கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label கொண்டாட்டம். Show all posts
Showing posts with label கொண்டாட்டம். Show all posts

30 January, 2012

பாபர் மசூதி இடிப்பு + ஒரு மகிழ்ச்சி தருணம் + என் இன்னொரு முகம்..


இதுவரை நீங்கள் பார்க்காத என் இன்னொரு முகத்தை, என் மற்றுமொறு பக்கத்தை உலகத்தமிழ்களோடு பகிர்ந்துக்கொள்ளவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஆசிரியர் பணி மற்றும் அச்சுபணி (Printing Press), ஆகியவையுடன் காவல்துறையிலும் என்னுடைய பரிமாணம் தொடர்கிறது.

மேல்நிலைப் படிப்பை முடித்தபிறகு கிராமத்தில் இருக்கும் இளைஞர்கள் முயற்சிக்கும் ஒரே அரசுப்பணி எதுவாக இருக்கும் என்றால் அது தமிழ்நாடு காவலர் வேலைதான். நானும் 5 ஆண்டுகளாக தொடர்ந்து காவலர் பணிக்கு முயற்சி எடுத்தேன். எல்லா பயிற்சியிலும் வெற்றிபெற்று தேர்‌வு வரை செல்வேன் அதன்பிறகு அவ்வளவுதான். எவ்வளவு மதிப்பெண் பெற்றுள்ளேன் என்பது கூட தெரியாது. அதன்பிறகு அந்த முயற்சியை விட்டுவிட்டு எங்கள் ‌தொழிலான அச்சுப்பணிக்கு வந்துவிட்டேன். பிறகு ஆசிரியர்.

காக்கி உடை உடுத்தவேண்டும் என்ற என்னுடைய ஆதங்கம் மற்றொறு வழியில் எனக்கு வந்தது. அது தமிழ்நாடு ஊர்க்காவல் படை. திருவள்ளூர் மாவட்டம் 1997-ல் புதியமாவட்டமாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு  காவல் துறையும் புதியதாக உறுவானது. 1999-ல் உறுவாக்கப்பட்ட ஊர்க்காவல் படையில் நான் இணைந்தேன். 12 ஆண்டுகளுக்கும் மேலாக காவல்துறையோடு இணைந்து பணியாற்றிக்கொண்டுடிருக்கிறேன். நான் பணிப்புரிவது C5- வெங்கல் காவல் நிலையம். தற்போது பதவி உயர்வுபெற்று ஊத்துக்கோட்டை உட்பிரிவில் பணியாற்றும் ஊர்காவல் படைக்கு உதவி படைபிரிவு தளபதியாக (Asst. Platoon Commander) இருக்கிறேன்.

ஒவ்வொறு ஆண்டும் டிசம்பர் 6 ஊர்க்காவல் படையினர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆனால் அன்றைய தினம் பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் அனைவரும் பாதுகாப்பு பணிக்கு சென்றுவிடுவோம். அதன்பிறகு உயர்அதிகாரிகளின் வசதிக்கு எற்றார்போல் ஒரு நாளில் கொண்டாடுவோம் அந்த கொண்டாட்டம் சனிக்கிழமை (28-01-2012) அன்று நடந்தது. அந்த விழாவைகுறித்த பதிவுதான் இது.

காலை 7.00 மணிக்கு அனைவரும் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் அலுவலக வளாகத்தில் கூடினோம். 8.00 மணிக்கு காலை சிற்றுண்டி. 9.00 மணிக்கு நகருக்குள் தலைகவசம் அவசியம் குறித்த ஒரு விழிப்புணர்வு பேரணியை நடத்தினோம். இப்பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பளர் திருமதி. வனிதா அவர்களும், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. செந்தில்குமார் அவர்களும் துவக்கி வைத்தார்கள். இந்த நிகழ்வுக்கு எங்கள் பரப்பு தளபதி (Area Commander) திருமதி ராதிகா வித்யாசாகர் அவர்கள் தலைமையேற்றார். (இந்த ஊர்வலத்தில் முதல் ஆளாக நின்றது நான்தான்) 60 இருசக்கர வாகனத்தில் இருவர் வீதம் இருவரும் தலைகவசம் அணிந்துக்கொண்டு நகர்முழுவதும் வளம்வந்து SP அலுவலகத்தில் முடிவுவெற்றது. ஒரு குழு நகரில் நடந்து சென்று தலைகவசம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கொடுத்துக்கொண்டு வந்தார்கள்.

 
(விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைக்கிறார் காவல் கண்காணிப்பாளர் திருமதி வனிதா, கூடுதல் SP திரு செந்தில்குமார், பேரணியின் முதலில் இருப்பது நானே)
 (நடந்து சென்று விழிப்புணர்‌வு துண்டு பிரசுரங்களை வழங்க தயாராகிறது மற்றொறு குழு) வலது ஓரத்தில் எங்கள் ஏரியா காமாண்டர் திருமதி ராதிகா வித்யாசாகர்)

காலை 11.00 மணிக்கு நல்லாதாய் ஒரு தேநீர் கிடைத்தது. அதன்பிறகு விளையாட்டுப்போட்டிகள் துவங்கியது. அனைத்து விளையாட்டுகளின் பொருப்புகளையும் ஒவ்வோறு அதிகாரிகளுக்கும் பிரிந்திருந்தோம் ஆனால் அனைத்தையும் நானே கவனிக்க நேர்ந்தது. முதலில் வாலிபால் போட்டி தோழர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நானும் போட்டியில் பங்கெடுத்தேன். போட்டியை Ad SP  அவர்கள் துவங்கி வைத்தார். 12.30 மணிக்கு ஓட்டப்பந்தையமும் நடந்தது.

(வாலிபால் போட்டிகளை சர்வீஸ் செய்து துவக்கி வைத்தார் Ad. SP திரு செந்தில்குமார், அருகில் ராதிகா வித்யாசாகர், மற்றும் மாவட்ட CC திரு ஜெயக்குமார். இடது ஓரம் களத்துக்குள் நான்)

மதியம் 1.30 மணிக்கு சிறப்பான மதிய உணவு பரிமாறப்பட்டது. ஒவ்வொருவருக்கும் ஒரு பிரிஞ்சி மற்றும் தயிர்சாதம். உணவு இடைவேளை முடிந்த பிறகு கபாடி போட்டிகள் துவங்கின. இதிலும் ஆள் இல்லை என்பதற்காக நானும் கலந்துக்கொள்ள நேர்ந்தது. வாலிபால் விளையாடத் தெரியும், கபாடி அந்தஅளவுக்கு வராது. இறுதியாய் எங்கள் அணி தோல்வியைக்கண்டது. (பின்னே நான் இருந்தேனில்ல).

(கபாடி போட்டியில் கில்லி விஜய் ரேஞ்சுக்கு முயற்சிசெய்தேன் ஆனால் பிடித்து விட்டார்கள்)

போட்டிகள் முடித்துக் கொண்டு மா‌லை 4.00 மணிக்கு நிகழ்ச்சிகள் துவங்கின. திருமதி ராதிகா வித்யாசாகர் அவர்கள் தலைமைதாங்க மாவட்ட SP திருமதி வனிதா அவர்களும், Ad SP திரு செந்தில்குமார் அவர்களும் கலந்துக்கொண்டனர். ‌மேலும் மாவட்டத்தின் அனைத்து அதிகரிகளும் நிகழ்ச்சிக்கு ஆஜர். 4.10 மணிக்கு தமிழ்தாய் வாழ்த்து. 


எங்களது ஏரியா கமாண்டர் திருமதி. ராதிகா அவர்கள் அழகிய தமிழில் சிறப்பான வர்ணனைகயோடு நிகழ்ச்சியை தொகுத்துகொடுத்தார். 4.30 மணிக்கு அணிவகுப்பு மரியாதை, 4.50 கலை நிகழ்ச்சிகள், 5.20 மணிக்கு என்னுடைய கவிதை வாசிப்பு, 5.30 மணிக்கு சிறப்பு விருந்தினர் SP மேடம் அவர்களும் சிறப்பான உறையாற்றி எங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினார்கள். இறுதியாய் 6.00 மணிக்கு தேசியகீதத்துடன் விழா நிறைவு பெற்றது.

அதன்பிறகு படா கானா என்று சொல்லப்படும் விருந்து. எல்லா VIP -க்களையும் வழிஅனுப்பிவைத்து விட்டு விருந்துக்கு வந்தேன். அப்போது Ad SP திரு செந்தில்குமார் அவர்களிடம் இருந்து எனக்கு அழைப்பு. உடனடியாக வாலிபால் எடுத்துக்கொண்டு  வீரர்களுடன் மைதானத்திற்கு வாருங்கள் எனக்கு வாலிபால் ஆட ஆசையாக இருக்கிறது என்றார். மாவட்டத்தின் SP  அவர்கள் அழைக்குபோது விருந்தாது மருந்தாவது என்று ‌அவருடன் இணைந்து நண்பர்களோடு வாலிபால் விளையாடியோம்.

இதில் நான், Ad. SP, மற்றும் வீரர்கள் ஒருப்பக்கமும், மற்றவீரர்கள் ஒருபக்கமும் இருந்தனர். சாருக்கு ஆர்வம் இருக்கிறது ஆனால் விளையாட ஒரளவுக்குதான் தெரிந்து வைத்திருக்கிறார். முதலில் தொல்வி அடைந்தோம். எதிரணி வலுவான அணி நான் அதில்தான் இருந்திருக்க வேண்டும் சாருக்காக நான் எதிபுறத்தில் ஆடினேன். 

(இந்த மனோதான் காக்கி உடையில் இருப்பாரா...
நாங்களும் போஸ் கொடுப்போம்ல...)

உயர்அதிகாரி தோற்கக்கூடாது என்பதற்காக அடுத்த போட்டியில் நண்பர்களுக்கு சிக்னல் செய்தேன். அதன்பிறகு அவர்கள் விட்டுகொடுத்து எங்களை ஜெயிக்க வைத்தார்கள். (இது எஸ்பி சாருக்கு தெரியாது). போட்டிகள் 7 மணிக்கு முடிந்தது அதன்பிறகு விருந்துக்கு வந்தால் எல்லாம் கதம் கதம் ஆயிருந்தது. (பார்சல் அதிகம் போய்விட்டதாம்) கிடைத்ததை உண்டுவிட்டு சில ஒப்படைப்பு பணிகளை முடித்துத்துக்கொண்டு இரவு 10.00 மணிக்கு வீட்டுக்கு வந்தேன்.

மாலை விழா  ஆரம்பித்தபிறகு என்னுடைய கேமரா பேட்டரி டவுன் ஆகிவிட்டதால் மாலை நேர நிகழ்வுகளின் புகைப்படம் எடுக்கமுடியவில்லை. நான் SP மேடமிடம் பரிசு வாங்கியது. கவிதை வாசித்தது போன்ற புகைப்படங்கள் கிடைக்கவில்லை.

31 December, 2011

பப்பரமிட்டாய் - அறுசுவைகளை அனுபவியுங்கள்... 31-12-2011

1. அறிஞர்கள் வாழ்வில் நகைச்சுவை :

ஓர் ஆன்மிக சொற்பொழிவின் போது, அனுமன் பிரம்மச்சாரி, கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து சாதனைகள் பல புரிந்தார். முக்கியமாக கிங் மேக்கராக இருந்தார். சுக்ரீவனுக்கு ஆட்சி கிடைத்தது அனுமனுடைய அறிவாற்றலால்தான்.

இராவணனைக் கொன்று இராமர் ஆட்சியை ஏற்கவும் அனுமன் பெரிதும் உதவினார். ஆக பெரிய நோக்கோடு பிரம்மச்சரிய விரதம் இருப்பவர்கள் எல்லோருமே கிங் மேக்கராக இருப்பார்கள் என்று திருமுருக கிருபானந்த வாரியார் குறிப்பிட்டார்.

உடனே கூட்டத்தில் பலத்த ஆரவாரமும், கைதட்டலும் எழுந்தன. அதற்குக் காரணம் அந்த மேடையில் காமராஜரும் இருந்தார். அவர் பிரம்ச்சாரி. அதோடு அப்போது நேருஜிக்குப்பிறகு இரண்டு பிரதமர்களைப் பதவியில் அமர்த்தி கிங் மேக்கர் என்ற பெயரை அவர் பெற்றிருந்தார்.

இது போல் கிருபானந்த வாரியார் அவர்கள், இடம் சூழல் காலத்திற்கு ஏற்றவாறு நகைச்சுவையுடன் நயத்துடன் பேச வல்லளர்.


2. கவிதை :



அவளோடு...
அன்றொறுநாள்...
சிரித்து சிரித்துப் பேசிய
 மழைச் சந்திப்புக்குப் பிறகு... 

ஒவ்வொரு ‌மழைத்துளியும் 
அழவைத்து விடுகிறது என்னை... 

அவளை நினைவுறுத்தி..!

3. நகைச்சுவை துணுக்கு :

நண்பன் 1 : ஈரான் அதிபர் எனக்குக் கிடைக்க இருந்த வேலையைக் கெடுத்திட்டான், பாவி...!
 

நண்பன் 2 : அவர் வந்து ஏதும் சொன்னாரா..?
 

நண்பன் 1 : அதில்லை..! ஈரான் அதிபர் யாருன்னு இன்டர்வியூல்லே கேள்வி கேட்டாங்க. எனக்கு பதில் சொல்ல தெரியல..!
 

4. விடைகொடுப்போம்..!
பல்வேறு மாற்றங்கள், ஏற்றங்கள் தந்த இந்த ஆண்டின்கடைசி நளை அன்போடு வழிஅனுப்புவோம்.

5. நகைச்சுவைப்படம் :
போட்டி வச்சிக்கலாமா..!


6. புத்தாண்டு வாழ்த்து: 
 
இன்று போல் என்றும் இணைந்திருப்போம் நட்பால்...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் 
என் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

அன்புடன்
கவிதைவீதி செளந்தர்...

05 July, 2011

சன் பிக்சர்ஸ் நிர்வாகி கைது... திரை உலகினர் கொண்டாட்டம்...




சன் பிக்சர்ஸ், ஹன்ஸ் ராஜ் சக்சேனா, கலாநிதி மாறன் இவர்களை வானளாவப் புகழாத வாய்களே இல்லை எனும் அளவுக்கு இருந்தது நிலைமை, கடந்த 5 ஆண்டுகளில்.

எந்த சின்ன / பெரிய பட பூஜை அல்லது இசை வெளியீடாக இருந்தாலும் 'சாக்ஸ்' வந்தா நல்லாருக்கும் என்று கேட்பது வாடிக்கையாக இருந்தது.

ஆனால் இன்று அதே சினிமா உலகில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. மோசடி வழக்கில் சக்சேனா கைது செய்யப்பட்டதை அறிந்ததும், பிலிம்சேம்பர் எனப்படும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் நேற்று பட்டாசு வெடித்தும், இனிப்புகள் கொடுத்தும் கொண்டாடியுள்ளனர் சினிமாக்காரர்கள்.

மாருதி பிலிம்ஸ் ராதாகிருஷ்ணன், ஆர்.வி. கிரியேஷன்ஸ் வடிவேலு தலைமையில் சென்னை பிலிம்சேம்பர் வளாகத்தில் கூடிய திரைப்பட தயாரிப்பாளர்கள் பலர் இந்தக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


மேலும் பிலிம்சேம்பர் சார்பில் வெளியாகியுள்ள அறிக்கையில், "கடந்த 5 ஆண்டுகளாக சங்க பதவியை முறைகேடாக பிடித்தவர்கள், தயாரிப்பாளர்கள் நலனை காக்கத் தவறி குறிப்பிட்ட சேனல்களின் நலனில் அக்கறை செலுத்தி தமிழ் திரைப்பட துறையினரின் பலகோடி ரூபாய் நஷ்டத்திற்கு காரணமானவரும், தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களையும் வஞ்சித்தவருமான சன் டி.வி. தலைமை நிர்வாகி சக்சேனாவை கைதுசெய்ததன் மூலம் தமிழ்த்திரையுலகம் சுதந்திர காற்றை சுவாசிக்க செய்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோடானுகோடி நன்றி," என்று கூறியுள்ளனர்.
Related Posts Plugin for WordPress, Blogger...