற்றிய உலக பொன் மொழிகள் பாகம் - 1

fg
வாழ்க்கை என்பது மலரானால்
காதல் என்பது அதிலிருந்து 
எடுக்கப்பட்ட தேன்..!
-விக்டர் ஹியூகோ

**********************************************************************************
ழகிய பெண்ணும்
அவள் அளிக்கும் காதலும் தான்
இன்று வரை உலகத்தை அழியாது 
காப்பாற்றி வருகிறது..!
-சாக்ரடீஸ்
**********************************************************************************


பெண்களின் அழகிய தோற்றமல்ல
அன்புதான் உண்மையான
‌காதலை உண்டாக்கும்..!

-ஷேக்ஸ்பியர்
***********************************************************************************

காதல் கொள்ளும் காளையர்களைக்
கன்னியர்கள் எப்போதும்
சிறுபிள்ளைகளாகவே மதிப்பார்கள்...!

-தாகூர்
***********************************************************************************
 
காதல் ஒரு நாயைக்கூட
எதுகை மோனையுடன்
குறைக்கச் செய்கிறது...!

-பிளட்சர்
***********************************************************************************
காபியும் காதலும் 
சூடாய் இருந்தால் தான் ருசி...!

-ஜெர்மன் அறிஞர்
*******************************************************************************
காதல், ம‌டமை இரண்டும்
பெயரில்தான் வேற்றுமை..!

-ஹங்கோரிய பழமொழி
*******************************************************************************

கோடாரியின் ஒரே வெட்டில்
மரத்தை சாய்க்க முடியாது
ஆனால் காதலியின் ஒரே பார்வையில்
மனிதனைச் சாய்க்க முடியும்...!

-மெக்சிகோ பழமொழி

***********************************************************************************
காதல்  ஒன்று தான்
பங்காளிகளை அனுமதிப்பதில்லை..!

-பல்கொரிய பழமொழி
***********************************************************************************
பெண்மீது கொள்ளும் காதல்
மனித சமுதாயத்தை வாழ வைக்கிறது..
ஆனால் பணத்தின் மீது கொள்ளும் காதலோ
அவனை அழித்து விடுகிறது...!

-பிளாட்டோ
***********************************************************************************

நல்லதா ஒரு நாலு வார்த்தை சொல்லிட்டு போங்க...
17 March, 2011

சுனாமி சோகம்... ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி!


நிலநடுக்கம், சுனாமி, அணுக்கதிர் வீச்சு என சொல்லொணாத சோகத்துக்குள்ளாகியுள்ள ஜப்பான் மக்களுக்கு மிகப்பெரும் அளவில் உதவிகள் செய்யத் திட்டமிட்டுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

வழக்கமாக தான் செய்யும் உதவிகளைக் காட்டிலும் பல மடங்கு அதிக பணம் மற்றும் பொருள் உதவியைச் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் ரஜினி.

தனியொரு மனிதராக சில கோடி ரூபாயை வழங்குவதை விட, நிறைய நடிகர்கள் மற்றும் நண்பர்களையும் உதவச் செய்து, பாதிக்கப்பட்ட நகரங்களின் மக்கள் பரவலாக நன்மை அடையும் வகையில் இந்த உதவி அமைய வேண்டும் என்று கூறியுள்ளார் ரஜினி.

ரஜினியின் இந்த முயற்சிக்கு நடிகர்கள் விஜய், சூர்யா உள்ளிட்டோரும் ஆதரவளித்துள்ளனர். கமல்ஹாஸனும் தன்னால் இயன்றவரை உதவுவதாக ரஜினியிடம் உறுதியளித்துள்ளதாகத் தெரிகிறது.

முதல் கட்டமாக, பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானுக்கு ஒரு குழு நேரில் போய் சேதங்களை மதிப்பிட உள்ளது. இந்த சேதங்களில் அரசாங்கம் சரி செய்வது போக, பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானிய மக்களின் குடும்பங்களுக்கு நிதி, பொருள் மற்றும் வீடுகள் மறுநிர்மாணத்துக்கான கட்டுமானப் பொருள்களை ரஜினி வழங்கவிருக்கிறார்.

இதுகுறித்து ராகவேந்திரா மண்டப நிர்வாகிகளிடம் விசாரித்ததில், இதுவரை இல்லாத அளவுக்கு, ஜப்பானிய மக்களின் துயர் துடைக்க ரஜினி சார் பெரும் முயற்சி எடுத்து வருவது உண்மைதான். இந்தத் திட்டம் முழுமையான பிறகு, விவரங்களை சாரே சொல்வார், என்றனர்.

இந்திய திரையுலகில் எம்ஜிஆருக்குப் பிறகு ஜப்பானில் ரசிகர் மன்றம் தோன்றியது ரஜினிக்கு மட்டுமே. ஜப்பானிய மக்கள் ரஜினிக்கு தங்களின் விருப்ப நாயகன் என்ற அந்தஸ்தைக் கொடுத்துள்ளனர்.

ஜப்பானில் அதிக நாட்கள் ஓடிய ஒரே இந்தியப் படம் ரஜினியின் முத்துதான். வசூலிலும் பெரும் சாதனை படைத்தது இந்தப் படம். ஜப்பானிய பாராளுமன்றத்திலும் இதுகுறித்து முன்பு பிரதமர் மன்மோகன் சிங் பேசியது நினைவிருக்கலாம். (நன்றி தட்ஸ் தமிழ்)

ரஜினி பற்றி  செய்தி நானும் போடனுமில்ல அதுக்காதத்தான்...


 

கண்ணாடியில் உங்கள் பிம்பம் என்ன செய்கிறது..?


புகழ் பெற்ற ஜென் குருவை தேடி, ஒரு நாள் ஒரு இளைஞன் வந்தான். ஜென் தத்துவப்படியே அவன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருந்தான். மேலும் தன் வாழ்க்கை சுகமாக அமைய புதுப்புது ஜென் கருத்துக்கள் அவனுக்கு தேவைப்பட்டன. ஆதனால் ஜென் குருவான அ‌வரைத்‌ தேடி வந்தான்.

அவரை வணங்கிய அவன், “குருவே! நானும் ஒரு தத்துவ மாணக்கன்தான். எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம். அதை தங்களிடம் கேட்கலாமா?” என்றான்.

“கேள்!” என்றார் ஜென் குரு.

“முதலில் உன்னை நீ நேசி அப்போதுதான் உன்னால் மற்றவர்களை நேசிக்கமுடியும். தயவு செய்து இந்த விளக்கத்தை தாங்கள் எனக்குக் கூறவேண்டும்! என்றான் இளைஞன்.

ஜென் குரு மெல்லப் புன்னகைத்தார்.

"நீ பிறர் மீது வெறுப்பாகவோ, கோவமாகவோ, எதிர்ப்பாகவோ, இருக்கிறாய் என வைத்துக்கொள். அதனால் முதலில் பாதிக்கப்படுவர் யார்?” என்று கேட்டார் ஜென் குரு.

அந்த இளைஞன் சிறிது யோசித்துவிட்டு, ”முதலில் பாதிக்கப்படுவது என்றால்.. அது நானாகத்தான் இருக்க முடியும்!” என்றான்.

குரு மேலும் புன்னகைத்தார்.

”சரியாக சிந்தித்திருக்கிறாய். உன் எதிர்மறைச் செயலால் முதல் முதலில் பாதிக்கப்படுவது உன் எதிரியல்ல, நீதான். அதுபோல உன்னிடம் நீ நல்ல எண்ணங்களையும், செயல்களையும் வளர்த்துக் கொண்டால்... உன்னை நீ நேசித்தால்... உன் மீதே நீ அன்பு செலுத்தினால் அவற்றையேதான் நீ பிறர் மீதும் செலுத்துவாய். ஒத்துக் கொள்கிறாயா?” என்றான் இளைஞன்.

“ஒத்துக் கொள்கிறேன் குருவே!” என்றான் இளைஞன்.

“அதுதான் உன்னிடம் என்ன இருக்கிறதோ, அதைத்தான் நீ பிறருக்குத் கொடுக்க முடியும்” என்றார் குரு.

தெளிவான சிந்தனையுடன் அந்த இளைஞன், ஜென் குருவிடமிருந்து விடைபெற்றான்.
(நன்றி ஜென் கதைகள்)


உன்னைதான் சதோதரர்களே.. எதை விதைக்கிறோமோ அதைத்தானே அறுவடைச் செய்யமுடிமும். நாம் பிறருக்கு கொடுக்காததை நாம் அதை ‌அவரிடமிருந்து எதிர்ப்பார்ப்பது எவ்வளவு முட்டாள் தனம். இந்த உலகில் நாம் வாழும் காலத்தில் நாம் எதையெல்லாம் பெற நினைக்கிறோமோ அதையெல்லாம் நாம் பிறருக்கு கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். இதை அக்காலத்தில் “முற்பகல் செய்வின் பிற்பகல் விளையும்”  “வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான்” ‌போன் பழமொழிகளை கொண்டு சொன்னார்கள்.

நீங்கள் ஒரு நிலைக்கண்ணாடி முன்பு நில்லுங்கள்.. இப்போது பாருங்கள் நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதை ‌அப்படியே அந்த பிம்பம் செய்யும்.. நீங்கள் புன்னகைத்தால் உங்கள் பிம்பம் புன்னகைக்கும்.. நீங்கள் கோவப்பட்டால் அதுவும்  கோவப்படும். ஆம்  இந்த உலகம் ஒரு எதிரொளிபோலதான் தாங்கள் என்ன செய்துள்ளீர்களோ அதையே உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும்.

நாம் வாழும் காலம் வெறும் 50, 60  ஆண்டுகள் தான் பி்ன்பு ஏன் 1000 ஆண்டுகள் வாழப்போவது‌போல் பாவணைகள்.. இருக்கும் கொஞ்சம் காலமும் நாம் அனைவரிடமும் அன்பு காட்டி அரவணைப்போம். நம் வாழ்க்கையோடு இந்த உலகமும் வசந்த‌மடையும்.

/// அன்பை விதைப்போம் அறுவடைகள் ஆனந்தமாய்....////

என்ன பாஸ்... எனக்கு தெரிந்த விஷயத்தை தங்களுக்கும் சொல்ல வேண்டும் என்று தோன்றியது சொல்லிவிட்டேன்.. இந்த உலகில் எதிர்காலம் ஆனந்தமடைய நாமும் ஒரு விதை செய்வோமே..

இந்த தளம் தங்களுக்கு பிடித்திருந்தால் தங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.. மறக்காமல் உங்களுடைய கருத்தையும் பதிவுச்செய்யுங்கள்..
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...!


Related Posts Plugin for WordPress, Blogger...